Sunday, 26 July 2020

ஜாதி_வருமான_இருப்பிட-சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம்

*...ஜாதி வருமான இருப்பிட சான்றிதழ்கள் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் நமக்கு தேவையான அரசு சான்றிதழ்கள் வாங்க இனி  தாலுக்கா அலுவலகம் செல்ல வேண்டாம்...*



 *அனைத்து சான்றிதழ்களும்  இனி உங்கள் மொபைல் போனில்*


வருமானச் சான்றிதழ்

சாதிச் சான்றிதழ்

இருப்பிடச் சான்றிதழ்

ஓபிசி சான்றிதழ்

வாரிசு சான்றிதழ் 

போன்றவைகள் விண்ணபிக்கலாம்...
யாருக்கும் (இடைத்தரகர்களுக்கு) பணம் தர வேண்டிய அவசியம் இல்லை... 

*விண்ணபிக்க கீழ் உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்*



                                               *_┈┉┅━━❀••*••❀━━┅┉┈_

Channel 10 - Kalvi TV



Direct dowload link for class 1 to 6




Tamilcloud App
Channel 10 - Kalvi TV 
Download link


மேற்கண்ட லிங்கை பயன்படுத்தி செயலியை உங்கள் போனில் install செய்து கொள்ளவும். பின்பு செயலியின் உள்ளே சென்றால் activation code கேட்கும்‌. திரையில் தோன்றும் activation codeஐ (activation code: 12345678) உள்ளீடு செய்து Mobile screen தொட்டால் இடது பக்கத்தில் சேனல்கள் வரிசை இருக்கும். அதில் எண் 10ல் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்ப படுகிறது(பல்வேறு தமிழ் தொலைக்காட்சி சேனல்களும் இச்செயலியில் உள்ளது). தங்களின் மொபைல் வழியாகவே தொலைக்காட்சியைக் காணலாம். ஆசிரியர்களும் மாணவர்களும் பயன் பெறலாம். இது ஒரு தனியார் செயலி ஆகும்.

TNTEXTBOOKS


For download direct link



*TN school books* 

*தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை புத்தகங்கள்*

தீராத விளையாட்டுப் பிள்ளைகள்

18.07.2020

பாலறாவாயன் கலைக்குழுமம் - சங்கரன்கோவில் - தென்காசி மாவட்டம் - தமிழ்நாடு - 

சிறப்பு பரிசு பெற்ற எனது சிறுகதை- எழுத்தாளராக களம் கண்ட தருணம்..


கதைத் தலைப்பு

தீராத விளையாட்டுப் பிள்ளைகள்
------

மதுரை மாநகரத்திலிருந்து இருபது மைல் கல் தொலைவில் இருக்கும் இயற்கை எழில் கொஞ்சும் சிறிய கிராமம்  தென்றலூர்.  இரண்டொரு தெருக்கள் மட்டுமே உள்ள அந்தக் கிராமத்தில், கம்பன் தெரு, வள்ளுவர் தெரு, பாரதி தெரு என தமிழுக்கு பெருமை சேர்க்கும் பெயர்கள்.  நீதி, நேர்மை என அறம் வழுவாது தாங்கள் வாழ்வது மட்டுமல்ல தங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுத்து வளர்ப்பவர்கள் அக்கிராமத்து மக்கள்; பிள்ளைகளும் அவர்களின் சொல் கேட்டு சிறிதும்  தப்பாமல் அப்படியே நடப்பார்கள்;  பத்து பதினைந்து  வீடுகள் ஒரு வீதியாக இருக்கும். ஒரு தெருவிற்கும் அடுத்த தெருவிற்கும் இடையில் கிட்டத்தட்ட அரை மைல்கல் தொலைவு.

ஒரு தெருவிலிருப்பவர்கள் அடுத்த தெருவிற்கு வந்து நலம் விசாரிப்பது;  குழந்தைகள் ஒடியாடி விளையாடுவது; பெண்கள் ஒரு வீட்டு வாசலில் கூடி மகிழ்வது;  பருவப் பெண்கள் சேர்ந்து பல்லாங்குழி ஆடுவது; ஆண்கள் அரட்டையடிப்பது  என எப்போதும் அத்தெருக்கள்  கலகலப்பாகவே இருக்கும் .  அன்று  ஞாயிற்றுக் கிழமை வேற கேட்கவா வேண்டும் குதூகலத்திற்கு. 

நண்பகல் இரண்டு மணிக்கு பல்லாங்குழி  விளையாடிக் கொண்டிருந்த,  கம்பன் தெருவில் வசிக்கும் பத்தாம் வகுப்பு படிக்கும் பார்வதியின்   மகள் புவனா;  அக்கம் பக்கம்; அடுத்த தெரு  என எங்கு தேடியும் இரவு ஒன்பது மணியாகியும் காணவில்லை. பெண் பிள்ளைகள் காணாமல் போனால் விதவிதமாக கதை கட்டும் உலகம். இந்த ஊர் மக்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?

தெருவோரத்தில் அமர்ந்து அலைபேசியில்  வார்த்தை விளையாட்டு விளையாடிக்  கொண்டிருந்த பாரதியார் தெருவில் வசிக்கும் பத்மாவின் மகன் ராமு;  பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவன் என்சிசி, விளையாட்டு என பல்கலையில் தேர்ந்த வித்தகன்.

கண்களை சுற்றும் முற்றும் தெருவில் சுழல விட்டுக் கொண்டே விளையாடிக் கொண்டிருருந்த புவனா  மூச்சிரைக்க இரைக்க ஓடி வருகிறாள் தெரு முனைக்கு.  ராமுவை பார்த்ததும் அவள் மனசு  மகிழ்ச்சியில் துள்ளுகிறது.  ஏ!  நீ ஏங்கூட உடனே வாடா ; அதட்டலோடு அழைக்கிறாள்.  ராமு ஒரு வயது மூத்தவன் என்றாலும் சிறு பிள்ளையிலிருந்தே பேசி பழகியதால் வாடா போடா என்று அவள் அழைப்பது வழக்கம்.  எங்க கூப்பிடற வர முடியாது போ ; ஏன், எதுக்கு அப்டினு எல்லாம் கேட்கக் கூடாது, ஒழுங்கா வா, முடியாது புவனா, அவன்  பிடிவாதமாக வர மறுக்க, அவள் கையைப் பிடித்துக் கொள்கிறாள்; இவன் திமிர, இது நல்லதுக்கு இல்லை  புவனா தெருக்காரவங்க பார்த்தா என்ன நினைப்பாங்க;  எதுவும்  காதில் விழாதது போல் தரதரவென  இழுத்துக் கொண்டே எதிரில் இருக்கும் பொட்டல் காட்டுக்குள் அழைத்துச் செல்கிறாள். எங்கே  கையை விட்டுவிட்டால் அவன் ஓடிப்போயிடுவானோ என  அவளுக்குள் ஒரு பயம். 

 என்ன பண்ற நீ என்று சொல்லிக் கொண்டு திரும்பியவன் ;  அய்யோ புவனா இது என்ன அலங்கோலம் ? என்ன நடக்குது இங்க? அவன் வாயைத் தன் கைகளால்  பொத்துகிறாள் அவள்;  அடுத்த கணத்தில் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டவன் அடுத்தடுத்த வேலைகளை தன்னையே அறியாமல் கடகடவென  வேகமாக கண கச்சிதமாக செய்து முடிக்கிறான். அப்படியே அரங்கேறிய காட்சிகளையெல்லாம்   தன்னுடைய அலைபேசியில் புகைப்படமும் எடுத்துக் கொண்டு; அதற்கடுத்த  வேலைகளையும் முடித்துவிட்டு அவர்கள் வீடு வந்து சேரும் போது இரவு ஒன்பது மணி இருபது நிமிடங்கள். 

அதற்குள் இருவரது பெற்றோரும் எங்கங்கோ தேட,  தெருக்காரர்கள் ஒவ்வொருவரும் ஒரு கட்டுக்கதைக் கட்டிவிட ; ஊர் இரண்டுபட்டா கூத்தாடிக்குக் கொண்டாட்டம் தான;  அவர்களின் சந்தேகத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் தெருமுனையில் பெட்டிக்கடை வைத்திருக்கும் ராமையா வந்து சொல்கிறான்;  ராமுவும், புவனாவும் கையைக் கோர்த்துக்கிட்டு மத்தியானம் மணி இரண்டு இரண்டறைக்கு எதிரிலிருக்கிற  பொட்டல் காட்டுக்குள்ள போனத நான் என் இரண்டு கண்ணால பார்த்தேன். 

 இருவருடைய பெற்றோர் முகமும் சங்கடத்தில் வாடி,   மனம் நொந்து வெட்கித் தலைகுனிந்த நிலையில் நிற்கின்றனர். 

தாங்கள் செய்து முடித்த விசயத்தைப் பற்றி எதுவும் பெரிதாக  நினைக்காமல்,  எந்தவித சலனமுமின்றி, ராமுவும் புவனாவும் ஊருக்குள் வரும் போது எல்லா தெருக்காரர்களும் ஒரே தெருவிலேயே குழுமியிருக்கிறார்கள். 

 இரண்டும்  சிரிச்சு சிரிச்சு பேசிட்டு சோடியா வருதுக பாரு ; ரொம்ப தெனவட்டா, பெத்தவக அடிச்சு புத்திமதி சொல்லி  வளத்திருக்கனும், அப்படி செய்யாததால தான் இப்படி அடங்காம ஊர சுத்திட்டு என்னென்ன பண்ணிட்டு வருதுகளோ? 

வார்த்தைகளின் சூடு வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் பெற்றோர்களைத்  தாக்க, தரதரவென தன் மகள் புவனாவை இழுத்துச் செல்கிறாள் பார்வதி;  ஏம்மா இப்படி இழுத்துட்டு போறீங்க;  அம்மா நான் தெருமுனையில நின்னு இருந்தேனா ; அப்போ ராமு அங்க இருந்தானா; எதுத்தாப்ல இருந்த  பொட்டல்காட்டுக்குள்ள போயி;  போதும் போதும் நிறுத்து டீ; அதான் பெட்டிக்கடை ராமையா எல்லாத்தையும்  சொல்லிட்டானே ;  உன்னையெல்லாம் உசுரோட மண்ணுல புதைக்கணும்டீ;  எம்புட்டு  தைரியம், இந்த காலுல தான அவன் கையை பிடிச்சுகிட்டு பொட்டல்காட்டுக்குள்ள நடந்து போயி; சொல்லவே நா கூசுது;  தோசைக்கரண்டியை வைத்து இரண்டு பாதங்களிலும் இழுக்கிறாள். அய்யோவென பூமிக்கடியில் பூகம்பம் வருவது  போல் தென்றலூரே அதிரும்படி அழுகிறாள் புவனா.

உன்ன எனனோட புள்ள சொல்லவே வெட்கமா இருக்கடா; உங்க அம்மாவும் நானும் சாகனும்டா உன்ன பெத்ததுக்கு;  எவ்வளவு தூரம் அறிவுரை சொல்லிருக்கோம்.  பொம்பளப் பிள்ளைகளையெல்லாம்  அக்கா தங்கச்சியப் பார்க்கனும் ; படிக்கற வயசுல காதல் கீதலுனு ஊர் சுத்தக் கூடாதுனு ;  அப்பா நான் எந்தத் தப்பும் பண்ணல,  நான் சொல்றத கொஞ்சம் காது கொடுத்து கேளுங்கப்பா;  நீ சொல்றத நான் காது கொடுத்து  வேற கேட்கணுமா டா ? ராஸ்கல்  உன்ன என்ன பண்றேனு பாரு;  பெல்ட்டை எடுத்து  சராமாரியாக அடித்து விலாசி உடம்பெல்லாம் புண்ணாக்குகிறார்.

 இரவெல்லாம் வலி பொறுக்காது  முனகிக் கொண்டே இருந்த ராமுவும், புவனாவும், கதிரவன் கண்திறக்கும் வேளையில்; செய்தித் தாள்கள் கைகளில் புரளும் அந்த அதிகாலை நேரத்தில் ; லேசாக  கண்களை மூடுகின்றனர். நிலக்கரி சுரங்கத்திலிருக்கும் கொதிகலன் போல் இருவரது உடம்பும் கொதித்துக் கொண்டிருக்கிறது. 

விடிகாலை முதல் வேலையாக செய்தித் தாள் படிக்கும் பழக்கம் உள்ள ராமையா அன்றைய செய்தித்தாளின் முதல் பக்கத்தில் இருக்கும் ராமு, புவனாவின் புகைப்படத்தை  பார்த்துவிட்டு ஒரு நொடி அதிசியத்து பின் செய்தியைப் படித்தவன்:  மூச்சிறைக்க ஓடி வருகிறான் புவனா வசிக்கும் கம்பன் தெருவிற்கு.  என்னமோ ஏதோவென செய்கின்ற வேலையை அப்படியே போட்டுவிட்டு எல்லோரும் அவரவர் வீட்டின் முன் சிலையாக நிற்கின்றனர். 

முக்கிய குற்றவாளிகளாகத் தேடப்பட்டு வந்த, குழந்தைகளை பலாத்காரம்  செய்யும் பெரிய கும்பலை; தங்களுடைய துணிச்சலான செயலால் சமயோசிதமாகச் சிந்தித்து;  கையிலிருந்த அலைபேசி மூலம் புகைப்படம் எடுத்து காவல் துறைக்கு புலனம் வழியாக துரித கதியில்  அனுப்பி;   கைது செய்யக் காரணமாக இருந்த,  மதுரை தென்றலூரில் வசிக்கும் பள்ளிக் குழந்தைகள் ராமு மற்றும் புவனாவை பாராட்டவும்;  அவர்களின் துணிச்சலான செயலுக்கு காரணமாக இருந்த பெற்றோர்களுக்கு நேரில் நன்றி சொல்லவும்;  மதுரை காவல்துறை ஆணையர் அவர்கள் இன்று அவர்கள் வீட்டிற்குச் செல்கிறார். மேலும் இந்தாண்டின் தமிழக அரசின் சிறந்த  வீரதீர செயல்களுக்கான விருதிற்கு அவர்களை சிபாரிசு செய்வதாகவும் அறிவித்துள்ளார். செய்தி எல்லோர் காதுகளுக்கும் கேட்கும்படி படித்து முடிக்கிறான் ராமையா.

  முற்றும்

தி. இராஜபிரபா, 
தேனி

Thursday, 9 July 2020

நலம் நலமறிய ஆவல்

நலம் நலமறிய ஆவல்
-------------

என்னுள் வாழும் இனியவனே
இன்று என் எழுதுகோலுக்கு கருவானவனே
எட்டாத தூரத்திலிருக்கும் என் எதிர்காலமே
அணுக்களை உன் அன்னையிடம் கொடுத்துவிட்டு
ஆயுதம் ஏந்தி தாயகம் காக்க
மிடுக்கான நடை நடந்து வந்துவிட்டேன்..

தங்கச் சிலையாய் லட்சுமிகள்
(உன் அக்காக்கள்)
இருவர் உனக்கு முன் பிறந்திருக்க
தங்கைகளை நானின்று தாங்குவது போல
தடுக்கி விழும் வேளையில்
அக்காக்களைத் தாங்கிப் பிடிக்க
தந்தையாய் ஒரு ஆண்மகன் வேண்டுமென்று தவமிருந்தோம் குடும்பமே
செய்த தவம் வீண்போகவில்லை
எல்லோர் எண்ணம் போலவே பிறந்தாய்
வாழையடி வாழையென நம் குலம் தழைக்க...

கருவறையை எட்டி உதைத்து
பூமியில் கால் பதித்த உன்னை
சுமந்தவளுக்கு முன்  கண்ணுற்று
அள்ளி அணைத்து முத்தமிடவே
முன்னேற்பாடாய் முன்பதிவும் செய்திருந்தேன்
வான் வழியாய் பறந்து வந்திட..


பாழாய்ப் போன தொற்று நோய்
நாடெல்லாம் பரவி
நாலா பக்கங்களும் பாதைகள் மூடப்பட- உன்னைத்
தொட்டுத் தூக்கி உச்சி முகர்ந்து
ஆசி வழங்கிடும் பாக்கியமிழந்து
அப்பா நான் பாவியாக நிற்கிறேன்..

உன் தாத்தா எனது அப்பா
காணொளி அலைபேசியில் அழைத்து
என் பேரனைப் பார் மகனேயென
எல்லையில்லா மகிழ்ச்சியில் துள்ள தொடுதிரையில்
தொட்டுப் தொட்டு பார்க்கிறேன்..
உன் பிஞ்சுக் கால்களை
பட்டுக் கன்னங்களை  கைகளால் வருடி
முத்தமிடும் வேளையில்
முகம் திருப்பிக் கொள்கிறாய் 
ஏன் என்னை பார்க்க வரவில்லையென
வாய் திறந்து சொல்லத் தெரியாததால்
செய்கை செய்கிறாயோ?

என்  செல்லமே! என்னை
கொஞ்சம் திரும்பிப் பார்
உன்னைக் காணாது என்னுள்ளம்
வலிக்கிறதடா
குளமாகும் கண்களில் மீனாய் துள்ளிடு
விழிகள் மூடாதே இரவெல்லாம் விழித்திருப்பேன்
விழிகள் மூடி உறங்கினாலும் எப்போதும்
உன் நினைவுகளில் வாழ்ந்திருப்பேன்
கண்ணா !
என்மீது கொஞ்சம் கருணை கொள்ளடா!
கண் திறந்து என்னைப் பாரடா!
அள்ளியணைத்து முத்தமிடும் நாளுக்காய்
அப்பா நான் ஆசையாய் காத்திருக்கிறேன்
ஊரடங்கு விரைவில் முடிய வேண்டுமென
கோவில்களில் வேண்டுதலும் வைக்கிறேன்!


அன்பான உன் அப்பாவின்
ஆழ்மனதை  நீீயறிய 
நீ பிறந்த இவ்வேளையில் எல்லையிலிருந்து ஏக்கத்தில்
நானெழுதிய இக்கடிதம்
 என்றோ ஒருநாள்
உன் கைகளில் தவழும்
நீயதை எழுத்துக் கூட்டி
படிக்கும் வேளையில்
அங்கே  ஒரு
அழகான நெகிழ்வு நிகழும்..

நலம் ! நலமறிய ஆவல் !
நல் மகனே!


தி. இராஜபிரபா
தேனி

Wednesday, 11 March 2020

🙎🏻‍♀️🙎🏻‍♀️ *பெண்கள் தொடர்பான 100 முக்கிய குறிப்புகள்:-*🙎🏻‍♀️🙎🏻‍♀️

🙎🏻‍♀️🙎🏻‍♀️ *பெண்கள் தொடர்பான 100 முக்கிய குறிப்புகள்:-*🙎🏻‍♀️🙎🏻‍♀️

*1) பன்னிரு ஆழ்வார்களில் இருந்த ஒரே பெண் ஆழ்வார் யார் ? ஆண்டாள்*

*2)இந்தியாவில் எந்த மாநிலத்தில்* *முதன்முதலாக பெண் கமாண்டோ படை* *உருவாக்கப்பட்டது?*
*தமிழ்நாடு*

*3) இந்திய போலீஸ் பணியில் (ஐபிஎஸ்) சேர்ந்த முதல் பெண் யார்?கிரண்பேடி*

*4) முழுவதும் பெண்களுக்காக தொடங்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகம் எது?கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்*

*5) உலகின் முதல் பெண் விண்வெளி வாலெண்டினா ஃதெரஷ்கோவா (ரஷ்யா)1963*

*6) சர்வதேச கால்பந்து போட்டியின் நடுவராக பணியாற்ற திண்டுக்கல்லை சேர்ந்த ரூபவதி என்ற பெண் தேர்வு பெற்றுள்ளார்.*

*7) உலகின் முதல் பெண் அதிபர் - மரியா எஸ்டெலாஃபெரான், அர்ஜெண்டினா*

*8) தேவருக்கு பால் கொடுத்தது :இஸ்லாமிய பெண்*

*9) பெண் வன்கொடுமை சட்டம் :1921*

*10) உலக பெண்கள் ஆண்டு :1978*

*11) தமிழகத்தில் எந்த மாவட்டம் ஆண்-பெண் விகிதாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது? தூத்துக்குடி*

*12) நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி?விடை=மேரிகியூரி*

*13) பின் வேதகாலத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய பெண்களுள் ஒருவர் -கார்கி*

*14) பெண்களைக் காத்திட 1930 ஆண்டில் அடையாற்றில் ஒளவை இல்லம் தொடங்கப்பட்டது*

*15) இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் - முத்துலட்சுமி அம்மையார்*

*16) கற்ற பெண்களின் சிறப்பைக்கூறும் நூல் - குடும்ப விளக்கு*

*17) பெண் சிசு வதை தடுப்புச் சட்டம் மற்றும் உயிர் பலி தடைச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது ஆட்சியில் இருந்தவர் - முதலாம் ஹார்டின்ஜ் பிரபு.*

*18) வீட்டிலேயே தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளை கற்றுக்கொண்ட வசதியான வீட்டுப் பெண்-அம்புஜத்தம்மாள்*

*19) பெண் ஓவியர் - சித்திரசேனா*
📚🎓 *கல்விப்பாலம்*🎓📚 
*20) ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடந்த முதல் இந்தியப் பெண்மணி- ஆர்திசாகா*

*21) சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் நாள்-அக்டோபர் 11.*

*22) தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் தினம் : ஜனவரி 24*

*23) தமிழ் நாட்டின் முதல் பெண் மருத்துவர் யார் : டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி*

*24) சமீபத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி* *அமைப்பின் முதல் பெண் பொது* *இயக்குனராக* *நியமிக்கப்பட்டுள்ளவர்?* 
*மஞ்சுளா*

25) Green Oscar எனப்படும் Wild Screen Panda Award பெற்ற முதல் இந்திய பெண் யார் ? 
ஆஷ்விகா கபூர்

26) தமிழகத்தின் முதல் பெண் கமாண்டோவின் பெயர் என்ன? காளியம்மாள் 

27) பெண்களின் சமூக நலத்தில் பங்கு கொண்டால் தான் நாடு முன்னேறும் என்று கூறியவர்? 
மகாத்மா காந்தி 

28) முதல் இஸ்லாமிய பெண் பிரதமர் யார்? பெனாசீர் புட்டோ

29) பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் - 1992

30) பெண் கொடுமை சட்டம் - 2002

31) ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகதின் முதல் பெண் துணை அதிபர் யார்?  Louise Richardson Chidambaram

33) அண்டகச் சுரப்பி=பெண்
 
34) பிடித்த பெண் - இலக்கணக் குறிப்பு தருக.
பெயரெச்சம்

35) கல்மரம் நாவலுக்காக சாகித்திய அகாதமி விருது பெற்ற பெண் எழுத்தாளர்
திலகவதி

36) அங்கு நிற்பது ஆணா? பெண்ணா? எவ்வகை வினா? 
ஐய வினா

37) ஆள் - என்ன விகுதி? பெண்பால் வினைமுற்று

38) ஜம்மு காஷ்மீரின் முதல் பெண் முதல்வராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார் ?  மெஹபூபா முஃப்தி

39) தேசிய பேரிடர் மீட்புப் படையின் முதல் பெண் கமாண்டர் ?
ரேகா நம்பியார்

40) இந்தியாவின் இரும்பு பெண் இந்திரா காந்தி.

41) பெண் என்ற நூலின் ஆசிரியர்? அகிலன்

42) பெண்ணின் பெருமை நூலின் ஆசிரியர்- திரு.வி.க

43) முதல்“அப்துல்கலாம் விருதைப்" பெற்ற ISRO பெண் இயக்குனர் யார்?  வளர்மதி

44) Radiological Society of North America (RSNA)வின் நிர்வாக குழுவின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள இந்திய வம்சாவளி பெண்? விஜய் M. ராவ்

45) பேயோட்டுவதற்க்ககான வெறியாடல் என்பதனைப் பற்றி பாடிய பெண் புலவர்? காமக்கண்ணியார்

46) சங்க காலத்தில் அதிக பாடல்களை பாடிய பெண் புலவர் யார்.? ஒளவையார்

47) சங்க கால பெண் புலவர்கள் எத்தனை.?  31

48) அம்மானை என்பது - பெண்கள் விளையாடும் விளையாட்டு

49) மலேரியா நோயைப் பரப்பும் பிளாஸ்மோடியத்தின் முக்கியக் கடத்தியாக செயல்படுவது – பெண் அனோபீலஸ் கொசு

50) சிற்றில்= 17ஆம் மாதத்திற்குரியதான இப்பருவத்தில் பெண் குழந்தைகள் வீடு கட்டி விளையாடும் சிற்றிலை ஆண் குழந்தைகள் சென்று சிதைப்பதாகக் கூறப்படும். 
(சிற்றில் = சிறு+வீடு)

51) 18 வயதிற்குட்பட்ட பெண் செய்யும் குற்றம் இளம் சிறா

 52) தகாத முறையில் பெண்களை சித்தரிக்கும்(தடுப்பு) சட்டம் எப்போது இயற்றப்பட்டது? 1986

53) சிறந்த இலக்கியத்திற்காக, பிரிட்டன் வழங்கும் பரிசு. 1997 இல் அருந்ததிராய் எனும் இந்தியப் பெண் எழுத்தாளர் இவ்விருதைப் பெற்றார்.

54) ஏழைப்பெண்களுக்கு திருமண உதவித்திட்டம்-மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரின் பெயரால்தான் வழங்கப்பட்டு வருகின்றன.

55) பெண்ணுரிமைக்காகவே தனது வாழ்க்கையை செலவிட்டவர் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்.

56) தமிழக முதல் பெண் முதலமைச்சர் திருமதி.ஜானகி ராமச்சந்திரன்(1988)

57) எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண்? பச்சேந்திரி பாய்

58) சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் – தாரா செரியன்

59) தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் – செல்வி. பாத்திமா பீவி (1997 – 2001)

60) தமிழ்நாட்டின் முதல் பெண் நீதிபதி – பத்மினி ஜேசுதுரை

61) தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமைச் செயலர் –லெட்சுமி பிரானேஷ்

62) தமிழ்நாட்டின் முதல் பெண் IPS அதிகாரி – திலகவதிIPS

63) தமிழ்நாட்டின் முதல் பெண் காவல்துறை ஆணையர் –லத்திகா சரண்

64) தமிழ்நாட்டின் முதல் பெண் பேருந்து (அரசுப் பேருந்து) ஓட்டுனர் – வசந்த குமாரி

65) தமிழ்நாட்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் பெண் – எஸ். விஜயலட்சுமி

66) தமிழ்நாட்டின் முதல் பெண் DGP – லத்திகா சரண்

67) பாரத ஸ்டேட் வங்கியின் முதல் இந்திய பெண் தலைலராக 2013ல் நியமிகப்பட்டவர்? அருத்ததி பட்டசார்யா

68) இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல்

69) சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை

70) எந்த நூல் அரங்கேற்றத்தின்பொது குமரகுருபரருக்கு மீனாட்சியம்மை பெண் குழந்தை வடிவில் வந்து மாணிக்கமாலை பரிசளித்தார்? – மீனாட்சியம்மை குறம்

71) எந்த இந்திய தொழிலில் அதிக அளவிலான பெண்கள் பணிப்புரிகின்றனர்? டி(தேயிலை)

72)  கல்வியில்லாப் பெண் களர்நிலம் போன்றவள் – பாரதிதாசன்

73) ஐ.நா உலகப்பெண்கள் மாநாடு நடைபெற்ற இடம் - பெல்ஜியம்

74) இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் - சரோஜினி நாயுடு

75) இந்தியாவில் முதல் பெண்கள் கல்லூரி 1879-ம் ஆண்டு நிறுவப்பட்டது. கோல்கத்தாவில் நிறுவப்பட்ட இக்கல்லூரியின் பெயர் - பேத்தூன்.

76) சாரதா சட்டத்துடன் தொடர்புடையது எது? குழந்தைத் திருமணம், ஆண் -18, பெண் - 16

77) மக்களவையின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் ? 
சுஷ்மா சுவராஜ்

78) தேசிய பெண்கள் ஆணையச்சட்டம்-1990

79) ஆண்கள் விட பெண்கள் அதிகம் உள்ள மாநிலம் :கேரளம்

80) பெண்களுக்கு செய்யும் குடும்ப கட்டுபாடு :டியூபக்டேமி

81) மொரிசியஸ் நாட்டின் முதல் பெண் பிரதமர்? அமீனா குரிப் பாகிம்

82) நன்னன் என்பவன் பெண் கொலை புரிந்த மன்னன். 

83) படித்த பெண் என்னும் திரைப்படத்திற்கு முதன்முதலாக பாடல் எழுதியவர்-பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்.

84) படித்தபெண்கள் எனும் நூலின் ஆசிரியர்? பாரதிதாசன்

85) மடவார் என்பது? பெண்கள்

86) சவுதி அரேபியாவில் நடைபெற்ற நகராட்சி தேர்தலில் முதன் முதலில் வெற்றி பெற்ற பெண் என்ற பெருமையை பெற்றவர்? சல்மா பின்ட் ஹிஸாப் அல்-ஒடீபி

87) பெரியாருக்கு பெரியார் பட்டம் வழங்கியவர்கள்? பெண்கள்

88) பாகிஸ்தானின், முதல் பெண் போர் விமானி மரியம் முக்தியார்.

89) சிரியாவைச்சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் Zaina Erhaimக்கு Reporters Without Borders Prize என்னும் விருது வழங்கப்பட்டுள்ளது

90) 2015ம் ஆண்டின் சிறந்த மனிதராக, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலை, அமெரிக்காவில் இருந்து வெளியாகும் "டைம்' ஆங்கிலப் பத்திரிகை தேர்வு செய்துள்ளது.

91) சுமார் 30 ஆண்டுகளுக்கு பின், இந்த கௌரவத்தை பெறும் முதல் பெண் என்ற பெருமை மெர்க்கலாவுக்கு கிடைத்துள்ளது.

92) கடந்த 1986-ஆம் ஆண்டின் சிறந்த மனிதராக பிலிப்பின்ஸின் முதல் பெண் அதிபர் கோராஸன் அகினோவை, "டைம்' பத்திரிகை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது

93) தலைமை தேர்தல் ஆணையராக இருந்த பெண் யார்?ரமாதேவி

94) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக பெண்கள் எந்த இடத்தில் உள்ளனர்? 15வது இடம்

95) தமிழகத்தில் அதிக அளவு பெண்கள் உள்ள மாவட்டம்?
சென்னை (23,23,454)

96) தமிழகத்தில் உள்ள பெண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு? 71.54 ஆண்டுகள்

97) தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் பெண்கள் எவ்வளவு? 3,59,80,087

98) அன்யூப்ளாய்டி எ.கா-- டர்னர் சின்ரோம் ( பெண் அலி )

99) உலகின் முதல் பெண் பிரதமர்?பண்டார நாயகே - இலங்கை.

100) கடற்படை தலைவராக இருந்த ஆர்டிமீசியா என்ற பெண் எந்த நாட்டை சேர்ந்தவர்?
கிரேக்கம்.

Sunday, 22 December 2019

*Year that company was founded*

Year that company was founded.

Twitter: 2006
Facebook: 2004
Google: 1998
Amazon: 1994
Huawei: 1987
Dell: 1984
Lenovo: 1984
Apple: 1976
Microsoft: 1975
AMD: 1969
Intel: 1968
Sony: 1946
HP: 1939
Samsung: 1938
Panasonic: 1918
IBM: 1911
Hitachi: 1910
Nintendo: 1889
Toshiba: 1875

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...