Friday, 8 November 2024

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்





இடைநிலை ஆசிரியர்கள்

1. 065- Tamil Nadu School Education Department Administrative Test – Paper - I -
 Higher Secondary / Secondary / Teacher Training and Special School

2. 072-Tamil Nadu School Education Department Administrative Test – Paper - II -  Elementary / Middle and Special Schools

3.  124 - Account Test for Subordinate Officers - Part I .

(or)

4.152-The Account Test for Executive Officers

5.172 - The Tamil Nadu Government Office Manual Test

*பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்*

1 . 124 - Account Test for Subordinate Officers - Part I .(or)
152.The Account Test for Executive Officers

2 . 172 - The Tamil Nadu Government Office Manual

துறை தேர்வில் *மற்ற அலுவலர்கள்* தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

1 . 124 - Account Test for Subordinate Officers - Part I .

2 . 172 - The Tamil Nadu Government Office Manual

Sunday, 23 June 2024

*தமிழ்நாடு அரசு மின்சார துறை (EB) / TNEB Customer Care Number*. *94987 94987*அறிவிப்பு :-

*தமிழ்நாடு அரசு மின்சார துறை (EB) /  TNEB Customer Care Number*. *94987 94987*
அறிவிப்பு :-

உங்களது வீடுகளிலோ.. கடைகளிலோ.. இருக்கும் மின் இணைப்பு சில சமயங்களில் கம்பத்தில் பீஸ் போய் விடும். அல்லது மின் இணைப்பு விட்டு விட்டு கிடைக்கும். அல்லது மழை மற்றும் காற்றினால் இணைப்பு துண்டிக்கப்படும். அல்லது உங்கள் ஏரியாவே இருண்டு விடும். இது போன்ற தருணங்களில் நீங்கள் என்ன செய்வீர்கள்....?

பெரும்பாலும் நமக்கு தெரிந்தது EB அலுவலகம் சென்று எழுதி வைத்து விட்டு வரவேண்டும்.. அவர்கள் சாவகாசமாக வந்து சரி செய்துவிட்டு செல்வார்கள்...
அல்லது லைன்மேன் தெரிந்தவராக இருந்தால் அவரிடம் அழைத்து சொல்லுவீர்கள். உடனே வேலையாகும்... அதுவும் கிராமங்களில் உள்ள வீடுகள் எவ்வளவு அவசரம் என்றாலும், பொழுது இறங்கிய பிறகே வந்து வேலையை செய்து கொடுத்து விட்டு செல்வார்கள்...

இப்பொழுது மின்சார வாரிய ஊழியர்களிடம் இப்படி எல்லாம் அலைய வேண்டியதில்லை. வேலையும் உடனே ஆகணும். அதுக்கு ஒரு நல்ல ஐடியா இருக்கு தெரிந்து கொள்ளுங்கள்...
 
தமிழ்நாட்டில் எந்த மூலையில் இருந்தாலும் *9498794987* என்ற இந்த எண்ணுக்கு அழைத்து உங்கள் முழு மின் இணைப்பு எண்ணையும் தெரிவித்து உங்களுக்கு என்ன புகாரோ அதை தெரிவித்தால் போதும்...

தெரிவித்து ஐந்து நிமிடத்தில் மாவட்ட தலைநகரிலிருந்து அழைத்து உங்கள் தேவை என்னவென்று கேட்கிறார்கள். அவர்கள் அழைத்த பத்து நிமிடத்தில் உள்ளூரில் உள்ள மின்சார வாரிய தலைமை ஊழியர் நம்மிடம் அழைத்துப் பேசுகிறார். இவர் அழைத்துப் பேசிய ஐந்து நிமிடத்தில் லைன்மேன் உங்களிடம் அழைத்துப் பேசுகிறார்...

அரை மணி நேரத்தில் அனைத்து வேலையும் முடிந்து விடும். அனைத்து வேலையும் முடிந்த பிறகு மீண்டும் மாநிலத் தலைநகர் சென்னையிலிருந்து சேவை மைய ஊழியர் அழைத்து மின்சார வாரிய ஊழியர் நம்மிடம் செய்த வேலைகள் குறித்து தகவல் கேட்ட பிறகே புகாரை முடித்து வைக்கிறார்கள்... 

இந்த மின்சார வாரிய சேவை மைய தொடர்பு எண், மின் இணைப்பை சரி செய்வதற்கு மட்டுமல்ல, வீடுகளின் மேல் செல்லும் லைனை மாற்றி போடுதல் மற்றும் கம்பத்தை மாற்றி போடுதல், பழுதடைந்த கம்பம், புதிய இணைப்பு, தற்காலிக இணைப்பு உட்பட அனைத்து மின்சார வாரிய சேவைகளை பெறலாம்... இந்த சேவை மையத்தின் மூலமாக சேவைகளை பெற்றாலே யாரும் பணம் கேட்பதும் இல்லை...

இது போன்று எளிதாக காரியத்தை சாதிக்க உங்கள் நெருங்கிய வட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் கூட இது போன்ற தகவலை உங்களுக்கு தெரிவிப்பதில்லை...

மின்சார வாரியம் தொடர்பான அனைத்து சேவைகளுக்கான தொலைபேசி எண் : *TN EB CUSTOMER CARE : 9498794987*

Tuesday, 7 May 2024

*முள்ளும் மலரும்...*(அப்பவே அப்படி ஒரு கதை)

*முள்ளும் மலரும்...*
(அப்பவே அப்படி ஒரு கதை) 





நாவலைப் படமாக்குகிற ரசாயன வித்தை, முள்ளின்மேல் நடப்பது போன்றது. அதைப் பூவில் நடப்பதுபோல், மாற்றி, ‘ப்பூ...’ என ஊதித் தள்ளியவர் இயக்குநர் மகேந்திரன். 1978-ஆம் வருடம் வெளிவந்தது இவரின் முதல் படமான முள்ளும் மலரும்.

‘நீ நடிச்சதுலயே உனக்கு ரொம்ப ரொம்பப் பிடிச்ச படம் எது?’ என்று குருநாதர் கே.பாலசந்தர் கேட்க, ஒருநிமிடம் கூட யோசிக்காமல், தயங்காமல், சபை நாகரீகமென்பதையெல்லாம் பார்க்காமல், தனக்கே உரிய வேகத்துடன் ஸ்டைலாகச் சொன்னார் ரஜினி... ‘முள்ளும் மலரும்’ என்று.!

முள்ளும் மலரும். அதாவது முள், மலர் என இரண்டு குணங்கள் கொண்டது என்றும் சொல்லலாம். முள்ளும் (முள்கூட) மலரும்.... அதாவது முள்ளானது ஒருகட்டதில் மலர்ந்து விடுகிறது என்றும் அர்த்தம் கொள்ளலாம்.

உமாசந்திரன் எவ்வளவு கதைகள் எழுதியிருக்கிறார் என்று நிறைய பேருக்குத் தெரியாது. ஆனால், முள்ளும் மலரும் கதையை நாவலாக எழுதி, அது சினிமாவாகவும் எடுக்கப்பட்டதில், அவரின் பெயரும் எழுத்து உள்ளவரையும் இருக்கும்; சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கும் என்பது உறுதி.

அவள் அப்படித்தான், ஆயிரம் ஜென்மங்கள், இளமை ஊஞ்சலாடுகிறது, இறைவன் கொடுத்த வரம், என் கேள்விக்கு என்ன பதில், சங்கர் சலீம் சைமன், சதுரங்கம், தப்புத்தாளங்கள், தாய்மீது சத்தியம், ப்ரியா, பைரவி, மாங்குடி மைனர், வணக்கத்துக்குரிய காதலியே, ஜஸ்டிஸ் கோபிநாத்... போதாக்குறைக்கு இன்ஸ்பெக்டர் ரஜினி, ரவுடி ரஜினி என்று மொழிமாற்றுப் படங்கள் என வரிசையாய் அந்த வருடம் ரஜினிக்கு ஏகப்பட்ட படங்கள் வந்தாலும், மகேந்திரனின் முள்ளும் மலரும்... ரஜினியின் கிரீடத்தில், அழகிய இறகென சிறகாய் உட்கார்ந்து கொண்டது.

மகேந்திரன் யதார்த்த மனிதர்களின் நாயகன். அதனால்தான் அத்தனை யதார்த்தமான காளி கதாபாத்திரத்தின் இயல்பு கெடாமல் ரஜினியைத் தேர்வு செய்து, மிகச்சிறப்பாக நடிக்கவும் வைத்திருப்பார்.

மைசூர் பக்கம் உள்ள அந்த லொகேஷனையும் நம்மூர் கோபம்,  ஈகோ, பாச அன்புகளையும் மிக்ஸியில் போட்ட திரைக்கதையாய்த் தந்திருப்பதில் இருக்கிறது, மகேந்திரனுக்கும் அந்த நாவலுக்குமான பிணைப்பு. காளி நல்லவன்தான். ஆனால் அவனின் செயல்களைத் தள்ளிநின்றுப் பார்ப்பவர்களுக்கு, கெட்டவனாகத்தான் தெரிவான். சாதாரணமாய்ச் செய்யும் நல்ல கெட்ட விஷயங்கள் எல்லாமே அதிகாரி சரத்பாபுவுக்கு, அவ்வளவு நல்லதாகப்படவில்லை. முட்டிக்கொண்டே இருக்கிறார்கள் இருவரும்.

அங்கே, காளியும் அவனின் தங்கை வள்ளி ஷோபாவும் அப்படியொரு ஒட்டுதலுடன் இருக்கிறார்கள். ஷோபாவின் பார்வையும், அந்த வெள்ளந்திக் குரலும், சிலசமயங்களில் பேசுகிற பெரியமனுஷித் தனமும் தடக்கென்று மன சோபாவில் கம்பீரமாக ஷோபாவை உட்கார வைத்து விடுகின்றன.

படாபட் ஜெயலட்சுமி நடித்த படங்களை எப்போது பார்த்தாலும், ‘பாவி மக, இப்படி அநியாயமா சாவைத் தேர்ந்தெடுத்துப் போய்ச் சேர்ந்துட்டாளே’ என்று துக்கம் தொண்டையை அடைக்கும். அப்படியொரு நிறைவான நடிகை அவர். இங்கே, காளி, வள்ளி கதாபாத்திர ராஜாங்கத்திற்கு மத்தியிலும் தன் முத்திரையை ஆங்காங்கே, பூ தூவுவது மாதிரி தூவிச் சென்றிருப்பார். ’நித்தம் நித்தம் நெல்லுச் சோறு’ பாட்டுக்கு அவரின் ரியாக்‌ஷன் ஒவ்வொன்றும் கல்யாண சமையல் சாதம்.

மளிகைக் கடை வெண்ணிற ஆடை மூர்த்தியின் கள்ள உறவு, சாமிக்கண்ணுவின் அப்பாவித்தனம், சரத்பாபுவின் நேர்மை, அந்த மலையும் மேடுபள்ளங்களும் செடிகொடிகளும் என மிகக்குறைந்த கதாபாத்திரங்கள்தான். இவை அத்தனைக்கும் கனம் சேர்ப்பதாகவும் இலகுவாக்குவதாகவும் மென்மை கூட்டுவதாகவும் மனங்களை நம் கண்ணுக்கெதிரே காது வழியே காட்டுவதற்காகவும் என மிகப்பெரிய பங்கைச் செலுத்தியிருக்கிறார் இளையராஜா. பாலுமகேந்திராவின் கண்களும் கேமிராவும் உள்ளதை உள்ளபடியே காட்டி, இன்னும் அழகூட்டியிருக்கும்.

’கெட்டபய சார் காளி... ரெண்டு காலு ரெண்டு கையி இல்லாட்டியும்கூட பொழச்சுக்குவான்’ என்பது படம் ரீலிசான சமயத்தில் பஞ்ச் வசனமாகப் பார்க்கப்படவில்லை. ஆனால் படம் வெளியாகி, 45 வருடங்களான நிலையில், இன்றைக்கு இந்த வசனத்தைச் சொல்லாதவர்களே இல்லை.

ரஜினி - ஷோபாவின் உருக்கமான, மனதுக்கு நெருக்கமான தருணங்களிலெல்லாம், பின்னணியில் ஓர் இசையை, கழைக்கூத்தாடிகளின் இசையை, நிரவி, ஓடவிட்டு, நம்மை என்னவோ செய்துவிடுவார் இளையராஜா. ‘அடிப்பெண்ணே...’ பாட்டில் நம்மையும் துள்ளவைப்பார். ஓடவைப்பார். ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ பாட்டில், அந்தக் கூட்டத்தில் நம்மையும் நிற்க வைத்து, ‘போடா பாத்துக்கலாம்’ என்று உறுதியைத் தந்திருப்பார். ‘செந்தாழம்பூவில்...’ பாட்டில், சரத்பாபு, ஷோபா மற்றும் தோழிகளுடன் அந்த ஜீப்பில், நாமும் தொற்றிக் கொண்டு பயணிக்கச் செய்திருப்பார் (இன்றும் நிறைய செல்போன்களின் காலர் டியூன் இதுதான்). செம பசியுடன் வயிறாரச் சாப்பிட்டுவிட்டு, கையலம்பி, வெற்றிலைப் பாக்குப் போட்டுக்கொண்டு, ஏப்பம் விட்டபடி தொப்பையைத் தடவுபவர்களுக்குக்கூட, ‘நித்தம் நித்தம் நெல்லுச் சோறு’ பாடல் மூலமாக, மீண்டும் பசியை ஏற்படுத்திவிடுவார். அதுதான் இளையராஜா.

ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். மகேந்திரனுக்கு முதல் சோறு பதம் இது. அடுத்த சோறு பதம்... உதிரிப்பூக்கள்.

ஒரே ஊர், ஒரே தெரு, ஒரே டீக்கடை, நான்கைந்து பேர், பாலுமகேந்திரா, இளையராஜா, ரஜினி, ஷோபா... மகேந்திரன் எனும் படைப்பாளிக்கு இவையே போதுமானது! என்னை மீறி என் தங்கச்சி, என்னை விட்டுட்டு வரமாட்டா. வரலை. இதுபோதும் எனக்கு. ’இப்பக் கூட உங்களை எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கலை. நானே சொல்றேன். என் தங்கச்சியை கட்டிக்கிட்டு, சந்தோஷமாப் போங்க. உங்களை இப்பக்கூட பிடிக்கலை எனக்கு’ என கையை இழந்து, தன்மானத்தையும் பாசத்தையும் இழக்காத காளி நெகிழ்ந்தும் மகிழ்ந்தும் சொல்ல... தியேட்டரே கைத்தட்டும். மனசே அன்பில் அடைத்துக்கொள்ளும். அந்த அன்பின் இழைதான்... முள்ளும் மலரும் இன்னும் நமக்குள் படர்ந்திருக்கிற கொடி!

நாவலை அதன் தரம் குறையாமல் திரைப்படமாக்குவதில் மகேந்திரன் கை தேர்ந்தவர். ஆம். உமாசந்திரனின் 'முள்ளும் மலரும்' நாவல்தான்..  மகேந்திரனின் 'முள்ளும் மலரும்' சினிமா. அதேபோல, புதுமைப்பித்தனின் 'சிற்றன்னை' நாவல்தான்... மகேந்திரனின் 'உதிரிப்பூக்கள்' சினிமா.

Friday, 19 April 2024

*#LokSabhaElections2024*. *1951 முதல் 2019 வரை தமிழ்நாட்டில் நடைபெற்ற 17 மக்களவைத் தேர்தல்களில் பதிவான வாக்குப் பதிவு சதவீதம்.*

🟦🟪🟩
*━━━━ 𝟏𝟗 • 𝟎𝟒 • 𝟐𝟎𝟐𝟒 ━━━━*
*#LokSabhaElections2024*




*🟦🟪🟩17 தேர்தல்களில் தமிழ்நாட்டில் பதிவான வாக்கு சதவீதம்*


*✍️. 1951 முதல் 2019 வரை தமிழ்நாட்டில் நடைபெற்ற 17 மக்களவைத் தேர்தல்களில் பதிவான வாக்குப் பதிவு சதவீதம்.*

*📍. 1951-52 - 59.33%*

*📍. 1957 - 47.75%*

*📍1962 - 68.77%*

*📍. 1967 - 76.56%*

*📍. 1971 - 71.82%*

*📍. 1977 - 67.13%*

*📍. 1980 - 66.76%*

*📍. 1984 - 72.98%* 

*📍. 1989 - 66.86%*

*📍. 1991 - 63.92%* 

*📍. 1996 - 66.93%*

*📍. 1998 - 57.95%*

*📍. 1999 - 57.98%*

*📍. 2004 - 60.81%* 

*📍. 2009 - 72.94%*

*📍. 2014 - 73.74%* 

*📍. 2019 - 71.87%*

*#LokSabhaElections2024*
🟦🟪🟩

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...