Sunday, 29 January 2017

பொது அறிவு கேள்வித் தாள்:
அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள்: (Constitutional Bodies)


அமைப்பு தொடர்புடைய ஷரத்து Art.
1. தேர்தல் ஆணையம் Art.324
2. மத்திய தேர்வாணையம் Art.315-323
3. மாநில தேர்வாணையம் Art.315-323
4. நிதிக்குழு Art.280
5. தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம் Art.338
6. பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் Art.338-A
7. மொழிச் சிறுபான்மையினரு
க்கான சிறப்பு அலுவலர் Art.350-B
8. தலைமை தணிக்கை அதிகாரி (CAG) Art.148
9. அட்டர்னி ஜெனரல் Art.76
10. அட்வகேட் ஜெனரல் Art.165
அரசியலமைப்பு சாராத அமைப்புகள் ( Non- Constitutional Bodies)
அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
1. திட்டக்குழு March 1950
2. தேசிய வளர்ச்சிக் குழு August 1952
3. தேசிய மனித உரிமை ஆணையம் 1993
4. மாநில மனித உரிமை ஆணையம்1997
5. மத்திய கண்காணிப்பு ஆணையம் 1964
6. மத்திய தகவல் ஆணையம் 2005
7. மாநில தகவல் ஆணையம் 2005
மத்தியிலும் மாநிலத்திலும்
Art.52 to 151 மத்திய அரசாங்கம்
Art.52 to 237 மாநில அரசாங்கம்
Art.32 உச்சநீதிமன்றத்தின் நீதிப்பேராணை
Art.226 உயர்நீதிமன்றத்தின் நீதிப்பேராணை
Art.74 அமைச்சரவை ஆலோசனைப்படி குடியரசு தலைவர் செயல்படுதல்
Art.163 அமைச்சரவை ஆலோசனைப்படி ஆளுநர் செயல்படுதல்
Art.78 பிரதமரின் பணிகள்
Art.167 முதல்வரின் பணிகள்
Art.72 குடியரசுத் தலைவரின் மன்னிப்பளிக்கும் அதிகாரம்
Art.161 ஆளுநரின் மன்னிப்பளிக்கும் அதிகாரம்
Art.123 குடியரசுத் தலைவரின் அவசர சட்டங்கள் பிறப்பிக்கும் அதிகாரம்
Art.213 ஆளுநரின் அவசர சட்டங்கள் பிறப்பிக்கும் அதிகாரம்
Art.110 பண மசோதா
Art.199 பண மசோதா (மாநிலத்தில்)
Art.112 வருடாந்திர நிதிநிலை அறிக்கை
Art.202 பட்ஜெட் (மாநிலத்தில்)
Art.266 ஒருங்கிணைந்த நிதியம்
Art.267 அவசரகால நிதி
*பொது அறிவு*

இடஒதுக்கீடு... ரிசர்வேஷன்.. இந்த வார்த்தையை யார் எங்கு கேட்டாலும் அது என்னவோ SC/ST மக்களுக்கானது, அதை நீக்க வேண்டும், தூக்கவேண்டும், ஒழிக்கவேண்டும் என்ற தவறான கண்ணோட்டம் சமூகத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது...

SC/ST மட்டும்தான் இங்கே இடஒதுக்கீட்டை அனுபவிக்கின்றனரா.. இல்லை...

மொத்தமுள்ள 100% இடங்களில், தமிழ்நாட்டில்..
BC - 30%
MBC - 20%
SC - 18%
ST - 1%
மீதி - 31% பொது போட்டி (எல்லா சமூகத்துக்கும் பொதுவானது)

மத்திய அரசில்,

OBC (BC+MBC) - 27%
SC - 15%
ST - 7.5%
மீதி - 50.5% பொது போட்டி (எல்லா சமூகத்துக்கும் பொதுவானது)

ஆக, இடஒதுக்கீட்டிற்கு எதிராக யார் எங்கே பேசினாலும் முதலில் அதற்கு எதிர் குரல் கொடுக்க வேண்டியவர்கள் சுமார் 50% இடங்களை பெரும் பிற்படுத்தப்பட்ட/ மிக பிற்படுத்தப்பட்ட மக்கள் தான்....

ஆனால், இந்த சமூகத்தில் இடஒதுக்கீடு என்பதை ஏதோ SC/ST மக்கள் மட்டுமே அனுபவித்து, சுக போக வாழ்க்கை வாழ்ந்து வருவதாக ஒரு மாய தோற்றம் உருவாக்கப்பட்டுவிட்டது.

SC/ST மக்கள் பெறுவது என்னவோ வெறும் 19% இடங்கள் தான்....
ஆசிரியர் தகுதித் தேர்வு!

TET: தமிழ் வினா - விடை!

கடந்த மூன்று வாரங்களாக நாளிதழ்களிலும் நூல் விற்பனை நிலையங்களிலும் வெகுவாகப் பேசப்படுவது ஆசிரியர் தகுதித் தேர்வு.

 ஓராண்டு, இரண்டாண்டு எனப் பணிப் பயிற்சி பெற்று ஆசிரியர் பட்டய, பட்டச் சான்றுகள் எல்லாம் முழுமையான பயனைத் தராது ஆசிரியப் பணிக்குச் செல்வதற்கு. பணிக் கல்வி பெற்ற பின்னரும் மீண்டும் தகுதித் தேர்வினை எழுதி மதிப்பெண் வாங்க வேண்டிய கட்டாய நிலை. அவர்களுக்காகவே தமிழ் பாடத்திற்கான மாதிரி வினா விடைகளை தயாரித்து இங்கு வழங்கி வருகிறோம். படித்து பயன் பெறுங்கள்.

*  சீட்டுக்கவி பாடுவதில் வல்லவர் - அந்தகக் கவிவீரராகவர்
*  அந்தகக் கவி வீரராகவர் பிறந்த ஊர் - பூதூர்
*  சந்திரவாணன் கோவை என்ற நூலை எழுதியவர் - அந்தகக் கவி வீரராகவர்
*  கூன்பாண்டியன் காலத்தில் மதுரையில் சைவத்தை காத்தவர் - திருஞானசம்பந்தர்
*  மதுரையில் ஆடைகள் விற்கும் கடைப்பகுதி இருந்த வீதியின் பெயர் - அறுவை வீதி
*  மதுரை நகரின் பெயர் கல்வெட்டில் எப்படி எழுதப்பட்டுள்ளது -மதிரை
*  மதுரையில் தாஜ்மகால் போல கட்டப்பட்ட கட்டிடம் - திருமலை நாயக்கர் மகால்
*  கடைச் சங்கம் எங்கு நிறுவப்பட்டது - மதுரை
*  மதுரை என்ற சொல்லுக்கு இனிமை என்று பெயர்
*  திருவிழா நகர், கோயில் நகர் என்று சிறப்பிக்கப்படும் நகர் - மதுரை
*  தென்னிந்தியாவில் ஏதென்ஸ் என்று புகழப்படும் நகரம் - மதுரை
*  தங்கப் பதுமையாம் தோழர்களோடு இவ்வடிவில் பதுமை என்னும் சொல் உணர்த்தும் பொருள் - உருவம்
*  திருவாரூர் நான்மணி மாலையை எழுதியவர் - குமரகுருபரர்
*  குமரகுருபரர் பிறந்த ஊர் - திருவைகுண்டம்
*  குமரகுருபரர் வாழ்ந்த  காலம் - கி.பி.16
*  நான்மணி மாலை என்பது - சிற்றிலக்கியம்
*  மண் சுமந்தார் என குறிப்பிடப்படுபவர் - சிவபெருமான்
*  வாணிதாசன் சொந்த ஊர் - வில்லியனூர்
*  வாணிதாசன் இயற்பெயர் - அரங்கசாமி
*  தமிழகத்தின் அன்னிபெசன்ட் என்று புகழப்பட்டவர் - ராமாமிர்தம் அம்மையார்
*  ராமாமிர்தம் அம்மையார் முதல் போராட்டத்தை தொடங்கிய ஆண்டு - 1938
*  திருச்செந்திற் கலம்பகம் எத்தனை உறுப்புகளை கொண்டது - 18
*  அம்மானை என்பது - பெண்கள் விளையாடும் விளையாட்டு
*  திருச்செந்திற் கலம்பகத்தில் இடம் பெற்ற அம்மானையில் போற்றப்படும் தெய்வம் - முருகன்
*  முருகனால் சிறைப்பிடிக்கப்பட்டவன் - வேலன்
*  ஈசானதேசிகருக்கு கல்வி கற்றுக் கொடுத்தவர் - மயிலேறும் பெருமாள்
*  திருச்செந்திற் கலம்பகம் என்னும் நூலை இயற்றியவர் - சுவாமிநாததேசிகர்.
*  கதர் ஆடை என்பது - பருத்தி ஆடை
*  இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொண்டவர் - காந்தியடிகள்
*  வானம் பார்த்த பூமி என்பது - புன்செய்
*  வேளாண் தொழிலில் உள்ள கூறுகள் - 6
*  வேளாண் பல்கலைக் கழகம் உள்ள இடம் - கோவை
*  சீவகசிந்தாமணி காப்பியத்தின் கதைத் தலைவன் - சீவகன்
*  நரிவிருத்தம் பாடியவர் - திருத்தக்க தேவர்
*  வீழ்ந்து வெண்மழை தவழும் - என்ற சீவக சிந்தாமணி பாடலில் கூறப்படும் காட்சி -  ஒரு நாட்டியம் நடப்பது போல
*  காராளர் என்பவர் - உழவர்
*  ஆழி என்பதன் பொருள் -  மோதிரம்
*  வேந்தர் என்பதன் பொருள் - மன்னர்
*  கம்பர் பிறந்த ஊர் - தேரழுந்தூர்
*  தமிழரின் தற்காப்பு விளையாட்டுகளில் ஒன்று - சிலம்பாட்டம்
*  யானைப் போர் காண்பதற்காக மதுரையில் கட்டப்பட்டது - தமுக்கம் மண்டபம்
*  விளையாட்டின் விழியாக கிடைப்பது - பட்டறிவு
*  விளையாட்டின் அடிப்படை நோக்கம் - போட்டியிடுவது
*  பாரதிக்கு பிறகு கவிதை மரபில் திருப்பம் விளைவித்தது யாருடைய படைப்பு - ந.பிச்சைமூர்த்தி
*  மருதகாசி பிறந்த ஊர் - மேலக்குடிக்காடு
*  திரைக்கவித் திலகம் என்று அழைக்கப்பட்டவர் - மருதகாசி
*  பூங்கொடி பூப் பறிக்கிறாள் இத்தொடரில் உள்ள "பூ" என்பது - பொருட் பெயர்
*  மதுரை என்பது - இடப் பெயர்
*  மீனாட்சி அம்மன் கோயிலில் உயரமானது -  தெற்குகோபுரம்
*  பாண்டிய நாடு எதற்கு பெ.யர் பெற்றது -  முத்து
*  மதுரையில் கையில் சிலம்புடன் உட்கார்ந்து இருக்கும் உருவச் சிலை அமைந்த கோயில் -  செல்லத்தம்மன் கோயில்
*  நான்காம் தமிழ்ச்சங்கத்தை மதுரையில் நிறுவி தமிழ் வளர்த்தவர் - வள்ளல் பாண்டித்துரை
*  மீனாட்சியம்மை சிறுமியாக வந்து முத்துமணி மாலையை யாருக்கு பரிசளித்தார் - குமரகுருபரர்
*  மதுரையை விழா மல்கு நகரமாக விளங்கச் செய்தவர் - திருமலை நாயக்கர்
*  பரஞ்ஜோதியாரின் திருவிளையாடல் புராண கூற்றின்படி தண்டமிழ் பாடல் யாருக்கு அளிக்கப்பட்டது - தருமிக்கு
*  மனோன்மணியம் எந்த ஆங்கில கதையை தழுவி எழுதப்பட்டது - மறைவழி
*  மனோன்மணியம் என்னும் நாடக காப்பியத்தை எழுதியவர் - பேராசிரியர் சுந்தரனார்
*  மனோன்மணியம் என்னும் கவிதை நாடகம் எழுதப்பட்ட ஆண்டு - 1891
*  சமுதாய சீர்திருத்தம் தொடர்பான நாடகங்கள் சிறப்பிடம் பெற்ற நூற்றாண்டு - கி.பி.19
*  முதல் எழுத்துக்களின் எண்ணிக்கை - 30
*  இயல், இசை, நாடகம் என முப்பெரும் பாகுபாடு கொண்ட மொழி - தமிழ்
*  நாடக பேராசிரியர், நாடக உலகின் இமய மலை என்று போற்றப்பட்டவர் -   பம்மல் சம்பந்தனார்
*  மறை வழி என்ற நூலை எழுதியவர் - லார்டு லிட்டன்
*  தமிழகத்தில் முதன்முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம் - கதரின் வெற்றி
*  தமிழ் நாடக மறுமலர்ச்சித் தந்தை என நாடக உலகில் அழைக்கப்படுபவர் - கந்தசாமி
*  உலகம் தட்டை இல்லை, உருண்டையானது என்று சரியாக கணிக்கப்பட்ட நூற்றாண்டு - கி.பி.15
*  உலகம் உருண்டை என்று யார் சொன்னதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது -  கலீலியோ
*  "திங்களை பாம்பு கொண்டற்று" என்ற குறள் எதை குறிப்பிடுகிறது - சந்திர கிரகணம்
*  உடலை நீர் தூய்மை செய்யும், உள்ளத்தை எது தூய்மை செய்யும் - வாய்மை
*  ஆய்த எழுத்து எந்த எழுத்து வகையை சேர்ந்தது - சார்பெழுத்து
*  திரு.வி.க இயற்றிய பொதுமை வேட்டல் என்னும் தலைப்பில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 430
*  திரு.வி.க . பிறந்த ஊர் - தண்டலம்
*  உழவர்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் நாடகங்களுக்கு பெயர் - பள்ளு
*  நொண்டி வகை நாடகங்கள் எந்த காலத்தில் தோன்றின் - கி.பி.12
*  அருணாசலக் கவிராயரின் ராம் நாடகம் தோன்றிய நூற்றாண்டு - கி.பி.18
*  தெருக்கூத்து நாடகங்கள் எதை மையமாக வைத்து நடத்தப்பட்டன  -   புராணக்கதைகள்
*  குறவஞ்சி நாடகங்கள் நடத்தப்பட்டது - நாயக்க மன்னர்கள் காலத்தில்
*  ராஜராஜசோழன் காலத்தில் நடத்தப்பட்ட நாடகம் - ராசராசேச்சுவரம்
*  மத்த விலாசம் என்ற நூலை எழுதியவர் -  மகோந்திரவர்ம பல்லவன்
*  மத்த விலாசம் எழுதப்பட்ட காலம் -  கி.பி. 7
*  நாடக கலையை பற்றியும், காட்சிகள் பற்றியும், நாடக அரங்கம் பற்றியும் விரிவாக கூறியுள்ள நூல் - சிலப்பதிகாரம்
*  தனிப்பாடலுக்கு மெய்பாடு தோன்ற ஆடுவதற்கு - நாட்டியம் என்று பெயர்
*  கூத்துவகைகள், நாடக நூல்கள் குறித்து யார் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது -  அடியார்க்கு நல்லார்
*  நாட்டின் கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும், வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவது - நாடகம்
*  மனித வாழ்க்கையும் காந்தியும் என்ற நூலின் ஆசிரியர் - திரு.வி.க
*  திரு.வி.க சென்னையில் தமிழ் ஆசிரியராக பணியாற்றிய பள்ளி - வெஸ்லி பள்ளி
*  அக இருளை போக்கும் விளக்கு - பொய்யா விளக்கு
*  நாயக்க மன்னர்கள் தமிழகத்தை எத்தனை பாளையங்களாக பிரித்தனர்  -  72
*  சார்பெழுத்துக்கள் எத்தனை வகை - 10
*  அறிவுரைக் கோவை என அழைக்கப்படுவது  -   முதுமொழிக்காஞ்சி
*  முதுமொழிக் காஞ்சியில் உள்ள  பாடல்களின் எண்ணிக்கை - 100
*  மோசிக்கீரனார் உடல் சோர்வால் முரசுக் கட்டிலில் தூங்கியபோது கவரி வீசிய மன்னன் - சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை
*  நெல்லும் உயிரன்றே என்னும் பாடலை பாடியவர் -  மோசிக்கீரனார்
*  முதுமொழிக் காஞ்சியில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை - 10
*  முதுமொழிக் காஞ்சியின் ஆசிரியர் - மதுரை கூடலூர் கிழார்
*  கற்றலை விட சிறந்தது - ஒழுக்கமுடைமை
*   மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பிறந்த ஆண்டு - 1815
*  வனப்பு என்ற சொல்லின் பொருள் - அழகு
*  "நில்லாமையுள்ளும் நெறிப்பாடும்" என்னும் வரியில் "வழி" என்பதன் பொருள் - உள்
*  "பால் பற்றி செல்லா விடுதலும்"  என்னும் வரியில் "பால்" என்பதன் பொருள் - ஒருபக்க சார்பு பற்றி
*  காளமேகப் புலவர் பிறந்த ஊர் - நந்திக்கிராமம்
*  சென்னை துறைமுகம் சார்பில் குடிநீர் கப்பலுக்கு பெயர் - சீனிவாச ராமானுஜம்
*  ராமானுஜம் எழுத்தராக பணியாற்றிய இடம் - துறைமுகம்
*  ராமானுஜர் உயர்கல்விக்காக சென்ற நாடு - இங்கிலாந்து
*  ராமானுஜர் எதற்கு மதிப்புள்ளது என்று தனது ஆசிரியரிடம் வாதிட்டார் -   0
*  ராமானுஜர் திண்ணைப் பள்ளியில் படித்த ஊர் - காஞ்சிபுரம்
*  பேராசிரியர் ராமானுஜம் அனைத்துலக நினைவுக்குழு அமைக்கப்பட்டுள்ள இடம்  -   சென்னை
*  ராமானுஜர் இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்து சேர்ந்த ஆண்டு - 1919
*  கணிதமேதை ராமானுஜம் பிறந்த ஆண்டு - 1887
*  கணித மேதை ஜாகோபி ஜெர்மனியில் வாழ்ந்த நூற்றாண்டு - 19ம் நூற்றாண்டு
*  ராமானுஜர் ஆய்வாலராக இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் ஒரு ஜாகோபி என்று கூறியவர் - லிட்டில்வுட்
*  ராமானுஜத்தின் வழிமுறைகளை ரோசர்ஸ் ராமானுஜம் கண்டுபிடிப்புகள் என்னும் தலைப்பில் வெளியிட்டவர் -  ஹார்டி
*  ராமானுஜத்தை இறைவன் தந்த பரிசு என்று கூறியவர் -   ஈ.டி.பெல்

*  மெய்யெழுத்துகளுக்கு எத்தனை மாத்திரை - அரை மாத்திரை
*  ஒர் எழுத்தை இயல்பாக உச்சரிக்க நாம் எடுத்துக் கொள்ளும் கால அளவுக்கு - மாத்திரை என்னும் பெயர்
*  திணை, பால், எண் ஆகியவர்றை உணர்த்தி வந்தால் அது படர்க்கை பெயர்
*  தன்மைப் பெயர்களும், முன்னிலை பெயர்களும் படர்க்கை இடப் பெயர்கள்
*  ஒருவன் சொல்வதை எதிரே நின்று கேட்பவனை குறிப்பது - முன்னிலை இடம்
*  இடம் எத்தனை வகைப்படும் - 3 வகை
*  மொழியில் சொற்களை வழங்கும் நிலைக்கு -  இடம் என்று பெயர்
*  ஒன்றுக்கு மேற்பட்ட பல பொருட்களை குறிக்கும் சொல் -  பன்மை
*  பல பொருள்களை குறிக்கும் சொல் - பலவின்பால்
*  பல ஆடவர்களையும், பல பெண்களையும் தொகுதிகளாக குறிப்பது - பலர்பால்
*  ஆண்பால், பெண்பால், பலர்பால் ஆகியவை - உயர்திணைக்கு உரியவை
*  எண் எத்தனை வகைப்படும் - இரண்டு
*  ஒரே பொருளை குறிக்கும் சொல் - ஒருமை
*  மக்களையும் தேவர்களையும், நகரையும் குறிக்கும் சொற்களுக்கு -  உயர்திணை
*  அளபெடை எத்தனை வகைப்படும் - 2 வகை
*  செய்யுளில் ஒசை குறையும்போது அவ்வோசையை நிறைவு செய்ய உயிரெழுத்து நீண்டு ஒலித்தால் அதற்கு  உயிரளபெடை என்று பெயர்
*  திணை என்பது - ஒழுக்கம்
*  சொல்லுக்கு அழுத்தம் தரும் உயிரெழுத்து - ஏ
*  சொல்லுக்கு முதலிலும் இறுதியிலும் நின்று வினாப் பொருளை உணர்த்தும் எழுத்து - ஏ
*  சொல்லுக்கு இறுதியில் வரும் வினா எழுத்துக்கள் - ஆ, ஓ, ஏ
*  சொல்லுக்கு முதலில் வரும் வினா எழுத்துக்கள் -  எ, யா, ஏ
*  வினா எழுத்துக்கள் - 5
*  சுட்டெழுத்துக்கள் - 3
*  பால் - 5
*  பெயர் சொற்களை 2 வகையாக பிரிக்கலாம்.
*  ஒரு பொருளை சுட்டிக் காட்டுவது - சுட்டு
*  பெயர் சொற்களையும், வினைச் சொற்களையும்  5 பால்களாக பிரிக்கலாம்
*  திணை - 2 வகை
*  நீட்டி ஒலிப்பதை அளபெடை என்பர் இலக்கணத்தார்
 *  ஒரு பெண்ணைப் பார்த்து "மான் கொல்? மயில் கொல்?" என்பது - செய்யுள் வழக்கு
*  மனிதர் அல்லாத உயிருள்ளவையும், உயிரற்றவையும் -    அஃறிணை
உவமையால் விளக்கப்படும் பொருள்
*  தாயைக் கண்ட சேயைப் போல - மகிழ்ச்சி
*  இலைமறை காய் போல் - மறைபொருள்
*  மழைமுகம் காணாப் பயிர் போல -  வாட்டம்
*  விழலுக்கு இறைத்த நீர் போல  - பயனற்றது
*  சர்க்கரைப் பந்தலில் தேன்மழை பொழிந்தது போல   -  மிக்க மகிழ்வு
*  உடுக்கை இழந்தவன் கை போல  - நட்புக்கு உதவுபவன்
*  மண்ணுக்குள் மறைந்திருக்கும் நீரைப் போல  - மாந்தருள் ஒளிந்திருக்கும் திறன்
*  இணருழந்தும் நாறா மலரனையார் - விரித்துரைக்க இயலாதவர்
*  குந்தித் தின்றால் குன்றும் மாளும் - சோம்பல்
*  வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவது போல - அறிவற்ற தன்மை
*  வளர்ந்த கடா மார்பில் பாய்வது போல - நன்றியின்மை
*  புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது  - சான்றாண்மை
*  சேற்றில் மலர்ந்த செந்தாமரை - குடிபிறப்பின் சிறப்பு
*  அனலில் விழுந்த புழுப்போல    -    தவிர்ப்பு
*  கண்ணைக் காக்கும் இமை போல  -  பாதுகாப்பு
*  நீர்க்குமிழி அன்ன வாழ்க்கை  -  நிலையாமை
*  உமி குற்றிக் கைவருந்தல் போல  -     பயனற்ற செயல்
*  பல துளி பெருவெள்ளம் -  சேமிப்பு
*  நத்தைக்குள் முத்துப் போல -  மேன்மை
*  ஊமை கண்ட கனவு போல - கூற இயலாமை, தவிப்பு
*  பூவோடு சேர்ந்த நார் போல -  உயர்வு
*  நாண் அறுந்த வில் போல -  பயனின்மை
*  மேகம் கண்ட மயில் போல - மகிழ்ச்சி
*  தாயைக் கம்ட சேயைப் போல   -   மகிழ்ச்சி
*  சிறகு இழந்த பறவை போல  -  கொடுமை
*  மழை காணாப் பயிர் போல  - வறட்சி
*  நட்புக்கு கரும்பை உவமையாகச் சொன்ன இலக்கியம் - நாலடியார்
*  இயற்கை தவம் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - சீவக சிந்தாமணி
*  திருத்தொண்டர் புராணம் என்னும் அடைமொழியால் குறிக்கப்படும் நூல் -  பெரியபுராணம்
*  இரட்டைக் காப்பியம் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை
*  வள்ளலார் என்று போற்றப்படுபவர் - இராமலிங்க அடிகளார்
*  விருத்தமெனும் ஒண்பாவில் உயர்ந்தவர் - கம்பர்
பொருத்துக
*  வாரி - கடல்
*  கலிங்கம் - ஆடை
*  வயமா - குதிரை
*  புலம் - அறிவு
*  ஐயை - தாய்
*  செறிவு - அடக்கம்
*  இகல் - பகை
*  நகம் - மலை
*  வெச்சி - நிரை கவர்தல்
*  கரந்தை - நிரை மீட்டல்
*  நொச்சி - எயில் காத்தல்
*  வாகை - போரில் வெற்றி
*  வாள் - உயர்ந்த
*  பராவி - வணங்கி
*  கழனி -  வயல்
*  தொன்மை -   பழமை
*  பரி - குதிரை
*  அரி - சிங்கம்
*  மறி - ஆடு
*  கரி - யானை
*  பாரி -கபிலர்
*  அதியமான் - ஒளவையார்
*  கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார்
*  குமணன் -பெருஞ்சித்தனார்
*  சுரத்தல் - பெய்தல்
*  உள்ளம் - ஊக்கம்
*  வேலை - கடல்
*  நல்குரவு - வறுமை
*  முப்பால் - திருக்குறள்
*  தொல்காப்பியம் - தொல்காப்பியர்
*  மகாபாரதம் -  வியாசர்
*  தமிழ் முதற் காப்பியம் - சிலப்பதிகாரம்
*  யாப்பருங்கலம் - புத்தமித்திரர்
*  வீரசோழியம் -  அமிர்தசாகரர்
*  நேமிநாதம் -  குணவீர பண்டிதர்
*  நன்னூல்  - பவணந்தி முனிவர்
*  உழத்திப்பாட்டு - முக்கூடற்பள்ளு
*  முதல் காப்பியம் - சிலப்பதிகாரம்
*  ஈரடி வெண்பா  -  திருக்குறள்
*  தென்னூல் விளக்கம் - வீரமாமுனிவர்
*  திருக்குற்றாலக் குறவஞ்சி - திரிகூடராசப்ப கவிராயர்
*  இன்தமிழ் ஏசுநாதர் - திருஞானசம்பந்தர்
*  கவிக்குயில் - சரோஜினிநாயுடு
*  காதல் இலக்கியம் - சீவக சிந்தாமணி
*  புதுவைக்குயில் - பாரதிதாசன்
*  யாருக்கும் வெட்கமில்லை - சோ.ராமசாமி
*  நம்மாழ்வார் - திருவாய்மொழி
*  சமணமுனிவர் - திருப்பாமாலை
*  கண்ணதாசன் - இயேசுகாவியம்
*  உமறுப்புலவர் - சீறாப்புரணம்
*  பாணாறு - பெரும்பாணாற்றுப் படை
*  புறம்பு நானுறு - புறநானூறு
*  திராவிடச் சிசு - திருஞான சம்பந்தர்
*  வியாக்கியான சக்கரவர்த்தி - பெரிய வாச்சான் பிள்ளை
*  வீரசோழியம் பாடியவர் - புத்தமித்திரர்
*  சூடிக்கொடுத்த சுடர்க்கொடி - ஆண்டாள்
*  மருள் நீக்கியார் - அப்பர்
*  கிறித்துவக்கம்பன் - கிருஷ்ணப்பிள்ளை
*  முடியரசன் - பூங்கொடி
*  சிற்பி - நிலவுப்பூ
*  நா.காமராசன் - சூரியகாந்தி
*  பாரதிதாசன் - குறிஞ்சித் திட்டு
*  பாஞ்சாலி சபதம் - பாரதியார்
*  பாண்டியன் பரிசு - பாரதிதாசன்
*  அர்த்தமுள்ள இந்து மதம் - கவியரசு கண்ணதாசன்
*  கள்ளிக்காட்டு இதிகாசம் - கவிஞர் வைரமுத்து
*  திருவாசகம் - மாணிக்கவாசகர்
*  திருப்பாவை - ஆண்டாள்
*  பெண்ணின் பெருமை - திரு.வி.க.
*  தேவாரம் - திருஞானசம்பந்தர்
*  முக்குடற்பள்ளு -  ஆசிரியர் பெயர் தெரியவில்லை
*  பழமொழி - முன்றுறையரையனார்
*  இருண்ட வீடு - பாரதிதாசன்
*  ஏலாதி - கணிமேதாவியார்.

Saturday, 28 January 2017

செம்மொழிகள் (Classic Languages)

இந்தியாவில் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட முதல் மொழி தமிழ்.

2004 தமிழ்

2005 சமஸ்கிருதம்

2008 தெலுங்கு, கன்னடம்

2013 மலையாளம்

2014 ஒரியா
🕸🕸🕸🕸🕸🕸🕸
1. *PAN* - permanent account number.
2. *PDF* - portable document format.
3. *SIM* - Subscriber Identity Module.
4. *ATM* - Automated Teller machine.
5. *IFSC* - Indian Financial System Code.
6. *FSSAI(Fssai)* - Food Safety & Standards Authority of India.
7. *Wi-Fi* - Wireless fidelity.
8. *GOOGLE* - Global Organization Of Oriented Group Language Of Earth.
9. *YAHOO* - Yet Another Hierarchical Officious Oracle.
10. *WINDOW* - Wide Interactive Network Development for Office work Solution.
11. *COMPUTER* - Common Oriented Machine. Particularly United and used under Technical and Educational Research.
12. *VIRUS* - Vital Information Resources Under Siege.
13. *UMTS* - Universal Mobile Telecommunicati ons System.
14. *AMOLED* - Active-matrix organic light-emitting diode.
15. *OLED* - Organic light-emitting diode.
16. *IMEI* - International Mobile Equipment Identity.
17. *ESN* - Electronic Serial Number.
18. *UPS* - Uninterruptible power supply.
19. *HDMI* - High-Definition Multimedia Interface.
20. *VPN* - Virtual private network.
21. *APN* - Access Point Name.
22. *LED* - Light emitting diode.
23. *DLNA* - Digital Living Network Alliance.
24. *RAM* - Random access memory.
25. *ROM* - Read only memory.
26. *VGA* - Video Graphics Array.
27. *QVGA* - Quarter Video Graphics Array.
28. *WVGA* - Wide video graphics array.
29. *WXGA* - Widescreen Extended Graphics Array.
30. *USB* - Universal serial Bus.
31. *WLAN* - Wireless Local Area Network.
32. *PPI* - Pixels Per Inch.
33. *LCD* - Liquid Crystal Display.
34. *HSDPA* - High speed down-link packet access.
35. *HSUPA* - High-Speed Uplink Packet Access.
36. *HSPA* - High Speed Packet Access.
37. *GPRS* - General Packet Radio Service.
38. *EDGE* - Enhanced Data Rates for Globa Evolution.
39. *NFC* - Near field communication.
40. *OTG* - On-the-go.
41. *S-LCD* - Super Liquid Crystal Display.
42. *O.S* - Operating system.
43. *SNS* - Social network service.
44. *H.S* - HOTSPOT.
45. *P.O.I* - Point of interest.
46. *GPS* - Global Positioning System.
47. *DVD* - Digital Video Disk.
48. *DTP* - Desk top publishing.
49. *DNSE* - Digital natural sound engine.
50. *OVI* - Ohio Video Intranet.
51. *CDMA* - Code Division Multiple Access.
52. *WCDMA* - Wide-band Code Division Multiple Access.
53. *GSM* - Global System for Mobile Communications.
54. *DIVX* - Digital internet video access.
55. *APK* - Authenticated public key.
56. *J2ME* - Java 2 micro edition.
57. *SIS* - Installation source.
58. *DELL* - Digital electronic link library.
59. *ACER* - Acquisition Collaboration Experimentation Reflection.
60. *RSS* - Really simple syndication.
61. *TFT* - Thin film transistor.
62. *AMR*- Adaptive Multi-Rate.
63. *MPEG* - moving pictures experts group.
64. *IVRS* - Interactive Voice Response System.
65. *HP* - Hewlett Packard.

*Do we know actual full form of some words???*
66. *News paper =*
_North East West South past and present events report._
67. *Chess =*
_Chariot, Horse, Elephant, Soldiers._
68. *Cold =*
_Chronic Obstructive Lung Disease._
69. *Joke =*
_Joy of Kids Entertainment._
70. *Aim =*
_Ambition in Mind._
71. *Date =*
_Day and Time Evolution._
72. *Eat =*
_Energy and Taste._
73. *Tea =*
_Taste and Energy Admitted._
74. *Pen =*
_Power Enriched in Nib._
75. *Smile =*
_Sweet Memories in Lips Expression._
76. *etc. =*
_End of Thinking Capacity_
77. *OK =*
_Objection Killed_
78. *Or =*
_Orl Korec (Greek Word)_
79. *Bye =*♥
_Be with you Everytime._

*share these meanings as majority of us don't know*👌👌👌👌👌👌👌👌
நடப்பு நிகழ்வுகள் வினா / விடை  தொகுப்பு
=====================================

01) 1948க்கு பின் பூமிக்கு மிக அருகே நிலவு வந்த நாள் எது?

விடை -- நவம்பர் 14 / 2016

02) சமூக வலைத்தளம் மூலம் ( Facebook live ) தனது பிரசவ வீடியோக்களை பகிர்ந்த பெண் யார் ?

விடை. --- லண்டனைச் சேர்ந்த சாரா ஜேன்

03) எல்லை பாதுகாப்புபடையால் எந்த லேசர் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் , இந்தியா பாகிஸ்தான் எல்லையில் லேசர் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. ?

விடை. -- Farheen laser technology .. .. .. ( Cron systems என்ற நிறுவனத்தால் Farheen laser technologyயின் படி இந்த laser wall அமைக்கப்பட்டுள்ளதால் , Cron walls என bsf ஆல் அடையாளப்படுத்தப்படுகிறது )

04)  திருப்பதியில் நடைபெறும் 104வது அறிவியல் மாநாட்டின் கருப்பொருள் ( Theme ) என்ன?

விடை -- Science & Technology for National Development தேசிய மேம்பாட்டிற்கு அறிவியல் தொழில்நுட்பம்

05) ரத்தமில்லா யுத்தம் " என பிரதமர் மோடி எதனை குறிப்பிட்டார் ?

விடை. -- இணைய குற்றங்கள் ( Cyber crime )

06) ஆதார் விபரங்களை பதிவு செய்துள்ளவர்களில் எந்த வயதை பூர்த்தி செய்தவர்கள், மீண்டும் தங்களை பற்றிய பயோ மெட்ரிக் விபரங்களை பதிவு செய்ய வேண்டும்?

விடை. -- 15 வயது

07) 6வது தேசிய பெண்கள் அறிவியல் மாநாடு நடைபெற்ற இடம்?

விடை - திருப்பதி

08)  புதுடெல்லியில் ஜனவரி 07/2017ல் துவங்கவுள்ள 44வது உலக புத்தக கண்காட்சியின் கருப்பொருள் என்ன ?

விடை. -- ' Manushi', focusing on "writings on and by women".

09) பெண்களின் பாதுகாப்புக்காக " சிவப்பு வாகன ரோந்து " (Code Red Bike Patrol ) எந்த நகரில் துவங்கப்பட்டுள்ளது?

விடை. --- ஜபல்பூர் ( ம.பி. )

10) IAS , IPS போன்று திறன் மேம்பாடு மற்றும்  தொழிற்துறையை ஊக்குவிக்கும் விதமாக  புதிதாக மத்திய அரசு ஏற்படுத்தியுள்ள  பதவி எது ?

விடை  --- Indian Skill Development Services (ISDS).

11)  இந்தியாவின்  arbitrary mechanism பற்றி மறு ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட கமிட்டி எது ?

விடை  --- நீதியரசர் B.N. ஸ்ரீ கிருஷ்ணா

12) தேசிய விளையாட்டு போட்டிகளில் , ஈட்டி எறிதலில் முதன்முறையாக 60மீட்டர் தூரம் எறிந்து சாதனை செய்தவர் யார்?

விடை. -- அன்னு ராணி     ....   .....  [ U19 போட்டியில் உலக சாதனை செய்தவர் நீரஜ் சோப்ரா

13) மத்திய சுற்றுலாத்துறையின் சார்பில் , தூய்மையான சுற்றுலா நகரம் என அறிவிக்கப்பட்ட நகரம் எது?

விடை. --- காங்டாக் ( Gangtok ) சிக்கிம் மாநிலம்

14) மாநிலத்தில் உள்ள அனைத்து நகரங்களும் திறந்த வெளி கழிப்பிடம் இல்லா நகரங்கள் என்ற நிலையை எட்டிய இரு மாநிலங்கள் எவை ?

விடை. -- குஜராத் , ஆந்திரா

15)  ஜனவரி 4 / 2017ல் உச்ச நீதிமன்றத்தின் 44வது தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள ஜெகதீஷ் சிங் கோஹரின் பதவி காலம் எதுவரை உள்ளது?

விடை - ஆகஸ்ட் 28 / 2017

16) பங்கர் மித்ரா உதவி எண் ( 1800 208 9988 ) எதனோடு தொடர்புடையது ?

விடை -- நெசவாளர்கள் குறைதீர் உதவி எண்

17) " சர்க்கரை நோய்க்கான யோகா " எனும் சர்வதேச மாநாடு எங்கு நடைபெறுகிறது?

விடை - புதுடெல்லி

18) " மக்கள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் " ( Peoples President : A.P.J.Abdul Kalam ) எழுதியவர் யார் ?

விடை -- S.M. கான்

19) பாராலிம்பிக் பதக்க வீரர் மாரியப்பன் வாழ்க்கை வரலாற்றை பற்றி உருவாகவுள்ள திரைப்படம் எது?

விடை. -- MARIYAPPAN

20)  பணமில்லா பரிவர்தனைகள் மேற்கொள்ள டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை எதனுடன் ஒப்பந்தம் செய்துள்ளது?

விடை. -- Mobikwik

21) தோகாவில் நடைபெற்ற கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?

விடை. --- நோவக் ஜோகோவிக்

22) இந்தியா முழுவதும் உள்ள வக்பு வாரியங்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாக அலுவலர்களின் மாநாடு எங்கு நடைபெற்றது?

விடை. --- புதுடெல்லி

23) பிரிட்டன் சார்பில் ஐரோப்பிய யூனியனுக்கான பிரதிநிதியாக / தூதுவராக நியமனம் செய்யப்பட்டுள்ளவர் யார்?

விடை. --- Sir Tim Barrow

24) தங்கள் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்களுக்கு குழு விபத்து காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்துள்ள வங்கி எது?

விடை --- கர்நாடகா வங்கி , Universal Sompo General Insurance நிறுவனத்துடன் இணைந்து KBL Suraksha என்ற குழு விபத்து காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

25) சிறுதொழில் புரிவோருக்கு மூலதனக் கடன் அளிப்பதற்காக , இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி ( SIDBI) எந்த காப்பீடு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது?

விடை. --- LIC

26) சமீபத்தில் ஆஸ்திரேலியாவுடனான ராணுவ உறவுகளை முறித்துக்கொள்வதாக அறிவித்த நாடு எது?

 விடை --- இந்தோனேஷியா

27) 2016ம் ஆண்டின் சிறந்த வார்த்தை ?

விடை ---   Post Truth - தன் இன உணர்வை அல்லது ரத்த உணர்வை மறைமுகமாக தூண்டுவது

28) உதய் திட்டத்தில் தமிழக அரசு கையெழுத்திட்ட நாள் ?

விடை. ---- ஜனவரி 09 / 2017

29) இந்தியாவின் முதல் visual effects , animation , comics , gaming பயிற்சி நிறுவனம் எங்கு அமைக்கப்பட இருக்கிறது?

விடை -- மும்பை

30) அமெரிக்காவின் ராக்பெல்லர் அறக்கட்டளையின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளவர் யார்?

விடை. --- ராஜிவ் J ஷா



17A


அரசுஊழியர்கள் மீதான 17(a)க்கு உட்பட்ட  1)cesure,2)stoppage of increments of pay (without cumulative effect) போன்றவை        அவர்களின் பதவி உயா்வை பாதிக்காது  என  (வழக்கு என் 6150 of 2013 )   உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...