Saturday, 26 May 2018

*கானிங் பிரபு (1856 - 1862) பற்றிய சில தகவல்கள்:-*

🌹 ஆங்கில இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல்
🌹 இந்தியாவின் முதல் வைசிராய்.
🌹 வைசிராய் என்பதன் பொருள் அரசப் பிரதிநிதி
🌹 1857 சிப்பாய் கலகம் இவர் காலத்தில் நடைபெற்றது.
🌹 1858 நவம்பர் 1, ல் பிரிட்டிஷ் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது.
🌹 அவகாசியிலிக் கொள்கை திரும்ப பெறப்பட்டது.
🌹1857, சென்னை, மும்பை, கொல்கத்தா வில் பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்பட்டது.
🌹 1861 இந்திய கவுன்சில் சட்டம் நிறைவேற்ற பட்டது.
🌹 விக்டோரியா பேரரிக்கை அலகாபாத் தர்பாரில் இவரால் வாசிக்கப்பட்டது.
🌹 அலகாபாத் தர்பார் நடைபெற்ற ஆண்டு - 1 நவம்பர் 1858.

*1773 முதல் வங்காள தலைமை ஆளுநர்கள் :-*

🌺1773 ஆம் ஆண்டு ஒழுங்கு முறை சட்டம் நடைமுறையில் இருந்த போது பதவி வகித்த வங்காள தலைமை ஆளுநர்கள் :-
1. வாரன் ஹேஸ்டிங்ஸ் = 1774 - 1785
2. காரன் வாலிஸ் பிரபு =  1786 - 1793
3. சர் ஜான் ஷோர் = 1793 - 1798
4. வெல்லெஸ்ஸி பிரபு = 1798 - 1805
5. ஜார்ஜ் பார்லோ = 1805 - 1807
6. மிண்டோ பிரபு = 1807 - 1813
7. ஹேஸ்டிங்ஸ் பிரபு = 1813 - 1823
8. ஆம்ஹெர்ஸ்ட் பிரபு = 1823 - 1828
9. வில்லியம் பெண்டிங் பிரபு = 1828 - 1833

🌺1833 ஆம் ஆண்டு பட்டயச் சட்டம் நடைமுறையில் இருந்தபோது பதவி வகித்த இந்திய தலைமை ஆளுநர்கள்:-
1. வில்லியம் பெண்டிங் பிரபு = 1833 - 1835
2. சர் சார்லஸ் மெட்காஃப் = 1835 - 1836
3. ஆக்லண்ட் பிரபு = 1836 - 1842
4. ஹார்டிஞ்ச் பிரபு எல்லன்பரோ பிரபு = 1842 - 1844
5. ஹார்டிஞ்ச் பிரபு 1 = 1844 - 1948
6. டல்ஹெசி பிரபு = 1848 - 1856
7. கானிங் பிரபு = 1856 - 1858

🌺 இந்திய பெருங்கலகம் பின் இந்திய தலைமை ஆளுநர் என்ற பதவி வைசிராய் என மாற்றப்பட்டது வைசிராய் என்பதன் பொருள் (அரசு பிரதிநிதி)
1. கானிங் பிரபு = 1858 - 1862
2. எல்ஜின் பிரபு = 1862 - 1863
3. லாரன்ஸ் பிரபு = 1863 - 1869
4. மேயோ பிரபு = 1869 - 1872
5. நார்த் பரூக் பிரபு = 1872 - 1876
6. லிட்டன் பிரபு = 1876 - 1880
7. ரிப்பன் பிரபு = 1880 - 1884
8. டப்ரின் பிரபு = 1884 - 1888
9. லேண்ட்ஸ் டௌன் பிரபு = 1888 - 1894
10. எல்ஜின் பிரபு = 1894 - 1899
11. கர்சன் பிரபு = 1899 - 1905
12. மிண்டோ பிரபு = 1905 - 1910
13. ஹார்டிஞ்ச் பிரபு = 1910 - 1916
14. செம்ஸ் போர்டு பிரபு = 1916 - 1921
15. ரீடிங் பிரபு = 1921 - 1926
16. இர்வின் பிரபு = 1926 - 1931
17. வெல்லிங்டன் பிரபு = 1931 - 1936
18. லின்லித்கொ பிரபு = 1936 - 1944
19. வேவல் பிரபு = 1944 - 1947
20. மவுண்ட் பேட்டன் பிரபு = 24 மார்ச் 1947 - 15 ஆகஸ்ட் 1947

*காரன் வாலிஸ் பிரபு (1786 - 1793) பற்றிய சில தகவல்கள்:-*

🌸 நிலையான நிலவரி திட்டம் (1793) கொண்டுவந்தவர்
🌸 நிலையான நிலவரி திட்டம் வேறு பெயர் ஜமீன்தாரி முறை
🌸 தகுதியின் அடிப்படையிலேயே நியமனங்கள் செய்யப்பட வேண்டும் என்ற கொள்கையை தொடங்கினார்.
🌸 ஜார்ஜ் பார்லோ என்பவர் உதவியுடன் ஒரு முழுமையான சட்டத் தொகுப்பு உருவாக்கினார்
🌸 ஜார்ஜ் பார்லோ சட்டத் தொகுப்பு 'மாண்டெஸ் கியூ' வின் அதிகாரப் பகிர்வு கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது.
🌸 மூன்றாம் மைசூர் போர் முடிவில் திப்பு சுல்தானோடு ஸ்ரீரங்கப்பட்டணம் உடன்படிக்கை (1792) செய்து கொண்டார்.
🌸 மாவட்ட நீதிபதி பதவியை உருவாக்கினார்.
🌸 தற்கால இந்திய ஆட்சி பணியின் தந்தை என போற்றப்பட்டார்.
🌸 காவல்துறை சீர்திருத்தம் ஒவ்வொரு மாவட்டமும் 'தாணா' என்ற காவல் சரகமாக பிரிக்கப்பட்டது.
🌸 ஒவ்வொரு 'தாணா' வும் தரோகா எனப்பட்ட இந்திய அதிகாரியின் கட்டுப்பாட்டில் விடப்பட்டது.

*வெல்லெஸ்லி பிரபு (1798-1805) பற்றிய சில தகவல்கள்:-*

🌸 இவரது முழு பெயர் ரிச்சர்ட் கோலி  வெல்லெஸ்லி
🌸 'வங்கப்புலி' என்று தன்னை அழைத்துக் கொண்டார்
🌸 இந்தியாவில் பிரிட்டிஷ் அரசு என்ற நிலையை பிரிட்டிஷ் இந்திய பேரரசு என மாற்றினார்
🌸 துணை படைத்திட்டத்தை (1798) முதன் முதலில் ஹைதராபாத்தில் அறிமுகபடுத்தினார்
🌸 இவர் காலத்தில் ஏற்பட்ட முக்கிய போர்கள் நான்காம் மைசூர் போர்(1799),  இரண்டாம் மராட்டிய போர் (1803-1805)
🌸 இவரின் துணைப்படை திட்டத்தின் மகுடம் என கருதப்படுவது, பசீல் உடன்படிக்கை (1802)
🌸 பசீல் உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர் பேன்வா இரண்டாம் பாஜிராவ்
🌸 இவர் போன்ஸ்லேவுடன் செய்து கொண்ட துணைப்படை ஒப்பந்தம் தியோகன் உடன்படிக்கை
🌸 வெல்லெஸ்லி இந்தியாவுடன் செய்து கொண்ட துணைப்படை ஒப்பந்தம் சுர்ஜி. அர்ஜுன்கான் உடன்படிக்கை
🌸 'ஆங்கில கிழக்கிந்திய வணிகக் குழுவின் அக்பர்' என அழைக்கப்பட்டார்.
🌸 ஆங்கில ஆட்சியை விரிவுபடுத்த கையாண்ட முறைகள் மூன்று அவை
1. துணைப்படை திட்டம்
2. போரின் மூலம் நாடுகளைக் கைப்பற்றுதல்
3. நாடுகளை இணைத்தல்.

*டல்ஹவுசி பிரபு (1848 - 1856) பற்றிய சில தகவல்கள்:-*

💐 இவர் காலத்தில் முக்கிய நிகழ்வுகள்:
1. அவகாசியிலிக் கொள்கை (Doctrine of Lapse)
2. இரண்டாம் சீக்கிய போர் -1849
3. இரண்டாம் பர்மியப் போர் - 1852
4. இரயில் பாதை அறிமுகம் - 1853
5. தபால், தந்தி அறிமுகம்
6. சார்லஸ் வுட் கல்வி அறிக்கை - 1854
7. பொதுப்பணி துறை

💐 அவகாசியிலிக் கொள்கைப்படி வாரிசு இல்லாத அரசர்களின் நாடுகள் பிரிட்டிஷ் வசமாயின
💐 அவகாசியிலிக் கொள்கை படி பிடிக்கப்பட்ட நாடுகள் - சகாரா (1848), ஜான்சி, நாக்பூர் (1854)
💐 அவகாசியிலிக் கொள்கை படி இறுதியில் பிடிக்கப்பட்ட நாடு - அயோத்தி
💐 1849 இரண்டாம் சீக்கியப்போர் முடிவில் பஞ்சாப் இணைக்கப்பட்டது.
💐 1859 ஆம் ஆண்டு சர்ஜான் லாரன்ஸ் பஞ்சாபின் துணை ஆளுநராக பதவியேற்றார்.
💐 1852 இரண்டாம் பர்மியப் போர் முடிவில், பர்மா இணைக்கப்பட்டது.
💐 பர்மா ஆணையராக நியமனம் செய்தவர் மேஜர் ஆர்தர் பைரே
💐 இந்தியாவின் முதல் இரும்பு பாதை 1953 பம்பாய் இருந்து தானே வரை (34 கி.மீ.) போடப்பட்டது.
💐 இந்தியாவின் இரண்டாவது இரும்பு பாதை 1854 ஹௌரா வில் இருந்து ராணிக்கஞ்ச் வரை போடப்பட்டது.
💐 1856 - சென்னை இருந்து அரக்கோணம் வரை போடப்பட்டது.
💐 1853 - கல்கத்தா முதல் ஆக்ரா வரை தந்தி வசதி அமைக்கப்பட்டது.
💐 1852 - ஆம் ஆண்டு ' ஓ ஷாகன்னசே' என்பவர் தந்தி துறையின் முக்கிய கண்காணிபரபாளராக நியமனம்  செய்யப்பட்டது.
💐 1854 அரை அணா அஞ்சல் அட்டை அறிமுகம் செய்யப்பட்டது.
💐 இந்தியாவின் முதல் அஞ்சல் தலை 1852 கராச்சியில் வெளியிடப்பட்டது.
💐 1854 ஆம் ஆண்டு சார்லஸ் வுட்  கல்வி அறிக்கை ' Woods Dispatch' வெளியிடப்பட்டது.
💐 சிம்லா கோடைக்கால தலைநகரமாக்கப்பட்டது.
💐 ரூர்க்கியில் 1847 ஆம் ஆண்டு பொறியியல் கல்லூரி துவங்கப்பட்டது.
💐 1856 விதவை மறுமணம் சட்டம் ( Widow Remarriage Act - 1856) இயற்றப்பட்டது.
💐 விதவை மறுமணம் சட்டம் இயற்ற உறுதுணையாக இருந்தவர் - ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
💐  பொதுப்பணித்துறை ஆரம்பிக்கப்பட்டது
💐 கராச்சி, பம்பாய், கல்கத்தா துறைமுகம் மேம்படுத்தப்பட்டது
💐 1853 ICS தேர்வு துவக்கப்பட்டது.

*வில்லியம் பெண்டிங் பிரபு (1828 - 1835) பற்றிய சில தகவல்கள்:-*

🌺 1803 ஆம் ஆண்டு சென்னை ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
🌺 1806 ஆம் ஆண்டு வேலூர் கலகம் காரணமாக திருப்பி அழைக்கப்பட்டார்.
🌺 1828 தலைமை ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
🌺 இவர் காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் :-
1. சதி ஒழிப்பு -1829
2. தக்கர் ஒழிப்பு - 1830
3. பெண் சிசுக் கொலை தடுத்தல்
4. 1833 - ஆம் ஆண்டு பட்டைய சட்டம்
5. 1833 - ஆம் ஆண்டு மகல்வாரி முறை அறிமுகம்
6. 1835 - ஆம் ஆண்டு ஆங்கில மொழி கல்வி அறிமுகம்

🌺 டிசம்பர் 4, 1829 விதிமுறை 17 சட்டத்தின் படி சதி ஒழிக்கப்பட்டது.
🌺 சதி ஒழிப்பிற்கு உறுதுணையாக இருந்தவர், ராஜாராம் மோகன் ராய்.
🌺 சதி ஒழிப்பு 1830 சென்னை, பம்பாய் மாகாணங்களில் விரிவுபடுத்தப்பட்டது.
🌺 தக்கர்களை ஒழிக்க உறுதுணையாக இருந்தவர் - சர் வில்லியம் சீலிமேன்.
🌺 முதல் சட்ட உறுப்பினர் - டி.பி. மெக்காலே
🌺 இந்திய தண்டனை சட்டம் மெக்காலேவால் எழுதப்பட்டது.
🌺 மெக்காலே கல்வி அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு - 22 பிப்ரவரி 1833
🌺 ஆங்கிலம் இந்தியாவின் பயிற்சி மொழியாக்கப்பட்ட ஆண்டு - 7 மார்ச் 1835
🌺 இந்தியாவில் முதல் மருத்துவ கல்லூரி 28 ஜனவரி 1835  கல்கத்தாவில் ஆரம்பிக்கப்பட்டது.
🌺 இந்தியாவில் இரண்டாவது மருத்துவ கல்லூரி சென்னை,  2 பிப்ரவரி 1835
🌺 மகல்வாரி முறை அறிமுகம் - 1833
🌺 மகள் என்றால் கிராமம். கிராமமே அரசாங்கத்திற்கு வரி செலுத்தும் முறை மகல்(வாரி) முறை
🌺 இராணுவத் துறையில், இரட்டை படி பேட்டா முறையை ரத்து செய்தார்

*ராபர்ட் கிளைவ் பற்றிய சில தகவல்கள்:-*

🌷 வங்காளத்தில் முதல் கவர்னர்
🌷 வங்காளத்தில் இரண்டு முறை கவர்னராக இருந்தவர் (1757-1760) மற்றும் (1765-1767)
🌷 'இந்தியாவை வென்றவர்' என்று அழைக்கப்பட்டார்
🌷 ஆற்காட்டு வீரர் என்று அழைக்கப்பட்டார்
🌷 வங்காளத்தில் இரட்டை ஆட்சிமுறை (Dwal Government of Bengal System) கொண்டுவந்தவர்
🌷 இரட்டை ஆட்சி எனபது வரி வசூல் உட்பட உண்மையான அதிகாரங்கள் ஆங்கிலேயர் இடமும் அதே நேரத்தில் பொறுப்புகள் அனைத்தும் வங்காள நவாபிடமும் இருந்த்து
🌷 கம்பனியில் எழுத்தராக இந்தியாவுக்கு வந்து ராணுவ பணியில் இணைந்து பின் கவர்னராக உயர்ந்தவர்
🌷 இந்தியாவில் ஆங்கில ஆட்சிக்கு அடித்தளமிட்டவர்.
🌷 1774 இங்கிலாந்து திரும்பிய பின் தற்கொலை செய்து கொண்டார்.

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...