Showing posts with label Fish. Show all posts
Showing posts with label Fish. Show all posts

Sunday, 16 August 2020

*சீலா அல்லது ஷீலா*


*சீலா அல்லது ஷீலா.*   barracuda fish இதுல பல வகை இருக்கு குழி சீலா , கரை சீலா , ஓலைச்சீலா , லோப்பு சீலா எல்லாமே barracuda குடும்பத்தை சேர்ந்தது , செதில் உள்ள மீன் எல்லா டிஷ் வகையும் செய்யலாம் இதுல புட்டு செஞ்சி சாப்பிட்டு பாருங்க சுவையா இருக்கும் முள் குறைவா  இருக்கும்...

*வஞ்சிரம் மீன்*


மீன்ல ராஜான்னா அது வஞ்சிரம் மீன் தான் சைஸ் கூட கூட விலையும் கூடும் மீன் வகை இது மலையாளத்துல நெய் மீன் இங்கிலீஸ்ல Spanish mackerel- king mackerel - seerfish னு சொல்லுவாங்க திருநெல்வேலி மாவட்டத்துல ஷீலான்னு சொல்றாங்க இது செதில் இல்லாத மீன் இதை அதிகமாக மக்கள் விரும்ப முக்கிய  காரணம் சுவை , முள் குறைவு முள்ளை எடுத்து சாப்பிடனும்னு அவசியமில்லை  அப்படியே சாப்பிடலாம்....

*சங்கரா மீன் அல்லது செம்மீன்*


*சங்கரா மீன் அல்லது செம்மீன்* மலையாளத்துல கிளிமீன் , இங்கிலீஸ்ல Red-snapper  க்கு சொல்லுவாங்க , செதில் உள்ள மீன் இது சுவையான மீன் வகைல இதுவும் ஒன்னு, முள் அதிகமா  இருக்கும் கவனமா சாப்பிடனும் , குழம்புக்கும் வறுவலுக்கும் ஏத்த  மீன்..

*நவரை மீன்*


*நவரை மீன்*  இது சங்கரா மீன் போன்றது.. சிறிய வகை..

*மத்தி - sardine -pilchards*


*மத்தி - sardine -pilchards*
மளையாளத்துலயும் மத்தி தான் செதில் உள்ள  சுவையான மீன். இதை சமைச்சா வீடே ஒரு வித மனம் வரும் சிலருக்கு பிடிக்காது இந்த வாசம் . ஒமேகா-3 சத்து அதிகம் உள்ள மீன் விலையும் குறைவா  தான் இருக்கும் , குழம்பு வறுவல்க்கு ஏத்தது முழுசா தலை முதல் உடல் வரை  சாப்பிடலாம்....

*நொணலை அல்லது சாளை -sardine*


*நொணலை அல்லது சாளை -sardine* இது மத்தி மாதிரியே இருக்கும். செதில் உள்ள மீன்  இதையே மத்தினு சொல்லி விப்பானுங்க , மத்தி வயிறு பகுதி உருண்டை மாதிரி இருக்கும் , சாளை வயிறு பகுதி ஒட்டினா மாதிரி இருக்கும்  . மத்தியும் இதுவும் சுவைல ஒரே மாதிரி தான் இருக்கும் மத்தி குடும்ப வகையை சார்ந்தது..

*கிழங்கான் - lady fish*


*கிழங்கான் - lady fish* இந்த மீன் மாதிரியே கொஞ்சம் கறுப்பா இருக்கும் அதையும் கிழங்கான்னு தான் விப்பானுங்க அதுல  முள் அதிகமா  இருக்கும், கவனமா சாப்பிடனும் , இது வெள்ளை கிழங்கான்னு சொல்லுவாங்க fish finger செய்யறதுக்கு ஏத்த  ஒரே மீன் இதுதான் நெத்திலி மாதிரி சுவை அள்ளும் ...

*நெத்திலி -Anchovy*


*நெத்திலி -Anchovy* இது சிறிய வகை மீன், குழம்பா வைக்கறதை விட சிக்ஸ்டி பைவ் மாதிரி செஞ்சி சாப்பிடலாம் . இதோட கருவாடு மீனை விட மொறுமொறுப்பா இருக்கும் . இதை ஒவ்வென்னா  சுத்தம் பண்றது பெரும்பாடு
சட்டில  கல்லு உப்பை போட்டு மொத்தமா ஒரு சுழட்டு சுழட்டுனா போதும்...

*வாளை மீன் - Silver scabbard fish*


*வாளை மீன் - Silver scabbard fish* இதை மீனா சாப்பிட்டதை விட கருவாடா சாப்பிட்டவங்க தான் அதிகம் இருப்பாங்க , செதில் இல்லாத வகை மீன் இது.. இதோட தோல்ல சுண்ணாம்பு மாதிரி பளபளப்பா ஒரு கோட்டிங் இருக்கும் கல்லுல நல்லா தேய்ச்சி கழுவின பிறகு உபயோகப்படுத்தனும்... கருவாடு வறுத்தா செல்ல டேஸ்டா இருக்கும்..

Saturday, 15 August 2020

*கோலா - coramandal flying fish*


*கோலா - coramandal flying fish* 
படத்தை பார்த்தவே தெரியும் இந்த மீன் சில அடி தூரம் வரைக்கும் பறக்கும், மத்தபடி விசேசமான சுவையெல்லாம் கிடையாது. செதில் உள்ள மீன்.. கொழம்புக்கு ஏற்றது..

*கானாங்கத்தை- அயிலா- dolphin fish*




*கானாங்கத்தை- அயிலா- dolphin fish* -  நல்ல சதைப்பற்று உள்ள மீன் இதை சாப்பிடறப்போ வித்தியாசமான காரல் சுவை வரும் . கேரளால அதிகம் விரும்பி வாங்கற மீன், செதில் இல்லா வகை மீன்.. இதன் சுவை அபாரமா இருக்கும்.! ஆனா இதை தமிழ் நாட்டில் அவ்வளவா வாங்க மாட்டாங்க. அதனால் நேரா பெங்களூர் போன்ற கடல் இல்லா நகரத்துக்கு ஏத்தி  அனுப்பிருவாங்க

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...