Sunday, 23 December 2018

*மேகதூத் விருது*

2. ‘மேகதூத்’ விருது(‘Meghdoot’ award) பற்றி எழுதுக.

அஞ்சல்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு தேசிய அளவில் வழங்கப்படும் ‘மேகதூத் விருது’ தமிழகத்தைச் சேர்ந்த 2 பேருக்கு கிடைத்துள்ளது.

அஞ்சல்துறை சார்பில், சிறப் பாக பணியாற்றும் ஊழியர்களை கவுரவிக்கும் விதமாக, தேசிய அளவில் ‘மேகதூத்’ என்ற விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுக்கு நாடு முழுவதிலும் உள்ள 23 அஞ்சல் வட்டங்களில் இருந்து ஊழியர் களின் பெயர்கள் பரிந்துரைக்கப் பட்டன. இதில் இருந்து 8 பேர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

இதில், சென்னை, அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு வட்ட தலைமை அஞ்சல்துறை அலுவ லக, வர்த்தக மேம்பாட்டுப் பிரி வில் அஞ்சல் உதவி கண்காணிப் பாளராகப் பணிபுரிந்து வரும் வித்யா எஸ்.ஐயர், அசோக்நகர் அஞ்சல் நிலையத்தில், அஞ்சல் ஊழியராகப் பணியாற்றி வரும் கே.கணபதி ஆகிய இருவரும் தமிழகத்தில் இருந்து இந்த விருதுக் குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லியில் நடைபெற்ற விழாவில், மத்திய தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் மனோஜ் சின்கா இந்த விருதினை அவர்களுக்கு வழங்கினார். ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசும், பாராட்டுப் பத்திரமும் கொண்டது இந்த விருது. 1994-ம் ஆண்டு அஞ்சல்துறையில் பணியில் சேர்ந்த வித்யா எஸ்.ஐயர், அஞ்சல்துறை சார்பில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் மற்றும் ஆதார் எண் பெறுதல் மற்றும் திருத்தம் செய்வதற்கான மையங்கள் அமைப்பதற்கு முக்கியப் பங்காற்றி யுள்ளார்.

அஞ்சல்துறையில் 1984-ம் ஆண்டு பணியில் சேர்ந்த கணபதி, தான் பணிபுரியும் பகுதியில் தபால்களை விநியோகிப்பது குறித்து முன்கூட்டிய அவர்களுக்கு தகவல் அளித்து விநியோகப்பதன் மூலம் பொதுமக்களிடையே நம்பிக் கையைப் பெற்றார். அத்துடன், சிறப்பு முகாம்களை நடத்தி பாமர மக்களையும் அஞ்சல்துறை சேமிப்புத் திட்டங்களில் சேர வைத் தது உள்ளிட்ட பல்வேறு மகத்தான பணிகளைச் செய்துள்ளார்.

சென்னை நகர மண்டல அஞ்சல்துறைத் தலைவர் ஆர்.ஆனந்த் வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

*பதில் அளிக்கும் முறை*

ANSWER MODEL
INTRODUCTION

வேலைவாய்ப்பு என்றால் என்ன என்பதை எழுத வேண்டும். வேலைவாய்ப்பின்மையின் வகைகளையும் எழுதலாம். (மூன்று முதல் நான்கு வரிக்குள்)

BODY

1.திட்டத்தின் முக்கிய கூறுகளை பற்றி எழுதுக.
2.திட்டத்தால் வேலைவாய்ப்பில்,மக்கள் முன்னேற்றத்தில் ஏற்படும் மாற்றம் .
3.IMPACT ON OVERALL ECONOMY பற்றி எழுதவேண்டும்.
4.வறுமைக்கும் வேலைவாய்ப்பின்மைக்கும்  உள்ள தொடர்பை எழுதலாம்.

CONCLUSION
–திட்டத்தின் பலனை பற்றி POSITIVE ஆக குறிப்பிடலாம்

*இந்திய விவசாயிகள் தினம்! 👣– டிசம்பர் 23...*

இன்றைய நிலையில் எதிர்காலம் விவசாயிகள் கையில் என்பதை வலியுறுத்தியும், உணவு பாதுகாப்பையும் வலியுறுத்தியும் டிசம்பர் 23ம் தேதி விவசாயிகள் தினமாக (Kisan Day - Farmers Day, December 23 )
கொண்டாப்படுது. இந்தியாவின் மறைந்த பிரதமர் சரண்சிங் பிறந்த தினமே விவசாயிகள் தினமாக கொண்டாடப் படுகிறது. இவர் 1979 முதல் 1980 வரை பிரதமர் பதவி வகித்தார். இந்தியாவில் 70 சதவிகித மக்கள் விவசாயம் சார்ந்து
வாழ்கிறார்கள்.

இன்று விவசாயி என்றால் பிழைக்க தெரியாதவன் என்பதாக இளைஞர்கள் மத்தியில் எண்ணமிருக்கிறது.
ஒரு காலத்தில் உலகத்துக்கே உணவளித்த நம் தேசம் இன்றைக்கு பருப்புக்கும் அரிசிக்கும் அந்நிய தேசங்களை நம்பி வாழும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. நீர் நிலைகளை நில ஆக்கிரமிப்புகள் சாப்பிட்டு விட்டன. நதிகள், தொழிற்சாலை கழிவுகளை சுமக்கும் சாக்கடைகளாக மாறி இருக்கின்றன. ஆறுகள், அரசு ஆதரவுடன் மணற்கொள்ளை நடக்கும்
இடமாக இருக்கிறது.

உணவுப் பொருட்களின் விலை உச்சத்துக்கு உயர்ந்தும் விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயரவில்லை.
விவசாயிகளுக்கு அவர்களின் நிலம்தான் தாய். அதில் விளையும் பயிர்கள்தான் அவனின் குழந்தைகள் என்றால் மிகையாகது. நிலம் மற்றும் பயிருக்கு பாதிப்பு ஏற்பட்டால் அவர்கள் மனதளவில் பொருளாதார ரீதியில் தாங்கிக் கொள்ள முடிதாததாக இருக்கிறது.இந்திய விவசாயிகளின் வாழ்க்கைத் தரம், கல்வித் தரம் உயர்த்தப்பட்டால் அவன் முன்னை விட அதிகமாக துடிப்பாக விவசாயம் செய்து நம்மை எல்லாம் காப்பாற்ற முடியும்.

தமிழ்நாட்டில் மொத்தம் சுமார் 130 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு இருக்கிறது. இதில், 51 லட்சம் ஹெக்டேரில் விவசாயம்
செய்யப்படுகிறது. தமிழக மக்களில் சுமார் 55 சதவிகிதம் பேர் (3 கோடி பேருக்கு மேல்) விவசாயம் மற்றும் அது தொடர்புடைய தொழில்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். பெரும்பாலான விவசாயிகள் சாகுபடி தொடங்கி, அறு வடை வரை அனைத்தையும் கடன் வாங்கித்தான் செய்துவருகிறார்கள். கடன் கிடைக்காத நிலையில் வீட்டிலுள்ள பொருட்கள், மனைவி, மகள்களின் நகைகளை விற்று அல்லது அடமானம் வைத்துதான் விவசாயம் செய்து வருகிறார்கள்.

ஹூம்விவசாயிகளை ‘தேசத்தின் முதுகெலும்பு’என்றார் மகாத்மா காந்திஜி.இன்றைய தேதியில் விவசாயிகள் தினத்தில்
மட்டும்தான் அந்த முழுகெலும்பை தேசம் திரும்பி பார்க்குது.

Saturday, 22 December 2018

*உயிரித் தொழில்நுட்பம்* *( Bio technology)*

உயிரித் தொழில்நுட்பம் (Biotechnology) என்பது நுண்ணுயிர்கள் மற்றும் நன்மை பயக்கும் மரபணுக்களைஅடிப்படையாகக் கொண்டுவேளாண்மை, மருத்துவம், சுற்றுச்சூழல்மற்றும் தொழிற்துறைகளில் பயன்படுத்தப்படும் நுட்பமாகும்.

அறிவியல் அடிப்படையில் உயிரினங்களில் மேற்கொள்ளப்படும் மாற்ற முயற்சிகளை உயிர் தொழில்நுட்பம் என்று கூறலாம்.

உயிரித் தொழில்நுட்பம் என்ற சொற்றொடர் 1970களில்உருவாக்கப்பட்டது என்றாலும் இந்நுட்பம் பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும்.

21ம் நூற்றான்டில் உயிரித் தொழில்நுட்பமானது அடிக்கடி மரபுப் பொறியியலுடன் சுட்டியனுப்பப்படுகின்றது. எனினும் இந்த சொல் மிக அகலமாக எல்லைகளைக் கொன்டது. மனித இனத் தேவைகளுக்காக உயிரினங்களில் சிறுமாற்றஞ்செய்யப்பட்ட நடைமுறை வரலாற்றை கொண்டது.

உள்நாட்டு பயிர்களின் தரத்தை அதிகரிக்க செயற்கைத் தேர்வு, மற்றும் கலப்பின முறை தொழில்நுட்பங்கள் பயன் படுத்தப்பட்டுள்ளன.

உயிரித் தொழில்நுட்பத்தின் அனைத்து உபயோகங்களும் உயிரியல் பொறியியலை தழுவியது.

நவீன அணுகுமுறையின் புதிய உத்திகளின் காரணமாக பாரம்பரிய தொழிற்சாலைகள் புதிய பயன்களை பெறுகின்றன.

இவைகள் உற்பத்திப்பொருள்களின் தரத்தை மேம்படுத்தவும் உற்பத்தியை அதிகரிக்கவும் பயன் படுகின்றன.

1970ம் ஆண்டுக்கு முன்பாக உயிரித் தொழில்நுட்பம் பெரும்பாலும் உணவு தயாரித்தல் மற்றும் வேளாண்மை துறைகளில் மட்டுமே பயன்பட்டது.

1970க்கு பின்பு மேற்கத்திய அறிவியல் சார் நிறுவனத்தால் உயிரித் தொழில்நுட்பம் பெரிதும் பயன்படுத்தப் பட்டது.

உயிரித் தொழில்நுட்பத்தில் மரபிழைச் சீரமைப்பு நுட்பம், திசு வளர்த்தல் மற்றும் கிடைமட்டமான மரபணு இடமாற்றம் ஆகிய உத்திகள் அடங்கும்.

உயிரித் தொழில்நுட்பமானது மரபியல், மூலக்கூறு உயிரியல், உயிர் வேதியியல், கருவியல் மற்றும் உயிரணு உயிரியல் ஆகிய துறைகளை ஒருங்கிணைத்தது. மேலும் இவைகள் வேதிப் பொறியியல் மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறைகளுடன்ம் இணைந்திருக்கும்.

*தென்னிந்தியாவில் பாயும் ஆறுகள் பற்றிய தகவல்கள்:-*

⛲ தென்னிந்திய ஆறுகள்:-
1. காவேரி
2. தென்பெண்ணை
3. பாலாறு
4. நர்மதா
5. தபதி
6. மகாநதி
7. கோதாவரி
8. கிருஷ்ணா
9. வைகை
10. தாமிரபரணி

1. காவேரி:-
🌊 உற்பத்தி ஆகும் இடம் - குடகுமலை
🌊 முக்கிய துணை ஆறுகள் - அமராவதி, பவானி, நொய்யல், திருமணிமுத்தாறு
🌊 இதன் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை - மேட்டூர், கல்லணை
🌊 காவேரி ஆறு தோற்றுவிக்கும் தீவு - ஸ்ரீரங்கம்
🌊 கடலில் கலக்கும் இடம் - பூம்புகார்

2. தென்பெண்ணை:-
🌊 உற்பத்தி ஆகும் இடம் - சென்னகேசவ மலை (கர்நாடகா)
🌊 இதன் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை - சாத்தனூர் அணை
🌊 கடலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

3. பாலாறு:-
🌊 உற்பத்தி ஆகும் இடம் - நந்தி தர்கம் மலை (கர்நாடகா)
🌊 இதன் துணை ஆறுகள் - செய்யாறு, வேகவதி
🌊 கடலில் கலக்கும் இடம் - சதுரங்கப் பட்டினம்

4. நர்மதா:-
🌊 உற்பத்தி ஆகும் இடம் - அமர்கண்டக் மைக்கால் மலைதொடர் (மத்திய பிரதேசம்)
🌊 விந்திய சாத்புரா மலைகளுக்கு இடையே பாய்கிறது.
🌊 மேற்கு நோக்கி பாய்கிறது.
🌊 அரபிக் கடலில் கலக்கிறது.
🌊 கடலில் கலக்கும் இடம் - காப்பே வளைகுடா

5. தபதி:-
🌊 உற்பத்தி ஆகும் இடம் - சாத்புரா மலை மகாதேவ் குன்று
🌊 மேற்கு நோக்கி பாய்கிறது
🌊 கம்பே வளைகுடாவில் அரபிக் கடலில் கலக்கிறது.

6. மகாநதி:-
🌊 உற்பத்தி ஆகும் இடம் - அமர்கண்டக் பீடபூமி
🌊 சமவெளி அடையும் இடம் - சத்தீஸ்கர்
🌊 இதன் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை - ஹீராகுட்
🌊 வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

7. கோதாவரி:-
🌊  உற்பத்தி ஆகும் இடம் - நாசிக் திரியம்பக்
🌊 முக்கிய துணை ஆறுகள் - பெண் கங்கா, வெயின் கங்கா, கங்காவர்தா, மஞ்சிரா, இந்திராவதி, சபரி, வார்தா
🌊 தென்னிந்திய நதிகளில் மிக நீளமானது
🌊 இது வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

8. கிருஷ்ணா:-
🌊 உற்பத்தி ஆகும் இடம் - மகாபலேஸ்வர் மலை
🌊 இது வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

9. வைகை:-
🌊 உற்பத்தி ஆகும் இடம் - மேற்கு தொடர்ச்சி மலை (ஏலகிரி மலை)
🌊 இதன் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை - கம்பன் அணை
🌊 இதன் வேறுபெயர் - பெய்யாகுலகொடி
🌊 கடலில் கலக்கும் இடம் - மன்னர் வளைகுடா

10. தாமிரபரணி:-
🌊 உற்பத்தி ஆகும் இடம் - அகஸ்தியர் மலை
🌊 இதன் துணை ஆறுகள் - மணிமுத்தாறு, சிற்றாறு
🌊 இதற்கு முற்காலத்தில் இருந்த பெயர் - பொருநை நதி
🌊 இந்த ஆறு ஏற்படுத்தும் அருவிகள் - பாபநாசம், குற்றாலம்
🌊வங்காள விரிகுடாவில் கடலில் கலக்கும்

Tuesday, 4 December 2018

*தமிழ்-50*

1. வள்ளலாரின் இயற்பெயர் - இராமலிங்கம்
2. வள்ளலார் பிறந்த ஊர் - மருதூர்
3 வள்ளலாரின் பெற்றோர் - இராமையா, சின்னம்மையார்
4. வள்ளலார் வழங்கிய நெறி - சமரச சன்மார்க்க நெறி
5. வள்ளலார் பாடல்களின் தொகுப்பு - திருவருட்பா
6. வள்ளலார் எழுதிய நூல்கள் - ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்ட வாசகம்
7. கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான் எனப்பாடியவர் - வள்ளலார்
8. வாடியபயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என பாடியவர் - வள்ளலார்
9. சமரச சன்மார்க்க சங்கத்தை நிறுவியவர் - வள்ளலார்
10. ஞானசபையை அமைத்தவர் - வள்ளலார்
11. திருவள்ளுவர் பிறந்த ஆண்டு - கி.மு. 31
12. திருக்குறள் எத்தொகுபைச் சார்ந்தது - பதினெண்கீழ்கனக்கு
13. எதற்கு அடைக்குந்தாழ் இல்லை - அன்பிற்கு
14. என்பு என்பதன் பொருள் - எலும்பு
15. ஓலைச்சுவடிகளை எந்நாளில் ஆற்றில் விடுவார்? - ஆடிப்பெருக்கு நாளில்
16. உ.வே.சா ஆற்றுநீரில் இறங்கி ஓலைச்சுவடிகளை எடுத்த ஊர் - கொடுமுடி
17. தமிழ்த்தாத்தா எனப்படுபவர் - உ.வே.சாமிநாதையர்
18. குறிஞ்சிப்பாட்டு எத்தொகுப்பைச் சார்ந்தது - பத்துப்பாட்டு
19. குறிஞ்சிப்பாட்டு நூலை எழுதியவர் - கபிலர்
20. தொண்ணூற்று ஒன்பது பூக்களின் பெயர்களை கூறும் நூல் - குறிஞ்சிப்பாட்டு
21. உ.வே.சா வுக்குக் கிடைத்த குறிஞ்சிப்பாட்டு நூலில் எத்தனை பூக்களின் பெயர்கள் இருந்தன - 99
22. ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்கும் நூலகங்களுள் ஒன்று - சரசுவதி மஹால் நூலகம்
23. சரசுவதி மஹால் நூலகம் எங்கே உள்ளது - தஞ்சாவூர்
24. உ.வே.சாமிநாதய்யர் பிறந்த ஊர் - உத்தமதானபுரம்
25. சாமிநாதையரின் இயற்பெயர் - வேங்கடரத்தினம்
26. உ.வே.சாமிநாதய்யரின் ஆசிரியர் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
27. உ.வே.சா பதிப்பித்த நூல்கள் எத்தனை – 80 (புராணங்கள் 12, வெண்பா நூல்கள் 13, உலா 9, கோவை 6, தூது 6)
28. உ.வே.சாமிநாதய்யரின் சுயசரிதையின் பெயர் - என் சரிதம்
29. என் சரிதம் வெளியான இதழ் - ஆனந்த விகடன்
30. உ.வே.சாமிநாதய்யரை பாராட்டிய வெளிநாட்டு அறிஞர்கள் - ஜீ.யு.போப், சூலியஸ் வின்சேன்
31. உ.வே.சாமிநாதய்யருக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்ட ஆண்டு 2006
32. உ.வே.சா நினைவு நூலகம் எங்கே உள்ளது – சென்னை பெசன்ட் நகரில்
33. சடகோ எந்நாட்டுச்சிறுமி – ஜப்பான்
34. சடகோவின் தோழி – சிசுகோ
35. ஜப்பானியர் வணங்கும் பறவை – கொக்கு
36. காகிதத்தில் உருவங்கள் செய்யும் ஜப்பானியக் கலையின் பெயர் - ஓரிகாமி
37. சடகோவைத் தாக்கிய நோய் புற்றுநோய்
38. சடகோ செய்த காகிதக் கொக்குகளின் எண்ணிக்கை – 644
39. சடகோவின் நினைவாலயத்தின் எழுதப்பட்டுள்ள வாசகம் - உலகத்தில் அமைதி வேண்டும்
40. சடகோ இறந்த நாள் 1955 அக்டோபர் 25
41. கடைசிவரை நம்பிக்கை என்னும் சிறுகதை எந்நூலில் உள்ளது? ஆரவிந்த் குப்தா எழுதிய டென் லிட்டில் பிங்கர்ஸ்
42. நாலடியார் எத்தொகுப்பைச் சேர்ந்தது? பதினெண்கீழ்கணக்கு
43. நாலடியார் யாரால் எழுதப்பட்டது – சமணமுனிவர்கள்
44. பதினெண்கீழ்கணக்கு நூல்களுள் பெருண்பான்மையானவை எவ்வகையானவை? அறநூல்கள்
45. நன்மை செய்வேர் எதைப் போன்றவர் என நாலடியார் கூறுகிறது – வாய்க்கால்
46. நெருங்கி இருந்தும் உதவி செய்யாதவர் எதைப் போன்றவர் என நாலடியார் கூறுகிறது – நாய்க்கால்
47. பாட்டுக்கொரு புலவன் எனப்பட்டவர் - பாரதி
48. வெள்ளிப்பனிமலையின் மீது உலாவுவோம் என்று பாடியவர் - பாரதியார்
49. ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் என்று பாடியவர் - பாரதியார்
50. பாரதியார் யாரைத் தமிழமகள் என்கிறார்? ஓளவையார்

*இந்தியாவை பற்றிய அடிப்படை தகவல்கள்*

* தலைநகரம் - புதுதில்லி
* மொத்தப் பரப்பு - 3287263 ச.கி.மீ
* வடக்கு – தெற்கு - 3214 கி.மீ
* கிழக்கு – மேற்கு - 2933 கி.மீ
* நில எல்லை - 15107 கி.மீ
* எல்லை நாடுகள் - 7
* கடற்கரை பரப்பு - 7516.6 கி.மீ
* மாநிலங்கள் - 29
* மத்திய ஆட்சிப்பகுதிகள் - 6
* தேசிய தலைநகரப் பகுதி - 1
* மாவட்டங்கள் - 593
* நகரங்கள் - 7935
* கிராமங்கள் - 638588
* லோக்சபா இடங்கள் - 545 (543 + 2)
* ராஜ்யசபா இடங்கள் - 245 (233 + 12)
* சட்டசபை இடங்கள் - 4120
* மக்கள் தொகை (2011) - 1210193422
* ஆண்கள் - 623724248
* பெண்கள் - 586469174
* மக்கள் நெருக்கம் - 382 / ச.கி.மீ
* ஆண் பெண் விகிதம் - 940 / 1000 ஆண்களுக்கு
* எழுத்தறிவு - 74.04%
* இந்தியச் செந்தர நேரம்  +5.30 GMT
* மொத்த சாலை நீளம் - 48.65 இலட்சம் கி.மீ
* தேசிய நெடுஞ்சாலை - 92851 கி.மீ
* இரயில் நீளம் - 111599
* முக்கிய துறைமுகங்கள் - 12
* சர்வதேச விமான நிலையங்கள் – 16

Wednesday, 28 November 2018

*வழக்கொழிந்த அளவுகள் பரப்பளவு*

இன்றைய இளைய தலை முறையினர் அறிந்து கொள்ளும் பொருட்டு, இன்று வழக்கத்தில் இல்லாத பழைய 
அளவு முறைகளை உறவுகளுடன் பகிர்ந்து கொள்கின்றோம். 

144..சதுர அங்குலம்..= 1 சதுர அடி 

9......சதுர அடி..........= 1 சதுர கஜம் 

484..சதுர கஜம்.........= 1 சதுர சங்கிலி 

10...சதுர சங்கிலி......= 1 ஏக்கர் 

436.....சதுர அடி.........= 1 செண்ட் 

100.....செண்ட்...........= 1 ஏக்கர் 

4,840..சதுர கஜம்.......= 1 ஏக்கர் 

640.....ஏக்கர்..............= 1 சதுர மைல் 

0.33..செண்ட் (144 சதுர அடி) = 1 குழி 

100...குழி..........................= 1 மா ( 33.06 
செண்ட் ) 

4.......மா..........................= 1காணி 

20.....மா ( 5 காணி )........= 1வேலி 
( 6.61 ஏக்கர் ) 

56....செண்ட்........= 1....குருக்கம் 

100..குருக்கம்......= 56 ஏக்கர் 

5.50 செண்ட்.........= 1.....மனை ( GROUND ) 

24....மனை..........= 1.....காணி 

1......காணி..........= 1.32 ஏக்கர் 

. . . . . . . . இன்றைய பரப்பளவு . . . . . . . . 

100 சதுர மீட்டர் . . .= 1 ஏர் ( 2.4701 செண்ட் ) 

100 ஏர்ஸ் . . . . . . . = 1 ஹெக்டேர் ( 2.47 
ஏக்கர் 

. . . . . . . . . . . . . நாணயங்கள் . . . . . . . . . . . 

5 காசு . . . . . . . . = 1 பைசா 

3 பைசா . . . . . . .= ¼ அணா ( காலணா ) 

2 காலணா . . . . = ½ அணா ( அரையணா ) 

2 அரையணா . .= 1 அணா 

4 காலணா . . . . = 1 அணா 

12 பைசா . . . . . .= 1 அணா 

4 அணா . . . . . . .= ¼ ரூபாய் (கால் ரூபாய் ) 
( 2 இரண்டணாக்கள் ) 

8 அணா . . . . . . .= ½ ரூபாய் ( அரை ரூபாய் ) 

16 அணா . . . . . . . . . . . . . . = 1 ரூபாய் 

192 பைசா . . . . . . . . . . . . . = 1 ரூபாய் 

64 காலணா . . . . . . . . . . . .= 1 ரூபாய் 

32 அரையணா . . . . . . . . . = 1 ரூபாய் 

8 அரைக்கால் ரூபாய் . . = 1 ரூபாய் 

4 கால் ரூபாய் . . . . . . . . .= 1 ரூபாய் 

2 அரை ரூபாய் . . . . . . . .= 1 ரூபாய் 

3 ரூபாய் . . . = ¼ சவரன் (கால் சவரன் ) 

5 கால் சவரன் . . = 1 சவரன் 

15ரூபாய் . . . . . . . = 1 பவுன் ( சவரன் ) 

3 ½ ரூபாய் . . . . . .=1 வராகன் 

2 பைசா . . . . . . . . = 1 துட்டு 

8 துட்டு . . . . . . . . .= 1 பணம் 

பைசா, காலணா, அரையணா ஆகிய 
நாணயங்கள் செம்பு உலோகத்திலும்; 

1 அணா, 2 அணா, 4 அணா ஆகிய 
நாணயங்கள் நிக்கல் உலோகத்திலும் 

8 அணா, 1 ரூபாய் ஆகிய நணயங்கள் 
வெள்ளி உலோகத்திலும் 
உருவாக்கப்பட்டிருந்தன. 

. . . . . . . . . . . . . முகத்தல் அளவுகள் . . . . . . 

1 ஆழாக்கு = 1/8 (அரைக்கால்) படி 

2 ஆழாக்கு = 1/4 படி 

4 ஆழாக்கு = 1/2 படி 

8ஆழாக்கு = 1 படி 

2 ஆழாக்கு = 1 நாழி (1/4 படி) 

2 நாழி (4 ஆழாக்கு) = 1/2 படி 

4 நாழி (8 ஆழாக்கு) = 1 படி 

8 படி . . . . . . . = 1 மரக்கால் (குறுணி) 

12 மரக்கால் (96 படி) = 1 கலம் 

2 கலம் (192 படி) . . = 1 மூட்டை 

10 மூட்டை . . . . = 1 வண்டி 

20 ஆழாக்கு = 1 காலன் 

21 மரக்கால் . . . . . . . . = 1 கோட்டை 

5 மரக்கால் (40 படி) . . . = 1 பரை 

80 பரை (400 மரக்கால்) = 1 கரிசை 

8 படி . . . . . . . . . . . . . . = 1 குறுணி (1மரக்கால்) 

2 குறுணி (2 மரக்கால்) = 1பதக்கு 

3 குறுணி (3 மரக்கால்) = முக்குறுணி 

( ஆதாரம் :- 19 – 05 – 1925 நாளில் 

வெளியிடப்பட்ட Vide Fort St. George Gazette )

*PIN குறியீட்டிற்கு விடைபெறுகிறேன்*

*PIN குறியீட்டிற்கு விடைபெறுகிறேன்* அஞ்சல் முகவரிகளின் ஈர்ப்பாக இருந்த PIN குறியீடுகளின் சகாப்தம் முடிந்துவிட்டது, அதற்கு மாற்றா...