Sunday, 18 October 2020

*மூன்று மாமனிதர்களின் பெற்றோர்கள்!*

*மூன்று மாமனிதர்களின் பெற்றோர்கள்!*

*முதல் மாமனிதர் :*

150 ஆண்டுகளுக்கு முன்பு குதிரை வண்டி தான் போக்குவரத்துக்கு பயன்பட்டது. அப்படியொரு குதிரை வண்டியில் ஒரு சிறுவன் பள்ளிக்குச் செல்வது வழக்கம்.ஒரு முறை வகுப்பில் ஆசிரியர் மாணவர்களிடம் நீங்கள் பெரியவனானதும் என்னவாக ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்டார்.அதற்கு ஒவ்வொரு மாணவர்களும் வக்கீல், ஆசிரியர், மருத்துவர் என சொல்லி கொண்டே வந்தனர், அப்போது ஒரு மாணவன் கூறினான் “நான் குதிரை வண்டிக்காரனாவேன் ”. சுற்றியிருந்த மாணவர்கள் எல்லாம் சிரித்தனர், ஆசிரியரும் அவனை கேலி செய்து உட்காரச் சொன்னார். 

அந்த சிறுவன் வீட்டிற்கு சோகமாக வந்ததைப் பார்த்து தாய் என்னவென்று கேட்க, நடந்ததைக் கூறினான் அந்த சிறுவன். அதைக் கேட்ட அந்த தாய் மகன் மீது கோபம் கொள்ளவில்லை, அந்த தாய் கேட்டார் 

“ நீ ஏன் குதிரை வண்டிக்காரனாக ஆசைப்படுகிறாய், அதற்கு என்ன காரணம்”.அந்த சிறுவன் கூறினான் “தினமும் பள்ளிக்குச் செல்லும் போது குதிரை வண்டிக்காரன் குதிரை ஓட்டுவதைப் பார்ப்பேன், அவர் குதிரை ஓட்டுவது அழகாக இருக்கும். எனக்கும் அதுபோல் குதிரை வண்டி ஓட்ட வேண்டும் என்று ஆசை, அதனால் தான் அப்படிக் கூறினேன்”.இதைக் கேட்ட தாய் வீட்டினுள் சென்று ஒரு மகாபாரத படத்தை எடுத்து வந்தார், அதை மகனிடம் காட்டி 

நீ குதிரை வண்டிக்காரனாக வேண்டும் என்று சொன்னது தவறில்லை, ஆனால் நீ எப்படிப்பட்ட குதிரை வண்டி ஓட்டுபவனாக இருக்க வேண்டும் தெரியுமா – மகாபாரதத்தில் அர்ஜுனனுக்கு தேர் ஓட்டினானே கிருஷ்ணன், அந்த கிருஷ்ணன் போன்ற தேர் ஓட்டியாக இருக்க வேண்டும்”என்றார். அந்த சிறுவன் தான், தற்போது உலகெங்கிலும் உள்ள ஶ்ரீ இராமகிருஷ்ண மடத்தை ஸ்தாபித்த சுவாமி விவேகானந்தர்.

*இரண்டாம் மாமனிதர் :*

 ஒரு சிறுவன் வீட்டில் படித்துக் கொண்டு இருக்கிறான். அப்போது வேலைக்குச் சென்ற அவன் தந்தை மற்றும் தாய் இரவில் வீடு திரும்பினர். வீட்டிற்கு வந்த அவன் தாய் உணவு சமைத்தார். அனைவரும் சாப்பிட அமர்ந்தார்கள். தந்தை சாப்பிட அமர்ந்த போது கருகிய ரொட்டியைப் பரிமாறினார் அவன் தாய். ஆனால் அவன் தந்தை கருகியதைப் பொருட்படுத்தாமல் ரொட்டியைச் சாப்பிட்டார். ரொட்டி கருகி விட்டதை சொல்லி வருத்தப்பட்டார் அந்தத் தாய், அதற்கு அவன் தந்தை  “எனக்கு கருகிய ரொட்டி தான் ரொம்பப் பிடிக்கும்” என்று கூறி விட்டு சாப்பிட்டு முடித்தார். இரவு தூங்கும் முன்பு தந்தையிடம் ஆசீர்வாதம் பெற்று விட்டு, தயக்கத்துடன் அச்சிறுவன் கேட்டான் “அப்பா உங்களுக்கு உண்மையில் கருகிய ரொட்டி தான் பிடிக்குமா?”. சற்று நேரம் மௌனமாக இருந்த தந்தை கூறினார் 

“மகனே உன் அம்மா தினமும் வேலைக்கும் சென்று கொண்டு, நமக்குப் பணி விடையும் செய்கிறார். பாவம் களைத்துப் போயிருப்பாள். ஒரு கருகிய ரொட்டி யாரையும் காயப்படுத்தப் போவதில்லை. ஆனால் கடும் வார்த்தைகள் ஒருவர் மனதைக் காயப்படுத்தும்.

நான் ஒன்றும் உயர்ந்த மனிதன் அல்ல -ஆனால் அதற்கு முயற்சிக்கிறேன்”.இந்த வரிகள் அச்சிறுவனின் மனதில் ஆழப் பதிந்தது. அதை வாழ்நாள் முழுவதும் கடைபிடித்த அச்சிறுவன் தான் முன்னாள் குடியரசுத் தலைவர் மற்றும் இந்தியாவை உலக அரங்கில் தலைநிமிரச் செய்த விஞ்ஞானி Dr.APJ.அப்துல்கலாம் அவர்கள்.

*மூன்றாம் மாமனிதர்:*

 ஒரு சிறுவன் பள்ளிக்குச் சென்ற போது அவன் ஆசிரியர் அவனிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்து உன் தாயிடம் கொடு என்றார். அந்த சிறுவன் மாலை வீடு சென்றதும் கடிதத்தை அவன் தாயிடம் கொடுத்தான். அந்தக் கடிதத்தில் 

உங்கள் மகனின் அறிவு வளர்ச்சிக் குறைவு. அவன் பள்ளியில் தேர்ச்சி அடைய மாட்டான். அவன் தேர்வில் தோல்வி அடைந்தால் எங்கள் பள்ளியின் பெயர் கெட்டு விடும். அதனால் உங்கள் மகனைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்” என்று எழுதியிருந்தது. இதைப் படித்த தாயின் கண்களில் கண்ணீர் வந்தது. அதைப் பார்த்த சிறுவன் ஆசிரியர் என்ன எழுதியிருக்கிறார் எனக் கேட்டார். கண்ணீரைத் துடைத்து விட்டு அந்தத் தாய் கூறினார், 

இந்தக் கடிதத்தில் உன் ஆசிரியர் என்ன எழுதியிருக்கிறார் தெரியுமா “நீ மிகுந்த அறிவுத் திறன் கொண்டவன். பள்ளி உனக்குத் தேவை இல்லை. நீ வீட்டிலிருந்தே படிக்கும் அளவுக்குத் தகுதி உடையவன்”என்று எழுதியிருக்கிறார். அதன்பின் அந்த சிறுவன் வீட்டிலேயே அவர் தாயிடம் பாடம் கற்றார். அந்த சிறுவன் தான் 1000 ம் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை இந்த உலகிற்குத் தந்த தாமஸ் ஆல்வா எடிசன்.

உயர்ந்த எண்ணங்களே உயர்ந்த மனிதர்களை உருவாக்குகிறது. ஆனால் பெரும்பான்மை மக்கள் என்ன நினைக்கிறார்கள்  உயர்ந்த எண்ணங்களால் என்ன பயன்? உயர்ந்த எண்ணங்களால் என்ன கிடைக்கும்? ஊரார் என்ன நினைப்பார்கள்? இவற்றை எல்லாம் கருதி உயர்ந்த எண்ணங்களை (அறம்) சமரசம் செய்து கொள்கிறோம். ஆனால் நம் எண்ணங்கள் நம்மோடு முடிவதில்லை. நம் எண்ணங்கள் தான் நாளைய தலைமுறைக்கான விதைகள். நம் எண்ணங்கள் மீதான நம்முடைய நம்பிக்கையின் உயரம் தான் - நாளை மரமாக வளரக்கூடிய தலைமுறையின் உயரம்.

*புவனேஸ்வரி தேவியின் உயர்ந்த எண்ணம் விவேகானந்தர் என்னும் ஞானமாய் மலர்ந்தது.*

*ஜைனுலாப்தீனின் உயர்ந்த எண்ணம் அப்துல்கலாம் என்னும் விஞ்ஞானமாய் மலர்ந்தது.*

*நான்ஸியின் உயர்ந்த எண்ணம் தாமஸ் ஆல்வா எடிசன் என்னும் 1000 கண்டுபிடிப்புகளாக மலர்ந்தது.*

இவர்கள் எல்லாம் மாமனிதர்கள், இவர்கள் போல் நம்மால் இருக்க முடியுமா என்று தோன்றலாம். இவர்கள் போல் இருக்க முடியுமா என்று தெரியவில்லை, ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள மனிதர் போல் நம்மால் இருக்க முடியும்.

ஒரு மனிதர் தன் 8 வயது மகனுடன் சர்க்கஸ் சென்றார். டிக்கெட் வழங்குபவர் கூறினார் “7வயது மற்றும் 7வயதுக்கும் குறைவானவர்களுக்கு அரை டிக்கெட்”.அந்த தந்தை இரண்டு முழு டிக்கெட் கேட்டார். டிக்கெட் வழங்குபவர் கேட்டார் உங்கள் மகனுக்கு எத்தனை வயது, அதற்கு அந்த தந்தை கூறினார் 8 வயது. உடனே டிக்கெட் வழங்குபவர் கூறினார் 

“உங்கள் பையன் பார்க்க 8 வயது போல் தெரியவில்லை, நீங்கள் 7 வயது என்று சொல்லியிருந்தாலும் எனக்குத் தெரியப் போவதில்லை நான் அரை டிக்கெட் கொடுத்திருப்பேன்”.

*அதற்கு அந்தத் தந்தை கூறினார் “நான் 7 வயது என்று பொய் சொன்னால் உங்களுக்கு தெரியாது, ஆனால் ஒரு டிக்கெட்டுக்காக நான் பொய் சொல்கிறேன் என்று என் மகனுக்குத் தெரியும்”.*

நம்மால் மாமனிதர்களாக இருக்க முடியுமா என்பது தெரியவில்லை - ஆனால் ஒரு டிக்கெட்டுக்காக பொய் சொல்லாத மனிதராக இருக்க முடியும் அல்லவா.

*உயர்ந்த எண்ணங்கள் தான் உயர்ந்த மனிதர்களை உருவாக்குகிறது.*


*படித்ததில் பிடித்தது*

Saturday, 17 October 2020

Millions of books



Dear All,
In need of any book(.pdf) relating to any subject/field or topic? 
Go to your browser and type:
You will get access to millions of  books you need, for free.
Unlimited downloads. 

You may browse by title or author, etc.
Currently 274376478 books are available for free and every minute, around 50 new books are added to the database.
All downloads are free😊.
Share the worthy...

Friday, 9 October 2020

*Tnpsc Departmental Examinations Revision of Syllabus and Scheme of Examinations*

*Tnpsc Departmental Examinations - Revision of Syllabus and Scheme of Examinations - Objective / Descriptive and both Objective and Descriptive Pattern of Examinations - Recommendation by the Departmental Examinations Reforms Committee - Implementation - Orders - Issued.*
√√√

Thursday, 8 October 2020

Current Bill Unit Calculator

*உங்கள் வீட்டில் எத்தனை யூனிட்டு ஒடியிருக்கு என்று டைப் அடிச்சிங்னா  ரூபாய் எவ்வளவு என தெரியும்.*

Monday, 5 October 2020

October -5 இன்றைய தினம்

உலக கட்டிடக்கலை தினம் கட்டிடக்கலை என்பது கட்டிடங்கள் வடிவமைப்புச் செய்வதற்கான கலையும் அறிவியலும் ஆகும் கட்டிடக்கலை ஆனது கணிதம் அறிவியல் கலை தொழில்நுட்பம் சமூக அறிவியல் அரசியல் வரலாறு தத்துவம் போன்றவற்றுடன் தொடர்புடைய ஒரு பல்துறை களமாகும் சர்வதேச கட்டடக் கலையின் ஒன்றியம் 2005 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் திங்கட்கிழமையை உலக கட்டிடக்கலை தினமாக அறிவித்து கொண்டாடி வருகிறது.

* உலக ஆசிரியர் தினம். மாதா பிதா குரு தெய்வம் என்பார்கள் வேறு எந்த பணிக்கும் கிடைக்காத பெருமை ஆசிரியர்களுக்கு உள்ளது என்பதை இந்த வாக்கியம் உணர்த்துகிறது அத்தகைய சிறப்புமிக்க ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் ஐந்தாம் தேதி உலக ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.             ‌.                ஆசிரியர்கள் பொது கல்விக்காக ஆற்றிவரும் பங்களிப்பினை மரியாதை செய்யும் விதமாக யுனெஸ்கோ நிறுவனம் 1994 ஆம் ஆண்டு முதல் இத்தினத்தை அறிவித்தது கொண்டாடுகிறது இந்த தினம் கொண்டாடப்படும் நாட்களும் விதமும் நாட்டுக்கு நாடு வித்தியாசப்படுகிறது.

* உலக குடியிருப்பு தினம். மக்கள் நகரங்களில் குடியேறுவதால் வாழ்விட பிரச்சினை ஏற்படுகிறது இதன்மீது தனி கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக ஐநா பொது சபை பொது 1985 ஆம் ஆண்டு ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தது.இதன் படி அக்டோபர் மாதம் முதல் திங்கள் கிழமையை உலக குடியிருப்பு தினமாக அறிவித்தது.நகரத்தை விரிவுபடுத்துவது மட்டுமல்லாமல் நகர மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதும் இதன் நோக்கம் ஆகும்.

Saturday, 26 September 2020

*NEET_JEE_MATERIALS_PREVIOUS*

1500+ files drive folder

🎁Contents included:

🔹FIITJEE MATERIAL
🔺RESONANCE MATERIAL
🔹ALLEN MATERIAL
🔺BANSAL CLASSES MATERIAL
🔹VIDHYA MANDIR MATERIAL
🔺MOTION INSTITUTE MATERIAL
🔹ETOOS MATERIAL
🔺JEE BOOKS
🔹MTG MAGAZINES
🔺NEET JEE AIIMS KCET AIPMT BITSAT
     PAST YEAR PAPERS
🔹BOOKS FOR BOARDS
🔺NCERT BOOKS
🔹FORMULA  BOOKLETS
🔺 SAMPLE PAPERS 
🔹PLANCESS BOOKS
🔺 OLYMPIAD BOOKS
     And MANY MORE STUDYING MATERLS


துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...