தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்களை தமிழக அரசு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்து வருகிறது. கிராம நிர்வாக அதிகாரி முதல் துணை ஆட்சியர் வரை இந்த தேர்வின் மூலம் அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
குரூப்-2, 2A தேர்வு
குரூப் 2 இன் கீழ் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பதாரர்கள்,
முதல்கட்ட தேர்வு (Preliminary Examination),
முதன்மை/இறுதி தேர்வு (Main Written Examination), மற்றும்
நேர்காணல் (Interview)
ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
பதவிகள்
நேர்முகத் தேர்வு கொண்ட குரூப் 2 தேர்வின்கீழ் நகராட்சி ஆணையர், துணை வணிகவரி அதிகாரி, சார் பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் (ஏஎஸ்ஓ), உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர் உட்பட பல்வேறு பதவிகள் வருகின்றன.
அதே சமயம், அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளர், நேர்முக எழுத்தர், தலைமை செயலகம் மற்றும் டிஎன்பிஎஸ்சியில் தனிப்பட்ட எழுத்தர் போன்ற பணியிடங்கள் குரூப்-2-ஏ தேர்வு மூலமாக நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி
குரூப் 2 , 2ஏ தேர்வு விண்ணப்பித்தார்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சமாக ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும்.
இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
அதேசமயம், குரூப் 2 , 2ஏ தேர்வுக்கான கல்வித் தகுதி பதவிக்கு ஏற்ப மாறுபடும். எடுத்துக்காட்டுக்கு, தனிப்பட்ட எழுத்தர் பதவிக்கு விண்ணப்பிக்க தட்டச்சு முடித்திருக்க வேண்டும்.
குரூப் 2 தேர்வுக்கு எப்படி தயாராவது? என்னென்ன புத்தகங்களை படிக்கலாம்?
குரூப் 2 தேர்வானது முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மை தேர்வு என இரு தேர்வுகளாக நடைபெறும். நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கு முன்பு ஒரே ஒரு தேர்வு மட்டுமே நடத்தப்பட்டது.
முன்பு 2022 மே 21ம் தேதி குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகள் நடைபெற்றது.
TNPSC குரூப் 2 தேர்வு என்பது என்ன?
தமிழக அரசு சார்த்த பணிகளுக்கு தேவையான திறமையான ஊழியர்களை கண்டறிய அரசு பல்வேறு போட்டித்தேர்வுகள் மற்றும் நேர்காணல் ஆகியவற்றை TNPSC சார்பில் அரசு நடத்தி வருகிறது. டிஎன்பிஎஸ்சி நடத்தும் அரசு தேர்வுகளில் ஒன்று குரூப் 2 தேர்வு ஆகும்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு எந்தெந்த பதவிகளுக்கு நடத்தப்படுகிறது?
சார் பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் (ஏஎஸ்ஓ), உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர், பெண்கள் நல அலுவலர், சமூக பாதுகாப்பு, கூட்டுறவு சங்கங்களின் மூத்த ஆய்வாளர், திட்ட உதவியாளர், சிறப்பு உதவியாளர், சிறப்பு கிளை உதவியாளர், நன்னடத்தை அலுவலர், சிறைத் துறை ஆகிய பல்வேறு பதவிகள் நேர்காணல் அடிப்படையில் நிரப்படும்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2A தேர்வுக்கான பதவிகள்
நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளில் அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளர், நேர்முக எழுத்தர், தலைமை செயலகம் மற்றும் டிஎன்பிஎஸ்சியில் தனிப்பட்ட எழுத்தர் போன்ற பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
குரூப் 2 தேர்வுக்கான வயது வரம்பு என்ன?
குரூப் 2 மற்றும் 2A தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 32 -க்குள் இருக்க வேண்டும். பட்ட படிப்பு படித்த பொதுப்பிரிவு அல்லாத விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு இல்லை.
குரூப் 2 தேர்வுக்கு யார் விண்ணப்பிக்கலாம்?
குரூப் 2 , 2A தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் டிகிரி படித்திருக்க வேண்டும். இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், குறிப்பிட்ட சில பதவிகளுக்கு விண்ணப்பிக்க தட்டச்சு, சுருக்கெழுத்து போன்றவை முடித்திருக்க வேண்டும்.
குரூப் 2 தேர்வு எத்தனை கட்டங்களாக நடத்தப்படும்?
குரூப் 2 தேர்வானது முதல்நிலைத் தேர்வு (Preliminary Exam), முதன்மைத் தேர்வு (Main Exam) மற்றும் நேர்காணல் (Interview) என மூன்று கட்டங்களாக நடத்தப்படும். குரூப் 2A தேர்வுகளுக்கு நேர்முகத்தேர்வு இருக்காது. எழுத்து தேர்வானது காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணிவரை ஒரே ஷிப்டாக நடைபெறும். முதல்நிலைத் தேர்வானது மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு 3 மணிநேரம் நடைபெறும். மெயின் தேர்வு 400 மதிப்பெண்களுக்கு நடைபெறும். மெயின் தேர்வில் 1 மணிநேரம் 30 நிமிடங்கள் தாள் I -க்கும் + 3 மணிநேரம் தாள் II -க்கும் வழங்கப்படும். நேர்முகத்தேர்வுக்கு 100 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதல்நிலைத் தேர்வில் தகுதி பெற்றால் மட்டுமே முதன்மை தேர்வு எழுத முடியும். TNPSC குரூப் 2 தேர்வில் எதிர்மறை மதிப்பெண்கள் இல்லை. விண்ணப்பதாரர்கள் சரியாகப் பதிலளித்த கேள்விகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டவுடன், அது 1 ஆல் பெருக்கப்படும்.
குரூப் 2 தேர்வுக்கான பாடத்திட்டம்
குரூப் 2 முதல்நிலைத் தேர்வுக்கான பாடத்திட்டம்: பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், இந்திய புவியியல், இந்தியாவின் வரலாறும் பண்பாடும், இந்திய அரசியலமைப்பு, இந்திய பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம், தமிழ்நாடு வரலாறு, தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சம்மோக அரசியல் இயக்கங்கள், திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (புத்திக்கூர்மை). முதன்மை எழுத்து தேர்வு தாள் 1 (100 மதிப்பெண்): மொழிபெயர்த்தல், சுருக்கி வரைதல், பொருள் உணர்திறன், சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல், திருக்குறள் தொடர்பான கட்டுரை வரைதல், கடிதம் வரைதல், தமிழ் மொழி அறிவு. முதன்மை எழுத்து தேர்வு தாள் 2 (300): பொது ஆய்வுகள் (விளக்க வகை).
TNPSC குரூப் 2 மற்றும் 2A பாஸ் மார்க் எவ்வளவு?
குரூப் 2 தேர்வுக்கான பாஸ் மார்க்: முதன்மை எழுத்துத் தேர்வு 300 மதிப்பெண்கள், வாய்வழித் தேர்வு 40 மதிப்பெண்கள் என மொத்தம் (300+40) 340 மதிப்பெண்களுக்கு 102 மதிப்பெண்கள் பெற்றால் பாஸ். குரூப் 2A தேர்வுக்கான பாஸ் மார்க்: மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு 90 மதிப்பெண்கள் பெற்றால் பாஸ்.
எந்த மாதிரியான புத்தகங்கள் படிக்க வேண்டும்?
மனோகர் பாண்டே எழுதி அரிஹந்த் பப்ளிகேஷன் வெளியிட்டுள்ள அரிஹந்த் ஜிகே புத்தகம், பஷீர் அகமது, சாம்பசிவம் எழுதி சக்தி பப்ளிகேஷன் வெளியிட்டுள்ள குரூப்-2A புத்தகம், கார்த்திகேயன் எழுதி டாடா மெக்ராஹில் வெளியிட்டுள்ள புத்தகத்தை படிக்கலாம். பொது ஆங்கில அறிவுக்கு எஸ்.ஓ.பக் ஷி எழுதி அரிஹந்த் பதிப்பகம் வெளியிட்டுள்ள அப்ஜெக்டிவ் ஜெனரல் இங்கிலீஷ் என்ற புத்தகத்தை படிக்கலாம். திறனறிதல் பாடத்திற்கு சுப்புராஜ் எழுதி சுரா பதிப்பகம் வெளியிட்டுள்ள குரூப்-2 ஆப்டிடியூட் புத்தகம், சாக் ஷி பதிப்பகம் வெளியிட்டுள்ள மென்டல் எபிலிடி டெஸ்ட் புத்தகம், அரிஹந்த் பதிப்பகத்தின் பி.எஸ்.சிஜ்வாலி, எஸ்.சிஜ்வாலி எழுதிய ‘எ நியூ அப்ரோச் டு ரீசனிங்’ ஆகிய புத்தகங்களை படிக்கலாம். தமிழ் மற்றும் ஆங்கிலத்திற்கு சக்தி பதிப்பகத்தின் டிஎன்பிஎஸ்சி சுப்ரீம் கைடு மற்றும் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் பாட நூல்கள் உபயோகமாக இருக்கும். நேர்முகத் தேர்வுக்கு, பெக்கி மெக்கியின் கரியர் கான்பிடென்ஷியல், ரிச்சர்டு பிளாசவிக்கின் ‘அமேசிங் இன்டர்வியூ ஆன்சர்ஸ்’ மற்றும் ஜிகேபி பப்ளிஷர்சின் இன்டர்வியூ அண்டு ஜிடி போன்ற புத்தகங்கள் உதவிகரமாக அமையும். இதுதவிர முந்தைய ஆண்டுகளின் கேள்வித்தாள்களை படிப்பது அவசியம். பல இணையதளங்கள் குரூப்-2 தேர்வுக்கான தொடர் பயிற்சித் தேர்வுகளையும் நடத்துகின்றது. அதில் கலந்துகொள்ளலாம்.
TNPSC குரூப் 2 தேர்வை தமிழில் எழுதலாமா?
குரூப் 1 தேர்வை தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டு வழியிலும் எழுதலாம். ஆனால், நீங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டில் ஏதேனும் ஒன்றை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் தமிழ்வழியில் தேர்வு செய்தால் கடைசிவரை தமிழ் வழியில் மட்டுமே தேர்வு எழுத முடியும். ஆங்கிலத்தை தேர்வு செய்தால் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு எழுத முடியும். குரூப்-1 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது உங்களுக்கான விருப்ப மொழியை தேர்வு செய்யலாம்.
குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பக்கட்டணம் எவ்வளவு?
குரூப் 1 தேர்வுக்கு பதிவுக் கட்டணமாக ரூ.150 மற்றும் முதனிலைத் தேர்வு கட்டணம் ரூ.100, முதன்மை எழுத்துத் தேர்வு கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள் கட்டணத்தை ஆன்லைன் வழியாக மட்டுமே செலுத்த வேண்டும்.
எவ்வளவு சம்பளம் வழங்கப்படும்?
குரூப் 1 பதவிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதிய நிலை 18-யின் கீழ் ரூ.36900 முதல் ரூ. 1,16,600 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க என்னென்ன ஆவணங்கள் தேவை?
சான்றிதழ்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்.ஆதார் அட்டை அல்லது அரசால் வழங்கப்பட்ட ஏதாவது ஆவணம். ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படம் (அகலம்: 3.5 செ.மீ, உயரம்: 4.5 செ.மீ, 50 KB-க்கு மேல் இருக்க கூடாது). ஊனமுற்றோர் சான்றிதழ் (ஏதேனும் இருந்தால்). ஸ்கேன் செய்யப்பட்ட கையொப்பம் (அகலம்: 6 செ.மீ, உயரம்: 3 செ.மீ, 50 KB க்கு மேல் இருக்க கூடாது) . உடல் தகுதி சான்றிதழ் (தேவைப்பட்டால்).
குரூப் 2 தேர்வுக்கு எப்படி விண்ணப்பிப்பது?
முதலில், TNPSC அதிகாரப்பூர்வ இணையதளமான tnpscexams.in -க்குச் செல்லவும். பின்னர், TNPSC ஒரு முறை பதிவு உள்நுழைவு விவரங்களை நிரப்பு உள்நுழையவும். TNPSC குரூப் 1 விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். பின்னர், தேவையான ஆவணங்களை பதிவேற்றி, விண்ணப்பக் கட்டணம் செலுத்தவும். எதிர்கால குறிப்புக்காக, TNPSC குரூப் 1 விண்ணப்பத்தை பிரிண்ட் எடுக்கவும்.