Saturday, 24 February 2024
History of Events/ Important Years/ வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள் மற்றும் அவை நிகழ்ந்த ஆண்டுகள்
Saturday, 23 July 2022
வம்சங்கள் மற்றும் அவற்றின் நிறுவனர்கள்
Monday, 31 December 2018
*பறையர் புரட்சி 1785*
கண்டிப்பாக இந்த தகவல்களை சாதி பதிவாக நினைத்து பகிராமல் விட்டு விடாதீக .. தமிழர்கள் அறியவேண்டிய வரலாறு
************
பறையர் புரட்சி 1785
இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆட்சிக்கு எதிரான முதல் சுதந்திர போராட்டம் என்ற உடன்
அனைவரும்
1857 ஆம் ஆண்டில் நடந்த சிப்பாய் கலகத்தையும்
அதில் பிஹாரி பிராமணன் "மங்கள் பாண்டே"வையும் தான் குறிப்பிடுவர்
நம் பாட புத்தகத்திலும் அப்படி தான் கற்பிக்கப்படுகிறது
ஆனால் அதற்கெல்லாம் பல ஆண்டுகள் முன்னரே தமிழ் நாட்டில் பறையர்கள் வீரியமாக
ஆங்கிலேயர்களின் ஆட்சியை எதிர்த்து ஆங்கிலேயருக்கு வரி செலுத்த மாட்டோம் என
1785 இல் தொடங்கி பல ஊர்களில் தொடர் போராட்டங்களை செய்துள்ளனர்
இந்த போராட்டங்களை
"பறையர் புரட்சி 1785"
என்றே ஆங்கிலேயர்கள்
தங்கள் ஆவணங்களில் பதிவு செய்துள்ளனர்
ஆங்கிலேய ஆட்சியாளர்கள் மதராஸ் மாகாண "விவசாய பறையர்களிடம்"
அதிகப்படியான வரியை வசூலித்தனர்
இதற்க்கு கட்டுப்படாத பறையர்கள்
1785 இல் "ரிச்சர்ட் டைட்டன்" என்ற அதிகாரி பூந்தமல்லிப் பகுதிக்குப் போனபோது
அங்கே பெருந்திரளாகப் கூடி நின்று அவரை சிறை பிடித்தனர். அந்த பெரும் கிளர்ச்சியில் தனது உயிருக்கு ஆபத்து வந்துவிட்டதெனவும், சேத்துப்பட்டிலிருந்த தமது அலுவலகம் தாக்கப்படும் எனவும் டைட்டன் அஞ்சினார்.
அதனால் ‘கம்பெனி’ சிப்பாய்களை அனுப்பும்படி கவர்னரிடம் வேண்டுகோள் விடுத்தார் இது ஆவணமாக உள்ளது
அதன் பின் பெரும்பறைச்சேரியில் (அன்றைய மதராஸ்) கருங்குழி என்ற ஊரைச் சேர்ந்த "பெரியதம்பி" என்ற பறையர் தலைவர்..
பறையர் சமூகத்தவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி, அவர்கள் எல்லோரையும் சென்னையை நோக்கிப் புறப்பட்டு வரச்சொல்லியதும் பெருந்திரளாக அந்தச் சமூகத்தினர் மதராஸில் கூடியுள்ளனர்.
அந்த கடிதம் "பறையர் கடிதம்" என்றே ஆங்கிலேய ஆவணங்களில் பதிய பட்டுள்ளது. அவரின் அறிக்கையை கேட்டு கிளர்ச்சியில் ஈடு பட்ட பறையர்களை கட்டுப்படுத்த முடியாமல் ஆங்கிலேயர் திணறி உள்ளனர்
அதன் பின் 1796இல் ஆங்கிலேய கலெக்டர் "Lionel Place" என்பவர் விதித்த வரி முறைகளுக்கு கட்டுப்படாமல் பறையர்கள் தொடர் போராட்டங்கள் செய்த்தனர்
இந்த தொடர் போராட்டங்கள் பல இடங்களுக்கு பரவியது பல ஊர் பறையர்கள் வரி கட்ட மாட்டோம் என்று கிளர்ச்சியில் ஈடுபட்டனர்
பல வருடம் தொடர்ந்த இந்த போராட்டத்தை
"பறையர் புரட்சி 1795" என்று ஆங்கிலேய ஆவணங்கள் குறிப்பிடுகின்றன
இதில் முக்கிய பங்காற்றியவர்கள்
பூந்தமல்லிப் பகுதியில் பறையர் சமூகத்தவர் மத்தியில் தலைவர்களாக மதிக்கப்பட்ட
பேட்டையா,
பூந்தமல்லி குட்டி,
மாங்காடு கொம்பன்,
பம்மல் கண்ணையன்
ஆகியோர் ஒருங்கிணைத்து வழிநடத்தியதாக பிரிட்டிஷ் ஆவணங்கள் கூறுகின்றன.
பல வருடம் தொடர்ந்த இந்த போராட்டங்கள் பின்னாளில் ஆங்கிலேயர்களால் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது
வரலாற்றில் ஆங்கிலேயருக்கு எதிரான இப்படி ஒரு புரட்சி இருப்பதையே இங்கு உள்ளவர்கள் மறைத்து உள்ளனர்
தமிழர்களின் சுதந்திர போராட்ட வரலாற்றை
லாவகமாக மறைத்து விட்டு
பிஹாரி பிராமணன் மங்கள் பாண்டேவையும்
தெலுகு கெட்டி பொம்முவையும் பிம்ப படுத்தி உள்ளனர்
இனியாவது நம் வரலாற்றை மீட்டு நாம் ஆவண படுத்துவோம்
ஆதாரம் :- Dialogue and History: Constructing South India, 1795-1895
By Eugene F. Irschick
PS:-
தரவுகள் அனைத்தும்
எழுத்தாளர் அண்ணன் விசிக ரவிக்குமார் அவர்களின் தொகுப்பில் எடுக்கப்பட்டது நன்றி Pulivendhan Uzhavu Paraiyan
Sunday, 14 October 2018
*நவினகால இந்திய வரலாறு*
✒நவினகால இந்திய வரலாறு ( PDF )
Download here ( 240 PAGES) 👇
Click here
👇👇👇
How to Download* :
Click Link -> wait 5sec -> Skip Ad
Direct link
👇👇👇
https://drive.google.com/file/d/1phAH2opBGYt1_sYcG_jtsirH6KvcnXtG/view
Tuesday, 2 October 2018
*காந்திஜி*
1. காந்தியின் முழுமையான பெயர் என்ன?
➯ மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி
2. காந்தியடிகளின் தந்தை பெயர் என்ன?
➯ கரம் சந்த் காந்தி
3. காந்தியடிகளின் தாயார் பெயர் என்ன?
➯ புத்திலிபாய்
4. காந்தியடிகள் எப்போது பிறந்தார்?
➯ 02-10-1869
5. காந்தியடிகளின் எத்தனையாவது பிறந்தநாளை 02-10-2018 அன்று நாம் கொண்டாடுகிறோம்?
➯ 150 வது பிறந்தநாள்
6. காந்தியடிகள் எங்கு பிறந்தார்?
➯ குஜராத் மாநிலத்தில் உள்ள போர்பந்தர்
7. காந்தியடிகளுக்கு உண்மையின் மீது பிடிப்பு ஏற்படுத்திய நாடகம் எது?
➯ அரிச்சந்திரன் நாடகம்
8. காந்தியடிகள் எங்கு தனது பள்ளிக்கல்வியை முடித்தார்?
➯ சமல்தாஸ் கல்லூரியில் மெட்ரிகுலேசன் முடித்தார்
9. காந்தியடிகள் எப்பொழுது திருமணம் செய்துகொண்டார்?
➯ மே 1883
10. காந்தியடிகளுக்கு திருமணம் நடந்தபோது அவருக்கு வயது என்ன?
➯ 13க்கும் 14க்கும் இடையில்
11. காந்தியடிகளின் துணைவியார் பெயர் என்ன?
➯ கஸ்தூரிபாய்
12. காந்தியடிகள் லண்டன் செல்லும் முன்பு தனது தாயாருக்கு செய்து கொடுத்த மூன்று சத்தியங்கள் என்னென்ன?
➯ மது, மாது, மாமிசம் தவிர்ப்பேன்
13. காந்தியடிகள் பாரிஸ்டர் பட்டம் பெற லண்டனுக்கு எந்த ஆண்டு சென்றார்?
➯ 1888
14. காந்தியடிகள் தன்னுடைய எத்தனையாவது வயதில் தென்னாப்பிரிக்கா சென்றார்?
➯ 24ம் வயதில்
15. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்?
➯ 21 ஆண்டுகள் (1893-1914)
16. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் எத்தகைய கொடுமைக்கு ஆளானார்?
➯ நிறவெறி கொடுமைக்கு
17. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் எந்த இடத்தில் இரயிலில் பயணம் செய்யும் போது அவமதிக்கப்பட்டு இரயிலில் இருந்து வெளியேற்றப்பட்டார்?
➯ பீட்டா்மெரிட்ஸ்பர்க்
18. காந்தியடிகள் எப்போது தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார்?
➯ 09-01-1915
19. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய நாளை நாம் எவ்வாறு கொண்டாடுகிறோம்?
➯ வெளிநாடு வாழ் இந்தியர் தினம் (09-01-1915)
20. காந்தியடிகளின் இந்திய அரசியல் குரு யார்?
➯ கோபால கிருட்டின கோகலே
21. காந்தியடிகள் இந்திய விடுதலை போராட்டத்தில் எத்தகைய கொள்கையை பின்பற்றினார்?
➯ மிதவாதகொள்கை
22. காந்தியடிகள் எந்த விடுதலைப்போராட்ட கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்?
➯ இந்திய தேசிய காங்கிரஸ்
23. காந்தியடிகள் 1917ல் மேற்கொண்ட முதல் சத்தியாக்கிரக போராட்டத்தின் பெயர் என்ன?
➯ சாம்பரான் சத்தியாகிரகம் (பீகாரில் தொடங்கப்பட்டது)
24. காந்தியடிகளின் 1918ல் குஜராத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் பெயர் என்ன?
➯ கேதா ஆர்ப்பாட்டம்
25. காந்தியடிகள் 1918ல் அகமதாபாத்தில் நடத்திய போராட்டம் எது?
➯ அகமதாபாத் மில் வேலை நிறுத்தப் போராட்டம்
26. காந்தியடிகள்1919ல் நடத்திய அகில இந்திய போராட்டம் எது?
➯ ரௌலட் சட்டத்திற்கு எதிரானது சத்தியாகிரகப் போராட்டம்
27. காந்தியடிகள் 1920ல் நடத்திய போராட்டம் எது?
➯ ஒத்துழையாமை இயக்கம்
28. காந்தியடிகள் 1930ல் நடத்திய போராட்டம் எது?
➯ சட்டமறுப்பு இயக்கம்
29. காந்தியடிகள் 1942ல் நடத்திய போராட்டம் எது?
➯ வெள்ளையனே வெளியேறு இயக்கம்
30. காந்தியடிகளுக்கு 1920ல் தென்னாப்பிரிக்காவில் வழங்கப்பட்ட கெய்சர் ஜ ஹிந்த் என்ற பட்டத்தை எந்த போராட்டத்தின் போது துறந்தார்?
➯ ஒத்துழையாமை இயக்கம்
31. காந்தியடிகள் 12 மார்ச் 1930ல் என்ன போராட்டத்தை மேற்கொண்டார்?
➯ உப்புசத்தியாகிரகம்
32. காந்தியடிகள் மேற்கொண்ட உப்புச்சத்தியாகிரகம் எங்கு தொடங்கப்பட்டது?
➯ அகமதாபாத்தில் தொடங்கி தண்டியில் முடிவடைந்தது
33. காந்தியடிகள் மேற்கொண்ட உப்புச்சத்தியாகிரகம் (தண்டி யாத்திரை) எவ்வளவு நாள் நடந்தது?
➯ 12-03-1930 முதல் 06-04-1930 வரை தூரம் 388 கிலோமீட்டர்
34. காந்தியடிகள் மேற்கொண்ட தண்டியாத்திரையை அவர் எவ்வாறு பயணம் செய்தார்?
➯ 388 கிலோ மீட்டரும் பாதயாத்திரையாக
35. காந்தியடிகள் வெள்ளையனே வெளியேறு (1942) இயக்கத்தின் போது எவ்வாறு முழங்கினார்?
➯ செய் அல்லது செத்துமடி (do or die)
36. காந்தியடிகள் சுதந்திரத்திற்காக மட்டுமல்லாது வேறு எதற்காக போராடினார்?
➯ குழந்தைகள் திருமணம், திண்டாமை ஒழிப்பு, விதவைகளுக்கு எதிரான கொடுமைகள்
37. காந்தியடிகள் தாழ்த்தப்பட்ட மக்களை எவ்வாறு அழைத்தார்?
➯ ஹரிஜன் (கடவுளின் குழந்தைகள்)
38. காந்தியடிகள் நாதுராம் கோட்சே என்று சுட்டுக் கொன்றார்?
➯ 30-01-1948
39. காந்தியடிகள் இறந்ததினத்தை இந்தியாவில் எவ்வாறு கொண்டாடுகிறோம்?
➯ தியாகிகள் தினம்
40. காந்தியடிகள் இறந்த தினத்தை ஐ.நா.சபை எவ்வாறு அறிவித்துள்ளது?
➯ சர்வதேச அகிம்சை தினமாக (International day of Non–violence )
41. காந்தியடிகள் தன்சுயசரிதையை எந்த இதழில் எழுதினார்?
➯ நவஜீவன்
42. காந்தியடிகள் தன் சுயசரிதையை எந்த மொழியில் எழுதினார்?
➯ குஜராத்தி மொழியில்
43. காந்தியடிகள் தன் சுயசரிதையை என்ன பெயரில் எழுதினார்?
➯ சத்தியசோதனை
44. காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றை குஜராத்தியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்தவர் யார்?
➯ மன்மோகன் தேசாய்
45. காந்தியடிகளின் வரலாற்றை குஜராத்தியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கப்பட்ட பின்னர் அந்த நூலுக்கு வைக்கப்பட்ட பெயர் என்ன?
➯ My Experiments with Truth.
46. காந்தியடிகள் இந்தியாவில் நடத்திய ஆங்கில இதழ் எது?
➯ யங் இந்தியா
47. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் நடத்திய ஆங்கில இதழில் பெயர் என்ன?
➯ இந்தியன் ஒப்பீனியன்
48. காந்தியடிகளை முதன்முதலில் “ மகாத்மா ” என்று அழைத்தவர் யார்?
➯ இரவீந்திரநாத் தாகூர்
49. காந்தியடிகளை முதன்முதலில் “தேசப்பிதா ” என்று அழைத்தவர் யார்?
➯ நேதாஜி சுபாசு சந்திரபோஸ்
50. காந்திஜீ யை தமிழில் காந்தியடிகள் என்று எழுதும் வழக்கத்தை முதன்முதலில் ஏற்படுத்தியவர் யார்?
➯ திரு.வி.க
51. காந்தியடிகள் தன் வாழ்நாளில் மொத்தம் எவ்வளவு நாட்கள் சிறையில் கழித்தார்?
➯ 2338 நாட்கள்
52. காந்தியடிகள் அதிக நாட்கள் இருந்த சிறை எது?
➯ எரவாடா சிறை (பூனா)
53. காந்தியடிகள் மரணமடைந்த போது அவருக்கு வயது என்ன?
➯ 78 வயது
54. தில்லி செங்கோட்டை அரியணையோடு மீண்டும் தொடர்பு படுத்தப்படும் பெயர்
➯ காந்தி
55. காந்திஜியின் மனைவி பெயர் என்ன?
➯ கஸ்தூரிபாய்
56. காந்திஜிக்கும் கஸ்தூரிபாவிற்கும் பிறந்த மகன்கள் யார் யார்?
➯ ஹரிலால், மணிலால், ராமதாஸ், தேவதாஸ்
57. எந்த அரியணைக் கனவோடும் வளர்க்கப்படாதவர்கள் யார்?
➯ காந்திஜியின் பிள்ளைகள்
58. தென் ஆப்பிரிக்காவில் காந்தி நடத்திய போராட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கப்பட்ட காந்திஜியின் மகன் யார்?
➯ ஹரிலால்
59. தென் ஆப்பிரிக்காவில் கைகளில் விலங்குபூட்டி தெருக்களில் கைதியாக அடித்து இழுத்துச் செல்லப்பட்டவர் யார்?
➯ ஹரிலால்
60. தன் புதல்வர்களையும், தன் பேரப்பிள்ளைகளையும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுத்தியவர் யார்?
➯ காந்திஜி
61. 388 மைல்கள் நடந்த தண்டி யாத்திரையில் தன் பேரப்பிள்ளையான சிறுவனை (ஹரிலால் மகன்) நடக்க வைத்து அழைத்துச் சென்றவர்?
➯ காந்திஜி
62. தனது உண்ணாவிரதப் போராட்டத்தில் தன் குடும்பத்தை ஈடுபடுத்தியவர் யார்?
➯ காந்திஜி
63. தன் பிள்ளைகள் என்பதற்காக ஒரு சிறு பலன் கூட அவர்களுக்குக் கிடைக்கக் கூடாது என்ற உறுதியாக இருந்தவர் யார்?
➯ காந்திஜி
64. லண்டனில் ஹரிலாலைப் படிக்க வைக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தும் அவரை அனுப்ப மறுத்தவர்
➯ காந்திஜி
65. தான் சிறையில் இருந்தபோது சந்தையில் முள்ளங்கி வியாபாரம் செய்து ஆசிரமவாசிகளுக்கு உணவுதர வேண்டிய பொறுப்பை மகன் மணிலாலிடம் ஒப்படைத்தவர்
➯ காந்திஜி
66. மிகுந்த வறுமையில் வாடிய காந்திஜியின் மகன்
➯ ஹரிலால்
67. மணிலாலை தன்னுடைய மகன் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளாமலே ஒரு வருடத்துக்கு நீ உழைத்துச் சம்பாதிக்க வேண்டும் என்று சென்னைக்கு தன் மகனை அனுப்பியவர்
➯ காந்திஜி
68. சென்னையில் மூட்டைகள் தூக்கியும் நடைபாதையில் படுத்தும் உறங்கிய காந்திஜியின் மகன்
➯ மணிலால்
69. காந்திஜியைவிட அதிக ஆண்டுகள் சிறையில் தள்ளப்பட்டவர்
➯ மணிலால்
70. உப்பு சத்தியாக்கிரகத்தில் தலையில் எலும்புமுறிவு தாக்குதலுக்கு ஆளான காந்தியின் மகன்
➯ மணிலால்
71. மண்டை உடைக்கப்பட்டு மூளையில் காயத்துடன் சுயநினைவின்றி சிறைக் கைதியாக வாழ்நதவர்
➯ மணிலால்
72. 25 முறை மொத்தம் சுமார் 14 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டவர்
➯ மணிலால்
73. தெருப்பிச்சைக்காரனாக இருந்த காந்தியின் மகன்
➯ ஹரிலால்
74. காந்திஜியின் மனைவி கஸ்தூரிபாயின் இறுதி வாழ்க்கை நடந்த இடம்
➯ சிறைச்சாலை
75. காந்திஜியின் மனைவி கஸ்தூரிபாயின் இறுதிச் சடங்குகள் நடந்த இடம்
➯ சிறைச் சாலை வளாகம்
76. 6 முறை - சுமார் 2 ஆண்டுகள் சிறைக் கைதியாக வாழ்ந்தவர்
➯ கஸ்தூரிபாய்
77. தமது 69வது வயதில் இருண்ட அறையில் தனிமைச் சிறையில் இருந்தவர்.
➯ கஸ்தூரிபாய்
78. இந்திய விடுதலைக்குப் பிறகு ஒரு பியுன் வேலையைக் கூட தன் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்வதை விரும்பாதவர்
➯ காந்திஜி
79. வன்முறை தவிர்த்து விடுதலைக்குப் போராடியவர்
➯ காந்திஜி
80. விடுதலைக்கான போராட்டத்தில் நீ சிறையில் மரணம் அடைந்தால் உன்னை தெய்வமாக வழிபடுவேன் என்று கஸ்தூரிபாயிடம் கூறியவர்
➯ காந்திஜி
81. காந்தியடிகளிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது எது?
➯ மது, மாமிசம் தவிர்த்தல் மற்றும் அகிம்சை வழியில் வாழ்தல்
Monday, 30 July 2018
*வரலாறு - விடுதலைக்குப்பின் இந்தியா*
1. இந்திய அரசியலமைப்புக் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்? - டாக்டர்.ராஜேந்திர பிரசாத்
2. இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்? - டாக்டர்.அம்பேத்கர்
3. நாட்டின் அரசியலமைப்புத் தலைவராக செயல்படுபவர் யார்? - ஜனாதிபதி
4. விடுதலையின் போது இந்தியாவில் ....................... பிரிட்டிஷ் மாகாணங்களும், ஏறத்தாழ ....................... சுதேச அரசுகளும் இருந்தன - 11, 566
5. ஆந்திரா எந்த ஆண்டு தனிமாநிலமாக உருவாக்கப்பட்டது - 1953
6. நவீன இந்தியாவின் சிற்பி என்று கருதப்பட்டவர் - ஜவஹர்லால் நேரு
7. நேரு எந்த ஆண்டு மறைந்தார் - 1964
8. நேருவிற்கு பிறகு இந்தியாவின் பிரதமராக பதவியேற்றவர் யார்? - லால் பகதூர் சாஸ்திரி
9. இந்தியா-பாகிஸ்தானியப் போரை தாஷ்கண்ட் ஒப்பந்தப்படி முடிவுக்கு கொண்டுவந்தவர் யார்? - லால் பகதூர் சாஸ்திரி
10. இந்திராகாந்தி எந்த ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றார் - 1966
11. 1989 முதல் 1990 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் பிரதமராக இருந்தவர் - வி.பி.சிங்
12. யாருடைய ஆட்சியின் போது பாகிஸ்தானுடன் கார்கில் போர் மற்றும் பொக்ரானில் அணு ஆயுத சோதனை நிகழ்த்தப்பட்டது - அடல் பிஹhரி வாஜ்பாய்
13. தேசிய திட்டக்குழு ஏற்படுத்தப்பட்டு அதன் தலைவராக பொறுப்பேற்றவர் - ஜவஹர்லால் நேரு
14. பசுமைப்புரட்சி என்ற சொல்லை முதன் முதலாக பயன்படுத்தியவர் - டாக்டர் வில்லியம் காட்
15. இந்தியாவின் முதலாவது தேசிய ஆய்வுக் கூடம் - தேசிய இயற்பியல் ஆய்வுக்கூடம்
Friday, 27 July 2018
*வரலாறு - விடுதலைக்குப்பின் இந்தியா*
இனிய காலை வணக்கம் எஸ் மகாலட்சுமியின் பொது அறிவு சார்ந்த தகவல்களை வரலாறு - விடுதலைக்குப்பின் இந்தியா
1. இந்திய அரசியலமைப்புக் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்? - டாக்டர்.ராஜேந்திர பிரசாத்
2. இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்? - டாக்டர்.அம்பேத்கர்
3. நாட்டின் அரசியலமைப்புத் தலைவராக செயல்படுபவர் யார்? - ஜனாதிபதி
4. விடுதலையின் போது இந்தியாவில் ....................... பிரிட்டிஷ் மாகாணங்களும், ஏறத்தாழ ....................... சுதேச அரசுகளும் இருந்தன - 11, 566
5. ஆந்திரா எந்த ஆண்டு தனிமாநிலமாக உருவாக்கப்பட்டது - 1953
6. நவீன இந்தியாவின் சிற்பி என்று கருதப்பட்டவர் - ஜவஹர்லால் நேரு
7. நேரு எந்த ஆண்டு மறைந்தார் - 1964
8. நேருவிற்கு பிறகு இந்தியாவின் பிரதமராக பதவியேற்றவர் யார்? - லால் பகதூர் சாஸ்திரி
9. இந்தியா-பாகிஸ்தானியப் போரை தாஷ்கண்ட் ஒப்பந்தப்படி முடிவுக்கு கொண்டுவந்தவர் யார்? - லால் பகதூர் சாஸ்திரி
10. இந்திராகாந்தி எந்த ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றார் - 1966
11. 1989 முதல் 1990 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் பிரதமராக இருந்தவர் - வி.பி.சிங்
12. யாருடைய ஆட்சியின் போது பாகிஸ்தானுடன் கார்கில் போர் மற்றும் பொக்ரானில் அணு ஆயுத சோதனை நிகழ்த்தப்பட்டது - அடல் பிஹhரி வாஜ்பாய்
13. தேசிய திட்டக்குழு ஏற்படுத்தப்பட்டு அதன் தலைவராக பொறுப்பேற்றவர் - ஜவஹர்லால் நேரு
14. பசுமைப்புரட்சி என்ற சொல்லை முதன் முதலாக பயன்படுத்தியவர் - டாக்டர் வில்லியம் காட்
15. இந்தியாவின் முதலாவது தேசிய ஆய்வுக் கூடம் - தேசிய இயற்பியல் ஆய்வுக்கூடம்
Sunday, 8 July 2018
*வரலாறு*
இடைக்கால இந்தியாவின் முக்கிய நூல்கள் ஆசிரியர்கள் பற்றிய சில தகவல்கள்:-
📚 பாபர் நாமா - பாபர்
📚 பாதுஷா நாமா - அப்துல் ஹமீதுலாகூரி
📚 இக்கபால் நாமா - முத்தா மெய்த்கான்
📚 ஹிமாயூன் நாமா - குல்பதன் பேகம்
📚 அக்பர் நாமா, அயினி அக்பரி - அபுல்பாஸல்
📚 ஆலம்கீர் நாமா - முர்சா முகம்மது காசிம்
📚 ஷாஜகான் நாமா - இனயத்கான்
📚 துக்ளக் நாமா - அமீர் குஸ்ரு
📚 ஷாநாமா - பிர்தௌசி
📚 தாரிக்-இ-ஹிந்த் - அல்பெருனி
📚 தாஜ்-உல்-மாசிர் - ஹஸன் நிஸாமி
📚 கிதாபுல் ரிஹாலா - இபான் பதூதா
📚 மஜீல் பக்ரின் - தாரா ஷீகோ
📚 தாஜீக்-இ-ஜஹாங்கீர் - ஜகாங்கீர்
📚 முன்தாகப்-உத்-தவாரிக் - பதௌனி
📚 ரக்கத்தி ஆலம்கீர் - ஔரங்கசீப்
பிரபலங்களின் முழுப்பெயர் :-
🌹 உ.வே.சா. - உத்தமதானபுரம் வேங்கட சாமிநாதய்யர்
🌹 வ.வே.சு. ஐயர் - வரகிரி வெங்கடகிரி சுப்பிரமணிய ஐயர்
🌹 மா.பொ.சி. மாயூரம் பொன்னுசாமி சிவஞானம்
🌹 கி.வா.ஜ. - கிருஷ்ணசாமி வாகீச ஜகந்நாதன்
🌹 எம்.ஜி.ஆர். - மருதூர் கோபாலமேன ராமசந்திரன்
🌹 எம். எஸ். சுப்புலட்சுமி - மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி
🌹 எம். எஸ். சுவாமிநாதன் - மான்கொம்பு சாம்பசிவன் சாமிநாதன்
🌹 பி.வி.நரசிம்மராவ் - பமலமூர்த்தி வேங்கட நரசிம்மராவ்
🌹 வி.பி.சிங் - விஸ்வநாத் பிரதாப் சிங்
🌹 ஐ.கே.குஜரால் - இந்தர் குமார் குஜரால்
🌹 டி. என்.சேஷன் - திருநெல்வேலி நாராயண சேஷன்
🌹பி.ஜி. வுடஹவுஸ் - பெல்கம் கிரென்வில்லி வுட்ஹவுஸ்
🌹வி.எஸ்.நைபால் - வித்யாதர் சூரஜ்பிரசாத் நைபால்
🌹 சி.என்.அண்ணாதுரை - காஞ்சிவரம் நடராஜன் அண்ணாதுரை
🌹 ஆர்.கே.நாராயண் - ராசிபுரம் கிருஷ்ணசாமி நாராயண்
🌹 ஏ.பி.ஜே.அப்துல்கலாம் - அவுல் பக்கிர் ஜெயினுலாபுதீன் அப்துல்கலாம்
🌹ஆர். கே. லக்ஷ்மண் - ராசிபுரம் கிருஷ்ணசாமி லக்ஷ்மண்
🌹 கே.ஆர். நாராயணன் - கோச்செரில் ராமன் நாராயணன்
🌹 சி.வி. ராமன் - சந்திரசேகர் வெங்கட்ராமன்
🌹 ஏ.ஆர். ரஹ்மான் - அல்லாஹ் ரக்கா ரஹ்மான்
🌹 எம்.எஃப்.ஹுசைன் - மக்ஃபுல் ஃபிடா ஹுசைன்
கணிப்பொறி பற்றிய யாம் அறிந்த சில தகவல்கள்:-
💻 கம்ப்யூட்டர் கண்டறிந்தவர் - சார்லஸ் பாபேஜ்
💻 கம்ப்யூட்டர் எந்திர பாகங்கள் பற்றிய குறிப்பது - ஹார்டுவேர் (வன்பொருள்)
💻 கம்ப்யூட்டர் புரோக்ராம் பற்றிய குறிப்பது - சாப்ட்வேர் (மென்பொருள்)
💻 கணினியின் நினைவாற்றல் அலகு - பைட்
💻 ஒரு பிட் என்பது - 0 அல்லது 1
💻 ஒரு பைட் என்பது - 8 பிட்டுகள் (Bits)
💻 4 பிட்டுகள் என்பது - 1 நிப்பில் (nibble)
💻 எழுத்துக்கள், எண்கள், குறியீட்டுகள் அனைத்தும் எவ்வாறு கூறப்படுகிறது - கேரக்டர்
💻 ஒரு கிலோபைட் என்பது - 1024 பைட்டுகள்
💻 கணினியில் எந்த இரண்டு எண்கள் மட்டுமே பயன்படுகிறது - 0, 1
💻 0, 1 எவ்வாறு அழைக்கப்படுகிறது - இயந்திர மொழி
💻 கணினியில் எல்லா பதிவுகளும் எவ்வாறு சேர்த்து வைக்கும் - 0 அல்லது 1
💻 கணினியில் மேல்மட்ட மொழிகள் - FORTRAN, BASIC, COBOT, Java, Visual Basic
💻 முதல் முதலில் உருவாக்கப்பட்ட கணிப்பொறி மொழி - FORTRAN
💻 கணினி சிப் செய்ய பயன்படுவது - சிலிக்கான்
💻 பைட்டுகள்:-
📍கிலோ பைட் - K 2^10
📍மெகா பைட் - M 2^20
📍கிகா பைட் - G 2^30
📍டெரா பைட் - T 2^40
📍பீடா பைட் - P 2^50
📍எக்ஸா பைட் - E 2^60
📍ஸிட்டா பைட் - Z 2^70
📍யோட்டா பைட் - Y 2^80
துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்
துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...
-
*🔥முத்தமிழ் TNPSC பயிற்சி மையம் - சேலம்🔥* 🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅 *✨ஊர்களும் மரூஉ பெயர்களும்✨* 🚧 புதுக்கோட்டை - புதுகை 🚧 தஞ்சாவூர் -...
-
[1] பாஞ்சாலி - மடப்பிடி கோப்பெருந்தேவி- மடமொழி கண்ணகி - மடக்கொடி 2. பாஞ்சாலி - மடப்பிடி கோப்பெருந்தேவி- மடமொழி கண்ணகி - மடக்கொட...
-
*TNPSC GK* *புவிசார் குறியீடு பெற்றுள்ள தமிழ்நாடு பொருட்களின் பட்டியல் 2023* *புவிசார் குறியீடு* ஒரு புவிசார் குறியீடானது ஒரு குறிப்பிட்ட பு...