Monday, 16 January 2017

GK AND TAMIL


| இந்திய அரசியலமைப்பு

@ மக்களின் நேரடித் தொடர்பிற்குட்பட்ட இன்றியமையாதத் துறையாக இயங்குவது எது ?
வருவாய் நிர்வாகத் துறை

@ வருவாய் நிர்வாகத் துறை யாரின் கீழ் இயங்குகிறது ?
சிறப்பு ஆணையர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர்

@ பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணித்தல் போன்ற பணிகள் யாரால் கவனிக்கப்படுகின்றன ?
வருவாய் நிர்வாகத் துறை

@ மாவட்ட அளவில் நிலம் சம்மந்தமான பணிகளைக் கவனிக்கும் முதன்மை அதிகாரி யார் ?
மாவட்ட ஆட்சியர்

@ முதியோர் உதவித்தொகை வழங்கும் துறை எது ?
வருவாய்த் துறை

@ வருவாய்த் துறை அதிகாரிகள் யாருடன் நேரடித் தொடர்பு கொண்டுள்ளனர் ?
மக்களிடம்

@ மாவட்ட நிர்வாகத்திற்கு முதுகெழும்பாக இருந்து வரும் அமைப்பு எது ?
கிராம நிர்வாக அமைப்பு

@ கிராம முன்சீப்கர்ணம் போன்ற பணியாளர்கள் எதற்கு முன் பணியாற்றினர் ?
14.11.1980 கிற்கு முன்

@ வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் தணிக்கும் துறை என எப்பொழுது பெயர் மாற்றம் செய்யப்பட்டது ?
27.05.2003

@ அரசு ஆணை நிலை எண் எது ?
249

@ வருவாய் அதிகாரிகள் யாராகவும் இருந்து கிராமத்தின் பொது நிர்வாகத்தைக் கவனித்தனர் ?
கிராம பொது நிர்வாக அதிகாரிகளாக

@ கிராம நிர்வாக அமைப்பு எந்த ஆண்டு மாற்றம் செய்யப்பட்டது ?
1980

@ கிராம அலுவலர்கள் ஒழிப்பு அவரசச் சட்டம் என்று பிரகடனப் படுத்தப்பட்டது ?
13.11.1980

@ கிராம அலுவலர் ஒழிப்புச் சட்டம் எப்பொழுது நடைமுறைக்கு வந்தது ?
14.11.1980

@ கிராம நிர்வாக அலுவலர் பதவி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைக் குழுவின் கட்டுப்பாட்டில் எப்பொழுது வந்தது ?
12.12.1980

@ அதன் அரசு ஆணை என்ன ?
அரசு ஆணை எண் 2747

@ கிராம நிர்வாக அலுவலர்களின் தகுதியாக அரசு நிர்ணயம் செய்த தகுதி எது ?
எஸ்.எஸ்.எல் சி தேர்ச்சி

@ அதற்கான அரசு ஆணை என்ன ?
அரசு ஆணை எண் - 1287

@ எந்த ஆண்டில் பதவியில் இருந்தவர்களுக்கு இச்சலுகை வழங்கப்பட்டது ?
6.7.1988 -இல் ( 14.11.1980 அன்று பதவியிலிருந்தோர்)

@ அரசு ஆணை 954 இன் முக்கியத்துவம் என்ன ?
குறைந்த பட்ச தகுதி கொண்ட முன்னாள் கிராம அலுவலர்களுக்கான பணிச் சலுகை பற்றியது

@ கிராமத் தலையாரி மற்றும் வெட்டியான் போன்றோர் எப்பொழுது
நிரந்தரமாக்கப்பட்டனர் ?
6.7.1995

@ கிராம உதவியாளர்கள் என்ற பணி எந்த ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது ?
1995 இல்

@ அரசு ஆணை எண் 521 இன் சிறப்பு என்ன ?
கிராம உதவியாளர் பணி வரையறுப்பு

@ கிராம உதவியாளர்களின் பணி எந்த ஆண்டு வரையறுக்கப்பட்டது ?
17. 6. 1998இல்

@ கிராம அலுவலர்கள் எங்கு தங்கிப் பணியாற்ற வேண்டும் ?
பொறுப்புக் கிராமத்தில்

@ கிராமக் கணக்குகள் எங்கு வைத்துப் பராமரிக்க வேண்டும் ?
கிராம நிர்வாக அலுவலகத்தில்



கபடியில் எத்தனை வீரர்கள் களத்தில் இருப்பார்கள்?
7

மடிக்கணிணி யாருடைய சிந்தனையில் உருவானது?
ஆலம் கே என்பவரின் டைனாபுக்

முதன்முதலில் வணிக நோக்கில் வெளிவந்த மடிக்கணிணி?
ஒஸ்போர்ன் (1981)

மடிகணிணிகளின் எடை?
2.3 கி.கி முதல் 3.2 கி.கி வரை

மடிக்கணிணியின் திரை அளவு?
35 செ.மீ முதல் 39 செ.மீ வரை

வெள்ளை யானைகளின் நிலம்?
தாய்லாந்து

கடலின் ஆபரணங்கள்?
மேற்கிந்திய தீவு

ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம்?
சுவிட்சர்லாந்து

நள்ளிரவு சூரியன் உதிக்கும் நாடு?
நார்வே

அரபிக் கடலின் அரசி?
கொச்சி

அதிகாலை அமைதி நாடு?
கொரியா

இந்தியாவின் சுவிட்சர்லாந்து?
காஷ்மீர்

புனித பூமி?
பாலஸ்தீனம்

ஆஸ்திரேலியாவின் முன் கதவு?
டார்வின் நகரம்

மரகதத் தீவு?
அயர்லாந்து

தடுக்கப்பட்ட நகரம்?
லாசா

பண்பாடுகளின் தாய்நகரம்?
பாரிஸ்

தண்ணீர் தேசம், மிதவை நகரம்?
வெனிஸ்

ஏரிகளின் நகரம்?
ஸ்காட்லாந்து

தீவுகளின் நகரம்?
மும்பை

Tamil :



 “திங்களை பாம்பு கொண்டற்று” என்ற குறள் எதை குறிப்பிடுகிறது – சந்திர கிரகணம்

# உடலை நீர் தூய்மை செய்யும், உள்ளத்தை எது தூய்மை செய்யும் – வாய்மை

# ஆய்த எழுத்து எந்த எழுத்து வகையை சேர்ந்தது – சார்பெழுத்து

# திரு.வி.க இயற்றிய பொதுமை வேட்டல் என்னும் தலைப்பில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை – 430

# திரு.வி.க . பிறந்த ஊர் – தண்டலம்

# உழவர்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் நாடகங்களுக்கு பெயர் – பள்ளு

# நொண்டி வகை நாடகங்கள் எந்த காலத்தில் தோன்றின் – கி.பி.12

# அருணாசலக் கவிராயரின் ராம் நாடகம் தோன்றிய நூற்றாண்டு – கி.பி.18

# தெருக்கூத்து நாடகங்கள் எதை மையமாக வைத்து நடத்தப்பட்டன – புராணக்கதைகள்

# குறவஞ்சி நாடகங்கள் நடத்தப்பட்டது – நாயக்க மன்னர்கள் காலத்தில்

# ராஜராஜசோழன் காலத்தில் நடத்தப்பட்ட நாடகம் – ராசராசேச்சுவரம்

# மத்த விலாசம் என்ற நூலை எழுதியவர் – மகோந்திரவர்ம பல்லவன்

# மத்த விலாசம் எழுதப்பட்ட காலம் – கி.பி. 7

# நாடக கலையை பற்றியும், காட்சிகள் பற்றியும், நாடக அரங்கம் பற்றியும் விரிவாக கூறியுள்ள நூல் – சிலப்பதிகாரம்

# தனிப்பாடலுக்கு மெய்பாடு தோன்ற ஆடுவதற்கு – நாட்டியம் என்று பெயர்

# கூத்துவகைகள், நாடக நூல்கள் குறித்து யார் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது – அடியார்க்கு நல்லார்

# நாட்டின் கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும், வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவது – நாடகம்

# மனித வாழ்க்கையும் காந்தியும் என்ற நூலின் ஆசிரியர் – திரு.வி.க

# திரு.வி.க சென்னையில் தமிழ் ஆசிரியராக பணியாற்றிய பள்ளி – வெஸ்லி பள்ளி

# அக இருளை போக்கும் விளக்கு – பொய்யா விளக்கு

# நாயக்க மன்னர்கள் தமிழகத்தை எத்தனை பாளையங்களாக பிரித்தனர் – 72

# சார்பெழுத்துக்கள் எத்தனை வகை – 10

# அறிவுரைக் கோவை என அழைக்கப்படுவது – முதுமொழிக்காஞ்சி

# முதுமொழிக் காஞ்சியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை – 100

# மோசிக்கீரனார் உடல் சோர்வால் முரசுக் கட்டிலில் தூங்கியபோது கவரி வீசிய மன்னன் – சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை

# நெல்லும் உயிரன்றே என்னும் பாடலை பாடியவர் – மோசிக்கீரனார்

# முதுமொழிக் காஞ்சியில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை – 10

# முதுமொழிக் காஞ்சியின் ஆசிரியர் – மதுரை கூடலூர் கிழார்

# கற்றலை விட சிறந்தது – ஒழுக்கமுடைமை

# மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பிறந்த ஆண்டு – 1815

# வனப்பு என்ற சொல்லின் பொருள் – அழகு

# “நில்லாமையுள்ளும் நெறிப்பாடும்” என்னும் வரியில் “வழி” என்பதன் பொருள் – உள்

# “பால் பற்றி செல்லா விடுதலும்” என்னும் வரியில் “பால்” என்பதன் பொருள் – ஒருபக்க சார்பு பற்றி

# காளமேகப் புலவர் பிறந்த ஊர் – நந்திக்கிராமம்

# சென்னை துறைமுகம் சார்பில் குடிநீர் கப்பலுக்கு பெயர் – சீனிவாச ராமானுஜம்

# ராமானுஜம் எழுத்தராக பணியாற்றிய இடம் – துறைமுகம்

# ராமானுஜர் உயர்கல்விக்காக சென்ற நாடு – இங்கிலாந்து

பொருளாதாரம் கேள்வி-பதில்



1. இந்தியாவில் வறுமைக்கோட்டைநிர்ணயித்த கமிட்டி எது - லக்டவாலாகமிட்டி

2. இந்தியாவின் வெளிநாட்டுக் கடனின்மதிப்பு (2001-ல் உள்ள விவரப்படி) - 98.4 பில்லியன் டாலர்

3. வறுமையை அளவிட திட்டக்குழு எந்தஅளவை பயன்படுத்துகிறது - 2400 கி.கலோரிகள்

4. இந்தியாவின் மக்கள்தொகைஎவ்வளவு? (2001-ம் மக்கள் தொகைகணக்குப்படி) - 102.7 கோடி

5. முதலாவது ஐந்தாண்டு திட்டத்தில்முதன்மை அளிக்கப்பட்ட துறை யாது -வேளாண்மை துறை

6. யுனிசெஃப் எந்த ஆண்டு நிறுவப்பட்டது- 1946

7. எண்ணெய் மற்றும் இயற்கை வாயுகமிஷன் எப்போது உருவாக்கப்பட்டது - 1956

8. திட்டக்குழுவின் உபதலைவர் எந்தநிலையில் இருப்பார் - கேபினெட்மந்திரிஅந்தஸ்தில் இருப்பார்

9. உலக வர்த்தக சங்கம் எந்த ஆண்டுஆரம்பிக்கப்பட்டது - 1995

10. தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில்ஆண் பெண் விகிதம் 2001-ம் ஆண்டுபுள்ளி விவரப்படி அதிகமாக உள்ளது - தூத்துக்குடி

11. யாருடைய கருத்தின்படி ஜனநாயகசமத்துவ சமுதாயம் என்ற சொல்விவரிக்கப்படுகிறது - ஜவஹர்லால்நேரு

12. இந்தியாவில் போட்டிக்குழுசெயல்பாட்டுக்கு வந்த நாள் - மே, 2009

13. மொத்த தேசிய உற்பத்திக்கும் நிகரதேசிய உற்பத்திக்கும் உள்ள வித்தியாசம்- தேய்மானம்

14. போட்டிச் சட்டம்கொண்டுவரப்படுவதற்குக் காரணமாகஇருந்த கமிட்டி - ராகவன் கமிட்டி

15. அகன்ற பணம் என்பது - M3
¤பலகேள்வி ஒரு பதில்¤
1.நச்சுத்தன்மை உள்ள பாம்புகளின் வகை
2.தேசிய கீதம் பாட ஆகும் வினாடி
3.தமிழ்நாட்டில் எத்தனை சதவீதம் கிணற்று பாசனம்
4.குடியரசு தலைவர் பதவியை குறிக்கும் சரத்து
                   #ANSWRR:52

 ¤பலகேள்வி ஒரு பதில்¤
1.பாரதியார் பிறந்த ஆண்டு
2.ஆனந்தமடம் நூல் வெளிவந்த ஆண்டு
3.முக்கூட்டு உடன்படிக்கை ஆண்டு
                  #ANSWER:1882

¤பலகேள்வி ஒரு பதில்¤
1.விஜயலட்சுமி பண்டிட் பொதுப்பேரவையின் தலைவரான ஆண்டு
2.UNCHR நோபல் பரிசு பெற்ற ஆண்டு
3.முதல் பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்ட ஆண்டு
4.ஆனந்தத்தேன் நூல் வெளிவந்த ஆண்டு
                       #ANSWER:1954

¤பலகேள்வி ஒரு பதில்¤
1.அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம்
2.குறைந்தபட்ச கூலிச் சட்டம்
3.தொழிற்கூட சட்டம்
                                   #ANSWER:1948

¤பலகேள்வி ஒரு பதில்¤
1.அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் ஆண்டு
2.காமராசர் அகில இந்திய காங்கிரஸ் தலைவரான ஆண்டு
3.MGR சென்னை மாநிலச் சட்டமன்ற மேலவை உறுப்பினரான ஆண்டு
4.கீழார்வெளி பகுதியில் மூன்றாம் நூற்றாண்டு கட்டிட இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு
5. 15வது சட்டத்திருத்தம் ஆண்டு
6.CAC நிறுவனம் FAO மற்றும் WHO நிறுவனங்களை ரோம் நகரில் நிறுவிய ஆண்டு
                                   #ANSWER:1963

¤பலகேள்வி ஒரு பதில்¤
1.மாநில மறுசீரமைப்பு சட்டம்
2.ஆயுத குறைப்பு தீர்மானம்
3.முதல் அணுசக்தி நிலையம் டிராம்பேவில் தொடங்கப்பட்ட ஆண்டு
4.சூயஸ் கால்வாய் தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு
5.இந்து வாரிசு சட்டம்
6.முத்துலெட்சுமி ரெட்டி பத்மபூஷன் பெற்ற ஆண்டு
7. 7வது சட்டத்திருத்தம் ஆண்டு
8.மொழி அடிப்படையில் இந்தியா பல மாநிலங்களாக பிரிக்கப்பட்ட ஆண்டு
                                #ANSWER:1956

¤பலகேள்வி ஒரு பதில்¤
1.கரும்பலகை திட்டம் ஆண்டு
2.தாய்ப்பாலுக்கு மாற்றாக உணவுப்புட்டிகள் மற்றும் குழந்தை உணவுத்திட்டம்
3.71 to 74 வரை சட்டத்திருத்த ஆண்டுகள்
                              #ANSWER:1992

¤பலகேள்வி ஒரு பதில்¤
1.சாலை இளந்திரையன் பாவேந்தர் விருது பெற்ற ஆண்டு
2.புதிய பொருளாதார கொள்கை தொடங்கப்பட்ட ஆண்டு
3.டெல்லி தேசிய தலைநகரான ஆண்டு
4.69வது சட்டதிருத்த ஆண்டு
5.குறைந்தபட்சகற்றல்(MLL) அறிமுக ஆண்டு
                  #ANSWER:1991

¤பலகேள்வி ஒரு பதில்¤
1.பாரதிதாசன் பிறந்த ஆண்டு
2.அம்பேத்கர் பிறந்த ஆண்டு
3.மனோன்மணீயம் நூல் வெளிவந்த ஆண்டு
                   #ANSWER:1891

¤பலகேள்வி ஒரு பதில்¤
1.வளையாபதி பாடல்களின் எண்ணிக்கை
2.குடியரசு தலைவர் மன்னிப்பு வழங்கும் சரத்து
3.தமிழகத்தை நாயக்கர்கள் எத்தனை பாளையங்களாக பிரித்தனர்
                  #ANSWER:72

¤பலகேள்வி ஒரு பதில்¤
1.RBI தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு
2.பாரதியாரின் படைப்புகள் தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு
3.சீனா சுதந்திரம் அடைந்த ஆண்டு
4.குமாரசாமி தமிழக முதல்வரான ஆண்டு
                 #ANSWER: 1949

¤பலகேள்வி ஒரு பதில்¤
1.தேசிய ஒருமைப்பாட்டு தினம்
2.இந்திரா காந்தி பிறந்த நாள்
3.world toilet day
4.international journalist's remembrance day
                 #ANSWER: nov 19

¤பலகேள்வி ஒரு பதில்¤
1.நேரு அல்மோரா சிறையில் இருந்து இந்திரா காந்திக்கு கடிதம் எழுதிய நாள்
2.தில்லையாடி வள்ளியம்மை மறைந்த நாள்
3.world scout day
 ◆                       #ANSWER: feb 22

¤பலகேள்வி ஒரு பதில்¤
1.ஆனந்தரங்கர் தந்தை பெயர்
2.சுரதா தந்தை பெயர்
3.மு.வ இயற்பெயர்
                       #ANSWER:திருவேங்கடம்

¤பிறப்புகள்¤

1869-காந்தி
1879-பெரியார்
1889-நேரு
1899-உடுமலைகவி,அம்புஜம்
1909-அண்ணா ¤பிறப்புகள்¤

1627- சிவாஜி
1827-H.A.கிருட்டிணப்பிள்ளை
1927-கண்ணதாசன்
1927-சைமன் குழு அமைத்தல்

Sunday, 15 January 2017

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் புதிதாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த தேவையில்லை என்பது கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையை புரிந்து கொள்ளாமல் அமைச்சர் பாண்டியராஜன் கருத்து தெரிவித்துள்ளார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் புதிதாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த தேவையில்லை என்பது கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையை புரிந்து கொள்ளாமல் அமைச்சர் பாண்டியராஜன் கருத்து தெரிவித்துள்ளார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 30,000 பேர் இருப்பதால் ஆசிரியர் தகுதித் தேர்வு இப்போதைக்கு நடத்தப்படாது என்று பள்ளிக்கல்வி அமைச்சர் க.பாண்டியராஜன் கூறியுள்ளார். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடங்கள் ஏற்கெனவே தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களைக் கொண்டு நிரப்பப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இது கல்வி உரிமைச் சட்டத்துக்கு எதிரானதாகும்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் புதிதாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த தேவையில்லை என்பது கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையை புரிந்து கொள்ளாமல் தெரிவிக்கப்பட்ட கருத்து ஆகும்.

ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது தனியார் நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வது போன்று, பணியிடங்கள் காலியாக இருந்தால் மட்டும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை அல்ல. மாறாக, காலியிடங்களின் எண்ணிக்கையை பொருட்படுத்தாமல், குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒருமுறை தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டிய தகுதி வழங்கும் நடவடிக்கை ஆகும்.
கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி தகுதித் தேர்வு நடத்துவது குறித்து 15.11.2011 அன்று தமிழக அரசு பிறப்பித்த 181வது அரசாணையின் பிறசேர்க்கை 11வது பிரிவில்,‘‘ ஆண்டுக்கு குறைந்தபட்சம் ஒருமுறையாவது தகுதித் தேர்வை அரசு நடத்த வேண்டும்.

இதில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழின் செல்லுபடியாகும் காலத்தை 7 ஆண்டுகளுக்கு மிகாமல் அரசு நிர்ணயித்துக் கொள்ளலாம். அத்துடன் தகுதித் தேர்வு மதிப்பெண்ணை உயர்த்திக் கொள்வதற்காக மீண்டும் மீண்டும் தேர்வை எழுதலாம்’’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இப்பிரிவை அமைச்சர் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். இந்த விதிகளின்படி மத்திய அரசால் நடத்தப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை ஜூன் மாதத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வில் எத்தனை பேர் தேர்ச்சி பெற்றாலும், அதைக் கருத்தில் கொள்ளாமல் ஆண்டு தோறும் தகுதித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் பணிக்கான மாநில அளவிலான தகுதித் தேர்வு ஆண்டுக்கு ஒருமுறையும், தேசிய தகுதித் தேர்வு ஆண்டுக்கு இருமுறையும் நடத்தப்படுகின்றன.
இவற்றில் வெற்றி பெறுவது ஆசிரியர் பணிக்கான தகுதி தானே தவிர, உத்தரவாதமல்ல. இதனால் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 30,000 பேருக்கு இதுவரை வேலை கிடைக்கவில்லை என்று கூறி தகுதித் தேர்வு நடத்தப்படாது என்பது அறியாமையின் உச்சத்தில் அமைச்சர் இருப்பதையே காட்டுகிறது.

அமைச்சரின் இந்த அறிவிப்பால் இரு வகையான பாதிப்புகள் ஏற்படும். தமிழகத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு தான் கடைசியாக தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. அதன்பின் 4 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், அதில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் இன்னும் 3 ஆண்டுகளில் காலாவதியாகியாகிடும்.
அதற்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 30 ஆயிரம் பேருக்கும் அரசு வேலை வழங்க முடியாது. அதனால் அடுத்த மூன்றாண்டுகளுக்குள் அவர்கள் மீண்டும் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.

ஆண்டுக்கு ஒருமுறை இத்தேர்வு நடத்தப்பட்டால் விருப்பப்பட்ட நேரத்தில் அவர்கள் மீண்டும் தேர்வு எழுதி தங்களின் தகுதியை புதுப்பித்துக் கொள்ள முடியும். அதுமட்டுமின்றி, தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை பொறுத்து 60% வரை தகுதிகாண் மதிப்பெண் வழங்கப்படுவதால், ஒருமுறை குறைந்த மதிப்பெண் எடுத்திருந்தால் அவர் அடுத்த ஆண்டே மீண்டும் தேர்வெழுதி அவரது தகுதியை உயர்த்திக் கொள்ள முடியும். ஆனால், அமைச்சரின் அறிவிப்பால் இந்த இரு வாய்ப்புக்களும் பறிக்கப்படுகின்றன.


இதற்கெல்லாம் மேலாக ஆசிரியர் படிப்புக்கு படித்தவர்கள் இந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றால் தான் ஆசிரியர் பணிக்கு தகுதி பெறுவர். கடந்த 4 ஆண்டுகளாக தகுதித் தேர்வு நடத்தப்படாததால், அந்த காலத்தில் ஆசிரியர் படிப்பு முடித்தவர்கள் அந்த பணிக்கு தகுதி பெற முடியாமல் தவிக்கின்றனர். இதனால், அவர்கள் படித்த படிப்பு பயனற்றதாகிவிட்டது. ஆசிரியர் பணிக்கு தகுதி பெற விரும்புவோருக்கு தகுதித் தேர்வு நடத்த வேண்டியது அரசின் கடமை. ஆனால், அந்தக் கடமையை செய்யாததன் மூலம் 4 ஆண்டுகளில் 25 லட்சம் பேர் ஆசிரியர் ஆவதற்கு தகுதி பெறும் உரிமையை தமிழக அரசு மறுத்திருக்கிறது.
அத்துடன் தகுதித் தேர்வு நடத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உள்ளது. ஆனால், தகுதித் தேர்வு நடத்தப்படாது என்று கூறியதன் மூலம் ஆசிரியர்கள் தேர்வு வாரியம் அதன் கடமையை செய்யவிடாமல் தடுத்திருக்கிறார். இது கல்வி பெறும் உரிமைச் சட்டத்தை மீறிய செயல் என்பதை பள்ளிக்கல்வி அமைச்சர் உணரவேண்டும்.


தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 30,000 பேர் இன்னும் வேலை பெறாமல் இருக்கின்றனர் என்பதே அரசின் தோல்வியைக் காட்டுகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டுமானது அல்ல. சிறுபான்மை பள்ளிகள் தவிர மற்ற தனியார் சுயநிதி பள்ளி ஆசிரியர்களுக்கும் இந்த தகுதித் தேர்வு பொருந்தும். 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசு பிறப்பித்த 181வது அரசாணையின் மூன்றாவது பிரிவில்,‘‘அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அடுத்த 5 ஆண்டுகளில் தகுதித் தேர்வில் தேச்சி பெற வேண்டும் ( The teachers working in unaided private schools are required to pass Teacher Eligibility Test within 5 years)’’ என கூறப்பட்டிருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் தனியார் பள்ளிகளில் பல லட்சம் ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டிருக்கின்றனர். அவர்கள் தகுதித் தேர்வின் அடிப்படையில் பணி அமர்த்தப்பட்டிருந்தால், இந்த 30,000 பேருக்கும் எப்போதோ வேலை கிடைத்திருந்திருக்கும். ஆசிரியர் தகுதித் தேர்வுகள் கூடாது.

வேலைவாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் அவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடும், விருப்பமும் ஆகும். ஆனால், தகுதித் தேர்வு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்த விதிகள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று பா.ம.க. கருதுகிறது. எனவே, ஆண்டுக்கு ஒருமுறை தகுதித்தேர்வு நடத்தி, அதில் தேர்ச்சி பெறுவோரைக் கொண்டு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

பகிா்வு...
First announced for only qualifying exam in 2012
First -TNTET
Then second -next exam
Totally -two exam
Then certificate verification
then appointment

Most of them opposed

Then
2012 also Education Minister changed to one exam

i.e. qualifying and competitive =one exam
Do You Know About Aanandharangar !!
ஆனந்தரங்கர் நாட்குறிப்பு




ஆசிரியர் குறிப்பு:

💎 தந்தை - திருவேங்கடம் (திவானாகப் பணிபுரிந்தார்).

💎 ஊர் - சென்னை, பெரம்பு+ர்.

💎 காலம் - 1709,மார்ச்-30 - 1761,ஜனவரி-11.

💎 பணி - துபாசி, திவான்.

💎 ஆசிரியர் - எம்பார்.


🌟 துபாசி - என்பதற்கு இருமொழிப் புலமையுடையவர் எனப் பொருள்.

🌟 துய்ப்ளெ என்னும் ஆளுநரின் மொழி பெயர்ப்பாளராக இருந்தார்.

🌟 டைஸ் என்ற இலத்தீன் சொல்லிற்கு நாள் என்று பொருள்.

🌟 1736,செப்டம்பர்-06 முதல் 1761 வரை இருபத்தைந்து ஆண்டுகள் நாட்குறிப்பு எழுதினார்.

🌟 தம் நாட்குறிப்புக்கு தினப்படிச் செய்திக்குறிப்பு, சொஸ்தலிகிதம் என்றே பெயரிட்டார்.

🌟 சொஸ்தலிகிதம் - சொஸ்த (தௌpந்த அல்லது உரிமையுடைய) லிகிதம் - கடிதம், வளவு - வீடு.


🌟 இவரின் நாட்குறிப்பு ஒரு வரலாற்று கருவு+லமாகத் திகழ்கிறது. இவரது நாட்குறிப்புகளின் பெரும்பகுதி வணிகச் செய்திகளையே விவரித்துள்ளன.

🌟 25 ஆண்டு கால பதிவேடாக இவரது நாட்குறிப்புகள் விளங்குகின்றன.

🌟 அரைநாழிகை என்பது 12 நிமிடங்கள் ஆகும்.

🌟 பிரெஞ்சுக்காரர்களும், இந்திய மன்னர்களுக்கும் இடையே பாலமாக இருந்தார்.


சிறப்புகள்:

♤ 1749 ஆம் ஆண்டில் முசபர்சங் ஆனந்தரங்கருக்கு 3000 குதிரைகளை வழங்கி மன்சுபேதார் என்னும் பட்டத்தையும் வழங்கினார்.

♤ ஆனந்தரங்கர் செங்கற்பட்டு கோட்டைதளபதியாகவும், பின் அம்மாவட்ட ஜாகீர்தாரராகவும் நியமிக்கப்பட்டார்.

♤ துபாசி பணியாற்றுவோர் தமிழ் மக்களின் தலைவராக அறிவிக்கப்படுவர். ♤ ஆனந்தரங்கர் ஆளுநர் மாளிகைக்குள் பல்லக்கில் செல்லும் உரிமை பெற்றிருந்தார்.

♤ உலக நாட்குறிப்பு வேந்தர் - பெப்பிசு.

♤ இந்தியாவின் நாட்குறிப்பு வேந்தர் (அல்லது) இந்தியாவின் பெப்பிசு - ஆனந்தரங்கர்.

♤ அருணாசலக் கவிராயர் தம் இராமநாடகத்தைத் திருவரங்கத்தில் அரங்கேற்றிய பின் மீண்டும் ஆனந்தரங்கர் முன்னிலையில் அரங்
பொங்கல் திருநாள் முன்னிட்டு மாணவன் இணையதளத்தில் இன்று TNPSC போன்ற அனைத்து தேர்வுகளுக்கும் உதவும் வண்ணம் உங்களுக்காக உருவாக்கியுள்ளது.

Central And State Government Planning
https://goo.gl/Zc8IOU

TNPSC Exam Tips
https://goo.gl/bkKFFt

TNPSC Online Test
https://goo.gl/kYomyI

TNPSC Free Materials
https://goo.gl/3x4rWi

Current Affairs Quiz
https://goo.gl/RMLz2y

Monthly Current Affairs
https://goo.gl/1GLywH

Daily Current Affairs
https://goo.gl/NbR2ZM


Maths Videos Tricks
https://goo.gl/61WpFV


Tamil Videos Tricks
https://goo.gl/AvOGyQ


Exam Tips Videos
https://goo.gl/KCecGW

நடப்பு நிகழ்வு  ஒலிப்பதிவுகளை  கேட்க
http://goo.gl/owbLtS


தன்னம்பிக்கை நிமித்தமான (Motivation) ஒலிப்பதிவுகளை  கேட்க
http://goo.gl/wgz4Zd


*இனி எல்லாம் வெற்றியே!*

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...