🔵👑🔵👑🔵👑🔵👑
*🟪🌟தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் இன்று ஒரு தகவல்*
🔵👑🔵👑🔵👑🔵👑
*🟤🔥48. முதுமையில்*
*மனநோய்*
🔵👑🔵👑🔵👑🔵👑
🟢🌟இன்று ஒரு தகவல் -லே மன நோயைப் பற்றி அடிக்கடி பேசிக்கிட்டிருக்கோம்!
🟢🌟ஏன்? னு எனக்கும் தெரியலே... தற்செயலா அடிக்கடி இதைப் பத்தி பேசறாப்போல ஆயிடுது!
🟢🌟சின்னப் பிள்ளைங்களுக்கு மனசு எப்படி பாதிக்கப்படுதுங்கறதைப் பத்தி ஒரு நாள் பேசிக் கிட்டிருந்தோம்.
🟢🌟வயசானவங்களுக்கு மனசு எப்படி பாதிக்கப் படுதுங்கறதைப் பத்தி இன்னைக்குப் பேசப் போறோம்!
🟢🌟மன நோய்ங்கறது ஒரு பொதுவான நோய்...
🟢🌟இது எல்லாருக்கும் வர்றதுக்கு வாய்ப்பு இருக்கு... இருந்தாலும் இளமையின் தொடக்கத் திலேயும், முதுமையின் தொடக்கத்திலேயும் இது அதிகமா ஏற்படறதுண்டாம்.
🟢🌟வயசான காலத்துலே இது ஏன் அதிகமா வருது தெரியுமா? அந்த சமயத்துலே மூளையோட செயல்திறன் பாதிக்கப்படுது. அதனாலே மத்த வங்களை விட இவங்களுக்கு அதிகமா மன நோய் வர்றதுக்கு வாய்ப்பு இருக்கு!
🟢🌟அது வரைக்கும் தனியா சுதந்திரமா இருந்தவங்க.. வயசானதுக்கப்புறம் அடுத்தவங்களை எதிர் பார்த்து இருக்க வேண்டிய சூழ்நிலை.
🟢🌟சமூக ரீதியா பார்த்தாலும், பொருளாதார ரீதியா பார்த்தாலும், உடல் நல ரீதியா பார்த்தாலும் இவங்கள்லாம் மற்றவர்களை சார்ந்திருக்க வேண்டிய நிலை!
🟢🌟சுறுசுறுப்பா எல்லா வேலையும் செஞ்சிட்டிருந்தவங்க.... சும்மாவே உக்கார்ந்திருக்க வேண்டிய சூழ்நிலை! இதனாலே தான் மனசு கெட்டுப் போவுது!
🟢🌟முதியவர்களுக்கு ஏற்படற மனநிலை பாதிப்பை மூணு வகையா பிரிக்கிறாங்க!
🟢🌟ஒண்ணு - மனக்குழப்பம் - Confusion.
🟢🌟ரெண்டு - அறிவுத்திறன் வீழ்ச்சி - Dementia
🟢🌟மூணாவது - மனத்தளர்ச்சி நோய் Depression.
🟢🌟இரத்தக் குழாய்கள்லே ஏற்படற மாற்றங்களாலே மூளைக்குத் தேவையான சத்து குறைஞ்சு போவுது!
அதனாலே மூளை சரிவர வேலை செய்யாமே ஒரு விதமான குழப்பம் ஏற்பட்டுப் போவுது.
இந்த நிலைமையிலே, நல்லா இருக்கிற ஒருத்தர் திடீர்ன்னு தம்முடைய சுற்றுப் புறத்தையே மறந்துடுவார்.
🟢🌟நாம எங்கேயிருக்கிறோம் என்ன செய்யிறோம் நம்மை சுற்றி என்ன நடக்குது? யார் யார் இருக்காங்க...?
🟢🌟ஒண்ணும் புரியாது!
🟢🌟நேரம் காலம் இடம் தெரியாமே அவரும் குழம்புவார். அடுத்தவங்களையும் குழப்புவார்!
🟢🌟இல்லாததை இருக்கிறதா நினைப்பார்... பயந்த நிலையிலேயே காணப்படுவார்.
இந்த நிலை சில நொடிகள் முதல் சில மணி நேரம் வரைக்கும் நீடிக்கலாம். அப்புறம் சரியாயிடும்!
🟢🌟இப்படி ஏற்படறதுக்கு காரணம் தெரியுமா?
🟢🌟மூளைக்குப் போற ரத்தம் திடீர்ன்னு குறைஞ்சு போறது!
🟢🌟தூக்க மாத்திரை, நரம்புத் தளர்ச்சிக்குக் கொடுக்கிற மாத்திரை இது மாதிரி சில மருந்துகளாலேயும் மனக் குழப்பம் உண்டாகும்!
🟢🌟உடம்புலே மற்ற பாகங்கள்லே நோய்க் கிருமிகள் பாதிப்பு இருந்தாலும் மனக் குழப்பம் வரும்...
🟢🌟அடிப்படைக் காரணம் என்னன்னு கண்டு பிடிச்சி அதுக்குத் தகுந்த மாதிரி சிகிச்சை குடுக்கணும்!
*🟢🌟தொடரும்*