Showing posts with label Current Affairs. Show all posts
Showing posts with label Current Affairs. Show all posts

Wednesday, 9 January 2019

*லோக் ஆயுக்தா என்றால் என்ன?*

பொது ஊழியர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் அமைப்பு.

எத்தனை உறுப்பினர்கள்?

ஒரு தலைவர் மற்றும் 4 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். நான்கில் 2 பேர் நீதித்துறையை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். 

உறுப்பினர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

முதலமைச்சர், சட்டமன்ற சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் இணைந்து தேர்ந்தெடுப்பார்கள். அப்படி தேர்வானவர்கள் ஆளுநரால் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்படுவார்கள்.

யார் லோகாயுக்தா தலைவர்/உறுப்பினர் ஆக முடியும்?

பதவியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி 

(அல்லது) ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி

(அல்லது) ஊழல் தடுப்பு/பொது நிர்வாகத்தில் 25 ஆண்டு அனுபவம் கொண்ட நபர்

வேறு ஏதாவது வரையறைகள் உண்டா?

எந்த குற்றத்திற்காகவும் தண்டிக்கப்பட்ட குற்றவாளியாக இருக்க கூடாதுநாடாளுமன்ற / சட்டமன்ற உறுப்பினராக இருக்க கூடாதுஅரசு பணியிலிருந்து நீக்கப்பட்டவராக இருக்க கூடாதுவேறு எந்த ஆதாய பதவிகளையும் (Office of Profit) வகிக்கக் கூடாது45 வயதிற்கு குறைவாகவோ 70 வயதிற்கு மேலோ இருக்க கூடாது

உறுப்பினர்களின் பதவிக்காலம் எவ்வளவு?

5 ஆண்டுகள்.

லோக் ஆயுக்தா அமைப்பில் வேறு யாரேல்லாம் இருப்பார்கள்?

லோக் ஆயுக்தா செயலாளர் மற்றும் விசாரணை இயக்குனர் : அரசு கொடுக்கும் அதிகாரிகள் பட்டியலிலிருந்து லோக் ஆயுக்தா தலைவரால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.இவர்கள் தவிர, இந்த அமைப்பு தடையின்றி செயல்படுவதற்கு தேவையான அலுவர்களை மாநில அரசு கொடுக்க வேண்டும்

லோக் ஆயுக்தா யாரையெல்லாம் விசாரிக்கலாம்?

இன்னாள் மற்றும் முன்னாள் முதலமைச்சர்இன்னாள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள்இன்னாள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்மாநில அரசு ஊழியர்கள்அரசால் நிர்வகிக்கப்படும் அல்லது அரசின் நிதி பெறும் அமைப்புகள் / வாரியங்கள் / சங்கங்கள் / தன்னாட்சி அமைப்புகள்

இவர்கள் தவிர, பொது ஊழியர்களை ஊழல் செய்ய தூண்டும் அல்லது துணை போகும் எந்த நபரையும் விசாரிக்கலாம்.

வேறு என்னென்ன அதிகாரங்கள் உண்டு?

எந்த விசாரணையும் தொடங்கும் முன் யாரிடமும் முன் அனுமதி பெற தேவையில்லைவிசாரணையின் தேவைக்கேற்ப மாநில அரசின் எந்த அலுவலரையும் பயன்படுத்திக்கொள்ளலாம்யாரை வேண்டுமானாலும் நேரில் வரவழைத்து விசாரிக்கலாம்எந்த ஆவணத்தையும் கொடுக்கும்படி அரசிடம் கோரலாம்

எதையெல்லாம் விசாரிக்கக் கூடாது?

இந்திய பாதுகாப்பு தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள்பொது ஊழியர்களின் பணி நியமனம், பணி மாறுதல், பணி நீக்கம், பணி ஓய்வுவழங்கப்படும் வெகுமதிகள் மற்றும் பரிசுகள்உள்ளாட்சி நிதி தணிக்கையாளரின் கீழ் வரும் நபர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள்லோக் ஆயுக்தா அனுமதியுடன் பொது விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட விஷயங்கள்லோக் ஆயுக்தா அமைவதற்கு முன்பு தொடங்கப்பட்ட விசாரணைகள்துன்புறுத்தல் அல்லது தேவையற்ற கால தாமதத்தை தவிர, வேறு எந்த காரணத்திற்கும் அரசு ஏற்படுத்திக்கொள்ளும் வர்த்தக ரீதியான ஒப்பந்தங்களை விசாரிக்க முடியாது.

தானாக முன்வந்து (suo motu) புகார்களை பதிவு செய்ய முடியுமா? 

சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.

வரும் புகார்களை எப்படி விசாரிப்பார்கள்?

புகார்களை விசாரணை செய்ய லோக் ஆயுக்தாவிற்கு தனி விசாரணைப் பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும். அது செயல்பாட்டிற்கு வரும் வரை மாநில அரசே விசாரணையில் உதவும். அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான புகார்களை இந்த விசாரணைப்பிரிவு புலனாய்வு செய்யும். அதிகாரிகளுக்கு எதிரான புகார்கள் லஞ்ச ஒழிப்புத் துறையால் விசாரிக்கப்படும். 

விசாரணை நடக்கும் போது குற்றம்சாட்டப்பட்டவரை பணியிடை நீக்கம் செய்ய முடியுமா?

அப்படி ஒரு தேவை எழுவதாக லோக் ஆயுக்தா கருதினால், அரசு ஊழியரின் மேல் அதிகாரிக்கு பரிந்துரை செய்யலாம்.  அந்த பரிந்துரையை, எழுத்துப்பூர்வ வாதங்களை அளித்து நிராகரிக்க அரசுக்கு உரிமை உண்டு. இந்த சரத்து முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பொருந்தாது.

விசாரணை முடிந்த பின் என்ன நடக்கும்?

விசாரணைப்பிரிவு / லஞ்ச ஒழிப்புத்துறை தன் விரிவான அறிக்கையை லோக் ஆயுக்தாவிடம் சமர்ப்பிக்கும். அந்த அறிக்கையை ஆராய்ந்து புகார் சரியானதா இல்லையா என லோக் ஆயுக்தா உறுப்பினர்கள் தீர்மானிப்பார்கள். புகாருக்கு உள்ளானவரும் தன் வாதங்களை வைக்க வாய்ப்பு வழங்கப்படும். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்மந்தப்பட்டவர் மீது அதிகாரம் கொண்ட அமைப்பிற்கு லோக் ஆயுக்தா பரிந்துரை செய்யும். 

நடவடிக்கை எடுக்க அதிகாரம் கொண்ட அமைப்பு எது?

அரசு ஊழியருக்கு தமிழக அரசு, 

சட்டமன்ற உறுப்பினருக்கு சபாநாயகர்,

அமைச்சர்களுக்கு முதலமைச்சர்,

முதலமைச்சருக்கு ஆளுநர்.

புகார் பொய் என்று நிரூபிக்கப்பட்டால்?

தவறான / அற்பத்தனமான புகார்கள் கொடுப்பவர்களுக்கு அதிகபட்சம் 1 ஆண்டு சிறை மற்றும் 1 லட்சம் அபராதம் விதிக்கலாம்போலி புகார் அளித்தவர் பாதிக்கப்பட்ட பொது ஊழியருக்கு இழப்பீடும் வழங்க வேண்டும்நல்லெண்ண அடிப்படையில் கொடுக்கப்பட்ட புகார்களுக்கு இது பொருந்தாது

லோக் ஆயுக்தாவிற்கு எதிராகவே புகார் வந்தால்?

அதை லோக் ஆயுக்தா விசாரிக்காது. லோக் ஆயுக்தா உறுப்பினர்களை பணி நீக்கம் செய்ய தனி விதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

அது என்ன விதிகள்?

நீதிபதிகளை பணிநீக்கம் செய்வது போன்ற நீண்ட நடைமுறை :

45 சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்துடன் புகார் கொடுக்கப்பட வேண்டும். ஆளுநர் உத்தரவின் பேரில் புகாரை உயர்நீதிமன்றம் விசாரிக்கும்.நிரூபிக்கப்பட்டால், பணி நீக்க ஆணையை ஆளுநர் வெளியிடுவார்.

Thursday, 15 November 2018

*புயல்களும் அதன் பெயர்களும்*

Thursday, November 15, 2018
புயல்களும் அதன் பெயர்களும் - இதுவரை தமிழகத்தை தாக்கிய புயல்கள்
புயல் என்றவுடன் தற்போது அனைவர் மனதிலும் தோன்றக்கூடிய ஒரே கேள்வி அந்த புயலின் பெயர் என்ன என்பது தான், ஏனென்றால் புயலின் தாக்கமும் வீரியமும் அந்த அளவுக்கு பாதிப்புகளை உண்டாக்கி இருக்கின்றன.

புயல்களுக்கு ஏன் பெயர் வைக்க தொடங்கினார்கள்? எதன் அடிப்படையில் புயலின் பெயர்களை வைக்கிறார்கள்? யார் முதலில் பெயர் வைத்தது? இதுவரை தமிழகத்தை தாக்கிய புயல்கள் என்ன? இதுப்போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களைப் பற்றி இன்று நாம் காணவிருக்கிறோம்.



புயல்களுக்கு ஏன் பெயர் வைக்க தொடங்கினார்கள்?

📌 வானிலை ஆய்வாளர்களும், கடல் மாலுமிகளும், பொதுமக்களும் வானிலை எச்சரிக்கையை சரியாக புரிந்து கொண்டு செயல்படுவதற்காகவும், ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்காகவும் புயல்களுக்கு பெயர் வைக்க தொடங்கினார்கள்.

📌 மேலும் ஒரே கடற்பகுதியில் ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் அடுத்தடுத்து உருவாகியிருக்கலாம், எந்த எந்தத் புயல்கள் எந்த திசையில் வருகிறது என்பதை உடனடியாக அறிவதற்கும், எச்சரிக்கை அடைவதற்கும் வசதியாகத்தான் பெயர் வைக்கும் வழக்கம் உருவானது.

📌 நாளடைவில் அது புயலுக்கு முன்பு பேரழிவு ஆபத்து பற்றிய விழிப்புணர்வு, மேலாண்மை, பாதிப்பு குறைப்பு நடவடிக்கைகள் போன்றவற்றை மேற்கொள்வதற்குப் புயலின் பெயர்கள் உதவுவதன் காரணமாகவும் புயல்களுக்கு பெயர் வைத்தனர்.

யார் முதலில் பெயர் வைத்தது?

🌀 இரண்டாம் உலகப் போர் காலத்தில் (1939-1945) புயல்களை அடையாளம் காண்பதற்குப் பெண்களின் பெயர்களை வைக்கும் வழக்கத்தை வானிலை ஆய்வாளர்கள் தொடங்கி வைத்தனர்.

🌀 ஆனால், அழிவை ஏற்படுத்தும் புயல்களுக்குப் பெண்களின் பெயரைச் சூட்டுவதா என்று பெண்ணியவாதிகள் எதிர்க்க ஆரம்பித்த பிறகு, 1978-களில் இருந்து ஆண்களின் பெயர்களும் இந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டன.

🌀 பின்பு வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் நடைமுறையானது புதுடெல்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையமானது 2000ஆம் ஆண்டில் தொடங்கியது.

எதன் அடிப்படையில் புயலின் பெயர்களை வைக்கிறார்கள்?

👉 வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையத்தில் 2004 ஆம் ஆண்டு செம்டம்பரில் புயல்களுக்கு பெயர் வைக்க 64 பெயர்களை பட்டியலிட்டது.

👉 இதில் ஒவ்வொரு நாடும் தலா 8 பெயர்களை வழங்கியுள்ளது. இதில் இந்திய வழங்கியுள்ள 8 பெயர்களான அக்னி, ஆகாஷ், பிஜ்லி, ஜல், லெஹர், மேக், சாஹர், வாயு. இவை அனைத்தும் பஞ்ச பூதங்களை குறிப்பவை ஆகும்.

இதுவரை தமிழகத்தை தாக்கிய புயல்கள் !

✅ 2005 டிசம்பர் - பானூஸ்
✅ 2008 நவம்பர் - நிஷா
✅ 2010 நவம்பர் - ஜல்
✅ 2011 டிசம்பர் - தானே
✅ 2012 அக்டோபர் - நீலம்
✅ 2013 டிசம்பர் - மடி புயல்
✅ 2015 டிசம்பர் - நாடா
✅ 2016 டிசம்பர் - வர்தா
✅ 2017 நவம்பர் - ஒகி
✅ 2018 நவம்பர் -கஜா
Share

Saturday, 10 November 2018

*நடப்புச்செய்திகள்-1000 வினா விடைகள்*

நடப்புச்செய்திகள்-1000 வினா விடைகள் வெளியீடு:
AATCHITHAMIZH IAS ACADEMY @
TNPSC GROUP-2 CURRENT AFFAIRS 1000 QA and 2 Model Question Paper @

Please Download from the link below:

👇👇👇👇

https://drive.google.com/open?id=12_zcMyEr6XXgxDoGUuIM7NuMVogo03jc

Sunday, 28 October 2018

*Akash CA April to September*

ஆகாஷ் ப்ரன்ஸ் ஐஏஎஸ் அகாடமியின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை உள்ள நடப்புநிகழ்வுகள் :

For Download

👇👇👇

Click here

Tuesday, 23 October 2018

*நடப்பு_நிகழ்வு_100*

#நடப்பு_நிகழ்வு_100_வினா_விடை (30.09.2018)
==============================
விரல்நுனி பதில்கள்
===============================
1) மகாத்மா காந்தியின் முழு உருவ சிலையை எந்த ஐரோப்பிய நாட்டில் இந்திய ஜனாதிபதி திறந்து வைத்தார்? – பல்கேரியா
===============================
2) இந்தி இருக்கை அமைப்பதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்ட பலகலைக்கழகம்? சோபியா பல்கலைக்கழகம் (பல்கேரியா)
===============================
3) அமெரிக்காவின் உயரிய ‘மார்கோனி சொசைட்டி பால் இளம் அறிஞர் விருது-2018 பெறுபவர்? - ராஜலட்சுமி நந்தகுமார் (மதுரை)
===============================
4) பாம்பு கடிக்கு, குறைந்த விலையில் மருந்து தயாரித்தவர்கள்? – டில்லி IIT
மாணவர்கள் & USA சான் ஜோஸ் பல்கலை இணைந்து
===============================
5) மத்திய அரசின் புதிய கொள்முதல் கொள்கையின் பெயர்? - அன்னதத்தா மவுல்யா சம்ரக் ஷன யோஜனா
===============================
6) தூய்மை இந்தியா சிறப்பாக செயல்படுத்த 15.09.2019 இல் தொடங்கப்பட்ட இயக்கம்? - தூய்மையே உண்மையான சேவை இயக்கம்
===============================
7) எந்த விஞ்ஞானிமீது கேரள காவல்துறை அதிகாரிகள் தவறான முறையில் திட்டமிட்டு வழக்கு பதிந்தனர்? – நம்பி நாராயணன்
===============================
8) செப்டம்பர் 17- 22 வரை நேபாளம் மற்றும் சீனா ராணுவங்கள் இணைந்த 2வது கூட்டுப்பயிற்சியின் பெயர்? – சாகர்மாதா
===============================
9) டாக்காவில் நடைபெற்ற தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு நடத்திய போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நாடு? மாலத்தீவு
===============================
10) ஆப்பிரிக்க சர்வதேச வலு தூக்கும் போட்டியில் 43 கிலோ சப்-ஜுனியர் பிரிவில்  3 தங்கம் வென்றவர்? – ஆஷிகா (புதுவை)
===============================
11) இந்தியாவில் முதன் முதலாக நாய்களுக்கென்று பிரத்யேக பூங்கா உருவாக்கப்பட்டுள்ள இடம்? - ஐதராபாத் அருகே  கச்சிபோலி
===============================
12) இந்தியாவின் 44-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட்? - பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்
===============================
13) பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்டில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்? - நோவாசர் மற்றும் எஸ்1-4 என்ற செயற்கைகோள்கள் (16.09.2018)
===============================
14) மங்குட் - என்ற புயல் கடுமையாக தாக்கிய நாடு? – பிலிப்பைன்ஸ் (செப்டம்பர் 2வது வாரம்)
===============================
15) நாட்டின் 30-ஆவது யானைகள் காப்பகமாக அறிவித்துள்ள இடம்? - சிங்பன் வனவிலங்கு சரணாலயம் (நாகாலாந்து)
===============================
16) மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளுக்காக பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தியுள்ள இயக்கம்? - ஸ்வச்சாத ஹீ சேவா
===============================
17) Swachhata Hi Seva தொடக்க விழாவில் அறிவிக்கப்பட்ட திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநிலம்? - ஜம்மு காஷ்மீர் மாநிலம்
===============================
18) இந்தியாவின் முதல் பழங்குடியினருக்கான சுற்றுலா பகுதி தொடங்கப்பட்டுள்ள இடம்? - சட்டீஷ்கர் மாநிலம் Dhamtari மாவட்டம்
===============================
19) மேக் இன் இந்தியா திட்டத்தில், இந்திய கடலோர காவல் படைக்காக வழங்கப்பட்டுள்ள ரோந்து கப்பல்கள் ? – விக்ரம், விஜயா, வீரா
===============================
20) சமீபத்தில் இ-சிகரெட் எனப்படும் எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்கு தடை விதித்துள்ள மாநிலம்? – தமிழ்நாடு
===============================
21) இந்தியாவின் முதல் நீருக்கடியிலான ரோபோ ட்ரோன் பெயர்? – EYE ROVTUNA
===============================
22) ஏசியன் கேம் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியாவுக்காக வெள்ளிப்பதக்கம் பெற்றுத்தந்தவர்? பி.வி சிந்து (சாய்னா வெண்கலம்)
===============================
23) நேபாளத்தில் நடைபெற்ற பிம்ஸ்டெக் மாநாட்டின் கருப்பொருள்? - Towards a peaceful, prosperous and sustainable Bay of Bengal region
===============================
24) வோடோபோன் எந்த நிறுவனத்துடன் இணைந்துள்ளது? – ஐடியா
===============================
25) உலகளாவிய மொபிலிட்டி உச்சி மாநாடு நடைபெற்ற இடம்? – புதுடெல்லி
===============================
26) மும்பை விமான நிலையத்தின் பெயர் எவ்வாறு மாற்றம் செய்யபட்டுள்ளது? - சத்ரபதி சிவாஜி மகாராஜ் பன்னாட்டு விமான நிலையம்
===============================
27) புவி அறிவியல் அமைச்சகத்தினால் ஒரே குடையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டம்?  O-SMART
===============================
28) நிலவுக்குச் சுற்றுலாப் பயணியாகச் செல்லும் முதல் நபர்? - யுஸகு மேஸாவா (ஜப்பான்)
===============================
29) இந்தியாவின் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை எம்பிஏடிஜிஎம் 2வது முறையாக பரிசோதிக்கப்பட்ட இடம்? அகமது நகர் (மகாராஷ்டிரா)
===============================
30) USA-ன் NASA வின்வெளி ஆய்வு மையம் கலிஃபோர்னியாவிலிருந்து ஏவிய புதிய செயற்கைக்கோள்? - ICESat-2
===============================
31) மனித மேம்பாட்டு குறியீட்டு பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடம்? – 130 வது இடம் (நார்வே, சுவிஸ், AUS, Ireland & German)
===============================
32) ஆள்கடத்தலை கண்டறிவதற்கும், அதற்கெதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் Swayangsiddha எனும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ள மாநிலம்? - மேற்கு வங்காளம்
===============================
33) வைரவிழா (60 ஆண்டு) காணும் ஐ.ஐ.டி? சென்னை ஐ.ஐ.டி (1959-ல் தொடக்கம்)
===============================
34) இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் & தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர்? - பத்மஜா சந்துரு
===============================
35) Gaganyaan-2022 திட்டத்திற்கு தலைமையேற்கும் நபர்? – லலிதாம்பிகா
===============================
36) ஆயுஷ்மான் பாரத் எனும் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் மூலம் வழங்கப்படும் காப்பீட்டுத்தொகை? – ஐந்து லட்சம் (ஆண்டுக்கு)
===============================
37) உலகின் மிகப்பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டமாக ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி? - ரூ.10,000 கோடி
===============================
38) சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் 13வது மாநகராட்சி? – நாகர்கோவில்
===============================
39) டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள செல்போன் வழங்கியுள்ளா மாநிலம்? – ராஜஸ்தான்
===============================
40) ஒரு நாடு, ஒரு கார்டு என்பது? - ரயில், பஸ், மெட்ரோ ரயில் ஆகியவற்றில் பயணம் செய்ய (பொது போக்குவரத்து)
===============================
41) உலகில் பாலியல் குற்றவாளிகள் பற்றிய தேசிய தரவுத்தளத்தை (NDSO) வெளியிடும் ஒன்பதாவது நாடு? – இந்தியா
===============================
42) ரஷ்ய  விமானப்படை & இந்திய விமானப்படைக்கு இடையே கூட்டு விமான போர் பயிற்சியின் பெயர்? – அவியாந்திரா-18 (Aviaindra)
===============================
43) ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது - 2018 பெற்றவர்கள்? – வீராட் கோலி & மீராபாய் சானு (பளு தூக்கும் வீராங்கனை)
===============================
44) உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் எந்த நாடு இயக்கியது? ஜெர்மனி ( பிரான்ஸை சேர்ந்த ஆல்ஸ்டம் என்ற நிறுவன தயாரிப்பு)
===============================
45) இந்தியாவின் மூன்றாம் பெரிய வங்கியாக உருவெடுக்க இணையவுள்ள வங்கிகள்? பரோடா, தேனா, விஜயா
===============================
46) சமீபத்தில் மறைந்த சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி? - அன்னா ராஜம் மல்ஹோத்ரா
===============================
47) தமிழ் கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற தமிழகத்திடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள நாடு? – பிரான்ஸ்
===============================
48) தென் மாநில மண்டல கவுன்சிலின் 28 வது கூட்டம் நடைபெற்ற இடம்? – பெங்களூர்
===============================
49) இஸ்ரோவின் முதல் விண்வெளி தொழில் நுட்ப அடைவு மையம் எங்கு திறக்கப்பட்டுள்ளது ? - அகர்தலா (திரிபுரா)
===============================
50) திறன் இந்தியா திட்டத்தின் தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள்? – வருண் & அனுக்ஷா சர்மா
===============================
51) பசுமை கட்டடம் சான்றிதழ் பெற்ற முதல் ரயில் நிலையம்? – சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்
===============================
52) புதிய மராத்தான் உலக சாதனை படைத்தவர்? – கென்யன் எலியட் கிபோகேவ்
===============================
53) போலந்து நாட்டில் நடந்த மகளிருக்கான குத்துச்சண்டை போட்டியில் 48 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்றவர்? மேரி கோம்
===============================
54) முதலீடுகளை ஈர்ப்பதில் உலகின் தலைச்சிறந்த பொருளாதார மையம்? – நியூயார்க் (முன்னர் லண்டன்)
===============================
55) தேசிய பொறியாளர் தினம்? செப்டம்பர் 15 (M.விஸ்வேஸ்வரய்யா பிறந்த தினம்)
===============================
56) சர்வதேச போட்டியில் 300 விக்கெட் கைப்பற்றிய முதல் வீரங்கனை? – ஜீலம் கோஸ்வாமி
===============================
57) டோசன் ஆன்சோங் என்ற தனது முதல் ஏவுகணைத் திறன் கொண்ட  நீர்மூழ்கிக் கப்பல் அறிமுகப்படுத்திய நாடு? – தென்கொரியா
===============================
58) உச்ச நீதிமன்றத்தின் 46-வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளவர்? – ரஞ்சன் கோகாய்
===============================
59) இந்தியாவுக்கும் புருனே இடையில் ஏற்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம்? – செயற்கைக்கோள் தகவல் தடமறிதல், விண்வெளி ஆய்வு,  அறிவியல், தகவல் பெறுதல்
===============================
60) சுற்றுலா துறையில் உள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள நாடு? – மால்டா
===============================
61) சியோல் 5-வது கேரம் உலகக் கோப்பை தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்றவர்? - கே. சகாயபாரதி (வன்ணாரப்பேட்டை)
===============================
62) அக்ஸிஸ் வங்கியின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளவர்? – அமிதாப் செளத்ரி
===============================
63) சரளா புர்கர்  விருது பெற்றவர்? – சத்ருகனா பாண்டவ், ஒடியா கவிஞர்  (மிஸ்ரா துருபத் கவிதைத் தொகுப்புக்காக)
===============================
64) செக் நாட்டில் நடந்த IAAF தடகள  காண்டினென்டல் கோப்பைக்கான போட்டியில் முதல் பதக்கம் வென்ற இந்தியர்? – அர்பிந்தர் சிங்
===============================
65) யுஎஸ் ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் சாம்பியன்? - ஜேமி மர்ரே (ENG) –பெதானி மேட்டக் சேண்ட்ஸ் (USA) ஜோடி
===============================
66)  அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள இந்திய வீரர்? – ருத்ர பிரதாப் சிங்
===============================
67) ஜப்பான் நாட்டை தாக்கிய புயல்? ஜெபி புயல் (கொரிய மொழியில் விழுங்கு என்று பொருள்)
===============================
68) US அதிபர் டொனால்ட் டிரம்ப் பற்றிய புத்தகம்? வெளியிட்டவர்? - FEAR: Trump in the white house – பாப் வுட்வர்ட்
===============================
69) 2018-ம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தொழில் முனைவோர் உச்சிமாநாடு நடைபெற்ற இடம்? – நேபாளம்
===============================
70) சமீபத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஐரோப்பிய நாடுகள்? - சைப்ரஸ், பல்கேரியா & செக் குடியரசு
===============================
71) நான்காவது சர்வதேச ஆயூர்வேதா மாநாடு எங்கு நடைபெற்றது? – நெதர்லாந்து
===============================
72) 2018ம் ஆண்டிற்கான டாக்டர் B.C.ராய் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்? – டாக்டர் பசந்த் குமார்
===============================
73) நாட்டின் மிகப்பெரிய தொலைதொடர்பு சேவை நிறுவனம்? - வோடோபோன் ஐடியா
===============================
74) ஆசிய விளையாட்டில் குத்துச் சண்டைப் பிரிவில் தங்கம் வென்ற 8-வது வீரர்? - அமித் பங்கல்
===============================
75) பசுவை தேச அன்னையாக அறிவிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய மாநிலம்? – உத்தரகாண்ட்
===============================
76) 2019 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய திரைப்படம்? - Village Rock stars (அசாமி மொழி)
===============================
77)  ஜிஎஸ்டி க்கான வரி பிடித்தம் செய்வதில் விதிகளை மீறியதற்காக ரூ. 38 கோடி அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ள வங்கி? - Yes Bank
===============================
78) ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்ட இடம்? – ராஞ்சி (ஜார்க்கண்ட்)
===============================
79) தனது முதல் விமான போக்குவரத்தை தொடங்கியுள்ள இந்திய மாநிலம்? – சிக்கிம் – பாக்யாங் விமான நிலையம்
===============================
80) Whats App போலி News கட்டுப்படுத்தவதற்காக இந்தியாவின் குறைதீர்க்கும் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளவர்? – கோமல் லகரி
===============================
81) உலகளவில் தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா எத்தனையாவது இடம்?  3-வது இடம்
===============================
82) குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்களை தடுப்பதற்காக மத்திய அரசு வெளியிட்டுள்ள மொபைல் செயலி? - Cyber Trivia
===============================
83) அம்ருத் திட்டத்தின்கீழ் சிறப்பாக செயல்படும் மாநிலங்கள் பட்டியலில் முதலிடம்? – ஆந்திரா
===============================
84) 2017ல் உலக அளவில் அதிக பயணிகளை கையாண்ட விமான நிலையங்கள் பட்டியலில் முதலிடம்? – ஹார்ட் ஸ்பீல்ட் ஜாக்சன் ஏர்போர்ட்– USA (டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம்16வது இடம்)
===============================
85) 2018-ம் ஆண்டுக்கான FIFA சிறந்த கால்பந்து வீரராக  தேர்வு செய்யப்பட்டுள்ளவர்? - லூகா மாட்ரித் (குரோஷியா)
===============================
86) மாலத்தீவின் 7வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்? – முகமது சோலிக்
===============================
87) பேஸ்புக் நிறுவனத்தின் இந்தியாவின் புதிய நிர்வாக இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளவர்? - அஜித் மோகன்
===============================
88) நாட்டின் இரண்டாவது பெரிய மெட்ரோ ரயில் வழித்தடம்? - ஹைதரபாத் நகரில் 16 km தொலைவு
===============================
89) 4-வது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா (IISF 2018) அக்டோபர் 6 ம் தேதி எங்கு நடைபெற்றது? – லக்னோ (உ.பி)
===============================
90) ஐ.நா.வின் அகதிகள் உயர் ஆணையம் வழங்கும் நான்சென் அகதிகள் விருது பெற்றுள்ளவர்? - Dr.இவான் அடர் அதகா (தென் சூடான்)
===============================
91)  ராஷ்ட்ரிய கேல் புரோத் சாஹன் புரஸ்கார் எனும் உயரிய விளையாட்டு மேம்பாடு விருது பெற்றவர்? – ஈஷா அவுட்ரீச்
===============================
92) காற்று மாசு கட்டுப்பாட்டு சாதனமான WAYU-ஐ (Wind Augmentation Purifying Unit) அக்டோபர் 15-இல் எங்கு நிறுவப்பட உள்ளது? – புதுடெல்லி
===============================
93) செப்டம்பர் 27 - 2018 உலக சுற்றுலா தினத்தின் கருப்பொருள்? – சுற்றுலா மற்றும் டிஜிட்டல் மாற்றம்
===============================
94) ஐ.நா.சுற்றுச்சூழல் சாம்பியன் ஆப் தி எர்த் விருது-2018 பெற்றவர்கள்? – பிரதமர் மோடி & இம்மனுவல் மேக்ரோன் (பிரஞ்ச் அதிபர்)
===============================
95) இந்திய இராணுவத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள தனியார் வங்கி? – ஐசிஐசிஐ வங்கி
===============================
96) இந்தியாவின் “அஸ்ட்ரா‘ ஏவுகணை”  சோதனை நடத்தப்பட்ட இடம்? – பந்திப்பூர் (ஒடிசா)
===============================
97) புழுபோன்ற அமைப்புடைய உலகிலேயே சக்திவாய்ந்த ரோபோவின் பெயர்? – மில்லிரோபோ (ஹாங்காங் விஞ்ஞானிகள்)
===============================
98) லோக்பால் அமைப்பின் தேடுதல் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்? - நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் (உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி)
===============================
99) ஸ்மார்ட் சிட்டி Expo இந்தியா – 2018 சர்வதேச மாநாடு எங்கு நடைபெற்றது? - ஜெய்ப்பூர் (புவனேஸ்வர் சிறந்த ஸ்மார்ட் சிட்டி விருது)
===============================
100) சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த தேசிய சித்தா தினம் எது? – டிசம்பர் 26 (அகத்தியர் பிறந்த நட்சத்திரத்தின்படி)
===============================
சேகர் சுபா டி
===============================

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...