Saturday, 20 May 2017

பிரதமர்கள்

பிரதமர்கள் பதவிக்காலம்
1. ஜவாஹர்லால் நேரு 1947-1952
2. ஜவாஹர்லால் நேரு 1952-1957
3. ஜவாஹர்லால் நேரு 1957-1962
4. ஜவாஹர்லால் நேரு 1962-1964
5. குல்சாரிலால் நந்தா 1964-1964
6. லால்பகதூர் சாஸ்திரி 1964-1966
7. குல்சாரிலால் நந்தா 1966-1966
8. இந்திரா காந்தி 1966-1967
9. இந்திரா காந்தி 1967-1971
10. இந்திரா காந்தி 1971-1977
11. மொரார்ஜி தேசாய் 1977-1979
12. சரண் சிங் 1979-1980
13. இந்திரா காந்தி 1980-1984
14. ராஜீவ் காந்தி 1984-1989
15. வி.பி. சிங் 1989-1990
16. சந்திரசேகர் 1990-1991
17. பி.வி. நரசிம்ம ராவ் 1991-1996
18. அடல் பிஹாரி வாஜ்பாய் 1996-1996
19. எச்.டி தேவகௌடா 1996-1997
20. ஐ.கே. குஜ்ரால் 1997-1998
21. அடல் பிஹாரி வாஜ்பாய் 1998-1999
22. அடல் பிஹாரி வாஜ்பாய் 1999-2004
23. மன்மோகன் சிங் 2004-2009
24. மன்மோகன் சிங் 2009-2014
25. நரேந்திர மோடி 26.5.2014

Friday, 19 May 2017

*Dadabhai Naoroji*

1. Who is the founder of East India Association ?
*Answer: Dadabhai Naoroji*

2. Who is the father of Indian politics ?
 *Answer: Dadabhai Naoroji*

3. Who is the father of Indian economics ?
 *Answer: Dadabhai Naoroji*

4. Who is the father of Indian Politics ?
 *Answer: Dadabhai Naoroji*

5. Who is the creator of Drain theory ?
 *Answer: Dadabhai Naoroji*

6. Who is the creator of Brain Drain theory ?
 *Answer: Dadabhai Naoroji*

7. Who is the first Indian elected to British parliament ?
 *Answer: Dadabhai Naoroji*

8. Who coined the name Indian National Congress (INC) ?
 *Answer: Dadabhai Naoroji*

9. Who used the word ' Swaraj ' firstly ?
 *Answer: Dadabhai Naoroji*

10. Who is the first Indian to calculate the national Income ?
 *Answer: Dadabhai Naoroji*

11. Who was the Second President of Indian National Congress ?
 *Answer: Dadabhai Naoroji*

12. Who has the nick name " Grand old man of India " ?
 *Answer: Dadabhai Naoroji*

13. Who wrote the book " Poverty and Un-British Rule in India " ?
 *Answer: Dadabhai Naoroji*

14. What is the name of news paper started by Voice of India ?
 *Answer: Dadabhai Naoroji*

Tnpsc group IIA

#TNPSC குருப் - II அ தேர்வில் வெற்றி பெற.

குரூப் 2 அ தேர்வானது பொது அறிவு75 அறிவுக்கூர்மை பாடத்திலிருந்து 25 கேள்வி களும் பொதுதமிழ் /general english பாடத்திலிருந்து 100 கேள்விகளும் உள்ளடங்கிய 300 மதிப்பெண் களுக்கான தேர்வாக நடத்தப்படும். இவற்றுள் அதிகமான சரியான விடைகளை யார் அளிக்கிறார்களோ, அவர்களே வெற்றிப் பெற முடியும்.
சரி.வெற்றி பெறுமளவுக்கு மதிப்பெண் களை பெறுவது எப்படி? முதலில் சிலபஸை தெரிந்துக்கொள்ளுங்கள்.சிலபஸை தெரியாமல் படிப்பது என்பது சேர வேண்டிய இடம் தெரியாமல் பயணம் செய்வது போன்றதாகும். அதனால் முதலில் சிலபஸை முழுமையாக படியுங்கள். டி.என்.பி.எஸ்.சி- யானது இத்தேர்வுக்கான சிலபஸை பொது அறிவு, பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் உள்ளடக்கியதாக வெளியிட் டுள்ளது. பொது அறிவு சிலபஸில் இந்திய வரலாறு, இந்திய சுதந்திரப் போராட்டம், இந்திய பண்பாடு, தமிழக வரலாறு மற்றும் பண்பாடு, பொது புவியியல் மற்றும் இந்திய புவியியல், இந்திய அரசியலமைப்பு மற்றும் அரசியல், பொது அறிவியல் (இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல்), இந்திய பொருளாதாரம் மற்றும் நடப்புகால நிகழ்வுகள், பொது அறிவு (இந்தியா, தமிழ்நாடு), அறவியல் என இவை அனைத்தும் பொது அறிவு பாடத்தில் உள்ளடங்கியிருக்கும். இவைகளிலிருந்து75 வினாக்கள் கேட்கப்படுகிறது.
அறிவுக்கூர்மை பகுதியில் 25. வினா.
பொதுத் தமிழில் பொருத்துக, தொடரும் தொடர்பு அறிதல், பிரித்தெழுதுக, பிழைத் திருத்தம் என இருபது பாடப் பிரிவுகளை உள்ளடக்கிய சிலபஸ் ஒன்றை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதில் ஒவ்வொரு பாடத்திலிருந்தும் ஏறக்குறைய ஐந்து வினாக்கள் வீதம் நூறு வினாக்கள் கேட்கப்படும். பொது அறிவு, அறிவுக்கூர்மை,பொதுத் தமிழ் பாடத்திலிருந்து 300 மதிப் பெண்களுக்கு இவ்வீதமாக வினாக்கள் கேட்கப்படுகிறது.
இந்தப் பாடப்பிரிவுகளை உள்ளடக்கிய நூல்களை மட்டும் வாங்கிப் படியுங்கள். படிக்கும் போது நீங்கள் தேர்வு எழுதபோவது பட்டப் படிப்பு தரத்திற்கானது என்பதை மறந்து விடாதீர்கள். ஏனெனில் தோல்வி அடையும் நிறையபேர் பத்தாம் வகுப்பு தரத்திற்கே படிப்பதால் தேர்வு மையத்தில் வினாத்தாளை கண்டவுடன் குழம்பிவிடு கின்றனர். அதே போல நிறைய பயிற்சி மையங் களிலும் மாணவர்களிடம் பயிற்சிக் கட்ட ணத்தை பெற்றுக்கொண்டு, பத்தாவது தரத்திற்கான பாடக்கையேடுகளை (Study Materials) வழங்குவதும், பயிற்சி தருவதும் தோல்விக்கான அடிப்படை காரணங்கள். அதனால் தேர்வுக்கு தயார் செய்யும் போது பட்டப்படிப்பு தரத்திற்கு படிக்க வேண்டும். தொடர்ந்து படியுங்கள் அதனை நீங்களே மாதிரி தேர்வு எழுதிப் பாருங்கள். கணிதம், பொதுத் தமிழில் வரும் குறிப்புகள் போன்றவை அனைத்தையும் பயிற்சி செய்து பாருங்கள். தொடர்ந்து நீங்கள் செய்யும் பயிற்சிதான் வெற்றிக்கு வழிவகுக்கும்.
இந்த வருடம் TNPSC குரூப் IIஅ தேர்வு முந்தைய வருடத்தைவிட மிகவும் கடினமாக இருக்கும். பல லட்சம் பேர் விண்ணப்பிக்கும் போது போட்டித் தேர்வின் தரத்தை மேம் படுத்த TNPSC சமீபக்காலங்களில் கடினமான கேள்விகளை தயாரித்து வருகிறது. சென்ற ஆண்டு குரூப் - II அதேர்வில் வழக்கத்திற்கு மாறாக கடினமான கேள்விகள் கேட்கப் பட்டது. அதேபோல் இந்த குரூப் - IIஅ தேர்வு நிச்சயம் மிகமிக கடினமாகதான் இருக்கும். இத்தேர்வில் வெற்றிப் பெறுவதற்கு தேவையான 20-25வினாக்கள் UPSC தரத்தில் கேட்பார்கள். இவற்றை சரியாக அணுகினால்தான் இத்தேர்வில் வெற்றிப் பெற்று பணியில் சேர முடியும்.
இந்த கடினமான போட்டித் தேர்வில் வெற்றிப் பெறுவதில் பயிற்சி மையங்களின் பணி மகத்தானது. ஆனால் இப்போது உங்கள் முன் இருக்கும் கேள்வி எந்த பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து படிப்பது என்பதுதான். அதை கண்டுப்பிடிக்க ஒரு அளவுகோல் உள்ளது. அதன்படி எந்த பயிற்சி மையம்,
பொதுத் தமிழில் /பொது ஆங்கித்தில் 100% மதிப்பெண்களை பெற்றுத்தருகிறதோ,எந்த பயிற்சி மையம் வழங்கும் பாடக்கையெடுகள் (Study Materials) முந்தைய வினாக்களுக்கான சரியான விடை களை உள்ளடக்கியதாக இருக்கிறதோ,
எங்கு தினமும் நடத்தப்படும் பாடங்களில் வகுப்பறையிலேயே 50% பாடங்கள் மனதில் பதிய வைத்து விடுகிறார்களோ, அதுவே தரமான சிறந்த பயிற்சி மையமாகும்.
அதனால் சரியான சிறந்த பயிற்சி நிறுவனங்களில் சேருங்கள். வார இறுதியில் (சனி, ஞாயிறு) மட்டும் பயிற்சி தரும் மையங்களில் சேராதீர்கள். நிச்சயம் அத்தகைய பயிற்சி மையங்களால் இத்தேர்விற்கான சிலபஸை உள்ளடக்கிய முழுமையான பயிற்சி வழங்க முடியாது. பணம் போனது போனது தான். அதனால் தினமும் பயிற்சி தரும் மையங்களில் சேர்ந்து படியுங்கள். தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள். இன்னும் சில வாரங்களில் விஏஓ தேர்விற்கான அறிவிக்கை வெளியாகலாம்...

GST

GST - ஜுலை 1ஆம் தேதி முதல் அமுலுக்கு  வர இருப்பதால், அதன் தொடர்பான அனைத்து தகவல்களும், அனைவரும் தெரிந்து கொள்வதிலும், தெரிவிப்பதிலும் கடமைப்பட்டு உள்ளோம்.

1. Second sales  என்பது இல்லை. ஒவ்வொரூ விற்பனையிலும் வரி உண்டு.

2. Online    மூலம் மட்டுமே ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும்.

3.  உள் மாநிலத்தில் செய்யும் வியாபாரத்திற்கு 20 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரே ஒரு வியாபாரம் வேறு மாநிலத்திற்கு செய்தால் வரி விலக்கு இருந்தாலும் கண்டிப்பாக பதிவு செய்து கொண்டு உரிய வரி செலுத்த வேண்டும். ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும். 10,15,20 ஆகிய தேதிகளில் மாதம் 3 தடவை ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும். தாமதமாக செலுத்தும் ஒவ்வொரூ நாளுக்கும் 100 ரூபாய் அபராதம். அதிகபட்சமாக ரூ 5000.

4. Aggregated turnover  என்பது taxable goods +exempted good +Zero rated goods+Export goods ஆகியவற்றின் கூட்டு தொகையாகும்.மேலும் ஒரே PAN number ல் இரண்டு வேறு வேறு வியாபாரங்கள் செய்தால் அவற்றின் கூ ட்டு தொகை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

5. Tin number பெற்றவர்கள் VAT department கொடுக்கும் temporary id &password மூலம் GST portal ல் பதிவு செய்ய முடியும். மற்றவர்கள் விரும்பினால் சட்டம் அமலுக்கு வந்த 30 நாட்களுக்கு உள்ளாக அல்லது முதல் பில் போடுவதற்கு முன்பாக பதிவு செய்து கொள்ளலாம். 10 ந்தேதிக்குள் பதிவு செய்து கொண்டால் அந்த மாதத்திற்குண்டா ITC claim  செய்ய முடியும்.

6. வரி விகிதங்கள் 3 தலைப்புகளாக பிரிக்கப்பட்டு ள்ளது.
 - 1)CGST -  Central goods and service tax.
 - 2)SGST -State goods and service tax.
 - 3)IGST - Integrated goods  and service tax.
இதில் IGST என்பது வேறு மாநிலத்துக்கு விற்பனை செய்யும் போது Invoice ல் குறிப்பிடவேண்டும்.  IGST தலைப்பில் வரி செலுத்த வேண்டும்.   IGST =CGST +SGST.

 IGST  என்பது IT based centrally managed automated mechanism to monitor the "Inter state sales and supply of goods and services.

7.  வரி விதிக்கப்பட்ட பொருட்களை வாங்கும் அல்லது விற்கும் வியாபாரிகள் உரிய நேரத்தில் ரிட்டர்ன் தாக்கல் செய்யாமல் இருந்தால் மற்றொருவரும் பாதிக்கபடுவர். Input tax credit எடுக்க முடியாது. அந்த மாதத்தில் கூடுதல் வரி செலுத்த வேண்டும்.அல்லது அபராதம் செலுத்த நேரிடும்.

8. Invoice ல்  விலை குறிப்பிடும் போது வரி உள்ளடக்கியது என குறிப்பிடமுடியாது. வரி தணியே காண்பிக்க வேண்டும்.அப்போதுதான் அவரிடம் வாங்குபவர் ITC தன்னுடைய ரிட்டர்ன் ல்  காண்பிக்க முடியும்.   Packing charges, freight ஆகியவற்றை வரி கணக்கிடும்போது  சேர்க்க  தேவையில்லை. விற்பனை தொகைக்கு மட்டும் வரி செலுத்த வேண்டும்.

9.Invoiceகள் 3   copy இருக்க வேண்டும். நிதி ஆண்டின் துவக்கத்தில் இருந்து முடியும் வரை தொடர் எண்கள் இருக்கவேண்டும். முறையே buyer, transporter, seller ஆகியோருக்கு 3 காப்பிகள்.உரிய அதிகாரிகளிடம் முன்அனுமதி பெற்று reference number வாங்கி supplementary invoice  போட்டு transport மூலம் சரக்குகள் அனுப்பலாம்.  Supplementary invoice ல் orginal invoice number குறிப்பிடவேண்டும்.  Original invoice ல் reference number குறிப்பிடவேண்டும்.

10. Capital goods க்கும் ITC எடுக்கலாம். ஆனால்அவை Income tax return ல் depreciation claim செய்யாமல் இருக்க வேண்டும். இது குறித்து ஆடிட்டரிடம் கலந்து பேசி முடிவு எடுக்கலாம்.

11. வணிகர்கள் composite scheme மூலம் குறைந்த அளவு வரி செலுத்த முடியும். 50 லட்சம் ரூபாய் வரை "aggregated turnover" உள் மாநிலத்தில் மட்டும் வியாபாரம் செய்பவர்கள் தகுதியானவர்கள்.  ஆனால் ITC எடுக்க முடியாது. சட்டம் அமலுக்கு வந்த30 நாட்களுக்கு உள்ளாக உரிய அனுமதி பெற்று செய்யலாம்.  வாங்கி விற்பவர்கள் மட்டும் தகுதியானவர்கள். உற்பத்தியாளர்களுக்கு அனுமதி இல்லை. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ரிட்டர்ன் தாக்கல் செய்தால் போதுமானது. ஆனால் composite scheme மூலம் வியாபாரம் செய்யும் வணிகர்களிடம் இருந்து வாங்கி வியாபாரம் செய்யும் அடுத்த வணிகர் அதிக அளவில் வரி செலுத்த நேரிடும். முடிந்தவரை composite வணிகர்களிடம் consumer-ஐ தவிர மற்றவர்கள் வியாபாரத்தை தவிர்ப்பது நல்லது.

12. Casual trader என்பவர் ஒரே இடத்தில் நிலையாக வியாபாரம் செய்யாமல் வேறு வேறு இடத்தில் இருந்து வியாபாரம் செய்பவர் ஆகும். உதாரணமாக பண்டிகை காலங்களில் மட்டுமே கல்யாண மண்டபம் மற்றும் வேறு இடங்களில் வியாபாரம் செய்பவர் ஆகும். அவர்கள் வியாபாரம் செய்யும் பொருட்களுக்கு வரி விதிப்பு இருந்தால்    turnover limit ஏதுமின்றி எல்லா விற்பனைக்கும் வரி செலுத்த வேண்டும். 20 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு கிடையாது.
13. Gst சட்டம் அமலுக்கு வந்த பின்னர் நமக்கு மூலப் பொருட்கள் வழங்கும் வியாபாரிகள்  composition  scheme மூலம் வியாபாரம் செய்கிறாரா அல்லது ITC  எடுத்து வியாபாரம் செய்கிறார்களா என 100 சதவீதம் உறுதி செய்து கொள்ளவேண்டும் Consumer- ஐ தவிர மற்றவர்கள் composition scheme மூலம் செய்யும் வியாபாரிகளை தவிர்ப்பது நல்லது. நாம் அதிக அளவில் வரி செலுத்த நேரிடும். நமது வியாபாரம் மற்றவர்களைவிட குறைவாகவே நடக்கும்.

14. வரி விதித்துள்ள பொருட்களை ஒரு வியாபாரி தனது பில்லில் வரி குறிப்பிடாமல் கொடுத்தால் அவர் Composition scheme மூலம் வியாபாரம் செய்கிறார் என்று தெரிந்து கொள்ளலாம்.
 அல்லது 20 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

15. GST ரிஜிஸ்டர் செய்து கொள்ள பதிவு கட்டணம் ஏதும் இல்லை. 20 லட்சம் ரூபாய் வரை  job work செய்பவர்கள் பதிவு செய்து கொள்ள தேவை இல்லை.

16. Job work  கொடுக்கும் உற்பத்தியாளர்கள் உரிய முறையில், உரிய படிவத்தில் கொடுக்கவேண்டும்.180 நாட்களில் திரும்பி வராவிட்டால் அதை விற்பனை என கருதி அபராதம் விதிக்கப்படும்.

17. Inter state self supplies such as stock transfer will be taxable as a taxable person has to take state wise registeration.
 B2C means supplies to unregistered person. (i. e.)business to consumers.
 B2B means supplies to registered person. (i. e.)business to business men.

18. அரசுஅறிவிக்கும் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள தவறியவர்கள் சட்டம் அமலுக்கு வந்த பின்னர் தங்களது  stock பொருட்களுக்கு Input credit கோர முடியாது. ஒரு வணிகர் ஒரு பில்லில் உள்ள ITC  யை பில் தேதிகளில் இருந்து ஒரு வருடத்திற்குள் உபயோகித்து கொள்ள வேண்டும். ஒரு   Invoice ல் bill amount ரூபாய் 5 லட்சத்திற்கும் மேல் இருந்தால் 1%TDS  பிடித்து அடுத்த மாதம் 10 ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

19. வரி செலுத்தும் போது  கீழ்   கண்ட GST account code எழுத வேண்டும்.
CGST -Tax 00010001,          
IGST   -Tax-0002 0001
SGST  -Tax00030001
Interest, fees, penalty, additional tax ஆகியவற்றிற்கு தனி தனி account codeகள்உள்ளன.

20. வரியுள்ள பொருட்களை வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்தால் உள் மாநிலத்தில் அதற்கு வரி செலுத்த வேண்டும் அன்றிலிருந்து மாதாமாதம்  படிவம் தாக்கல் செய்ய வேண்டும் வெளி மாநில வியாபாரங்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு என்பது கிடையாது.

21.Every registered taxable person whose aggregated turnover during a financial year exceeds one crore rupees shall get his account audited and he shall furnish a copy of audited annual accounts and a reconciliation statement duly certified in  FORM GSTR-9B,electronically through a common portal.

22. ஒரு பில்லில் ரூபாய் ஐம்பதாயிரத்திற்கு மேல் வரியுள்ள பொருட்களை
unregistered person க்கு விற்றால் அவருடைய முழு முகவரி மற்றும் டெலிவரி செய்யும் இடம், மாநிலம், மாநில எண்  ஆகியவற்றை பில்லில் குறிப்பிட வேண்டும்.

23. வெளி மாநில வியாபாரங்களுக்கு பில் போடும்போது வரியை IGST   என்ற இடத்தில் குறிப்பிடவேண்டும்.உள்மாநில விற்பனை செய்யும் போது வரியை SGST, CGST    என்ற இடத்தில் குறிப்பிடவேண்டும்.

24.GST வரி செலுத்துபவர்கள் தாங்கள் வாங்கும் பொருட்களுக்கு transport வாடகை கொடுக்கும் போது transporter  கொடுக்கும் invoice  ல் உள்ள tax யை  ITC-யாக எடுத்துக்கொள்ளலாம்.

 25. வருடாந்திர ரிட்டர்ன் அடுத்து நிதியாண்டு 31 டிசம்பருக்குள் தாக்கல் செய்ய வேண்டும். Compsition scheme மூலம் வியாபாரம் செய்பவர்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை Form GSTR-4,GSTR -4  A  ஆகிய 2 படிவங்களும் GSTR-9A என ஒரு வருடாந்திர படிவமும்
 தாக்கல் செய்ய வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வரி செலுத்த வேண்டும். வெளி மாநில purchase &sales செய்யக்கூடாது.

26. ஒரு வியாபாரி வேறு மாநில    Consumer அல்லது unregistered person க்கு விற்றால்,    அதன் மதிப்பு ரூ 2,50,000 க்கு மேல் இருந்தால்அந்த invoice details GSTR-1 ரிட்டர்னுடன் upload செய்ய வேண்டும். ரூ 2,50,000  க்கு குறைவாக  இருந்தால் மாநில வாரியாக மொத்த விற்பனை மதிப்பு மட்டும் தெரிவித்தால் போதுமானது.

27. ஒரு மாதத்தில் ஒரு சலான் மூலம் ரூ. 10,000 வரையே cash,cheque, அல்லது DD மூலம் வரி செலுத்த முடியும்.  அதற்கு மேல் எதுவும் செலுத்த வேண்டி இருந்ததால் Internet banking, credit card, debit card, RTGS  மற்றும் NEFT மூலம் செலுத்த வேண்டும். NEFT  அல்லது RTGS மூலம் செலுத்துவதாக இருந்தால் சலானுடன் இணைந்து வரும்  form உடன்  பேங்கி ல் கொடுக்க வேண்டும்.
 விற்பனையை அதிகரிக்க கொடுக்கும் இலவச பொருட்களுக்கு ம் வரி செலுத்த வேண்டும்.
28. GST slab rates are 5%,12%,18%,28%.

29. Job work  "service " என்ற தலைப்பில் வரும். Job work செய்த இடத்தில் இருந்து நம் பார்ட்டிகளுக்கு பொருட்கள் அனுப்புவதாக இருந்தால் அவர் Unregistered job worker ஆக  இருந்தால் அவருடைய முழு முகவரிநம் ரிஜிஸ்டரேசன் சர்டிபிகேட்டில் இடம் பெற வேண்டும்.

30. ஒரு unregistered jobworker - யிடம் jobwork கொடுக்கும் போது ஏற்படும் வேஸ்ட்களை அவர் விற்றால், அதற்கான வரியை நாம் செலுத்த வேண்டும்.

31. நாம்  அனுப்பிய சரக்குகளை ஏதாவது ஒரு காரணத்துக்காக நம் பார்ட்டி திருப்பி அனுப்பினோலோ அல்லது விலை வித்தியாசம் கேட்டாலோ அல்லது  அவராகவே குறிப்பிட்ட தொகையை ஒரு பில்லில் பிடித்துக்கொன்டு மீதி அனுப்பினாலோ நாம் அவருக்கு GST  சட்டத்தின்படி credit note அனுப்ப வேண்டும். அதை அந்த மாத ரிட்டர்னில் தெரிவிக்க வேண்டும்.  நம் பார்ட்டியும்  அவருடைய ரிட்டர்னில் தெரிவிக்க வேண்டும்.

32.Registered taxable person அட்வான்ஸ் வாங்கினால் அதை பற்றிய தகவல்களுடன் receipt voucher கொடுக்க வேண்டும்.

33. வரியானது பைசா கணக்கில் வந்தால் nearest rupee கணக்குப்படி round off செய்து கொள்ளலாம்.

34. நாம் வாங்கிய  Raw Material  (taxable goods )நமக்கு வேண்டாம் என்று வாங்கியவர்களிடம் திருப்பி கொடுப்பதாக இருந்தால் 6 மாதத்திற்குள் திருப்பி கொடுத்து விட வேண்டும். ITC reverse செய்ய வேண்டும்.

35. PAN number இல்லாமல் ஒரு வியாபாரி வேறு மாநில வியாபாரிக்கு பொருட்கள் அனுப்ப முடியாது

36. ஒரு கோடியே ஐம்பது லட்சம் வரை  turnover செய்பவர்கள் Invoice ல்  HSN code   குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. ஐந்து கோடி வரை  turnover  செய்பவர்கள் முதல் 2 degit  HSN code குறிப்பிட வேண்டும்.

37. வண்டிகளில் பொருட்களை கொண்டு செல்லும் போது, வண்டியில்  உள்ள பொருட்களின் மொத்த மதிப்பு ரூ ஐம்பதாயிரத்தை தாண்டினால் வண்டியில்  உள்ள ஒவ்வொரு பொருட்களுக்கும் உரிய ஆவணங்களை கேட்க  அதிகாரிகளுக்கு உரிமை உண்டு.

38. Composition scheme மூலம் வியாபாரம் செய்பவர்கள் வரியுள்ள பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். வரியற்ற பொருட்களை விற்பனை செய்ய கூடாது.

39. 50 லட்சம் ரூபாய் வரை turnover உள் மாநிலத்தில் மட்டும் வியாபாரம் செய்யும்  உற்பத்தியாளர்கள் Composition scheme மூலம் வியாபாரம் செய்ய தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

40.GST கவுன்சிலால் குறிப்பிடப்படும் பொருட்களை தயார் செய்யும் manufacturer மட்டுமே Composition scheme மூலம் வியாபாரம் செய்ய முடியும்.

41. அரசு சில சமயம் சில பொருட்களுக்கு "reverse charge "முறையில் வரி விதிக்கும். அப்போது வாங்குபவர்கள் தான் வரி செலுத்த வேண்டும்.

42. Aggregated turnover கணக்கிடும்போது value of supply கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.  அதாவது ஒரு பில்லில் உள்ள மொத்த மதிப்பு  ஆகு‌ம். Commission,freight, packing  charges  சேர்த்து கணக்கிடபடும்.discount சேராது.

43. GST நம்பர் எடுத்திருந்தால், வரி விலக்கு பொருட்களை விற்பனை செய்தாலும் கண்டிப்பாக  nil ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும்.

44. GST நம்பர்  எடுத்திருந்தாலே ஒவ்வொரு மாதமும் 3 முறை ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும். வியாபாரம்  இல்லை என்றாலும் nil  ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும்.

45. Composition scheme மூலம் வியாபாரம் செய்பவர்கள் வரி விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்தால், பொருளின் மதிப்பு ரூ 100 க்கு மேல் இருந்தால் அவர் Tax invoice க்கு  பதிலாக வேறு பில் கொடுக்கலாம்.Section 28 .3 (b).

46. பில்லில் வரியை தவறுதலாக குறிப்பிட்டுவிட்டால் அதை சரி செய்ய Credit note /debit note கொடுத்து சரி செய்ய வேண்டும்.

47. GST நம்பர் எடுத்தவர்கள் தான் விற்கும் பொருட்களுக்கு முன்பணம் வாங்கியிருந்தால் receipt voucher கொடுக்க வேண்டும்.  அதை ரிட்டர்னில் தெரிவிக்க வேண்டும். Section 33.

48. நாம் தெரிவிக்கும் ரிட்டர்னில்  ஏதாவது தவறு  அல்லது  விடுபட்டிருந்தாலோ, அதை சரி செய்யும் நாள் வரை  உண்டான வரியை வட்டியுடன் செலுத்த வேண்டும்.

49. முதன் முதலாக நாம் தெரிவிக்கும் ரிட்டர்னில் உள்ள input credit amount  (நம்மிடம் உள்ள stock பொருட்களுக்கு )provisional ஆக  எடுத்துச் கொள்ளப்படும்.  வித்தியாசம் இருந்தால் உரிய நடைமுறை பின்பற்றப்படும். Section 36

50. GST சட்டத்தின்படி கணக்கு புத்தகங்களை, மற்ற  ஆவணங்களை வருடாந்திர ரிட்டர்ன் தாக்கல் செய்த பிறகு வரும் 60  மாதங்கள் வரை வைத்திருக்க வேண்டும்.

51. ரூபாய் ஒன்றறை கோடி வரை  டர்ன்ஓவர் செய்யும் வியாபாரிகளில் 90 சதவீதம் மாநில அரசும் மீதி 10 சதவீதத்தை மத்திய அரசும் கண்காணிக்கும்.
52. 15 நாள் நோட்டிஸ் கொடுத்து நமது இடத்தில்  ஆவணங்களை, பொருட்களை பார்த்து ஆடிட் செய்ய  அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. Section 63

53 GST வரி வசூலித்த பிறகு, அந்த வரியை  அரசுக்கு செலுத்தாமல் இருந்தால், பல கட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு, வியாபாரியின் சொத்தின்மீது நடவடிக்கை எடுக்க  அரசுக்கு  அதிகாரம் உள்ளது.

54. ஒரு வியாபாரியிடம் கணக்கிற்கு மேல் பொருட்கள் இருந்தால் அதை பறிமுதல் செய்ய  அதிகாரிகளுக்கு  அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

55. GST சட்டத்தின்படி மற்ற  அரசு  அதிகாரிகளும் GST  அதிகாரிகளுக்கு உதவ  அதிகாரம்  அளிக்கப்பட்டுள்ளது.

56. GST சட்டத்தை மீறுபவர்கள் மீது அதிக பட்சம் 25000 ரூபாய் வரை  அபராதம் விதிக்கப்படும்.  Section 85

57. சிறிய தவறுகளுக்கும், ரிட்டர்னில் தவறுதலாக  என்ட்ரி செய்திருந்தாலும் அபராதம் விதிக்க தடை செய்யப்பட்டுள்ளது.  அதிகபட்சமாக ரூ 5000 வரை தவறு  இருந்தால் திருத்திக்கொள்ள  அபராதம்  இல்லாமல் அனுமதிக்கப்படுகிறது.  Section 86

58. GST சட்டத்தின்படி முறையான  ஆவணங்கள்  இல்லாமல் பொருட்களை  கொண்டு  செல்லும் போது வழியில் அதிகாரிகள் சோதனை செய்தால் உரிமையாளர் தானே முன்வந்து வரி மற்றும் 100 சதவீதம்  அபராதம் செலுத்தினால் வண்டியும், பொருட்களும் விடுவிக்கப்படும். இல்லாவிட்டால் வரியும், பொருட்களின் மதிப்பில் 50 சதவீதம் செலுத்திய பிறகு  வண்டியும், பொருட்களும் விடுவிக்கப்படும். Section 89

59. Parnership வியாபாரங்களில் இருந்து ஏதாவது ஒரு பார்ட்னர் விலகுவதாக  இருந்தால் 30 நாட்களுக்குள் கடிதம் மூலம் கமிஷனருக்கு தெரியப்படுத்த வேண்டும்.

60. Cenvat படி itc எடுக்க விரும்பினால் சட்டம் அமலுக்கு வந்த 90  நாட்களுக்கு முன்பு இருந்த பில்லில் உள்ள ITC யை மட்டும் ஏற்றுக் கொள்ளப்படும்  .Section 167.

61. ஆர்டர், சம்மன் போன்றவற்றை வியாபாரியின்e-mail முகவரிக்கு அனுப்பினாலே  அது பதிவு தபாலில் அனுப்பியதற்கு சமம் என்று Section 159 ல் கூறப்பட்டுள்ளது.

62. புட்டா கட்டிங் செய்வது, துணிகளுக்கு பிராசசிங் ,கேலண்டரிங்,பிரிண்டிங் செய்வது service என்ற தலைப்பில் வரும். Schudule-2

63. "Mutatis mutandis" means "the necessary changes having been made ".
 Composition scheme மூலம் வியாபாரம் செய்பவர்கள் வெளி மாநில purchase செய்யலாம், வெளி மாநில sales செய்யக்கூடாது.

64. நாம் 30 ம் தேதி பொருட்களை அனுப்பி அது  அடுத்த மாதம் 16ம் தேதி நமது பார்ட்டிக்கு  கிடைத்தால் GST  சட்டத்தின்படி 30ம்தேதியே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.  அடுத்த மாதம் நாம் அதற்கு வரி செலுத்த வேண்டும்.  ஆனால் 10 ம் தேதிக்குள் நமது பில்  பார்ட்டிக்கு கிடைத்தால் மட்டுமே அவர் ITC எடுக்க முடியும். நமது பில்லும் ஏற்றுக் கொள்ளப்படும்.  இல்லாவிட்டால் mismatch என  இருவருக்கும் notice வரும்.

65. வரி விகிதத்தில் மாற்றம்  ஏற்படும் போது  "time of supply "என்பது invoice தேதி அல்லது பணம் வந்த தேதி இதில் எந்த செயல்  முதலில் நடந்ததோ அது ஏற்றுக் கொள்ளப்படும்.

66. நாம் நமது பார்ட்டிகளுக்கு தாமதமாக payment செய்து அதற்கு வட்டி, அபராதம் போன்றவற்றை செலுத்தி இருந்தால் அவையும் "Aggregated turnover "கணக்கிடும்போது சேர்த்துக் கொள்வர்.

67.Partnership firm ல் partner change நடந்தால் அதை தெரியப்படுத்தி புதிய registration செய்து கொள்ள வேண்டும்.

68.Original registration certificate கிடைத்த பிறகு, அந்த நாள் வரை  ஏற்கனவே கொடுத்த  invoiceகளுக்கு பதிலாக வேறு revised invoice பார்டிகளுக்கு கொடுக்கவேண்டும். Section 28

69. நாம் பில்லில் தெரிவிக்கும் விலையின் மதிப்பு குறைவாக இருப்பதாக கமிஷனர் கருதினால் நமது கணக்கு புத்தகங்களை வேறு சார்ட்டர்ட் அக்கவுண்ட்டிடம் கொடுத்து தணிக்கை செய்ய கமிஷனருக்கு  அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான செலவை நாம் கொடுக்க வேண்டும்.  Section 68

70. Rawmaterial suppliers, manufacturers,(நாம் ),buyers ஆகிய மூவரும் சரியான நேரத்தில் சரியான முறையில் சரியான படிவங்களை பூர்த்தி செய்தால் மட்டுமே ஒவ்வொரு வரும் ITC CLAIM செய்ய முடியும். Section 64.

அனைவருக்கும் பகிர்வது அவசியம்.

Tuesday, 16 May 2017

ESMA

*எஸ்மா சட்டம் சொல்வது என்ன?*

1981-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த அத்தியவாசிய சேவைகள் பராமரிப்புச் சட்டம், போராட்ட காலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் தடுக்க மாநில அரசுகளுக்கு கூடுதல் அதிகாரங்களை கொடுக்கிறது.

அதன்படி, தபால், தந்தி, தொலைபேசி உள்ளிட்ட தொலைத்தொடர்பு, விமானம், ரயில், சாலை போக்குவரத்து போன்றவை அத்தியாவசிய சேவைகள் பட்டியலில் வருகின்றன. மத்திய, மாநில அரசுகளின் உணவுப் பொருள் கொள்முதல், விநியோகம் போன்ற துறைகளும், பாதுகாப்பு, துறைமுகங்கள் போன்றவையும் இந்த சட்டத்தின் கீழ் உள்ளன. மின்சாரம், குடிநீர், பால் விநியோகம், வங்கி போன்றவற்றையும் அத்தியாவசிய சேவைகளாக கருத இச்சட்டம் வகை செய்கிறது.

அத்தியாவசிய சேவைகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் வேலைநிறுத்தம், ஸ்டிரைக் போன்ற போராட்டங்களில் இறங்குவதை இச்சட்டம் தடை செய்கிறது. வேலைநிறுத்தத்தில் பங்கேற்பதோ, போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதோ, தேவையேற்படும் பட்சத்தில் கூடுதல் நேரம் வேலை செய்ய மறுப்பதோ கூட சட்ட விரோதம்தான்.

அவ்வாறு போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களை வாரண்ட் ஏதுமின்றி கைது செய்யும் அதிகாரம் காவல்துறையினருக்கு உண்டு. அரசு ஊழியர்கள் எனில் பணி நீக்கம், அத்தியாவசிய சேவைத்துறையில் உள்ள பிற தொழிலாளர்களுக்கு ஓராண்டு சிறை அல்லது 2 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்க இச்சட்டம் வகை செய்கிறது.

2002-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்த போது, சுமார் 2 லட்சம் பேரை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா பணி நீக்கம் செய்தது இச்சட்டத்தை பயன்படுத்தியே. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகே, நீக்கப்பட்ட ஊழியர்கள் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


எஸ்மா சட்டம் என்றால் என்ன?


1981-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த அத்தியவாசிய சேவைகள் பராமரிப்புச் சட்டம், ( Essential Services Maintenance Act – esma) போராட்ட காலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் தடுக்க மாநில அரசுகளுக்கு கூடுதல் அதிகாரங்களை கொடுக்கிறது. அதன்படி, தபால், தந்தி, தொலைபேசி உள்ளிட்ட தொலைத்தொடர்பு, விமானம், ரயில், சாலை போக்குவரத்து போன்றவை அத்தியாவசிய சேவைகள் பட்டியலில் வருகின்றன. மத்திய, மாநில அரசுகளின் உணவுப் பொருள் கொள்முதல், விநியோகம் போன்ற துறைகளும், பாதுகாப்பு, துறைமுகங்கள் போன்றவையும் இந்த சட்டத்தின் கீழ் உள்ளன. மின்சாரம், குடிநீர், பால் விநியோகம், வங்கி போன்றவற்றையும் அத்தியாவசிய சேவைகளாக கருத இச்சட்டம் வகை செய்கிறது.
அத்தியாவசிய சேவைகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் வேலைநிறுத்தம், ஸ்டிரைக் போன்ற போராட்டங்களில் இறங்குவதை இச்சட்டம் தடை செய்கிறது. வேலைநிறுத்தத்தில் பங்கேற்பதோ, போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதோ, தேவையேற்படும் பட்சத்தில் கூடுதல் நேரம் வேலை செய்ய மறுப்பதோ கூட சட்ட விரோதம்தான்.
அவ்வாறு போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களை வாரண்ட் ஏதுமின்றி கைது செய்யும் அதிகாரம் காவல்துறையினருக்கு உண்டு. அரசு ஊழியர்கள் எனில் பணி நீக்கம், அத்தியாவசிய சேவைத்துறையில் உள்ள பிற தொழிலாளர்களுக்கு ஓராண்டு சிறை அல்லது 2 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்க இச்சட்டம் வகை செய்கிறது.
2002-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்த போது, சுமார் 2 லட்சம் பேரை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா பணி நீக்கம் செய்தது இச்சட்டத்தை பயன்படுத்தியே. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகே, நீக்கப்பட்ட ஊழியர்கள் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Monday, 15 May 2017

ஸ்மார்ட் கார்டு குறியீடுகள்

*🔖ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகள் பற்றி தெரியுமா ?*♨


தமிழகத்தில் ஏப்ரல் மாதம் முதல் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த ஸ்மார்ட் கார்டுகளில் ஐந்து வகை உள்ளது.

இந்த ஐந்து வகை குறியீடுகள் என்ன குறிக்கின்றது என்பதை பார்ப்போம்...

*🔖PHHRICE குறியீடு :*

ஸ்மார்ட் ரேஷன் கார்டில் இந்த குறியீடு இருந்தால் அரசி, பருப்பு, எண்ணை உள்ளிட்ட ரேஷன் கடைகளில் அளிக்கப்படும் அனைத்துப் பொருட்களையும் பெறலாம்.

*🔖PHAA குறியீடு :*

ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் இந்த குறியீடு இருந்தால் 35 கிலோ அரிசி மற்றும் அனைத்துப் பொருட்களும் கிடைக்கும்.

*🔖NPHH அல்லது NPHH-L குறியீடு :*

இந்த குறியீடு குறிப்பிடபப்ட்டு இருந்தால் அரிசி உட்பட அனைத்துப் பொருட்களும் கிடைக்கும்.

*🔖NPHHS குறியீடு :*

இந்த குறியீடு உள்ள கார்டில் சர்க்கரை மட்டும் தான் கிடைக்கும்.

*🔖NPHHNC குறியீடு :*

இந்த குறியீடு கொண்ட அட்டையில் எந்தப் பொருட்களும் கிடைக்காது. இதனை ஒரு அடையாள அட்டையாக மட்டும் பயன்படுத்த முடியும்.

👍---–------👍

Sunday, 14 May 2017

*Swachh Bharat 2017*

*Swachh Bharat 2017*

Here is the complete list of cities covered in the  Swachh Bharat 2017 survey and their rankings:

Ranking City State

1 Indore Madhya Pradesh
2 Bhopal Madhya Pradesh
3 Visakhapatnam (Vizag) Andhra Pradesh
4 Surat Gujarat
5 Mysuru (Mysore) Karnataka
6 Tiruchirappalli (Trichy) Tamil Nadu
7 New Delhi Municipal Council (NDMC) Delhi
8 Navi Mumbai Maharashtra
9 Tirupati Andhra Pradesh
10 Vadodara Gujarat
11 Chandigarh Chandigarh
12 Ujjain Madhya Pradesh
13 Pune Maharashtra
14 Amdavad (Ahmedabad) Gujarat
15 Ambikapur Chattisgarh
16 Coimbatore Tamil Nadu
17 Khargone Madhya Pradesh
18 Rajkot (M. Corp) Gujarat
19 Vijayawada Andhra Pradesh
20 Gandhinagar (NA) Gujarat
21 Jabalpur Madhya Pradesh
22 Greater Hyderabad Municipal Corporation (GHMC) Telangana
23 Sagar Madhya Pradesh
24 Murwara (Katni) Madhya Pradesh
25 Navsari Gujarat
26 Vapi Gujarat
27 Gwalior Madhya Pradesh
28 Warangal Telangana
29 Greater Mumbai Maharashtra
30 Suryapet Telangana
31 Tadipatri Andhra Pradesh
32 Varanasi Uttar Pradesh
33 Bhavnagar Gujarat
34 Kalol Gujarat
35 Jamnagar Gujarat
36 Omkareshwar Madhya Pradesh
37 Kumbakonam Tamil Nadu
38 Rewa Madhya Pradesh
39 Jetpur Navagadh Gujarat
40 Narasaraopet Andhra Pradesh
41 Chas Jharkhand
42 Erode Tamil Nadu
43 Kakinada Andhra Pradesh
44 Tenali Andhra Pradesh
45 Siddipet Telangana
46 Rajahmundry Andhra Pradesh
47 Shimla Himachal Pradesh
48 Ratlam Madhya Pradesh
49 Godhra Gujarat
50 Gangtok Sikkim
51 Singrauli Madhya Pradesh
52 Junagadh Gujarat
53 Chhindwara Madhya Pradesh
54 Bhilai Nagar Chattisgarh
55 Sehore Madhya Pradesh
56 Shirdi (Shirdhi) Maharashtra
57 Madurai Tamil Nadu
58 Dewas Madhya Pradesh
59 Hoshangabad Madhya Pradesh
60 Bharuch Gujarat
61 Pithampur Madhya Pradesh
62 Tambaram Tamil Nadu
63 Mangaluru (Mangalore) Karnataka
64 Jamshedpur (NAC) Jharkhand
65 Karnal Haryana
66 Dwarka Gujarat
67 Gandhidham Gujarat
68 Tiruppur Tamil Nadu
69 Nadiad Gujarat
70 Ongole Andhra Pradesh
71 Chittoor Andhra Pradesh
72 Pimpri-Chinchwad Maharashtra
73 Khandwa Madhya Pradesh
74 Mandsaur Madhya Pradesh
75 Satna Madhya Pradesh
76 Chandrapur Maharashtra
77 Korba Chattisgarh
78 Betul Madhya Pradesh
79 Botad Gujarat
80 Nandyal Andhra Pradesh
81 Giridih Jharkhand
82 Hosur Tamil Nadu
83 Machilipatnam Andhra Pradesh
84 Velankani (Vellankanni) Tamil Nadu
85 Durg Chattisgarh
86 Eluru Andhra Pradesh
87 Bhimavaram Andhra Pradesh
88 Faridabad Haryana
89 Ambarnath Maharashtra
90 Panaji Goa
91 Hazaribag Jharkhand
92 Chhatarpur (Chhattarpur) Madhya Pradesh
93 Guntakal Andhra Pradesh
94 Bhubaneswar Town Odisha
95 Palanpur Gujarat
96 Morbi Gujarat
97 Tadepalligudem Andhra Pradesh
98 Bhuj Gujarat
99 Mehsana Gujarat
100 Leh Jammu and Kashmir
101 Veraval Gujarat
102 Deoghar Jharkhand
103 Anand Gujarat
104 Raigarh Chattisgarh
105 Aizawl (NT) Mizoram
106 Dindigul Tamil Nadu
107 Chilakaluripet Andhra Pradesh
108 Vellore Tamil Nadu
109 Dhanbad Jharkhand
110 Karaikkudi Tamil Nadu
111 Patan Gujarat
112 Gurugram (Gurgaon) Haryana
113 Pudukkottai Tamil Nadu
114 Nagda Madhya Pradesh
115 Solapur Maharashtra
116 Thane Maharashtra
117 Ranchi Jharkhand
118 Guntur Andhra Pradesh
119 Srikakulam Andhra Pradesh
120 Deesa Gujarat
121 S.A.S. Nagar Punjab
122 Imphal Manipur
123 Amreli Gujarat
124 Dhule Maharashtra
125 Rajapalayam Tamil Nadu
126 Vizianagaram Andhra Pradesh
127 Kancheepuram Tamil Nadu
128 Bhind Madhya Pradesh
129 Raipur Chattisgarh
130 Mira-Bhayandar Maharashtra
131 Mango (NAC) Jharkhand
132 Bathinda Punjab
133 Proddatur Andhra Pradesh
134 Guwahati Assam
135 Salem Tamil Nadu
136 Neemuch Madhya Pradesh
137 Nagpur Maharashtra
138 Burhanpur Madhya Pradesh
139 Vasai Virar City Maharashtra
140 Ludhiana Punjab
141 Ichalkaranji Maharashtra
142 Valsad Gujarat
143 Udupi Karnataka
144 Adityapur Jharkhand
145 Aligarh Uttar Pradesh
146 Biharsharif Bihar
147 Shivamogga (Shimoga) Karnataka
148 Mandya Karnataka
149 Dharmavaram Andhra Pradesh
150 Surendranagar Dudhrej Gujarat
151 Nashik Maharashtra
152 Tumakuru (Tumkur) Karnataka
153 Gondal Gujarat
154 Kadapa Andhra Pradesh
155 Pallavaram Tamil Nadu
156 Gudivada Andhra Pradesh
157 Satara Maharashtra
158 Kulgaon Badlapur (Badlapur) Maharashtra
159 Kavali Andhra Pradesh
160 Hindupur Andhra Pradesh
161 Nagaon Assam
162 Jalgaon Maharashtra
163 Seoni Madhya Pradesh
164 Rajnandgaon Chattisgarh
165 Nellore Andhra Pradesh
166 Jhansi Uttar Pradesh
167 Gadag Betageri Karnataka
168 Raurkela Odisha
169 Avadi Tamil Nadu
170 Panvel Maharashtra
171 Bundi Rajasthan
172 Delhi Cantonment Delhi
173 Vidisha Madhya Pradesh
174 Nagercoil Tamil Nadu
175 Kanpur Uttar Pradesh
176 Kurnool Andhra Pradesh
177 Kolhapur Maharashtra
178 Nizamabad Telangana
179 Bilaspur Chattisgarh
180 Sikar Rajasthan
181 Nandurbar Maharashtra
182 Miryalaguda Telangana
183 Ahmednagar Maharashtra
184 Porbandar Gujarat
185 Nagapattinam Tamil Nadu
186 Pali Rajasthan
187 Berhampur(Brahmapur Town) Odisha
188 Pathankot Punjab
189 Puducherry (Pondicherry) Puducherry
190 Balasore(Baleshwar Town) Odisha
191 Ramagundam Telangana
192 Nanded Waghala Maharashtra
193 Tirunelveli Tamil Nadu
194 Puri Town Odisha
195 Adilabad Telangana
196 East Delhi Municipal Corporation Delhi
197 Anantnag Jammu and Kashmir
198 Thanjavur Tamil Nadu
199 Hubli-Dharwad Karnataka
200 Nalgonda TRajasthan
201 Karimnagar Telangana
202 South Delhi Municipal Corporation Delhi
203 Bagalkote(Bagalkot) Karnataka
204 Cuttack Odisha
205 Morena Madhya Pradesh
206 Ozhukarai Puducherry
207 Ulhasnagar Maharashtra
208 Kohima Nagaland
209 Jodhpur Rajasthan
210 Bruhat Bengaluru (BBMP) Karnataka
211 Panchkula Haryana
212 Bhilwara Rajasthan
213 Ananthapuramu (Ananthapur) Andhra Pradesh
214 Srikalahasti Andhra Pradesh
215 Jaipur Rajasthan
216 Itanagar Arunachal Pradesh
217 Bhadravathi(Bhadravati) Karnataka
218 Roorkee Uttarakhand
219 Osmanabad Maharashtra
220 Ranebennur (Ranibennur) Karnataka
221 Port Blair Andaman and Nicobar Islands
222 Ferozepur Punjab
223 Thoothukudi (Thoothukkudi) Tamil Nadu
224 Adoni Andhra Pradesh
225 Chickamagaluru (Chikmagalur) Karnataka
226 Ajmer Rajasthan
227 Hassan Karnataka
228 Shivpuri Madhya Pradesh
229 Parbhani Maharashtra
230 Yavatmal Maharashtra
231 Amravati Maharashtra
232 Jagdalpur Chattisgarh
233 Jalandhar Punjab
234 Kalyan-Dombivli Maharashtra
235 Greater Chennai (Chennai) Tamil Nadu
236 Khammam Telangana
237 Sangli Miraj Kupwad Maharashtra
238 Tiruvannamalai Tamil Nadu
239 Malegaon Maharashtra
240 Udgir Maharashtra
241 Srinagar Jammu and Kashmir
242 Damoh Madhya Pradesh
243 Sonepat (Sonipat) Haryana
244 Haridwar Uttarakhand
245 Saharanpur Uttar Pradesh
246 Jaunpur Uttar Pradesh
247 Allahabad Uttar Pradesh
248 Belagavi (Belgaum) Karnataka
249 Mahabubnagar Telangana
250 Cuddalore Tamil Nadu
251 Jammu Jammu and Kashmir
252 Ayodhya Uttar Pradesh
253 Thanesar Haryana
254 Kozhikode (Calicut) Kerala
255 Gangapur City Rajasthan
256 Kashipur Uttarakhand
257 Kishanganj Bihar
258 Amritsar Punjab
259 Kullu Himachal Pradesh
260 Dabra Madhya Pradesh
261 Baripada Town Odisha
262 Patna Bihar
263 Agra Uttar Pradesh
264 Silvassa (Silvasa) Dadra and Nagar Haveli
265 Jind Haryana
266 Guna Madhya Pradesh
267 Ambur Tamil Nadu
268 Rameswaram (Rameshwaram) Tamil Nadu
269 Lucknow Uttar Pradesh
270 Bettiah Bihar
271 Kochi (Cochin) Kerala
272 Hajipur Bihar
273 Orai Uttar Pradesh
274 Sirsa Haryana
275 Bhagalpur Bihar
276 Shillong Meghalaya
277 Dimapur Nagaland
278 Sasaram Bihar
279 North Delhi Municipal Corporation Delhi
280 Silchar Assam
281 Madanapalle Andhra Pradesh
282 Kaithal Haryana
283 Ballari(Bellary) Karnataka
284 Barnala Punjab
285 Beawar Rajasthan
286 Palakkad Kerala
287 Barshi Maharashtra
288 Davanagere Karnataka
289 Datia Madhya Pradesh
290 Agartala Tripura
291 Hisar Haryana
292 Jhunjhunu Rajasthan
293 Bodh Gaya Bihar
294 Kalaburagi (Gulbarga) Karnataka
295 Rohtak Haryana
296 Akola Maharashtra
297 Dibrugarh Assam
298 Bareilly Uttar Pradesh
299 Aurangabad Maharashtra
300 Sujangarh Rajasthan
301 Chittorgarh(Chittaurgarh) Rajasthan
302 Beed(Bid) Maharashtra
303 Rewari Haryana
304 Muzaffarpur Bihar
305 Chandausi Uttar Pradesh
306 Guruvayur Kerala
307 Jehanabad Bihar
308 Ambala Sadar (Ambala) Haryana
309 Sultanpur Uttar Pradesh
310 Udaipur Rajasthan
311 Achalpur Maharashtra
312 Vijayapura (Bijapur) Karnataka
313 Wardha Maharashtra
314 Gorakhpur Uttar Pradesh
315 Bidar Karnataka
316 Dehradun Uttarakhand
317 Hosapete (Hospet) Karnataka
318 Latur Maharashtra
319 Bikaner Rajasthan
320 Lalitpur Uttar Pradesh
321 Moradabad Uttar Pradesh
322 Sambalpur Town Odisha
323 Hoshiarpur Punjab
324 Thrissur (M.Corp) Kerala
325 Rudrapur Uttarakhand
326 Shamli Uttar Pradesh
327 Buxar Bihar
328 Raichur Karnataka
329 Tonk Rajasthan
330 Nainital Uttarakhand
331 Loni Uttar Pradesh
332 Hanumangarh Rajasthan
333 Akbarpur Uttar Pradesh
334 Dehri Bihar
335 Panipat Haryana
336 Etawah Uttar Pradesh
337 Chitradurga Karnataka
338 Deoria Uttar Pradesh
339 Meerut Uttar Pradesh
340 Diu Daman and Diu
341 Kota Rajasthan
342 Purnia Bihar
343 Gondia Maharashtra
344 Muzaffarnagar Uttar Pradesh
345 Bhiwani Haryana
346 Yamunanagar Haryana
347 Robertson Pet Karnataka
348 Motihari Bihar
349 Bhadrak Odisha
350 Daman Daman and Diu
351 Ghaziabad Uttar Pradesh
352 Mathura Uttar Pradesh
353 Bahadurgarh Haryana
354 Baran Rajasthan
355 Hinganghat Maharashtra
356 Darbhanga Bihar
357 Aurangabad (Bihar) Bihar
358 Sawai Madhopur Rajasthan
359 Ganganagar Rajasthan
360 Modinagar Uttar Pradesh
361 Ballia Uttar Pradesh
362 Gaya Bihar
363 Malerkotla Punjab
364 Alwar Rajasthan
365 Kollam Kerala
366 Kannur Kerala
367 Hindaun Rajasthan
368 Jalna Maharashtra
369 Moga Punjab
370 Maunath Bhanjan Uttar Pradesh
371 Bharatpur Rajasthan
372 Thiruvananthapuram Kerala
373 Kolar Karnataka
374 Pilibhit Uttar Pradesh
375 Firozabad Uttar Pradesh
376 Siwan Bihar
377 Farrukhabad-cum-Fatehgarh Uttar Pradesh
378 Sambhal Uttar Pradesh
379 Mainpuri Uttar Pradesh
380 Alappuzha (Alleppey) Kerala
381 Gangawati Karnataka
382 Mughalsarai Uttar Pradesh
383 Faizabad Uttar Pradesh
384 Nagaur Rajasthan
385 Banda Uttar Pradesh
386 Basti Uttar Pradesh
387 Dhaulpur Rajasthan
388 Badami Karnataka
389 Mirzapur-cum-Vindhyachal Uttar Pradesh
390 Arrah Bihar
391 Dinapur Nizamat (Danapur) Bihar
392 Bhiwandi-Nizampur(Bhiwandi) Maharashtra
393 Amroha Uttar Pradesh
394 Rae Bareli Uttar Pradesh
395 Haldwani-cum-Kathgodam Uttarakhand
396 Saharsa Bihar
397 Palwal Haryana
398 Azamgarh Uttar Pradesh
399 Rampur Uttar Pradesh
400 Khanna Punjab
401 Shikohabad Uttar Pradesh
402 Jhalawar Rajasthan
403 Bhiwadi Rajasthan
404 Begusarai Bihar
405 Churu Rajasthan
406 Etah Uttar Pradesh
407 Sitapur Uttar Pradesh
408 Hathras Uttar Pradesh
409 Kasganj Uttar Pradesh
410 Lakhimpur Uttar Pradesh
411 Patiala Punjab
412 Fatehpur Uttar Pradesh
413 Ghazipur Uttar Pradesh
414 Jamalpur Bihar
415 Munger Bihar
416 Kavaratti Lakshadweep
417 Unnao Uttar Pradesh
418 Batala Punjab
419 Kishangarh Rajasthan
420 Badaun(Budaun) Uttar Pradesh
421 Baraut Uttar Pradesh
422 Chapra Bihar
423 Bulandshahr Uttar Pradesh
424 Hapur Uttar Pradesh
425 Khurja Uttar Pradesh
426 Shahjahanpur Uttar Pradesh
427 Abohar Punjab
428 Muktsar Punjab
429 Bahraich Uttar Pradesh
430 Katihar Bihar
431 Hardoi Uttar Pradesh
432 Bagaha Bihar
433 Bhusawal Maharashtra
434 Gonda Uttar Pradesh

Saturday, 13 May 2017

விரைவில் 5G ?

4G நெட்வொர்க் தெரியும்... 5G நெட்வொர்க்கில் என்னவெல்லாம் இருக்கும் தெரியுமா..?

4G நெட்வொர்க் சேவை இந்தியாவில் மிகப்பெரிய டிஜிட்டல் புரட்சியையே ஏற்படுத்தியிருக்கிறது என்று உறுதியாகச் சொல்லலாம்.

தொலைக்காட்சியில் கிரிக்கெட் மேட்ச் பார்க்க முடியாத சூழ்நிலையில் ஸ்கோர்கார்டை ஸ்க்ரோல் செய்த இளைஞர்கள், இன்று லைவ் ஸ்ட்ரீமிங்கில் மொபைலிலேயே மேட்ச் பார்த்து ட்வீட் தட்டுகின்றனர். வீடியோ கால், மிகப்பெரிய ஃபைல்களையும் நிமிடங்களில் டவுன்லோடு செய்வது என பலரின் இணையப் பயன்பாடே மாறியுள்ளது.

4G சிம் பயன்படுத்தக்கூடிய மொபைல்களை மட்டுமே அனைவரும் தேடி வாங்குகின்றனர். இந்நிலையில், 2G, 3G, 4G வரிசையில் அடுத்ததாக வரவிருக்கும் 5G பற்றிய எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது. 5G நெட்வொர்க் சேவையில் என்னென்ன வசதிகள் இருக்கும் எனப் பார்ப்போமா!

4G நெட்வொர்க்கை மிஞ்சும் 5G!

1G, 2G, 3G, 4G போன்றவற்றில் குறிப்பிடப்படும் G என்பது தலைமுறையைக் (Generation) குறிக்கும். அது இணையத்தையோ அல்லது இணையத்தின் வேகத்தையோ குறிப்பதில்லை. 4G நெட்வொர்க் சேவையில் உள்ள வசதிகளை விடவும் மேம்பட்ட, அடுத்த தலைமுறை வசதிகளை உள்ளடக்கியது தான் 5G. ஒவ்வொரு தலைமுறை நெட்வொர்க் சேவையிலும் இருக்க வேண்டிய வசதிகளைப் பற்றி, ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அங்கமான இன்டர்நேஷனல் டெலிகம்யூனிகேஷன்ஸ் யூனியன் (International Telecommunications Union) தான் வரையறுக்கிறது. அந்த வரையறையின் அடிப்படையில் தான் மொபைல் உற்பத்தி நிறுவனங்களும், தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களது உற்பத்தியையும், சேவையையும் வழங்குகின்றன. இந்நிலையில், 5G நெட்வொர்க் சேவையில் கண்டிப்பாக இருக்க வேண்டிய சில வசதிகள் பற்றி சமீபத்தில் ஐ.டி.யூ அறிக்கை வெளியிட்டுள்ளது.

தடையற்ற தொலைத்தொடர்பு :

தங்கு தடையற்ற தொலைத்தொடர்பு சேவையே 5G-யின் முக்கிய நோக்கமாகும். ஒரு டவர் இருக்கும் பகுதியைக் கடந்து, மற்றொரு டவர் இருக்கும் பகுதிக்குப் பயணிக்கும்போது சிக்னல் கட் ஆகும் பிரச்னை தற்போது இருக்கிறது. பேசிக்கொண்டிருக்கும் போதே அழைப்பு துண்டிக்கப்படும் 'கால் ட்ராப்' பிரச்னை கண்டிப்பாக 5G-யில் இருக்கக்கூடாது என்கிறது ஐ.டி.யூ. ஒரு மணி நேரத்தில் 500 கி.மீ வேகத்தில் பயனாளர் வெவ்வேறு டவர்களைக் கடந்து ரயிலில் பயணிக்கும்போது கூட சிக்னல் கட் ஆகக்கூடாது என ஐ.டி.யூ வலியுறுத்தியுள்ளது.

இணைய வேகம் :

ஓர் இணைப்பிலிருந்து மற்றொரு இணைப்புக்குத் தகவலைப் பரிமாறிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் நேரம் குறையக்குறைய இணையத்தின் வேகம் அதிகமாக இருக்கும். 5G நெட்வொர்க் சேவையில் இந்த நேரமானது 4 மில்லி செகண்ட் முதல் 1 மில்லி செகண்ட் அளவுக்குள்தான் இருக்க வேண்டும். அதிவேகமாக செயல்படும் 4G சேவையில் கூட, டேட்டாவை பரிமாறிக்கொள்ள 50 மில்லி செகண்ட்கள் ஆகின்றன.

பேட்டரி திறன் :

4G நெட்வொர்க்கைப் பயன்படுத்தும் அனைவருக்கும் மொபைல் பேட்டரியின் சார்ஜ் விரைவில் தீர்ந்துவிடும் பிரச்னை இருக்கும். இதை ஈடுசெய்வதற்காகவே முன்பை விட அதிக திறன் கொண்ட பேட்டரியை மொபைல் உற்பத்தியாளர்கள் தயாரித்து வருகின்றனர். 5G நெட்வொர்க் சேவையிலும் நீடித்த பேட்டரித் திறன் அவசியம் என ஐ.டி.யூ வலியுறுத்தியுள்ளது.

எப்போது அறிமுகமாகும்?

தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 2019-ம் ஆண்டுக்குள் 5G நெட்வொர்க் சேவையை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளன. ஐரோப்பாவைச் சேர்ந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 2020-ம் ஆண்டை இலக்காக வைத்து, 5G சேவையை அறிமுகப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை, 5G அறிமுகமாக எப்படியும் 2020-ம் ஆண்டு ஆகலாம்.

5G

பயன்கள் :
5G நெட்வொர்க் சேவையில் மின்னல் வேகத்தில் இணையம் செயல்படும் என்பதால், முழுநீளத் திரைப்படத்தையும் கூட சில நிமிடங்களில் டவுன்லோடு செய்ய முடியும். டவுன்லோடு மற்றும் அப்லோடு இதுவரை இல்லாத அளவுக்கு வேகமாக இருக்கும்.

வீடியோ கால் செய்யும்போது எதிரே இருப்பவர் பேசுவது சில நொடிகள் தாமதமாகத்தான் நமக்குக் கேட்கும். வீடியோவும், ஆடியோவும் சரியாகப் பொருந்தாமல் இருக்கும். 5G நெட்வொர்க்கில் இணையத்தின் வேகம் அபரிமிதமாக இருக்கும் என்பதால், தாமதம் ஏதும் இன்றி வீடியோ கால் மேற்கொள்ள முடியும்.

இணையத்தின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், ரியல் டைமில் ஆக்மென்டட் ரியாலிட்டி சேவை அதிகளவில் பயன்படுத்தப்படும். உதாரணமாக, சாலையில் நடந்து செல்லும்போது, ஓர் இடத்தைப் பற்றிய முழு விவரமும் ஆக்மென்ட்டட் ரியாலிட்டியில் நொடிப்பொழுதில் லோட் ஆகும்.

பொருள்களின் இணையம் (Internet of Things) மற்றும் ஸ்மார்ட் டிவைஸ்கள், தற்போது இருப்பதைவிட 5G நெட்வொர்க் சேவையில், அதிக அளவில் பயன்படுத்தப்படும். அலுவலகத்தில் இருந்தபடியே ஸ்மார்ட் ஸ்டவ் மூலம் சமையல் மேற்கொள்ள முடியும்.

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...