Saturday, 15 August 2020

M.S.Thoni



சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்துள்ளார்

எனக்கு ஆதரவு அளித்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி: மகேந்திர சிங் தோனி😢😔

#MSDhoni #Cricket

சர்வதேச கிரிக்கெட்டில்🏏 இருந்து ஓய்வு பெற்றார் #Dhoni 😥
538 Matches.
17,266 Runs.
124 fifty plus scores.
359 sixes.
178 wins as a captain.
Most matches as captain.
Only captain to win all the 3 major ICC trophies.
#MSDhoni.

TPT PRACTICAL EXAM



TU,DDE practical Exam for Cer.Course in Tamil Pandit Training is to be held on 05.01.2020(10AM to 1PM) at b@ÆMOZHIPULAMb@æ. Refer www.tamiluniversity.ac.in

*FOREST*

Save Forest Save Nature

Sunday, 9 August 2020

*வேலூர் கத்தரிக்காய்*


வேலூர் கத்தரிக்காய் என்பது ஒரு புகழ் பெற்ற சொல்,வேலூர் மாவட்டக் கிராமங்களில் விளைவிக்கப்படும் இதற்கு முள்ளுக் கத்தரிக்காய் என்பது மறு பெயர். உண்மையில் அதில் முள் இருக்கும். அதன் சுவையும் ஒப்பிட இயலாதது. இது ஒரு கலப்பினமற்ற பாரம்பரிய காய். இதில் சொத்தை இருக்கும். புழு கூட இருக்கும். சொத்தையை அறுத்து விலக்கிவிட்டுச் சமைப்பார்கள். இப்போது ஆர்கானிக் ஆர்கானிக் என்று கூறப்படும் பல காய்களுக்கு இடையில் இயற்கையான இது சப்தமில்லாமல் விற்கப்படுகின்றது.

வேலூரில் இஸ்லாமிய நண்பர்களின் வீட்டுப் பிரியாணியைச் சுவைத்தவர்கள் முள்ளுக்கத்தரிக்காய் வதக்கலை மறந்திருக்க மாட்டார்கள். வாய்ப்பு கிடைத்தால் சுவைத்துப் பாருங்கள். அந்த பிரியாணிக்கு அந்த கத்தரிக்காய்த் தொக்கு… சொல்ல முடியாது.. ஈடு இணையற்ற காம்பினேஷன் அது. கத்தரிக்காயின் சுவை…பிரியாணியின் சுவையை மீறிய சுவை அது. நான் இன்று சைவனாக மாறிவிட்டேன். ஆனாலும் அந்தக் கத்தரிக்காய்த்தொக்கு மட்டும் என்னை ஏங்க வைக்கின்றது. இன்னமும் அந்த பார்முலா மட்டும் தெரியவில்லை.

பணி காரணமாகச் சென்னைக்கு வந்து வசிப்பவர்கள் இன்றும் வேலூருக்குப் போனால் முள்ளுக்கத்தரிக்காயை ஒரு பண்டமாக வாங்குவதைச் சாதாரணமாகக் காணலாம். சென்னை மக்களுக்கு மட்டுமே இது வேலூர் கத்தரிக்காய் (சென்னை சூப்பர் மார்க்கெட்டுகளில் அவ்வப்போது இது வருகை புரியும். ஆங்கிலத்தில் Brinjal – Vellore என ஸ்டிக்கர் ஒட்டியிருப்பார்கள்).  ஆனால் வேலூரில் இது இலவம்பாடி கத்தரிக்காய் என்றுதான் கூறப்படுகின்றது.

இது ஏன் இன்று என் நினைவுக்கு வந்தது என்றால் அதற்கும் கலைஞர்தான் காரணம்.
உழவர் சந்தை ஆரம்பித்த காலம். வேலூரில் (காட்பாடி காய்கறி அங்காடி என நினைக்கிறேன்) இவர்தான் திறந்து வைக்கின்றார். திறந்து வைத்துவிட்டுப் பேசிய பின் ஒரு உழவரிடத்தில் போய் கேட்கின்றார்… “இலவம்பாடி கத்தரிக்காய் இல்லையா?”. பை நிறைய வாங்கிவிட்டு நூறு ரூபாயைக் கொடுக்கின்றார்.

இதைக் கேள்விப்பட்டதும் ஆச்சரியத்தில் மூழ்கிப்போனேன். என்ன நினைவாற்றல்! பலராலும் வேலூர் கத்தரிக்காய் என்று அறியப்பட்டு, வேலூர் மக்களால் மட்டுமே இலவம்பாடி கத்தரிக்காய் என்று கூறப்படும் ஒரு காயை தமிழக முதல்வர் நினைவில் வைத்துள்ளார் என்றால் அவருக்குத் தமிழகத்தின் புவியியல் அத்துபடியாக இருக்கவேண்டும் என்றே தோன்றியது.

தமிழகத்தின் அமைப்பு வரலாறு, புவியியல், மக்கள் தன்மை எனப் பலவற்றையும் விரல் நுனியில் வைத்திருந்த முதல்வர்கள் இருவர்.. ஒருவர் காமராஜர் மற்றவர் கலைஞர்.

*Tnpsc group 1 / 2 Prelims தேர்வுக்கு எப்படி தயாராவது*



*ஒரு நண்பரின் பதிவு*

Prelims தேர்வுக்கு எப்படி தயாராவது ? 
எதை படிப்பது, எதில் படிப்பது, பயிற்சி மையம் செல்லலாமா ?
இப்போது தான் தொடங்கி உள்ளேன், என்னால் முடியுமா ? 
சில வருடங்களாக படித்து கொண்டிருக்கிறேன் என்னால் இன்னும் முடியவில்லை , முடியுமா முயற்சித்தால்...? 

நேற்றைய பொழுதில் அதிகம் கேட்கப்பட்ட கேள்விகள் ... முடிந்த வரை விளக்கமாக பதில் அளிக்க முயல்கிறேன் ( சொல்ல போகிறவை என் பார்வை மட்டுமே  , அவை மாறுபடலாம் நபருக்கு நபர் ) 

தொடர்ந்து  படித்தால் தேர்வை எளிதில் clear பண்ணலாம்..   

1. முதலில் எதை படிப்பது: 

6 முதல் 12 வரை உள்ள தமிழ்நாடு பள்ளி புத்தகம் மட்டுமே போதுமானது... ( polity / Tamilnadu development administration / current affairs . கொஞ்சம் வெளியே இருந்தும் படிக்கணும்) #preliminay_ #TNPSC exam க்கு பள்ளி புத்தகம் போதும்..

#syllabusல் உள்ள topic மட்டும் திரும்ப திரும்ப revise பண்ணி பாருங்க ( முழுசா படிக்கணுமா அப்படி doubt வரவங்க, old previous year question பார்த்தா எதை படிக்கணும், எதை விடணும் சொல்லி தெளிவு கிடைத்து விடும் )

முக்கிய குறிப்பு : MARKET Materials  வாங்கி  பணத்தை வீணடிக்காதீர்கள்... நேரத்தையும் வீணடிக்காதீர்..

2. பயிற்சி மையமா or  வீட்டிலிருந்தா ? 

என்னை பொருத்த வரை நிறைய பயற்சி மையம் உங்களை ஏமாற்றியே சம்பாதிக்க பார்ப்பார்கள்.. 
அவர்களுக்கு ஒரு #batch
நமக்கு #life..

(School books + Syllabus + old question paper + proper revision + discussion with friends + model test ) இதுவே நான் முழுக்க முழுக்க செய்தது...

நான் TNPSC plan இல்லாம தான் படிக்க வந்தேன், ஒரு 3 மாதம் பயிற்சி மையம் சொன்னதை நம்பி ஏன் படிக்கிறேன் , என்ன படிக்கிறேன் தெரியாமலே நேரம் வீணடித்தேன்.. ஆனால் பயிற்சி மையத்தில் கிடைத்த contact( உடன் படிக்கும் மாணவர்கள்) easyah தேர்வை அணுக உதவியது 

பின் 3 நண்பர்கள் ஒன்று சேர்ந்தோம், அவர்களுடன் சேர்ந்த பிறகு நிறைய idea கிடைத்து, 
தினமும் ஒன்றாக படிப்போம், மாறி மாறி கேள்வி கேட்டு கொள்வோம்...

படிக்கிறது எவ்ளோ முக்கியமோ அதே அளவு , அதை revise பண்றது ரொம்ப ரொம்ப முக்கியம்.. திரும்ப திரும்ப படித்து, நண்பர்களுடன் மாறி மாறி கேள்வி கேட்டு கொள்வோம், மாதிரி தேர்வு பல எழுதி பார்ப்போம்..
இது மட்டும் தான் வெற்றிக்கு இட்டு சென்றது..
நான் ஒன்றும் பெரிய புத்திசாலி இல்லை,, ஆனால் திரும்ப திரும்ப புத்தகத்தை படித்தது என்னை வேலை வாய்ப்பை நோக்கி இட்டு சென்றது..

3. என்னால் தேர்வில் வெற்றி பெற முடியுமா ? 

தேர்வை பொறுத்த வரை யார் தொடர்ந்து படித்து, சரியாக revise செய்து, மாறி மாறி நண்பர்களுடன் discuss பண்ணியோ, மாதிரி தேர்வை எழுதியோ பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்..
விதைத்தால் மட்டுமே செடி வளரும், ஆனால் அதை நல்ல நிலத்தில் விதைத்து உரமிட்டு பார்த்து கொள்ளுங்கள்

எல்லாரும் கண்டிப்பாக படித்தால் வெற்றி பெற முடியும்.. வாழ்த்துக்கள்...

(School books + Syllabus + old question paper + proper revision + discussion with friends + model test ) 

இதுவே நான் முழுக்க முழுக்க செய்தது...  படிக்கும் விதம் நபருக்கு நபர் வேறுபடும்.. உங்களுக்கு ஏற்ற விதத்தில் படியுங்கள்..
தேவையான தகவல் அனைத்தும் online சென்று தேடுங்கள் கண்டிப்பாக கிடைக்கும்..
அடி மெல்ல எடுத்து வைத்து செல்ல செல்ல செல்ல தான் தூரம் குறையும்... 
#வாழ்த்துக்கள் வருங்கால அதிகாரிகளுக்கு..

#அன்புடன் சுழியன் ( தரவரிசை : 19 மதிப்பெண் : 276 )

Saturday, 8 August 2020

TNOU B.Sc., Geography



Dear Students, 
B.Sc., Geography 3rd year Practical Counselling Classes and Examination will be held on Chennai, Coimbatore and Madurai from 30th, 31st January, 1st & 2nd  February 2020 - Visit

*Economy and 10th Tamil*



*ஐந்தாண்டு திட்டங்களும் அதன் முக்கிய நோக்கமும்*

1. முதலாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம் - 1951 - 1956

முதல் ஐந்தாண்டு திட்டத்தை வகுத்தவர் - ஹரோல்டு தோமர்

நோக்கம் : முக்கியத்துவம் தரப்பட்ட துறை விவசாயத்துறை.

2. இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தின் காலம் - 1956 - 1961

இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தை வகுத்தவர் P.G.மஹல நாபிஸ்.

நோக்கம் : முக்கியத்துவம் தரப்பட்ட துறை தொழில் துறை.

3. மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம் - 1961 - 1966

மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டத்தை வகுத்தவர் - P.G.மஹல நாபிஸ்.

நோக்கம் : தற்சார்பு திட்டம்

4. நான்காம் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம் - 1969 - 1974

நோக்கம் : நிலையான வளர்ச்சி மற்றும் தன்னிறவை

5. ஐந்தாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம் - 1974 - 1979

நோக்கம் : வறுமையை ஒழித்தல்

6. ஆறாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம் - 1980 - 1985

நோக்கம் : வருமான ஏற்றத் தாழ்வுகளைக் குறைப்பதன் மூலம் வறுமையை அகற்றுதல்

7. ஏழாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம் - 1985 - 1989

நோக்கம் : உணவு, வேலைவாய்ப்பு, உற்பத்தித் திறன், தற்சார்பு ஆகியவை பெருகுதல்

8. எட்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம் - 1992 - 1997

நோக்கம் : முழு வேலைவாய்ப்பு, தொடக்கக்கல்வி, மனிதவளமேம்பாடு, மக்கள் தொகை கட்டுப்பாடு, வேகமான பொருளாதார வளர்ச்சி

9. ஒன்பதாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம் - 1997 - 2002

நோக்கம் : வேளாண்மை, கிராம வளர்ச்சி, வறுமை ஒழிப்பு மற்றும் 2004க்குள் முழு கல்வி

10. பத்தாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம் - 2002 - 2007

நோக்கம் : நேரடி அந்நிய முதலீடு, தொழிலாளர் முன்னேற்றம், பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் கிராம வளர்ச்சி

11. பதினோறாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம் - 2007 - 2012

12. பன்னிரெண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம் - 2012 - 2017.

💐💐💐💐💐💐💐💐💐

 *( அறிவியல் )*

     *பாடம் - 9 ம்  வகுப்பு மூன்றாம் பருவம்*

*இயற்பியல்*

*தலைப்பு: 5.பயன்பாட்டு வேதியல்*

1.நமக்கு சளி மற்றும் காய்ச்சல்லை  உருவாக்கும் நானோ வைரஸ் விட்டம்   ----------------? 

*விடை : 30 நானோ மீட்டர்*

2.ஒரு ஹைட்ரஜன் அணுவின் விட்டம்  --------------?  

*விடை :0.2 நானோ மீட்டர்*

  3.அறுவை சிகிச்சைக்கு பயன்படும் செயற்கை தோள்களை உருவாக்க   ---------- தொழில் நுட்பம் பயன்படுகிறது.

*விடை : நானோ*

4.சிறுநீரக கற்களை அகற்றுவதற்கு  -------------- தொழில் நுட்பம் பயன்படுகிறது.

*விடை  : நானோ ரோபோடிக்ஸ்*

5. "ட்ரக்"  என்பது ---------- மொழி சொல்.

*விடை : பிரெஞ்சு*

6. மயக்க மருந்துகளில் பாதுகாப்பானது -----------? 

*விடை :நைட்ரஸ் ஆக்ஸ்சைடு (N2O)*

7. மயக்க மருந்து யாரால் கண்டுபிடிக்கபட்டது ------------? 
 
*விடை :வில்லியம் மோர்டன்*

8.மலேரியா காய்ச்சலின் போது நமது உடலின் வெப்பநிலை  -------------  F° கூடுகிறது.

*விடை : 103 F° To 106 F°*

9.  வெளிகாயங்களை சுத்தம் செய்யும் மருந்து  ---------? 

*விடை : ஹைட்ரஜன் பெராக்ஸைடு*

10. யுரேனியம் ------------ வாயுவை வெளியிடுகிறது.  

*விடை : ரேடான்*

                   *🙏நன்றி 🙏


💐💐💐💐💐💐💐💐💐

 *( தமிழ்  )*

     *வகுப்பு - 10*


1. மூதூர் என்பதன் இலக்கண குறிப்பு ----------------? 

*விடை : பண்புத்தொகை*

2. பத்துபாட்டுகளில் குறைந்த அடிகளை கொண்ட நூல்  --------------?  

*விடை : முல்லைப்பாட்டு*

  3.உலக வானிலை அமைப்பின் தலைமையகம் உள்ள இடம்   ----------? 

*விடை :  புது டெல்லி*

4. கஜா  புயலின் பெயரை வழங்கிய நாடு  --------------? 

*விடை : இலங்கை*

5. புயலின் இருவகை சுழற்சிக்கு    ---------- என்று பெயர். 

*விடை : கொரியாலிஸ்*

6. புலம் பெயர்ந்த தமிழர் பற்றிய முதல் புதினம் என்ற நூலின் ஆசிரியர் -----------? 

*விடை : பா. சிங்காரம்*

7. வாழயிலை விருந்து விழாவை ஆண்டுதோறும் கொண்டாடும் நாடு  ------------? 
 
*விடை : அமெரிக்கா*

8. வெற்றி வேற்கை என்ற நூலின் ஆசிரியர்  -------------? 

*விடை : அதிவீரராம பாண்டியர்*

9. *கூத்தாற்று படை*  என அழைக்கபடும் நூல்  ---------? 

*விடை : மலைபடுகடாம்*

10. பொம்மல் என்ற சொல்லின் பொருள்   ------------?  

*விடை : சோறு*

                   *🙏நன்றி 🙏*

💐💐💐💐💐💐💐💐💐

 ( தமிழ்  )*

     *வகுப்பு - 10*


1. கரிசல் மண்ணின் படைப்பாளி என்று அழைக்கபடுபவர்  ----------------? 

*விடை : கு. அழகிரிசாமி*

2. கரிசல் இலக்கியம் என்னும் நூலினை படைத்தவர்   --------------?  

*விடை : கி.இராஜநாராயணன்*

  3.2016 ல் IPM நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு கணினியின் பெயர்   ----------? 

*விடை :  வாட்சன்*

4.  பெப்பர் எந்த நாட்டு கணினியின் பெயர்  --------------? 

*விடை : ஜப்பான்*

5. சீனாவில்  ---------- கோயிலில் சோழர்கால சிற்பங்கள் காணப்படுகின்றன.

*விடை : சிவன் கோயில்*

6.பெருமாள் திருமொழி நூலை எழுதியவர் -----------? 

*விடை : குலசேகர ஆழ்வார்*

7. நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள பாடல்கள்  ------------? 
 
*விடை : 105*

8. பீடு என்னும் சொல்லின் பொருள் -------------? 

*விடை : சிறப்பு*

9. பால்வவீதிகள் பல உள்ளன என நிரூபித்தவர்   ---------? 

*விடை : எட்வின் ஹபிள்*

10. ஓங்கு என்னும் அடைமொழியுடன் அழைக்கபடும் நூல்   ------------?  

*விடை : பரிபாடல்*

                   *🙏நன்றி 🙏*


💐💐💐💐💐💐💐💐💐

  ( தமிழ்  )*

     *வகுப்பு - 10*


1. மீட்சி விண்ணப்பம் என்ற கவிதை தொகுப்பின் ஆசிரியர்    ----------------? 

*விடை :  தி. சோ.வேணும்கோபாலன்*

2. கண்ணனாதாசன்  -------------- புதினத்துக்காக சாத்தியஅகதெமி விருதுபெற்றறார்.

*விடை : சேரமான் காதலி*

  3. கண்ணதாசனின் முதல் திரை உலக பாடல்      ----------? 

*விடை :  கலங்கதிரு மனமே (1949)*

4. இருவர் உரையாடுவது போன்ற ஓசை -------------? 

*விடை : செப்பலோசை*

5. ஒருவர்  பேசுவது மற்றும் சொற்பொழிவற்றது போன்ற ஓசை  ----------.? 

*விடை : அகவலோசை*

6. சிறுகதை மன்னன் என அழைக்கபடுபவர் -----------? 

*விடை : ஜெயகாந்தன்*

7. கப்பலுக்கு போன மச்சான் என்ற நாவலை படைத்தவர்  ------------? 
 
*விடை :முகம்மது ராஃபி என்ற நாகூர்மி*

8.யாக்கை என்னும் சொல்லின் பொருள்     -------------? 

*விடை : உடல்*

9. தயங்கி என்னும் சொல்லின் பொருள்  ---------?  

*விடை : அசைந்து*

10.  கான் என்னும் சொல்லின் பொருள்------------?  

*விடை : காடு*



                   *🙏நன்றி 🙏

( தமிழ்  )*

     *வகுப்பு - 10*


1. தேவராட்டதிற்கு உரிய இசை கருவி  ----------------? 

*விடை : தேவதுந்துபி*

2. முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் நூலின் ஆசிரியர்   --------------?  

*விடை : குமரகுருபரர்*

  3. ஆடுக இலக்கணகுறிப்பு     ----------? 

*விடை :  வியங்கோள் வினைமுற்று*

4. செங்கீரை பருவம் குழந்தையின்  ------ முதல் -------- மாத இடைவெளியை குறிக்கும்.

*விடை : 5-6 மாதம்*

5. சிலையெழுபது என்ற நூலின் ஆசிரியர்     ----------.? 

*விடை : கம்பர்*

6. தக்கையின் மீது நான்கு கண்கள் என்ற சிறுகதையின் ஆசிரியர்  -----------? 

*விடை : சா. கந்தசாமி*

7. தேன்மழை என்ற நூலின் ஆசிரியர்  ------------? 
 
*விடை : சுரதா*

8. சிலப்பதிகாரம் தமிழினத்தின் பொதுசொத்து என கூறியவர்   -------------? 

*விடை : சிலம்பு செல்வர் மா. பொ. சி*

9. கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாடுடன் இணைந்த நாள்  ---------? 

*விடை : 1956 நவம்பர் 1*

10.  தமிழரசு கழகத்தை தொடங்கியவர் ------------?  

*விடை : மா பொ. சி*

                   *🙏நன்றி 🙏*

 ( தமிழ்  )*

     *வகுப்பு - 10*


1. ஏர் புதிதா?  என்ற நூலின் ஆசிரியர்   ----------------? 

*விடை : கு.பா. ராஜகோபாலன்*

2. அகலிகை, ஆத்மசிந்தனை ஆகிய நூல்கள்  யாரின் மறைவுக்கு பின்னர் தொகுக்கபட்டது  --------------?  

*விடை : கு.பா. ராஜகோபாலன்*

  3. பயில் தொழில் இலக்கண குறிப்பு தருக     ----------? 

*விடை :  வினைத்தொகை*

4. சிலப்பதிகாரத்தின் ஆசிரியர்-------------? 

*விடை : இளங்கோவடிகள்*

5. M.S. சுப்புலக்ஷ்மி இயற்பெயர்      ----------.? 

*விடை : முகில் நாட்சி*

6. ஆநிரை கவர்தல்  ----------- என அழைக்கபட்டது.

*விடை : வெட்சி திணை*

7. மாற்றசனின் கோட்டையை கவதல்  ------------ என அழைக்கபட்டது.
 
*விடை : உமிஞ திணை*

8. போரில் வெற்றி பெற்றதை கூறும் திணை    -------------? 

*விடை : வாகை திணை*

9. மண்ணைசை கருதி போர் புரிவது --------- திணை.

*விடை : வாஞ்சி திணை*

10.  ஆநிரை மீட்க செல்பவர் சுடுவது  ------------?  

*விடை : கரந்தை திணை*

                   *🙏நன்றி 🙏*

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...