Sunday, 3 June 2018

*May-மே மாத முக்கிய தினங்கள்*

மே மாத முக்கிய தினங்கள்(May Month Important Days)

1
--->
உலக தொழிலாளர் தினம்(World Labour's Day)

2
--->
தேசிய ஆயுள்காப்பீட்டு தினம்(National Life Insurance Day)
உலக டூனா தினம்(World Tuna Day)
Tunaடூனா என்பது உப்பு நீரில் வாழும் ஒரு வகை மீன்

3
--->
உலக ஊடக சுதந்திர தினம்(World Press Freedom Day)
தேசிய ஜவுளி தினம்(National Textile Day)

4
--->
உலக சுரங்க தொழிலார்கள்&
தீயனைப்பாளர்கள் தினம்(World Land Miners & Fire Fighters Day)

5
--->
உலக மருத்துவச்சி தினம்(World midwives day)
உலக பீஎச் தினம்(World Pulmonary Hypertension Day)
Pulmonory Hypertension என்பது நுரையீரலில் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் நோய்
உலக சுகாதாரமான கை தினம்(National Hand Hygeine Day)

6
--->
தேசிய பான தினம்(National Beverage Day)

7
--->
உலக எய்ட்ஸ் அனாதைகள் தினம்(World Aids Orphans Day)

8
--->
உலக செஞ்சிலுவை தினம்(World Redcross Day)

11
--->
இந்திய தொழில்நுட்ப தினம்(Indian Technology Day)

12
--->
உலக செவிலியர் தினம்(World Nurse Day)

15
--->
உலக குடும்ப தினம்(World Family Day)

17
--->
உலக உயர் இரத்த அழுத்த தினம்(World Hypertension Day)
உலக தொலைத்தொடர்பு தினம்(World Telecommunication Day)

18
--->
உலக அருங்காட்சியகங்கள் தினம்(World Museum Day)

21
--->
சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு தினம்(World Anti-Terrorism Day)

22
--->
உலக உயிரியல் பல்வகை தினம்(World Bio-Diversity Day)

24
--->
காமன் வெல்த் தினம்(Common Wealth Day)

25
--->
உலக தைராய்டு தினம்(World Thyroid Day)

31
--->
உலக புகையிலை ஒழிப்பு தினம்(World No Tobacco Day)

Study well
All the best

Saturday, 2 June 2018

*சிறப்புப் பெயர்*

#அகத்தியர்
¤தமிழ்முனிவன்
¤மாதவ முனிவன்
▪மாமுனி
▪குறுமுனி
▪திருமுனி
▪முதல் சித்தர்
▪பொதியில் முனிவன்
▪அமர முனிவன்
▪குடமுனி

#தொல்காப்பியர்
▪காப்பியனார்
▪காப்பியன்
▪ஐந்திரம் நிறைந்தவன்

#திருவள்ளுவர்

●நாயனார்
●தேவர்
●முதற்பாவலர்
●தெய்வப்புலவர்
▪நான்முகன்
●மதானுபங்கி
●செந்நாப்புலவர்
●பெருநாவலர்
●பொய்யில்புலவன்
●தெய்வமொழிப் புலவர்
●தமிழ்மாமுனி
●வள்ளுவன்

#திருமூலர்

●முதல்யோகி
●தத்துவக் கவிஞர்
●மூலன்

#கபிலர்
●புலன் அழுக்கற்ற அந்தணன்

●பொய்யா நாவிற் கபிலன்
●குறிஞ்சிக்கவி
●நல்லிசை வாய்மொழிக்கபிலர்
●விரித்த கேள்வி விளங்கு புகழ் கபிலன்

#பரணர்
●வரலாற்றுக் கபிலர்

#நக்கீரன்

●கீரன்
○பொய்யற்ற கீரன்

#ஔவையார்
●தமிழ் மூதாட்டி

○தமிழ்ப்பாட்டி
●அருந்தமிழ்ச் செல்வி
●அவ்வை

#இளங்கோவடிகள்
●அடிகள்
●அரசத் துறவி

#சீத்தலைச் சாத்தனார்
●தண்டமிழாசான்
○சாத்தனார்

#காரைக்கால் அம்மையார்
○புனிதவதியார்
○அம்மை

#திருஞானசம்பந்தர்
●ஞானசம்பந்தர்
●ஆளுடையபிள்ளை
●இன்தமிழ் ஏசுநாதர்
●திராவிட சிசு
●ஞானத்தின் திருவுரு

#இளம்பூரணார்
●உரையாசிரியார்

#மூவர் முதலிகள்
●அப்பர்,சுந்தரர்,சம்பந்தர்

#திருநாவுக்கரசர்

●அருள்நீக்கியார்
●அப்பரடிகள்
○அப்பர்
●வாகீசர்
●தருமசேனர்

#சுந்தரர்
●ஆருரர்
●திருநாவலூரார்
●வன்தொண்டர்
●தம்பிரான் தோழர்

#மாணிக்கவாசகர்
●வாதபூரடிகள்
●தென்னவன் பிரம்மராயன்

#சேக்கிழார்
●அருண்மொழித்தேவர்
●உத்தம சோழப் புலவன்
●தொண்டர்சீர் பரவுவார்

#திருமழிசை ஆழ்வார்
●பக்திசாரர்

#நம்மாழ்வார்

●வேதம்தமிழ் செய்த மாறன்
●மாறன்
●பராங்குசர்

#கண்ணகி
●கற்பின் கொழந்து
●பொற்பின் செல்வி

#குலசேகராழ்வார்
●கோழியர்கோன்

#பெரியாழ்வார்
●விஷ்ணுசித்தர்
●பட்டர்பிரான்

#ஆண்டாள்

●பெரியாழ்வார் பெற்றெடுத்த பைங்குடி
●சூடிக்கொடுத்த சுடர்கொடி
●சூடிக்கொடுத்த நாச்சியார்
●பாவை நாச்சியார்

#தொண்டரடி பொடியாழ்வார்
●விப்ரநாராயணன்

#திருமங்கையாழ்வார்
●நீலன்
●பரகாலன்
●திருமங்கை மன்னன்

#சேரமான் பெருமாள் நாயனார்
●சேரமான் தோழர்

#இராமானுசர்
●யதிராசர்

#நம்பியாண்டார் நம்பி
●தமிழ்வியாசர்

#செயங்கொண்டர்
●பரணிப்புலவர்

#ஒட்டக்கூத்தர்
●கவிராட்சதர்
●கௌடப்புலவர்
●காளக்கவி
●சர்வஞ்ஞக் கவி

#கம்பர்
●கவிச்சக்கரவர்த்தி
●விருத்தக்கவி

#காளமேகம்
●ஆசுகவி

#அருணகிரிநாதர்
●சந்தவேந்தர்
●சந்தக்கவி

#மணவாள முனிகள்
●பெரிய ஜியர்

#வீரமாமுனிவர்
●செந்தமிழ்த் தேசிகர்
●உரைநடை இலக்கிய முன்னோடி

#வேதநாயகம் பிள்ளை
●முதல் நாவலாசிரியர்

#எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை
●✝கிறிஸ்துவக் கம்பர்
●தமிழ்ப் பன்யன்

#புத்தர்
☆ஆசிய ஜோதி

#நேரு
♡ஆசியாவின் ஜோதி

#வேதநாயக சாஸ்திரி
●ஞான தீபக்கவிராயர்

#இராமலிங்க அடிகள்
●வள்ளலார்
●சன்மார்க்க கவி
卐திருவருட்பிரகாச வள்ளலார்
●வடலூரார்
●இராமலிங்கம் பிள்ளை

#மீனாட்சி சுந்தரம் பிள்ளை
●பிற்காலக் கம்பர்
●நவீன கம்பர்
●மகாவித்துவான்

#தண்டபாணி சுவாமிகள்
○திருப்புகழ் சுவாமிகள்
●முருகதாச சுவாமிகள்
●வண்ணச்சரபம்

#சூரிய நாராயண சாஸ்திரி
●திராவிட சாஸ்திரி
●பரிதிமாற்கலைஞர்

#பாரதியார்

●உணர்ச்சிக் கவி
●புதுமைக்கவி
●தேசியக் கவி
●விடுதலைக் கவி
●பாட்டுக்கொரு புலவன்
●சிந்துக்கு தந்தை
●நீடுதுயில் நீக்க பாடிவந்த நிலா
●மகாகவி
●வீரக்கவி
●யுகக்கவி

#தேசிக விநாயகம்பிள்ளை

●கவிமணி

#வெ.ராமலிங்கம்பிள்ளை

●நாமக்கல் கவிஞர்
●காந்தியக் கவிஞர்
●காங்கிரஸ் புலவன்

#பானதிதாசன்
●புரட்சிக்கவி
●பாவேந்தர்

#திரு.வி.கல்யாணசுந்தரனார்

●தமிழ்த்தென்றல்
●திரு.வி.க

#ச.து.சு.யோகியார்
●பாலபாரதி

#பெரியசாமி
●தூரன்

#கொத்தமங்கலம் சுப்பு

●கலைமணி

#வாணிதாசன்
●தமிழ்நாட்டுதாகூர்

#கண்ணதாசன்
●கவியரசு
●காரைமுத்துப்புலவர்
●வணங்காமுடி
●கமகப்பிரியர்

#சுத்தானந்த பாரதியார்
●கவியோகி
●மகரிஷி

#பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
●பொதுவுடைமைக் கவிஞர்
●பட்டுக்கோட்டையார்

#சுரதா
●சுப்புரத்தினதாசன்
●கவிமாமன்னர்
●உவமைக் கவிஞர்

#அப்துல் ரகுமான்
#கவிக்கோ

#ஜி.யு.போப்

●தமிழ்மாணவர்

#வ.வே.சு.ஐயர்
●தமிழ்முதல் சிறுகதையாசிரியர்

#மு.கதிரேசன் செட்டியார்
●பண்டிதமணி
●மகாமகோபத்தியார்

#பொ.வே.சோமசுந்தரனார்
○பெருமழைப்புலவர்

#க.அப்பதுரை
●பன்மொழிப்புலவர்

#தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
●பன்மொழி வித்தகர்

#மு.வரதராசனார்
●மு.வ
●சென்னை நாவலாசிரியர்

#ம.பொ.சிவஞானம்
●சிலம்புச் செல்வர்

#செல்லப்பன்
●சிலம்புபொலியார்

#கி.ஆ.பெ.விசுவநாதம்
●முத்தமிழ்க் காவலர்

#சத்தியமூர்த்தி
●தீரர்

#காமராஜர்
●கர்மவீரர்

#என்.எஸ்.கிருஷ்ணன்
●கலைவாணர்

#எம் ஆர் ராதா

●நடிகவேள்

#பம்மல் சம்மந்த முதலியார்
●தமிழ்நாடக தந்தை

#சங்கரதாசு சுவாமிகள்

●தமிழ்நாடகப் தலைமை ஆசிரியர்

#பரிதிமாற்கலைஞர்
●தமிழ்நாடகப் பேரசாரியர்

#நா.காமராசன்
●வானம்பாடி கவிஞர்
●உருவகக் கவிஞர்

#பாலசுப்பிரமணியன்
●சிற்பி

#மீ.ரஜேந்திரன்
●மீரா

#ரா.சேதுபிள்ளை
●சொல்லின் செல்வர்

#சி.பா ஆதித்தனார்
●தமிழர் தந்தை

#பெரியவாச்சான்பிள்ளை
●வியாக்கினச் சக்ரவர்த்தி

#அமீது இப்ராகீம்
#வண்ணக்களஞ்சிய புலவர்

#செய்குத்தம்பிப் பாவலர்
●சதாவதானி

#கல்கி

●தமிழ்நாட்டு வால்டர் ஸ்கார்ட்

#ரங்கரஜன்
●சுஜாதா

#டி.கே.சிதம்பரம்
●இரசிகமணி

#கி.ராஜநாராயணன்

●கரிசல் எழுத்தாளர்

#மு.மேத்தா

●படிமக் கவிஞர்

#வலம்புரிஜன்

●இலக்கிய சித்தர்

#பெருங்கடுங்கோ

●பாலைக்கவி

#இராம பெரிய கருப்பன்

●தமிழண்ணல்

#அ.ச.ஞானசம்பந்தன்
●சைவமணி

#மா.ராமலிங்கம்

●எழில் முதல்வன்

*99 தமிழ் பூக்கள்.*

👆🏻 *கபிலரின் குறிஞ்சி பாட்டில் கூறிய 99 தமிழ் பூக்கள்.*

1. காந்தள்
2. ஆம்பல்
3. அனிச்சம்
4. குவளை
5. குறிஞ்சி
6. வெட்சி
7. செங்கொடுவேரி
8. தேமா (தேமாம்பூ)
9. மணிச்சிகை
10. உந்தூழ்
11. கூவிளம்
12. எறுழ் ( எறுழம்பூ)
13. சுள்ளி
14. கூவிரம்
15. வடவனம்
16. வாகை
17. குடசம்
18. எருவை
19. செருவிளை
20. கருவிளம்
21. பயினி
22. வானி
23. குரவம்
24. பசும்பிடி
25. வகுளம்
26. காயா
27. ஆவிரை
28. வேரல்
29. சூரல்
30. சிறுபூளை
31. குறுநறுங்கண்ணி
32. குருகிலை
33. மருதம்
34.கோங்கம்
35. போங்கம்
36. திலகம்
37. பாதிரி
38. செருந்தி
39. அதிரல்
40. சண்பகம்
41. கரந்தை
42. குளவி
43. மாமரம் (மாம்பூ)
44. தில்லை
45. பாலை
46. முல்லை
47. கஞ்சங்குல்லை
48. பிடவம்
49. செங்கருங்காலி
50. வாழை
51. வள்ளி
52. நெய்தல்
53. தாழை
54. தளவம்
55. தாமரை
56. ஞாழல்
57. மௌவல்
58. கொகுடி
59. சேடல்
60. செம்மல்
61. சிறுசெங்குரலி
62. கோடல்
63. கைதை
64. வழை
65. காஞ்சி
66. கருங்குவளை (மணிக் குலை)
67. பாங்கர்
68. மரவம்
69. தணக்கம்
70. ஈங்கை
71. இலவம்
72. கொன்றை
73. அடும்பு
74. ஆத்தி
75. அவரை
76. பகன்றை
77. பலாசம்
78. பிண்டி
79. வஞ்சி
80. பித்திகம்
81. சிந்துவாரம்
82. தும்பை
83. துழாய்
84. தோன்றி
85. நந்தி
86. நறவம்
87. புன்னாகம்
88. பாரம்
89. பீரம்
90. குருக்கத்தி
91. ஆரம்
92. காழ்வை
93. புன்னை
94. நரந்தம்
95. நாகப்பூ
96. நள்ளிருணாறி
97. குருந்தம்
98. வேங்கை
99. புழகு

Saturday, 26 May 2018

*வாரன் ஹேஸ்டிங்ஸ் (1772-1785) பற்றிய சில தகவல்கள்:-*

வங்காளத்தின் முதன் தலைமை ஆளுநர் வாரன் ஹேஸ்டிங்ஸ் (1772-1785) பற்றிய சில தகவல்கள்:-
🌷 வங்காளத்தின் முதன்முறையாக தலைமை ஆளுநர் - வாரன் ஹேஸ்டிங்ஸ்
🌷 ஒழுங்கு முறை சட்டம் கொண்டு வந்தவர் - 1773
🌷 கலெக்டர் பதவி உருவாக்கியவர்
🌷 முர்ஷிதாபாத்திலிருந்து கல்கத்தாவிற்கு கருவூலம் மாற்றப்பட்டது
🌷 1772ல் கல்கத்தா வங்காளத்தின் தலைநகரமாகியது
🌷 உரிமையில் மேல் முறையீடு நீதிமன்றம் சதர் திவானி அதலத் எனப்பட்டது
🌷 குற்றவியல் மேல் முறையீடு நீதிமன்றம் சதர் நிசாமத் அதலத் எனப்பட்டது
🌷 இந்திய மற்றும் அயல் நாட்டுப் பொருட்கள் அனைத்திற்கும் 2.5 % ஒரே சீரான சுங்க வரி வசூலிக்கப்பட்டது
🌷 வாரன் ஹேஸ்டிங்ஸ் காலத்தில் 'இந்திய சட்டங்களின் தொகுப்பு' 'ஹால்ஹெட்' என்பவரால் உருவாக்கப்பட்டது
🌷 கல்கத்தாவில் உச்சநீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டது
🌷 கல்கத்தாவில் உச்சநீதிமன்றம் ஒரு தலைமை நீ‌திப‌தி மூன்று துணை நீதிபதிகள் இருந்தனர்.
🌷 முதல் தலைமை நீ‌திப‌தி சர் எலிஜா இம்போ
🌷  வில்லியம் ஜோன்சுடன் இணைந்து 1784ல் வங்காள ஆசிய கழகத்தை (Asiatic Society of Bengal) தொற்றிவித்தார்
🌷 சார்லஸ் வில்கின்ஸ் என்பவர் முதல் முறையாக கீதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அதற்கு முன்னுரை எழுதியவர் வாரன் ஹேஸ்டிங்ஸ்
🌷 1787 வாரன் ஹேஸ்டிங்ஸ் மீது தேச துரோக குற்றச்சாட்டு (impeachment) போடப்பட்டது.
🌷 தேச துரோக குற்றச்சாட்களில் முக்கியமானவை:-
1. நந்தகுமார் வழக்கு
2. ரோகில்லா போர்
3. செயித்சிங் பதவியிறக்கம்
4. அயோத்தி பேகம்கள் விவகாரம்
🌷  வாரன் ஹேஸ்டிங்ஸ் மீது போடப்பட்ட தேச துரோக குற்றங்கள் - 22
🌷 வாரன் ஹேஸ்டிங்ஸ் மீது தேச துரோக குற்றச்சாட்டு சுமத்தியவர் - எட்மண்ட் பர்க்
🌷 7 ஆண்களுக்கு விசாரணைக்கு பிறகு குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டார்

*வேவல் பிரபு (1944 - 1947) பற்றிய சில தகவல்கள்:-*

🍁 ஜின்னாவின் தனிநாடு கோரிக்கை தொடர்பாக காங்கிரஸ்-முஸ்லிம் லீக் இடையே சிம்லாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தை 25 ஜூன் 1945 தோல்வியடைந்த்து.
🍁 16 மே 1946, அமைச்சரவை தூதுக்குழு இந்தியா வருகை
🍁 அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் 9 டிசம்பர் 1946 நடந்தது.

*வெல்லிங்டன் பிரபி (1931 - 1936) பற்றிய சில தகவல்கள்:-*

🌺 இரண்டாம் வட்டமேசை மாநாடு லண்டனில் நடைபெற்றது - 1931
🌺 மூன்றாம் வட்டமேசை மாநாடு லண்டனில் நடைபெற்றது - 1932
🌺 மூன்று வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டவர் - பி.ஆர். அம்பேத்கர்
🌺 வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் 16, ஆகஸ்ட் 1932 அறிவிக்கப்பட்டது.
🌺 வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் அறிவித்தவர் - ராம்சே மக்டொனால்ட்
🌺 இதனை எதிர்த்து காந்தி எரவாடா சிறையில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார்.
🌺 இதனை தொடர்ந்து பூனா ஒப்பந்தம் 1932 ல் நிறைவேற்றப்பட்டது.
🌺 இந்திய அரசு சட்டம் - 1935
🌺 இந்திய அரசு சட்டத்தின் படி மாகாணத்தில் இரட்டை ஆட்சி ஒழிக்கப்பட்டு சுயாட்சி வழங்கப்பட்டது.

*இர்வின் பிரபு (1926 - 1931) பற்றிய சில தகவல்கள்:-*


🍃 1927 - சைமன் குழு நியமிக்கப்பட்டது
🍃 1928 - சைமன் குழு இந்திய வருகை
🍃 சைமன் குழுவின் தலைவர் சர் ஜார்ஜ் சைமன்
🍃 1929 லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் பூரண சுதந்திரமே குறிக்கோள் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
🍃 1930 காந்தியால் சட்ட மறுப்பு இயக்கம் ( உப்பு சத்தியாகிரகம் இயக்கம்) நடைபெற்றது.
🍃 1930 முதல் வட்டமேசை மாநாடு நடைபெற்றது.
🍃 காந்தி இர்வின் ஒப்பந்தம் - 5 மார்ச் 1931
🍃 சிறையில் 64 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து ஜடின் தாஸ் உயிர் நீத்தார் - 1929
🍃 தண்டி யாத்திரை காந்தி தலைமையில் 12 மார்ச் 1930-ல் நடைபெற்றது

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...