Showing posts with label Maths. Show all posts
Showing posts with label Maths. Show all posts

Thursday, 3 August 2023

Maths Quiz/ கணிதத்தில் எந்த ஒரு எண்ணுமே ஒன்றிலிருந்து பத்துக்குள் இருக்கும் எல்லா எண்களாலும் வகுக்கப்பட முடியாது.

கணிதத்தில் எந்த ஒரு எண்ணுமே ஒன்றிலிருந்து பத்துக்குள் இருக்கும் எல்லா எண்களாலும் வகுக்கப்பட முடியாது.

ஆனால் ஒரு எண் மட்டும் உலக அளவில் இருக்கும் கணிதவியலாளர்களால் புதிராகப் பார்க்கப்பட்டது. அவர்களுக்கு ஒரு அதிர்ச்சியைக் கொடுத்தது என்று கூடச் சொல்லலாம்.

இந்த எண் பாரதத்தின் அசைக்க முடியாத திறமை வாய்ந்த கணிதவியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த எண் : 2520

மேலோட்டமாகப் பார்த்தால் எத்தனையோ எண்களில் இதுவும் ஒன்று என்று தோன்றும்.

ஆனால் அப்படி அல்ல. உலகக் கணிதவியலாளர்களால் கடந்து போக முடியாத ஆச்சர்யத்தை அவர்களுக்குக் கொடுத்த ஒரு எண் !

ஏனெனில் 1 - 10க்குள் உள்ள எந்த ஒரு எண்ணாலும் - அது ஒற்றைப்படை எண்ணோ அல்லது இரட்டைப்படை எண்ணோ - வகுக்கப்படக் கூடிய எண்ணாக அது இருந்தது தான் !

இது மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுக்கக் கூடும் : முடியவே முடியாது என்று கூடத் தோணும்.

கீழேயுள்ள கணித அட்டவணையைப் பாருங்கள் :

*2520 ÷ 1 = 2520*

*2520 ÷ 2 = 1260*

*2520 ÷ 3 = 840*

*2520 ÷ 4 = 630*

*2520 ÷ 5 = 504*

*2520 ÷ 6 = 420*

*2520 ÷ 7 = 360*

*2520 ÷ 8 = 315*

*2520 ÷ 9 = 280*

*2520 ÷ 10 = 252*

இதன் மர்ம முடிச்சை அவிழ்த்தது:

[7 × 30 × 12] - இந்தப் பெருக்கல் தான் !

நமது பாரதம் பின்பற்றிய ஆண்டுக் கணக்குப்படி இந்தப் புதிருக்கு ஒரு விடை கிடைத்து விட்டது.

இந்த எண்ணை ஒன்றிணைத்தவை (coefficient)

வாரத்திற்கு நாட்கள் - 7

மாதத்திற்கு நாட்கள் - 30

ஒரு ஆண்டுக்கு மாதங்கள் - 12

*[7 × 30 × 12 = 2520] This is the characteristic and dominance of time.*

(This is the characteristic and dominance of time - இந்த சொற்றொடரை மிகச் சரியாக தமிழில் மொழி பெயர்க்க இந்த எளியவளுக்குத் தெரியவில்லை. அதனால் அதை அப்படியே கொடுத்திருக்கிறேன்.)

இறுதியாக.. இதைக் கண்டு பிடித்த அந்த அற்புதமான மூளைக்கு உரியவர் -

திரு. ஸ்ரீனிவாச இராமானுஜம் அவர்கள்.

இந்த எளியவளின் அடிக்குறிப்பு:

அந்த வணக்கத்துக்குரிய மாமேதையை.. மாமனிதரை நாம் தலை தாழ்ந்து வணங்குவோம்.

இரண்டு நாட்களுக்கு முன் எங்கள் நண்பர் ஒருவர் அனுப்பிய ஆங்கிலத்தில் இருந்த whatsapp பதிவு இது ‌

அதைத் தமிழில் மொழி மாற்றம் செய்து பதிவிட்டுள்ளேன்.

கீழுள்ளது அந்த ஆங்கிலப் பதிவு நண்பர்களே !

*In mathematics, no number can be divided by all the numbers from 1 to 10,*

*But this one number is very strange, all the mathematicians in the world

*Shocked.*

*This number was discovered by Indian mathematicians with their unwavering intelligence.*

*See this number 2520.*

*It seems to be one of many numbers,*

*But in reality, it is not, it is a number that has surprised many mathematicians around the world.*

*This number can be divided by any number from 1 to 10.*

*Whether even or odd*

*It sounds like really amazing and impossible numbers. Now, look at the table.*

*2520 ÷ 1 = 2520*

*2520 ÷ 2 = 1260*

*2520 ÷ 3 = 840*

*2520 ÷ 4 = 630*

*2520 ÷ 5 = 504*

*2520 ÷ 6 = 420*

*2520 ÷ 7 = 360*

*2520 ÷ 8 = 315*

*2520 ÷ 9 = 280*

*2520 ÷ 10 = 252*

*The secret of the number 2520 is hidden in the multiplication of [7 × 30 × 12].**

*With regard to the Indian Hindu year, the riddle of this 2520 number is solved,*

*It is the coefficient of this number.*

*Days of the week (7),*

*Days of the month (30)*

*And months in a year (12)*

*[7 × 30 × 12 = 2520] This is the characteristic and dominance of time.*

*🙏🏻The Great Mind who discovered it was* *Sri Srinivasa Ramanujam !*🙏🙏🙏🙏🙏🙏

Wednesday, 28 November 2018

*வழக்கொழிந்த அளவுகள் பரப்பளவு*

இன்றைய இளைய தலை முறையினர் அறிந்து கொள்ளும் பொருட்டு, இன்று வழக்கத்தில் இல்லாத பழைய 
அளவு முறைகளை உறவுகளுடன் பகிர்ந்து கொள்கின்றோம். 

144..சதுர அங்குலம்..= 1 சதுர அடி 

9......சதுர அடி..........= 1 சதுர கஜம் 

484..சதுர கஜம்.........= 1 சதுர சங்கிலி 

10...சதுர சங்கிலி......= 1 ஏக்கர் 

436.....சதுர அடி.........= 1 செண்ட் 

100.....செண்ட்...........= 1 ஏக்கர் 

4,840..சதுர கஜம்.......= 1 ஏக்கர் 

640.....ஏக்கர்..............= 1 சதுர மைல் 

0.33..செண்ட் (144 சதுர அடி) = 1 குழி 

100...குழி..........................= 1 மா ( 33.06 
செண்ட் ) 

4.......மா..........................= 1காணி 

20.....மா ( 5 காணி )........= 1வேலி 
( 6.61 ஏக்கர் ) 

56....செண்ட்........= 1....குருக்கம் 

100..குருக்கம்......= 56 ஏக்கர் 

5.50 செண்ட்.........= 1.....மனை ( GROUND ) 

24....மனை..........= 1.....காணி 

1......காணி..........= 1.32 ஏக்கர் 

. . . . . . . . இன்றைய பரப்பளவு . . . . . . . . 

100 சதுர மீட்டர் . . .= 1 ஏர் ( 2.4701 செண்ட் ) 

100 ஏர்ஸ் . . . . . . . = 1 ஹெக்டேர் ( 2.47 
ஏக்கர் 

. . . . . . . . . . . . . நாணயங்கள் . . . . . . . . . . . 

5 காசு . . . . . . . . = 1 பைசா 

3 பைசா . . . . . . .= ¼ அணா ( காலணா ) 

2 காலணா . . . . = ½ அணா ( அரையணா ) 

2 அரையணா . .= 1 அணா 

4 காலணா . . . . = 1 அணா 

12 பைசா . . . . . .= 1 அணா 

4 அணா . . . . . . .= ¼ ரூபாய் (கால் ரூபாய் ) 
( 2 இரண்டணாக்கள் ) 

8 அணா . . . . . . .= ½ ரூபாய் ( அரை ரூபாய் ) 

16 அணா . . . . . . . . . . . . . . = 1 ரூபாய் 

192 பைசா . . . . . . . . . . . . . = 1 ரூபாய் 

64 காலணா . . . . . . . . . . . .= 1 ரூபாய் 

32 அரையணா . . . . . . . . . = 1 ரூபாய் 

8 அரைக்கால் ரூபாய் . . = 1 ரூபாய் 

4 கால் ரூபாய் . . . . . . . . .= 1 ரூபாய் 

2 அரை ரூபாய் . . . . . . . .= 1 ரூபாய் 

3 ரூபாய் . . . = ¼ சவரன் (கால் சவரன் ) 

5 கால் சவரன் . . = 1 சவரன் 

15ரூபாய் . . . . . . . = 1 பவுன் ( சவரன் ) 

3 ½ ரூபாய் . . . . . .=1 வராகன் 

2 பைசா . . . . . . . . = 1 துட்டு 

8 துட்டு . . . . . . . . .= 1 பணம் 

பைசா, காலணா, அரையணா ஆகிய 
நாணயங்கள் செம்பு உலோகத்திலும்; 

1 அணா, 2 அணா, 4 அணா ஆகிய 
நாணயங்கள் நிக்கல் உலோகத்திலும் 

8 அணா, 1 ரூபாய் ஆகிய நணயங்கள் 
வெள்ளி உலோகத்திலும் 
உருவாக்கப்பட்டிருந்தன. 

. . . . . . . . . . . . . முகத்தல் அளவுகள் . . . . . . 

1 ஆழாக்கு = 1/8 (அரைக்கால்) படி 

2 ஆழாக்கு = 1/4 படி 

4 ஆழாக்கு = 1/2 படி 

8ஆழாக்கு = 1 படி 

2 ஆழாக்கு = 1 நாழி (1/4 படி) 

2 நாழி (4 ஆழாக்கு) = 1/2 படி 

4 நாழி (8 ஆழாக்கு) = 1 படி 

8 படி . . . . . . . = 1 மரக்கால் (குறுணி) 

12 மரக்கால் (96 படி) = 1 கலம் 

2 கலம் (192 படி) . . = 1 மூட்டை 

10 மூட்டை . . . . = 1 வண்டி 

20 ஆழாக்கு = 1 காலன் 

21 மரக்கால் . . . . . . . . = 1 கோட்டை 

5 மரக்கால் (40 படி) . . . = 1 பரை 

80 பரை (400 மரக்கால்) = 1 கரிசை 

8 படி . . . . . . . . . . . . . . = 1 குறுணி (1மரக்கால்) 

2 குறுணி (2 மரக்கால்) = 1பதக்கு 

3 குறுணி (3 மரக்கால்) = முக்குறுணி 

( ஆதாரம் :- 19 – 05 – 1925 நாளில் 

வெளியிடப்பட்ட Vide Fort St. George Gazette )

Wednesday, 21 November 2018

*maths_ youtube*

HCF and LCM shortcut video part 1 : http://makeurl.co/sSj3fX4

HCF and LCM shortcut video part 2 : http://makeurl.co/mn1z4S

biology previous year question and answer video : http://makeurl.co/JIpmW

foresterexam model paper video explain : http://makeurl.co/W4LEZXc

TNPSC Zoology ful lecture video

6th : http://makeurl.co/cBWxZ1Y

7th :

part 1 : http://makeurl.co/X26Mq

part 2 : http://makeurl.co/khSwTvv3

part 3 : http://makeurl.co/N22l1dJ

part 4 : http://makeurl.co/l3T551cw

8th

part 1 : http://makeurl.co/D6VCB9bA

part 2 : http://makeurl.co/h38ZU

part 3 : http://makeurl.co/K6ntrOCq

part 4 :http://makeurl.co/U4FBD6B

part 5 : http://makeurl.co/7j6H6C

9th

part 1: https://za.gl/8Uyz9Y9

part 2 : https://za.gl/lUsFL

part 3 : https://za.gl/CxGyuFd

part 4 : https://za.gl/CRNd3q

part5 : https://za.gl/plhZQ

part 6 : https://za.gl/XWXwu

10th

part 1 : https://za.gl/eijKOzh

part 2 : https://za.gl/McNSTW

part 3 : https://za.gl/vuIg39

part 4 : https://za.gl/Jmta5

Sunday, 22 July 2018

*திறனாய்வுத்தேர்வு*

S MAHALAKSHMI TNPSC ASO in MATH'S shortcut
GROUP -2 EXAM  2018 : திறனாய்வுத்தேர்வு

1. x/y= 6/5 எனில் (x2+y2) / (x2 - y2) -இன் மதிப்பு காண்க?

விடை : 61/11

விளக்கம்:
x= 6 எனவும், y= 5 எனப் பிரதியிட,
(x2  + y2) / (x2-y2) =(62 +52)/ (62 - 52)
= (36 +25) / (36 - 25)
= 61/11

2. ஓர் எண்ணில் 12% ஆனது 40 எனில், அந்த எண் யாது?

விடை : 333(1/3)

விளக்கம்:
அந்த எண்ணை x என எடுத்துக்கொள்வோம்.
(12 / 100)* x = 40
12 x = 40 * 100
x = (40 * 100) / 12
x = 1000 / 3
x = 333(1/3)

3. கூட்டு விகித சமன்பாடு காண்க : (2 : 5) (3 : 4) (4 : 9)

விடை : 2 : 15

விளக்கம்:
கூட்டு விகித சமன்பாடு = (A/B ) * (B / C) * (C / D)
= (2/ 5) * (3 / 4) * (4 / 9)
= 2/15
(2 : 5) (3 : 4) (4 : 9)-ன் விகிதம்
= 2 : 15

4. 10, 17, 15, 7, 40, 5, 22, 11 இவற்றின் இடைநிலை காண்க?

விடை : 13

  விளக்கம்:
கொடுக்கப்பட்ட எண்களை ஏறுவரிசையில் எழுத வேண்டும்.
5, 7, 10, 11, 15, 17, 22, 40
இடைநிலை
= (11+15) / 2
= 26 / 2
இடைநிலை = 13

5. 32 மாணவர்களின் சராசரி வயது 10. ஆசிரியர் வயதைச் சேர்த்தால் சராசரி 11 ஆகிறது எனில், ஆசிரியரின் வயது என்ன?

விடை : 43

விளக்கம்:
32 மாணவர்களின் சராசரி வயது = 10
32 மாணவர்களின் வயதின் கூடுதல்
= 32 * 10
= 320
ஆசிரியரின் வயதைச் சேர்த்தால் சராசரி வயது = 11
மொத்த வயது = (33 * 11)
= 363
32 மாணவர்களின் வயது = 320
ஆசிரியரின் வயது = (363 - 320)
= 43

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...