Tuesday, 16 May 2023
TNPSC Zoology/விலங்கியல் *செல்*
Saturday, 23 July 2022
அறிவியலின் அலகுகள்
Saturday, 22 December 2018
*உயிரித் தொழில்நுட்பம்* *( Bio technology)*
உயிரித் தொழில்நுட்பம் (Biotechnology) என்பது நுண்ணுயிர்கள் மற்றும் நன்மை பயக்கும் மரபணுக்களைஅடிப்படையாகக் கொண்டுவேளாண்மை, மருத்துவம், சுற்றுச்சூழல்மற்றும் தொழிற்துறைகளில் பயன்படுத்தப்படும் நுட்பமாகும்.
அறிவியல் அடிப்படையில் உயிரினங்களில் மேற்கொள்ளப்படும் மாற்ற முயற்சிகளை உயிர் தொழில்நுட்பம் என்று கூறலாம்.
உயிரித் தொழில்நுட்பம் என்ற சொற்றொடர் 1970களில்உருவாக்கப்பட்டது என்றாலும் இந்நுட்பம் பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும்.
21ம் நூற்றான்டில் உயிரித் தொழில்நுட்பமானது அடிக்கடி மரபுப் பொறியியலுடன் சுட்டியனுப்பப்படுகின்றது. எனினும் இந்த சொல் மிக அகலமாக எல்லைகளைக் கொன்டது. மனித இனத் தேவைகளுக்காக உயிரினங்களில் சிறுமாற்றஞ்செய்யப்பட்ட நடைமுறை வரலாற்றை கொண்டது.
உள்நாட்டு பயிர்களின் தரத்தை அதிகரிக்க செயற்கைத் தேர்வு, மற்றும் கலப்பின முறை தொழில்நுட்பங்கள் பயன் படுத்தப்பட்டுள்ளன.
உயிரித் தொழில்நுட்பத்தின் அனைத்து உபயோகங்களும் உயிரியல் பொறியியலை தழுவியது.
நவீன அணுகுமுறையின் புதிய உத்திகளின் காரணமாக பாரம்பரிய தொழிற்சாலைகள் புதிய பயன்களை பெறுகின்றன.
இவைகள் உற்பத்திப்பொருள்களின் தரத்தை மேம்படுத்தவும் உற்பத்தியை அதிகரிக்கவும் பயன் படுகின்றன.
1970ம் ஆண்டுக்கு முன்பாக உயிரித் தொழில்நுட்பம் பெரும்பாலும் உணவு தயாரித்தல் மற்றும் வேளாண்மை துறைகளில் மட்டுமே பயன்பட்டது.
1970க்கு பின்பு மேற்கத்திய அறிவியல் சார் நிறுவனத்தால் உயிரித் தொழில்நுட்பம் பெரிதும் பயன்படுத்தப் பட்டது.
உயிரித் தொழில்நுட்பத்தில் மரபிழைச் சீரமைப்பு நுட்பம், திசு வளர்த்தல் மற்றும் கிடைமட்டமான மரபணு இடமாற்றம் ஆகிய உத்திகள் அடங்கும்.
உயிரித் தொழில்நுட்பமானது மரபியல், மூலக்கூறு உயிரியல், உயிர் வேதியியல், கருவியல் மற்றும் உயிரணு உயிரியல் ஆகிய துறைகளை ஒருங்கிணைத்தது. மேலும் இவைகள் வேதிப் பொறியியல் மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறைகளுடன்ம் இணைந்திருக்கும்.
Friday, 2 November 2018
*6,7,8 Science*
6th,7th,8th Science Notes pdf
For download
👇👇👇👇👇
6th Science
7th Science
8th Science
Sunday, 28 October 2018
பொது அறிவியல் பகுதி
பொது அறிவியல் பகுதி
இயற்பியல்
வேதியியல்
தாவரவியல்
விலங்கியல்
அனைத்தும் ஒரே pdf ல்
For Download
Friday, 13 July 2018
*மரபும்_பரிணமாமும்*
* மெண்டல் தோட்டப் பட்டாணி (பைசம் சட்டைவம்) செடியில் 7 வகையான மாற்று உருவ வேறுபாடுகளை கண்டறிந்தார்.
* ஆதி மனிதன் தோன்றியது - ஆப்பிரிக்கா
* பாரம்பரியத் தன்மைக் கொண்டது - மரபணு மாற்றம் செய்யப்பட்ட விந்தணு
* இயற்கைத் தேர்வு கோட்பாட்டை வெளியிட்டவர் - சார்லஸ் டார்வின்
* உடற்செல் ஜீன் சிகிச்சை முறை என்பது உடற்செல்லில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
* பண்பு கடத்தலில் பங்கு பெறும் மரபுப் பொருள் - DNA
* பாரம்பரிய கடத்துதலை முதன்முதலாக வெளியிட்டவர் - கிரிகர் ஜோகன் மெண்டல்
* ஒரு பண்பின் இரு வேறுபட்ட பண்புகளைக் கொண்டுள்ள ஜீன் அமைப்புத் தன்மை - அல்லீல்கள்
* உயிரித் தொழில்நுட்ப முறையில் பெறப்படும் வைட்டமின் டி12 குணப்படுத்தும் நோய் - பெர்னீயஸ் இரத்த சோகை.
* உடலுறுப்புப் பயன்பாடு பற்றிய விதியை விளக்கியவர் - லாமார்க்
* உடல் மூலச் செல்கள் எவற்றில் இருந்து பெறப்படுகிறது? - எலும்பு மஜ்ஜை
* வைரஸ்களுக்கு எதிரான புரதம் - இன்டர்பெரான்
* நைட்ரஜன் நிலைநிறுத்தப் பயன்படுவது - நிஃப் ஜீன்
* டி.என்.ஏ.வின் வெட்டப்பட்ட துண்டங்களை ஒட்ட வைக்கப் பயன்படும் மூலக்கூறு பசை - DNA லிகேஸ்
* வினிகர் உற்பத்தி செய்யப் பயன்படும் அமிலம் - அசிட்டிக் அமிலம்
* ஸ்டிராய்டுகள் - லிப்பிடுகளிலிருந்து பெறப்பட்டவைகளாகும்.
* புற்று நோய்க்கு எதிராக பயன்படும் ஓரினச் செல் எதிர்ப்பு பொருள் - மானோ குளோனியல் எதிர்ப்புப் பொருள்.
* இன்சுலினை உற்பத்தி செய்யும் செல்கள் - பீட்டா செல்கள்.
* இரத்த குளுக்கோஸ் அளவை கணக்கிடப் பயன்படுவது - உயிரி உணரி
* உயிரியல் கணிப்பொறிகளை உருவாக்கப் பயன்படுவது - உயிரிச்சிப்புகள்
* அல்லீல் என்பது ஒரே ஜீனின் மாற்றுவெளிப்பாடு ஆகும்.
* அல்லீலோ மார்புகள் என்பது அல்லீல்களுடைய எதிர்ப்பண்பமைப்பு ஆகும்
* ஜூன் காரணிகள் இயற்பியல் சார்ந்த பாரம்பரியக் காரணிகள் ஆகும்.
* புறத்தோற்ற பண்புகளுக்கு பீனோடைப் என்று பெயர்
* உடலுறுப்பு பயன்பாடு விதியை கூறியவர் - ஜீன் பாப்தீஸ் லாமார்க்
* ரெஸ்ட்ரிகீன் எண்டோ நியூக்ளியேஸ் வரையறை நொதிகள் - னுயேயு வெட்ட உதவுகிறது
* மூலச் செல் என்பது - (மாறுபாடு அடையாத செல் குழுமம்)
* நீரிழிவு நோய் இன்சுலின் செலுத்துதல் மூலம் குணமடைகிறது
* உயிரியல் வினையூக்கி என்றழைக்கப்படுபவை - நொதிகள்
* மனித சிற்றினத்தின் பெயர் - ஹோமோசெபியன்
* மனித முன்னோடிகள் - ஹோமினிட்டுகள்
* DNA தொழில் நுட்பம் - மரபுப் பொறியியல் என்றழைக்கப்படுகிறது.
* மெண்டலின் ஒரு பண்பு கலப்பு விகிதம் - 3:1
Saturday, 16 June 2018
*செல்*
* செல் என்பது உயிரினங்களின் அடிப்படை அமைப்பும், செயல் அலகும் ஆகும்.* வெறும் கண்களால் செல்லைப் பார்க்க முடியுமா? முடியாது
* நம் கண்களால் பார்க்க முடிந்த பொருள்களை விட அளவில் மிகச் சிறியது. ஆகவே அதை நேரடியாக காண முடியாது.
* பொருள்களை கண்ணாடி வில்லையில் வைத்து அளவில் பெரியதாகக் காண்பதற்குப் பயன்படுத்தும் கருவி - நுண்ணோக்கி
* செல்லை நேரடியாக காண நுண்ணோக்கி (Microscope) எனும் அறிவியல் கருவி பயன்படுகிறது.
* மனித உடல் மட்டுமல்லாமல், தாவரங்கள், விலங்குகள் போன்ற உயிரினங்களும் செல்களால் ஆனவைதான்.
* முதன் முதலில் செல்லைப் பார்த்தவர் - கண்ணாடிக் கடைக்காரரான இராபர்ட் ஹூக்
* செல்லுலா எனும் இலத்தீன் மொழிச் சொல்லுக்கு ஒரு சிறிய அறை என்று பெயர்
* அந்த சிறிய அறைக்கு இராபர்ட்ஹூக் செல் என்று கி.பி. 1665 பெயரிட்டார்.
* செல்லின் உட்கருவைக் கண்டறிந்தவர் - இராபர்ட் பிரெளன்
* செல்லுக்குள்ளே ஒரு தனி உலகம் இருப்பதை இராபர்ட் பிரெளன் கண்டறிந்தார்.
* பன்னிரண்டு அல்லது பதின்மூன்று உள்ளுறுப்பு உறுப்பினர்கள் சேர்ந்து இரகசியமாகப் பணியாற்றும் குட்டித் தொழிற்சாலைதான்செல்
* தாவர, விலங்கு இரண்டுக்கும் செல்கள் ஒரே மாதிரியாக இருக்காது.
* பாக்டீரியா, சில பாசிகள் போன்றவை ஒரே செல்லினால் ஆனவை.
* செல்களின் உள்ளே சவ்வினால் சூழப்பட்ட நுண் உறுப்புகள் இல்லை.
* சவ்வினால் சூழப்பட்ட நுண் உறுப்புகள் இல்லாத தெளிவற்ற உட்கரு இல்லாத உட்கரு மட்டுமே கொண்ட செல்லைபுரோகேரியாட்டிக் செல் என்று அறிஞர்கள்
அழைக்கிறார்கள். அதாவது எளிய செல்.
* புரோகேரியாட்டிக் செல்லுக்கு எடுத்துக்காட்டு - பாக்டீரியா
* யூகேரியாட்டிக் செல் என்பது செல்லின் வெளிச்சுவர் மற்றும் சவ்வினால் சூழப்பட்ட உட்கரு உட்பட நுண் உறுப்புகள் அனைத்தும்கொண்ட செல்.
* யூகேரியாட்டிக் செல் ஒரு முழுமையான செல். தாவர, விலங்கு செல்கள் இந்த வகையைச் சார்ந்தவை.
* விலங்கு செல்லைச் சுற்றியுள்ள படலம் - பிளாஸ்மா படலம்.
* செல்லுக்கு வடிவம் கொடுப்பவை - பிளாஸ்மா படலம்.
* பிளாஸமா படலத்திற்கு உள்ளே இருக்கும் கூழ் - புரோட்டோபிளாசம்.
* புரோட்டோபிளாசம் - சைட்டோபிளாசம், செல்லின் உட்கரு ஆகிய இரண்டையும் உள்ளடக்கியவை.
* புரோட்டோபிளாசம் என்று பெயர் இட்டவர் - ஜே.இ. பர்கின்ஜி.
* புரோட்டோ என்றால் முதன்மை
* பிளாசம் என்றால் கூழ்போன்ற அமைப்பு என்று பொருள்.
* பிளாஸ்மா படலத்துக்கும் உட்கருவுக்கும் இடைப்பட்ட பகுதி சைட்டோபிளாசம்.
* சைட்டோபிளாசத்துக்குள் உட்கரு, இதர நுண்ணுறுப்புகள், புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகள் காணப்படுகின்றன.
* செல்லின் கட்டுப்பாட்டு மையம் - உட்கரு(நியூக்ளியஸ்)
* உட்கருவின் வடிவம் கோள வடிவம்.
* உட்கருவில் காணப்படுபவை - உட்கருச்சாறு, உட்கருச்சவ்வு, உட்கரு மணி(நியூக்ளியோலஸ், குரோமேட்டின் வலைப்பின்னல்ஆகியவை காணப்படுகின்றன.
* உட்கரு ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மரபு சார்ந்த பண்புகளை எடுத்துச் செல்கிறது.
* செல்லின் சுவாசம் மைட்டோகாண்ட்ரியா
* மைட்டோகாண்ட்ரியா உண்ணும் உணவை ஆற்றலாக மாற்றுகிறது.
* செல்லின் ஆற்றல் மையம் (Power House of the Cell) - மைட்டோகாண்ட்ரியா.
* கோல்கை உறுப்புகள் குழல் குழலா காணப்படும்.
* உணவு செரிமானம் அடைய நொதிகளைச் சுரப்பதும், லைசோசோம்களை உருவாக்குவது - கோல்கை உறுப்புகள்.
* உண்ணும் உணவிலிருந்து புரதச் சத்தைப் பிரித்து எடுத்துச் செல்லுக்கும். உடலுக்கும் வலு சேர்ப்பது கோல்கை உறுப்புகள்.
* தாவர செல்லில் கோல்கை உறுப்புகளை டிக்டியோசோம்கள் என அழைக்கப்படுவார்கள்.
* செல்லுக்கு உள்ளே இருக்கும் பொருள்களை ஒரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்வது - எண்டோபிளாச வலை.
* ரிபோசோம்கள் புள்ளி புள்ளியாக காணப்படும்.
* செல்லின் புரதத்தொழிற்சாலை - ரிபோசோம்கள்
* புரதத்தை உற்பத்தி செய்வது ரிபோசோம்கள்.
* லைசோசோம்கள் உருண்டையா மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
* செல்லின் காவலர்கள் லைசோசோம்கள்.
* செல்லின் தற்கொலைப் பைகள் - லைசோசோம்கள்.
* செல்லின் உள்ளே செல்லும் நுண் கிருமிகளை கொல்லுவது - லைசோசோம்கள்.
* விலங்கு செல்லில் மட்டுமே காணப்படுபவை - சென்ட்ரோசோம்
* சென்ட்ரோசோம் உட்கருவிற்கு அருகில் நுண்ணிய குழல் மற்றும் குச்சி வடிவில் காணப்படும்.
* சென்ட்ரோசோம் உள்ளே சென்ட்ரியோல்கள் உள்ளன.
* செல் பிரிதல் அதாவது புதிய செல்களை உருவாக்குவது சென்ட்ரோசோம்.
* செல் பிரிதலுக்கு உதவுகிறது சென்ட்ரோசோம்.
* வெளிர் நீலநிறத்தில் ஒரு குமிழ் மாதிரி காணப்படுபவை - நுண் குமிழ்கள்
* செல்லின் உள்ளே அழுத்தத்தை ஒர் மாதிரி வைத்திருப்பதும், சத்துநீரைச் சேமிப்பதும் - நுண் குமிழ்கள்.
* தாவர செல்லில் சென்ட்ரோசோம் எனும் நுண்ணுறுப்பு இல்லை.
* விலங்குகளைவிடத் தாவரம் இறுகி இருப்பதற்குக் காரணம், தாவரங்களின் செல்சுவர் எனும் அமைப்பாகும்.
* செல்லுக்கு வடிவத்தைத் தரும் வெளியுறை செல்சுவர்.
* செல்சுவர் செல்லுலோசினால் ஆனது.
* செல்லின் உள் உறுப்புகளைப் பாதுகாப்பதும், செல்லுக்கு வடிவம் தருவதும் செல்சுவரின் பணி.
* தாவர செல்லுக்கு செல்சுவர் உண்டு
* விலங்கு செல்லுக்கு செல்சுவர் இல்லை
* தாவர செல்லுக்கு கணிகங்கள் உண்டு
* விலங்கு செல்லுக்கு கணிகங்கள் இல்லை.
* தாவர செல்லுக்கு சென்ட்ரோசோம் இல்லை
* விலங்கு செல்லுக்கு சென்ட்ரோசோம் உண்டு.
* தாவர செல்லின் நுண் குமிழ்கள் அளவில் பெரியவை.
* விலங்கு செல்லின் நுண் குமிழ்கள் அளவில் சிறியவை.
* கணிகங்கள் தாவர செல்லுக்கே உரிய நுண்ணுறுப்பு ஆகும்.
* கணிகங்களை நிறமிகளின் அடிப்படையில் மூன்றாகப் பிரிக்கலாம்.
* தாவர ஒளிச்சேர்க்கைக்கு உதவுவது, மலர் மற்றும் கனிகளுக்கு வண்ணமளிப்பது கணிகங்களின் பணியாகும்.
* குளோரோபிளாஸ்ட் (பசுங்கணிகம்) காணப்படும் நிறமி - குளோரோஃபில் - பச்சை நிற நிறமி.
* குளோரோபிளாஸ்ட் பணி - தண்டு, இலைகளுக்கு பச்சை வண்மம் தருதல்.
* குரோமோபிளாஸ்ட்டில் காணப்படும் நிறமி கரோட்டின் - ஆரஞ்சு நிற நிறமி, சாந்தோஃபில் - மஞ்சள் நிற நிறமி.
* குரோமோபிளாஸ்ட் பணி - பூக்கள், கணிகளுக்கு வண்ணம் தருதல்
* லியூக்கோபிளாஸ்ட் பணி - தாவரத்தின் வேர்பகுதி மற்றும் தரைகீழ் தண்டுகளில் காணப்படுதல்.
* செல் ஒவ்வொன்றும் ஒரு குட்டித்தொழிற்சாலை போன்றது.
* நமது மூளையில் இலட்சக்கணக்கான செல்கள் உள்ளன.
* மிகவும் நீளமான செல் நரம்புசெல்
* நுண் குமிழ்கள் பெரிய அளவில் காணப்படும் செல் வெங்காயத்தோலின் செல்
* இரத்த சிவப்பணுக்கள் உட்கரு இல்லாத விலங்குசெல்கள் ஆகும்.
* விலங்கு செல்லில் மிக கடினமான செல் எலும்புசெல் ஆகும்.
* விலங்கு செல்லில் மிக நீளமான செல் நரம்புசெல் ஆகும்.
* இரத்தம் சிவப்புச் செல்களால் ஆனவை என்பதை உலகிற்குக் கண்டுபிடித்து அறிவித்தவர் ஆண்டன் வான் லூவன்ஹாக் (1675).
* எலும்புகள் ஈரப்பசையற்ற சிறப்பு வகைச் செல்களால் ஆனவை.
* மனித உடலில் உள்ள செல்களின் எண்ணிக்கை சுமார் 6,50,00,000 ஆகும்
Monday, 11 June 2018
*பாக்டீரியா_வைரஸ்-தாவர_விலங்கு நோய்கள்:-*
பாக்டீரியா பற்றிய சில தகவல்கள்:-
🔥 பாக்டீரியா கண்டுபிடித்தவர் - ஆண்டன் வான் லூன்ஹாக்
🔥 பாக்டீரியா என்பது பாக்டீரியான் என்ற கிரேக்க சொல்லில் இருந்து வந்தது
🔥 பாக்டீரியா செல் சுவர் கேப்சிட்
🔥 பாக்டீரியா வடிவம்:
1. காக்கஸ் - கோள வடிவம் (எ.கா.) மைக்ரோக்காக்கஸ், லூக்கோ நாஸ்டாக்
2. பேசில்லஸ் - கோல் வடிவம் (எ.கா.) லாக்டோபேசில்லஸ்
3. ஸ்பைரில்லம் - சுருள் வடிவம் (எ.கா.) லெப்டேஸ்பைரா
4. லிப்ரியோ - கமா வடிவம் (எ.கா.) விப்ரியோ காலரே
🔥 பாலை புளிக்க செய்யும் பாக்டீரியா - லேட்டோபேசிலஸ்
🔥 மாவு புளிக்கச் செய்யும் பாக்டீரியா - லூகோநாஸ்டாக்
🔥 பாக்டீரியா ஏற்படும் நோய்கள்:-
1. டிப்தீரியா - கிரையோ பாக்டீரியம் டிப்தீரியே
2. நிமோனியா - டிப்ளோ காக்கஸ்
நிமோனியா
3. காசநோய் - மைகோ பாக்டீரியம் டியூபர் குளோசிஸ்
4. பிளேக் - யெர்சினியா பெஸ்டிஸ்
5. ரணஜென்னி (டெட்டனஸ்)
கிஹாஸ்டிரிடியம் டெட்டானி
6. டைபாய்டு - சால்மோனேலியா டைபி
7. காலரா - விப்ரியோ காலரே
8. கக்குவான் இருமல் - ஹீமோபிலியஸ் பெர்டூசுயஸ்
9. தொழு நோய் - மைகோ பாக்டீரியா லெப்ரே
🔥தாவர நோய்கள்:
1. எலுமிச்சை - சாந்தோமோனாஸ் சிட்ரி
2. நெல் - சான்தோமோனாஸ் ஒரைசே
3. பருத்தி - சான்தோமோனாஸ்
மால்வாசியாரம்
4. தக்காளி - சூடோமோனாஸ்
5. உருளை - ஸ்ட்ரோப்டோமைசிஸ்
🔥விலங்கு நோய்கள்:-
1. ஆன்திராக்ஸ் - பேசிலஸ் ஆன்தராசிஸ்
வைரஸ் பற்றிய சில தகவல்கள்:-
🎯 வைரஸ் கண்டறிந்தவர் - டிமிட்ரி இவனோவ்ஸ்கி
🎯 முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் - புகையிலை மொசைக் வைரஸ்
🎯 வைரஸ் புரத உறை - கேப்சிட்
🎯 ஒரு முழுமையான வைரஸ் - விரியான்
🎯 புகையிலை மொசைக் வைரஸ் வடிவம் - உருளை வடிவம்
🎯வைரஸ் வடிவங்கள்:
1. கோளவடிவம் - H.I.V வைரஸ், இன்ஃபுளுயன்சா
2. நீள் உருளை வடிவம் - புகையிலை மொசைக் வைரஸ்
3. தலைப் பிரட்டை வடிவம் - பாக்டீரியோஃபெஜ்
4. செங்கல் வடிவம் - அம்மை நோய் வைரஸ்
🎯 பாக்டீரியா தாக்கும் வைரஸ் - பாக்டீயோஃபெஜ்
🎯 தாவரங்கள் தாக்கும் வைரஸ்:
1. புகையிலை - மொசைக் நோய்
2. வாழை - உச்சிக் கொத்து நோய்
3. உருளை - இலை சுருள் நோய்
4. பீட்ரூட் - மஞ்சள் நோய்
🎯 விலங்கு வைரஸ் நோய்கள்:
1. கோழி - அம்மை நோய்
2. மாடு - கோமாரி நோய்
🎯 மனிதர்கள் வைரஸ் நோய்கள்:-
1. HIV - AIDS
2. H1 N1 - பன்றி காய்சல்
3. ராபிஸ்
4. சின்னம்மை
5. பெரியம்மை
6. சாதரண சலி - ரேனோ வைரஸ்
Monday, 19 February 2018
அறிவியல் விதிகள்
விதிகள் தந்தவர்கள் பற்றிய சில தகவல்கள்:-
மும்மை - டோபர்னீர்
எண்ம - நியூலாண்ட்
ஆவர்தன - மெண்டலீப்
நவீன ஆவர்தன - மோஸ்லே
திட்ட விகித - கே. லூசாக்
மிதத்தல் - அர்க்கமிட்டீஸ்
மடங்கு விகித - ஜான் டால்டன்
பொருண்மை அழியா - லவாய்சியர்
தனித்து பிரிதல் - மென்டல்
நீச்சல் - ஆம்பியர்
தக்கை திருகு - மாக்ஸ்வெல்
மின்காந்த தூண்டல் - பாரடே
கோள்கள் இயக்கு - கெப்ளர்
வெப்ப - ஜேம்ஸ் பிரஸ்காட் ஜூல்
ஆற்றல் அழிவின்மை - ராபர்ட் மேயர்
புவி ஈர்ப்பு - நியூட்டன்
குறிப்பு:
ஒவ்வொன்றிலும் "விதி" சேர்த்து கொள்ளவும்.
துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்
துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...
-
*🔥முத்தமிழ் TNPSC பயிற்சி மையம் - சேலம்🔥* 🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅 *✨ஊர்களும் மரூஉ பெயர்களும்✨* 🚧 புதுக்கோட்டை - புதுகை 🚧 தஞ்சாவூர் -...
-
[1] பாஞ்சாலி - மடப்பிடி கோப்பெருந்தேவி- மடமொழி கண்ணகி - மடக்கொடி 2. பாஞ்சாலி - மடப்பிடி கோப்பெருந்தேவி- மடமொழி கண்ணகி - மடக்கொட...
-
*TNPSC GK* *புவிசார் குறியீடு பெற்றுள்ள தமிழ்நாடு பொருட்களின் பட்டியல் 2023* *புவிசார் குறியீடு* ஒரு புவிசார் குறியீடானது ஒரு குறிப்பிட்ட பு...