Friday, 13 July 2018

*மரபும்_பரிணமாமும்*

*  மெண்டல் தோட்டப் பட்டாணி (பைசம் சட்டைவம்) செடியில் 7 வகையான மாற்று உருவ வேறுபாடுகளை கண்டறிந்தார்.
*  ஆதி மனிதன் தோன்றியது - ஆப்பிரிக்கா
*  பாரம்பரியத் தன்மைக் கொண்டது -  மரபணு மாற்றம் செய்யப்பட்ட விந்தணு
*  இயற்கைத் தேர்வு கோட்பாட்டை வெளியிட்டவர் - சார்லஸ் டார்வின்
*  உடற்செல் ஜீன் சிகிச்சை முறை என்பது உடற்செல்லில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
*  பண்பு கடத்தலில் பங்கு பெறும் மரபுப் பொருள் - DNA
*  பாரம்பரிய கடத்துதலை முதன்முதலாக வெளியிட்டவர் - கிரிகர் ஜோகன் மெண்டல்
*  ஒரு பண்பின் இரு வேறுபட்ட பண்புகளைக் கொண்டுள்ள ஜீன் அமைப்புத் தன்மை - அல்லீல்கள்
*  உயிரித் தொழில்நுட்ப முறையில் பெறப்படும் வைட்டமின் டி12 குணப்படுத்தும் நோய் -  பெர்னீயஸ் இரத்த சோகை.
*  உடலுறுப்புப் பயன்பாடு பற்றிய விதியை விளக்கியவர் - லாமார்க்
*  உடல் மூலச் செல்கள் எவற்றில் இருந்து பெறப்படுகிறது? - எலும்பு மஜ்ஜை
*  வைரஸ்களுக்கு எதிரான புரதம் - இன்டர்பெரான்
*  நைட்ரஜன் நிலைநிறுத்தப் பயன்படுவது - நிஃப் ஜீன்
*  டி.என்.ஏ.வின் வெட்டப்பட்ட துண்டங்களை ஒட்ட வைக்கப் பயன்படும் மூலக்கூறு பசை - DNA லிகேஸ்
*  வினிகர் உற்பத்தி செய்யப் பயன்படும் அமிலம் - அசிட்டிக் அமிலம்
*  ஸ்டிராய்டுகள் - லிப்பிடுகளிலிருந்து பெறப்பட்டவைகளாகும்.
*  புற்று நோய்க்கு எதிராக பயன்படும் ஓரினச் செல் எதிர்ப்பு பொருள் - மானோ குளோனியல் எதிர்ப்புப் பொருள்.
*  இன்சுலினை உற்பத்தி செய்யும் செல்கள் - பீட்டா செல்கள்.
*  இரத்த குளுக்கோஸ் அளவை கணக்கிடப் பயன்படுவது - உயிரி உணரி
*  உயிரியல் கணிப்பொறிகளை உருவாக்கப் பயன்படுவது - உயிரிச்சிப்புகள்
*  அல்லீல் என்பது ஒரே ஜீனின் மாற்றுவெளிப்பாடு ஆகும்.
*  அல்லீலோ மார்புகள் என்பது அல்லீல்களுடைய எதிர்ப்பண்பமைப்பு ஆகும்
*  ஜூன் காரணிகள் இயற்பியல் சார்ந்த பாரம்பரியக் காரணிகள் ஆகும்.
*  புறத்தோற்ற பண்புகளுக்கு பீனோடைப் என்று பெயர்
*  உடலுறுப்பு பயன்பாடு விதியை கூறியவர் - ஜீன் பாப்தீஸ் லாமார்க்
*  ரெஸ்ட்ரிகீன் எண்டோ நியூக்ளியேஸ் வரையறை நொதிகள் - னுயேயு வெட்ட உதவுகிறது
*  மூலச் செல் என்பது - (மாறுபாடு அடையாத செல் குழுமம்)
*  நீரிழிவு நோய் இன்சுலின் செலுத்துதல் மூலம் குணமடைகிறது
*  உயிரியல் வினையூக்கி என்றழைக்கப்படுபவை - நொதிகள்
*  மனித சிற்றினத்தின் பெயர் - ஹோமோசெபியன்
*  மனித முன்னோடிகள் - ஹோமினிட்டுகள்
*  DNA தொழில் நுட்பம் - மரபுப் பொறியியல் என்றழைக்கப்படுகிறது.
*  மெண்டலின் ஒரு பண்பு கலப்பு விகிதம் - 3:1

*பதிற்றுப்பத்து (+1 தமிழ் புதிய புத்தகம்)*

===============================
1) பசியும் நோயும் பகையும் இல்லாதிருப்பதே சிறந்த நாடு – என்று கூறுபவர் வள்ளுவர்
===============================
2) இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பொற்றோர் – உதியன் சேரலாதன் & வேண்மாள்
===============================
3) வடக்கே இமயமலை வரை படையெடுத்துச் சென்று வெற்றி பெற்று இமயத்தில் வில்லினை பொறித்தவன் - இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
===============================
4) தமிழின் சிறப்பை உலகறியச் செய்தவன் - இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
===============================
5) கடம்பர்களை வென்று தன் வீரர்களுக்கு கவசமாக விளங்கியவன் - இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
===============================
6) சேரலாதனின் நாடு காத்தற் சிறப்பையும் கொடைச் சிறப்பையும் புகழ்ந்த புலவர் – குமட்டூர் கண்ணனார் (இரண்டாம் பத்து)
===============================
7) வஞ்சி தூக்கே செந்தூக் கியற்றே – தொல்காப்பியம்
===============================
8) வண்ணம் தாமே நாலைந் தென்ப – தொல்காப்பியம்
===============================
9) ஒழுகு வண்ண மோசயி னொழுகும் – தொல்காப்பியம்
===============================
10) பதிற்றுப்பத்து புறத்திணை வகையை சார்ந்த நூல்
===============================
11) சேர மன்னர்கள் பத்துபேரின் சிறப்புகளை எடுத்து இயம்பும் நூல் பதிற்றுப்பத்து
===============================
12) பாடாண் திணையில் அமைந்துள்ள நூல் இது
===============================
13) முதல் பத்தும் இறுதிப் பத்தும் கிடைக்கப்பெறவில்லை
===============================
14) ஒவ்வொரு பாடலின் பின்னும் துறை, வண்ணம், தூக்கு, பாடலின் பெயர் இடம்பெற்றுள்ள நூல்
===============================
15) பாடலில் வரும் சிறந்த சொற்றொடர் பாடலுக்குத் தலைப்பாக கொடுக்கப்பட்டுள்ள நூல்
===============================
16) நிரைய வெள்ளம் என்ற தலைப்பு – படை வெள்ளம் (வீரர்கள்)
===============================
17) பதிற்றுப்பத்தின் இரண்டாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் - இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
===============================
18) இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனை பாடிய புலவர் – குமட்டூர் கண்ணனார்
===============================
19) இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனை பாடியதால் புலவர் குமட்டூர் கண்ணனார் பெற்ற பரிசு – உம்பர்காட்டில் 500 ஊர்கள் & தென்னாட்டின் வருவாயுள் பாதி
===============================
TNPSC OCEAN - TAMIL NOTES
===============================
சேகர் சுபா டி
===============================

Wednesday, 11 July 2018

*UMANG Mobile App*

தமிழகம் முழுவதும் இருப்பிடம், வருமானம், சாதி சான்றிதழ்கள் பெற மொபைல் ஆப் மூலம் விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் மின்னாளுமை திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் வழியாக பொதுமக்களுக்கு சாதி, வருமான, இருப்பிட, முதல் பட்டதாரி சான்றிதழ் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண் என்பதற்கான சான்றிதழ் ஆகிய 5 சான்றிதழ்கள் முதலில் வழங்கப்பட்டு வந்தது. பின்னர் விவசாய வருமான சான்றிதழ், சிறு, குறு விவசாயிகளுக்கான சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், விதவைச்சான்றிதழ், வேலையின்மை சான்றிதழ், குடும்ப குடிப்பெயர்வு சான்றிதழ், கல்வி ஆவணங்கள் பேரிடரால் தொலைந்தமைக்கான சான்றிதழ்,

ஆண் குழந்தை இன்மை சான்றிதழ், திருமணமாகவில்லை என்பதற்கான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், செல்வநிலை சான்றிதழ், அடகு வணிகர் உரிமம், வட்டிக்கு பணம் கொடுப்போர் உரிமம், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றிதழ் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட சான்றுகள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இ-சேவை மையங்களில் அடிக்கடி சர்வர் பழுது காரணமாக பொதுமக்கள் சான்றிதழ் விண்ணப்பிக்க முடியாமலும், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் ‘UMANG’ என்ற ஆப்பை போனில் டவுன்லோடு செய்து அதன் மூலம் சாதி, இருப்பிட, வருமான சான்றிதழ் பெற பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தின் நிலை மற்றும் சான்றிதழ் பதிவு இறக்கம் செய்து கொள்ளலாம்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘UMANG ஆப்பில் ஆதார் அடிப்படை மட்டும் விண்ணப்பிக்க முடியும். முதலில் விண்ணப்பதாரின் முழு விவரங்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும். பின்னர் சாதி, வருமானம், இருப்பிடம் சான்றுகள் விண்ணப்பிக்க முடியும். அதில் விண்ணப்பதாரின் ஆவணங்கள் புகைப்படம் அல்லது பிடிஎப் பைலாக பதிவேற்றம் செய்யலாம். புதியதாக நபர்களின் ஆதார் எண்ணை இணைத்து அதன்பிறகு சான்றிதழ் விண்ணப்பிக்கலாம். இதேபோல், ஆதார் எண் அடிப்படையில் சான்றிதழ் எளிமையாக பெறலாம்’ என்றனர்.

Monday, 9 July 2018

*"தமிழ்நாடு லோக் ஆயுக்தா மசோதா 2018"*

- நிறைவேற்றப்பட்ட நாள்- 09-07-2018
- அமைப்பு- 1+4 (1 தலைவர் மற்றும் 4 உறுப்பினர்கள்)
- தலைவர் தகுதி: லோக் ஆயுக்தாவின் தலைவர் உயர்நீதிமன்றத்தின் தற்போதைய அல்லது ஓய்வுபெற்ற நீதிபதியாக இருப்பார், அல்லது 25 ஆண்டுகள் பொது நிர்வாகத்திலோ, நீதித்துறையில் 25 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராகவோ இருப்பார்.
- உறுப்பினர்கள் நியமனம்:
- ஒரு உறுப்பினர் உயர்நீதிமன்ற நீதிபதியாகவோ, உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியாகவோ, நீதித்துறையில் 25 ஆண்டுகால அனுபவம் கொண்டவராகவோ இருப்பார்.
- லோக் ஆயுக்தாவின் நான்கு உறுப்பினர்களில் 2 பேர் நீதித்துறையை சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.
- ஒரு உறுப்பினர் - நீதித்துறையை சேராத உறுப்பினர்.
- லோக்ஆயுக்தாவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஆளுநர் நியமனம் செய்வார்.
- லோக் ஆயுக்தாவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை பரிந்துரைக்க தனியே குழு இருக்கும்.
- பரிந்துரை குழுவின் தலைவராக முதலமைச்சரும், உறுப்பினராக பேரவைத்தலைவரும், எதிர்க்கட்சித்தலைவரும் இருப்பர்.
- ஊழல் தடுப்புக்கொள்கையில் பொதுநிர்வாகத்தில், 25 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்ட நீதித்துறையை சாராத மேலும் ஒரு உறுப்பினர் இருப்பார்.
- லோக் ஆயுக்தாவின் தலைவர் அல்லது உறுப்பினர் நாடாளுமன்றத்தின் ஒரு உறுப்பினராகவோ அல்லது மாநில அல்லது மத்திய அரசின் ஆட்சி பகுதி ஒன்றின் சட்டமன்ற உறுப்பினராகவோ இருப்பார்.
- லோக் ஆயுக்தாவின் தலைவர் அல்லது உறுப்பினர்கள் குற்றம் எதற்காகவும் தண்டனை பெறாதவராகவும், பணியில் சேரும் தேதியன்று 45 வயதுக்கு மேற்பட்டவராகவோ இருப்பார்கள்.

"லோக் ஆயுக்தாவின் பணிகள்":
- பொது ஊழியர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை லோக் ஆயுக்தா விசாரிக்கும்.
- லோக் ஆயுக்தா வரம்புக்குள்  முதல்வர் உட்பட அனைத்து அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களும் அடங்குவர்
- லோக் ஆயுக்தாவில் தவறாக புகார் அளிப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம்மும் ஒருவருடம் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும்.


*தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள லோக் ஆயுக்தா சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:*

*(Group 1,2 Main exam Related)*


*லோக் ஆயுக்தா என்றால் என்ன?*


பொது ஊழியர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் அமைப்பு.


*எத்தனை உறுப்பினர்கள்?*


ஒரு தலைவர் மற்றும் 4 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். நான்கில் 2 பேர் நீதித்துறையை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். 


*உறுப்பினர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?*


முதலமைச்சர், சட்டமன்ற சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் இணைந்து தேர்ந்தெடுப்பார்கள். அப்படி தேர்வானவர்கள் ஆளுநரால் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்படுவார்கள்.


*யார் லோகாயுக்தா தலைவர்/உறுப்பினர் ஆக முடியும்?*


பதவியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி 


(அல்லது) ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி


(அல்லது) ஊழல் தடுப்பு/பொது நிர்வாகத்தில் 25 ஆண்டு அனுபவம் கொண்ட நபர்


*வேறு ஏதாவது வரையறைகள் உண்டா?*


எந்த குற்றத்திற்காகவும் தண்டிக்கப்பட்ட குற்றவாளியாக இருக்க கூடாதுநாடாளுமன்ற / சட்டமன்ற உறுப்பினராக இருக்க கூடாதுஅரசு பணியிலிருந்து நீக்கப்பட்டவராக இருக்க கூடாதுவேறு எந்த ஆதாய பதவிகளையும் (Office of Profit) வகிக்கக் கூடாது45 வயதிற்கு குறைவாகவோ 70 வயதிற்கு மேலோ இருக்க கூடாது


*உறுப்பினர்களின் பதவிக்காலம் எவ்வளவு?*


5 ஆண்டுகள்.


*லோக் ஆயுக்தா அமைப்பில் வேறு யாரேல்லாம் இருப்பார்கள்?*


லோக் ஆயுக்தா செயலாளர் மற்றும் விசாரணை இயக்குனர் : அரசு கொடுக்கும் அதிகாரிகள் பட்டியலிலிருந்து லோக் ஆயுக்தா தலைவரால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.இவர்கள் தவிர, இந்த அமைப்பு தடையின்றி செயல்படுவதற்கு தேவையான அலுவர்களை மாநில அரசு கொடுக்க வேண்டும்


*லோக் ஆயுக்தா யாரையெல்லாம் விசாரிக்கலாம்?*


இன்னாள் மற்றும் முன்னாள் முதலமைச்சர்இன்னாள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள்இன்னாள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்மாநில அரசு ஊழியர்கள்அரசால் நிர்வகிக்கப்படும் அல்லது அரசின் நிதி பெறும் அமைப்புகள் / வாரியங்கள் / சங்கங்கள் / தன்னாட்சி அமைப்புகள்


இவர்கள் தவிர, பொது ஊழியர்களை ஊழல் செய்ய தூண்டும் அல்லது துணை போகும் எந்த நபரையும் விசாரிக்கலாம்.


*வேறு என்னென்ன அதிகாரங்கள் உண்டு?*


எந்த விசாரணையும் தொடங்கும் முன் யாரிடமும் முன் அனுமதி பெற தேவையில்லைவிசாரணையின் தேவைக்கேற்ப மாநில அரசின் எந்த அலுவலரையும் பயன்படுத்திக்கொள்ளலாம்யாரை வேண்டுமானாலும் நேரில் வரவழைத்து விசாரிக்கலாம்எந்த ஆவணத்தையும் கொடுக்கும்படி அரசிடம் கோரலாம்


*எதையெல்லாம் விசாரிக்கக் கூடாது?*


இந்திய பாதுகாப்பு தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள்பொது ஊழியர்களின் பணி நியமனம், பணி மாறுதல், பணி நீக்கம், பணி ஓய்வுவழங்கப்படும் வெகுமதிகள் மற்றும் பரிசுகள்உள்ளாட்சி நிதி தணிக்கையாளரின் கீழ் வரும் நபர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள்லோக் ஆயுக்தா அனுமதியுடன் பொது விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட விஷயங்கள்லோக் ஆயுக்தா அமைவதற்கு முன்பு தொடங்கப்பட்ட விசாரணைகள்துன்புறுத்தல் அல்லது தேவையற்ற கால தாமதத்தை தவிர, வேறு எந்த காரணத்திற்கும் அரசு ஏற்படுத்திக்கொள்ளும் வர்த்தக ரீதியான ஒப்பந்தங்களை விசாரிக்க முடியாது.


*தானாக முன்வந்து (suo motu) புகார்களை பதிவு செய்ய முடியுமா? *


சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.


*வரும் புகார்களை எப்படி விசாரிப்பார்கள்?*


புகார்களை விசாரணை செய்ய லோக் ஆயுக்தாவிற்கு தனி விசாரணைப் பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும். அது செயல்பாட்டிற்கு வரும் வரை மாநில அரசே விசாரணையில் உதவும். அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான புகார்களை இந்த விசாரணைப்பிரிவு புலனாய்வு செய்யும். அதிகாரிகளுக்கு எதிரான புகார்கள் லஞ்ச ஒழிப்புத் துறையால் விசாரிக்கப்படும். 


*விசாரணை நடக்கும் போது குற்றம்சாட்டப்பட்டவரை பணியிடை நீக்கம் செய்ய முடியுமா?*


அப்படி ஒரு தேவை எழுவதாக லோக் ஆயுக்தா கருதினால், அரசு ஊழியரின் மேல் அதிகாரிக்கு பரிந்துரை செய்யலாம்.  அந்த பரிந்துரையை, எழுத்துப்பூர்வ வாதங்களை அளித்து நிராகரிக்க அரசுக்கு உரிமை உண்டு. இந்த சரத்து முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பொறுந்தாது.


*விசாரணை முடிந்த பின் என்ன நடக்கும்?*


விசாரணைப்பிரிவு / லஞ்ச ஒழிப்புத்துறை தன் விரிவான அறிக்கையை லோக் ஆயுக்தாவிடம் சமர்ப்பிக்கும். அந்த அறிக்கையை ஆராய்ந்து புகார் சரியானதா இல்லையா என லோக் ஆயுக்தா உறுப்பினர்கள் தீர்மானிப்பார்கள். புகாருக்கு உள்ளானவரும் தன் வாதங்களை வைக்க வாய்ப்பு வழங்கப்படும். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்மந்தப்பட்டவர் மீது அதிகாரம் கொண்ட அமைப்பிற்கு லோக் ஆயுக்தா பரிந்துரை செய்யும். 


*நடவடிக்கை எடுக்க அதிகாரம் கொண்ட அமைப்பு எது?*


அரசு ஊழியருக்கு தமிழக அரசு, 


சட்டமன்ற உறுப்பினருக்கு சபாநாயகர்,


அமைச்சர்களுக்கு முதலமைச்சர்,


முதலமைச்சருக்கு ஆளுநர்.


*புகார் பொய் என்று நிரூபிக்கப்பட்டால்?*


தவறான / அற்பத்தனமான புகார்கள் கொடுப்பவர்களுக்கு அதிகபட்சம் 1 ஆண்டு சிறை மற்றும் 1 லட்சம் அபராதம் விதிக்கலாம்போலி புகார் அளித்தவர் பாதிக்கப்பட்ட பொது ஊழியருக்கு இழப்பீடும் வழங்க வேண்டும்நல்லெண்ண அடிப்படையில் கொடுக்கப்பட்ட புகார்களுக்கு இது பொருந்தாது


*லோக் ஆயுக்தாவிற்கு எதிராகவே புகார் வந்தால்?*


அதை லோக் ஆயுக்தா விசாரிக்காது. லோக் ஆயுக்தா உறுப்பினர்களை பணி நீக்கம் செய்ய தனி விதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.


*அது என்ன விதிகள்?*


நீதிபதிகளை பணிநீக்கம் செய்வது போன்ற நீண்ட நடைமுறை :


45 சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்துடன் புகார் கொடுக்கப்பட வேண்டும். ஆளுநர் உத்தரவின் பேரில் புகாரை உயர்நீதிமன்றம் விசாரிக்கும்.நிரூபிக்கப்பட்டால், பணி நீக்க ஆணையை ஆளுநர் வெளியிடுவார்.

Sunday, 8 July 2018

*கம்ப்யூட்டர்*

கணிப்பொறி பற்றிய யாம் அறிந்த சில தகவல்கள்:-
💻 கம்ப்யூட்டர் கண்டறிந்தவர் - சார்லஸ் பாபேஜ்
💻 கம்ப்யூட்டர் எந்திர பாகங்கள் பற்றிய குறிப்பது - ஹார்டுவேர் (வன்பொருள்)
💻 கம்ப்யூட்டர் புரோக்ராம்  பற்றிய குறிப்பது - சாப்ட்வேர் (மென்பொருள்)
💻 கணினியின் நினைவாற்றல் அலகு - பைட்
💻 ஒரு பிட் என்பது - 0 அல்லது 1
💻 ஒரு பைட் என்பது - 8 பிட்டுகள் (Bits)
💻 4 பிட்டுகள் என்பது - 1 நிப்பில் (nibble)
💻 எழுத்துக்கள், எண்கள், குறியீட்டுகள் அனைத்தும் எவ்வாறு கூறப்படுகிறது - கேரக்டர்
💻 ஒரு கிலோபைட் என்பது - 1024 பைட்டுகள்
💻 கணினியில் எந்த இரண்டு எண்கள் மட்டுமே பயன்படுகிறது - 0, 1
💻 0, 1 எவ்வாறு அழைக்கப்படுகிறது - இயந்திர மொழி
💻 கணினியில் எல்லா பதிவுகளும் எவ்வாறு சேர்த்து வைக்கும் - 0 அல்லது 1
💻 கணினியில் மேல்மட்ட மொழிகள் - FORTRAN, BASIC, COBOT, Java, Visual Basic
💻 முதல் முதலில் உருவாக்கப்பட்ட கணிப்பொறி மொழி - FORTRAN
💻 கணினி சிப் செய்ய பயன்படுவது - சிலிக்கான்

💻 பைட்டுகள்:-
📍கிலோ பைட் - K 2^10
📍மெகா பைட் - M 2^20
📍கிகா பைட் - G 2^30
📍டெரா பைட் - T 2^40
📍பீடா பைட் - P 2^50
📍எக்ஸா பைட் - E 2^60
📍ஸிட்டா பைட் - Z 2^70
📍யோட்டா பைட் - Y 2^80

*எரிமலைகள்*

நாடுகள் அமைந்துள்ள எரிமலைகள் பற்றிய சில தகவல்கள்:-
🌋 மௌன்ட் விசுவியஸ் - இத்தாலி
🌋 கரகாட்டோ - இந்தோனேசிய
🌋 ஃபுஜி - மேற்கிந்திய தீவுகள்
🌋 மௌனலோவா - ஹவாய்
🌋 பரிக்குட்டிகள் - மெக்சிக்கோ
🌋 மேயோன் - பிலிப்பைன்ஸ்
🌋 கடபாக்ஸி - ஈக்குவடார்
🌋 மராப்பி - சுமத்ரா
🌋 ஆகங் - பாலித் தீவு
🌋 கிளிமஞ்சாரோ - ஆப்ரிக்கா
🌋 ஸ்ட்ராம்போலி - மெடிட்ரேனியா (லைட் ஹவுஸ்)
🌋 பாரன் - அந்தமான் தீவுகள்

*தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் அதில் பாயும் ஆறுகள் பற்றிய சில தகவல்கள் :- *

💢 அரியலூர் - கொள்ளிடம், மருதியாறு, வெள்ளாறு
💢 இராமநாதபுரம் - வைகை, குண்டாறு
💢 ஈரோடு - காவிரி, பவானி, அமராவதி, நொய்யல்
💢 கடலூர் - கெடிலம், பெண்ணார், வெள்ளாறு
💢 கரூர் - காவிரி, பவானி, அமராவதி, நொய்யல், குடகனாறு
💢 கன்னியாகுமரி - கோதையாறு, பறளியாறு, பழையாறு, முல்லையாறு, வள்ளியாறு
💢 காஞ்சிபுரம் - பாலாறு, செய்யாறு, அடையாறு
💢 கிருஷ்ணகிரி - காவிரி, தென்பெண்ணை, வன்னியாறு, மார்க்கண்டா ஆறு
💢 கோயம்புத்தூர் - சிறுவாணி, அமராவதி
💢 சிவகங்கை - வைகை, பாம்பாறு, தென்னாறு, சிறுகாணியாறு
💢 சென்னை - கூவம், அடையாறு
💢 சேலம் - காவிரி, மணிமுத்தாறு, விசிஷ்ட நதி
💢 தஞ்சாவூர் - காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு, குடமுருட்டி, பாமினியாறு, அரசலாறு
💢 தர்மபுரி - காவிரி, தென்பெண்ணை
💢 திண்டுக்கல் - மருதாநதி, வரதமாநதி, பொருந்தலாறு, பரப்பலாறு, குதிரையாறு
💢 திருச்சிராப்பள்ளி - காவிரி, அரியார், கோரையாறு, அய்யாறு, நந்தலாறு, உப்பாறு
💢 திருநெல்வேலி - தாமிரபரணி, சிற்றாறு, நம்பியாறு, பச்சையாறு, கொடுமுடியாறு, கடனாநதி, இராமாநதி
💢 திருப்பூர் - நொய்யல், அமராவதி
💢 திருவண்ணாமலை - செய்யாறு, தென்பெண்ணை, கமண்டல நாகநதி
💢 திருவள்ளூர் - ஆரணியாறு, கொசஸ்தலை ஆறு, கூவம்
💢 தூத்துக்குடி - தாமிரபரணி, மணிமுத்தாறு, ஜம்பு நதி
💢 நாகப்பட்டினம் - காவிரி, வெண்ணாறு
💢 நாமக்கல் - காவிரி
💢 நீலகிரி - பைக்காரா
💢 பெரம்பலூர் - வெள்ளாறு, கொள்ளிடம்
💢 மதுரை - வைகை, பெரியாறு
💢 விருதுநகர் - அர்ஜூனா ஆறு, குண்டாறு, வைப்பாறு, கௌசிகா ஆறு
💢 விழுப்புரம் - கோமுகி, வராக நதி
💢 வேலூர் - பாலாறு, பொன்னியாறு

*PIN குறியீட்டிற்கு விடைபெறுகிறேன்*

*PIN குறியீட்டிற்கு விடைபெறுகிறேன்* அஞ்சல் முகவரிகளின் ஈர்ப்பாக இருந்த PIN குறியீடுகளின் சகாப்தம் முடிந்துவிட்டது, அதற்கு மாற்றா...