Showing posts with label தினம். Show all posts
Showing posts with label தினம். Show all posts

Tuesday, 15 August 2023

*இன்று ஆகஸ்ட் 13,*_*சர்வதேச இடது கை பழக்கமுடையோர் தினம்.*

*_இன்று ஆகஸ்ட் 13,_*


சர்வதேச இடது கை 
பழக்கமுடையோர் தினம்....





இடது கை பழக்கமுள்ளவர்கள் விவேக திறன்மிக்கவர்கள்....

பிறந்த குழந்தைகளில் சிலருக்கு வளர் இளம்பருவத்தின் போது இயற்கையாகவே இடது கை பழக்கம் இருக்கலாம். 

இந்த பழக்கம் உள்ளவர்களின் வளர்ச்சி பருவத்துக்கு ஏற்ப விவேகத் திறனுடையவர்களாக இருப்பார்கள் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

உலகளவில் பெரும்பாலோர் எல்லா பணிகளையும் வலது கையால் மேற்கொள்வதனால்தான், அனைத்து பொருட்களும் வலது கை பழக்கம் உடையவர்களை கவனத்தில் கொண்டே தயாராகிறது. 

வீடுகளில் கதவுகளைத் திறப்பது, தண்ணீர் குழாய்களைத் திறப்பது, தற்காலத்தில் கணினியின் மவுஸ் பிரயோகம் என அனைத்தும் வலது கை பாவனைக்கேற்ற முறையில்தான் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், பிறவிலேயே சிலருக்கு இடது கை பழக்கம் ஏற்பட்டிருக்கும். 

இடது கை பழக்கம் உடையவர்கள் கத்தரிகோல், தாழ்ப்பாள், பீரோ கைப்பிடி, கிடார், கருத்தரங்குகளில் இருக்கையுடன் இணைக்கப்பட்டிருக்கும் மேசை உள்ளிட்ட பொருட்களை கையாளும்போது பெரும் சிரமத்தை எதிர்கொள்வார்கள்.

இந்த பழக்கத்தை மாற்ற முயற்சிக்கும்போது பேச்சிலும், பார்வையிலும் குறைபாடுகள் ஏற்படலாம் என்கிறது ஓர் அறிவியல் ஆய்வு. 

நவீன விஞ்ஞான விளக்கங்களின்படி இடது கை பழக்கமுள்ளோர் விவேகத்திறன் கூடியவர்களாகவும் இக்கட்டான சூழ்நிலையிலும் சட்டென்று திடமான முடிவுகளை எடுக்கும் திறன் படைத்தவர்களாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. 

தேசத்தந்தை மகாத்மா காந்தி, அமெரிக்க அதிபர்களான ரொனால்டு ரீகன், கிளின்டன், புஷ், ஒபாமா, டேவிஸ் டென்னிஸ் கோப்பையைத் தொடங்கிய டேவிஸ், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், ஹிந்தித் திரைப்பட நட்சத்திரம் அமிதாப்பச்சன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் இடது கை பழக்கம் உடையவர்கள். 

இவர்களது சாதனைகளை பாராட்டும் விதத்திலும், இவர்கள் பயன்பாட்டுக்கு தக்கவாறு பொருட்களை தயாரிக்க வலியுறுத்தியும் ஆண்டுதோறும் ஆகஸ்டு 13-ம் தேதி, சர்வதேச இடது கை பழக்கம் உடையோர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

இடது கை பழக்கம் பிறப்பிலேயே சிலருக்கு ஏற்படுகிறது. 

பெருமூளை, சிறுமூளை மற்றும் நீள்வளைய மைய விழையம் (மெடுல்லா ஆப்லங்கட்டா) என மூன்று பகுதிகளை மனித மூளை கொண்டுள்ளது. 

இதில் பெருமூளை இரண்டு அரைக்கோள வடிவில் உள்ளது. பெரும்பாலானோருக்கு இடதுபக்க அரைக்கோளம் சற்று மேலோங்கியதாக இருக்கும். 

இதனால் அவர்களுக்கு வலதுபக்க உறுப்புகள் சிறப்பாக செயல்படும். ஒரு சிலருக்கு வலதுபக்க அரைக்கோளம் மேலோங்கி இருப்பதால் இடதுபக்க பழக்கம் ஏற்படுகிறது. 

இப்படி இயற்கையாக அமைந்ததை மாற்ற முயற்சித்தால் அவர்களது கை எழுத்து சிதைவதுடன், பின்னாளில் சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

தனித்துவமான போக்கினைக் கொண்ட இடது கை பழக்கம் உள்ளவர்களால் மூளையின் இரண்டு பாகத்துக்கும் தகவல்களை விரைவில் பரிமாறிக் கொள்ள முடியும். 

நுட்பமான பணிகளை மேற்கொள் வதிலும், விளையாட்டுத் துறையிலும் முன்னிலையில் இருப்பார்கள, விவாதத் திறனும், விமர்சன ஆற்றலும் மிக்கவர்களாக இருப்பார்கள் என சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன...


🌷🌷

Saturday, 1 July 2023

ஜூலை 1-இல்‌ தேசிய மருத்துவர்‌ தினம்‌

*இக்குழுவில் பயணிக்கும் மருத்துவர்கள் அனைவருக்கும் தேசிய மருத்துவர்கள் தின நல்வாழ்த்துகள்*
@⁨+91 95005 86661⁩
---------------------------------------
*எதிர்காலத்தில் என்னவாக விருப்பம் என குழந்தைகளைக்‌ கேட்டால்‌ பெரும்பாலானோரின்‌ பதில்‌ மருத்துவர்‌ என்பதாகவே இருக்கும்‌.*

*ஒட்டுமொத்த சமூகமும்‌/ஒரு சேர கைகூப்பி வணங்கும்‌ உன்னதப்‌ பணியை மேற்கொள்ளும்‌ மருத்துவர்களால்‌ காப்பாற்‌றப்படுவது மனிதர்களின்‌ உயிர்கள்‌ மட்டுமல்ல, மாறாக சமுதாயத்தின்‌ மனித ஆற்றலும்தான்‌.*

*அவர்களது அளப்பரிய சேவையைப்‌ போற்றும்‌ விதமாக ஆண்டுதோறும்‌ ஜூலை 1-இல்‌ தேசிய மருத்துவர்‌ தினம்‌ கடைப்பிடி க்கப்படுகிறது.*

*பி.சி.ராய்‌ எனும்‌ மாமனிதர்‌....*

*இந்திய மண்ணிலிருந்து உருவான எண்ணற்ற மருத்‌துவர்களில்‌ தனித்துவமான ஒருவராகத்‌ திகழ்ந்தவர்தான்‌ பி.சி.ராய்‌ என்றழைக்கப்படும்‌ பிதான்‌ சந்திரா ராய்‌.*

*இவர்‌ புகழ்பெற்ற/மருத்துவராகவும்‌, மேற்கு வங்கத்தின்‌ இரண்‌டாவது முதலமைச்சராகவும்‌ இருந்தவர்‌.*

*வெறுமனே மருத்துவத்தை மட்டும்‌ பார்க்காமல்‌, வறுமையில்‌ உழன்ற மக்களின்‌ பசியையும்‌, பிணியையும்‌ ஒருசேர தீர்த்தவர்‌.*

*தனது சொந்த வீட்டை ஏழைகளுக்கான மருத்துவ மனையை அமைக்க வழங்கியதுடன்‌, அவர்‌களுக்கு இலவசமாக மருத்துவச்‌ சேவையும்‌ அற்றினார்‌.*

*அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளில்‌ மார்ச்‌ 30-ஆம்‌ தேதியே மருத்துவர்‌ தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.*

*அனால்‌, இந்தியாவில்‌ டாக்டர்‌ பி.சி.ராயின்‌ நினைவைப்‌ போற்றும்‌ வகையில்‌ அவரது பிறந்த நாளான ஜூலை 1-ஆம்‌ தேதி தேசிய மருத்துவர்‌ தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.*

*தற்கால சூழலில்‌ மருத்துவத்‌ துறையைப்‌ பொருத்தவரை பல வளர்ந்த நாடுகளைக்‌ காட்டிலும்‌ இந்தியா மேம்பட்டு உள்ளது.*

*கி. மு. 6 -ஆம்‌ நூற்றாண்டில்‌ இந்தியாவின்‌ மருத்துவத்‌துறை முன்னோடியான சுஷ்‌ருதர்‌ ஒரு நோயாளியின்‌ உடல்‌நலக்‌ குறைவுக்கு காரணம்‌ கண்டுபிடிக்கும்‌ முயற்சியில்‌ இருந்தபோது, அந்த நோயாளியின்‌ சிறுநீரை எறும்புகள்‌ மொய்த்துக்‌ கொண்டி ருந்ததைக்‌ கவனித்தார்‌.*

*அதனைத்‌ தொடர்ந்து மேற்‌கொண்ட ஆராய்ச்சியின்‌ விளைவாக அந்த நோயாளியின்‌ சிறுநீரில்‌ சர்க்கரையின்‌ அளவு அதிகமாக இருந்ததையும்‌, அதனால்‌ நோயாளிக்கு உடல்‌ நலக்குறைவு ஏற்பட்டு இருந்ததையும்‌ கண்டறிந்தார்‌.*

*அவரது ஆய்வுகள்தான்‌ சர்க்கரை நோயைக்‌ கண்டறிவதற்கு வித்திட்டது.*

*அது மட்டுமல்லாது, அறுவை சிகிச்சையிலும்‌, ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சையிலும்‌ அவர்‌ முன்னோடியாக விளங்கியிருக்கிறார்‌.*

*அவரது மருத்துவ முறைகள்‌ காலப்போக்‌கில்‌ சரியான முறையில்‌ பாதுகாக்கப்படாமலும்‌, மழை, வெள்ளம்‌ போன்ற இயற்கை சீற்‌றத்தினாலும்‌, இந்தியாவின்‌ மீதான அந்நிய படையெடுப்பினாலும்‌ காணாமல்‌ மறைந்துவிட்டன.*

*அதன்பின்னர்‌ பல நூறு ஆண்டுகள்‌ கழிந்து, ஆங்கில வழி மருத்துவம்‌ இந்‌தியாவில்‌ படிப்படியாக வளர்ந்து டாக்டர்‌ பி.சி.ராய்‌, டாக்டர்‌ குருசாமி போன்ற புகழ்‌ பெற்ற மருத்துவர்கள்‌ உருவெடுத்தனர்‌.*

*உலக நாடுகளை ஒப்பிடும்போது இந்திய மருத்துவர்கள்‌ ஆகச்‌ சிறந்த திறமைசாலிகள்‌.* 

*இதற்கு சர்வதேச நாடுகளே சான்றுரைத்துள்ளன.*

*அதிலும்‌, குறைந்த வசதிகளைக்‌ கொண்டு சிறந்த மருத்‌துவப்‌ பணியினை இந்திய மருத்துவர்கள்‌ ஆற்றி வருகின்றனர்‌.*

*நாடு சுதந்திரம்‌ அடையும்போது சராசரி இந்தியரின்‌ ஆயுள்காலம்‌ 45 ஆண்டுகள்‌. அது தற்போது 67 ஆண்டுகளாக உயர்ந்துள்‌ளது.*

*மேலும்‌, பேறுகால மரணங்கள்‌ குறைக்‌கப்பட்டுள்ளன.*

*குழந்தை மரணங்களும்‌ வளர்ந்த நாடுகளுக்கு இணையாக குறைக்‌கப்பட்டுள்ளன.*

*கடந்த 1981-இல்‌ 9.7 சதவீதமாக இருந்த குழந்தைகள்‌ இறப்பு விகிதம்‌ தற்போது ஆயிரத்துக்கு 1.4 சதவீதமாகக்‌குறைந்துள்ளது.*

*அதேபோன்று லட்சம்‌ பிரசவத்துக்கு 113 என்ற அளவில்‌ பேறு கால மரணங்களும்‌ குறைந்துள்ளன.*

*இவை அனைத்தும்‌ நம்முடைய மருத்‌துவர்களின்‌ திறமைக்கு சான்றாக விளங்குகிறது.*

*இந்திய மக்கள்‌ முன்னொரு காலத்தில்‌ வெளிநாடுகளுக்குச்‌ சென்று உயர்‌ சிகிச்சை பெறும்‌ சூழல்‌ இருந்தது.*

*தற்போது குறைந்த செலவில்‌ தரமான மருத்துவ சிகிச்சைகள்‌ உள்நாட்டிலேயே் கிடைப்பதால்‌ உலக நாடுகளிலிருந்து நோயாளிகள்‌ இந்தியாவுக்கு படையெடுக்கும்‌ நிலை எட்டப்பட்டுள்ளது.*

*சொல்லப்‌ போனால்‌, இந்தியா, மருத்துவ சுற்றுலா மையமாகவே விளங்கி வருகிறது.*

*இந்தச்‌ சாதனைகள்‌ அனைத்துக்கும்‌ மருத்துவர்களின்‌ பங்களிப்பே காரணம்‌.*

*தமிழக மருத்துவ கவுன்சிலில்‌ 1.20 லட்சத்துக்கும்‌ மேற்பட்ட மருத்துவர்கள்‌ பதிவு செய்து சேவையாற்றி் வருகின்றனர்‌.* 

*அவர்களில்‌ 18 ஆயிரத்துக்கும்‌ மேற்பட்டோர்‌ அரசு மருத்துவர்கள்‌.*

*சிறப்பு துறை மருத்துவர்கள்‌ 60 சதவீதத்துக்கும்‌ அதிகமாக உள்ளனர்‌.*

Sunday, 26 March 2023

March 26 _ லாரி பேஜ் google நிறுவனத்தை ஆரம்பித்த அமெரிக்கர் பிறந்த தினம்:- 1973 ,மார்ச், 26

💥 லாரி பேஜ் google நிறுவனத்தை ஆரம்பித்த அமெரிக்கர் பிறந்த தினம்:- 1973 ,மார்ச், 26





💥 லாரி பேஜ் அமெரிக்காவின் தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் கூகுள் நிறுவனத்தை தொடங்கியவர். 1998ஆம் ஆண்டு லாரி பேஜ்,சேர்ஜி பிரின் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது.

🌀🌀🌀🌀🌀🌀

Sunday, 25 December 2022

*December 25 - அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்த தினம்,*

♨️ *அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்த தினம்,*




1924 ,டிசம்பர் 25 ,                    
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் இந்திய பிரதமரும் ,பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த அரசியல்வாதியும் ஆவார்.  இவர் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள குவாலியரில் 1924 ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் நாள் பிறந்தார். இவர் மக்களவைக்கு ஒன்பது முறையும், மாநிலங்களவைக்கு இரண்டு முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் வெளியுறத் துறை அமைச்சராகப் பணியாற்றியவர். இவரது பணி காலத்தில் சாலை மற்றும் தொழில்நுட்பத் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெற்று முன்னேறியது.

Saturday, 24 December 2022

Dec_24/24-12-2022_*தேசிய நுகர்வோர் தினம்

_*"தேசிய நுகர்வோர் தினம்" நமக்கான அடிப்படை உரிமைகள்.... மறுக்கப்பட்டால் என்ன செய்யலாம்....?*_

*_24-12-2022_*
தேசிய நுகர்வோர் தினத்தை முன்னிட்டு இன்றைய பதிவில் நுகர்வோர் உரிமைகள் பற்றி சில தகவல்களை பார்க்கலாம்.






 *நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்* 

1986 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி இந்தியாவில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது. 

இதன் காரணமாகத்தான் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 24 அன்று நுகர்வோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 

இத்தினத்தின் முக்கிய நோக்கம் நுகர்வோருக்கு அவர்களின் உரிமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகும்.

 *நுகர்வோருக்கான உரிமைகள்* 

• தங்களுக்கு தேவையான பொருட்களை தேர்வு செய்யும்  உரிமை .

• ஆபத்து நிறைந்த பொருட்களில் இருந்து பாதுகாக்கப்படுவதற்கான உரிமை.

• பொருட்களின் தரத்தையும் செயல்பாடு பற்றியும் தெரிந்து கொள்வதற்கான உரிமை.

• நுகர்வோர் தங்களின் நலன் தொடர்பாக முடிவு எடுக்கும் போது கேட்கப்படும் உரிமை.

• நுகர்வோர் தங்களுக்கான உரிமைகள் மீறப்படும் சமயத்தில் அதற்கு தீர்வு பெறும் உரிமை.

• நுகர்வோர் கல்வியை கற்றுக் கொள்வதற்கான உரிமை.

 *நுகர்வோர் குறைதீர் ஆணையம்* 

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வந்த பிறகு தேசிய மாநில மற்றும் மாவட்ட அளவிலான நுகர்வோர் குறைதீர் ஆணையம் நிறுவப்பட்டது. 

இந்த ஆணையத்தில் இதுவரை 54,85,267 புகார்கள் இந்தியா முழுவதிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இங்கு பதிவு செய்யப்பட்ட புகார்களில் 90 சதவீதம் புகார்களுக்கு தீர்வுகளும் காணப்பட்டுள்ளது.

 *எப்போது புகார் அளிக்கலாம்?* 

• குறிப்பிடப்பட்ட எடையை விட குறைவான அளவு விற்பனை செய்தல்

• கலப்படம் நிறைந்த பொருள் விற்பனை செய்யப்படுதல்

• தேவையற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க செய்தல்

• குழந்தைகளை இலக்காக வைத்து தவறாக வழி நடத்தும் விளம்பரங்கள் செய்தல்

• பொருட்கள் காலவதியான பிறகும் விற்பனை செய்தல்

 *புகார் அளிக்கும் முறை* 

நுகர்வோர் தாங்கள் வாங்கி பயன்படுத்தும் பொருட்களில் தரம் மற்றும் சேவை குறைபாடு இருப்பதை உணர்ந்தால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி புகார் அளிக்க முடியும்.

புகார் அளிக்கும்போது மனுவில் புகார்தாரரின் பெயர், முகவரி, எதிர் மனுதாரரின் பெயர், அவரது முகவரி, தாங்கள் வாங்கிய பொருள் அல்லது சேவை, புகாருக்கான காரணம், பொருள் வாங்கிய ரசீது, நுகர்வோருக்கு ஏற்பட்ட இழப்பீட்டின் விவரம் போன்றவற்றை தெளிவாக குறிப்பிட்டு இருக்க  வேண்டும்.

 *புகார் கட்டண விபரம்* 

புகார் செய்யவும் வழக்கு தொடரவும் தகுதி இல்லாத காரணங்களை கொண்டு நுகர்வோர் குறைதீர் மன்றத்தை சிலர் அணுகியதாலும் இந்த சட்டத்தை வைத்து எதிர்மனுதாரரை மிரட்டியதாலும் இதனால் எதிர் தரப்பினருக்கு தேவையற்ற கால விரயம் மற்றும் செலவு ஏற்பட்டதாலும் 2006 ஆம் ஆண்டு முதல் புகார் அளிக்க கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த புகாருக்கான கட்டணம் நுகர்வோர் வாங்கிய பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது. அவை,

• 1 லட்சத்திற்கு மேல் 5 லட்சம் வரை 200 ரூபாய்

• 5 லட்சத்திற்கு மேல் 10 லட்சம் வரை 400 ரூபாய்

• 10 லட்சத்திற்கு மேல் 20 லட்சம் வரை 500 ரூபாய்

 *நுகர்வோர் நீதிமன்றம்* 

ஒவ்வொரு மாவட்டத்திலும் நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் அமைய பெற்றுள்ளன .அதேபோன்று சென்னை மயிலாப்பூரில் மாநில நுகர்வோர் நீதிமன்றம் அமைந்துள்ளது. 

மாவட்ட குறைத்தீர் மன்றத்தில் தங்கள் புகாருக்கு தீர்வு கிடைக்காத பட்சத்தில் நுகர்வோர் மாநில நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம்.

அங்கும் நுகர்வோருக்கு சரியான தீர்வு கிடைக்காவிட்டால் சென்னை உயர்நீதிமன்றத்தையோ அல்லது உச்சநீதிமன்றத்தையோ நுகர்வோர்கள் அணுகி அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நிவாரணத்தை பெற முடியும்.

 *மேலும் சில தகவல்கள்* 

• இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தினாலும் ஜம்மு காஷ்மீரில் இச்சட்டத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

• நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் பொதுத்துறை, தனியார் துறை, கூட்டுறவுத்துறை போன்றவைகளுக்கும் பொருந்தும்.

• ஒரு பொருளை வாங்கிய நுகர்வோர் அதனை லாபம ஈட்டும் நோக்கத்தில் விற்பனை செய்தால் அவர்களுக்கு இச்சட்டம் பொருந்தாது.

• ஒருவருக்கு இலவசமாக பொருட்கள் கொடுக்கப்பட்டு அதில் குறைபாடுகள் இருந்தால் அப்போதும் இந்த சட்டம் பொருந்தாது.

Thursday, 22 December 2022

December 22_டிசம்பர் 22 : இந்திய ஒன்றிய அரசு எந்திரத்தின் கருப்பு தினம்!

டிசம்பர் 22 : இந்திய ஒன்றிய அரசு எந்திரத்தின் கருப்பு தினம்!

22.12.2003-ல் வாஜ்பாய் தலைமையிலான BJP அரசு அரசு ஊழியர்களின் ஓய்வூதிய உரிமைகளை 100% பறித்த NPS-ற்கான ஓய்வூதிய அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்த கொடுந்துயர நாள் இன்று.

இச்சட்டத்திற்கு திமுக, விசிக, காங். உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

CPM, CPI, திரினாமுல் காங். உள்ளிட்டவை வலிமையாக எதிர்த்தன.

கட்சி நிலைப்பாட்டிற்காக நாடாளுமன்றத்தில் எதிர்த்து வாக்களித்த அஇஅதிமுக NPS-ஐப் பிரதியெடுத்து CPS என்ற பெயரில் முன்தேதியிட்டு தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தியது.

CPM இச்சட்டத்தை 100% எதிர்த்ததோடே தான் ஆட்சியிலிருந்த கேரளா, திரிபுரா & மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இறுதிவரை NPS-ஐ நடைமுறைப்படுத்தவே இல்லை.

கேரளாவில் காங். ஆட்சிப் பொறுப்பேற்றவுடனும், திரிபுராவில் BJP ஆட்சியைக் கைப்பற்றியவுடனும் NPS நடைமுறைக்கு வந்தது.

மேற்கு வங்கத்தில் ஆட்சிப்பொறுப்பேற்ற திரினாமுல் காங்கிரசும் CPM வழியில் இன்றுவரை NPS-ஐ நடைமுறைப்படுத்தவே இல்லை.

இச்சட்டத்தின் தீமையை உணர்ந்துள்ள காங்கிரஸ் தற்போது தான் ஆட்சிப் பொறுப்பேற்ற மாநிலங்களில் NPS-ஐ துணிவோடே இரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்துவிட்டது.

கேரளாவில் CPM தொடர்ந்து இரண்டாவது முறை ஆட்சிப் பொறுப்பேற்றும் இன்று வரை முன்பு காங். செய்த தவறைத் திருத்தி மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தாது காலம் தாழ்த்தி வருகிறது.

ஆம் ஆத்மி, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமதி, YSR காங்., உள்ளிட்ட கட்சிகள் மாநில ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் NPS-ஐ இரத்து செய்யும் நோக்கில் குழு அமைத்துள்ளன / அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

2016-ல் TNGEA & TNPTF நடத்திய காலவரையற்ற வேலைநிறுத்தத்தின் பலனாக, அஇஅதிமுக CPS-ல் இறந்த / ஓய்வுற்ற ஊழியர்களுக்கான தொகை ஒப்பளிப்பு அரசாணை வெளியிட்டதோடே, CPS-ஐ நீக்க வல்லுநர்குழு அமைத்தது. ஆண்டுக்கணக்கில் உறக்கத்திலிருந்த குழு ஒருவழியாக அறிக்கையைச் சமர்ப்பித்து மூன்றாண்டுகளுக்கும் மேலாகிறது.

ஆட்சிப் பொறுப்பேற்றால் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவருவேன் என்று கூறிய திமுக ஆட்சிக் கட்டிலேறி இரண்டாண்டுகள் கடந்த பின்னும் அதுகுறித்த எவ்வித நேரடி உறுதியளிப்பும் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் இன்றுவரை வெளியிடப்படவில்லை. சொல்லப்போனால், TNGEA, JACTTO-GEO என இரு மாநாட்டு மேடைகளில் உரையாற்றிய போதும் பழைய ஓய்வூதியத் திட்டம் என்ற சொல்லைக்கூட உச்சரிக்கவில்லை. மாறாக அவரது ஆட்சியின் நிதியமைச்சர் அவரது முன்னிலையிலேயே சட்டமன்றத்தில் NPS இரத்திற்கு எதிரான கருத்தைப் பதிவு செய்தார்.

திரு.ஸ்டாலினிற்குப் பிறகு கொரோனா பெருந்தொற்றின் பொருளாதார நெருக்கடியோடே முதல்வரான பல மாநில முதல்வர்கள் NPS-ஐ இரத்து செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அங்கெல்லாம் அம்மாநில அளவிலான NPS-ற்கு எதிரான தனித்த தொடர் போராட்டங்கள் உரிமையை மீட்டெடுத்துக் கொடுத்துள்ளன.

தற்போது கர்நாடகத்தில் பழைய ஓய்வூதியத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையோடே காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டிலும், CPS ஒழிப்பு என்ற ஒற்றைக் கோரிக்கையோடே பெரும்பான்மை அரசு ஊழியர் & ஆசிரியர்களின் இயக்கங்கள் உறுதியான போராட்டத்தை முன்னெடுத்தால் மட்டுமே அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களின் குடும்பங்களுக்கு விடியல் பிறக்கும்.

அதுவரையில் இறக்க உள்ள ஒவ்வொரு ஊழியரின் / ஆசிரியரின் குடும்பமும் இதுவரையில் இறந்த & ஓய்வுற்ற ஊழியரின் / ஆசிரியரின் குடும்பங்கள் போல இருளில் மூழ்கிக் கொண்டேதான் இருக்கும்.

இருளை எரித்து
விடியலைப் பிறப்பிக்கும்
தீக்குச்சி என்பது,
ஒன்றிணைந்து உயர்த்தும்
நமது கரங்களே!

_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_

Saturday, 17 December 2022

டிசம்பர் 17 _ ஓய்வூதியர் நாள் (Pensioners’ Day)

இன்று டிசம்பர் 17
ஓய்வூதியர் நாள் (Pensioners’ Day) உருவான வரலாறு எப்படி?!அறிவோம்!!





ஓய்வூதியர் நாள் (Pensioners’ Day), இந்தியாவில் ஆண்டு தோறும் டிசம்பர் 17 ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது. டிசம்பர் 17, 1982-ஆம் நாளில், இந்திய உச்ச நீதிமன்றம், ஓய்வூதியம் குறித்து வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை நினைவுகூரும் வகையில் இந்நாள் ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியர்களால் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.

#வரலாறு 
அரசுத் துறைகளில் பணி புரிந்து பணி ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் நிலை குறித்து பல்வேறு ஓய்வூதியர் சங்கங்கள் தாக்கல் செய்த வழக்குகள் மீது உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ஓய்வூதியர்கள் அனைவரும் ஒரே சீரான வகுப்பைச் சேர்ந்தவர்கள் எனத் தீர்ப்பளித்துள்ளது. இதில் ஓய்வு பெற்ற தேதியை அடிப்படையாக வைத்து ஓய்வூதியப் பலன்களை வழங்குவதில் பாகுபாடு செய்வது, ஓய்வூதியர்களைப் பிரிவினைச் செய்வதற்கு ஒப்பாகும் என்றும், மேலும் இவ்வாறு பாகுபாடு காட்டுவது இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 14-ஐ மீறுவதாகும் என்று 17 டிசம்பர் 1982 ஆண்டில் உச்சநீதிமன்றம், டி. எஸ். நகரா என்ற ஓய்வூதியர் தொடுத்த வழக்கில் வழங்கிய தீர்ப்பை மேற்கோள் காட்டி பல தீர்ப்புகள் வழங்கப்பட்டன.

மேலும் டி. எஸ். நகரா வழக்கில் அப்போதைய உச்ச நீதிமன்ற நீதியரசர் ஒய். வி. சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில், 17 டிசம்பர் 1982 அன்று அளித்த உரிமை சாசனத் தீர்ப்பின் ஒரு பகுதியில், ஓய்வூதியம் என்பது, உழைத்த உழைப்பிற்கு கொடுக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்ட ஊதியம் ஆகும் எனவும், அரசியல் அமைப்பு சட்டப்பிரிவுகள் 139 மற்றும் 148 (5)-இன் படி ஓய்வூதியம் என்பது ஓய்வூதியர்களுக்கு சொத்துரிமை போன்ற நிலைத்த சட்டபூர்வமான உரிமையாகும் என்றும் தெரிவித்தது.

ஆகவே ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 17-ஆம் நாள் ஓய்வூதியர் நாள், ஓய்வூதியர்களால் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது..

*December 16 - ஆரோக்கிய தினம்*

*அனைவருக்கும் ஆரோக்கிய தின வாழ்த்துக்கள்*
🄷🄰🄿🄿🅈 🄸🄽🅃🄴🅁🄽🄰🅃🄸🄾🄽🄰🄻
🄷🄴🄰🄻🅃🄷   🄳🄰🅈



மனதில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்:
1. பிபி: 120/80
2. துடிப்பு: 70 - 100
3. வெப்பநிலை: 36.8 - 37
4. மூச்சு: 12-16
5. ஹீமோகுளோபின்: ஆண் -13.50-18
பெண் - 11.50 - 16
6. கொலஸ்ட்ரால்: 130 - 200
7. பொட்டாசியம்: 3.50 - 5
8. சோடியம்: 135 - 145
9. ட்ரைகிளிசரைடுகள்: 220
10. உடலில் உள்ள இரத்தத்தின் அளவு: PCV 30-40%
11. சர்க்கரை அளவு: குழந்தைகளுக்கு (70-130) பெரியவர்கள்: 70 - 115
12. இரும்பு: 8-15 மி.கி
13. வெள்ளை இரத்த அணுக்கள் WBC: 4000 - 11000
14. பிளேட்லெட்டுகள்: 1,50,000 - 4,00,000
15. சிவப்பு இரத்த அணுக்கள் RBC: 4.50 - 6 மில்லியன்.
16. கால்சியம்: 8.6 -10.3 mg/dL
17. வைட்டமின் D3: 20 - 50 ng/ml.
18. வைட்டமின் பி12: 200 - 900 பக்/மிலி.

*ஆரோக்ய தின வாழ்த்துக்கள்*

Saturday, 3 December 2022

டிசம்பர் 1எல்லைப் பாதுகாப்புப் படை தினம் (Border Security Force)

வரலாற்றில் இன்று. டிசம்பர் 1

எல்லைப் பாதுகாப்புப் படை தினம் (Border Security Force)  இன்று.





இந்திய சர்வதேச எல்லைப்பகுதியைப் பாதுகாக்கும் இந்திய ராணுவத்தில் ஒரு படை பிரிவாகும். இந்திய துணை இராணுவங்களில் ஒரு பிரிவாகக் கருதப்படும் இப்படை டிசம்பர் 1 1965இல் உருவாக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இப்படைப்பிரிவின் முக்கிய பணி, எல்லை ஊடுருவலைத் தடுப்பதும், எல்லையைப் பாதுகாப்பதும் ஆகும்.

நாம் பாதுகாப்பாக வாழ, நம் எல்லையை பாதுகாக்கும்  வீரர்களுக்கு நம் வாழ்த்துக்களை தெரிவிப்போம்.

Saturday, 13 August 2022

*ஆகஸ்ட் 13*_*உலக உறுப்பு தான தினம்*

*உலக உறுப்பு தான தினம்*




♦️உலக உறுப்பு தான தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13 அன்று கொண்டாடப்படுகிறது

.♦️உறுப்பு தானத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இறந்த பிறகு உறுப்புகளை தானம் செய்ய மக்களை ஊக்குவிக்கவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

 ♦️ஒரு உறுப்பு தானம் செய்பவரால் எட்டு உயிர்கள் வரை காப்பாற்ற முடியும் என்பதால், அனைவரும் தங்கள் விலைமதிப்பற்ற உறுப்புகளை தானம் செய்ய முன்வருவதற்கு இந்த நாள் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.


♦️உறுப்பு தானம் என்பது நன்கொடையாளரின் இதயம், கல்லீரல், சிறுநீரகம், குடல், நுரையீரல் மற்றும் கணையம் போன்ற உறுப்புகளை தானம் செய்பவர் இறந்த பிறகு மீட்டு, உறுப்பு தேவைப்படும் மற்றொரு நபருக்கு இடமாற்றம் செய்வதாகும்.

Thursday, 6 January 2022

*Jan -06 உலக வேட்டி தினம்*

ஜனவரி 6,
வரலாற்றில் இன்று.

உலக வேட்டி தினம் இன்று! 
   


வேட்டி தமிழர்களின் பாரம்பரிய உடையாகும். நகரங்களில் பெரும்பாலும் யாரும் தினமும் வேட்டி அணிவதில்லை. முக்கிய விழாக்களில் மட்டுமே அணிகின்றனர்.

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அனைவரும் அணியும் ஒரு சாதாரண உடையாக வேட்டி இருந்து வருகிறது. இந்தியா மட்டுமின்றி இலங்கை, வங்காள தேசம் மற்றும் மாலத்தீவுகளிலும் வேட்டி பயன்பாட்டில் உள்ளது. அரசியல்வாதிகள், முக்கிய புள்ளிகள், சமுதாய மற்றும் பண்பாட்டு ஆர்வலர்கள் வேட்டியை அன்றாடம் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளில் வேட்டி அணிவதை ஒரு பாரம்பரிய வழக்கமாக தென்னிந்தியாவில் உள்ள பெரும்பாலானோர் கடைபிடித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாரம்பரிய ஆடைகளை பாதுகாக்கும் வகையில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஜனவரி 6 உலக வேட்டி தினமாக அனுசரிக்கப்படும் என யுனெஸ்கோ அறிவித்தது. இதனை அடுத்து மத்திய அரசு அறிவுறுத்தலின் பேரில் இன்று சர்வதேச வேட்டி தினம் கடைபிடிக்கப்படுகிறது.

*_இன்று சர்வதேச வேட்டி தினம்- வேட்டி... தமிழனின் அடையாளம்_* 

தமிழகத்தில் மட்டுமல்லாது, இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் வேட்டி கட்டும் பழக்கம் இருந்தது. 

தமிழனின் அடையாளம் என்பதை உணர்ந்து, வேட்டி தொடர்ந்து அணிவதில் ஆண்கள் ஆர்வம் காட்ட வேண்டும்.

 *வேட்டி...* 

இது தமிழக ஆண்கள் அணியும் ஆடைகளின் பாரம்பரிய அடையாளம். ஆனால், அந்த பாரம்பரியம் இப்போது அடையாளம் தெரியாமல் போய்விட்டது. 

முன்பு தமிழகத்தில் மட்டுமல்லாது, இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் வேட்டி கட்டும் பழக்கம் இருந்தது.

வேட்டியை ஒடிசாவில் தோத்தி, குஜராத்தில் தோத்தியு, அசாமில் சூரியா, மேற்கு வங்காளத்தில் தூட்டி, கர்நாடகாவில் கச்சே பான்ச்சே, கேரளாவில் முந்த்து, ஆந்திராவில் பன்ச்சா, மராட்டியத்தில் தோத்தர், பஞ்சாப்பில் லாச்சா, உத்தரபிரதேசம் மற்றும் பீகாரில் மர்தானி என்று அழைக்கிறார்கள்.

கடல் தாண்டியும் வேட்டி அணியும் கலாசாரம் இலங்கை, வங்காளதேசம், மாலத்தீவு போன்ற நாடுகளிலும் இருந்தது. நாளடைவில், மேற்கத்திய உடை கலாசாரம் மேலோங்கியதால், தமிழகத்தில் மட்டுமல்லாது எல்லா இடங்களிலும் வேட்டிக்கு மவுசு குறைந்துபோய்விட்டது.

இந்த நிலையில், உலக பாரம்பரியத்தை பறைசாற்றும் ‘யுனெஸ்கோ’ நிறுவனம், கடந்த 2016-ம் ஆண்டு சர்வதேச வேட்டி தினம் ஆண்டுதோறும் ஜனவரி 6-ந்தேதி (இன்று) கொண்டாடப்படும் என்று அறிவித்தது.

 அதன்பிறகுதான் இன்றைய இளைஞர்களுக்கு வேட்டியின் மகத்துவம் தெரியத்தொடங்கியது. ஆனாலும், வேட்டியை முறையாக கட்டி பழக்கம் இல்லாததால், அதில் பெரும்பாலான இளைஞர்கள் ஆர்வம் காட்டவில்லை.

 சொல்லப்போனால், அரசியல்வாதிகளின் அடையாளமாக மட்டுமே வேட்டி இருந்து வருகிறது.

இதற்கிடையே, பல வேட்டி தயாரிக்கும் நிறுவனங்கள், இளைஞர்களை கவரும் வகையில், வேட்டியை ஒட்டிக்கொள்ளும் வகையிலும், செல்போன் வைக்க பைகளை வைத்தும், சட்டை நிறத்தில் வேட்டிக்கு ‘பார்டர்’ வைத்தும் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். என்றாலும், வேட்டிக்கு எதிர்பார்த்த அளவு மவுசு கிடைக்கவில்லை.

இன்றைக்கு சர்வதேச வேட்டி தினம் என்பதால், அலுவலகம் செல்லும் பலர் வேட்டி அணிந்து செல்ல திட்டமிட்டு உள்ளனர். புதுச்சேரி அரசாங்கம், ஆண் ஊழியர்கள் வேட்டி அணிந்துவர வேண்டுகோள் விடுத்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 

எது எப்படி என்றாலும், இன்று ஒரு நாள் மட்டும் ஆண்களின் ‘வாட்ஸ்-அப், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம்’ போன்ற சமூக வலைதள பக்கங்களில், வேட்டி அணிந்த படங்கள் அலங்கரிக்கப்போகின்றன. 

அதன்பிறகு, பழைய நிலையே தொடரும் என்றாலும், வேட்டி அணிவதை ஆண்கள் மிடுக்காக கருத வேண்டும்.

தமிழனின் அடையாளம் இது என்பதை உணர்ந்து, தொடர்ந்து அணிவதில் ஆர்வம் காட்ட வேண்டும். 

கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கையை கைதூக்கிவிட வேண்டும் என்றால், ஆண்கள் வேட்டி அணிவதை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். பெண்களும் அதற்கு உந்து சக்தியாக இருக்க வேண்டும்.✍🏼🌹

Saturday, 4 September 2021

*கூகுள் தொடங்கிய தினம் இன்றுசெப்டம்பர் 4 (1998)*

*கூகுள் தொடங்கிய தினம் இன்றுசெப்டம்பர் 4 (1998)*


"தேடினால் கி டைக்காதது எதுவும் இல்லை" என்று நம் முன்னோர்கள் சொன்னது, ஒரு வேளை கூகுளை கருத்தில் கொண்டோ?
நாம் கேட்கும் கேள்விகளுக்கு "தெரியாது" என்ற பதிலே சொல்லாத கூகுள் நிறுவனம் தொடங்கி 33 வருடங்கள் ஆகிவிட்டது.


செப்டம்பர் 4,1998 அன்று அமெரிக்காவின் ஸ்டான்பர்ட் பல்கலைக்கழகத்தின் மாணவர்களான லேரி பேஜும், செர்கி ப்ரின்னும் கூகுளை தொடங்கினர்.


இந்த 33 ஆண்டுகளில் கூகுள் கண்ட வளர்ச்சி, "உலகம் கூகுளுக்கு முன், கூகுளுக்கு பின்" என்று நாம் கூறும் அளவிற்கு உள்ளது.

ஒரு தேடுதல் சாதனமாகத் தொடங்கி, இன்று நம் வாழ்க்கையின் அத்தியாவசியமான அங்கமான மாறிப்போன கூகுள், நம் சரித்திரத்தில் இருந்து அழிக்க முடியாத ஒன்று. ஏன், நம் சரித்திரத்தையே சுமக்கின்ற ஒன்று.


*உலகமே கூகுளை*
*தேடுகிறது*
*கூகுள் ஒரு தமிழனை* 
*தேடியது*

 தற்போதைய தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சை என்கிற தமிழர் .

*சுந்தர் பிச்சையின் சம்பளம் 2019-ல் 6.25 லட்சம் டாலராக இருந்த சம்பளம்,  2020-ம் ஆண்டு  20 லட்சம் டாலராக உயர்ந்தது*

*Sep 1 - உலக கடிதம் எழுதும் தினம்*

*இன்று உலக கடிதம் எழுதும் தினம்*

*நலம் நலமறிய ஆவல்*


ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1-ஆம் தேதி கடிதம் எழுதும் தினமாக உலக அளவில் கொண்டாடப்படுகிறது. 


இந்த நாள் கையால் கடிதம் எழுதும் முறையை பாராட்டும் விதமாக கொண்டாடப்படுகிறது.


 இன்றைய கணிப்பொறி உலகில், கையால் எழுதப்பட்ட கடிதம் ஒன்று நமக்கு வருகிறது என்பதே ஒரு பெரிய பரிசாக எண்ணிக் கொண்டாடப்பட வேண்டிய ஒரு விஷயமாகும்.


 பத்தாண்டுகளுக்கு முன்பு வரை கடிதமே மக்கள் தொடர்பு கொள்ளும் சாதனமாக இருந்தது என்பது நம்மால் நம்ப முடியாத ஒன்றாகவுள்ளது.

 இன்றைய தினத்தில் நமது டிஜிட்டல் தகவல் தொடர்பு முறைகளை கைவிட்டு, நமக்கு பிடித்த ஒருவருக்கு ஒரு கடிதம் எழுதுவதே சிறப்பான கொண்டாட்டமாக இருக்கும். 


உலகக் கடிதம் எழுதும் நாளை முன்னிட்டு நீங்கள் என்ன செய்யலாம்? ஒரு பேனா, பேப்பர் எடுங்கள். ஊரில் உள்ள உங்கள் தாத்தா, பாட்டி, விருப்பத்திற்குரிய உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் ஆகியோரில் யாருக்கேனும் ஒரு கடிதம் எழுதி அனுப்புங்கள்.


 அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் நீங்களே உங்கள் கைப்பட எழுத முயற்சி செய்யுங்கள்.

Thursday, 2 September 2021

*உலகதேங்காய்தினம் - செப்டம்பர் 2 🌴. *

#உலகதேங்காய்தினம் - செப்டம்பர் 2 🌴. 


✍️ செப்டம்பர் 2 ஆம் நாள் "உலக தேங்காய் தினம்" கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் இந்த நிகழ்வு தென்னை வளர்ச்சி வாரியத்தால் (Coconut Development Board) ஏற்பாடு செய்யப்பட்டது.

✍️ THEME: 2021-"கோவிட் -19  காலத்திலும் அதற்கு பிறகும் ஒரு பாதுகாப்பான மற்றும் நிலையான தேங்காய் சார்ந்த சமூகத்தை உருவாக்குதல்".

✍️ இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஆசிய மற்றும் பசிபிக் தென்னை வளர்ப்பு குழு (Asian and Pacific Coconut Community - APCC) நிறுவப்பட்ட  தினமான செப்டம்பர் 2-ம் தேதி (1969-ம் ஆண்டு) "உலக தேங்காய் தினமாக" கடைபிடிக்கப்படுகிறது. 

✍️ 2009 ஆம் ஆண்டு முதல் "உலக தேங்காய் தினம்" கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

✍️ ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் தென்னை வளர்ப்பு ஊக்குவிப்பதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் இந்த அமைப்பு  நிறுவப்பட்டது. 

✍️ வறுமைக் குறைப்பில் உயிர்நாடியாக விளங்குகின்ற தெங்குப் பயிரின் முக்கியத்துவம் தொடர்பாக மக்களிடையே அதிக விழிப்புணர்வினை ஏற்படுத்துவதே இந்நாளின் நோக்கமாகும். 

✍️ இந்த அமைப்பின் உறுப்பினர்கள் எண்ணிக்கை :18.

✍️ இந்தியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகள் உலகில் அதிகமாக தேங்காய் உற்பத்தி செய்யும் நாடுகளாகும்.

🌴சிறப்புகள்:
✍️ அறிவியல் பெயர் - கோகோ நியூசிஃபெரா (Cocoa Nucifera).

✍️ தென்னையை ‘பூலோகக் கற்பகவிருட்சம்’ என்பார்கள். 

✍️ உலகின் 49வது மதிப்புமிக்க பணப்பயிராக இருப்பது தேங்காய். 

✍️ கேரளா மாநிலத்தின் தேசிய மரம் - தென்னை மரம். 

✍️ பெயரிட்டவர் - வாஸ்கோடகாமா. 
Coco - மூடிய பொருள். 
Nut - பருப்பு (அ) விதை

Telegram : https://t.me/Thangamuthustudycircle

🌴மருத்துவ பயன்கள்:
✍️ நமது உயிரணுக்களைப் பாதுகாக்கும் முக்கியமான ஆக்ஸிஜனேற்ற செலினியம் தேங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும். 

✍️ தேங்காய் சதையில்  பினோலிக் கலவைகள் உள்ளன. அவை ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆகும்.  அவை செல்களை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்க உதவும்.

✍️ தேங்காயில் உள்ள "ஃபேட்டி ஆசிட்" உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்க உதவிடும்.

✍️ தேங்காய் சிரட்டையில் (வெளிப்புற ஓடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது.

🌴குறிப்பு: 
✍️ தேசிய தேங்காய் தினம் கடைப்பிடிக்கப்படும் நாள் - ஜூன் 26.

✍️ நாமும் தேங்காயைப் போல, உட்புறத்தில்  மென்மையாகவும், வெளிப்புறத்தில்  வலுவாகவும் இருக்க வேண்டும்.

🌀 Thanks :-👇🏻👇🏻👇🏻 

Monday, 23 August 2021

*சென்னை தினம்*

*மெட்ராஸ் டே கொண்டாடப்படும் இந்த நேரத்தில், "மெட்ராஸ் பாஷை" அல்லது "சென்னை பாஷை" சொல்லாடலை யாரும் எளிதாக கடந்து போய்விட முடியாது.*



*இன்னா..ப்பா, குந்துப்பா.. நாஷ்டா துன்னியா.. ரொம்ப பேஜாரா கீதுப்பா.. இப்படி யாராவது உங்களிடம் பேச்சுக் கொடுத்தால், முகம் சுளிப்பவரா நீங்கள். தேவையில்லை. இந்த பாஷையின் பின்னணியில் பெரும் வரலாறும், இலங்கிய செழுமையும் கூட உள்ளது.*

*சென்னையில் மட்டும் பிரத்தியேகமாக பயன்படுத்தப்படும் இதுபோன்ற வார்த்தைகளின் மூலம் எது? பின்னர் நடிகர்கள் மூலம் எப்படி அது தமிழகம் முழுக்க பரவியது. வாங்க பார்க்கலாம்:*



*வங்காள விரிகுடா கரையோரம் அமைந்த சென்னையில் கால் பதிக்காத வெளிநாட்டுக்காரர்களே இல்லை என்று சொல்லலாம். இங்கிலாந்து ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்பே, அரேபியர்கள், சீனர்கள் என பல நாட்டுக்காரர்களும், சென்னை மண்ணை தொட்டுச் செல்லாமல் போனதில்லை. இப்போது சென்னையில் பேசப்படும் சில வார்த்தைகள் இந்த குறிப்பிட்ட நாட்டுக்காரர்களிடம் இருந்து பெறப்பட்டதுதான். இவற்றைத்தவிர மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்படுவதற்கு முன்பாக அனைத்து மொழிக்காரர்களும் சென்னையில் வசித்ததால், அவர்களின் வார்த்தைகளும் கலந்து சென்னை தமிழ் என்றாகிவிட்டது.*

*தற்போது பேசப்படும் சென்னை தமிழ், தெலுங்கு, இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளின் ஆதிக்கம் அதிகம் கொண்டது. சில வார்த்தைகள் சங்க இலக்கியத்தில் இருக்கிறது என்று சொன்னால் உங்களுக்கு ஆச்சரியம் ஏற்படும். உட்கார் என்பதைவிடவும் இலக்கிய வளமை கொண்ட சொல் குந்து என்பது. பாவேந்தர் பாரதிதாசன் கூட, காற்று குந்தி சென்றது.. மந்தி வந்து குந்தி.. என்று தனது கவிதைகளில் பயன்படுத்தியிருப்பார். வட கர்நாடகாவில் பயன்படுத்தப்படும் கன்னட சொற்களில் குந்து என்ற வார்த்தை இப்போதும், பயன்படுத்தப்படுகிறது*.

*சென்னை கதை" என்ற நூலின் ஆசிரியர் பார்த்திபன் இதுபற்றி கூறுகையில், சென்னை பாஷை என்பது கொச்சை என்று கற்பிதம் செய்யப்பட்டு இருக்கிறது. உண்மை அப்படி இல்லை என்று சொல்கிறார். நாஸ்டா என்று சொல் உருது மொழியில் வந்தது. பேஜார் என்பதும் ஆங்கில மொழியில் இருந்து உருமாறி வந்த வார்த்தை. ஆங்கிலேயர்கள் கப்பலில் வந்து இறங்கும்போது கைரிக்ஷாக்காரர்கள் அவர்களை எங்கள் வண்டியில் வந்து ஏறுங்கள் என்று வலிந்து இழுக்கும்போது , ஆங்கிலேயர்கள் அவர்களை தவிர்க்க என்னை விடுங்கள் என்று கூற, அந்த ஆங்கில சொல் புழக்கத்தில் பேஜார் பண்ணாதே என மாறிவிட்டது, என்கிறார்.*

*சென்னை பாஷையை தமிழகம் முழுக்க கொண்டு சென்ற பெருமை நடிகர்கள் பலருக்கு உண்டு. எம்ஆர் ராதா தொடங்கி, சந்திரபாபு, தேங்காய் சீனிவாசன், லூசு மோகன் போன்ற நடிகர்கள் முதல் கமல்ஹாசன் வரை பல நடிகர்கள் சென்னை பாஷை பேசி பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். இதனால் அந்த பாஷை பட்டி தொட்டி எங்கும் புகழ் பெறத் தொடங்கியது. அடையாளம் கண்டறியப்பட்டது.*

*நடிகர்களில் ஒரு சிலருக்கு இந்த பாஷை ரொம்பவே செட்டாகிப்போனது உண்டு.சபாஷ் மீனா படத்தில் "இன்னாடா இது பேஜாரா போச்சு.. இன்னாடி எப்பப் பார்த்தாலும் ராங் பன்ற நீ" என்பது போன்ற புகழ் பெற்ற வசனங்களை சந்திரபாபு பேசினார். இதற்கு கிடைத்த வரவேற்பால், அதிகமாக மெட்ராஸ் பாஷை பேசி நடிக்கவும் தொடங்கினார் சந்திரபாபு. ரிக்‌ஷாக்காரான் திரைப்படத்தில் ரிக்‌ஷா ஓட்டுபவாரகவரும் தேங்காய் சீனிவாசன், ஆரம்பத்திலிருந்து கடைசிவரை மெட்ராஸ் பாஷை பேசி கலக்கியிருப்பார். மெட்ராஸ் பாஷையைப் பேசுவதில் சந்திரபாபுக்கு அடுத்தபடியாக அதிகமாக பாராட்டுப் பெற்றவர் தேங்காய் சீனிவாசன்.*

*மற்ற நடிகர்களாவது பிற ஸ்டைல் வார்த்தைகளையும் பேசி நடித்திருப்பார்கள். ஆனால், லூஸ் மோகன் என்றாலே, மெட்ராஸ் பாஷைதான் ரசிகர்களுக்கு நினைவுக்கு வரும் அளவுக்கு, மனிதர், மெட்ராஸ்காரராகவே வாழ்ந்திருப்பார். கண்ணை மூடிக்கொண்டே அவர் மெட்ராஸ் பாஷையை உச்சரிப்பதை பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கும்.*

*மே தினம் திரைப்படத்தில் நடிகை மனோரமா பக்கா மெட்ராஸ்காரம்மாவாக பொருந்தி போயிருப்பார். மெட்ராசை சுத்திப் பார்க்கப்போறேன் என்ற பாடலை மனோரமாவே பாடியிருப்பார். இன்று வரை மெட்ராஸ் என்ற வார்த்தையை யாராவது காதில் கேட்டாலே, மனோரமா பாடிய இந்த பாடல்தான் உடனே வாயில் முனுமுனுக்கும். அப்படி மெட்ராசோடு ஒன்றிப்போன ஒரு பாடல் இது. நடிகர்கள் மட்டுமல்ல, நடிகையும் மெட்ராஸ் பாஷையில் கலக்க முடியும் என்று நிரூபித்தார் இந்த சகலகலாவள்ளி ஆச்சி.*

*பெரும்பாலும் ரிக்ஷாக்காரர் கதாப்பாத்திரத்தில் வருவதாலோ என்னவோ ஜனகராஜுக்கும் இந்த லிஸ்டில் இடம் உண்டு. கமல்ஹாசன் எந்த ஊர் பாஷையையும் பேசி அசத்தக் கூடியவர். சதி லீலாவதி படத்தில் கோவை பாஷை பேசி கலக்கிய கமல், பல படங்களில் மெட்ராஸ் பாஷை பேசியிருந்தாலும், பம்மல் சுந்தரம், வசூல்ராஜா எம்பிபிஎஸ் போன்ற படங்கள் என்றதுமே கமல்ஹாசனின் மெட்ராஸ் பாஷைதான் நினைவிற்கு வரும்.*

*இப்போது மெட்ராஸ் பாஷை வேறு பரிணாமம் பெற்று பயணிக்கிறது. பொல்லாதவன் திரைப்படத்தில் கிஷோர் பேசிய மெட்ராஸ் பாஷை இதற்கு ஒரு உதாரணம். எந்த வகையிலும் துருத்தி நிற்காமல் சென்னை மக்களோடு பயணிப்பதை போன்ற ஒரு, சொல்லாடலை பயன்படுத்தியிருப்பார். பிகிலு படத்தில் விஜய் மெட்ராஸ் பாஷை பேச நல்லாவே முயன்றிருப்பார். சந்தானம், யோகிபாபு போன்றவர்கள் தங்களுடைய படங்களில் இயல்பாக மெட்ராஸ் பாஷை பயன்படுத்தி, நகைச்சுவை காட்சிகளுக்கு மெருகேற்றிவருகிறார்கள். மெட்ராஸ் திரைப்படத்தில் கார்த்தி கூட சூப்பராக மெட்ராஸ் பாஷையை உச்சரித்து அசத்தியிருப்பார். சமீபத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் மெட்ராஸ் பாஷை அவ்வளவு இயல்பாக பயன்படுத்தப்பட்டிருக்கும். அங்கேயே வாழ்வது போல உங்களை படத்திற்குள் அழைத்துச் செல்லும்.*✍🏼🌹



Sunday, 8 August 2021

*ஆகஸ்ட் 8_சர்வதேச பூனைகள் தினம்*

ஆகஸ்ட் 8, வரலாற்றில் இன்று.

  🐈🐱 சர்வதேச பூனைகள் தினம் இன்று🐱🐈


  🐱 அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இன்று  பூனைகள் தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  

 🐱 பூனை என்றதும் நமக்கு நினைவிற்குள் துள்ளிக் குதித்து வருவது டாம் அண்டு ஜெர்ரி! அதற்குப் பிறகே, கூரிய கண்களும் நகத்துடன் கூடிய மெல்லிய கால்களும் அழகான மீசையும் மனதில் வரும். 

  🐱 பூனைகளுக்கும் மனிதர்களுக்குமான இந்த உறவு மிக நீண்ட காலமாக இருந்துவருகிறது. 

  🐱 பண்டைய எகிப்தில் வழிபாட்டு விலங்காக பூனைகள் இருந்தன! இவை இறக்கும்போது பிரமிடுகள் கட்டி, சில எலிகளையும் சேர்த்து எகிப்தியர்கள் புதைத்துள்ளார்கள். 

  🐱 பூனைகளில், காட்டுப்பூனை, வீட்டுப்பூனை என்று இரு வகைகள் உண்டு. காட்டுப்பூனை என்பது மாமிசம் மட்டுமே உண்ணும். வீட்டில் வளர்க்கப்படும் பூனை சைவ உணவையும் உண்ணும்! 

 🐱 ஆண் பூனைகள் அனைத்தும் ஆங்கிலத்தில், 'டாம்' என்றும், பூனைக் குட்டிகள் கிட்டன், கிட்டி, புஸி கேட் என்றும் அழைக்கப்படுகின்றன.

 🐱 இவை விளையாட்டில் விருப்பம் உள்ளவை. இந்தக் குணம்தான் பூனைகளை வேட்டைக்காரர்களாக மாற்றுகிறது.

 🐱 ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட்டை விட வேகமாக, மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் பூனைகளால் ஓட முடியும்!

 🐱 இவற்றிற்கு இரவில் பார்வை கூர்மையாக இருக்கும். மனிதனின் பார்வைத் திறன் ஒளியில் ஆறில் ஒரு பங்கு ஒளி பூனைகளுக்குப் போதும்! 

 🐱 நாயைவிட சிறு சிறு ஒலிகளையும் துல்லியமாகக் கேட்கும் திறன் உண்டு. 
நாயைக் காட்டிலும் சுத்தமாக இருக்கும் பூனை, நாக்கால் தன் ரோமங்களை முழுமையாகச் சுத்தம் செய்துகொள்கிறது.

 🐱 பூனைகள் நீண்ட நேரம் தூங்காமல் குட்டித் தூக்கம் மட்டுமே தூங்குவதால் இரவில் விழிப்புடன் இருக்கின்றன!

 🐱 உலகம் முழுவதும் 50 கோடி பூனைகள் செல்லப் பிராணியாக வளர்க்கப்படுகிறதாம். பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் பூனை இருந்தது; காரணம், எல்லா வீடுகளிலும் எலியும் இருந்திருக்கிறது!

 🐱 விண்வெளி சுற்றிய பூனை!:
விண்வெளிக்குச் சென்ற முதலாவது பூனை ஃபெலிசிட் (Felicette). பிரான்ஸ் நாட்டில் இருந்து, 1963, அக்டோபர் 13ல் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. இந்தப் பெண் பூனை விண்வெளிப் பயணத்தின் முடிவில் உயிருடன் பூமிக்குத் திரும்பியது என்பதே இதன் சிறப்பு. 

 🐱 சீனியர் பூனை!: 
உலகின் அதிக வயதான பூனை 'ஸ்கூட்டர்'. ஆண் பூனையான இது சயாமிஸ் (Siamese) இனத்தைச் சேர்ந்தது. மார்ச் 26, 2016 அன்று தனது 30ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய ஸ்கூட்டர் ஏப்ரல் 8ல் உயிரிழந்தது. (சாதாரணமாக பூனைகள் 12-18 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்கின்றன!) இந்தப் பூனைக்கு, பயணங்கள் என்றால் மிகவும் பிடிக்குமாம்! தனது ஆயுட்காலத்தில், 45 அமெரிக்க மாநிலங்களைப் பார்த்துள்ளது.

🐱 பூனையின் குதித்தல் விதி: 

நமக்கு நேர் எதிர் பூனைகள்! குறைந்த உயரத்தில் இருந்து குதித்தால்தான் அவற்றுக்கு அடிபடும். அதிக உயரத்தில் இருந்து குதிக்கும்போது எந்தவித அடியும் படாமல் தப்பிவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். மேலிருந்து குதிக்கும்போது உடலை பாரசூட் போல வளைத்து, கால்களைப் பரப்பி விரித்துக்கொண்டு குதிப்பதே காரணம்.

கிளின்டன் பூனை: 

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான பில் கிளின்டன், 'சாக்ஸ்' என்ற பூனையை வளர்த்து வந்தார். ஜனாதிபதியின் ஓய்வு அறை, பத்திரிகையாளர் அறை என எங்கு வேண்டுமானாலும் சுற்றிவரும் அனுமதியை அது பெற்றிருந்தது!

Saturday, 10 July 2021

*July 10-வேலூர்_தினம்*

#வேலூர்_தினம்...


இந்தியா சுதந்திரப் போராளிகள் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக 19ஆம் நூற்றாண்டில்  முதன்முதலில் போர்க்குரல் #சிப்பாய்க்கலகம்  எழுப்பிய இடம் தான் #வேலூர்கோட்டை  அதன் உள் பகுதியில் அமைந்துள்ள #சிறைச்சாலை.


இந்த கோட்டையானது கிருஷ்ணதேவராயர் காலத்தில் வடிவமைக்கப்பட்ட கோட்டையாகும் பிற்காலத்தில் மொகலாயர்கள் ஆட்சி செய்தபோது ஆற்காடு நவாப் அவர்களது கட்டுப்பாட்டில் இந்த கோட்டை இயங்கி வந்தது மொகலாயர் காலத்திற்கு பிறகு இந்தக்கோட்டை கிழக்கிந்தியக் கம்பெனி என்று சொல்லக்கூடிய ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் பிடியில் சிக்கிக் கொண்டது.

இந்த கோட்டை சுற்றிலும் நான்கு பக்கமும் அகழி அமைக்கப்பட்டு எதிரிகள் யாரும் அவ்வளவு எளிதில் உள்ளே நுழைய முடியாத வகையில் கோட்டை சுற்றிலும் உள்ள நீர்நிலைகளில் கொடிய முதலைகள் மூலம்  பாதுகாப்புடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரே நுழைவு வாயில் மட்டுமே உள்ளது. அதுவும் சங்கிலிகள் உதவியுடன் பறைகள் மற்றும் மரப்பாலம் அமைத்து தானாக மூடிக்கொள்ளும் விதத்தில் அமைந்துள்ளது. பீரங்கி குண்டுகள் துளைக்காத வகையில் பாறைகளைக் கொண்ட கருங்கற்களால் ஆன தடுப்பு சுவர்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிலகாலம் முன்புவரை இந்த வேலூர் கோட்டையில் தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மத்திய சிறைச்சாலை, நீதிமன்றம்  உட்பட அனைத்து அரசு இயந்திரங்களும் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த வேலூர் கோட்டையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் உள்ளே ஒரு குகை (சுரங்கப்பாதை) உள்ளது. எதிரிகளிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ளவும் கருங்கற்களால் ஆன அறைகள் இருப்பதாக கூறப்படுகிறது.  அந்த குகையில் இறங்கி சென்றால் அது 18 கிமீ தொலைவில் அமைந்துள்ள விருஞ்சிபுரம் ஸ்ரீ மார்கபந்தீஸ்வரர் ஆலயம் வரை சென்று வரும்படி அமைக்கப்பட்டுள்ளது. இதே கோட்டையில் இருந்து இன்னொரு சுரங்கப் பாதையின் வழித்தடத்தில் சென்றால் அது ஆரணி ஸ்ரீ கைலாசநாதர் கோயில் வரை சென்று திரும்பும் வகையில் உள்ளதாகவும்  சொல்லப்படுகிறது.

இந்த கோட்டை வரலாற்றில் இடம்பெற்ற இன்னொரு சம்பவமும் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அது என்னவென்றால் இலங்கை ஈழப் போராளிகள் ( விடுதலைப் புலிகள்) 60க்கும் மேற்பட்டோர் இந்த சிறைச்சாலையில் தான் அடைக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் தங்களுக்கு  சாப்பிட கொடுத்த தட்டுகளை வைத்து அடைக்கப்பட்ட சிறையில் இருந்து கிட்டத்தட்ட 200 அடிகளுக்கு மேல்  தனியாக சுரங்கம் தோண்டி பாதை அமைத்து அகழியில் குதித்து தப்பித்து வெளியேறி வேலூர் தொடங்கி சாலை மார்க்கத்தில் கிட்டத்தட்ட 600 கிமீ தொலைவில் உள்ள  இராமேஸ்வரம் மண்டபம் சென்று அங்கிருந்து கடல் மார்க்கமாக இலங்கை ஈழத்திற்கு சென்று விட்டார்கள் என்பது சில வருடங்களுக்கு முன் நடந்த உண்மை நிகழ்வு ஆகும். இந்த பாதை அமைக்கும் பணி சாதாரணமாக 6 மாதங்கள் வரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது இந்த விஷயம் வெளியே தெரியாத வகையில் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவர்கள் தப்பி சென்ற அடுத்த நாள் காலையில் உணவு வாங்க வராமல் போனவர்கள் கணக்கெடுப்பின் போது தான் இவ்வளவு பெரிய சம்பவம் நடந்த விஷயம் சிறையில் இருந்த அதிகாரிகளுக்கு தெரிந்துள்ளது.

இப்படி பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாக கம்பீரமான தோற்றத்துடன் நெஞ்சை நிமிர்த்தி வானுயர்ந்த கோபுரத்துடன் #வேலூர் #கோட்டை உயர்ந்து நின்று காட்சி தருகிறது. 
#vellore

Thursday, 1 July 2021

*ஜூலை 1_தேசிய மருத்துவர்கள் தினம்..!!*

*ஜூலை 1_தேசிய மருத்துவர்கள் தினம்..!!*


விடுதலைப் போராட்ட வீரரும், இந்தியாவின் தலைசிறந்த மருத்துவர்களுள் ஒருவருமான பிதான் சந்திர ராய் (Bidhan Chandra Roy) பிறந்த தினம் இன்று.


* பிஹார் மாநிலம், பான்கிபூரில் பிறந்தார் (1882). தந்தை, துணை கலெக்டராகப் பணியாற்றியவர். பள்ளிக் கல்வியை பாட்னாவில் முடித்தார். கல்கத்தா பிரசிடென்சி கல்லூரியிலும், பாட்னா கல்லூரியிலும் பயின்று பட்டம் பெற்றார்.

* பெங்கால் பொறியியல் 
கல்லூரியிலும் கல்கத்தா மருத்துவக் கல்லூரியிலும் விண்ணப்பித்திருந்த இவருக்கு இரண்டிலுமே இடம் கிடைத்தன. கல்கத்தா 
பல்கலைக்கழகத்தின் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து பயின்றார்.

* மருத்துவ மேற்படிப்புக்காக இங்கிலாந்து சென்றார். ஒரே நேரத்தில் மருந்தியல் மற்றும் அறுவை சிகிச்சை மருத்துவத்துக்கான எம்.ஆர்.சி.பி. மற்றும் எஃப்.ஆர்.சி.எஸ் படிப்புகளை 2 ஆண்டு கள், 3 மாதங்களிலேயே முடித்து சாதனை படைத்தார்.

* கல்கத்தா மருத்துவக் கல்லூரி உட்பட பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியராகப் பணியாற்றினார். 1928இல் இந்திய மருத்துவ நிறுவனத்தைத் தொடங்கி நிர்வகித்து வந்தார். 1931இல் கல்கத்தா மேயராக நியமிக்கப்பட்டார்.

* காந்திஜியுடன் இணைந்து சுதந்திரப் போராட்டங்களிலும் பங்கேற்றார். சக அரசியல் நண்பர்களால் ‘பிதான் தா’ (அண்ணன்) என நேசத்துடன் அழைக்கப்பட்டார். நாட்டு மக்களுக்கு உடலும் மனமும் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே சுயராஜ்ஜியக் கனவு நனவாகும் என்று நம்பினார்.

* வறுமையில் தவித்த மக்களின் நலவாழ்வுக்காக ஜாதவபூர் காசநோய் மருத்துவமனை, சித்தரஞ்சன் சேவா சதன், கமலா நேரு மருத்துவமனை, இந்திய மனநல சுகாதார மையம், விக்டோரியா இன்ஸ்டிடியூஷன், சித்தரஞ்சன் புற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றைத் தொடங்கினார். சுதந்திரத்துக்குப் பிறகு வங்காளத்தின் முதலமைச்சராக இவர்தான் பதவி ஏற்க வேண்டும் என்று கட்சி விரும்பியது. தன் சேவைகளுக்குப் பதவி இடையூறாகிவிடும் என்பதற்காக அந்தப் பதவியை மறுத்துவிட்டார்.

* அடுத்த ஆண்டு காந்திஜியின் ஆலோசனைப்படி முதல்வர் பதவியை ஏற்றார். 1948 முதல் 1962இல் மரணமடையும்வரை தொடர்ந்து 14 ஆண்டுகள் மேற்கு வங்கத்தின் முதல்வராகச் செயல்பட்டார். அவர் பதவி ஏற்ற சமயம் அங்கு உணவுப் பஞ்சம், வேலையில்லாத் திண்டாட்டம், கிழக்குப் பாகிஸ்தானிலிருந்து வந்துகொண்டே இருந்த அகதிகள் பிரச்சினை என ஏராளமான பிரச்சினைகள் இருந்தன.

* தனது தலைசிறந்த நிர்வாகத்திறனுடன் அத்தனைப் பிரச்சினைகளையும் அபாரமாகக் கையாண்டார். இவரது ஆட்சிக் காலத்தில் அம்மாநிலம் அபார வளர்ச்சி கண்டது. ‘மேற்கு வங்காளத்தின் சிற்பி’ எனப் போற்றப்பட்டார். தன் வீட்டையே மருத்துவமனைக்கு நன்கொடையாக அளித்தார். முதல்வராக இருந்தபோதும் ஏழை மக்களுக்கு தினமும் இலவசமாக மருத்துவம் பார்த்தார்.

* இவரது சேவையைப் பாராட்டி 1961இல் இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. மருத்துவம், அரசியல், நிர்வாகம், கல்வி உள்ளிட்ட களங்களில் முத்திரை பதித்த, பிதான் சந்திர ராய் 1962ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவரது பிறந்த நாள் அன்றே, 80ஆவது வயதில் காலமானார்.


* இந்தியாவில் இவரது பிறந்த தினம் தேசிய மருத்துவர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. அறிவியல், கலை, இலக்கியத்தில் சாதனை படைப்போருக்கு இவரது நினைவாக பி.சி.ராய் விருது வழங்கப்பட்டு வருகிறது.

தேசிய மருத்துவர்கள் தினம்..!!


உலகெல்லாம் அக்டோபர் 18ம் தேதி டாக்டர் தினம் கொண்டாடபட்டாலும்....


 இந்தியாவில் அது ஜூலை 1ம் தேதி கொண்டாடபடும் அதற்கு காரணம் பிதான் சந்திர ராய் எனும் மகத்தான மருத்துவர் ஒருவர்...!!

அவர் வங்கத்துக்காரர், சுதந்திர போராளி நாட்டு பற்றாளர் என ஏகபட்ட முகங்கள் உண்டு, மேற்கு வங்கத்தின் முதல்வராக கூட இருந்தார்.

டாக்டர் என்பது அவரின் தொழில், அதில் தலை சிறந்தும் விளங்கினார். கல்கத்தாவில் இருந்தும் இந்தியாவில் இருந்தும் தொழுநோயினை விரட்ட மிகபெரும் பணியாற்றினார்

அவருக்கு ஆச்சரியமான திறமை இருந்தது , மருத்துவ படிப்பில் மருந்து படிப்பு மற்றும் அறுவை சிகிச்சை படிப்பு என இரு படிப்பினை ஒரே நேரம் படித்து ஒன்றாக பட்டமும் வாங்கினார்

அந்த அனுபவத்தை இத்தேசத்துகாக செல்வழித்தார். உலகின் மிகசிறந்த மருத்துவர் எனும் பொழுதும் இந்திய மருத்துவதுறைக்கு தன் வாழ்வினை அர்பணித்த அவரின் பிறந்த நாள் மற்றும் இறந்த நாள் என்பதால் அதுவே இந்திய மருத்துவ தினமாயிற்று

மருத்துவன் என்பது இரண்டாம் கடவுள், வாழ்வில் ஒவ்வொரு மனிதனும் ஒருமுறையாவது மருத்துவன் கையில் விழுந்தே தீருவான், விதிவிலக்கு என யாருமே இருக்க முடியாது

மருத்துவர்களின் அருமை எக்காலமும் தெரியும் எனினும் கொரானா காலத்தில் அவர்கள் சந்திக்கும் யுத்தம் மிக மிக கடுமையானது.

யுத்த காலம் வரும்வரை ராணுவத்தாருக்கு சிக்கல் இல்லை, ராணுவ அதிகாரி , கர்ணல், ஹவில்தார், லெப்டினன்ட் ஜெனரல் என கம்பீரமாக வருபவர்களை பார்த்து சிலருக்கு பொறாமையாக கூட இருக்கும்

ஆனால் யுத்தம் என வந்தால் அவர்கள் களத்தில் உயிரை கொடுத்து நிற்கும்பொழுதுதான் அவர்களின் அருமை தெரியும்

வெள்ளம் வரும்பொழுதுதான் பொதுபணியினருக்கு சவாலான காலம், இயற்கை சீற்றம் மின்வாரியத்துக்கு சவாலான காலம்..

ஒரு நட்டு கழன்றாலும் அணுமின் நிலையதுறையினரின் பதற்றம் சொல்லி மாளாது..

தீபற்றி எரியும் பொழுதுதான் தீயணைப்பு வீரனின் அருமை தெரியும்

நிறைய சம்பாதிக்கின்றார்கள், பெருவாழ்வு வாழ்கின்றார்கள், கொள்ளையோ கொள்ளைக்காரர்கள் என்றெல்லாம் சொன்னாலும் கொள்ளை நோய் காலங்களில் மருத்துவர்களின் சவால் அதிகம்

நோய் பரவுகின்றது என்றவுடன் நாமெல்லாம் எப்படி துடிக்கின்றோம், தற்காப்புக்கே என்னபாடு படுகின்றோம்?

ஆனால் மருத்துவர்கள் எந்நிலையிலும் உயிருக்கு துணிந்து கடமையாற்ற வேண்டும், அரசு அல்லது தனியார் மருத்துவர்கள் விடுமுறை என ஓடமுடியாது

போருக்கு சமமான காட்சி அது , நோய் தொற்றலாம் 99% வாய்ப்பு உண்டு ஆனால் அந்நிலையிலும் சிகிச்சை கொடுத்தே தீரவேண்டும், தீபிடித்த கட்டடத்துக்குள் உயிரை பணயம் வைத்து ஓடும் மீட்பு வீரன் போல, வழியும் வியர்வையினை துடைத்தபடி வெடிகுண்டை செயலிழக்க வைக்கும் நிபுணர் போல உயிரை பிடித்து நிற்க வேண்டும்.

பதற்றதை கொஞ்சமும் வெளிகாட்டாமல் நோயாளிக்கு நம்பிக்கையூட்டி தனக்கு பரவும் வாய்பிருந்தும் சாவுக்கு துணிந்து அவர்கள் போராடுவதெல்லாம் கண்ணீரை வரவழைக்கும் தருணங்கள்..

ஒவ்வொரு தொழிலின் கஷ்டமும் சவாலும் உணர ஒரு நேரம் வேண்டும், அப்படி மருத்துவ சேவையின் மகத்துவத்தை உலகம் அறியும் நேரமிது

தென்கொரியாவும் சைனாவும் சிகிச்சை கொடுத்து சிலரை காப்பாற்றி செத்து கிடக்கும் மருத்துவர்களை காண்கின்றது, அமெரிக்கா அதை கண்ணார காண்கின்றது

பிரேசிலில் ஒரு மருத்துவன் ஆளவரவேண்டும் என்ற கூக்குரல் எழுகின்றது, ரஷ்யாவில் செஞ்சேனை வீரர்களுக்கு நிகரான கவுரவம் இப்போது மருத்துவர்களுக்கு கிடைக்கின்றது.

அந்நாடுகள் நெருக்கடி காலம் முடிந்ததும் அவர்களுக்கு நினைவு சின்னம் அமைக்கபடும் என அறிவிக்கின்றன‌

ஆம், கண்ணதாசன் எழுதிய அந்த காட்சிதான் "ஒன்றையே நினைத்திருந்து, ஊருக்கே வாழ்ந்திருந்து உயிர்கொடுத்து உயிர்காத்த உத்தமர்கோர் ஆலயம், நெஞ்சிலோர் ஆலயம்.."

இந்த நெருக்கடியில் போர்கால வீரர்களாக அனுதினமும் மிகுந்த சவால் எடுத்து அந்த நோயுடன் போரடும் ஒவ்வொரு மருத்துவரும் கடவுளுக்கு சமம்

நாயகனில் பாலகுமாரன் சொல்லும் அந்த வசனம்தான் "யோவ் டாக்டரு, உசுர காப்பாத்திட்டய்யா.. என்னால முடியுமா..இவனால முடியுமா?  உன்னால முடியும்யா.. நீ சாமிய்யா.."

மருத்துவம் கடவுளுக்கு நிகரானது என்பதை உணரும் நேரமிது, மருத்துவர்கள் சாவுக்கு அஞ்சா மனுகுல சேவையாளர்கள் என்பதை நினைத்து கண்ணீர்விடும் காலமிது

இந்திய தேசத்திலும் கொரோனா உச்சகட்டமாக‌ பரவுகின்றது, மக்கள் கலங்குகின்றார்கள். ஆனால் மருத்துவர்கள் கடமையாற்ற கிளம்புகின்றார்கள். எச்சரிக்கையும் ஆலோசனையும் நம்பிக்கையும் கொடுக்கின்றார்கள்

சிக்கிய நோயாளிகளுக்கு உலக மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று சிகிச்சையும் அளிக்கின்றார்கள், அய்யகோ எங்களுக்கு வருமோ என ஓடி ஓளியவில்லை, ஒளியவும் முடியாது

நோய்க்கு அஞ்சி ஓளியும் நம் மனநிலையில், கொஞ்சமும் அஞ்சாமல் கடமையாற்ற முன்வரும் மருத்துவரை காணுங்கள், நம் கரம் தானாய் குவியும், கண்ணீர் தானாக சொட்டும்


அந்த தெய்வங்களுக்கு வாழ்த்துக்கள்..

இந்நாட்டு மக்களின் வாழ்த்தும் ஆன்மபலமும் அவர்களை காக்கும் , அவர்களுக்கு ஒரு ஆபத்தும் நேரா.

களத்தில் இருக்கும் மருத்துவர்களுக்கு நன்றியும் கண்ணீரும் தெறிக்க மருத்துவ தின வாழ்த்துக்களை சொல்வோம்

உங்களால் மட்டுமே , உங்கள் மேல் உள்ள நம்பிக்கையில் மட்டுமே தேசத்தில் வாழ்கின்றது ஜனம்

தேசத்தின் இரண்டாம் காவல் வீரர்களுக்கு, காக்கும் தெய்வங்களுக்கு, கொரோனா காலத்தில் மிக பெரும் சவாலுடன் களத்தில் நிற்கும் மருத்துவர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகள்

தேசத்தின் ஒரே நம்பிக்கையும் எதிர்ப்பார்ப்பும் அடைக்கலமுமான உங்களுக்கு எல்லா தெய்வங்களும் அருள்புரியட்டும், எல்லா நலமும் வளமும் பலமும் உங்களை வந்தடையட்டும்.

ஜூலை 1_சர்வதேச நகைச்சுவை தினம்

ஜூலை 1,
வரலாற்றில் இன்று

சர்வதேச நகைச்சுவை தினம் இன்று.


சர்வதேச நகைச்சுவை தினம் ஆண்டுதோறும் ஜூலை முதல் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பது அறிவியல் கூறும் உண்மை.


சிரிக்கும் போது மனதில் ஒருவித மகிழ்ச்சியான கலகலப்பான உணர்ச்சி ஏற்படுகிறது. இதனால் உடலில் ஆரோக்கியமான வேதிப்பொருட்கள் உற்பத்தியாவதாகவும், அது நோயைத் தீர்க்கும் மருந்தாக செயல்படுவதாகவும் அறிவியல் கூறுகிறது. சிரித்து மகிழ்வதால் நோய்கள் வராமல் தடுக்கப்படுவதுடன் வந்த நோய்களும் விரைவில் குணமாவதாகவும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.




அசட்டுச் சிரிப்பு, ஆணவச் சிரிப்பு, ஏளனச் சிரிப்பு, சாகசச் சிரிப்பு, நையாண்டி சிரிப்பு, புன்சிரிப்பு என சிரிப்பில் பலவகை உண்டு. எத்தனை மலர்கள் இருந்தாலும், ரோஜாவுக்கு என்று தனிச்சிறப்பு இருப்பதுபோல், எத்தனையோ வகை சிரிப்புகள் இருந்தாலும், புன்னகைக்கு என்று தனி மரியாதை உள்ளது.


சர்வதேச நகைச்சுவை தினமான இன்று நாமும் சிரித்து, மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முயற்சிக்கலாம். இயந்திர உலகில் சிரிப்பதற்குக் கூட நேரம் இல்லாமல் பலர் ஓடி ஓடி உழைத்து வருவதால் தான், ஆங்காங்கே உடற்பயிற்சிக் கூடங்கள் மாதிரி, சிரிப்பு கிளப்புகளும் உருவாகி வருகின்றன. சிரிப்புகளை விற்று மன அழுத்தங்களை வாங்காமல், தானும் சிரித்து, மற்றவர்களையும் சிரிக்க வைத்து இந்த சர்வதேச நகைச்சுவைத் தினத்தைக் கொண்டாடலாம்.

Tuesday, 22 June 2021

*ஜூன் 22*

இன்று ஜூன் 22-ம் தேதி தேசிய ஆனியன் ரிங்ஸ்  தினம் கடைபிடிக்கப்படுகிறது, டான் பிரவுன் தினம் இன்று (ஜூன் 22)

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...