Showing posts with label General. Show all posts
Showing posts with label General. Show all posts

Monday, 4 August 2025

*PIN குறியீட்டிற்கு விடைபெறுகிறேன்*

*PIN குறியீட்டிற்கு விடைபெறுகிறேன்*




அஞ்சல் முகவரிகளின் ஈர்ப்பாக இருந்த PIN குறியீடுகளின் சகாப்தம் முடிந்துவிட்டது, அதற்கு மாற்றாக இந்திய அஞ்சல் துறை 'DigiPIN' என்ற டிஜிட்டல் முகவரியை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இனிமேல் நாட்டில் DIGIPIN புதிய முகவரி அமைப்பாக இருக்கும். பாரம்பரிய PIN குறியீடுகள் பரந்த பகுதியை உள்ளடக்கியிருந்தாலும், 10 இலக்க DigiPIN அமைப்பு உங்கள் வீடு அல்லது வணிகத்தின் சரியான இருப்பிடத்தைக் குறிக்கிறது.

 அதாவது, உங்கள் வீடு அல்லது வணிகத்தின் சரியான இருப்பிடத்தை இந்த DigiPIN மூலம் காணலாம். DigiPIN ஐ உருவாக்கி குறியீட்டைக் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட அரசாங்க வலைத்தளத்தைப் பார்வையிட்டு உங்கள் வீட்டைக் கண்டறியலாம். DigiPIN இன் நன்மை என்னவென்றால், 

அது சரியான இடத்திற்கு கடிதங்களை வழங்கும் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்புத் துறைகள் போன்ற அவசர சேவைகள் இருப்பிடத்தைப் புரிந்துகொள்வதன் மூலம் அதை துல்லியமாக அடைய உதவும். கிராமப்புறங்கள் உள்ளிட்ட தொலைதூரப் பகுதிகளில் DigiPIN பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

கடிதப் பரிமாற்றத்திற்கு மட்டுமல்ல, மின் வணிக வலைத்தளங்களுக்கும் DigiPIN சரியான இடத்திற்கு பார்சல்களை வழங்க முடியும் என்று கூறப்படுகிறது.

உங்கள் Digipin ஐ எவ்வாறு கண்டுபிடிப்பது?

உங்கள் டிஜிபினைக் கண்டறிய அரசாங்க வலைத்தளமான  https://dac.indiapost.gov.in/mydigipin/home  தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த வலைத்தளத்தைப் பார்வையிட்டு நீங்கள் கண்டறிந்த இடத்தைக் கிளிக் செய்வதன் மூலம், உங்கள் 10 இலக்க டிஜிபினைக் கண்டறியலாம். மற்ற முகவரி அமைப்புகளிலிருந்து டிஜிபினை வேறுபடுத்துவது என்னவென்றால், நான்கு மீட்டர் சுற்றளவில் உங்கள் சரியான இருப்பிடத்தை நீங்கள் அறிந்து கொள்ள முடியும். 

ஐஐடி ஹைதராபாத், NRSC மற்றும் ISRO ஆகியவற்றுடன் இணைந்து டிஜிபின் எனப்படும் புவிசார் குறியீடு செய்யப்பட்ட டிஜிட்டல் முகவரி அமைப்பை இந்திய போஸ்ட் உருவாக்கியுள்ளது. டிஜிபினை ஆஃப்லைனிலும் பயன்படுத்தலாம்.

Ⓑ︎

Friday, 17 January 2025

Thenkachi Ko. Swaminathan / தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் இன்று ஒரு தகவல்* *முதுமையில் மனநோய்*

🔵👑🔵👑🔵👑🔵👑
*🟪🌟தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் இன்று ஒரு தகவல்*
🔵👑🔵👑🔵👑🔵👑

*🟤🔥48. முதுமையில்* 
     *மனநோய்*

🔵👑🔵👑🔵👑🔵👑






🟢🌟இன்று ஒரு தகவல் -லே மன நோயைப் பற்றி அடிக்கடி பேசிக்கிட்டிருக்கோம்!

🟢🌟ஏன்? னு எனக்கும் தெரியலே... தற்செயலா அடிக்கடி இதைப் பத்தி பேசறாப்போல ஆயிடுது!

🟢🌟சின்னப் பிள்ளைங்களுக்கு மனசு எப்படி பாதிக்கப்படுதுங்கறதைப் பத்தி ஒரு நாள் பேசிக் கிட்டிருந்தோம்.

🟢🌟வயசானவங்களுக்கு மனசு எப்படி பாதிக்கப் படுதுங்கறதைப் பத்தி இன்னைக்குப் பேசப் போறோம்!

🟢🌟மன நோய்ங்கறது ஒரு பொதுவான நோய்...

🟢🌟இது எல்லாருக்கும் வர்றதுக்கு வாய்ப்பு இருக்கு... இருந்தாலும் இளமையின் தொடக்கத் திலேயும், முதுமையின் தொடக்கத்திலேயும் இது அதிகமா ஏற்படறதுண்டாம்.

🟢🌟வயசான காலத்துலே இது ஏன் அதிகமா வருது தெரியுமா? அந்த சமயத்துலே மூளையோட செயல்திறன் பாதிக்கப்படுது. அதனாலே மத்த வங்களை விட இவங்களுக்கு அதிகமா மன நோய் வர்றதுக்கு வாய்ப்பு இருக்கு!

🟢🌟அது வரைக்கும் தனியா சுதந்திரமா இருந்தவங்க.. வயசானதுக்கப்புறம் அடுத்தவங்களை எதிர் பார்த்து இருக்க வேண்டிய சூழ்நிலை. 

🟢🌟சமூக ரீதியா பார்த்தாலும், பொருளாதார ரீதியா பார்த்தாலும், உடல் நல ரீதியா பார்த்தாலும் இவங்கள்லாம் மற்றவர்களை சார்ந்திருக்க வேண்டிய நிலை! 

🟢🌟சுறுசுறுப்பா எல்லா வேலையும் செஞ்சிட்டிருந்தவங்க.... சும்மாவே உக்கார்ந்திருக்க வேண்டிய சூழ்நிலை! இதனாலே தான் மனசு கெட்டுப் போவுது!

🟢🌟முதியவர்களுக்கு ஏற்படற மனநிலை பாதிப்பை மூணு வகையா பிரிக்கிறாங்க!

🟢🌟ஒண்ணு - மனக்குழப்பம் - Confusion.

🟢🌟ரெண்டு - அறிவுத்திறன் வீழ்ச்சி - Dementia

🟢🌟மூணாவது - மனத்தளர்ச்சி நோய் Depression.

🟢🌟இரத்தக் குழாய்கள்லே ஏற்படற மாற்றங்களாலே மூளைக்குத் தேவையான சத்து குறைஞ்சு போவுது! 
அதனாலே மூளை சரிவர வேலை செய்யாமே ஒரு விதமான குழப்பம் ஏற்பட்டுப் போவுது. 
இந்த நிலைமையிலே, நல்லா இருக்கிற ஒருத்தர் திடீர்ன்னு தம்முடைய சுற்றுப் புறத்தையே மறந்துடுவார்.

🟢🌟நாம எங்கேயிருக்கிறோம் என்ன செய்யிறோம் நம்மை சுற்றி என்ன நடக்குது? யார் யார் இருக்காங்க...?

🟢🌟ஒண்ணும் புரியாது!

🟢🌟நேரம் காலம் இடம் தெரியாமே அவரும் குழம்புவார். அடுத்தவங்களையும் குழப்புவார்! 

🟢🌟இல்லாததை இருக்கிறதா நினைப்பார்... பயந்த நிலையிலேயே காணப்படுவார். 
இந்த நிலை சில நொடிகள் முதல் சில மணி நேரம் வரைக்கும் நீடிக்கலாம். அப்புறம் சரியாயிடும்!

🟢🌟இப்படி ஏற்படறதுக்கு காரணம் தெரியுமா? 

🟢🌟மூளைக்குப் போற ரத்தம் திடீர்ன்னு குறைஞ்சு போறது!

🟢🌟தூக்க மாத்திரை, நரம்புத் தளர்ச்சிக்குக் கொடுக்கிற மாத்திரை இது மாதிரி சில மருந்துகளாலேயும் மனக் குழப்பம் உண்டாகும்! 

🟢🌟உடம்புலே மற்ற பாகங்கள்லே நோய்க் கிருமிகள் பாதிப்பு இருந்தாலும் மனக் குழப்பம் வரும்...

🟢🌟அடிப்படைக் காரணம் என்னன்னு கண்டு பிடிச்சி அதுக்குத் தகுந்த மாதிரி சிகிச்சை குடுக்கணும்!

*🟢🌟தொடரும்*

*PIN குறியீட்டிற்கு விடைபெறுகிறேன்*

*PIN குறியீட்டிற்கு விடைபெறுகிறேன்* அஞ்சல் முகவரிகளின் ஈர்ப்பாக இருந்த PIN குறியீடுகளின் சகாப்தம் முடிந்துவிட்டது, அதற்கு மாற்றா...