Saturday, 14 January 2017

#பன்னாட்டு நிறுவனங்கள்

1) UNESCO – 1946 - பாரிஸ் - United Nations Educational Scientific Cultural Organisation

2) UNICEF – 1946 - நியூயார்க்  United Nations International Children’s Emergency Fund

3) ICJ – 1945 - தி ஹேக் - International Court of Justice

4) WTO – 1995 - ஜெனீவா - World Trade Organisation

5) WHO – 1948 - ஜெனீவா - World Health Organisation

6) GATT – 1948 - ஜெனீவா - General Agreement on Trade and Tariff

7) ILO – 1919 -ஜெனீவா - International Labour Organisation

8) FAO – 1945 - ரோம் - Food and Agricultural Organisation

9) IBRD – 1945 - வாஷிங்கடன் - International Bank for Reconstruction and Development

10) WB – 1945 - வாஷிங்கடன் - World Bank

11) IMF – 1945 - வாஷிங்கடன் - International Monetary Fund

12) IAEA – 1957 - வியன்னா -International Atomic Energy Agency

13) WMO – 1950 - ஜெனீவா -  World Metrological Organisation

14) UNIDO – 1967 - வியன்னா-United Nations Industrial development Organisation

15) UNO - 1945 - நியூயார்க் - United Nations Organisation

16) NATO - 1949 - புருசெல்ஸ் - North Atlantic Treaty Organisation

17) NAM - 1955 - பெல்கிரேடு-   Non Aligned Movement

18) IFC - 1956 - வாஷிங்கடன்- International Finance Corporation

19) IDA - 1960 - வாஷிங்கடன்- International Development Association

20) OPEC - 1960 – வெனிசுலா -  Organisation of Petroleum Exporting Countries

21) AI - 1961 - இலண்டன் -  Amnesty International

22) ADB - 1966 - மணீலா-  Asian Development Bank

23) ASEAN - 1967 - ஜகார்த்தா -  Association of South East Asian Nations

24) SAARC - 1985 - காத்மண்ட்- South Asian Association for Regional Co-operation
இந்திய தண்டனைச் சட்டம் / குற்றங்களின்
வகைப்பாடுகள்:
இ.பி.கோ. 1 முதல் 5 வரை அறிமுகம்
இ.பி.கோ. 6 முதல் 52 வரை பொது விளக்கங்கள்
இ.பி.கோ. 53 முதல் 75 வரை தண்டனைகள்
இ.பி.கோ. 76 முதல் 106 வரை தனியார் பாது காப்பு உரிமைகளின் பொது விதிவிலக்குகள்
இ.பி.கோ. 107 முதல் 120 வரை உடந்தை
இ.பி.கோ. 120எ முதல் 120பி வரை குற்றவியல் சதி
இ.பி.கோ. 131 முதல் 140 வரை இராணுவம், கடற்படை
மற்றும் விமானப்படை தொடர்பான குற்றங்கள்
இ.பி.கோ. 141 முதல் 160 வரை பொதுமக்களின் அமைதிக்கு எதி ரான குற்றங்கள்
இ.பி.கோ. 161 முதல் 171 வரை அரசு ஊழியர்கள்
தொடர்பான குற்றங்கள்
இ.பி.கோ. 172 முதல் 190 வரை அரசாங்க ஊழியர்களின்
சட்டப் பூர்வ ஆணையம் தொடர்பான அவமதிப்புகள்
இ.பி.கோ. 191 முதல் 229 வரை பொது நீதிக்கு எதிரான பொய்யான ஆதாரங்கள் மற்றும் குற்றங்கள்
இ.பி.கோ. 230 முதல் 263 வரை நாணயம் மற்றும் அரசு
அஞ்சல் தலைகள் தொடர்பான குற்றங்கள்
இ.பி.கோ. 264 முதல் 267 வரை பொது நீதிக்கு
எதிரான பொய்யானஆதாரங்கள் மற்றும் குற்றங்கள்
இ.பி.கோ. 268 முதல் 294 வரை பொது சுகாதாரம், பாதுகாப்பு, வசதி, நாகரீகம் மற்றும் ஒழுக்கம்
பாதிக்கும் குற்றங்கள்
இ.பி.கோ. 295 முதல் 298 வரை பொது மதம்
தொடர்பான குற்றங் கள்
இ.பி.கோ. 299 முதல் 377 வரை 1. கொலை
குற்றத்துக்குரிய படுகொலை (பிரிவு 299 முதல் 311) உள்ளிட்ட வாழ்க்கை பாதிக்கச்
செய்கின்ற குற்றங்களை
2. கருத்சிதைவு தொடர்பான குற்றங்;கள் (பிரிவு
312 முதல் 318)
3.காயப்படுத்துதல் (பிரிவு 319 முதல் 338)
4. தவறான கட்டுப்பாடு மற்றும் தவறான வரையறை (பிரிவு 339 முதல் 348)
5.குற்றவியல் தாக்குதல் (பிரிவு 349 முதல் 358)
6.கடத்தல் அடிமைப்படுத்துதல் மற்றும் கட்டாய
தொழில் வலியுறுத் தல் (பிரிவு 359 முதல் 374)
7. கற்பழிப்பு உள்ளிட்ட பாலியல் குற்றங்கள் (பிரிவு
375 முதல் 376) இ.பி.கோ. பிரிவு 299 முதல் 377 மனித உடல்
பாதிக்கும் குற்றங்கள்:
1. மனித உடல் பாதிக்கும் குற்றங்கள் அதாவது
கொலை, குற்றத்துக் குரிய படுகொலை உள்ளிட்ட
வாழ்க்கை பாதிக்கச்செய்கின்ற குற்ற ங்களுக்கு
(பிரிவு 299 முதல் 311) 2. கருச்சிதைவு தொடர்பான குற்றங்களுக்கு
(பிரிவு 312 முதல் 318)
3. ஒருவரை காயப்படுத்துதல் (பிரிவு 319 முதல் 338)
4. தவறான கட்டுப்பாடு மற்றும் தவறான வரையறை
(பிரிவு 339 348 போன்ற)
5. குற்றவியல் தாக்குதல் (பிரிவு 349 முதல் 358) 6. கடத்தல், அடிமைப்படுத்துதல் மற்றும் கட்டாய
தொழில் செய்ய வலியுறுத்தல் (பிரிவு 359 முதல்
374)
7. கற்பழிப்பு உள்ளிட்ட பாலியல் குற்றங்கள் (பிரிவு
375 முதல் 376)
8. செயற்கை குற்றங்களுக்கு (பிரிவு 377) இ.பி.கோ. பிரிவு 378 முதல் 462 சொத்து
தொடர்பான குற்றங்கள்:
1. திருட்டு (பிரிவு 378 முதல் 382)
2. பலாத்காரம் (பிரிவு 383 முதல் 389)
3. திருட்டு மற்றும் கொள்ளை (பிரிவு 390 முதல்
402) 4. சொத்து குற்றவியல் மோசடி (பிரிவு 403 முதல்
404)
5. குற்றவியல் நம்பிக்கை துரோகம் (பிரிவு 405
முதல் 409)
6.திருடிய சொத்து பெறுவது (பிரிவு 410 முதல்
414) 7. ஏமாற்றுதல் (பிரிவு 415 முதல் 420)
8. மோசடி செயல்கள் மற்றும் சொத்து அபகரித்தல்
(பிரிவு 421 முதல் 424)
9. குறும்புகள் (பிரிவு 425 முதல் 440)
10. குற்ற மீறல் பற்றிய செயல்கள் (பிரிவு 441 முதல் 464)
ஆவணங்கள் மற்றும் சொத்து தொடர்பான குற்றங்கள் (பிரிவு 463 முதல் 489 வரை)
சொத்து (பிரிவு 478 முதல் 489)
நாணய குறிப்புகள் மற்றும் வங்கி அறிக்கை
(பிரிவு 489எ வேண்டும் 489இ)
இ.பி.கோ. பிரிவு 490 முதல் 492 வரை சேவை
ஒப்பந்தங்கள் குறித்த சட்ட மீறல்கள்: கணவன் அல்லது கணவனின் உறவினரால்
துன்புறுத்தப்படுதல் (பிரிவு 498 (a) (குடும்ப
வன்முறை தடுப்புச் சட்டம்)
மான நஷ்ட வழக்குகள் (பிரிவு 499 முதல்502 வரை)
சட்ட விரோத மிரட்டல் அவமதிப்பு (பிரிவு 503 முதல்
510 வரை) குற்றம் செய்ய முயல்வது. (பிரிவு 511).
Knowledge sharing
-----------------------
PETA- People for the ethical treatment of animals என்று தன்னை அழைத்துக் கொள்ளும் இந்த அமைப்பானது 1980 ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் இயங்கி வருகிறது. அமெரிக்காவில் ஆதரவற்ற விலங்குகளைப் பாதுகாக்கும் ஒரு காப்பகம் என தன்னைப் பதிவு செய்து கொண்டது.

(எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் நம்மூரில் முதியோர் காப்பகங்கள் இயங்கி வருவதைப் போல) சரி... அதன் பின்னர் நடந்தது என்ன? வீதியில் ஆதரவின்றி அலையும் நாய்கள் மற்றும் பூனைகளைக் காப்பாற்ற களத்தில் குதிக்கப் போவதாக அறிவித்தது பீட்டா.

ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான போன்கால்கள் பீட்டாவிற்கு தெருநாய்களைப்பற்றி வரத் துவங்கின. இலட்சக்கணக்கான விலங்குகள் காப்பகத்தில் குவிந்துவிடவே அமெரிக்க அரசை நிர்பந்தப்படுத்தி ஒரு சட்டம் இயற்ற வைத்தது பீட்டா.

அந்தச் சட்டத்தின் படி பதினைந்து நாட்கள் பீட்டா ஒரு ஆதரவற்ற நாயைப் பராமரிக்கும். அந்தப் பதினைந்து நாட்களுக்குள் யாரும் அந்த நாயைத் தத்தெடுக்க முன்வராவிட்டால் பீட்டா அந்த நாயைக் கருணைக் கொலை செய்து கொள்ளலாம்.

இவ்வாறு 2015 ம் ஆண்டு மட்டும் பீட்டா கொலை செய்த நாய்கள், பூனைகள், முயல்கள் மற்றும் இன்னபிற விலங்குகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

அதிர்ச்சி அடைய வேண்டாம்...
35000. ஆமாம் நண்பர்களே... முப்பத்தி ஐந்து ஆயிரம் !!!

இந்தக் கருணை நிறைந்த மகா கொலைகாரர்கள் நம்மிடம் வந்து சொல்கிறார்கள்...

நீ மாட்டு வாலைத் திருகுகிறாய்!
கொம்பைப் பிடிக்கிறாய்!
கழுத்தைக் கட்டிக் கொண்டு அதைத் துன்புறுத்துகிறாய்!

அதனால் நீ மாட்டை மிருக வதை செய்கிறாய்... எனவே ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்ய வேண்டும்!

'சாத்தான் வேதம் ஓதுகிறது' என்பார்களே நம்மூரில்... பீட்டா செய்வது அதுவே தான்!!

பீட்டா - மிருகவதை வியாபாரம்
-----------------------------------------------
அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் பீட்டா கருணைக் கொலை என்ற பெயரில் ஏன் இத்தனை இலட்சம் நாய்களையும், பூனைகளையும்,முயல்களையும் கொல்ல வேண்டும்?

அதற்கு உணவு அளித்துப் பராமரிக்கப் பணமும், இடமும் இல்லை என்பது மட்டும் தான் உண்மையான காரணமா? இதற்கான பதிலில் தான் இருக்கிறது சூட்சுமம்!

அமெரிக்காவில் வளர்ப்புப் பிராணிகள் விற்பனை என்பது பல்லாயிரக்கணக்கான கோடிகள் புரளும் மிகப் பெரிய மார்க்கெட்.

எனவே வளர்ப்புப் பிராணிகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் பீட்டாவிற்கு மிகப் பெரும் பணத்தை நிதியுதவி என்ற பெயரில் தொடர்ந்து வழங்கி வருகின்றன.

பீட்டாவின் இந்த கருணைக் கொலைகள் அவர்கள் வியாபாரம் சரிந்து விடாமல் உயர்ந்து கொண்டேயிருக்க உதவுகிறது என்பது தான் உண்மை.
சரி.

அப்படியானால் அமெரிக்காவில் பீட்டாவைத் தவிர வேறு ஆதரவற்ற விலங்குகளைக் காப்பாற்றும் அமைப்புகள் இல்லையா? என்று நீங்கள் கேட்கலாம்.

நிறைய இருக்கின்றன.ஆனால் பீட்டா அந்த நிறுவனங்கள் மீது தனது உளவாளிகளை ஏவி அவர்கள் அந்த விலங்குகளைப் பராமரிக்கும் விதத்தை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கிறது. ( நம்மூர் ஜல்லிக்கட்டில் நடந்ததும் இதேதான்) அந்த ஆதாரங்களைக் கொண்டு நீதிமன்றத்தை அணுகி அவர்களை முடக்குகிறது.

போட்டியே இல்லாமல் நடக்கும் இந்த மிருகவதை வியாபாரம் பீட்டாவின் செல்வச் செழிப்பையும், செல்வாக்கையும் நாள்தோறும் அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றுகொண்டிருக்கிறது என்பதே இன்றைய நிலை!

சரி... நம்மூர் ஜல்லிக்கட்டை நிறுத்துவதில் பீட்டாவிற்கு ஏன் இத்தனை அக்கறை?

பீட்டா - தோலிருக்க சுளை முழுங்கும் ஆளு !
-----------------------------------------------------------------
நம்ம தெருவில் சாதாரணமாக காணும் காட்சிதான் இது. இரண்டு அல்லது மூன்று மாடுகளை பக்கத்து வீட்டுக்காரர் சொந்தமாக வைத்திருப்பார்.

பகலில் அந்த மாடு சர்வசாதாரணமாக வீதிகளில் அலைந்து கொண்டிருக்கும். கிராமங்களில் வயல்வரப்பின் ஓரமாக மேய்ந்து கொண்டிருக்கும்.

நம் வீட்டுப் பெண்கள் அதற்கு வீட்டில் மீதமாகிப் போன கஞ்சியை பாத்திரத்தில் வைப்பார்கள். அதுபாட்டுக்கு குடித்துவிட்டு போய்க் கொண்டே இருக்கும்.

காலையிலும், மாலையிலும் அந்த மாட்டின் சொந்தக்காரர் பத்து வீடுகளுக்கு பால் ஊற்றிவிட்டுப் போவார். அவருக்கான வருமானம் அதுதான்.

இது போக ஆவின் மாதிரியான கூட்டுறவு பால் பண்ணைகளுக்கு இந்த மாடு வைத்திருப்பவர்கள் பால் கறப்பார்கள்.

பீட்டாவின் கண்ணை ஊறுத்துவது இதுதான். இதிலென்ன இருக்கிறது உறுத்துவதற்கு? என்று உங்களுக்குத் தோன்றலாம்.

தமிழ்நாட்டில் மட்டும் இது போல் சிறு விவசாயிகள் மற்றும் மாடு வளர்ப்பவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் பால் உற்பத்தி சந்தையின் மதிப்பு ஒரு ஆண்டிற்கு எவ்வளவு தெரியுமா நண்பர்களே?

மூன்றரை இலட்சம் கோடிகள்!
சரி... இதற்கும் ஜல்லிக்கட்டுக்கும் என்ன தொடர்பு?

இருக்கிறது. கோவில் மாடு என்ற ஒரு விஷயம் நம்ம ஊரில் உண்டு. அந்த மாடு வருடம் முழுதும் ஊர் சுற்றிக் கொண்டு ஜாலியாக இருக்கும்.

அந்த ஊரில் ஒரு முன்னூறு பசு மாடுகள் இருப்பதாக வைத்துக் கொண்டால் அத்தனை மாடுகளுக்கும் இனவிருத்தி செய்வது அந்த மாடுதான்.

இதுபோக ஜல்லிக்கட்டு விடுவதற்காக வளர்க்கப்படும் மாடுகளும் அந்த இனவிருத்தி வேலையைச் செய்யும். இந்த நாட்டு மாடுகள் அதிக பராமரிப்பு தேவைப்படாதவை.

சிறிய அளவிலான மேய்ச்சல் அதற்கான உணவுத் தேவையை தீர்த்துவிடும்.
ஜல்லிக்கட்டில் விடப்படுவது இது போன்ற காயடிக்கப்படாத நாட்டுமாடுகள் தான்.

வட இந்தியா மற்றும் கர்நாடகாவில் நடைபெறும் மாட்டுவண்டிப் பந்தயங்களில் பயன்படுத்தப்படுவது எல்லாமும் காயடிக்கப்பட்ட மாடுகளே!

எனவே தான் பீட்டா இந்த நாட்டுமாடுகளைக் குறிவைக்கிறது. இந்த மாட்டினத்தை முற்றிலும் அழிக்காவிட்டால் அவர்களால் கலப்பின மாடுகளை இங்கே இறக்கமுடியாது. கலப்பின மாடுகளுக்கு மேய்ச்சல் உணவு போதாது. அதற்கு தீவனம் வைத்தாக வேண்டும்.

உலகின் மிகப் பெரிய மாட்டுத்தீவன மற்றும் ஊக்க மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனம் பீட்டாவின் பின்னணியில் இருக்கிறது என்பதே உண்மை.

அவர்கள் கண்ணை தமிழகத்தின் மூன்றரை இலட்சம் கோடிகள் கொண்ட பால் உற்பத்தி சந்தை உறுத்திக்கொண்டே இருக்கிறது.

ஜல்லிக்கட்டை நிறுத்தாவிட்டால் அவர்களால் இங்கே காலூன்றவே முடியாது.

அதனால் தான் அவர்கள் இந்த வீரவிளையாட்டை மிருகவதை என்ற பெயரில் முடக்க தீவிரம் காட்டுகிறார்கள் !

* பீட்டா முகமூடிக் கிழிப்பு தொடரும்...
யார் இந்த பீட்டா?
--------------------------

அதனால் தான் அவர்கள் இந்த வீரவிளையாட்டை மிருகவதை என்ற பெயரில் முடக்க தீவிரம் காட்டுகிறார்கள

There's also SPCA (Society for the Prevention of Cruelty to the Animals) in The USA.
Rs. 250 only for MATHS SHORT CUT STUDY MATERIALS-676 PAGES AS PDF FILES
போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு வேலை பெற உதவும் கற்கண்டு கணிதம்!!!!!!!

TNPSC, TET, RAILWAY, BANK, SSC, POLICE மற்றும் அனைத்து போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் கணிதக் கேள்விகள் தமிழில் எளிதாக SHORT-CUT METHOD ல் அனைவருக்கும் புரியும் வகையில் கற்க மிகவும் பயனுள்ள இனையதளம்

http://tnpsc-shortcut-maths.blogspot.in/ ஆகும்.

TNPSC – 19 முந்தைய TNPSC தேர்வு கணித வினாக்கள்:

இதில் 2016 ஆம் ஆண்டு நடந்த அனைத்து TNPSC தேர்வுகளிலும் கேட்கப்பட்ட கணிதக் கேள்விகளுக்கான SHORT-CUT METHOD விளக்கங்கள் இந்த வலைத்தளத்தில் உள்ளது. மேலும் 2015, 2014, 2013 ஆம் ஆண்டு நடந்த முக்கிய TNPSC தேர்வுகளின் (VAO, GROUP - I, II, IV) கணித வினாக்கள் விடைகளுடன் விளக்கமாக பதிவிடப்பட்டுள்ளது. மேலும் தற்பொழுது

1. எண்ணியல்
2. மீ.சி.ம., மீ.பெ.வ.
3. விகிதம்
4. சதவீதம்
5. இலாபம், நட்டம்
6. தனி வட்டி
7. கூட்டு வட்டி
8. சராசரி
9. ஆட்கள், நாட்கள்
10. வயது கணக்குகள்

ஆகிய தலைப்புகளின் கீழ் ஒவ்வொன்றிலும் 50 வினாக்கள் SHORT-CUT விளக்கங்களுடனும் + 50 வினாக்கள் பயிற்சி வினாக்களாகவும், ஆக ஒவ்வொரு தலைப்பிலும் 100 வினாக்கள் என 10×100=1000 வினாக்கள் இந்த வலைப்பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. மற்ற தலைப்புகளிலும் வினாக்கள் தயாராகி வருகிறது. மேலும்

6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி பாட கணித புத்தகத்தில் உள்ள அனைத்து FORMULAS AND IMPORTANT POINTS & NOTES இதில் பதிவிடப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் தமிழ் மொழியில் 676 பக்கங்களில் உள்ளது.

இவை அனைத்தையும் புத்தகமாக  பதிவிறக்கம் செய்ய இயலும். அனைத்தும் கையால் எழுதப்பட்ட STUDY MATERIALS. இதனை PDF FILES வடிவில் பெற இயலும். இதன் விலை ரூ. 250 மட்டுமே. YOU WILL RECEIVE THE PDF FILES TO YOUR G-MAIL ID AS A GOOGLE DRIVE LINK. YOU CAN DOWNLOAD THE FILES FROM THAT LINK. THE MAIL WILL BE SENT TO YOU AFTER PAYING THE AMOUNT. AND YOU WILL RECEIVE A CONFIRMATION MSG TO YOUR MOBILE NUMBER.

ஆன்லைனில் இண்டர்நெட் நெட்பேங்கிங் அல்லது உங்கள் ATM (Credit / Depit card) number மூலம் பணம் செலுத்தலாம். உங்கள் பெயர், மொபைல் எண், ஜிமெயில் ஐடி ஆகியவற்றை தெரிவித்து பணம் செலுத்த கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.
CLICK THE BELOW BUTTON TO GIVE YOUR DETAILS AND PAY THE MONEY..    

https://www.instamojo.com/karkandu_kanitham/karkandu-kanitham-tnpsc-short-cut-maths-stud/  

  OR
 
https://www.payumoney.com/webfronts/#/index/tnpsch-shortcut-maths              

FOR ANY CLARIFICATION PLS CALL 9486136884

ஆன்லைனில் பணம் செலுத்த முடியவில்லை எனில் 9486136884 என்ற எண்ணிற்கு WhatsApp msg செய்து நேரடியாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்துவதற்கான விவரங்களை கேட்டு பெறுங்கள். நேரடியாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்திவிட்டு உங்கள் ஜிமெயில் ஐடியையும், பணம் செலுத்தியதற்கான விவரங்களையும் அனுப்பி அனைத்து கணித ஷார்ட்கட் பிடிஎப் பைல்களையும் உங்கள் ஜிமெயில் ஐடியில் பெற்றுக்கொள்ளலாம்.
1. ஹிட்லர் திருமணம் செய்துகொள்ளவில்லை, ஆனால் ஒரு காதலி இருந்தாள்.
2. நாட்டில் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள் எதிரியாக இருந்ததாக நினைத்தார்
3. ஹிட்லரின் ஆதரவாளர்கள் கண்மூடித்தனமாக ஹிட்லரை அவதார புருஷராக நம்பினார்கள், ஹிட்லர் பற்றிய உண்மைகளை, விமர்சனங்களை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை..
4. ஹிட்லர் தனது சிறு வயதில் ஓவியங்களை வரைந்து விற்று சம்பாதித்தார்..
5. ஹிட்லர் நாளிதழ், ஊடகங்கள் அனைத்தும் தன்னை பற்றிய செய்திகளை பதியுமாறு செய்தார்..ஊடகங்களும் அவ்வாறே ஹிட்லர் புகழ் பாடி செய்தி வெளியிட்டன...
6. உழைப்பாளர் சங்கங்கள் அனைத்தையும் ஒடுக்கினார்...
7. ஹிட்லர் தனக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை தேசவிரோதி என்று முத்திரை குத்தினார், நயவஞ்சகர்கள் என்று அழைத்தார்..
8. ஹிட்லர், சாதாரண அடிப்படை தொண்டராக பாசிச நாஜி படையில் சேர்ந்தார்... தனக்கு எதிரானவர்களுக்கு குழிகளை பறித்து பாசிச நாஜி படைக்கு தலைமை பதவியை பிடித்தார்...
9. நாட்டின் அனைத்து பிரச்சினையும் ஒரு நொடியில், மிக துரிதமாக தீர்வு காண தன்னால் முடியும் என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சியை பிடித்தார்...
10. ஆட்சி, அதிகாரத்திற்கு வந்த ஹிட்லரால் நாட்டின் சாதாரண ஒரு பிரச்சினைக்கு கூட தீர்வு காண முடியவில்லை... ஆனால் ஜெர்மனியை அதல பாதாளத்திற்கு கொண்டு சென்றார்..
11. ''நாட்டிற்கு நல்ல காலம் வர போகிறது, நாடு வல்லரசு ஆக போகிறது'' என்பது தான் ஹிட்லரின் தேர்தல் ஸ்லோகமாக இருந்தது...
12. ஹிட்லரின் நாஜி கட்சி வெற்றி பெற்று முதல் முறையாக பார்லிமென்றிக்கு ஹிட்லர் சென்ற போது அங்கு உணர்ச்சி மிகுதியால் அழுதார்...
13. பொய்கள் மற்றும் வெறுப்புகளை மட்டுமே மக்கள் மத்தியில் பரப்பி ஹிட்லர் ஆட்சிக்கு வந்தார்...
14. விலையுயர்ந்த ஆடைகள் அணிவதை ஹிட்லர் அதிகமாக விரும்பினார்...
15. ஹிட்லர் பொய்களை உண்மைகள் போலவும், உண்மைகளை பொய்கள் போலவும் பேச கலையை அறிந்தவர்...
16. ஹிட்லர் தன்னை முதன்மை படுத்தி ''நான், எனது'' என்று மட்டும் தான் அனைத்து தருணத்திலும் பேசினார்...
17. ஹிட்லர் ரேடியோவில் பேசுவதை மக்களுக்கு ஒலிப்பரப்புவதை அதிகம் விரும்பினார்...
18. ஹிட்லருக்கு ரகசிய காதலி இருந்தால் அவளை உளவு பார்க்க தனிகுழு வைத்து இருந்தார்...
19. "நண்பர்களே, தோழர்களே'' என்ற வார்த்தையை தான் தனது பிரச்சாரங்களில் அதிகம் உபயோகம் செய்தார்...
20. ஹிட்லர் தன்னை புகைப்படம் எடுப்பதை அதிகம் விரும்பினார்...

குறிப்பு: இந்த பதிவு முழுக்க முழுக்க ஹிட்லர் பற்றிய வரலாற்று பதிவு, மோடிக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை...
நீங்கள் மோடியை கற்பனை செய்தால் கம்பெனி பொறுப்பு அல்ல....!!
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் என்னென்ன முக்கிய பிரிவுகள் உள்ளன?   (1)- உறுதிச்சான்று அளிக்கப்பட்ட நகல் பெறலாம் (பிரிவு - 2J(ii)                                    (2)- பிரிவு 4(1) D, ன்படி, தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய காரணங்கள் தெரிவிக்க வேண்டும்.                                      (3)- பிரிவு 6(2)ன்படி தகவல் கேட்கும் விண்ணப்பதாரரிடம் மனு எதற்கு? என்கிற காரணங்கள் கேட்க கூடாது.                            (4)- பிரிவு 6(3)ன்படி கேட்கப்பட்ட தகவல் வேறு அலுவலகத்தில் இருக்கின்ற போது உரிய அலுவலகத்துக்கு அனுப்பி 5 நாட்களுக்குள் விண்ணப்பதாரருக்கு உரிய விபரத்தை தெரிவிக்க வேண்டும்.                                      (5)- பிரிவு 7(1)ன்படி 30 நாட்களுக்குள் தகவலை அளித்தல் வேண்டும்.                      (6)- பிரிவு 7(1)ன்படி உயிர் சம்மந்தப்பட்ட தகவல்கள் ஆனால் 48 மணிநேரத்திற்குள் அளித்தல் வேண்டும்.                                        (7)- கேட்கப்பட்ட தகவல்கள் 30 நாட்களுக்குள் வந்து சேரவில்லை என்றால், உங்கள் தகவல் மறுக்கப்படுவதாக அர்த்தம். பிரிவு 7(8)ன்படி மறுப்பதற்கான காரணம் தெரிவிக்க வேண்டும்.                                                            (8)- பிரிவு 7(6)ன்படி 30 நாட்களுக்குள் தகவல் தரவில்லை என்றால் கட்டணமின்றி தகவல் தெரிவிக்க வேண்டும்.                                      (9)- பிரிவு 7(9)ன்படி நீங்கள் கேட்டுள்ளபடி தகவலும் அதுபோல அளிக்கப்பட வேண்டும். உதாரணமாக சிடியில் அல்லது நகல் என எப்படி கேட்டாலும் தகவல் அளிக்கப்பட வேண்டும். (ரெக்கார்டுகளுக்கு குந்தகம் விளைவிக்கும் என பொது தகவல் அலுவலர் கருதினால் உரிய காரணத்தை சொல்லி தர "இவ்வாறு இயலாது.... இவ்வாறு தரலாம்" என கூற வேண்டும்.                                        (10)- பிரிவு 8(1)ன்படி நாடாளுமன்றத்தில், சட்டமன்றத்தில் மறுக்க முடியாத தகவல்களை அளிக்க வேண்டும்.                (11)- பிரிவு 19(8) B ன்படி தகவல் முழுமையாக வழங்கப்படாததால் இழப்பீட்டை கோரலாம். இந்த இழப்பீடு கொடுக்க தகவல் ஆணையத்திற்கு உரிமை உள்ளது.            (12)- பிரிவு 20(2)ன்படி பொது தகவல் அதிகாரி விண்ணப்பங்கள் பெற மறுத்தாலோ அல்லது தகவல் அளிக்க மறுத்தாலோ தகவல் ஆணையம் பொது தகவல் அதிகாரிகள் மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ய முடியும்.                                                               (13)- பிரிவு 20(1)ன்படி தகவல் வழங்காத ஒவ்வொரு நாளுக்கும் ரூபாய் 250 முதல் ரூபாய் 25000 வரை தகவல் ஆணையம் பொது தகவல் அலுவலருக்கு அபராதம் விதிக்க முடியும்.                                                 (14)- பிரிவு 3 ன்படி அனைத்து குடிமக்களும் தகவல்களை கேட்கலாம்  அமைப்புகளின் சார்பிலும் கேட்க முடியும்.                                (15)- பிரிவு 19(1)ன்படி பொது தகவல் அலுவலருக்கு அனுப்பிய மனுவுக்கு 30 நாட்களுக்குள் பதில் வராமல் இருந்தாலோ அல்லது 30 நாட்களுக்குள் பதில் வந்தும் மேல்முறையீடு செய்ய உரிய காரணத்திற்காக நிறுத்தி வைத்திருந்தாலோ பிரிவு 19(5)ன்படி மேல்முறையீடு காலதாமதமாக செய்தாலும் ஏற்க வேண்டும்.(16)- பிரிவு 19(3)ன்படி மேல்முறையீடு அதிகாரியிடமிருந்து திருப்தியற்ற பதில் வந்தாலோ அல்லது பதில் வராமல் போனாலோ 90 நாட்களுக்குள் தகவல் ஆணையத்திற்கு இரண்டாவது மேல்முறையீடு செய்ய வேண்டும்.              (17)- பிரிவு 5 ன்படி பொது தகவல் அலுவலரின் பதவி பெயரை கேட்கலாம்.    (18)- பிரிவு 27 ன்படி விதிகளை இயற்றிட உரிய அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளது. (19)- பிரிவு 21 ன்படி நல்ல எண்ணத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு பாதுகாப்பு அளிக்கிறது.                                                      (20)- பிரிவு 13 ன்படி பதவி, பணிக்காலம் மற்றும் பணியின் வரையறைகளை குறிக்கிறது.

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...