Friday, 4 June 2021

*1857* முதல் *1947* வரை



 *1857* ஆம் ஆண்டு முதல் *1947* ஆம் ஆண்டு வரை உள்ள அனைத்து முக்கிய நிகழ்வுகளும் ஆண்டுவாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என நம்புகிறோம்.


*1850-1860*
👇👇👇👇👇
1851 தோட்ட தொழிலாளர் சட்டம்

1852 இரண்டாம் பர்மிய போர், சென்னை  சுதேசி சங்கம், தந்தி சேவை                    

1853 மும்பை-தானே முதல் ரயில் சேவை,                   

1854 இந்திய அஞ்சல் துறை, சார்லஸ் உட்ஸ் கல்வித்திட்டம்            

1856 இந்து விதவை மறுமணச் சட்டம், சென்னை அரக்கோணம் ரயில் போக்குவரத்து, பொது ராணுவபணியாளர் சட்டம்                         

1857- பெரும் புரட்சி அல்லது சிப்பாய் கலகம்,     கல்கத்தா பம்பாய் மற்றும் சென்னை பல்கலைக் கழகம் உதயம்          

1858 விக்டோரியா மகாராணியின் பேரறிக்கை அல்லது இந்திய மகாசாசனம்                              

*1860-1870*
👇👇👇👇👇
1861 இந்திய கவுன்சில் சட்டம்

1862 மெட்ராஸ் கொல்கத்தா மற்றும் பம்பாய் உயர் நீதிமன்றங்கள்

1863 -சுவாமி விவேகானந்தர் அவதாரம்

1866  பிரம்ம சமாஜம் பிளவு, ஆதி பிரம்ம சமாஜம், இந்திய பிரம்ம சமாஜம்                   

1867 - பிரார்த்தனை சமாஜம்

1869 தேசபிதா மகாத்மா காந்தி தோற்றம்

*1870-1880*
👇👇👇👇👇
1873 சத்திய சோதக் சமாஜ்

1875 ஆரிய சமாஜம், பிரம்ம ஞான சபை, அலிகார் இயக்கம்                  

*1880-1890*
👇👇👇👇👇
1881 முதல் தொழிற்சாலை சட்டம்

1882 ஹண்டர் கல்வி குழு

1883  இல்பர்ட் மசோதா

1884 சென்னை மகாஜன சங்கம்

1885- இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றம்

*1890-1900*
👇👇👇👇👇
1891 திராவிட மகாஜன சபை, சென்னை சட்டக்கல்லூரி

1893- சிகாகோ உலக சமய மாநாடு

1897 ஸ்ரீ ராமகிருஷ்ணாமடம்

*1900 – 1920*
👇👇👇👇👇
1858-1901 - இந்தியாவின் பேரரசி விக்டோரியா மகாராணி                                              

1904 - பல்கலைக்கழக சட்டம், பாரத மாதா சங்கம்

1905 – வங்காளப் பிரிவினை,

1906 லீக் தோற்றம்

1907  -சூரத் பிளவு, சுதேசி நாவாய்ச் சங்கம், ஒரு பைசா தமிழன்                 

1909 மின்டோ மார்லி சீர்திருத்தம் சட்டம்

1910 பத்திரிக்கைச் சட்டம்

*1910 -1920*
👇👇👇👇👇
1911  வங்கப்பிரிவினை ரத்து

1911 -புதுடில்லி தலைநகரம்( ஹார்டின்ஜ் காலம்)

1912 திராவிடர் சங்கம் அல்லது சென்னை திராவிடர் கழகம்

1914 – முதல் உலகப்போரின் துவக்கம்

1916  -தன்னாட்சி இயக்கம், லக்னோ உடன்படிக்கை,  நீதிக்கட்சி, தென்னிந்திய நல உரிமையாளர்கள் சங்கம்                                                      

1917 -ஆகஸ்ட் அறிக்கை, ரஷ்ய புரட்சி, சம்பரான் சத்தியாகிரகம், அன்னிபெசன்ட் அம்மையார் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர்                                                 

1918 – முதல் உலகப்போரின் முடிவு, கேதா சத்யாகிரகம்                    

1919  - மாண்டேகு செம்ஸ்போர்டு சட்டம், ரௌலட் சட்டம், ஜாலியன் வாலாபாக் படுகொலை, ஹண்டர் குழு விசாரணை கமிஷன்                                            

1920 – ஒத்துழையாமை இயக்கம், இந்தியாவின் முதல் தேர்தல்

*1920 – 1930*
👇👇👇👇👇
1921 - வரிகொடா இயக்கம், சாந்திநிகேதன் விசுவபாரதி பல்கலைக்கழகம், 

1922 – சௌரி சௌரா இயக்கம் பிப்ரவரி 5, 

1923 – சுயராஜ்ஜியக் கட்சியின் தோற்றம்

1924  பெல்காம் காங்கிரஸ் மாநாடு மகாத்மா காந்தி தலைவர், மாநில பணியாளர் தேர்வு வாரியம், வைக்கம் போராட்டம்               

1925 - கான்பூர் காங்கிரஸ் மாநாடு சரோஜினி நாயுடு தலைவர் முதல் இந்திய பெண் தலைவர், சுயமரியாதை இயக்கம்                                                                    

1927 – சைமன் குழு வருகை

1928   கல்கத்தா காங்கிரஸ் மாநாடு மோதிலால் நேரு தலைமை,  நேரு  அறிக்கை, முகமது அலி ஜின்னா 14 அம்ச கோரிக்கை                     

1929  -லாகூர் காங்கிரஸ் மாநாடு ஜவகர்லால்  நேரு தலைமை,  பூர்ண சுயராஜ்யம், சாரதா சட்டம் (குழந்தை திருமண தடுப்பு சட்டம்) ,அண்ணாமலை பல்கலைக்கழகம், பொதுப் பணியாளர் தேர்வாணையம்              

1930 – சட்ட மறுப்பு இயக்கம், தண்டி யாத்திரை,  உப்பு சத்தியாகிரகம், தேவதாசி ஒழிப்புச் சட்டம்                           

*1930 – 1940*
👇👇👇👇👇
1930 - முதல் வட்டமேசை மாநாடு

1931 - இரண்டாம் வட்டமேசை மாநாடு காந்தி-  இர்வின் ஒப்பந்தம், கராச்சி காங்கிரஸ்              மாநாடு சர்தார் வல்லபாய் படேல்                          தலைமை

1932 - மூன்றாம் வட்டமேசை மாநாடு,  வகுப்புவாரி பிரதிநிதித்துவம் ராம்சே மெக்டொனால்டு,  பூனா ஒப்பந்தம்                       

1934 இந்திய ரிசர்வ் வங்கி சட்டம்

1935 - இந்திய அரசு சட்டம், இந்திய ரிசர்வ் வங்கி தொடக்கம்

1937 இந்திய மாகாண தேர்தல், வார்தா கல்வித் திட்டம்

1939 - இரண்டாம் உலகப்போரின் தொடக்கம் பார்வர்டு

*TNPSC Overall Previous Q & A*

3231 பக்கங்கள் கொண்ட Tnpsc தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளின் தொகுப்பு...

🎯🎯🎯🎯🎯


*ஜூன்-4_ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்ட அப்பாவி குழந்தைகளின் சர்வதேச தினம்*

*ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்ட அப்பாவி குழந்தைகளின் சர்வதேச தினம்*


1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி, ஐ.நா. பொதுச் சபை, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 4 ஆம் தேதியை ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்ட அப்பாவி குழந்தைகளின் சர்வதேச தினமாக அனுசரிக்க முடிவு செய்தது.

இந்த நாளின் நோக்கம் உலகெங்கிலும் உடல் ரீதியான, மன, ரீதியான துஷ்பிரயோகத்தின் மூலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வலிகளை உணர்த்துவதாக உள்ளது .

மேலும் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான ஐ.நாவின் உடன்படிக்கையை இந்த நாள்  உறுதிப்படுத்துகிறது.



 வரலாற்றில் மிக விரைவாக  ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் ஆணையத்தின் ஒப்பந்தமான குழந்தைகளின் உரிமைகள் பற்றிய ஒரு உடன்படிக்கை மூலமா க ஐ.நாவின் இந்த பாதுகாப்பு வேலை செயல்படுத்தப்படுகிறது.



ஜுன்4 ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி சிறுவர்களுக்கான பன்னாட்டு நாள் (International Day of Innocent Children Victims of Aggression) என்பது ஆண்டுதோறும் சூன் 4 அன்று ஐக்கிய நாடுகளால் நினைவுகூறப்படும் ஒரு நாளாகும். இது 1982 ஆகத்து 19 முதல் ஆண்டுதோறும் நினைவுகூறப்பட்டு வருகிறது.

ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி சிறுவர்களுக்கான பன்னாட்டு நாள்
4 சூன்
நிகழ்வு
ஆண்டுதோறும்
ஆரம்பத்தில் இந்நாள் 1982 லெபனான் போரில் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மீது கவனம் செலுத்தியது, பின்னர் இதன் நோக்கம் "உடல், மன மற்றும் உணர்ச்சி ரீதியான பாதிப்புகளுக்கு ஆளான உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் அனுபவிக்கும் வலியை" உணர்ந்துகொள்வதாக விரிவடைந்தது. இந்த நாள் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஐநாவின் உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறது.

*ஜூன் -3_உலக மிதிவண்டி தினம்*

*உலக மிதிவண்டி தினம்*

உலக மிதிவண்டி நாள் ஆண்டுதோறும் ஜூன் 3 நாள் அன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.

 2018 ஏப்ரலில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை இந்நாளை பன்னாட்டு நாளாக அறிவித்தது. 

உலக மிதிவண்டி நாளுக்கான ஐக்கிய நாடுகளின் தீர்மானம் "இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்த மிதிவண்டிகளின் தனிச்சிறப்பு, நீண்டகாலப் பயன்பாடு, பல்திறன், மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற ஒரு எளிமையான, மலிவான, நம்பகமான, சுத்தமான போக்குவரத்துக் கருவி" என்பதை அங்கீகரித்தது. 

அமெரிக்காவைச் சேர்ந்த லெசுச்செக் சிபிலிசுக்கி என்ற பேராசிரியர் தனது சமூகவியல் மாணவர்களுடன் இணைந்து உலக மிதிவண்டி நாளை ஐக்கிய நாடுகள் மூலம் பிரகடனப்படுத்த பரப்புரை செய்தார். 

இம்முயற்சிக்கு துருக்மெனிஸ்தான் உட்பட 56 நாடுகள் ஆதரவளிக்க முன்வந்தன. 

மிதிவண்டி மனித இனத்திற்குச் சொந்தமானதென்றும் சமூகத்திற்கு சேவையாற்றும் ஒரு சாதனம் என்பதே இப்பரப்புரையின் முக்கிய செய்தியாகும். 


உலக மிதிவண்டி நாள் தற்போது வகை நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதில் ஈடுபட்டு வருகிறது

Wednesday, 2 June 2021

*ஆசிரியர் தேர்வு வாரியம் கலைத்து, டி.என்.பி.எஸ்.சி.,யிடம் ஒப்படைப்பு*

ஆசிரியர் தேர்வு வாரியம், ஆயிரக்கணக்கான வழக்குகளில் சிக்கியுள்ளதால், வாரியத்தை கலைத்து, டி.என்.பி.எஸ்.சி.,யிடம் ஒப்படைக்க, அரசு திட்டமிட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.


தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள், கல்லுாரிகள், பாலிடெக்னிக்குகள் உள்ளிட்டவற்றில் ஆசிரியர் பணி காலியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வழியே நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.பள்ளிக்கல்வி துறையின் ஓர் அங்கமாக செயல்படும், டி.ஆர்.பி.,யில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையில், பள்ளி கல்வி இயக்குனர்கள், இணை மற்றும் துணை இயக்குனர்கள், வாரிய உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர் செயலராக செயல்படுகின்றனர்.
குவிந்த வழக்குகள்

ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு, பள்ளி, கல்லுாரி ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வுகள் உள்ளிட்டவை, டி.ஆர்.பி.,யால் நடத்தப்படுகின்றன. கல்லுாரி பேராசிரியர் பணிக்கு, நேரடியாக நேர்முகத் தேர்வு நடத்தி, ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.இந்த நடவடிக்கைகளில் பல்வேறு முறைகேடுகள், விதிமீறல்கள் நடப்பதாக, 10 ஆண்டுகளுக்கு மேலாக புகார்கள் எழுந்துள்ளன


.இது குறித்து, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைகளில் ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றை முடிப்பதற்கே, ஆசிரியர் தேர்வு வாரியத்தினருக்கு நேரம் போதாமல், பணி நியமன நடவடிக்கைகள் அப்படியே கிடப்பில் போடப்படுகின்றன.

இந்த வகையில், உதவி பேராசிரியர் தேர்வு, ஆசிரியர் தகுதி தேர்வு, உடற்கல்வி ஆசிரியர் நியமனம், பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, சிறப்பாசிரியர் தேர்வு என, பல நியமனங்கள் முழுமை பெறாமல், பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன.இது குறித்து, முதல்வர் ஸ்டாலின் அரசு, விசாரணையை துவக்கியுள்ளது.

பள்ளி கல்வித்துறை உள்ளிட்ட, பல்வேறு துறைகளை கவனிக்கும், முதல்வரின் முதன்மை தனி செயலர் உதயசந்திரன் மற்றும் பள்ளி கல்வி முதன்மை செயலர் காகர்லா உஷா உள்ளிட்ட அதிகாரிகள், முதற்கட்ட ஆலோசனை நடத்தியுள்ளனர்.
குளறுபடியான வாரியம்

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பிரச்னைகளுக்கு, அதன் கட்டமைப்பு குறைவு; சரியான திட்டமிடல் இல்லாமை; பணி நியமன ஆணையங்களுக்கு தேவையான சட்ட விதிகள் மற்றும் வெளிப்படை தன்மை இல்லாமை;போதிய அனுபவம் உள்ள தொழில்நுட்ப மற்றும் நிபுணத்துவம் உள்ள பணியாளர்கள் இல்லாமை போன்றவை, முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன. 


ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தனியாக சட்ட பிரிவு, 'டிஜிட்டல்' தொழில்நுட்ப துறை எதுவும் இல்லை என்றும், தெரிய வந்துள்ளது. எனவே, வழக்குகளை மட்டுமே எதிர்கொள்ளும் ஆசிரியர் தேர்வு வாரியத்தை, இன்னும் செயல்பட வைப்பது, அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் என, கருத்துகள் பரிமாறப்பட்டுள்ளன.

உயர் கல்விக்கான பல நியமனங்களில், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் சரியான போட்டித் தேர்வோ, நிபுணத்துவமான நேர்முக தேர்வோ, சான்றிதழ் சரிபார்ப்பு போன்றவையோ நடத்தப்படாததும் தெரிய வந்துள்ளது.அதனால், அதிக கல்வித்தகுதி மற்றும் உயர் தரமான பட்டதாரிகள் பலர், அரசு பணிகளில் நியமிக்கப்படாமல், புறக்கணிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

கலைப்பதே சரி

உயர் கல்வித்துறைக்கு, தனியாக தேர்வு வாரியம் அமைக்கலாம் என, கடந்த அரசில் முடிவு செய்யப்பட்டுள்ளது.ஆனால், ஏற்கனவே ஒரு வாரியமே ஒழுங்காக செயல்படாமல், ஆயிரக்கணக்கான வழக்குகளில் சிக்கியுள்ளது.அதை, இரண்டாக பிரித்தால், அரசுக்கான செலவுகள் அதிகரிப்பதுடன், வழக்குகள் இன்னும் அதிகரிக்கும் என்று, அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

எனவே, அனைத்துக்கும் தீர்வாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தை ஒட்டுமொத்தமாக கலைத்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வழியாகவே நியமனம் மேற்கொள்ளலாம் என, முதற்கட்டமாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக, அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

*போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வூதிய பணப்பலன்கள்*



2457 ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பணப்பலன்களின் நிலுவைத்தொகை ₹497.32 கோடி வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

*List of Country with their Capital and Currency*

🌐List of Country with their Capital and Currency recently in news🌐
================================


✳️Israel 
➖Capital: Jerusalem
➖Currency: Israeli Shekel 

🌀Japan 
➖Capital: Tokyo
➖Currency: Japanese Yen 

✳️Pakistan 
➖Capital: Islamabad
➖Currency: Pakistani rupee 

🌀Central African Republic
➖Capital: Bangui
➖Currency: Central African CFA franc

✳️Vietnam 
➖Capital: Hanoi
➖Currency: Vietnamese dong

🌀France 
➖Capital: Paris
➖Currency:  Euro, CFP franc

✳️Kyrgyzstan 
➖Capital: Bishkek
➖Currency: Kyrgyzstani som

🌀Uganda 
➖Capital: Kampala
➖Currency: Ugandan shilling

✳️Russia 
➖Capital: Moscow
➖Currency: Russian ruble 

🌀Netherlands 
➖Capital: Amsterdam, Government seat: The Hague
➖Currency: Euro

✳️Singapore
➖Capital: Singapore
➖Currency: Singapore dollar 

🌀United States 
➖Capital: Washington, D.C.
➖Currency: United States dollar (USD)

✳️China 
➖Capital: Beijing
➖Currency: Renminbi 

🌀Germany 
➖Capital: Berlin
➖Currency: Euro 

✳️Mongolia 
➖Capital: Ulaanbaatar
➖Currency: Mongolian togrog

🌀Portugal 
➖Capital: Lisbon
➖Currency: Euro 

✳️Estonia 
➖Capital: Tallinn
➖Currency: Euro 

🌀Italy 
➖Capital: Rome
➖Currency: Euro
✅ Folow @currentaffairsbox

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...