2. ‘மேகதூத்’ விருது(‘Meghdoot’ award) பற்றி எழுதுக.
அஞ்சல்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு தேசிய அளவில் வழங்கப்படும் ‘மேகதூத் விருது’ தமிழகத்தைச் சேர்ந்த 2 பேருக்கு கிடைத்துள்ளது.
அஞ்சல்துறை சார்பில், சிறப் பாக பணியாற்றும் ஊழியர்களை கவுரவிக்கும் விதமாக, தேசிய அளவில் ‘மேகதூத்’ என்ற விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுக்கு நாடு முழுவதிலும் உள்ள 23 அஞ்சல் வட்டங்களில் இருந்து ஊழியர் களின் பெயர்கள் பரிந்துரைக்கப் பட்டன. இதில் இருந்து 8 பேர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இதில், சென்னை, அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு வட்ட தலைமை அஞ்சல்துறை அலுவ லக, வர்த்தக மேம்பாட்டுப் பிரி வில் அஞ்சல் உதவி கண்காணிப் பாளராகப் பணிபுரிந்து வரும் வித்யா எஸ்.ஐயர், அசோக்நகர் அஞ்சல் நிலையத்தில், அஞ்சல் ஊழியராகப் பணியாற்றி வரும் கே.கணபதி ஆகிய இருவரும் தமிழகத்தில் இருந்து இந்த விருதுக் குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லியில் நடைபெற்ற விழாவில், மத்திய தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் மனோஜ் சின்கா இந்த விருதினை அவர்களுக்கு வழங்கினார். ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசும், பாராட்டுப் பத்திரமும் கொண்டது இந்த விருது. 1994-ம் ஆண்டு அஞ்சல்துறையில் பணியில் சேர்ந்த வித்யா எஸ்.ஐயர், அஞ்சல்துறை சார்பில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் மற்றும் ஆதார் எண் பெறுதல் மற்றும் திருத்தம் செய்வதற்கான மையங்கள் அமைப்பதற்கு முக்கியப் பங்காற்றி யுள்ளார்.
அஞ்சல்துறையில் 1984-ம் ஆண்டு பணியில் சேர்ந்த கணபதி, தான் பணிபுரியும் பகுதியில் தபால்களை விநியோகிப்பது குறித்து முன்கூட்டிய அவர்களுக்கு தகவல் அளித்து விநியோகப்பதன் மூலம் பொதுமக்களிடையே நம்பிக் கையைப் பெற்றார். அத்துடன், சிறப்பு முகாம்களை நடத்தி பாமர மக்களையும் அஞ்சல்துறை சேமிப்புத் திட்டங்களில் சேர வைத் தது உள்ளிட்ட பல்வேறு மகத்தான பணிகளைச் செய்துள்ளார்.
சென்னை நகர மண்டல அஞ்சல்துறைத் தலைவர் ஆர்.ஆனந்த் வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
*பதில் அளிக்கும் முறை*
ANSWER MODEL
INTRODUCTION
வேலைவாய்ப்பு என்றால் என்ன என்பதை எழுத வேண்டும். வேலைவாய்ப்பின்மையின் வகைகளையும் எழுதலாம். (மூன்று முதல் நான்கு வரிக்குள்)
BODY
1.திட்டத்தின் முக்கிய கூறுகளை பற்றி எழுதுக.
2.திட்டத்தால் வேலைவாய்ப்பில்,மக்கள் முன்னேற்றத்தில் ஏற்படும் மாற்றம் .
3.IMPACT ON OVERALL ECONOMY பற்றி எழுதவேண்டும்.
4.வறுமைக்கும் வேலைவாய்ப்பின்மைக்கும் உள்ள தொடர்பை எழுதலாம்.
CONCLUSION
–திட்டத்தின் பலனை பற்றி POSITIVE ஆக குறிப்பிடலாம்