Saturday, 2 December 2017

நடப்பு நிகழ்வுகள் எவ்வாறு படிக்க வேண்டும்.


இப்பகுதியிலிருந்து குறைந்தபட்சம் 15 முதல் 20 கேள்விகள் வரை கேட்கப்படுகின்றன.. இதனை சரியாக திட்டமிட்டு பகுதிவாரியாக குறிப்பு எடுத்துவந்தால் எளிதாக 17 கேள்விகளுக்கு பதிலளிக்கமுடியும். முக்கியமாக நடப்பு நிகழ்வுகள் கேட்கக்கூடிய பகுதிகள்

1. சமீபத்திய நியமனங்கள்
2. சமீபத்திய விருதுகள்
3. சமீபத்திய மாநாடுகள்
4. சமீபத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் & செயற்கைக்கோள்
5. சமீபத்திய இராணுவபோர்பயிற்சிகள்
6. சர்வதேச அளவில் முக்கிய நிகழ்வுகள் மற்றும் தேசிய அளவில்
7. சமீபத்திய இயற்கை பேரிடர்கள்
8. சமீபத்திய பிரபலமான அரசு திட்டங்கள்
9. சமீபத்திய வெளியிடப்பட்ட பிரபலங்களின் புத்தகங்கள்
10. முக்கிய தினங்கள்
11. விளையாட்டு போட்டிகள்
12. தமிழ்நாட்டில் மிக முக்கிய நிகழ்வுகள்

இதில் முக்கிய நியமனங்கள் எவ்வாறு படிக்கலாம் என்பதை பார்க்கலாம்:

1. ஐ.நா.பொதுச்சபை தலைவர் - Miroslav Lajcak
2. ஜெர்மனி பிரதமர் - Angela Morkel
3. அயர்லாந்து பிரதமர்
4. காபினட்டில் மாற்றி அமைக்கப்பட்ட அமைச்சர்கள்
5. NPCI head
6. Brenda Hale - First female president of UK supreme court judge
7. Preet Gaur Hill - Britain's first Sikh MP
8. காஸியாபாத் Municipal corporation brand ambassador - Suresh Raina
9. 45-ஆவது இந்திய உச்சநீதிமன்ற தலைம நீதிபதி
10. 13-ஆவது துணைக்குடியரசுத் தலைவர்
11. 14-ஆவது குடியரசுத் தலைவர்
12. பிரான்ஸ் நாட்டின் அதிபர் - எட்வர்ட் பிலிப்பே (Youngest President of France)
13. First Indian member in WRC - கணேசன் நீலகண்ட ஐயர்
14. குஜராத் முதல் பெண் DGP - Geetha johri
15. நேபாள தலைமை நீதிபதி்
16. SBI chairman - Rajnish Kumar
17. New CAG - Rajiv mehrishi (13th)
18. New chief election commissioner of India - Shri Achal Kumar Jothi (21st)
19. 8-ஆவது சிங்கப்பூர் அதிபர் - ஹெலிமா யாக்கோப் (முதல் பெண் தலைவர். இவர் பதவியேற்பதற்கு முன்னர் இடைக்கால அதிபராக நியமக்கப்பட்டவர் யார்?
20. ஈரான் பிரதமர் - ஹசான் ரௌஹானே
21. நியூசிலாந்து பிரதமர் - Jacienda Ardern
22. அங்கோலா நாட்டின் புதிய அதிபர் - Joao Lourenco . அதற்கு முன்னர் பதவி வகித்தவர் பெயர் மற்றும் பதவிக்காலம்
24. அரசின் தலைமை வழக்கறிஞர் - வேணுகோபால்
25. தென்கொரிய அதிபர் - மூன்-ஜே-இன்
26. கர்நாடக மாநிலத்தின் முதல் பெண் DG மற்றும் IGP - Neelamani N.Raju
27. பீகார் முதல்வர் - நிதிஷ் குமார் (6-ஆவது)
28. ஜப்பான் பிரதமர் - ஷின்சோ அபே (3-ஆவது)
29. Pal Binder Kaur Shergil
30. Preet Kaur Gill
31. நிதி ஆயோக் தலைவர் மற்றும் துணைத் தலைவர்
32. Ram shanker Katheria
33. Rehana Ameer
34. நேபாள பிரதமர்
35. Travis Sinniah
36. Muzoon Almellahan
37. Akshay Kumar
38. Amithab bachan - hepatitis brand ambassador
39. Soumya swaminathan
40. 15-ஆவது நிதிக்குழு தலைவர் - என்.கே.சிங்.
மற்றும் சில...
இவ்வாறு தேர்ந்தெடுத்து படித்தாலே போதுமானது.

Monday, 20 November 2017

சர்வதேச ஆண்டுகள்:-

1968 - சர்வதேச மனித உரிமை ஆண்டு.

1970 - சர்வதேச கல்வி ஆண்டு.

1974 - சர்வதேச மக்கள்தொகை ஆண்டு.

1978 - சர்வதேச பெண்கள் ஆண்டு.

1979 - சர்வதேச குழந்தைகள் ஆண்டு.

1985 - சர்வதேச இளைஞர் ஆண்டு.

1986 - சர்வதேச அமைதி ஆண்டு.

1994 - சர்வதேச குடும்ப ஆண்டு.

1996 - சர்வதேச ஏழ்மை ஒழிப்பு ஆண்டு.

2003 - சர்வதேச நன்னீர் ஆண்டு.

2004 - சர்வதேச அரிசி ஆண்டு.

205 - சர்வதேச இயற்பியல் ஆண்டு.

2006 - சர்வதேச பாலைவன ஆண்டு.

2007 - சர்வதேச துருவ ஆண்டு.

2008 - சர்வதேச சுகாதாரம்/உருளைக்கிழங்கு/மொழிகள் ஆண்டு.

2009 - சர்வதேச வானியல் ஆண்டு.

2010 - சர்வதேச நுரையீரல்/ உயிரினம்ஆண்டு.

2010-2011 - அனைத்துலக இளைஞர் ஆண்டு.

2013 - சர்வதேச தண்ணீர் ஒத்துழைப்பு ஆண்டு, சர்வதேச தினை ஆண்டு.

2014 - சர்வதேச குடும்ப விவசாய ஆண்டு.

2015 - சர்வதேச ஒளிவருடம் (Year of Light) , சர்வதேச மண்வருடம் (Year of Soil)

2016 - சர்வதேச பருப்பு ஆண்டு.

2017-நிலையான சுற்றுலா வளர்ச்சிக்கான ஆண்டு.

Sunday, 19 November 2017

இந்திய பிரதமர்கள்

இந்திய பிரதமர்களின் பங்குகள்
அவர்கள் ஆற்றிய சேவைகள் பற்றிய சில தகவல்கள்:-
🇮🇳 மிக நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் - ஜவஹர்லால் நேரு
🇮🇳 வங்கிகளை தேசிய மயமாக்கியவர் - இந்திரா காந்தி
🇮🇳 தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர் - லால்பகதூர் சாஸ்திரி
🇮🇳 அமைதி மனிதர் என்று அழைக்கப்பட்டவர் - லால்பகதூர் சாஸ்திரி
🇮🇳 பாராளுமன்றம் செல்லாமலே பதவிகாலம் முடித்தவர் - சரண் சிங்
🇮🇳 இந்தியாவின் உயர்ந்த விருது மற்றும் பாகிஸ்தான் உயர்ந்த விருது (நிசாமி பாகிஸ்தான்) இரு விருதுகளை பெற்றவர்- மொரார்ஜி தேசாய்
🇮🇳 சிம்லா ஒப்பந்தம் கையெழுத்திட்டவர் - இந்திரா காந்தி
🇮🇳 இந்தியாவின் முதன்முதலில் அணுகுண்டு சோதனை நடந்தபோது பிரதமராக இருந்தவர் - இந்திரா காந்தி
🇮🇳 ஜவஹர்லால் நேரு 1947 ஆகஸ்ட் அன்று ஆற்றிய உரைக்கு பெயர் - Trust with destiny
🇮🇳 பிற்படுத்தப் பட்டோருக்கான 27% இட ஒதுக்கீட்டை நடைமுறை படுத்தியவர் - வி.பி.சிங்
🇮🇳 வெளிநாட்டு தூதுவராக இருந்து பிரதமரானவர் - ஐ.கே.குஜ்ரால்
🇮🇳 பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தென் இந்தியர் - பி.வி.நரசிம்மராவ்
🇮🇳 தாராளமயமாக்கப்பட்ட பொருளாதார கொள்கையை அறிமுகம் படுத்தியவர் - பி.வி.நரசிம்மராவ்
🇮🇳 IAS முடித்த முதல் இந்திய பிரதமர் - மன்மோகன் சிங்
🇮🇳 ஐ.நா. சபையில் ஹிந்தி மொழியில் உரையாற்றியவர் - அடல் பிகாரி வாஜ்பாய்
🇮🇳 இரண்டு முறை இடைக்கால பிரதமர் பதவி வகித்தவர் - குல்சாரிலால் நந்தா
🇮🇳 மிகக் குறைந்த காலம் பிரதமராக இருந்தவர் - சந்திரசேகர்
🇮🇳 மூன்று முறை பிரதமராக இருந்தவர் - வாஜ்பாய்
🇮🇳 மிக இளம் வயது பிரதமர் - ராஜீவ் காந்தி
🇮🇳 பஞ்சாயத்து ராஜ் சட்டம் அமலாக்க பட்ட போது பிரதமராக இருந்தவர் - பி.வி.நரசிம்மராவ்
🇮🇳 காங்கிரஸ் கட்சி சேராத முதல் இந்தியா பிரதமர் - மொரார்ஜி தேசாய்
🇮🇳 பாரத ரத்னா விருது பெற்ற முதல் இந்திய பிரதமர் - ஜவஹர்லால் நேரு
🇮🇳 துணை பிரதமராக இருந்து பிரதமரானவர்கள் - மொரார்ஜி தேசாய், சரண் சிங்
🇮🇳 முதலமைச்சராக இருந்து பிரதமரானவர்கள் - மொரார்ஜி தேசாய், வி.பி.சிங், பி.வி.நரசிம்மராவ், தேவகவுடா
🇮🇳 இந்திய வெளிநாட்டு கொள்கையின் சிற்பி என்று அழைக்கப்பட்டவர் - ஜவஹர்லால் நேரு

பிரதமர்களின் சமாதிகளின் பெயர்கள்:-
🇮🇳 சாந்திவனம் - ஜவஹர்லால் நேரு
🇮🇳 சக்திஸ்தல் - இந்திரா காந்தி
🇮🇳 வீர்பூமி - இராஜீவ் காந்தி
🇮🇳 விஜய் காட் - லால்பகதூர் சாஸ்திரி
🇮🇳 கிஸாண்காட் - சரண்சிங்
🇮🇳 நாராயண காட் - குல்சாரிலால் நந்தா
🇮🇳 அபாய்காட் - மொரார்ஜி தேசாய்இந்திய

இலக்கண குறிப்பு

1. கடுந்திறல் - பண்புத்தொகை
2. நல்லாறு - பண்புத்தொகை
3. கூர்ம்படை - பண்புத்தொகை
4. முதுமரம் - பண்புத்தொகை
5. தண்பதம் - பண்புத்தொகை
6. நல்லகம் - பண்புத்தொகை
7. அருந்துயர் - பண்புத்தொகை
8. நெடுந்தேர் - பண்புத்தொகை
9. பெருங்களிறு - பண்புத்தொகை
10. நன்மான் - பண்புத்தொகை
11. பசுங்கால - பண்புத்தொகை
12. கருங்காக்கை - பண்புத்தொகை
13. பச்சூன் - பண்புத்தொகை
14. பைந்நிணம் - பண்புத்தொகை
15. வெஞ்சினம் - பண்புத்தொகை
16.எண்பொருள் - பண்புத்தொகை
17. நுண்பொருள் - பண்புத்தொகை
18. பெருந்தேர் - பண்புத்தொகை
19. நல்லுரை - பண்புத்தொகை
20. நெடுந்தகை - பண்புத்தொகை
21. தண்குடை - பண்புத்தொகை
22. செங்கோல் - பண்புத்தொகை
23. செங்கதிரோன் - பண்புத்தொகை
24. திண்டிறல் - பண்புத்தொகை
25. தெண்டிரை - பண்புத்தொகை
26. பெருந்தவம் - பண்புத்தொகை
27. ஆருயிர் - பண்புத்தொகை
28. நன்னூல் - பண்புத்தொகை
29. கருமுகில் - பண்புத்தொகை
30. வெஞ்சுடர் - பண்புத்தொகை
31. பேரிடி - பண்புத்தொகை
32. பேரிஞ்சி - பண்புத்தொகை
33. முதுமுரசம் - பண்புத்தொகை
34. சேவடி - பண்புத்தொகை
35. நற்றாய் - பண்புத்தொகை
36. பெருந்தெய்வம் - பண்புத்தொகை
37. பெருந்தடந்தோள் - பண்புத்தொகை
38. முச்சங்கம் - பண்புத்தொகை
39. வெந்தயிர் - பண்புத்தொகை
40. செந்நெல் - பண்புத்தொகை
41. செழும்பொன் - பண்புத்தொகை
42. பெரும்பூதம் - பண்புத்தொகை
43. கருஞ்சிகரம் - பண்புத்தொகை
44. செந்தமிழ் - பண்புத்தொகை
45. வெருங்கை - பண்புத்தொகை
46. கருங்கல் - பண்புத்தொகை
47. தீநெறி - பண்புத்தொகை
48. கடும்பகை - பண்புத்தொகை
49. முக்குடை - பண்புத்தொகை
50. திருந்துமொழி - வினைத்தொகை
51. பொருந்துமொழி - வினைத்தொகை
52. திரைகவுள் - வினைத்தொகை
53. உயர்சினை - வினைத்தொகை
54. ஒழுகுநீர் - வினைத்தொகை
55. புனைகலம் - வினைத்தொகை
56. உருள்தேர் - வினைத்தொகை
57. ஈர்வளை - வினைத்தொகை
58. படுகாலை - வினைத்தொகை
59. துஞ்சு மார்பம் - வினைத்தொகை
60. நிறைமதி - வினைத்தொகை
61. திருந்தடி - வினைத்தொகை
62. மொய்கழல் - வினைத்தொகை
63. அலைகடல் - வினைத்தொகை
64. வீங்குநீர் - வினைத்தொகை
65. களிநடம் - வினைத்தொகை
66. விரிநகர் - வினைத்தொகை
67. அகல் முகில் - வினைத்தொகை
68. படர் முகில் - வினைத்தொகை
69. கிளர்திறம் - வினைத்தொகை
70. பொழிகரி - வினைத்தொகை
71. பொழிமறை - வினைத்தொகை
72. செய்குன்று - வினைத்தொகை
73. ஆடரங்கு - வினைத்தொகை
74. தாழ்பிறப்பு - வினைத்தொகை
75. உறை வேங்கடம் - வினைத்தொகை
76. துஞ்சு முகில் - வினைத்தொகை
77. வளர் கூடல் - வினைத்தொகை
78. இரைதேர் குயில் - வினைத்தொகை
79. சுழி வெள்ளம் - வினைத்தொகை
80. சுடரொளி - வினைத்தொகை
81. உயர்எண்ணம் - வினைத்தொகை
82. உயர் மரம் - வினைத்தொகை
83. முதிர்மரம் - வினைத்தொகை
84. தொடுவானம் - வினைத்தொகை
85. பொங்கு சாமரை - வினைத்தொகை
86. வாழிய வாழிய - அடுக்குத்தொடர்
87. தினம் தினம் - அடுக்குத்தொடர்
88. யார் யார் - அடுக்குத்தொடர்
89. அறைந்தறைந்து - அடுக்குத்தொடர்
90. இனிதினிது - அடுக்குத்தொடர்
91. சுமை சுமையாய் - அடுக்குத்தொடர்
92. துறை துறையாய் - அடுக்குத்தொடர்
93. விக்கி விக்கி - அடுக்குத்தொடர்
94. புடை புடை - அடுக்குத்தொடர்
95. வாழ்க்கை - தொழிற்பெயர்
96. கூறல் - தொழிற்பெயர்
97. பொறுத்தல் - தொழிற்பெயர்
98. இறப்பு - தொழிற்பெயர்
99. மறத்தல் - தொழிற்பெயர்
100. பொறை - தொழிற்பெயர்
101. மலர்தல் - தொழிற்பெயர்
102. கூம்பல் - தொழிற்பெயர்
103. அஞ்சல் - தொழிற்பெயர்
104. சொல்லுதல் - தொழிற்பெயர்
105. தூக்கம் - தொழிற்பெயர்
106. கோறல் - தொழிற்பெயர்
107. தூண்டல் - தொழிற்பெயர்
108. வேட்டல் - தொழிற்பெயர்
109. ஏற்றல் - தொழிற்பெயர்
110. சுழற்றல் - தொழிற்பெயர்
111. ஓட்டல் - தொழிற்பெயர்
112. பாய்தல் - தொழிற்பெயர்
113. விழுதல் - தொழிற்பெயர்
114. கடிமகள் - உரிச்சொல்தொடர்
115. மல்லல் மதுரை - உரிச்சொல்தொடர்
116. ஐஅரி - உரிச்சொல்தொடர்
117. மாமதுரை - உரிச்சொல்தொடர்
118. வைவாள் - உரிச்சொல்தொடர்
119. வாள்முகம் - உரிச்சொல்தொடர்
120. தடந்தோள் - உரிச்சொல்தொடர்
121. மாமணி - உரிச்சொல்தொடர்
122. வைவேல் - உரிச்சொல்தொடர்
123. நாமவேல் - உரிச்சொல்தொடர்
124. மாமதி - உரிச்சொல்தொடர்
125. மாவலி - உரிச்சொல்தொடர்
126. வையகமும் வானகமும் - எண்ணும்மை
127. மலர்தலும் கூம்பலும் - எண்ணும்மை
128. தந்தைக்கும் தாய்க்கும் - எண்ணும்மை
129. வாயிலும் மாளிகையும் - எண்ணும்மை
130. மாடமும் ஆடரங்கும் - எண்ணும்மை
131. ஈசனும் போதனும் வாசவனும் - எண்ணும்மை
132. கங்கையும் சிந்துவும் - எண்ணும்மை
133. விண்ணிலும் மண்ணிலும் - எண்ணும்மை
134. அசைத்த மொழி - பெயரெச்சம்
135. இசைத்த மொழி - பெயரெச்சம்
136. சொல்லிய - பெயரெச்சம்
137. படாத துயரம் - பெயரெச்சம்
138. தப்பிய மன்னவன் - பெயரெச்சம்
139. எய்த்த மேனி - பெயரெச்சம்
140. கேட்ட வாசகம் - பெயரெச்சம்
141. ஈன்ற தந்தை - பெயரெச்சம்
142. முழங்கிய சேதி - பெயரெச்சம்
143. கொழுத்த புகழ் - பெயரெச்சம்
144. இழந்த பரிசு - பெயரெச்சம்
145. காய - பெயரெச்சம்
146. மாய - பெயரெச்சம்

Wednesday, 4 October 2017

திருப்பூர் குமரன்



திருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 – ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார்.

 இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் பிறந்தார்.

1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, 1932 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு தடியடிபட்டு மண்டை பிளந்து கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்து, பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஜனவரி 11 இல் உயிர் துறந்தார் திருப்பூர் குமரன் . இதனால், கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார்.

🌷பெற்றோர் நாச்சிமுத்து - கருப்பாயி

🌺வாழ்க்கைத் துணை - ராமாயி

🌷இளமைப்பருவம் தொகுப்பு :

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகிலுள்ள செ.மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் 1904 அக்டோபர் 4ம் தேதி, நாச்சிமுத்து - கருப்பாயி தம்பதியினருக்கு முதல் மகனாகப் பிறந்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப் படிப்பை ஆரம்ப பள்ளியிலேயே முடித்துக் கொண்டார். கைத்தறி நெசவுத் தொழிலை செய்து வந்த குமரன், 1923ல் தனது 19வது வயதில், 14 வயது ராமாயியை மணம் முடித்தார்.

கைத்தறி நெசவுத் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால், மாற்றுத் தொழில் தேடி திருப்பூர் சென்று, ஈஞ்ஞையூர் கந்தசாமி கவுண்டர் நடத்திய மில்லில் எடைபோடும் பணியில் சேர்ந்தார். காந்தி கொள்கையில் அதிக ஈடுபாடு கொண்ட குமரன், நாட்டு விடுதலைக்காக காந்தி அறிவித்த போராட்டங்களில் எல்லாம் கலந்து கொண்டார்.

🌺இறுதி ஊர்வலம் தொகுப்பு :

ஜனவரி 10 இல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட திருப்பூர் குமரன் 11 இல் மருத்துவமனையில் அதிகாலையில் உயிரிழந்தார். பொதுமக்கள் அவரது இறுதி ஊர்வலத்தில் பங்குகொண்டனர். முதலில் அவரது தம்பி ஆறுமுகமும், பின்னர் குமரன் தேசத்தின் பொதுச்சொத்து என்று கூறி ராஜ கோபால அய்யர், மாணிக்கம் செட்டியார், வெங்கடாசலம் பிள்ளை என பலரும் இறுதிச் சடங்கான கொள்ளி வைத்தனர்.[4]

குமரன் மறைந்த ஒரு மாதத்திற்குள் திருப்பூர் வந்த மகாத்மா காந்தி, அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். காமராஜர் உயிருடன் இருந்தவரை குமரன் குடும்பத்தினருடன் அவ்வப்போது தொடர்பு கொண்டு விசாரிப்பார்.[4]

🌷துணைவியார் தொகுப்பு :

இவரது துணைவியார் ராமாயி அம்மாள் 1998 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உயிர் நீத்தார்.

🌷நினைவகம் தொகுப்பு :

தமிழ்நாடு அரசு திருப்பூர் குமரன் தியாகத்தைப் போற்றும் வகையில் திருப்பூரில் திருப்பூர் குமரன் நினைவகம் ஒன்றை அமைத்துள்ளது. இங்கு தற்காலிக நூல் நிலையம் உள்ளது. படிப்பகம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. மேலும் இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்கள் வரைந்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

🌷தபால் தலை தொகுப்பு :

இவரது நூறாவது பிறந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில், அக்டோபர் 2004 இல் சிறப்பு நினைவுத் தபால் தலை இந்திய அரசால் வெளியிடப்பட்டது.

Friday, 25 August 2017

புகழ் இழந்தால் என்ன நடக்கும் ?



தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன் உறங்கிய புகழ்பெற்ற ஹாலிவுட் ஹீரோ (Arnold Schwarzenegger)அர்னால்டின் பரிதாப நிலை

நடிப்பில் படிப்படியாக உயர்ந்து கலிபோர்னியாவின் கவர்னர் என்ற புகழின் உச்சத்தில் இருக்கும் பொழுது தன்னுடைய வெண்கலச் சிலை முகப்பில் நிறுவப்பட்ட வகையில் ஒரு ஆடம்பர ஹோட்டலை திறந்து வைத்தார்.

ஹோட்டலின் திறப்பு விழாவின் பொழுது அந்த ஆடம்பர ஹோட்டலின் உரிமையாளர் "அர்னால்டு எப்பொழுது வேண்டுமானாலும் இந்த ஹோட்டலுக்கு வந்து முன் பதிவு ஏதும் இன்றி இலவசமாக தங்கிக்கொள்ளலாம், அவருக்கு எப்பொழுதுமே ஒரு அறை இருக்கும்" என்று அறிவித்தார்

நாட்கள் நகர்ந்தன ...

பதவி போனது ..

புகழ் போனது ..

சமீபத்தில் சாதாரண மனிதனாக அந்த ஹோட்டலுக்கு சென்ற அர்னால்டுக்கு அதிர்ச்சி காத்திருந்தது

ஹோட்டலில் எல்லா அறைகளும் புக்கிங் ஆகிவிட்டது தற்பொழுது அறைகள் ஏதும் இல்லை என்று ஹோட்டல் நிர்வாகம் கூறவே அதிர்ச்சியில் உறைந்து போனார் ஹாலிவுட் முன்னாள் ஹீரொ, கலிபோர்னியா முன்னாள் கவர்னர், அந்த ஹோட்டலை திறந்து வைத்த முன்னாள் வி.ஐ.பி "அர்னால்டு ஸ்குவாஸுனேக்கர்"

மனமுடைந்த அர்னால்ட்,
தான் வைத்திருந்த போர்வையை எடுத்துக்கொண்டு அந்த ஹோட்டலின் முகப்பில் தன்னால் திறந்து வைக்கப்பட்ட, வெறும் அலங்கார பொருளாக நின்றுக்கொண்டிருந்த தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன்னர் செய்வதறியாது படுத்து விட்டார்

இந்த சம்பவத்தால் துவண்டு போன அர்னால்ட் அந்த காட்சியை புகைபடம் எடுத்து வலைதளத்தில் பதிவிட்டு உலகத்திற்கு ஓர் செய்தியை சொல்கின்றார்

"நாம் பதிவியில் இருக்கும் பொழுது மெச்சப்படுவோம், புகழப்படுவோம், நமக்கு உச்சபட்ச மரியாதை தரப்படும்"

"எப்பொழுது நாம் பதவியையும், புகழையும் இழக்கின்றோமோ அடுத்த நொடியே நாம் ஒதுக்கப்படுவோம்,
நமக்கு தந்த சத்தியங்கள் காற்றில் பறக்கவிடப்படும்"

"எந்த சத்தியங்களும், வாக்குறுதிகளும் உங்களுக்காக கொடுக்கப்பட்டது அல்ல அது உங்களை அலங்கரித்த பதவிக்கு கொடுக்கப்பட்டது"

"உங்கள் புகழை,
உங்கள் பதவியை,
உங்கள் அதிகாரத்தை,
உங்கள் அறிவை ஒரு போதும் நம்பாதீர்கள்"

"இது எதுவுமே நிரந்தரம் கிடையாது"

-(தமிழ் மொழிப்பெயர்ப்பு நான்)

விநாயகர் சதுர்த்தி



விநாயகரை வழிபடும்போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்



தெய்வங்களுக்கு எல்லாம் தெய்வமாக வனங்கப்படுபவர் விநாயகர். அதனால்தான் அவரை முழு முதல் கடவுள் என்கிறோம். தடைகளை விலக்கி நாம் தொடங்கும் எல்லா செயல்களிலும் வெற்றியை அளிப்பவர் கணபதி.

1. விநாயகர் சகஸ்ரநாமம்:

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே

2. விநாயகர் ஸ்லோகம்:

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

3. விநாயகர் ஸ்லோகம்:

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்.

4. விநாயகர் ஸ்லோகம்:

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.

5. விநாயகர் ஸ்லோகம்:

மூஷிக வாகன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே.

6. விநாயகர் காயத்ரி மந்திரம்:

வக்ரதுண்டாய ஹீம்
ஓம் நமோ ஹேரம்ப மதமோதித
மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா
ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.

7. விநாயகர் ஸ்லோகம்:

அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம் நல்ல
குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்.

ஆகியவற்றை தினமும் படித்து அருகம்புல்லால் விநாயகரை வழிபட்டு வந்தால் விநாயகரின் அருள் நமக்குக் கிடைக்கும். பிள்ளையாரை வணங்கி நெற்றியில் குட்டிக் கொண்டு எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்க வேண்டும்.

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...