Thursday, 22 December 2022

*மாணவ மாணவியர்களின் பெற்றோர்களில் யாரேனும் ஒருவர் மரணமடைந்த பட்சத்தில் _ மாணவ , மாணவிகளுக்கு ரூபாய். 75,000/-*

குரூப்பில் உள்ளவர்கள் கவனிக்கவும்" மாணவ மாணவியர்களின் பெற்றோர்களில் யாரேனும் ஒருவர் மரணமடைந்த பட்சத்தில் இருக்கும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவ , மாணவிகளுக்கு ரூபாய். 75,000 கல்வி மற்றும் பராமரிப்பு செலவுக்காக வங்கியில் நிரந்தர இருப்பாக நமது தமிழ் நாடு அரசு வழங்க உள்ளது. 




ஆகையால் பெற்றோர்களில் யாரேனும் ஒருவர் இல்லாத பட்சத்தில் இருக்கும் மாணவ கண்மணிகள் அவரவர் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் சான்றிதழ் பெற்றுக்கொண்டு அவர்களது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அல்லது கிராம நிர்வாக அலுவலர்களிடம் வழங்கி பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

இந்த திட்டத்திற்க்கான அரசாணையை பதிவிறக்கம் செய்ய லிங்க்:https://drive.google.com/file/d/1Zm25QJSkG8vF90D0J_eEbW3AhCJBkvOB/view?usp=drivesdk

 *தெரிந்தவர்களுக்கு உதவியாக இருப்பின்* மகிழ்ச்சியே..

இப்படிக்கு. 

"தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கம்

Sunday, 18 December 2022

TNPSC Group Examinations: 2023

TNPSC Group Examinations: 2023 ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு கால திட்ட அட்டவணை (TNPSC Annual Planner) தேர்வர்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.




தேர்வு அட்டவணையில் குரூப் 1, குரூப் 2/2ஏ தேர்வு பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் எதுவுமில்லை. மேலும், குரூப் 4 தேர்வுக்கான அறிவிக்கை 2023 நவம்பர் மாதம் வெளியிடப்படும் என்றும், 2024ல் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த தேர்வு திட்டம், தமிழகத்தில் உள்ள குறிப்பாக நடுத்தர மற்றும் கிராமப்புற இளைஞர்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை உருவாக்கக் கூடியாதாக உள்ளது. குறிப்பாக, குரூப் 1 தேர்வுக்கு அதிகபட்ச வயது வரம்பு இருப்பதால், தற்போது 38 வயதில் இருக்கும் பலர் மீண்டும் ஒருமுறை தேர்வெழுதும் வாய்ப்பை இழக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.




கடந்த 10 ஆண்டுகால தேர்வு அட்டவணை:

2020, 2021 ஆண்டுகள் தவிர்த்து, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு மிகவும் சிக்கலான சூழ்நிலையை டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள்தற்போது எதிர்கொள்ள உள்ளனர்.

2012

குரூப் 1 (2011-2013) தேர்வு - 25 பணியிடங்கள்

கிராம நிர்வாக அலுவலர் தேர்வு - 1870,

குரூப் 4 தேர்வு - 10718 பணியிடங்கள்
2013

குரூப் 1 தேர்வு - 79 காலியிடங்கள் ,

குரூப் 2 தேர்வு - 1064 காலியிடங்கள் ,

குரூப் 4 தேர்வு - 5566 காலியிடங்கள்

2014

குரூப் 4 தேர்வுகள் - 4963 காலியிடங்கள் ,

குரூப் 2ஏ தேர்வுகள் - 2,846 காலியிடங்கள்

2015

குரூப் 2 (2014-2015 மற்றும் 2015-16) தேர்வுகள் - 1863 பணியிடங்கள்

கிராம நிர்வாக அலுவலர் (2014 -15) தேர்வுகள் - 813 பணியிடங்கள்

குரூப் 1 தேர்வுகள் - 74 பணியிடங்கள்

குரூப் 2 ( 2014-15, 2015-16) தேர்வுகள் -1241 (நேர்காணல் பணியிடங்கள் )

2016

குரூப் 1 தேர்வு - 85 பணியிடங்கள் ,

குரூப் 4 (2015- 16) தேர்வு -5451 பணியிடங்கள்


2017

குரூப் 2ஏ நேர்காணல் இல்லாத தேர்வு (2017 -18) - 1,953 பணியிடங்கள் ,

குரூப் 4 ( 2015-2016, 2016-2017 and 2017-2018 ) தேர்வு - 9351 பணியிடங்கள்,

2018 குரூப் 2 நேர்காணல் தேர்வு - 1199

2019

குரூப் 4 (2018-2019, 2019-2020) தேர்வு - 6491 பணியிடங்கள் ,

குரூப் 1 தேர்வு (2016 - 2019) - 139 பணியிடங்கள்

2020 குரூப் 1 தேர்வு - 79 (கொரோனா தொற்று பொது முடக்க நிலை)

2021 கொரோனா தொற்று பொது முடக்க நிலை

2022

குரூப் II-IIஏ தேர்வு - 5413 பணியிடங்கள்,

குரூப் 4 தேர்வு -7301 பணியிடங்கள் ,

குரூப் 1 தேர்வு - 92 பணியிடங்கள்

குறிப்பு : மேற்படி அட்டவணையின் படி , தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முந்தைய ஆண்டு அதிகப்படியான டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2001 முதல் 2006 ஆண்டு வரையிலான காலகட்டத்தில், பொருளாதார நிதிநெருக்கடி காரணமாக, குரூப் 1, 2,4 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்திருந்தது. 2006ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பிறகே, ஆட்சேர்ப்பு நடைமுறை இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கியது.


டிஎன்பிஎஸ்சி ஆட்சேர்ப்பு அறிவிப்பு

கடந்த 10 ஆண்டுகளில், கொரோனா காலக்கட்டங்களிலும் கூட, ஆட்சேர்ப்பு அறிவிக்கை தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வந்தது. ஆனால், தற்போது மிகவும் இறுக்கமான போக்கை தமிழ்நாடு அரசு கடைபிடிப்பதாக டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே, பொருளாதார நிச்சயமற்றத் தன்மை காரணமாக தனியார் துறையில் உள்ள முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் ஆட்குறைப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், மாநில அரசு வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் மேற்கொள்ள வேண்டுமே தவிர இறுக்கமான போக்கு தேவையில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.

💡 *WIN_100%*

Saturday, 17 December 2022

Old Post

✍ #UPDATE 

நாளை முதல் ஏப்ரல் 28வரை குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். 

ஜூலை 24ம் தேதி குரூப் 4 தேர்வு: டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன்

காலை 9 மணி முதல் 12.30 மணி வரை டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுகள் நடைபெறும். 

குரூப் 4 தேர்வில் 300 மதிப்பெண்களுக்கு மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும் – பாலச்சந்திரன். 

7,352 பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வில் 81 இடங்கள் விளையாட்டு கோட்டா மூலம் நிரப்பப்படும். 

ஜூலையில் நடைபெறும் தேர்வுக்கான முடிவுகளை அக்டோபர் மாதம் வெளியிட டிஎன்பிஎஸ்சி திட்டம். 

தமிழ் பகுதியில் 150 மதிப்பெண்களுக்கு 40%(60 மதிப்பெண்) பெற்றால் மட்டுமே, அந்த தாள் திருத்தப்படும். மொத்தமாக 90 மதிப்பெண்கள் பெற்றால்தான் அந்த தேர்வர் தரவரிசைக்கு தகுதி பெறுவார்.

TNPSC குரூப் 4 தேர்விற்கு விண்ணப்பிக்கும்  போட்டியாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு...

1. அனைவரும் வெள்ளை பேக்ரவுண்ட் போட்டோவாக மாற்றம் செய்து கொண்டுவரவும். அதில் விணணப்பதாரரின் பெயர் மற்றும் புகைப்படம் எடுத்த நாளையும் பதிவிடவும்.

2.  ஆதார் கார்டில் போன் நம்பர் இணைக்கவும். 

3.ஆதார் எண்ணை TNPSC வெப்சைட்டில் இதுவரை இணைக்கவில்லை எனில் இணைத்தால் மட்டுமே விணணப்பிக்க முடியும்.

4.  தமிழ் வழி சான்றிதழ் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை பயின்ற அனைத்து பள்ளிகளிலும் தவறாமல் வாங்கிவரவும்.
 
5.இதைப்போல், தற்போது  சாதி மாற்றம் செய்துள்ள பிரிவினர் தனது தற்போதைய சாதி சான்றிதழின்படி வாங்கி வரவும். 

6. ஏற்கனவே TNPSC தேர்வு எழுதியவர்கள் தற்போது One Time Id தெரியாதவர்கள்  முன்னதாகவே வந்து கண்டுபிடித்துக் கொள்ளவும். புதிதாக பதிவு செய்து கொள்ளலாம் என்று எண்ணிவிடாதீர்கள்.  அது முடியாத செயல்.            

 7. OneTime ID யில் தேவைப்படின் தற்போதைய போன் எண்ணை மாற்றி பதியலாம்.

 

டிசம்பர் 17 _ ஓய்வூதியர் நாள் (Pensioners’ Day)

இன்று டிசம்பர் 17
ஓய்வூதியர் நாள் (Pensioners’ Day) உருவான வரலாறு எப்படி?!அறிவோம்!!





ஓய்வூதியர் நாள் (Pensioners’ Day), இந்தியாவில் ஆண்டு தோறும் டிசம்பர் 17 ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது. டிசம்பர் 17, 1982-ஆம் நாளில், இந்திய உச்ச நீதிமன்றம், ஓய்வூதியம் குறித்து வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை நினைவுகூரும் வகையில் இந்நாள் ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியர்களால் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.

#வரலாறு 
அரசுத் துறைகளில் பணி புரிந்து பணி ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் நிலை குறித்து பல்வேறு ஓய்வூதியர் சங்கங்கள் தாக்கல் செய்த வழக்குகள் மீது உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ஓய்வூதியர்கள் அனைவரும் ஒரே சீரான வகுப்பைச் சேர்ந்தவர்கள் எனத் தீர்ப்பளித்துள்ளது. இதில் ஓய்வு பெற்ற தேதியை அடிப்படையாக வைத்து ஓய்வூதியப் பலன்களை வழங்குவதில் பாகுபாடு செய்வது, ஓய்வூதியர்களைப் பிரிவினைச் செய்வதற்கு ஒப்பாகும் என்றும், மேலும் இவ்வாறு பாகுபாடு காட்டுவது இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 14-ஐ மீறுவதாகும் என்று 17 டிசம்பர் 1982 ஆண்டில் உச்சநீதிமன்றம், டி. எஸ். நகரா என்ற ஓய்வூதியர் தொடுத்த வழக்கில் வழங்கிய தீர்ப்பை மேற்கோள் காட்டி பல தீர்ப்புகள் வழங்கப்பட்டன.

மேலும் டி. எஸ். நகரா வழக்கில் அப்போதைய உச்ச நீதிமன்ற நீதியரசர் ஒய். வி. சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில், 17 டிசம்பர் 1982 அன்று அளித்த உரிமை சாசனத் தீர்ப்பின் ஒரு பகுதியில், ஓய்வூதியம் என்பது, உழைத்த உழைப்பிற்கு கொடுக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்ட ஊதியம் ஆகும் எனவும், அரசியல் அமைப்பு சட்டப்பிரிவுகள் 139 மற்றும் 148 (5)-இன் படி ஓய்வூதியம் என்பது ஓய்வூதியர்களுக்கு சொத்துரிமை போன்ற நிலைத்த சட்டபூர்வமான உரிமையாகும் என்றும் தெரிவித்தது.

ஆகவே ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 17-ஆம் நாள் ஓய்வூதியர் நாள், ஓய்வூதியர்களால் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது..

*December 16 - ஆரோக்கிய தினம்*

*அனைவருக்கும் ஆரோக்கிய தின வாழ்த்துக்கள்*
🄷🄰🄿🄿🅈 🄸🄽🅃🄴🅁🄽🄰🅃🄸🄾🄽🄰🄻
🄷🄴🄰🄻🅃🄷   🄳🄰🅈



மனதில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்:
1. பிபி: 120/80
2. துடிப்பு: 70 - 100
3. வெப்பநிலை: 36.8 - 37
4. மூச்சு: 12-16
5. ஹீமோகுளோபின்: ஆண் -13.50-18
பெண் - 11.50 - 16
6. கொலஸ்ட்ரால்: 130 - 200
7. பொட்டாசியம்: 3.50 - 5
8. சோடியம்: 135 - 145
9. ட்ரைகிளிசரைடுகள்: 220
10. உடலில் உள்ள இரத்தத்தின் அளவு: PCV 30-40%
11. சர்க்கரை அளவு: குழந்தைகளுக்கு (70-130) பெரியவர்கள்: 70 - 115
12. இரும்பு: 8-15 மி.கி
13. வெள்ளை இரத்த அணுக்கள் WBC: 4000 - 11000
14. பிளேட்லெட்டுகள்: 1,50,000 - 4,00,000
15. சிவப்பு இரத்த அணுக்கள் RBC: 4.50 - 6 மில்லியன்.
16. கால்சியம்: 8.6 -10.3 mg/dL
17. வைட்டமின் D3: 20 - 50 ng/ml.
18. வைட்டமின் பி12: 200 - 900 பக்/மிலி.

*ஆரோக்ய தின வாழ்த்துக்கள்*

Wednesday, 14 December 2022

புயலுக்கு பெயர் வைக்கும் விதிமுறைகள் குறித்து பார்ப்போம்.

*🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃தெரிந்து கொள்வோமா :-      புயல் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள் : -* (பள்ளி மாணவர்களுக்கும் இதுகுறித்து விளக்கம் தரலாம்).


புயலுக்கு பெயர் வைப்பது யார்?  புயலுக்கு பெயர் வைக்கும் விதிமுறைகள் குறித்து பார்ப்போம். 



புயல்களுக்கு ஏன் பெயர் வைக்க வேண்டும் என நீங்கள் கேட்கலாம். அப்போதுதான் அந்த புயல்கள் நமது நினைவில் எளிதாக இருக்கும்.பொது மக்களுக்கு மட்டுமல்லாமல் அறிவியல் சார்ந்த விஞ்ஞானிகள், ஊடகங்கள்,பேரிடர் மேலாண்மை துறை ஆகியவற்றுக்கும் இந்த பெயர் வைப்பு மிகவும் உதவுகிறது.புயல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். தயார் நிலையில் இருக்க முடியும். மேலும் குழப்பங்களை தவிர்க்கவும் இது வழிவகுக்கும்.

புயலுக்கு பெயர் வைக்கும் விதிமுறைகள்:

நமது உயிரியல் பாடத்தில் தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு இருசொற்பெயர் அறிவியல் பெயர் வைப்பதற்கான விதிமுறைகளை படித்திருப்போம்.அது போல புயலுக்கு பெயர் வைக்கவும் விதிமுறைகள் உள்ளது. அந்த விதிமுறையை பின்பற்றா விட்டால் அப்பெயர் நிராகரிக்கப்படும்.

1.மிக மோசமான பெயராகவோ யாருடைய மனதையும் புண்படுத்தும் பெயராக இருக்க கூடாது.

2.பாலினம் அரசியல் மதம் மற்றும் நம் நாட்டின் கலாச்சாரம் கொண்டதாக இருக்கலாம்.

3. எட்டு சொற்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

4.பொதுமக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையில் இருக்க வேண்டும்.

5.பெயர் வைக்கும் நாடுகள் அதன் உச்சரிப்புடன் கொடுக்க வேண்டும்.

புயலுக்கு யார் பெயர் வைப்பார்கள்?  

உலகில் 15 நாடுகளில் உருவாகும் புயலுக்கு இந்திய வானிலை மையம் தான் பெயர் வைக்கும். 
புயல்கள் மற்றும் சூறாவளி உருவாதல் குறித்து 12 நாடுகளுக்கு இந்திய வானிலை மையம் அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.
இந்தியா  உட்பட வங்கதேசம், மியான்மர், மாலத்தீவு,பாகிஸ்தான், ஓமன், இலங்கை, தாய்லாந்து ஆகிய 8 நாடுகள் இந்த மண்டலத்தில் இணைக்கப்- பட்டிருக்கிறது.

அதன் பின்னர் 2018-ஆம் ஆண்டு ஈரான்,கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அமீரக நாடுகள், ஏமன் ஆகிய நாடுகளும் இந்திய வானிலை மைய மண்டலத்தில் இணைந்தது.

2004 ஆம் ஆண்டு இந்த எட்டு நாடுகளும் எட்டு பெயர்களை பரிந்துரை செய்தது அந்த பட்டியலை இந்திய வானிலை மையம் வைத்திருக்கும் . மொத்தம் 64 பெயர்கள் பட்டியலிடப்பட்டனர். இந்தியப்பெருங்கடல் பகுதியில் புயல்கள் உருவாகும்போது இந்த அட்டவணையிலிருந்துதான் பெயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது. தற்போது புதிய பெயர் பட்டியலின் படி புயலுக்கு பெயர் வைத்து வருகிறோம். இதனை இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் கண்காணிக்கிறது. சுழற்சி முறையில் ஒவ்வொரு நாட்டு பெயரும் வைக்கப்படும். 

காற்றழுத்தம் புயல் என்றால் என்ன? இப்பதிவை விளக்கமாக விளக்கியுள்ளேன் பாருங்கள். இது எல்லாம் தெரிந்து கொள்வது கட்டாயம். இது எல்லாம் பள்ளி பாடங்களிலே உள்ளது. உங்கள் வீட்டில் மாணவர்கள் இருந்தால் கட்டாயம் படிக்க சொல்லுங்கள்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரண்மாக தமிழகத்தின் கரையோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவிக்கும் . மழை சீசனின் போது இவ்வித அறிவிப்பைக் கேட்கலாம்.

அதென்ன காற்றழுத்தத் தாழ்வு நிலை?

கடற்பரப்பில் 26 °C அதிகமான வெப்பநிலை தொடர்ந்து நீடிக்கும்போது காற்று வேகமாக வெப்பமடைகிறது. வெப்பமடைந்த காற்றானது மேல் நோக்கிச் செல்கிறது. அப்போது அந்த இடத்தில் காற்றின் அழுத்தம் குறைந்து வெற்றிடம் உண்டாகிறது. 

அந்நிலையில் காற்றின் அழுத்தம் அதிகம் உள்ள பகுதியிலிருந்து வெற்றிடத்தை நோக்கி காற்று வீச ஆரம்பிக்கிறது.இதையே காற்றழுத்த தாழ்வு நிலை என்கிறோம்.

காற்றின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க காற்றழுத்த தாழ்வுநிலையானது படிப்படியாக  வலுவடைகிறது. 

காற்றானது மணிக்கு 31கி.மீ வேகத்தில் வீசினால் அது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.

காற்றானது மணிக்கு 32 - 51 கி.மீ வேகத்தில் வீசினால் அது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.

காற்றானது மணிக்கு 52 - 62 கி.மீ வேகத்தில் வீசினால் அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாகும்.

காற்றானது மணிக்கு 63 - 87 கி.மீ வேகத்தில் வீசினால் அது புயல்.

காற்றானது மணிக்கு 88 - 117 கி.மீ வேகத்தில் வீசினால்  தீவிர புயல்.

காற்றானது மணிக்கு 118 - 165 கி.மீ வேகத்தில் வீசினால்  மிகத் தீவிர புயல்.

காற்றானது மணிக்கு 165 - 221 கி.மீ வேகத்தில் வீசினால் கடும் தீவிர புயல்.

காற்றானது மணிக்கு 222 கி.மீ-க்கு மேல் வீசினால் அதி தீவிர புயல். 

புயல் குறித்த எச்சரிக்கை தெரிவிக்கும் விதமாகத் துறைமுகங்களில் 11 விதமான புயல் கூண்டுகள் ஏற்றப்படும் அதன் விளக்கங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

1ம் எண் கூண்டு: புயல் உருவாகக்கூடிய வானிலைப் பகுதி ஒன்று ஏற்பட்டுள்ளது.
 
2ம் எண் கூண்டு: புயல் உருவாகியுள்ளது என்பதை அறிவிப்பதிற்காக ஏற்றப்படுவது தான் இரண்டாம் எண் எச்சரிக்கை கூண்டு. இதனைத் தொடர்ந்து துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் வெளியேற்ற வேண்டும் என்பதை தெரிவிக்க ஏற்றப்படுகிறது.
 
3ம் எண் கூண்டு: திடீர் காற்றோடு மழை பொழியக்கூடிய வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்று பொருள்.
 
4ம் எண் கூண்டு: துறைமுகம் புயல் அச்சுறுத்தலுக்கு ஆளாகலாம் இது கடற்கரையை ஒட்டியுள்ள உள்ளூர் மக்களுக்கு எச்சரிக்கை.
 
5ம் எண் கூண்டு: துறைமுகத்தின் இடதுபக்கமாகப் புயல் கடப்பதால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படலாம் என்பதற்கான எச்சரிக்கை.
 
6ம் எண் கூண்டு: துறைமுகத்தில் புயல் வலது பக்கமாகக் கரையைக் கடந்துசெல்லும் நேரத்தில் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும் என்று பொருள்.
 
7ம் எண் கூண்டு:  துறைமுகம் வழியாகவோ அல்லது அருகிலோ புயல் கரையைக் கடக்கும் என்பதற்கான எச்சரிக்கை

8ம் எண் கூண்டு: ஏற்றப்பட்டால், புயலானது தீவிர புயலாகவோ அல்லது அதி தீவிர புயலாகவோ உருவெடுத்துள்ளது என்று பொருள். துறைமுகத்தின் இடதுபக்கமாகப் புயல் கரையைக் கடந்து செல்லும்.

9ம் எண்  கூண்டு: புயலானது தீவிர புயலாகவோ அல்லது அதி தீவிர புயலாகவோ உருவெடுத்துள்ளது என்று பொருள். துறைமுகத்தைப் புயல் வலது பக்கமாகக் கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் கடும் புயலால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும்.
 
10ம் எண் கூண்டு: புயல் எச்சரிக்கை விடப்படுமானால், துறைமுகம் அல்லது அதன் அருகே கடந்துசெல்லும் புயலால் பெரிய அபாயம் ஏற்பட்டிருப்பதாக அர்த்தம்.
 
11ம்  எண் கூண்டு :11-ம் எண் புயல் எச்சரிக்கைதான் உச்சபட்சமானது. இந்த எச்சரிக்கை விடப்படுகிறது என்றால், வானிலை எச்சரிக்கை மையத்துடனான தகவல் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது என்று பொருள். எப்போதுமே அரபிக்கடலில் உருவாகுகிற புயலை விட வங்க கடலில் உருவாகுகிற புயலுக்கு பலம் அதிகம்.

🤔🤔🤔🤔🤔🤔🤔

*நன்றி*🙏

Tuesday, 13 December 2022

யுனைடெட் கிங்டமும் (UK) கிரேட் பிரிட்டனும் ஒன்று அல்ல

தெரிந்து கொள்வோம்:-





யுனைடெட் கிங்டமும் (UK) கிரேட் பிரிட்டனும் ஒன்று என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் இரண்டும் ஒன்று அல்ல.  இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் இந்த மூன்று நாடுகளும் சேர்ந்தது கிரேட் பிரிட்டன் இவை மூன்றுடன் வடக்கு அயர்லாந்து இணைந்து UK  என்று சொல்லப்படும்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...