Saturday, 11 February 2023

*PAYTM, AMAZONPAY, PHONEPE, GOOGLE PAY(a)GPAY*

*PAYTM, AMAZONPAY, PHONEPE, GOOGLE PAY(a)GPAY எனபேபே என்று எல்லா கடைகளிலும், உணவகங்களிலும், பெட்டி கடைகளிலும், அடுமனைகளிலும் ஏன் தள்ளுவண்டி, மிதிவண்டிகளில் வியாபாரம் செய்பவர்கள் என அனைவரும் ஸ்கேன் அட்டையை வைத்து கொண்டு இருக்கிறார்கள்.*



நாமும் நம் அலைபேசியை கையில் வைத்து கொண்டு புகைப்படம்
எடுத்து தள்ளுவது போல ஸ்கேன் செய்து செய்து எல்லாவற்றையும்
வாங்கி கொள்கிறோம். கையில் பணம் இருந்தால் கூட அலைபேசியை
பயன்படுத்தி கொண்டு தான் பொருட்கள் வாங்குகிறோம்.

மேலும் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும், நம் தொழிலுக்கும் எனஅவசரத்திற்கு பணபரிமாற்றமும் செய்து கொள்கிறோம். ஏனென்றால்
நாம் டிஜிட்டல் இந்தியாவில் வாழ பழகிவிட்டோம். மேலும் இது ஒரு
பெருமைக்குரிய செயலாகவும் தற்சமயம் மாறியிருக்கிறது.

எப்படி பெரிய பெரிய பல்பொருள் அங்காடிகளில் நடந்து நடந்து பொருள்
வாங்குவது fashion ஆகி போனதோ அது போல இதுவும் இன்றைய
தேதியில் ஒரு கெளரவமாகிவிட்டது.

இதற்கு நானும் அடிமையாகி எல்லாவற்றுக்கும் அலைபேசியை பயன்
படுத்தி பொருட்கள் வாங்குவது என இயல்பாகவே அதிக அளவில் பயன்
படுத்த தொடங்கியிருக்கிறேன். இப்படி pay pay என எல்லா பே யையும்
பயன்படுத்திய  என் நண்பன் ஒருவருக்கு வங்கி (KVB) இன்று பெப்பே காட்டியது.என் கணக்கில் இருந்து ரூ.976.80‌ பிடித்தம் செய்திருந்தார்கள்.

எதற்காக இந்த பிடித்தம் என கேட்டதற்கு நீங்கள் gpay போன்றவைகளை
அதிக அளவில் பயன்படுத்தியிருக்கிறீர்கள். சேமிப்பு கணக்கு
வைத்திருப்பவர்கள் ஆறு மாத காலத்திற்கு 90 முறையே பயன்படுத்த
வேண்டும். ( இது வங்கிகள் வாரியாக மாறுபடும்) அதற்கு மேல் பயன்
படுத்தும் ஒவ்வொரு முறையும் ரூபாய் 2 + வரி பிடிக்கப்படும் என பதில்
கிடைத்தது.

எந்தவிதமான அறிவிப்புமின்றி தகவலுமின்றி இந்த உருவல் நடந்திருக்கிறது.
கேட்டால் இதை நீங்கள்தான் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று
சொல்லிவிட்டார்கள்.

ஒருபுறம் இதை பயன்படுத்துங்கள் என்று சொல்லி நம்மை பழக்கப்படுத்தி
விட்டு மறுபுறம் நம் சட்டைப்பையில் இருந்து நமக்கு தெரியாமலேயே நம்
பணத்தை எடுத்து கொள்கிறார்கள். இதுதான் டிஜிட்டல் இந்தியா போலும்.

இதை பற்றி தெரிந்தவர்கள் செய்தியாகவும், என்னை போல தெரியாதவர்கள்
இருந்தால் இதை ஒரு முன்னெச்சரிக்கை பதிவாகவும் எடுத்து கொண்டுபார்த்து பயன்படுத்தும்படி பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.....

Thursday, 26 January 2023

*இந்திய மூவர்ணக் கொடியின் வரலாறு*

_*இந்திய மூவர்ணக் கொடியின் வரலாறு*_ 



ஜனவரி 26 ஆம் தேதி இந்தியா தனது குடியரசு தினத்தை கொண்டாடுகிறது. 

குடியரசு தினத்தன்று ஒவ்வொரு ஆண்டும், புது டெல்லியில் உள்ள செங்கோட்டையில் நம் தேசியக் கொடியான திரங்கா என்ற மூவர்ணக்கொடியை இந்தியக் குடியரசுத் தலைவர் ஏற்றுவார். 

இந்தியக் கொடியின் வண்ணங்கள், அதன் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் பரிணாமம் ஆகியவற்றை இங்கே பார்ப்போம்.

 *இந்திய தேசியக்கொடியின் வரலாறு* 

இந்தியக்கொடியின் தற்போதைய வடிவமைப்பு பல்வேறு கட்டங்களில் பல வடிவங்களாக இருந்து, ஒவ்வொரு முறையும் மெருகூட்டப்பட்டது. 

இந்தியாவின் முதல் தேசியக்கொடியை சகோதரி நிவேதிதா 1904 ஆம் ஆண்டு முதல் முதலில் வடிவமைத்தார். 

அந்தக்கொடி, சிவப்பு நிறத்தில் மஞ்சள் கோடுகளுடன், கொடியின் நடுப்பகுதியில் வஜ்ரா மற்றும் பக்கங்களில் ‘வந்தே மாதரம்’ என்ற வார்த்தைகளும் இருக்கும் படி வடிவமைக்கப்பட்டது.

1906 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 அன்று, கொல்கத்தாவில் இருக்கும் பார்சி பாகன் சதுக்கத்தில், முதன்முதலாக மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டது. 

அந்த மூவர்ணக்கொடியில் நீலம், மஞ்சள் மற்றும் சிவப்பு என்ற மூன்று வண்ணங்கள், மூன்று பட்டைகளாக இருந்தன. 

இதைத் தவிர்த்து, எட்டு நட்சத்திரங்கள், இந்தியாவின் எட்டு மாகாணங்களைக் குறிக்கும் படி அமைந்திருந்தது. 

மேலும், மஞ்சள் நிறப்பட்டையில் ‘வந்தே மாதரம்’ என்று வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன. 

மேலும், சிவப்பு நிறப்பட்டையில் சூரியன், பிறை நிலவு மற்றும் நட்சத்திரம் இருந்தன.

ஆனால், அடுத்த 10 ஆண்டுகளில் மீண்டும் தேசியக்கொடியின் வடிவமைப்பு மாற்றப்பட்டது. 

1917 ஆம் ஆண்டில், யூனியன் ஜாக், ஐந்து சிவப்பு மற்றும் நான்கு பட்டைகள் உடன், ஏழு நட்சத்திரங்கள் மற்றும் கூடுதலாக ஒரு நட்சத்திரத்துடன் இருக்கும் ஒரு பிறை நிலவு வடிவத்துடன் மாற்றி அமைக்கப்பட்டது. 

இந்தக்கொடியை, அன்னி பெசன்ட் அம்மையார் மற்றும் லோகமான்ய திலக் ஆகியோர் ஏற்றினார்கள்.

அடுத்ததாக, 1921 ஆம் ஆண்டு பிங்கலி வெங்கையா என்ற சுதந்திரப் போராட்ட வீரர் ஸ்வராஜ் கொடியை வடிவமைத்தார். இந்தக் கோடியில் முதலில் இருக்கும் மேற்புறப்பட்டை வெள்ளை நிறத்திலும், நடுப்பகுதி பச்சை நிறத்திலும், கீழ் பட்டை சிவப்பு நிறத்திலும் இருந்தது. 

கொடியின் நடுப்பகுதியில் நூற்பு சக்கரம் வடிவமைக்கப்பட்டு, அது மூன்று வண்ணங்களிலும் பரவியது மற்றும். 

இந்தக் கொடி, ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்து இந்தியாவின் சுதந்திரத்தை பிரதிநிதித்துவப்படுத்தியது.

அடுத்த வடிவமைப்பில், பெரிதான மாற்றங்கள் செய்யப்படாமல், வண்ணங்கள் மட்டும் இடம் மாறின. 

1931 ஆம் ஆண்டில், வெள்ளை பட்டை நடுவில் மாற்றப்பட்டு, பச்சை பட்டை மேலே முதல் வரிசையில் இடம்பெற்றது. 

கீழே இருக்கும் சிவப்பு நிறம் குங்குமப்பூ நிறமாக மாறியது. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, நடுவில் அசோக சக்கரமாக மாற்றப்பட்டது.

 *மூவர்ணக் கொடி* 

மூவர்ணக் கொடி
தற்போதைய கொடி, இந்தியா சுதந்திரம் வாங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு, இந்தியாவின் டொமினியன் கொடியாக ஜூலை 22, 1947 அன்று வடிவமைக்கப்பட்டது. 

இந்திய சுதந்திரம் பெற்று, குடியரசாக மாறியவுடன், அதுவே நாட்டின் கொடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

 *இந்திய மூவர்ணக் கொடியின் முக்கியத்துவம்* 

இந்தியக்கொடியில் இருக்கும் குங்குமப்பூ நிறம் தைரியத்தைக் குறிக்கிறது. 

வெள்ளை நிறம் அமைதி மற்றும் உண்மையைக் குறிக்கிறது. 

பச்சை நிறம் வளர்ச்சி மற்றும் வளத்தைக் குறிக்கிறது. 

அசோகா சக்கரம் தர்மம் மற்றும் நீதியைக் குறிக்கிறது.


🌷🌷

Wednesday, 18 January 2023

Sais Material Download link

Sais Material Download link

https://drive.google.com/drive/mobile/folders/1QAOM-n7In6D0GhVpX8atqO8ScldMEFcM/1u0ioegGRN1hVMUxyIj5Z4IBJPyhZqYGh?usp=share_link&sort=13&direction=a

https://drive.google.com/drive/mobile/folders/1QAOM-n7In6D0GhVpX8atqO8ScldMEFcM/1egXO_iOGL9LnEens6tYPHPiYK9cy0_PB?usp=share_link&sort=13&direction=a

Sunday, 15 January 2023

*#பொழி கட்டுதல்* /காப்பு கட்டுதல்

*#பொழி கட்டுதல்* 






அதிகாலை விடியலில்,ஆவாரம்பூ- கன்னிப் பிளை பூ,வேப்பிலை எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து வீட்டின் கதவு ஜன்னல்கள் என்று வீட்டைச் சுற்றிலும் பொழி(காப்பு)கட்டுதல் கட்டும் பழக்கம் எங்கள் கரிசல் மண் பக்கம் உண்டு. காடுகளிலும், தோட்டத்திலும் கட்டுத்தரையிலும், மோட்டார் பம்பு ஷெட்களிலும் கோழிகூப்பிடும் போதே பொழி கட்டுவாங்க. இது கிருமிகளிடமிருந்து நம்மை காக்கும்.

கையளவு துணி இருந்தாலும், கால் மேல் கால் போட்டுக் கம்பீரமாய் பொது இடத்தில் உட்கார முடிகிறது என்றால் உழைப்பு. குன்றின் மீது ஏறி கர்வமாய் நிற்கக் கூடிய துணிவு கடவுளுக்குப் பின் உழவனுக்கு மட்டுமே இருக்கிறது! 
படைப்பது மட்டுமல்ல பயிரிடுவதும் கூட…. 



தமிழர்கள் அதிகம் குளிர் தாங்குவதில்லை.
முன் மற்றும் பின் பனிக்காலங்களில்,
கார்த்திகை -மார்கழியில் குளிரில் முடங்கிக்கிடந்தவர்கள் தையில் வந்த வெயிலை" பொங்கலோ பொங்கல் " என ஆரவாரமாக வரவேற்கிறார்கள். 
 சூரிய வெயில் என்பது ஒவ்வொரு தனிமனித வாழ்வியலோடு பின்னிப் பிணைந்தது.. கதிரவனோடு சேர்த்து உழவுக்கு சுவாசமான விலங்குகளையும் ஒரு சேர மதிக்கும் தை பொங்கல் பண்டிகை.

திருவளர்வாழ்க்கை,கீர்த்தி ,தீரம்,நல்லறிவு, வீரம், மருவுபல் கலையின் சோதி,வல்லமை,யென்ப வெல்லாம்
வருவது ஞானத்தாலே வையக முழுது மெங்கள்பெருமைதா னிலவி நிற்கப் பிறந்தது ஞானபாநு.
 
கவலைகள்,சிறுமை,நோவு,கைதவம்,வறுமைத்துன்பம்அவலமா மனைத்தைக்
காட்டில் அவலமாம் புலைமையச்சம்,
இவையெலாம் அறிவிலாமை என்பதோர்இருளிற் பேயாம்,
நவமுறு ஞானபாநு நண்ணுக:தொலைக பேய்கள்.
- பாரதி

தை மாச மதிய வெயிலில் மணல் தெரிய தெளிந்தோடும் காவிரி….
தை நினைவுகள்…..
- குபராவின் எழுத்து….
*****
தை பிறப்பு உண்மையிலேயே உயிரின் பிறப்பு. அதனால்தான் அது பிறக்கும் நாள் நமக்கு அவ்வளவு அழகான நாள். தெருக்களெல்லாம் கோலம், திண்ணைகளெல்லாம் சுண்ணாம்பு, செம்மண், சுவர்களெல்லாம் வெள்ளை, வீடுகள் மேலெல்லாம் வெள்ளை வெய்யில், வயல்களிலெல்லாம் கதிர் – கிராமத்தில்தான் தை பிறந்த வனப்பு தெருத் தெருவாகத் தோன்றும்.

*• The Seithikathir News Service!*


கதிர் அறுவடை, கரும்பு அறுவடை, மஞ்சள் இஞ்சி பூரண கர்ப்பத்திலிருந்து பொன்மேனியுடன் வெளிப்படும் காலம். நீரும் நிலமும் கலந்து கலவி புரிந்து பெரும் பேறு - இவையெல்லாம். தை மாதம் இயற்கையின் பேறுகாலம். குடியானவனும் மாடும் மருத்துவம் செய்கிறவர்கள்.

குடியானவனும் மாடும் இல்லாவிட்டால் என்ன இருக்கிறது? அவர்கள் தை பிறப்பில் தலை நிமிர்கிறார்கள். அவர்கள் பட்டபாடு கதிர்வாங்கிப் பழுத்து தலை சாய்ந்து நிற்கிறது.

பொங்கல் அவர்களுக்குத்தான். பொன் போலப் புதுவெயிலில் மின்னும் கதிர்கள் அவர்களுடைய உள்ளம் பொங்கி நிற்கும் நிலையில் தென்படுகின்றன. அவர்கள் வயிற்றில் பால் - புதுப்பானையின் பாலுடன்! ஆறு மாதங்கள் ஆடியோடி உழைத்த உழைப்பிற்கு தையில் பலன் - தை பிறக்கும் நாள் தூயநாள் தான்.

அந்தத் திருநாளில் மக்கள் புத்துயிர் பெறுகிறார்கள் என்பது உண்மை. செந்நெல்லும் கரும்பும் உள்ளே வந்து தித்தித்திப்பைத் தருகின்றன. உழைப்புக்குப் பிறகு இன்பம் - உழைப்பின்றி உயிர் வாழ முடியாது என்ற தேர்ச்சி உணவாகச் சமைந்து விடுகிறது.

பட்டணவாசிகள் தை பிறப்பை கொண்டாடுவதில் பொருளில்லை. குடியானவன்தான் அதைக் கொண்டாட வேண்டியவன். அவனுக்குத்தான் அந்த உரிமையுண்டு; அவன் போடும் சோறு நாம் உண்பது; அவன் கை உழைப்பைக் நாம் உண்டு களிக்கிறோம்; அவன் பெறுவது வாரம் ; நாம் பெறுவது மேல் வாரம். நிலம் நம்முடையது !

நிலம் எப்படி நம்முடையதாயிற்று ? அவன் ஏன் அந்த நிலத்தை இழந்தான்! அது வேறு கதை.

நிலத்தை இழந்தான் குடியானவன்; நிலம் அவனை இழக்க முடியாது. குடியானவனும் மாடும் மிதித்த பூமிதான் விளையும். அவன் கால் பட்ட இடம் கதிர்; கைப்பட்ட இடம் கரும்பு; ஏர் பிடித்த இடம் களஞ்சியம்; வாய்க்கால் பிடித்த இடம் வளப்பம்; குடியான மகளிர் குளித்த இடம் நாற்றங்கால்; நிமிர்ந்த இடம் நெஞ்சுக்கதிர்; நடக்குமிடம் நவ தானியம்; இந்த வளப்பத்தில் வாழ்ந்தும் வாடுகிறார்கள்.

ஆனால் அதுதான் இயற்கை விதியோ? தேன் சேகரித்த தேனீக்களா அதை அனுபவிக்கின்றன? பொருள் சேகரிப்பவனா பொருளை அனுபவிக்கிறான்? ஈட்டுகிறவன் அனுபவிக்க மாட்டான் என்பது சாபம் போலிருக்கிறது.

நினைவு எப்படிப் போகிறது! பொங்கலிலிருந்து 
பொருளாதாரத்திற்கு வந்துவிட்டேன்!

பொங்கலன்று புதுநினைவு வர வேண்டும்; புது நினைவு புதுவாழ்வு கொடுக்க வேண்டும். தொண்டைக் கதிர் கிளம்பி வெளியே வருவது போல் நமது நல்லெண்ணம் வெளியாகட்டும்! பழுத்தப்பயிர் தலை சாய்வது போல் நமது உள்ளம், கனிந்து படியட்டும்.

Sunday, 1 January 2023

சர்க்கரைவள்ளி கிழங்கு (Sweet Potatoes)

ஏறக்குறைய சாகாவரம் தரும் ஒரு உணவு என்ன தெரியுமா?




மிக மிக மலிவு விலையில் கார்த்திகை, மார்கழி, மாதங்களில் தெருக்களில் கொட்டி விற்கப்படும் சர்க்கரைவள்ளி கிழங்கு (Sweet Potatoes) தான் அது.

நாம் உண்ணும் உணவுகள் கலப்படமா? சுகாதாரமானதா?  ஆரோக்கியமானதா? என்று தெரியாமலேயே சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறோம்.!

அவ்வாறு சாப்பிடும்போது உணவு செரித்து அதை சக்தியாக்கிய பிறகு நமது உடலில் தங்கும் கழிவுகள் தான் Free Radicals எனும் கேன்சரை உண்டாக்கும் நஞ்சு!

அத்தகைய நஞ்சு நமது வாகனங்களில் நீண்ட தூரம் அதிக நாட்கள் பயணித்த பிறகு சைலன்சரில் படிந்திருக்கும் கரிக்கழிவு போன்றது தான் அந்த Free Radicals.

எப்படி வண்டியை சர்வீஸ் விட்டு சைலன்சரை சுத்தம் செய்கிறோமோ அதற்கு இணையானது தான் நாம் உண்ணும் சர்க்கரைவள்ளி கிழங்கு (Sweet Potatoes). 

அது நமது உடலில் தேங்கும் கேன்சரை உண்டாக்கும் கழிவுகளை சுத்தமாக துடைத்து எடுத்து ஒழிக்கிறது.

நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுக்க கேன்சர் பற்றிய பயமே இல்லாமல் வாழவேண்டும் என்று நினைத்தால் சீசனில் கிடைக்கும் சர்க்கரைவள்ளி கிழங்கை தேவையான அளவு சாப்பிடுங்கள்.

வைத்தியனுக்கு தருவதை
வணிகனுக்கு தருவோம்!

Friday, 30 December 2022

Makkal_ID

UP/Bihar உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து வெளியேறும் மக்கள் எண்ணிக்கை சராசரியாக 6மில்லியன் 




டெல்லிக்கு அடுத்து அதிகமாக தமிழ்நாட்டிற்கு வரும் வட இந்தியர்கள் எண்ணிக்கை 8M

இவர்களை எப்படி கட்டுப்படுத்துவது?

அதற்குதான் இந்த #MakkalID. *_நாட்டு ⚖️ நடப்பு_*

Sunday, 25 December 2022

*December 25 - அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்த தினம்,*

♨️ *அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்த தினம்,*




1924 ,டிசம்பர் 25 ,                    
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் இந்திய பிரதமரும் ,பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த அரசியல்வாதியும் ஆவார்.  இவர் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள குவாலியரில் 1924 ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் நாள் பிறந்தார். இவர் மக்களவைக்கு ஒன்பது முறையும், மாநிலங்களவைக்கு இரண்டு முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் வெளியுறத் துறை அமைச்சராகப் பணியாற்றியவர். இவரது பணி காலத்தில் சாலை மற்றும் தொழில்நுட்பத் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெற்று முன்னேறியது.

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...