Wednesday, 24 April 2019

*முதல் யூ டியூப் (YOUTUBE)*


இன்று ஏப்ரல் 23 2005ஆம் ஆண்டு இதே நாளில்தான் முதல் யூ டியூப் ( YOU TUBE ) வீடியோ பதிவேற்றப்பட்டது.

யூ டியூபை நிறுவியவர்களின் ஒருவரான ஜாவத் கரீம், தன் பள்ளிக்காலத் தோழன் ஒருவனை, ஒரு மிருகக் காட்சி சாலையில் பதிவு செய்த 19 நொடி ஒளிப்படத்தை, 'மிருகக்காட்சி சாலையில் நான்' என்ற தலைப்பில் பதிவேற்றினார்.

யூ டியூபைத் தோற்றுவித்த சாட் ஹர்லி, ஸ்டீவ் சென், ஜாவத் கரீம் ஆகிய மூவரும் பே பால் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள். கரீமைத் தவிர மற்ற இருவரும் ஒரு விருந்தில் பங்கேற்றதை கரீம் நம்பாததால், அதன் வீடியோ பதிவை அவருக்கு அனுப்ப முயற்சித்ததாகவும், அக்காலத்தில் மின்னஞ்சல்களில் இணைப்புக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் காரணமாக அனுப்ப இயலாததால், வீடியோவைப் பகிரும் வசதி ஒன்றை உருவாக்கியதாகவும் ஒரு கருத்து உண்டு.

ஆனால், 2004 ஜனவரி 1 அன்று சூப்பர் பவுல் என்ற நேரடி ஒளிபரப்புத் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், ஜேனட் ஜேக்சனின் ஆடை விலகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அதுபற்றி அறிய விரும்பியபோது அதன் வீடியோ பதிவு கிடைக்கவில்லை.

அதைப்போல 2004 சுனாமியின் வீடியோ பதிவுகளையும் பெற முடியாத நிலையில் யூ டியூப் தோற்றுவிக்கப்பட்டது. முதலில், இணையவழி நட்பு (டேட்டிங்) தளமான ஹாட் ஆர் நாட் என்பதைப்போல, வீடியோ வடிவில் முயற்சித்தாலும், பின்னர் 2005 ஃபிப்ரவரி 14 அன்று யூ டியூப்.காம் என்ற முகவரி பதிவு செய்யப்பட்டது.
இதைத் தற்போது 130 கோடிப் பேர் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு நிமிடத்திலும் 300 மணிநேர ஒளிப்படங்கள் பதிவேற்றப்படுகின்றன.

ஒவ்வொரு நாளும் 3 கோடிப்பேர் வருகைதந்து, 500 கோடி ஒளிப்படங்களைப் பார்க்கின்றனர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை யூ டியூபில் பார்ப்பது அதிகரித்து வருகிற நிலையில்,

2025இல் 32 வயதுக்குட்பட்டோரில் பாதிப்பேர் தொலைக்காட்சிக்கு கேபிள், டிடிஎச் போன்ற இணைப்பே வைத்துக்கொள்ள மாட்டார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய தேடுபொறியாக யூ டியூப் மாறியுள்ளது.

*ஏப்ரல் 23, வரலாற்றில் இன்று.*

உலக புத்தக தினம் இன்று.

பதிப்பகங்கள் சிறப்புக் கண்காட்சிகளையும், புத்தகம் தொடர்பான நிகழ்வுகளையும் நடத்துகின்றன. நாம் படித்த புத்தகங்கள் குறித்து, புத்தக நினைவுகள் குறித்து பதிவுகள் எழுதுகிறோம்.
உலக புத்தக தினம் அறிவித்த யுனெஸ்கோ, இன்னும் பல விஷயங்களைச் செய்கிறது.

இது உலக புத்தக தினம் மட்டுமல்ல, காப்புரிமை தினமும்கூட.

முதல் முதலாக 1995 பாரிசில் உலகப் புத்தகத் தினம் கொண்டாடப்பட்டது. ஏன் ஏப்ரல் 23ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டது? செர்வான்டிஸ், ஷேக்ஸ்பியர் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்கள் மறைந்த தினம். மௌரிஸ் டுரூவன், ஹால்டர் லாக்ஸ்நெஸ், விளாதிமிர் நபோகோவ் உள்ளிட்டவர்களின் பிறந்த தினம்.

எழுத்தாளர்களையும் புத்தகங்களையும் கொண்டாடுவதுடன் இளையோர் மத்தியில் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதும் இதன் நோக்கம். இப்போது பதிப்புத்துறையினர் மட்டுமின்றி உலகளவில் பல தரப்பினரும் புத்தக தினக் கொண்டாட்டங்களுக்கு பங்களித்து வருகின்றனர்.

பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள், நூலகங்கள் ஆகிய மூன்று துறையினரும் யுனெஸ்கோவுடன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு நகரத்தை உலகப் புத்தகத் தலைநகராத் தேர்வு செய்கின்றனர். அது ஏப்ரல் 23 துவங்கி ஓராண்டு காலம் தலைநகராக நீடிக்கும்.

2018ஆம் ஆண்டுக்கு ஏதென்ஸ் நகரம் உலகப் புத்தகத் தலைநகராகத் தேர்வு செய்யப்பட்டது. ஏதென்ஸ் நகருக்குப் புலம் பெயர்ந்தவர்கள், அகதிகள் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் புத்தகங்களை எட்டச் செய்வது இதன் நோக்கம். எழுத்தாளர்கள் ஓவியர்கள் சந்திப்புகள், துறைசார் கருத்தரங்குகள், கண்காட்சிகள், கவியரங்குகள், பயிற்சிப் பட்டறைகள் என பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. (2003இல் தில்லி உலகப் புத்தகத் தலைநகராக அறிவிக்கப்பட்டது.)

2019ஆம் ஆண்டுக்கு ஷார்ஜா உலகப் புத்தகத் தலைநகராக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அண்மைக்காலத்தில் புத்தகங்கள், வாசிப்பு தொடர்பாக பல புதுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதால் ஷார்ஜா தேர்வு செய்யப்பட்டது.

“Read - you are in Sharjah” இதுதான் ஷார்ஜாவின் கோஷம். யுஏஈ-யில் புலம்பெயர்ந்த மக்கள் நிறைய இருக்கிறார்கள், அவர்களையும் புத்தகங்களோடு இணைக்கும் திட்டம் இருக்கிறது. ஆறு விஷயங்களை ஷார்ஜா முனைப்புக் காட்ட இருக்கிறது — அனைவருக்கும் நூல், வாசிப்பு, பாரம்பரியம், மக்களை சென்றடைதல், பதிப்பு மற்றும் குழந்தைகள். பேச்சு சுதந்திரம், இளம் கவிஞர்கள் அரங்கம், பிரெயில் புத்தகப் பயிற்சிப் பட்டறைகள் என பல நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

ஷார்ஜா தேர்வு செய்யப்பட்டமைக்கு இன்னொரு காரணம் – ஷார்ஜா பதிப்பு நகரம். Sharjah Publishing City என்ற பெயரில் முழுக்க முழுக்க பதிப்பு மற்றும் அச்சகத் துறைக்கென பிரம்மாண்டமான ஒரு நகர வளாகத்தை உருவாக்குகிறது ஷார்ஜா. அங்கே தொழில் துவங்க ஆர்வமுள்ள நிறுவனங்களுக்கு பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
(அராபிய புத்தகச் சந்தையைக் கைப்பற்றுவதும் இதன் நோக்கமாக இருக்கலாம் என்றாலும், இது நிச்சயமாக சிறந்த்தொரு முயற்சி.)

உலகப் புத்தகத் திருவிழா தினத்தில் தனிநபராக நாம் என்ன செய்யலாம்? புத்தகம் வாங்கலாம், வாசிக்கலாம், பரிசளிக்கலாம்.

*வாசிப்பை நேசிப்போம் : முத்தமிழ் மன்றம் பா ஸி*📚📚📚📚📚📚📚

Thursday, 11 April 2019

*45 சதவிகிதத்திற்கு கீழ் பெற்றவர்கள் இனி TET தேர்வு எழுத முடியாது - TRB அறிவிப்பு*

*45 சதவிகித மதிப்பெண்களுக்கும் கீழ் UGல் பெற்றவர்கள் இனி TET தேர்வு எழுத முடியாது - TRB அறிவிப்பு*

பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் TET தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் பரிதவிப்பு. கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஆசிரியர் பணி நியமனத்திற்கு TET எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழகத்தில் கட்டாயமாக்கப் பட்டுள்ளது.

இதன்படி 2012 முதல் இதுவரை தமிழகத்தில் 4 முறை  TET தேர்வு நடைபெற்றுள்ளது. இதுவரையிலான TET தேர்வுகளில் B.Ed ., தேர்ச்சி பெற்ற அனைவருமே எழுத அனுமதிக்கப்பட்டனர்.அதற்கென UG மற்றும் B.Ed ஆகியவற்றில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. இந்நிலையில் 2019 ம்ஆண்டுக்கான TET தேர்வு அறிவிக்கப்பட்டு ONLINE வழியாக விண்ணப்பப்பதிவு  நடைபெறுகிறது.ஆனால்  இம்முறை TET தேர்வில் Paper 2 க்கு விண்ணப்பிக்க UGல்  OC பிரிவினர் 50% மும் , இதர இட ஒதுக்கீட்டுப் பிரிவினர்கள் ( BC /MBC / SC / ST ) அனைவரும் 45% முன் பெற்றிருக்க வேண்டும் என TRB  புதிய விதிமுறைவகுத்துள்ளது. இதில் என்ன கொடுமை என்றால் B.ed படிக்க UG யில் SC/ST க்கு -40%,  MBC/DNC-43%  தகுதியில் B.ed படிக்க அனுமதிக்கப்பட்டனர் ஆனால் தற்போது இம்முறையால் 40% முதல் 45% வரை UG யில் மதிப்பெண் பெற்றோர் தற்போது நடக்கும் TET தேர்வை எழுத முடியாது.இது சமூக நீதிக்கு எதிரானது
🤦‍♂🤦‍♂🤦‍♂🤦‍♂

*PIN குறியீட்டிற்கு விடைபெறுகிறேன்*

*PIN குறியீட்டிற்கு விடைபெறுகிறேன்* அஞ்சல் முகவரிகளின் ஈர்ப்பாக இருந்த PIN குறியீடுகளின் சகாப்தம் முடிந்துவிட்டது, அதற்கு மாற்றா...