Thursday, 26 January 2017

அரசு பள்ளிகளில் பணிபுரியும்
ஆசிரியர்கள் ஏன் தனது பிள்ளையை தனியார்
பள்ளியில் சேர்கின்றனர்?
❔❔❔❔❔❔❔❔

ஏன் அவர்களுக்கே அரசு பள்ளியின்
மீது நம்பிக்கையில்லையா?
இது போன்ற கேள்விகள் பெருமளவில்
பரவலாகக் கேட்கப்படுகிறது..

பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில்
சிறப்பிடம் பிடித்தவர்களில் 99% தனியார் பள்ளியில்
பயின்றவர்கள்.
அவர்களின்
பெரும்பாலானோரின் பெற்றோர்,
அரசு பள்ளி ஆசிரியர்கள்!
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீதான
இதுபோன்ற குற்றச்சாட்டுகள்
இன்று நேற்றல்ல, காலம் காலமாய்
நிகழ்ந்து வருவது.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள்
தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில்
படிக்க வைக்கின்றனர் என்பதே மக்களின்
பொதுவான குற்றச்சாட்டு.

அரசாங்க மருத்துவர்கள் தங்கள்
குழந்தைகளை மேலான சிகிச்சைக்காக
தனியார் மருத்துவமனைகளில்
அனுமதிப்பதில்லையா?
அதனால் அவர்களுக்கு அரசு மருத்துவர்களின்
மீதும், அவர்களின் திறமையின் மீதும்
நம்பிக்கையில்லை என்று அர்த்தமா?

அரசாங்க
மருத்துவமனைகளில் தகுந்த வசதிகள்
இல்லாதபோது தனியார்
மருத்துவமனையை நாடுவதில் தவறென்ன
இருக்க முடியும்?

அல்லது, அரசு பணிகளில்
அமர்ந்திருக்கும் பல லட்சம் மக்கள் தங்கள்
பல்வேறு தேவைகளுக்காக தனியார்
அமைப்புக்களை நாடுவதில்லையா?

அதுபோலவே, அரசுப் பள்ளி ஆசிரியர்கள்
தனியார் பள்ளிகளை நாடுவதும்!

ஒரு நாளில் குறைந்தபட்சம்
அரைமணி நேரம் பயணிக்கக் கூடிய
பேருந்துகளில் கூட வீடியோ ,
ஆடியோ குளிர்சாதன வசதி என்று ஆயிரம்
வசதிகளை எதிர்ப்பார்க்கும் மக்கள்,
அரசு பேருந்துகள்
காலியாகவே இருந்தாலும்
அதை தவிர்த்து தனியார் பேருந்துகளில்
முண்டியடித்து பயணிப்பதில்லையா?

அதற்காக, நாம்
மக்களை குறை கூறுகிறோமா?
அரைமணி நேர பயணத்திற்கே ஆயிரம்
வசதிகள் எதிர்ப்பார்க்கும் நாம்,
தங்கள் குழந்தைகள் ஆண்டுமுழுவதும்
பயிலக்கூடிய பள்ளிகள்
அடிப்படை கட்டமைப்புகளுடனும் மேலான
வசதிகளுடனும் இருக்கவேண்டும் என்ற
அரசுப் பள்ளி ஆசிரியர்களின்
எதிர்பார்ப்பை மட்டும் ஏன் குறை கூற
முற்படுகிறோம்?

நம் குழந்தைகள் வீட்டில்
அனுபவிக்கும் வசதிகளை பள்ளியிலும்
அனுபவிக்க வேண்டும்; சுத்தமான
குடிநீரும் கழிப்பறை வசதிகளும் கொண்ட
தூய்மையான
ஆரோக்கியமான சூழலில் தங்கள் பிள்ளைகள்
கல்வி கற்க வேண்டும்
என்பது எல்லா விதமான பெற்றோரின்
எதிர்ப்பார்ப்பும் தானே?
இதில் அரசுப் பள்ளி ஆசிரியர், மற்ற
பெற்றோர் என்ற பாகுபாடு ஏன்?

அரசுப் பள்ளிகளில் தரமான கற்பித்தல்
நடைபெறுவதில்லை என்பதும், தனியார்
பள்ளிகளில் நல்ல
தேர்ச்சி வருகின்றது என்பதும்
ஒரு மாயை.

ஒரே வீட்டில் இருக்கும் ஒரு தாயின்
இரண்டு குழந்தைகள்.
இருவருக்கும் தாயின் சமையல் தான்..
ஆனால், ஒரு குழந்தை மட்டும் சாப்பிட
மறுக்கும்போது,
அதற்காக நாம் அந்தத்
தாயின் சமையலை குறை கூறவியலுமா?
தனியார் பள்ளிகளில் பயிலும்
குழந்தைகள் அந்த முதல் குழந்தையை போல.
அவர்களை யார் வேண்டுமானாலும்
பயிற்றுவிக்க முடியும்?

ஆனால், அரசு பள்ளிகளில் பயிலும்
குழந்தைகள்
இரண்டாவது குழந்தையைப் போல.
இவர்களை பயிற்றுவிப்பவர்கள்தான்
திறமைசாலிகள்.

அந்த வகையில் பார்த்தால்
கிராமப்புறப் பின்புலத்தில்
இருந்து எந்தவித
அடிப்படை வசதிகளும் பெற்றோரின் வழிக்
காட்டுதலும்
இன்றி இரண்டாவது பிள்ளையைப் போல
ஆர்வமின்றி படிக்க வரும் ஏழைக்
குழந்தைகளை சிரமப்பட்டு படிக்கவைத்து தேர்ச்சி பெற
அயராது உழைப்பவர்கள் அரசுப்
பள்ளி ஆசிரியர்களே!

தேர்வு முடிவுகள் வந்த சில
நாட்களுக்கு மட்டுமே அரசு பள்ளிகள்
மீது தங்கள் பார்வையை வீசும் ஊடகமும்,
கருத்தாளர்களும் சாதாரண நாட்களில்
பள்ளியை எட்டிப் பார்ப்பது உண்டா?

காலையில்
பள்ளி நுழைவு வாயிலிலேயே சிகரெட்
துண்டுகளை கடந்து, வகுப்பறையின்
எதிரில்
அவசர கோலத்தில் வீசப்பட்டு கிடக்கும்
கால்சட்டைகளையும்,
கேட்பாரற்று கிடக்கும்
மலிவு விலை கால்கொலுசையும்,
கழுத்து சங்கிலியையும்,
அவற்றை புரிந்தும்
புரியாமலும் பார்க்கும்
பிள்ளைகளையும்
கடந்து வகுப்பறைக்குள் நுழைநதால்,
ஜன்னல் வழியே வீசப்பட்டு நொறுங்கிக்
கிடக்கும்
மதுபாட்டில்களின் சிதறல்களை சுத்தம்
செய்வது யார் என்ற
பட்டிமன்றதிலுமே மூன்றாம்
பாடவேளை வரை கடந்துவிடுகிறதே
அதையா
வது அறிந்ததுண்டா?

வகுப்பறையில் மொபைல்
பயன்படுத்துவது தவறு என்பதற்காக பாடம்
நடத்திக் கொண்டிருக்கையில்,
அதனை கவனிக்காமல் மாணவன்
பார்த்துக்கொண்டிருந்த
அலைபேசியை வாங்கி அதிர்ச்சியிலும்
அருவெறுப்பிலும் உறைந்து போகும்
மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள்,தொடர்ந்து அவ்வகுப்பில் பாடம் கற்பிக்க
இயலாமல் தடுமாறிக்
கொண்டிருக்கின்றனரே...
அவர்களின் நிலையையாவது இவர்கள்
அறிவாரா?

பிள்ளைகளை கடிந்து ஒரு வார்த்தை பேசக்கூடாது,
தண்டிக்கக் கூடாது, மீறினால் சிறைவாசம்
என்று ஆசிரியர்களுக்கு ஆயிரம்
கட்டுப்பாடுகளை விதிக்கும்
அரசு மாணவர்களுக்கு அளித்திருக்கும்
கட்டுப்பாடில்லா சுதந்திரம்
அவர்களை தறிக்கெட்டு அலையவிட்டு இருப்ப
தையாவது அறிவார்களா?
கண்ட இடங்களில் எச்சில் துப்புவது,
பள்ளியிலேயே -
குடித்்துவிட்டு ஆசிரியர்
மீதே இடிப்பது,
செவிகளை பொத்திக்கொள்ளும்
அளவுக்கு அருவெறுக்கத்தக்க
வார்த்தைகளை பயன்படுத்துவது என்று சமுதாயத்தின்
அத்தனை அவலங்களையும்
ஒருங்கே கொண்டதாய் பெரும்பாலான
அரசுப்
பள்ளிகள் திகழும்போது,
தினம் தினம்
அவற்றிலேயே உழலும் அரசுப்
பள்ளி ஆசிரியர்கள் எப்படி தங்கள்
பிள்ளைகளை அப்பள்ளிகளில் சேர்ப்பர்?

அரசு கொடுக்கும் இலவசங்களை பெற
மட்டும் பள்ளிகளுக்கு அவசரமாய் வருகைத்
தரும் பெற்றோர்கள் இவற்றை கட்டுப்படுத்த
ஏன் முயல்வதில்லை?

பெற்றோர் - ஆசிரியர்
கூட்டத்திற்கு எத்தனை பெற்றோர் தவறாமல்
வருகைபுரிகின்றனர்?
இப்படிக் கட்டமைப்பு வசதியிலும்
ஒழுக்கத்திலும்
மோசமாகவே பெரும்பாலான
அரசுப் பள்ளிகள் இருக்கும் சூழலில்,
எந்த அரசுப் பள்ளி ஆசிரியப் பெற்றோர்
மனமுவந்து அரசுப் பள்ளிகளை நாடுவர்?

பெரும்பாலான தனியார் பள்ளிகளில்
மாணவர்களின் மனனம் செய்யும் திறன்
மட்டுமே
.
மாணவர்கள்
அறிவுச்சிறை (intellectual imprisonment)-க
்குள் தள்ளப்படுகின்றனர்.
அரசுப் பள்ளிகளில்
மட்டுமே மாணவர்களின் இயல்பான
முழு ஆளுமைத்திறன்
வளர்ச்சி சாத்தியப்படுகிறது.

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும்
ஆசிரியர்கள் அனைவரும் அரசு தேர்வாணையம்
மூலமாகவோ அல்லது ஆசிரியர்
தகுதி தேர்வு எழுதி வென்றவர்களாகவோ மட்டுமே இருகின்றனர்.
அவர்களிடம் திறமைக்கும்
அறிவுக்கும் அனுபவத்திற்கும்
குறைவில்லை.

ஆகவே, அரசுப் பள்ளிகளின்
மீது அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கே
நம்பிக்கையில்லை என்று இனியும்
பொதுவாய் கூறுவதை மக்கள்
தவிர்க்க வேண்டும்.

அதற்குப் பதிலாக,
அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்குத்
தன்னால் ஆன பங்களிப்பை அளிக்க முயற்சிக்க
வேண்டும்.
இன்று பதிவிடப்பட்ட கேள்வி மற்றும் பதில்:

[26/01, 11:14 AM] Mahesh Raja:
1. இந்தியாவின் திருநங்கைகளுக்கான முதல் பள்ளியான sahaj international எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டது?
India’s first transgender school “Sahaj International” has started in which state?

[A]Tamil Ndau
[B]Kerala ✅
[C]Karnataka
[D]Andhra Pradesh

[26/01, 11:14 AM] Mahesh Raja:
2. பின்வரும் எம்மாநிலம் OBC,SC,ST &EBC பிரிவினர்களுக்கு நீதித்துறைகளில் 50% இட ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் வழங்கியது?
Which state government has recently declared 50% reservation in judicial services for OBCs, SCs, STs and EBCs?

[A]Odisha
[B]Madhya Pradesh
[C]Bihar ✅
[D]Assam

[26/01, 11:14 AM] Mahesh Raja:
3. 2016-ஆம் ஆண்டின் Navlekhan Award-க்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் யார்?
Who of the following have been chosen for the 2016 Navlekhan Award of Bharatiya Jnanpith?

[A]Yogita Yadav and Arunabh Saurav
[B]Om Naagar and Tasneem Khan
[C]Shraddha and Ghyansham Kumar Devansh✅
[D]Amlendu Tiwari and Balram Kawant

[26/01, 11:17 AM] Mahesh Raja:
4. The book “The Secret Chord” has been authored by whom?

[A]Alice Hoffman
[B]Geraldine Brooks ✅
[C]T D Ramakrishnan
[D]Tishani Doshi

[26/01, 11:20 AM] Mahesh Raja:
5. UPSC அமைப்பின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
Who has been appointed as the new chairman of the Union Public Service Commission (UPSC)?

[A]S R Hashim
[B]Deepak Gupta
[C]Alka Sirohi
[D]David Syiemlieh ✅

[26/01, 11:23 AM] Mahesh Raja:
6. Queen Elizabeth II knighthood கொடுத்து சிறப்பிக்கப்பட்ட இந்திய வம்சாவளி பிரிட்டீஸ் பேராசிரியர் யார்?
Which Indian-origin British professor has been honoured with the Queen Elizabeth II Knighthood?

[A]Nandini Koel
[B]Kamaldeep Begol
[C]Shankar Balasubramanian✅
[D]Mandeep Singh Bhui

[26/01, 11:25 AM] Mahesh Raja:
7. பாகிஸ்தான் நாட்டின் புதிய தலைமை நீதிபதி யார்?
Who is the newly elected Chief Justice of Pakistan?

[A]Nasir-ul-Mulk
[B]Mian Saqib Nisar ✅
[C]Jawwad S. Khawaja
[D]Anwar Zaheer Jamali

[26/01, 11:27 AM] Mahesh Raja:
8. Bargarh Dhanua Jatra திருவிழா இந்தியாவின் எம்மாநிலத்தில் தொடங்கியது?
The Bargarh Dhanua Jatra festival has started in which of the following states?

[A]Odisha ✅
[B]Kerala
[C]Assam
[D]Manipur

[26/01, 11:29 AM] Mahesh Raja:
9. Scattered souls என்ற புத்தகத்தின் ஆசிரியர்?
The book “Scattered Souls” has been authored by whom?

[A]Basharat Pee
[B]Fazlur Rahman
[C]Agha Shahid Ali
[D]Shahnaj Bashir✅

[26/01, 11:31 AM] Mahesh Raja:
10. பணமற்ற பரிவர்த்தனை விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக Scroll of Honor விருது யாருக்கு வழங்கப்பட்டது?
Who has been awarded ‘Scroll of Honor’ by Government of India (GoI) to promote cashless transactions?

[A]Manish Jadon
[B]Khusbu Gupta
[C]Surbhi Kapoor
[D]Gaurav Goyal ✅

[26/01, 11:34 AM] Mahesh Raja:
11. "NTR Arogya Raksha" எனும் புதிய சுகாதார திட்டத்தை ஏற்படுத்திய மாநிலம் எது?
 "NTR Arogya Raksha” a new health scheme has been launched by which state government?

[A]Haryana
[B]Odisha
[C]Karnataka
[D]Andhra Pradesh ✅

[26/01, 11:36 AM] Mahesh Raja:
12. 104-ஆவது இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாடு எங்கு தொடங்கியது?
The 104th Indian Science Congress (ISC) has started in which state?

[A]Kerala
[B]Assam
[C]Andhra Pradesh ✅
[D]Manipur

[26/01, 11:40 AM] Mahesh Raja:
13. இந்தியாவின் முதல் லேசர் தொழில்நுட்பத்திலான AVMS RTO check post எம்மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது?
India’s first laser technology-based advanced AVMS RTO check post has set up at which state?

[A]Gujarat ✅
[B]Madhya Pradesh
[C]Rajasthan
[D]Punjab

[26/01, 11:41 AM] Mahesh Raja:
14. Who has won the 2016 Mubadala World Tennis Championship?

[A]Kevin Anderson
[B]Stan Wawrinka
[C]Milos Raonic
[D]Rafael Nadal ✅

[26/01, 11:43 AM] Mahesh Raja:
15. Just another jihadi Jane என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்?
 The book “Just Another Jihadi Jane” has been authored by whom?

[A]Ananth Padmanabhan
[B]Kanishka Gupta
[C]Mita Kapur
[D]Tabish Khair ✅

[26/01, 11:44 AM] Mahesh Raja:
16. இந்தியாவின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் யார்?
Who has been sworn-in as the new Chief Justice of India (CJI)?

[A]J S Khehar ✅
[B]Madan Lokur
[C]Kamlesh Khehar
[D]T S Patil

[26/01, 11:46 AM] Mahesh Raja:
17. உலக ப்ரௌலி தினம் கடைப்பிடிக்கப்படும் நாள்?
The World Braille Day (WBD) is observed on which date?

[A]January 3
[B]January 5
[C]January 2
[D]January 4 ✅

[26/01, 11:48 AM] Mahesh Raja:
18. 2016 உலக Blitz chess championship பட்டம் வென்றவர் யார்?
Who has won the 2016 World Blitz Chess Championship?

[A]Sergey Karjakin ✅
[B]Anna Muzychuk
[C]Magnus Carlsen
[D]Daniil Dubov

[26/01, 11:52 AM] Mahesh Raja:
19. Facebook messenger வழியாக பணப்பரிமாற்றம் செய்யக்கூடிய OnChat எனும் சேவையை தொடங்கிய வங்கி எது?
"OnChat” a chatbot service has been launched by which bank to allow users to make payments through Facebook Messenger?

[A]State Bank of India
[B]HDFC Bank ✅
[C]ICICI Bank
[D]Axis Bank

[26/01, 11:56 AM] Mahesh Raja:
20. RBI அமைப்பின் புதிய நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டவர்?
Who has been appointed as the new Executive Director (ED) of Reserve Bank of India (RBI)?

[A]Deepa Mailk
[B]Rajeswar Rao
[C]Surekha Marandi ✅
[D]U S Paliwal

[26/01, 12:00 PM] Mahesh Raja:
21. இந்தியாவின் முதல் biogas மூலம் இயங்கும் பேருந்துவசதி எந்நகரில் ஆரம்பிக்கப்பட்டது?
India’s first bus to run on biogas will start from which of the following cities?

[A]Kolkata ✅
[B]Dehradun
[C]New Delhi
[D]Pune

[26/01, 12:02 PM] Mahesh Raja:
22. The 2017 Pravasi Bhartiya Divas (PBD) will be hosted by which city?

[A]New Delhi
[B]Gurugram
[C]Chennai
[D]Bengaluru ✅

[26/01, 12:06 PM] Mahesh Raja:
23.  பின்வரும் எந்த சர்வதேச அமைப்பு 2017-ஆம் ஆண்டினை "சர்வதேச நிலைத்த சுற்றுலா வளர்ச்சிக்கான ஆண்டு" என அறிவித்தது?
Which international organization has declared 2017 as the “International Year of Sustainable Tourism for Development”?

[A]World Trade Organization (WTO)
[B]United Nations (UN) ✅
[C]International Monetary Fund (IMF)
[D]Asian Development Bank (ADB)

[26/01, 12:08 PM] Mahesh Raja:
24. "Good Samaritan policy"-ஐ தொடங்கிய இந்திய மாநிலம்/யூனியன் பிரதேசம்?
"Good Samaritan Policy” has been launched by which state / union territory government?

[A]Odisha
[B]Karnataka
[C]Delhi ✅
[D]Kerala

[26/01, 12:10 PM] Mahesh Raja:
25. 2017-ஆம் ஆண்டின் Island Tourism festival எங்கு தொடங்கியது?
The 2017 Island tourism Festival has started in which state / union territory?

[A]Andaman and Nicobar ✅
[B]Gujarat
[C]Rajasthan
[D]Lakshadweep

[26/01, 12:13 PM] Mahesh Raja:
26. கானா நாட்டின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
Who has been sworn-in as the new President of Ghana?

[A]Kwesi Amissah-Arthur
[B]Nana Akufo-Addo ✅
[C]Mahamudu Bawumia
[D]John Mahama

[26/01, 12:16 PM] Mahesh Raja:
27. The book “The Untold Vajpayee: Politician and Paradox” has been authored by whom?

[A]Arun Shourie
[B]Chaudhary Devi Lal
[C]Lal Krishna Advani
[D]Ullekh NP ✅

[26/01, 12:18 PM] Mahesh Raja:
28. உலகிலேயே FM Radio சேவையை நிறுத்திக்கொண்ட முதல் நாடு?
Which country will become the world’s first country to switch off FM radio?

[A]United Kingdom
[B]Switzerland
[C]Norway ✅
[D]Finland

[26/01, 12:20 PM] Mahesh Raja:
29. சித்வான் தேசிய பூங்கா எந்நாட்டில் அமைந்துள்ளது?
The Chitwan National Park is located in which country?

[A]India
[B]Nepal ✅
[C]Bangladesh
[D]Myanmar

[26/01, 12:22 PM] Mahesh Raja:
30. The book “Bose: The Indian Samurai – Netaji and the INA Military Assessment” has been authored by whom?

[A]Sanjaya Baru
[B]Sanjeev Sanyal
[C]G D Bakshi ✅
[D]Ashok Tandon

[26/01, 12:31 PM] Mahesh Raja:
31. 2017-ஆம் ஆண்டின் Motion picture award வென்ற திரைப்படம்?
Which film has won the best motion picture award at the 2017 Golden Globes awards?

[A]La La Land
[B]Lion
[C]Hell or High Water
[D]Moonlight ✅

[26/01, 12:34 PM] Mahesh Raja:
32. காசநோய் விழிப்புணர்வு செய்தமைக்காக அமெரிக்க தூதரகத்தால் சிறப்பிக்கப்பட்ட இந்திய பிரபலம் யார்?
Which Indian personality has been honoured by US Embassy for Tuberculosis (TB) awareness?

[A]Sri Sri Ravi Shankar
[B]Sushma Swaraj
[C]Amitabh Bachchan ✅
[D]Sachin Tendulkar

[26/01, 12:37 PM] Mahesh Raja:
33. இந்தியாவின் முதல் சர்வதேச பங்குச்சந்தையான "இந்திய சர்வதேச பங்குச்சந்தை" சமீபத்தில் எந்த இடத்தில் தொடங்கப்பட்டது?
India’s first international stock exchange “India International Exchange” has been launched in which city?

[A]Gandhinagar ✅
[B]Mumbai
[C]Pune
[D]New Delhi

[26/01, 12:38 PM] Mahesh Raja:
34. The 2017 National Conference for e-Governance has started in which city?

[A]Visakhapatnam ✅
[B]Nagpur
[C]New Delhi
[D]Pune

[26/01, 12:41 PM] Mahesh Raja:
35.  International hockey federation committee-யில் இடம்பெற்ற இந்திய ஹாக்கி வீரர் யார்?
Which Indian hockey player has become a member of International Hockey Federation (FIH) Athletes’ Committee?

[A]V R Raghunath
[B]Akashdeep Singh
[C]Nikkin Thimmaiah
[D]PR Sreejesh ✅

[26/01, 12:43 PM] Mahesh Raja:
36. Festival of India பின்வரும் எந்த நாட்டில் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது?
"Festival of India” will be organised by which of the following countries?

[A]Ghana ✅
[B]Mauritius
[C]Zambia
[D]Kenya

[26/01, 12:47 PM] Mahesh Raja:
37. பின்வரும் எந்த நாடு parkour(தாண்டோட்டம்)-ஐ ஒரு விளையாட்டாக ஏற்றுக்கொண்டது?
Which country has become the world’s first country to officially recognise parkour as a sport?

[A]United States
[B]Singapore
[C]Malaysia
[D]United Kingdom ✅

[26/01, 12:49 PM] Mahesh Raja:
38. The book “The Untold Story of Talking Books” has been authored by whom?

[A]Matthew Rubery ✅
[B]Ramakrishna Reddy
[C]Karen Juneja
[D]Pradeep Sebastian

[26/01, 12:52 PM] Mahesh Raja:
39. சூரிய சக்தியில் இயங்கும் "ஆதித்யா" எனும் இந்தியாவின் முதல் படகு வசதி சமீபத்தில் எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
"Aditya” India’s first-ever solar powered boat has been launched in which state?

[A]Gujarat
[B]Kerala ✅
[C]Tamil Nadu
[D]Karnataka

[26/01, 12:55 PM] Mahesh Raja:
40. What is the theme of 2017 National Youth Festival (NYF) in India?

[A]Power of Digital India ✅
[B]Celebrating Diversity In Unity
[C]Youth for Digital India
[D]India Youth for Skill, Development and Harmony

[26/01, 12:56 PM] Mahesh Raja:
41. The book “An Unsuitable Boy” is the autobiography of which Indian personality?

[A]Twinkle Khanna
[B]Rishi Kapoor
[C]Rahul Bose
[D]Karan Johar ✅

[26/01, 12:59 PM] Mahesh Raja:
42. Airtel payment bank சேமிப்பு கணக்குகளுக்கு வழங்கும் வட்டி சதவீதம் எவ்வளவு?
How much interest rate will be offer by Airtel Payments Bank on savings accounts deposits?

[A]7.25% ✅
[B]7.50%
[C]7.75%
[D]7.52%

[26/01, 1:08 PM] Mahesh Raja:
43. பணமற்ற பரிவர்த்தனையை ஊக்குவிக்கும்பொருட்டு "Digital Dakiya" எனும் சேவையை தொடங்கிய மாநிலம்?
“Digital Dakiya” scheme has been launched in which state government to encourage cashless transactions?

[A]Madhya Pradesh ✅
[B]Rajasthan
[C]Odisha
[D]Assam

[26/01, 1:10 PM] Mahesh Raja:
44. 2016-17-ஆம் ஆண்டின் ராஞ்சி கோப்பை வென்ற அணி எது?
Which cricket team has won the 2016-17 Ranji Trophy tournament?

[A]Chhattisgarh
[B]Gujarat ✅
[C]Mumbai
[D]Tamil Nadu

[26/01, 1:13 PM] Mahesh Raja:
45. ஐஐடி-யில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு பரிந்துரை செய்த கமிட்டியின் பெயர்?
Which committee has recently recommended quota for girl students in IITs?

[A]Abhijit Sen committee
[B]Timothy Gonsalves committee ✅
[C]D M Dharmadhikari committee
[D]Sumit Bose committee

[26/01, 1:17 PM] Mahesh Raja:
46. சுர்சித் சிங் பர்னாலா சமீபத்தில் மரணமடைந்தார். அவர் எம்மாநிலத்தின் முதல்வராக இருந்தார்?
Surjit Singh Barnala, who passed away recently, was the former chief minister of which state?

[A]Andhra Pradesh
[B]Uttarakhand
[C]Punjab ✅
[D]Tamil Nadu

[26/01, 1:20 PM] Mahesh Raja:
47. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் இந்தியாவின் எந்நகரில் அமையவுள்ளது?
The world’s biggest cricket stadium will come up in which state of India?

[A]West Bengal
[B]Haryana
[C]Gujarat ✅
[D]Karnataka

[26/01, 1:24 PM] Mahesh Raja:
48. சுற்றுலா வசதியை மேம்படுத்துவதற்காக "Pinakin" எனும் மொபைல் அப்ளிகேசனை அறிமுகம் செய்துள்ள மாநிலம்?
"Pinakin” mobile app has been launched by which state tourism department to boost tourism?

[A]Karnataka
[B]Tamil Nadu ✅
[C]Andhra Pradesh
[D]Kerala

[26/01, 1:26 PM] Mahesh Raja:
49. மோகன் சிங் ஜோசன் எனும் சுதந்திர போராட்ட வீரர் சமீபத்தில் மரணமடைந்தார். அவர் எம்மாநிலத்தை சார்ந்தவர்?
Freedom fighter Mohan Singh Josan, who passed away recently, was belonged to which state?

[A]Kerala
[B]Tamil Nadu
[C]Odisha
[D]Rajasthan✅

[26/01, 1:27 PM] Mahesh Raja:
50. The novel “The Book Thief” has been authored by whom?

[A]Mary Shelley
[B]Markus Zusak ✅
[C]Ernest Hemingway
[D]John Boyne

[26/01, 1:30 PM] Mahesh Raja:
51. "The Hindu prize 2016" விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
Who of the following has won the prestigious award “The Hindu Prize 2016”?

[A]Manjula Padmanabhan
[B]Kunal Basu
[C]Kiran Doshi ✅
[D]Anil Menon

[26/01, 1:31 PM] Mahesh Raja:
52. The book “Kalkatta” has been authored by whom?

[A]Kunal Basu ✅
[B]K Satchidanandan
[C]Ernest Hemingway
[D]Venkatasubba Rao

[26/01, 1:34 PM] Mahesh Raja:
53. ஆசியாவின் தூய்மையான கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்ட Mawlynnong கிராமம், இந்தியாவின் எந்த மாநிலத்திலுள்ளது?
Mawlynnong village, which is cleanest village in Asia, is located in which state?

[A]Arunachal Pradesh
[B]Meghalaya ✅
[C]Manipur
[D]Nagaland

[26/01, 1:35 PM] Mahesh Raja:
54. What is the India’s rank in the World Economic Forum (WEF)’s Inclusive Development Index (IDI) for 2017?

[A]79th
[B]88th
[C]60th ✅
[D]45th

[26/01, 1:38 PM] Mahesh Raja:
55. சர்வதேச பாஸ்போட் தரவரிசை பட்டியலில் இந்திய பாஸ்போட்டின் இடம் என்ன?
What is the rank of Indian passport in the latest passport Index?

[A]88th
[B]112th
[C]57th
[D]78th ✅

[26/01, 1:40 PM] Mahesh Raja:
56. Karang எனப்படும் இந்தியாவின் முதல் cashless தீவு எங்கு அமைந்துள்ளது?
Karang, which has become India’s first cashless island, is located in which state?

[A]Gujarat
[B]Manipur ✅
[C]Kerala
[D]Mizoram

[26/01, 1:46 PM] Mahesh Raja:
57. "Aanandam programme"-ஐ அறிமுகம் செய்துள்ள இந்திய மாநிலம் எது?
Which state has become the India’s first state to launch “Aanandam programme” to help the needy persons?

[A]Odisha
[B]Assam
[C]Sikkim
[D]Madhya Pradesh ✅

[26/01, 1:49 PM] Mahesh Raja:
58. “Mission 41K” has been launched by which union ministry to save energy?

[A]Ministry of Urban Development
[B]Ministry of Social Justice and Empowerment
[C]Ministry of Urban Development
[D]Ministry of Railways ✅

[26/01, 1:51 PM] Mahesh Raja:
59.  சர்வ சிக்ச அபியானுக்காக மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ள வலைதளத்தின் பெயர்?
Which portal has been launched by the Union Government for Sarva Shiksha Abhiyan (SSA)?

[A]Shiksha portal
[B]Maitri portal
[C]Desh Bharti portal
[D]Shagun portal ✅

[26/01, 1:52 PM] Mahesh Raja:
60. சி.பி.ஐ அமைப்பின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
Who has been selected as the new chief of Central Bureau of Investigation (CBI)?

[A]JS Khehar
[B]Satish Mathur
[C]RK Dutta
[D]Alok Kumar Verma ✅

[26/01, 1:55 PM] Mahesh Raja:
61. 2017-ஆம் ஆண்டு இந்திய குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினர் யார்?
Who will be the Chief Guest for the 2017 Republic Day of India?

[A]Mohammadin bin Zayed Al Nahyan
[B]Mohamed bin Zayed Al Nahyan ✅
[C]Mirza Zayed bin Sultan Al Nahyan
[D]Zayed bin Sultan Al-Nahyan

[26/01, 1:58 PM] Mahesh Raja:
62. பின்வரும் எந்த போர்க்கப்பல் இந்தியாவில் முதன் முதலாக ATM வசதியை பெற்றுள்ளது?
Which of the following warships has become the India’s first-ever warship to have ATM on board?

[A]INS Vikramaditya ✅
[B]INS Sindhughosh
[C]INS Arihant
[D]INS Viraat

[26/01, 1:59 PM] Mahesh Raja:
63. தேசிய வாக்காளர் தினம் ?
The National Voters’ Day is celebrated on which date in India?

[A]January 25 ✅
[B]January 22
[C]January 23
[D]January 24

[26/01, 2:01 PM] Mahesh Raja:
64. தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் நாள்?
The National Girl Child Day is celebrated on which day in India?

[A]January 22
[B]January 23
[C]January 24 ✅
[D]January 25

[26/01, 2:03 PM] Mahesh Raja:
65. இந்தியாவின் எந்த ஸ்டேடியத்திற்கு முதன்முதலாக போர்வீரர்களின் பெயர் சூட்டப்படவுள்ளது?
Which stadium will become the first Indian stadium to have stands named after war heroes?

[A]Eden Gardens stadium, Kolkata ✅
[B]Feroz Shah Kotla Ground, Delhi
[C]M. Chinnaswamy Stadium, Bangalore
[D]Wankhede Stadium, Mumbai

[26/01, 2:05 PM] Mahesh Raja:
66. தேசிய சுற்றுலா தினம் கொண்டாடப்படும் நாள்?
The National Tourism Day is celebrated on which day in India?

[A]January 24
[B]January 23
[C]January 25 ✅
[D]January 26

[26/01, 2:08 PM] Mahesh Raja:
67. உலக வங்கி உதவியுடன் e-health திட்டத்தை தொடங்கவுள்ள இந்திய மாநிலம்?
"e-health project” will be launched by which state government with support of World Bank (WB)?

[A]Assam
[B]Andhra Pradesh
[C]Karnataka
[D]Kerala ✅

[26/01, 2:12 PM] Mahesh Raja:
68. 2017-தேசிய வாக்காளர் தினத்தின் கருப்பொருள் என்ன?
What is the theme of the 2017 National Voters Day (NVD)?

[A]Empowering young and future events ✅
[B]Inclusive and qualitative participation
[C]Easy Registration, Easy Correction
[D]Ethical Voting

[26/01, 2:16 PM] Mahesh Raja:
69. பின்வரும் எந்த விமான நிலையம் 2016-ஆம் ஆண்டுக்கான தங்கமயில் விருது வென்றது?
(For CRR)
Which Indian airport has won the 2016 Golden Peacock Award for Corporate Social Responsibility (CSR) in the transportation sector under the Aviation category?

[A]Sardar Vallabhbhai Patel International Airport
[B]Netaji Subhash Chandra Bose International Airport
[C]Chhatrapati Shivaji International Airport
[D]Delhi International Airport Limited ✅

[26/01, 2:18 PM] Mahesh Raja:
70. உலகின் மிகப்பெரிய சூரியப்பூங்கா சமீபத்தில் எங்கு கட்டப்பட்டுள்ளது?
The world’s largest solar park has been built by which country?

[A]China ✅
[B]India
[C]Bhutan
[D]Myanmar
🎀 *‘ நாளை தை அமாவாசை’ – அதன் சிறப்பு என்ன? அன்று என்ன செய்யவேண்டும்?*🎀

👉​​​ *27/01/2017 வெள்ளிக்கிழமை ‘தை அமாவாசை’. முன்னோரது ஆசி பெற அமாவாசை, வருஷதிதி, மகாளயபட்ச நாட்கள் உகந்தவை. இவை புண்ணிய நாட்களாகும்.*

🍄 *கேளிக்கை, சுபநிகழ்ச்சிகளை இந்நாட்களில் தவிர்க்கவேண்டும் என்பது விதி. இதன் காரணமாக, இந்த நாளை ஆகாத நாளாக எடுத்துக் கொள்ளக்கூடாது.*

🌸 *தை அமாவாசை நாளில் நம் முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபாடு செய்யவேண்டும். அந்த ஆடை. உணவை ஏழைகளுக்கு தானமாகக் கொடுப்பதன் மூலம் அளவற்ற நன்மைகள் நம் வாழ்வில் உண்டாவதை நாம் உணர முடியும்.*

⛄ *தடைபட்ட திருமணம், வேலையின்மை, நீண்ட நாள்பட்ட நோய்நொடிகள், மன வருத்தம் ஆகியவை விலகி சந்தோஷமும், மனநிறைவும் நம் இல்லத்திலும் உள்ளத்திலும் ஊற்றெடுக்கும்.*

🎀 *ஒரு வருடத்தை இரண்டு அயனங்களாகப் பிரித்துள்ளனர். தை முதல் ஆனி வரை உள்ள ஆறு மாதம் உத்தராயண காலம் என்றும், ஆடி முதல் மார்கழி வரை உள்ள காலம் தட்சணாயன காலம் என்றும் அழைப்பர். உத்தராயண கால ஆரம்ப மாதமாக தை மாதம் வருவதால் தை அமாவாசையும், தட்சணா கால ஆரம்ப மாதமாக ஆடி மாதம் வருவதால், ஆடி மாதத்தில் வரும் அமாவாசைத் திதி பிதுர் வழிபாட்டிற்கு புண்ணியமான தினம் என சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.*

👫 *பிதிர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பிதிர்களின் தோஷங்களில் இருந்து தோஷ நிவர்த்தி பெறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை.*

♻ *அமாவாசை, பௌர்ணமி ஆகிய இரண்டு விரதங்களும் முறையே காலமான தந்தை, தாய் ஆகியோரைக் குறித்து அவர்களின் (சந்ததியினரால்) பிள்ளைகளால் அனுட்டிக்கப்படும் விரதங்கள் ஆகும்.*

🌷 *அமாவாசை வழிபாடுகளில் சூரிய வழிபாடு மிகவும் முக்கியமானது. அன்றைய தினம் சூரியனை நோக்கி சூரிய நமஸ்காரம் செய்து சூரிய காயத்ரி மந்திரம் சொல்லி வணங்குவது சிறப்பு.*

💧 *பிதுர்க்காரகனாகிய சூரியன் நாம் செய்யும் தான தருமங்களுக்கான பலன்களை பிதுர் தேவதைகளிடம் வழங்குவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.*

🎀 *கோதுமையில் செய்த உணவுகளை தானம் செய்வதால் கூடுதல் பலன் கிடைக்கும்.*

🐄 *பிதுர் வழிபாட்டில் காகம் மிக முக்கியமாக கருதப்படுகிறது. எனவே, பசு மாட்டுக்கும், காகத்துக்கும் முதலில் உணவளிப்பது மிகவும் சிறப்பானதும், புண்ணியம் சேர்ப்பதும் ஆகும்.*

*முன்னோர்களுக்கு மூன்று கை தண்ணீர்:*

⛱ *முன்னோர்களுக்கு நாம் செய்யும் திதி பலன்களை நம்மிடம் இருந்து பெற்று பிதுர் தேவதைகளிடம் வழங்குபவர் சூரியன். அந்த தேவதைகளே மறைந்த நம் முன்னோரிடம் பலன்களைச் சேர்க்கின்றன. அதனாலேயே சூரியனைப் பிதுர்காரகன் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.*

💦  *அமாவாசை நாட்களில் தீர்த்தக் கரைகளில் நீராடும் போது, பிதுர்காரகராகிய சூரியனுக்கு அர்க்கியம் செய்வது (இரு கைகளாலும் நீர் விடுவது) மிகுந்த நன்மை தரும். சமுத்திரத்தில் அல்லது புண்ணிய நதிகளில் நீராடியவுடன் முழங்கால் அளவு நீரில் நின்றுகொண்டு, சூரியனை நோக்கி மூன்று முறை அர்க்கியம் செய்வதன் மூலம் இவர் அருளைப் பூரணமாக  பெறமுடியும்.*

🌹 *எந்த ஒரு பரிகாரமாக இருந்தாலும் அமாவாசையன்று செய்தால் அதற்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும்.*

🌵 *ராகுகேது பரிகாரம், சர்ப்பதோஷம், சனி, செவ்வாய் கிரகங்களால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் இந்த மாதிரியானவற்றிற்கு அமாவாசை திதியன்று பரிகாரம் செய்வது நல்லது.*

🎀 *சங்க காலத்திலும் இதுபோன்ற விடயங்களும் நடைமுறையில் இருந்துள்ளது.*

👫 *முன்னோருக்கு திதி செய்வது, தர்ப்பணம், ஆற்றில் புனித நீராடுவது போன்றவை அமாவாசை தினத்தில் மேற்கொள்ளப்பட்டதை சங்க கால நூல்களும் உறுதி செய்துள்ளன.*

💦 *மனிதப் பிறவி மகத்தான பிறவி. மனிதனாகப் பிறந்தால் தான், இறைவனை எளிதில் அடைய முடியும். வேறு எந்தப் பிறவிக்கும், இந்த சிறப்பு கிடையாது.*

⛱  *இறந்த நம் முன்னோர்களுக்குச் சிரத்தையுடன் செய்யும் காரியமே சிராத்தம். சாதத்தைப் பிடித்து ஆறு பிண்டங்கள் வைத்து, எள், ஜலம், தர்ப்பை கொண்டு அவர்களை ஆராதிக்க வேண்டும். தந்தை, தாத்தா, முப்பாட்டன்கள், தாய், பாட்டி, கொள்ளுப் பாட்டி ஆகிய கோத்திர தாயாதிகளுக்கு ஒவ்வொருவரும் செய்யவேண்டிய மிக முக்கிய கடமையாகும் இது.*

🌿 *இந்த ஆறு பிண்டங்களையும் ஒன்றாக இணைத்து காகத்துக்கு வைக்கும்போது, அது உண்ணுவதன் மூலம் நம் முன்னோர்களுக்கு அந்த ஆகாரம் செல்வதாக ஐதீகம்!*

பிள்ளைக்குரிய முழு தகுதி எது?*🅱

👉​​​ *கிருதயுகம், திரேதாயுகங்களில் வருஷதிதி நாளில் முன்னோர்கள் நேரில் வந்து நாம் கொடுக்கும் உணவையும், வழிபாட்டையும் ஏற்றுக் கொண்டனர். அந்த யுகங்களில் பூவுலகில் தர்மம் தழைத்திருந்தால் இந்நிலை இருந்தது.*

👫 *ராமன் அயோத்தி திரும்பி பட்டம் கட்டிய நாளில் தசரதர் நேரில் தோன்றி தன் பிள்ளையை ஆசியளித்து மகிழ்ந்ததாக ராமாயணம் கூறுகிறது.*

🍄 *துவாபரயுகம் மற்றும் கலியுகத்தில் பிதுர்கள் நம் கண்ணுக்குத் தெரியாமல் போய்விட்டனர். ஆனால், சூட்சும வடிவில் அவர்கள் நம்மை நேரில் பார்ப்பதாகவும், ஆசியளிப்பதாகவும் சாஸ்திரநூல்கள் குறிப்பிடுகின்றன.*

🍄  *ஒருவரின் வயிற்றில் பிறந்தால் மட்டும் பிள்ளையாகிவிட முடியாது. பிள்ளைக்குரிய முழு தகுதியை ஒருவன் பெற வேண்டுமானால், வாழும் காலத்தில் பெற்றோரைக் கவனிப்பதோடு, இறப்புக்குப் பிறகும் பிதுர்கடனை முறையாகச் செய்யவேண்டும். தனது பித்ருக்களுக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று எவன் நினைக்கிறானோ அவன் புத்தியில்லாத மூடனாவான் என்று கடோபநிஷதத்தில் எமதர்மன் நசிகேதனிடம் கூறுகிறார்.*

 *தெய்வ வழிபாட்டை விட சிறந்த வழிபாடு:*

🐚 *முன்னோரை வழிபடும் நாட்களில் தை அமாவாசை முக்கியமானது. ஆடி மாத அமாவாசையன்று நம்மைக் காண வரும் பித்ருக்கள் எனப்படும் முன்னோர் தை அமாவாசையன்று விடை பெற்று திரும்புவதாக ஐதீகம். முன்னோர் வழிபாடு மிக முக்கியமானது என்கிறார் தெய்வப்புலவர் வள்ளுவர்.*

👉​​​ *தெய்வத்தை வணங்குகிறோமோ இல்லையோ, முன்னோர்களை நிச்சயம் வழிபட வேண்டும். அதற்குரிய சிறந்த நாள் அமாவாசை. பிற அமாவாசைகளில், மறைந்த முன்னோருக்கு… குறிப்பாக பெற்றோருக்கு தர்ப்பணம் செய்யவிடுபட்டு போனாலும், தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசைகளில் தர்ப்பணம் செய்ய வேண்டும். இந்த நாளில், நாம் எடுக்க வேண்டிய உறுதிமொழியும் ஒன்று உண்டு.*

👉​​​  *ஒரு வீட்டில் இரண்டு சகோதரர்கள். ஒருவன் குடிகாரன், முரட்டுப்பயல். இன்னொருவன் பரமசாது, நல்லவன், பக்தன். ஒரு பெரியவர் வீட்டுக்கு வந்தார். குடிகாரனிடம், ஏனப்பா, இப்படி இருக்கிறாய்? தம்பியைப் போல் சாதுவாக இருக்கலாமே! என்றார்.*

⛱ *ஐயா! இந்த புத்திமதி சொல்ற வேலையெல்லாம் என்கிட்டே வேண்டாம். எங்க அப்பா குடித்தார், பெண் பித்தராக இருந்தார், வம்பு சண்டைக்குப் போவார். அப்பா செய்ததை நானும் செய்றேன், இதிலென்ன தப்பு , என்று சொல்லிவிட்டு நிற்காமல் போய்விட்டான். இளையவனிடம், அப்பா, அப்படிப்பட்டவராக இருந்தும், நீ அப்படி நடந்து கொள்ளவில்லையே, ஏன்? என்றார்.*

👉​​​  *ஐயா! அப்பா செய்த அந்தக் காரியங்களால் அம்மாவும், குழந்தைகளான நாங்களும், உறவினர்களும், அயல் வீட்டாரும் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல! ஒரு மனிதன் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு உதாரணமாக அவர் வாழ்ந்தார். எனவே, அந்தக் குணங்களையெல்லாம் விட்டு, நல்லவனாக வாழ நான் முயற்சிக்கிறேன், என்றான்.*

👨‍👩‍👧‍👧 *நாமும் அப்படித்தான்!*🅱

👉​​​ *நம் முன்னோர் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்திருக்கலாம். அவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு நம் வாழ்க்கை போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற உறுதியை தை அமாவாசை நன்னாளில் எடுத்துக் கொள்ளுங்கள்.*

🌹 *தாயை பழித்தாலும், தண்ணீரை பழிக்காதே: தை அமாவாசைக்கு ராமேஸ்வரம், வேதாரண்யம், கோடியக்கரை, கன்னியாகுமரி ஆகிய கடல் க்ஷத்ரங்களுக்கும், காவிரி, தாமிரபரணி நதிக்கும் பிற புண்ணிய தீர்த்தங்களுக்கும் மக்கள் தர்ப்பணம் செய்வதற்காக செல்கின்றனர். அங்கு சென்றவுடனேயே தண்ணீரில் இறங்கி விடக்கூடாது. கரையில் நின்று தண்ணீரை முதலில் தெளித்துக் கொள்ள வேண்டும். புனித நீர்நிலைகளும் கடவுளும் ஒன்றே. தாயை பழித்தாலும், தண்ணீரை பழிக்காதே என்று  சொல்வர். புனித தீர்த்தங் களை நம் தாய்க்கும் மேலாக கருதும் வழக்கத்தை நம் குழந்தைகளுக்கும் கற்றுத் தர வேண்டும். நதிகளை அசுத்தமாக்கக்கூடாது.*

🅱 *தர்ப்பணம் செய்ய அமாவாசை சிறந்தது ஏன்?*

🎀 *பித்ருக்கள் எனப்படும் முன்னோர் உலகில் நமக்கு வளர்பிறை பகல் நேரமாகவும், தேய்பிறை இரவு நேரமாகவும் உள்ளது.*

💦 *அமாவாசை என்பது பகல் ஆரம்பிப்பதற்கு முன்புள்ள விடியற்காலம் போன்றது. காலைப்பொழுது பூஜைக்குச் சிறந்தது என்பதால், முன்னோர் வழிபாட்டுக்கு அமாவாசையைத் தேர்ந்தெடுத்தனர். இந்நாளில் புரோகிதர் மூலமாக தர்ப்பணம் செய்வது சிறப்பு.*

👉​​​ *(தர்ப்பணம் என்பதற்கு திருப்தியுடன் செய்வது என்று பொருள். சிரார்த்தம் என்றால் சிரத்தையுடன் (கவனம்) செய்வது என்று அர்த்தம்) அவ்வாறு இயலாத பட்சத்தில், மந்திரம் ஏதும் சொல்லாமல் பக்தியுடன் மனதார பித்ருக்களை வழிபட்டு அவருக்கு கொடுக்க வேண்டிய அரிசி, காய்கறி, பழம், தட்சிணை, வஸ்திரம் முதலானவற்றை வேறு யாருக்கேனும் தானம் செய்யலாம்.*

🎀 *ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம். பசுக்களுக்கு பழம், அகத்திக்கீரை கொடுப்பது இன்னும் நல்ல பலன் தரும். பித்ரு பூஜையைச் சரியாகச் செய்யாவிட்டால் முன்னோர்களின் சாபம் ஏற்படும். அவ்வாறு சாபம் பெற்ற குடும்பங்களில் தான் ஊனமுற்ற குழந்தைகள் பிறப்பதாக சாஸ்திரம் சொல்கிறது.*

🌵 *உத்தராயணப் புண்ணிய காலத்தில் வரும் தை அமாவாசை பிதுர் வழிபாட்டிற்கு உகந்த நாள். இந்நாளில் புனிதமான கடற்கரையிலோ, புண்ணிய நதிக்கரையிலோ, தீர்த்தங்களிலோ நீராடி, வேத விற்பன்னர் வழிகாட்டுதலுடன், நீத்தார் வழிபாட்டிற்குரிய பூஜையைச் செய்வது போற்றப்படுகிறது.*

🔥 *அக்னி தீர்த்தம் உள்ள கடற்கரையான ராமேஸ்வரம், திருப்புல்லாணி, வேதாரண்யம், கோடியக்கரை, பூம்புகார், திலதர்ப்பணபுரி, திருவெண்காடு, மகாமகத் தீர்த்தக்குளம், காவேரி சங்கமம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், முக்கொம்பு, திருவையாறு தலத்தில் ஓடும் பஞ்சநதிக்கரை ஆகியவை பிதுர் பூஜைக்குரிய தலங்கள் என்று போற்றப்படுகின்றன.*
🙏​​​🙏​​​🙏​​​🙏​​​🙏​​​🙏​​​
விருதுகள் - 2016

'
1.இந்தியாவில் மனித உரிமைக்காக போராடி வரும் வழக்கறிஞரும் தமிழருமான ஹென்றி திபேன், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் (ஜெர்மனி) அமைப்பின் 8-வது மனித உரிமை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2.தெற்காசிய இலக்கியத்துக்கான டி.எஸ்.சி. விருது “ஸ்லீப்பிங் ஒன் ஜூபிட் டர்” எனும் நாவலை எழுதிய இந்தியாவின் அனுராதா ராய் வென்றுள்ளார்.

3.நீர்ஜா பானட் விருது பெங்களூருவை  சார்ந்த  சமூக  ஆர்வலரான சுபாஷினி வசந்த் அவர்களுக்கு வழங்கப்ப்பட்டுள்ளது

4. 2015 ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான கி.வீரமணி விருது  -பீகார் முதல்வர்  நிதிஷ்குமார்

5. 2015 ஆம் ஆண்டிற்கான சங்கீத கலாநிதி விருது  - சஞ்சய் சுப்ரமணியம்

6. 2015 ஆம் ஆண்டிற்கான கோஸ்டா  நாவல் விருது - கேட் அட்கின்சன்

7. 2015 ஆம் ஆண்டிற்கான  ஹரிகிருஷ்ணா  தேவிஸ்ரீ  பால  சாகித்ய விருது  - பாலகிருஷ்ணா கார்தே

8. 2015 ஆம் ஆண்டிற்கான  ஹரிகிருஷ்ணா  தேவ சார  பால  சாகித்ய விருது -பாலகிருஷ்ணாகார்க்

9. புற்றுநோய்  மருத்துவ  சிகிச்சையில் சிறப்பாக செயலாற்றியதற்காக  இங்கிலாந்து ராணியிடம் இருந்து நைட்வுட்  விருதினை இந்திய வம்சாவளியை சார்ந்த ஹரிபால் சிங் பெற்றார்

10. மின் ஆளுமைக்கான தேசிய விருது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் வென்றுள்ளது

11. அமெரிக்க அறிவியல் பதக்கம்" = அமெரிக்காவில் இந்திய விஞ்ஞானி ராகேஷ்  கே.ஜெயின் அறிவியல் பதக்கத்துக்கு தேர்வு

12. இந்திய வம்சாவளியை சார்ந்த ராகுல் தாக்கர் அவர்களுக்கு திரைபடங்களில்  அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டிற்காக  "ஆஸ்கர் விருது " வழங்கப்பபட்டது

13. மத்திய அமைச்சர் வெங்காய நாயுடுவிற்கு "ஸ்காச் வாழ்நாள் சாதனையாளர்  விருது(scotch lifetime achievement award) வழங்கப்பட்டது

14.நூர் இனாயத் கான் பரிசு  (noor inayat khan prize) இந்தியாவை சார்ந்த கல்லூரி மாணவியான  "கீதாக்சி அரோரா "விற்கு வழங்கப்பட்டது

 
15. வாழ்நாள் சாதனையாளருக்கான வி.சாந்தாராம் விருது   - நரேஷ் பேடி

16."ஆர்யபட்டா விருது" - விஞ்ஞானி அவினாஷ் சந்தர் பெற்றுள்ளார்(இந்திய அக்னி ஏவுகணை வடிவமைப்பு மற்றும் தயாரிப்பில் முக்கிய பங்கு வகித்த இவரை "இந்தியாவின் அக்னி ஏவுகணை மனிதர் என அழைப்பர் )

  17."சர்வதேச ஆசிரியர் விருது 2016" = பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்த ஆசிரியர் ஹனன் அல் ஹரோப் தேர்வு
 
  18."உலக சமஸ்கிருத விருது" = தாய்லாந்து இளவரசி மகாசக்ரி சிரின்தோர்ன் தேர்வு
 
  19.கோல்டன் ரீல் விருது" = "இந்தியாவின் மகள்" என்ற ஆவணப்படத்திற்காக இவ்விருதைப் பெற்றவர்இரசூல் பூக்குட்டி
 
   20."தமிழக அரசின் நெசவாளர் விருது" = காஞ்சிபுரத்தை சேர்ந்த பாபு என்பவர் பெற்றுள்ளார்
 
   21."ஆர்டர் ஆப் பிரெண்ட்ஷிப்"விருது = கூடங்குளம் வளாக இயக்குநர் ஆர்.எஸ் சுந்தர் அவர்கள் தேர்வு

22.பிரெஞ்சு திரைப்பட விழாவில் சிறந்த வெளிநாட்டு  திரைப்படத்திற்கான விருது இந்திய இயக்குனர் "கனுபெல் "இயக்கிய  "டிட்லி " திரைப்படத்திற்கு  வழங்கப்பட்டது

23.மிஸ் ஆசியா அழகி பட்டத்தை இந்தியாவின்  "ரேவதி சேத்ரி " வென்றார்

24.பசுமை பத்திர முன்னோடி (Green Bond award ) விருது  யெஸ் வங்கிக்கு வழங்கப்பட்டது

25.ஜெர்மனியின் "cross of the order of merit "விருது இந்திய வேதியியல் அறிஞரான கோவர்தன மேத்தாவிற்கு வழங்கப்பட்டது

26.ஜெர்மனியில் நடைபெற்ற பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் குழந்தைகள் பிரிவில் சிறந்த குறும்படமாக மலையாள திரைப்படம் ஓட்டல் (ottal ) திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது

27.இந்திய ஆடை வடிவமைப்பாளரான "மனீஸ்  அரோரா" அவர்களுக்கு பிரெஞ்ச் நாட்டின் செவாலியர் விருது வழங்கப்பட்டது

28.அமெரிக்காவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் 2016 ஆம் ஆண்டிற்கான ரெமி விருது தமிழ்த்திரைபடமான "கனவு வாரியம் " படத்திற்கு வழங்கப்பட்டது

29.பீம்சன் ஜோசி விருது சாரங்கி வித்துவானான பண்டிட் ராம் நாராயணனுக்கு வழங்கப்படுகிறது

30.பிரெஞ்சு அரசின்  செவாலியர் விருது  இந்திய வம்சாவளியை சார்ந்த இஸ்மாயில் முகமது அவர்களுக்கு வழங்கப்பட்டது

31.88 வது ஆஸ்கார் விருதுகள் :-சிறந்த திரைப்படம்=Spot light ,சிறந்த நடிகர்  = leonardo dicaprio(movie:The Revenant  )
சிறந்த நடிகை :=பிரியி லார்சன் (படம் :Room ) அதிகபட்சமாக 6 ஆஸ்கார் விருதுகளை வென்ற படம் =மேட் மேக்ஸ்

32.பேரிடர் காலங்களில் இராணுவத்தின் சேவை மற்றும் உதவிகள் புரிந்ததற்காக புகழ்பெற்ற "இஸ்ரேல் விருது "டேவிட் சுல்மான் என்பவருக்கு வழங்கப்பட்டது

33.யுனெஸ்கோவின் பத்திரிக்கை சுதந்திர விருது  (Unesco or  guillermo cano world press freedom prize 2016) அசர்பெகிஸ்தான் நாட்டின் கடிஜா இஸ்மாயிலோவா அவர்களுக்கு வழங்கப்பட்டது

34.இந்தி நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் அவர்களுக்கு golden indian of the year 2016 விருது வழங்கப்பட்டது

35.தேசிய அறிவுசார் உடைமை விருது கரக்பூர் இந்திய தொழில்நுட்ப கழகத்திற்கு வழங்கப்பட்டது

36.தேசிய சிறப்பு புவியியல்  அறிவியல் விருது வண்டல் தொழிநுட்பத்தில் சிறப்பாக செயலாற்றியதற்காக  அசோக்குமார் சிங்வி என்ற பேராசிரியர்க்கு  வழங்கப்பட்டது

37.நாடக பிரிவிற்கான 2016 ஆம் ஆண்டின் புலிட்சர் விருது மேனுவல் மிரண்டா என்பவர் எழுதிய "ஹாமில்டன் " என்ற புத்தகத்திற்கு வழங்கப்பட்டது

38.ஜார்ஜ் க்ரியர்சன்  விருது (george grierson award) ஹிந்தி மொழி வளர்ச்சிக்கு உதவிய சீனா பேராசிரியர்  "ஜி புபிங்" என்பவருக்கு வழங்கப்பட்டது

39.சிறந்த கற்பனை படைப்பு பிரிவிற்கான     2016 ஆம் ஆண்டின் புலிட்சர் விருது வியட் தான் நிகுயென்  என்பவர் படைத்த "தி சிம்பதைசர்" என்ற படைப்பிற்கு வழங்கப்பட்டது

40.2015 ஆம் ஆண்டின் பிகாரி புரஸ்கார் விருது கவிஞர்  பகவதி லால் வியாஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டது

41.2016 ஆம் ஆண்டிற்கான கிரேட் லண்ட்பெக்  ஐரோப்பிய மூளை ஆராய்ச்சி விருது (grete lundbeck european brain research prize இவ்விருதை மூளை விருது என்றும் அழைப்பர் ) இங்கிலாந்தை சார்ந்த timothy bliss,graham collingridg,richard morris ஆகிய மூன்று பேருக்கு வழங்கப்பட்டது

42.47 வது தாதா சாகிப் பால்கே   விருது = இந்தி நடிகரும் இயக்குனருமான மனோஜ்குமார்

43.சுற்றுலா துறையின் ஆஸ்கார் எனப்படும் "தங்க நகர வாயில் விருது" புதிய உலகம் என்னும் சுற்றுலா குறும்படத்தை சிறப்பாக எடுத்ததற்காக
கேரளா சுற்றுலா துறைக்கு அவ்விருது வழங்கப்பட்டது

44.கணித நோபல் பரிசு என போற்றபடும் 2016 ஆம் ஆண்டிற்கான ஏபெல் விருதை  இங்கிலாந்து நாட்டின் andrew wiles அவர்களுக்கு வழங்கப்பட்டது

45.ஒட்டு மொத்த அளவில் அதிக உற்பத்தி திறனுக்கான பரிசை "மத்திய பிரதேசம் விருது வென்றது .குறிப்பிட்ட பயரில் சிறப்பான உற்பத்தி பிரிவில் தமிழகம் தானியம் பிரிவில் பரிசை வென்றது

46.புதுமை விருது 2016 (innovation award 2016) =டாக்டர் ஸ்ரீசென்டு டி

47.2016 ஆம் ஆண்டுக்கான சர்வதேச டப்ளின் இலக்கிய விருதுபெற்ற நூல் = Family Life - அகில் சர்மா

48.பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கை சார்ந்த பெண் மனித உரிமை போராளியான  "தபசும் அத்னான் " அவர்களுக்கு "நெல்சன் மண்டேலா -கிரகா மச்சேல் புதுமை விருது (nelson mandela graca machel innovation award) வழங்கப்பட்டது

49.2015 ஆம் ஆண்டிற்கான சிறந்த பண வங்கி விருது (banknote of the year award 2015) நியூசிலாந்து நாட்டின் 5 டாலர் மதிப்புடைய பணத்திற்கு வழங்கப்பட்டது

50.சர்வதேச தாவர ஊட்டச்சத்து அறிஞர் விருதை(international plant nutrition scholar award) பெற்ற இந்தியர் = அசோக் குமார், கரக்பூர் இந்திய தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்

51.பிரான்சு நாட்டின் உயரிய விருதான order of arts and letters honours of france எனும் விருது காந்திஜி யின் பேத்தியான தாரா காந்தி பட்டாசார்ஜி அவர்களுக்கு வழங்கப்பட்டது

52.2016 ஆம் ஆண்டிற்கான ஹிருதயாத் மங்கேஷ்கர் விருது விஸ்வநாதன் ஆனந்த் அவர்களுக்கு வழங்கப்பட்டது

53.2015 ஆம் ஆண்டின் சரஸ்வதி சம்மன் விருது ,எழுத்தாளரும் பெண் கவிஞருமான  "பத்மா சச்தேவ் அவர்களுக்கு வழங்கப்பட்டது ."சித்-சேதே " என்ற வாழ்க்கை வரலாற்று நாவலுக்காக வழங்கப்பட்டது

54.fbb femina miss india 2016 = டெல்லியை சார்ந்த பிரியதர்ஷினி சட்டர்ஜி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

55.ஜப்பான் நாட்டின் உயரிய விருதான order of rising sun gold and silver விருது முன்னால் பாராளுமன்ற உறுப்பினரான  நந்த கிஷோர் சிங் அவர்களுக்கு வழங்கப்பட்டது

56.இந்தியாவில் சிறந்த கிராம பஞ்சாயத்து விருது தெலுங்கான மாநிலத்தின் கரிம்நகர் மாவட்ட பாலுமல்லுபள்ளி பஞ்சாயத்து பெற்றது

57.மாஸ்டர் தினாநாத் மங்கேஷ் கர்  வாழ்நாள் சாதனையாளர் விருது பிரபல ஹிந்தி நடிகர் ஜிதேந்த்ரா அவர்களுக்கு வழங்கப்பட்டது

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை ALL INDIA TEACHERS PERAVAI: TNTET Exam 2017 நடைபெறும் நாள் நாளை அறிவிக்கப்படும் - என கல்வி அமைச்சர் அறிவிப்பு.

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை ALL INDIA TEACHERS PERAVAI: TNTET Exam 2017 நடைபெறும் நாள் நாளை அறிவிக்கப்படும் - என கல்வி அமைச்சர் அறிவிப்பு.
உங்களது ஹால் டிக்கெட் தொலைந்து விட்டதா?
-----------------------------------------------------

TNPSC தேர்வு எழுதும் சில பேர், தேர்வு முடிவும் வரும் பொழுது தங்கள் தேர்வு அனுமதி சீட்டினைத்  தொலைத்து விட்டு பதிவு எண் (Reg. No) தெரியாமல், மதிப்பெண் மற்றும் நிலைப் பட்டியலை (Mark and Rank) பார்க்க முடியாமல் அவதிப்படுவது அவ்வப்போது   நடந்து வருகிறது.

பதிவு எண் இல்லை என்றால், கண்டிப்பாக தேர்வு முடிவினை பார்க்க இயலாது.  இதனைத் தடுக்க கீழ்க்கண்ட மூன்று வழிகள் உள்ளன.

1. எப்பொழுதும் உங்கள்  விண்ணப்பத்தை மற்றும் ஹால் டிக்கெட்டை உங்கள் மின் அஞ்சல் (Mail), அலை பேசியில் (Mobile)  அல்லது கணினியில் (Computer) சேமித்து வையுங்கள். பிரிண்ட் எடுத்து வைத்து இருக்கும் ஹால் டிக்கெட் காலப் போக்கில் தொலைந்து விட வாய்ப்பு உண்டு.

2. உங்களது பதிவு எண்ணை அலைபேசி யில் குறுந்செய்தி (SMS) மூலமாக சேமித்து வைக்கலாம் அல்லது போன் நம்பரைப் போன்று பதிவு செய்து வைக்கலாம். இருப்பினும் மின்-அஞ்சலில் வைப்பதே சிறப்பு, ஏன் என்றால் அலைபேசி தொலைந்து விட வாய்ப்புண்டு.

3. உங்களது வினாத் தாளை பத்திரமாக வைக்கவும். அதில் உங்களது பதிவு எண்ணை தேர்வு சமயத்தில் நீங்கள் எழுதி இருப்பீர்கள், அதிலிருந்து மீட்டுக் கொள்ளலாம்.

இம் மூன்றிற்கும் வழி இல்லாத பட்சத்தில், உங்களது பதிவு எண் மற்றும் விண்ணப்ப எண்னைக் கண்டறிய தற்போது TNPSC உதவுகிறது.

எப்படி என்றால், உங்கள் நிரந்தர பதிவு கணக்கில் (One Time Registration Account)  உள்ளீடு (Login) செய்து பார்த்தால் , அதில் VIEW APPLICATION STATUS என்று இருக்கும். அதனுள் சென்று பார்த்தால், நீங்கள் எழுதிய ஒவ்வொரு தேர்விற்கு உரிய தகவல்கள், அதாவது,

i) தேர்வின் பெயர்,
ii) தேர்விற்கு விண்ணப்பித்த தேதி,
iii) விண்ணப்ப எண்,
iv) தேர்வு பதிவு எண்

போன்றவற்றைத் தெரிந்து கொள்ளலாம். (பார்க்க படம்).

நன்றி.

Wednesday, 25 January 2017

*How to write Table of any two digit number?*

For example Table of *87*

First write down *table of 8 than write down table of 7 beside*

  8            7                    87
16         14    (16+1)    174
24         21    (24+2)    261
32         28    (32+2)    348
40         35    (40+3)    435
48         42    (48+4)    522
56         49    (56+4)    609
64         56    (64+5)    696
72         63    (72+6)    783
80         70    (80+7)    870

*This way one can make Tables from10 to 99 .*

*share & teach children*

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...