Sunday, 25 December 2022

முதல் பெண் அரசு பேருந்து ஓட்டுநர்/First Government Lady Bus Driver

0*முதல் பெண் அரசு பேருந்து ஓட்டுநர்*



உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல் பெண் அரசு பேருந்து ஓட்டுநர் என்ற பெருமையைப் பெற்றார் 31 வயதான பிரியங்கா சர்மா



Saturday, 24 December 2022

Periyar - ஈ.வெ. ராமசாமி

ஈ.வெ. ராமசாமி
(E.V. Ramasamy 
17 செப்டம்பர் 1879- 
*24 டிசம்பர் 1973*) 



சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். 

தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர். 

இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது.


M.G.R. - எம். ஜி. ராமச்சந்திரன்

எம். ஜி. ராமச்சந்திரன்
(17 ஜனவரி 1917-
*24 டிசம்பர் 1987*)





தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர்.

TNPSC Previous Q & A

TNPSC தேர்வில் இதுவரைக் கேட்கப்பட்ட 3231 பக்கங்கள் கொண்ட வினாவிடைத் தொகுப்பு Pdf File


👆👆👆👇👇👇

TNPSC Previous Q & A

👇👇👇

https://drive.google.com/file/d/15a_Wrsh7PtNF5U_Fqift-TlhVdYqT4ZN/view?usp=drivesdk


IGNOU B.ED-க்கு மதிப்பீடு சான்று தேவை இல்லை - அரசாணை :160 நாள்02.12.2004.

IGNOU B.ED-க்கு மதிப்பீடு சான்று தேவை இல்லை - அரசாணை :160 நாள்02.12.2004.




தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப்பணி நியூடெல்லி, இந்திராகாந்தி தேசிய திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.எட் (B.Ed..) பட்டத்தை தமிழகப் பல்கலைக்கழகம் வழங்கப்படும் பி.எட் (B.Ed.,) பட்டத்திற்கு இணையாக மதிப்பீடு செய்து அதை தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளில் பள்ளி உதவி ஆசிரியர் நேரடி பணி நியமணம் மற்றும் பதவி உயர்வுக்கு உரிய தகுதியாக அங்கீகரித்து ஆணைகள் வெளியிடப்படுகிறது.

Dec_24/24-12-2022_*தேசிய நுகர்வோர் தினம்

_*"தேசிய நுகர்வோர் தினம்" நமக்கான அடிப்படை உரிமைகள்.... மறுக்கப்பட்டால் என்ன செய்யலாம்....?*_

*_24-12-2022_*
தேசிய நுகர்வோர் தினத்தை முன்னிட்டு இன்றைய பதிவில் நுகர்வோர் உரிமைகள் பற்றி சில தகவல்களை பார்க்கலாம்.






 *நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்* 

1986 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி இந்தியாவில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது. 

இதன் காரணமாகத்தான் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 24 அன்று நுகர்வோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 

இத்தினத்தின் முக்கிய நோக்கம் நுகர்வோருக்கு அவர்களின் உரிமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகும்.

 *நுகர்வோருக்கான உரிமைகள்* 

• தங்களுக்கு தேவையான பொருட்களை தேர்வு செய்யும்  உரிமை .

• ஆபத்து நிறைந்த பொருட்களில் இருந்து பாதுகாக்கப்படுவதற்கான உரிமை.

• பொருட்களின் தரத்தையும் செயல்பாடு பற்றியும் தெரிந்து கொள்வதற்கான உரிமை.

• நுகர்வோர் தங்களின் நலன் தொடர்பாக முடிவு எடுக்கும் போது கேட்கப்படும் உரிமை.

• நுகர்வோர் தங்களுக்கான உரிமைகள் மீறப்படும் சமயத்தில் அதற்கு தீர்வு பெறும் உரிமை.

• நுகர்வோர் கல்வியை கற்றுக் கொள்வதற்கான உரிமை.

 *நுகர்வோர் குறைதீர் ஆணையம்* 

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வந்த பிறகு தேசிய மாநில மற்றும் மாவட்ட அளவிலான நுகர்வோர் குறைதீர் ஆணையம் நிறுவப்பட்டது. 

இந்த ஆணையத்தில் இதுவரை 54,85,267 புகார்கள் இந்தியா முழுவதிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இங்கு பதிவு செய்யப்பட்ட புகார்களில் 90 சதவீதம் புகார்களுக்கு தீர்வுகளும் காணப்பட்டுள்ளது.

 *எப்போது புகார் அளிக்கலாம்?* 

• குறிப்பிடப்பட்ட எடையை விட குறைவான அளவு விற்பனை செய்தல்

• கலப்படம் நிறைந்த பொருள் விற்பனை செய்யப்படுதல்

• தேவையற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க செய்தல்

• குழந்தைகளை இலக்காக வைத்து தவறாக வழி நடத்தும் விளம்பரங்கள் செய்தல்

• பொருட்கள் காலவதியான பிறகும் விற்பனை செய்தல்

 *புகார் அளிக்கும் முறை* 

நுகர்வோர் தாங்கள் வாங்கி பயன்படுத்தும் பொருட்களில் தரம் மற்றும் சேவை குறைபாடு இருப்பதை உணர்ந்தால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி புகார் அளிக்க முடியும்.

புகார் அளிக்கும்போது மனுவில் புகார்தாரரின் பெயர், முகவரி, எதிர் மனுதாரரின் பெயர், அவரது முகவரி, தாங்கள் வாங்கிய பொருள் அல்லது சேவை, புகாருக்கான காரணம், பொருள் வாங்கிய ரசீது, நுகர்வோருக்கு ஏற்பட்ட இழப்பீட்டின் விவரம் போன்றவற்றை தெளிவாக குறிப்பிட்டு இருக்க  வேண்டும்.

 *புகார் கட்டண விபரம்* 

புகார் செய்யவும் வழக்கு தொடரவும் தகுதி இல்லாத காரணங்களை கொண்டு நுகர்வோர் குறைதீர் மன்றத்தை சிலர் அணுகியதாலும் இந்த சட்டத்தை வைத்து எதிர்மனுதாரரை மிரட்டியதாலும் இதனால் எதிர் தரப்பினருக்கு தேவையற்ற கால விரயம் மற்றும் செலவு ஏற்பட்டதாலும் 2006 ஆம் ஆண்டு முதல் புகார் அளிக்க கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த புகாருக்கான கட்டணம் நுகர்வோர் வாங்கிய பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது. அவை,

• 1 லட்சத்திற்கு மேல் 5 லட்சம் வரை 200 ரூபாய்

• 5 லட்சத்திற்கு மேல் 10 லட்சம் வரை 400 ரூபாய்

• 10 லட்சத்திற்கு மேல் 20 லட்சம் வரை 500 ரூபாய்

 *நுகர்வோர் நீதிமன்றம்* 

ஒவ்வொரு மாவட்டத்திலும் நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் அமைய பெற்றுள்ளன .அதேபோன்று சென்னை மயிலாப்பூரில் மாநில நுகர்வோர் நீதிமன்றம் அமைந்துள்ளது. 

மாவட்ட குறைத்தீர் மன்றத்தில் தங்கள் புகாருக்கு தீர்வு கிடைக்காத பட்சத்தில் நுகர்வோர் மாநில நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம்.

அங்கும் நுகர்வோருக்கு சரியான தீர்வு கிடைக்காவிட்டால் சென்னை உயர்நீதிமன்றத்தையோ அல்லது உச்சநீதிமன்றத்தையோ நுகர்வோர்கள் அணுகி அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நிவாரணத்தை பெற முடியும்.

 *மேலும் சில தகவல்கள்* 

• இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தினாலும் ஜம்மு காஷ்மீரில் இச்சட்டத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

• நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் பொதுத்துறை, தனியார் துறை, கூட்டுறவுத்துறை போன்றவைகளுக்கும் பொருந்தும்.

• ஒரு பொருளை வாங்கிய நுகர்வோர் அதனை லாபம ஈட்டும் நோக்கத்தில் விற்பனை செய்தால் அவர்களுக்கு இச்சட்டம் பொருந்தாது.

• ஒருவருக்கு இலவசமாக பொருட்கள் கொடுக்கப்பட்டு அதில் குறைபாடுகள் இருந்தால் அப்போதும் இந்த சட்டம் பொருந்தாது.

TNPSC_TAMIL_FULL_PART_A_&_B

🔜TNPSC_TAMIL_FULL_PART_A_&_B🔚:





பகுதி_அ_இலக்கணம்_முழுவதும்.pdf - Google Drive


👇👇👇





பகுதி_ஆ_இலக்கியம்_முழுவதும்.pdf - Google Drive

👇👇👇



*PIN குறியீட்டிற்கு விடைபெறுகிறேன்*

*PIN குறியீட்டிற்கு விடைபெறுகிறேன்* அஞ்சல் முகவரிகளின் ஈர்ப்பாக இருந்த PIN குறியீடுகளின் சகாப்தம் முடிந்துவிட்டது, அதற்கு மாற்றா...