Tuesday, 6 February 2018

CCSE-IV EXAM TIPS

தேர்வு மையத்தை அனுகுமுறையை அடுத்து வினாத்தாள் அனுகும் முறையை பார்ப்போம் .....
முதலில் மொழித் தேர்வு வினாவினை விடையளிக்க வேண்டும் ...ஒரு கேள்வி படித்த உடனே விடைத்தாளில் விடையளிக்க முயற்சிக்க வேண்டாம்....நீங்கள் அறியாமல் ஒரு வினாவிற்கு 18  வினாவின் விடையை 19 வது விடைத்தாளிற்கு மாற்றி விடை அளித்து விட்டாலும் உங்கள் அரசு பணி கனவு  வீணாகிவிடும்....ஒரு மதிப்பெண்ணில் அரசு பணி இழந்தவர்கள் ஏராளம்....குரூப் -4 அளவில்  ஒரு மதிப்பெண் என்பது தரவரிசை அளவில் சுமார் உதாரணமாக  ஒருவர்  179 வினா சரியாக விடை அளித்து இருக்கிறார் என்றால் அவரின் தரவரிசை  5500 என எடுத்து கொண்டால் 180 வினா சரியான பதில் அளித்தவரின் தர வரிசை சுமாராக 4400 என இருப்பர் ...குரூப் 4 அளவில் தரவரிசை இப்படிதான் இருக்கும் ....இதே 183  வினாவிற்கு சரியான விடை அளித்தவர் தரவரிசை   தோராயமாக 2400 என வந்து விடுவர் ....நீங்கள்  கூடுதலாக எடுக்கும் 180 வினாவிற்கு மேல்  விடையளிக்கும் ஒவ்வொரு வினாவும் சராசரியாக   500 தேர்வரை முன்னோக்கி செல்வர்...
நீங்கள் அறியாமல் செய்யும் ஒவ்வொரு தவறும்  உங்கள் அரசு பணி மற்றவருக்கு உரிதாகி விடும்....
கலந்தாய்வு வரை சென்று அரசு பணி கிடைக்காமல்  திரும்பி வந்தவர்கள் ஏராளம்....

வினாத்தாள் நன்கு படித்து அதற்குரிய விடையை வினாத்தாளில் குறித்து வைத்து கொள்ளலாம் ...தெரியாத  வினாவிற்கு அந்த வினா எண்ணை வட்டம்  இட்டு விடுங்கள் ....தமிழில்  சரியாக நன்கு  92 வினாவிற்கு பதில்  வினாத்தாளில் புள்ளி வைத்து இருப்பதாக வைத்து கொண்டால் அதற்குரிய விடையை விடைத்தாளில்  சரியாக பூர்த்தி செய்யலாம் ....

மொழித்தாளில்  தெரியாத அந்த   8 வினாவிற்கு
அதுவா இதுவா என இருக்கும் விடையை சரியாக கணித்து 3 விடையளிக்க முடியும்   . ...
மீதி 5  வினாவிற்கு ஏதோ  ஒரு விதத்தில்  2 சரியாக  விடை அளிக்க முடியும்.....ஆனால்  இந்த  97 என்பது  நன்கு படித்து இருக்கும் தேர்வருக்கு குறைவு தான்....... 50 நிமிடத்தில் மொழி வினாவிற்கு விடையளித்து விட வேண்டும் ....

மொழி வினாவை அடுத்து நேரடியாக  அறிவியல் , வரலாறு கேள்விகளுக்கு செல்லாமல்  அரசியலமைப்பு கேள்விகளுக்கு  செல்லலாம்...ஏனெனில் இவை தற்போதைய நடைமுறையில் சரியா தவறா கூற்று பொருத்துக முறையில் இடம் பெறும் ...இது மறைமுகமாக தேர்வரை காலம் விரயம் செய்யும் .....

அரசியலமைப்புக்கு அடுத்து நடப்பு  நிகழ்வு வினாக்களுக்கு செல்வது சிறந்தது .....அதனையடுத்து  நேரடியாக  கணித பகுதிக்கு சென்று விடலாம்  ...
கணித பகுதியில்  ஓரளவு சுமாராக  படிக்கும் மாணவர் கூட சாதாரணமாக 15 வினாவிற்கு விடையளிக்க முடியும்.....நீங்கள்  கணிதத்தில்  குறைந்தது  23 வினாக்கள் சரியாக பதில் அளித்து இருக்க வேண்டும் ....இல்லையென்றால் உங்கள் அரசு பணி மற்றவருக்கு தான்.........கணிதத்தில் 4 விடைகளில் இருந்து ஒன்றை தேர்ந்தெடுத்து வினாவில் ஒப்பிட்டு விடையளிப்பது அளவியல், இயற்கணிதம், வயது, வட்டி, மனகணக்கு ஆகியவற்றிற்கு  சிறந்தது......ஒரு வினாவிற்கு விடை வரவில்லை என்றால் உடனே அடுத்த வினாவிற்கு சென்று விடுங்கள் ....

மேற்கண்ட  நான்கில் வினாவின் எண்ணிக்கை  தோராயமாக
தமிழ் -100
கணிதம் -25
அரசியலமைப்பு -12
நடப்பு வினா -18
எனில்  மொத்தம் - 145 க்கு  குறைந்தபட்சம்  138 இருக்க  வேண்டும் .....
விரைவில் அடுத்த பதிவில்  மற்ற வினாக்கள் அனுகுமுறை பற்றி பார்ப்போம் .....

No comments:

Post a Comment

*PIN குறியீட்டிற்கு விடைபெறுகிறேன்*

*PIN குறியீட்டிற்கு விடைபெறுகிறேன்* அஞ்சல் முகவரிகளின் ஈர்ப்பாக இருந்த PIN குறியீடுகளின் சகாப்தம் முடிந்துவிட்டது, அதற்கு மாற்றா...