Saturday, 26 May 2018

*வெல்லிங்டன் பிரபி (1931 - 1936) பற்றிய சில தகவல்கள்:-*

🌺 இரண்டாம் வட்டமேசை மாநாடு லண்டனில் நடைபெற்றது - 1931
🌺 மூன்றாம் வட்டமேசை மாநாடு லண்டனில் நடைபெற்றது - 1932
🌺 மூன்று வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டவர் - பி.ஆர். அம்பேத்கர்
🌺 வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் 16, ஆகஸ்ட் 1932 அறிவிக்கப்பட்டது.
🌺 வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் அறிவித்தவர் - ராம்சே மக்டொனால்ட்
🌺 இதனை எதிர்த்து காந்தி எரவாடா சிறையில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார்.
🌺 இதனை தொடர்ந்து பூனா ஒப்பந்தம் 1932 ல் நிறைவேற்றப்பட்டது.
🌺 இந்திய அரசு சட்டம் - 1935
🌺 இந்திய அரசு சட்டத்தின் படி மாகாணத்தில் இரட்டை ஆட்சி ஒழிக்கப்பட்டு சுயாட்சி வழங்கப்பட்டது.

*இர்வின் பிரபு (1926 - 1931) பற்றிய சில தகவல்கள்:-*


🍃 1927 - சைமன் குழு நியமிக்கப்பட்டது
🍃 1928 - சைமன் குழு இந்திய வருகை
🍃 சைமன் குழுவின் தலைவர் சர் ஜார்ஜ் சைமன்
🍃 1929 லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் பூரண சுதந்திரமே குறிக்கோள் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
🍃 1930 காந்தியால் சட்ட மறுப்பு இயக்கம் ( உப்பு சத்தியாகிரகம் இயக்கம்) நடைபெற்றது.
🍃 1930 முதல் வட்டமேசை மாநாடு நடைபெற்றது.
🍃 காந்தி இர்வின் ஒப்பந்தம் - 5 மார்ச் 1931
🍃 சிறையில் 64 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து ஜடின் தாஸ் உயிர் நீத்தார் - 1929
🍃 தண்டி யாத்திரை காந்தி தலைமையில் 12 மார்ச் 1930-ல் நடைபெற்றது

*ரீடிங் பிரபு (1921 - 1926) பற்றிய சில தகவல்கள் :-*

🍁 ரௌலட் சட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.
🍁 ஒத்துழையாமை இயக்கம் ஒடுக்கப்பட்டது.
🍁 வேவல் இளவரசர் நவம்பர் 1921 இந்தியா வந்தார்.
🍁 1922 வேவல் இளவரசர் தமிழகம் வந்தார்.
🍁 1921 மாப்ள கலகம் கேரளாவில் நடைபெற்றது.
🍁 கக்கோரி ரயில் கொள்ளை 9 ஆகஸ்ட் 1925 ல் நடைபெற்றது.

*செம்ஸ்போர்டு பிரபு (1916 - 1921) பிரபு பற்றிய சில தகவல்கள்:-*

🍂 ஆகஸ்ட் பிரகடனம் 1917, இதன்படி இந்தியர்களுக்கு படிப்படியாக பொறுப்பாட்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
🍂 இந்திய அரசாங்கம் சட்டம் - 1919, (மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தம்) நிறைவேற்றப்பட்டது.
🍂 இந்திய பிரதிநிதி செம்ஸ்போர்டு
🍂 இங்கிலாந்தில் இந்திய அரசுக்கான பிரதிநிதி மாண்டேகு
🍂 இச் சட்டத்தின் மூலம் கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள் மற்றும் ஆங்கிலேய இந்தியர்கள் தனி இடம் ஒதுக்கப்பட்டது.
🍂 ரௌலட் சட்டம் - 1919
🍂 ஜாலியன் வாலாபாக் படுகொலை 13 ஏப்ரல் 1919 நடைபெற்றது.
🍂 1919 ல் காந்தியால் ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்றது.
🍂 1919 ஜாலியன் வாலாபாக் படுகொலை விசாரணைக்காக 'ஹன்டர் குழு' அமைக்கப்பட்டது.

*இரண்டாம் ஹார்டிஞ்ச் பிரபு (1910 - 1916) பற்றிய சில தகவல்கள்:-*

🌻வங்க பிரிவினை ரத்து செய்யப்பட்டது - 1911
🌻 கல்கத்தா வில் இருந்து டெல்லி இந்தியாவின் தலைநகரானது - 1911
🌻 காந்தி தென் ஆப்பிரிக்காவில் இருந்து  9 ஜனவரி 1915 இந்தியா திரும்பினார்.
🌻 அன்னிபெசன்ட் தன்னாட்சி இயக்கம் தொடங்க போவதாக அறிவித்தார்.
🌻 23 டிசம்பர் 1912 இவர் மீது வெடிகுண்டு வீசப்பட்டு அதில் இருந்து தப்பிவிட்டார்.
🌻 இவருக்கு டெல்லியில் நுழையும் போது சாந்தினி சவுக் அருகில் குண்டு வீசப்பட்டது.

*மின்டோ பிரபு (1905 - 1910) பற்றிய சில தகவல்கள்:-*

🍄 1905 வங்கப் பிரிவின் காரணமாக சுதேசி இயக்கம் ஏற்பட்டது.
🍄 அரசியலில் அமைதி நிலை நிலவியது.
🍄 1906 முஸ்லிம் லீக்  தோற்றம்.
🍄 1907 சூரத் பிரவு ஏற்படுத்தப்பட்டது.
🍄 புரட்சிகளை ஒடுக்க பல சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டது.
🍄 லாலா லஜபதிராய் மற்றும் அஜித் சிங் (மே 1907) பாலகங்காதர திலகர் (ஜூலை  1908) ஆகியோர் பர்மாவில் உள்ள மாண்டலே சிறைக்கு அனுப்பப்பட்டனர்.
🍄 1909 மின்டோ - மார்லி சீர்திருத்தம்
🍄 இச்சட்டத்தின் முடிவில் முஸ்லீம்களுக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டது.
🍄 மின்டோ - மார்லி சீர்திருத்தில் மின்டோ இந்திய அரசு பிரதிநிதி
🍄 மார்லி என்பவர் இந்திய அரசுக்கான ஆங்கில பிரதிநிதி.

*லிட்டன் பிரபு (1876 - 1880) பற்றிய சில தகவல்கள்:-*

🌼 இவர் தலைகீழ் எண்ணமுடைய வைசிராய் ( Viceroy of Reverse Character) எனப்படுகிறார்.
🌼 இங்கிலாந்து ராணி விக்டோரியா விற்கு கெய்சர்-இ-ஹிந்த் (Kaiser-i-Hind) பட்டம் வழங்க 1877 ல் டெல்லி தர்பாரை நடத்தியவர்.
🌼 1878 படைக்கல சட்டம் என்ற ஆயுதச் சட்டம் (Arms Act) நிறைவேற்றப்பட்டது.
🌼 1878 வட்டார மொழி பத்திரிகை சட்டம் (Vernacular Press Act) நிறைவேற்றப்பட்டது.
🌼 1876 - 1878 இந்தியாவில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது.
🌼 1878 - 1880 ல் பஞ்ச நிவாரண குழு சர் ரிச்சர்டு ஸ்ட்ரோச்சி தலைமையில் அமைக்கப்பட்டது.
🌼 இரண்டாம் ஆப்கானியப் போர் (1878 - 1880) இவர் காலத்தில் நடைபெற்றது.
🌼 இரண்டாம் ஆப்கானியப் போர் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை - காண்டமக்
🌼 காபூலுக்கு வந்த தூதர் மற்றும் அதிகாரிகளை ஆப்கானியர்கள் படுகொலை செய்தனர். இதற்கு லிட்டன் பிரபு பொறுப்பு என அவரை 1880 பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
🌼 இந்தியாவின் 'நிரோ மன்னர்' என்று அழைக்கப்பட்டார்.
🌼 நிரோ மன்னர் என அழைக்க காரணம் ரோம் நகரம் எரிந்து கொண்டிருக்கும் போது அந்த நாட்டு மன்னர் பிடில் வாசித்துக் கொண்டிருந்தார் அதே போல் இந்திய பஞ்சத்தில் இருந்த போது டில்லி தர்பார் நடத்தினார்.

*PIN குறியீட்டிற்கு விடைபெறுகிறேன்*

*PIN குறியீட்டிற்கு விடைபெறுகிறேன்* அஞ்சல் முகவரிகளின் ஈர்ப்பாக இருந்த PIN குறியீடுகளின் சகாப்தம் முடிந்துவிட்டது, அதற்கு மாற்றா...