Sunday, 4 March 2018

மரபுகள் அதில் சிறந்த மன்னர்கள்

மரபுகள் அதில் சிறந்த மன்னர்கள் பற்றிய சில தகவல்கள்:-
👑 மௌரியர் - அசோகர்
👑 குஷாணர் - கனிஷ்கர்
👑 சாதவகனர்கள் - கௌதம புத்ர சதகர்னி
👑 சேரர் - சேரன் செங்குட்டுவன்
👑 சோழர் - கரிகாலன்
👑 பாண்டியர் - தலையாணங்கானத்தச் செறுவென்ற நெடுஞ்செழியன்
👑 குப்தர் - இரண்டாம் சந்திரகுப்தர்
👑 வர்த்தமானர் - ஹர்சர்
👑 சாளுக்கியர்கள் - இரண்டாம் புலிகேசி
👑 இராட்டிரகூடர் - மூன்றாம் கோவிந்தர்
👑 பல்லவர் - முதலாம் நரசிம்மன்
👑 பிற்கால சோழர் - முதலாம் இராஜராஜன்
👑 பிரதிகாரர் - மிகிரபோசர்
👑 சௌகான் - விசால்தேவர், பிரித்திவிராஜ் சௌகான்
👑 சந்தேகங்கள் - தாங்கர், கீர்த்திவர்மன்
👑 பரமாரர் - போசர்
👑 பாலர் - மகிபாலர்
👑 அடிமை - பால்பன்
👑 கில்ஜி - அலாவுதீன் கில்ஜி
👑 துக்ளக் - பெரோஸ் துக்ளக்
👑 லோடி - சிக்கந்தர் லோடி
👑 பாமினி சுல்தான் - மூன்றாம் முகம்மது
👑 விஜயநகர அரசு - கிருஷ்ண தேவராயர்
👑 முகலாயர் - அக்பர், ஷாஜகான்a

Thursday, 1 March 2018

அரசியலமைப்பில் முக்கிய வழக்குகள்

----------------------------

#முகவுரை பற்றிய வழக்குகள்
----------------------------
பெருபாரி-1960
கேசவநந்த பாரதி - 1973
S.R.பொம்மை - 1994
LIC இந்தியா வழக்கு- 1995

#அடப்படைஉரிமைகள் பற்றிய
வழக்குகள்
----------------------------
A.K.கோபாலன் - 1950
மேனகா காந்தி - 1978

#அரசியலமைப்புசட்டத்திருத்த
அதிகார வரம்பு பற்றிய வழக்குகள்
----------------------------
கோலக்நாத் - 1967
கேசவ நந்த பாரதி - 1973
மினர்வா மில்ஸ் வழக்கு - 1980

#பொதுநல வழக்கு
தொடர்தல் பற்றிய
வழக்குகள்
--------------------------
பாரதி சோஷித் கரம்சாரி சங்
வழக்கு - 1981
பந்துவா முக்தி மோர்ச்சா வழக்கு -
1984
ஹீசைரா கார்டூன் வழக்கு

#அடிப்படை உரிமைகள் மற்றும் # DPSP
................
செம்பாக்கம் துரைராஜன்
வழக்கு - 1951
மினர்வா மில்ஸ் வழக்கு - 1980

#மண்டல்கமிஷன் பற்றிய வழக்கு
----------------------------
இந்திராஷானி வழக்கு - 1992

#விதி_18 பற்றிய வழக்கு
----------------------------
பாலாஜி ராகவன் வழக்கு

#BasicStructure of Constitution
பற்றிய வழக்கு
---------------------------
சங்கரி பிரசாத் வழக்கு - 1951
சாஜன் சிங் வழக்கு- 1965
கோலக்நாத் வழக்கு - 1967

Wednesday, 28 February 2018

*தேசிய அறிவியல் தினம்*

🔬🔬🔬🔬🔬🔬🔬🔬🔬

⏳ *இன்று:பிப்ரவரி- 28*

⏳ *தேசிய அறிவியல் தினம் (சர்.சி.வி. ராமன் விளைவு வெளியிட்ட நாள்).*

⏳ *தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவலில் பிறந்து, உலக அறிவியல் அறிஞர்கள் பட்டியலில் இடம்பிடித்த அற்புதத் தமிழர், சர் சி.வி.ராமன்.*

⏳ *இவர் படிப்பில் படு சுட்டி. ஆங்கிலத்திலும் இயற்பியலிலும் தங்கப் பதக்கம் பெற்றவர். மேற்படிப்புக்கு இங்கிலாந்து செல்ல நினைத்தார். ஆனால், இவருடைய உடல்நிலை அதற்கு ஏற்றதாக இல்லை. வெளிநாடு செல்ல மருத்துவர்கள் இவருக்கு 'உடல்நிலை தகுதிச் சான்று’ அளிக்கவில்லை. எனவே இந்தியாவில் இருந்தபடியே அறிவியலில் பல்வேறு சாதனைகள் செய்து, நோபல் பரிசை வென்றார் ராமன்.*

⏳ *அவரிடம் நாம் கற்கவேண்டிய அற்புத விஷயங்கள்...*

⏳👉🏻 *வாசிப்பை நேசி! அப்பாவின் அலமாரியில் இருந்து எண்ணற்ற அறிவியல் அறிஞர்கள் எழுதிய புத்தகங்களை எடுத்து, ஓயாமல் வாசிப்பார்.*

⏳👉🏻 *மூன்று நூல்கள் அவரை மிகவும் ஈர்த்தன. எட்வின் அர்னால்டின் ஆசிய ஜோதி, யூக்லிட் எழுதிய ‘The elements’மற்றும் ஹெர்மான் ஹெல்ம்ஹோல்ட்ஸ் எழுதிய ‘The Sensations of Tone’ஆகிய நூல்களே அவை. வெவ்வேறு துறைகளில் ஆர்வம் இருந்ததால், அறிவியலில் அவரின் ஆய்வுகளும் பல்வேறு துறைகள் சார்ந்து இருந்தன.*

⏳👉🏻 *பிடித்ததில் பிணைந்திடு!*
*இந்தியாவில் அறிவியல்* *வேலைவாய்ப்புகள்* *குறைவாகவே இருந்த காலத்தில்,* *கொல்கத்தா சென்று நிதித் துறையில் வேலை பார்த்தார். கிடைத்த சொற்ப வருமானத்தில், பெரும்பாலான பணத்தை, ஆய்வுகள் செய்யவே* *பயன்படுத்திக்கொண்டார். ஒருநாள், 'பவ்பஜார்’ எனும்* *பகுதியின் வழியாகச் சென்றபோது,* *'இந்திய அறிவியல்* *வளர்ச்சிக் கழகம்’ என்ற பெயர் பலகையைப் பார்த்தார். அன்று முதல், மாலை நேரங்களில் அங்கே ஆய்வுகள் செய்தார். பிறகு, நிதித் துறை வேலையை முழுவதும் துறந்துவிட்டு, முழு நேர ஆய்வுகளில் ஈடுபட்டார்.*

⏳👉🏻 *சிக்கனம் செய்!*
*அப்போதெல்லாம் அறிவியல் ஆய்வகத்துக்கான முக்கியக் கருவிகளை வெளிநாட்டில்* *இருந்துதான் வாங்குவார்கள். ஆனால், ராமன் அதிலும் சிக்கனமானவர்.* *ஹெளராவில் இருக்கும் மார்க்கெட்டில் இருந்து பொருட்களை வாங்கி, ஆய்வுக்கான கருவிகளைத் தானே தயாரிப்பார். ராமன்* *விளைவுக்கான பெரும்பாலான ஆய்வுகளை 300 ரூபாயில் முடித்து விட்டார் ராமன். இறுதியில், ஸ்பெக்ட்ரோமீட்டர் கருவி தேவைப்பட்டபோது, 'இதை மட்டும் வாங்கித் தாருங்கள்’ என்று* *பிர்லாவுக்குக் கடிதம் எழுதினார்.* *அந்தக் கருவியைக்* *கொண்டு முழுமையாக ஆய்வுகளை முடித்தார்.*

⏳🔬 *உலகை உற்றுக் கவனி!*
*மெடிட்டரேனியன் கடல் (Mediterranean* *Sea) என்று சொல்லப்படும்* *நடுநிலக் கடல் வழியாகப் பயணம்* *சென்றபோது, 'கடல் மற்றும் வானம் நீல நிறமாக இருப்பது ஏன்?’ என்று யோசித்ததின் விளைவாக எழுந்ததே, ராமன் விளைவு. கப்பல் பயணத்திலும் சுற்றி இருப்பனவற்றைக் கவனித்துக்கொண்டு இருந்தார் ராமன்.*

⏳👉🏻  *நம்பிக்கையோடு  முன்னேறு!*
*இயற்பியலாளர்ஆர்தர் காம்ப்டன், எக்ஸ் கதிர்கள் சிதறலைப் பற்றி ஆய்வுசெய்து, நோபல் பரிசு பெற்றதாக இவரின் மாணவர் சொன்னார். 'அது, கண்களுக்குப் புலப்படும் ஒளியிலும் இருப்பதற்கு சாத்தியம் உண்டல்லவா?’ என யோசித்தார். அந்தப் பாதையில் நம்பிக்கையோடு ஆய்வுகள் செய்து சாதித்தார்.*

⏳👉🏻 *கற்றல் முடிவில்லாதது!*
*ராமன், ஏதேனும்* *ஆய்வுகளைத் தன்னுடைய மாணவர்களோடுஇணைந்து வெளியிட்டாலும் அதில் அவர்களின்* *பெயரையே முன்னிலைப்படுத்தி* *வெளியிடுவார். ''அறிவியலைக் கற்பது என்பது, சூத்திரங்களையும் தரவுகளையும் கற்பது அல்ல, படிப்படியாகக் கேள்விகள் கேட்டு அறிந்துகொள்வதே'' என்பார். அப்படியே பாடம் நடத்தி, மாணவர்களுக்கும் வழிகாட்டினார்.*

⏳👉🏻 *பகுத்து அறி!*
*''கடவுளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' என்று ஒருமுறை கேட்டபோது, அந்தக் கேள்வியை* *அவர் தவிர்த்தார். மீண்டும் கேட்கவே,* *''கடவுள் இருக்கிறார் என்றால், டெலஸ்கோப்பை வைத்துக்கொண்டு பிரபஞ்சம் முழுக்கத் தேடு.* *வெறும் யூகங்களை வைத்துக்கொண்டு நேரத்தை வீணாக்காதே'' என்றார் ராமன்.*

⏳👉🏻 *ஆங்கிலேய அரசு, அவரை நோபல் பரிசு வாங்கவிடாமல் தடுக்க நினைத்தது. அவருக்கு வர வேண்டிய தந்தியை மூன்று முறை தடுக்கவும் செய்தது. பிறகு தடைகளை மீறி அது, அவர் கைக்குப் போய்ச் சேர்ந்தது. 'ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக எதுவும் பேசக் கூடாது’ என்று எச்சரித்தே நோபல் பரிசு வாங்க அவரை அனுப்பினார்கள். அங்கே சென்றவர், ''ஆங்கிலேயரின் அடிமைப்படுத்தலைத் தொடர்ந்து எதிர்க்கும் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு, இந்த விருது சமர்ப்பணம்' என்று கம்பீரமாக ஆரம்பித்தே தன்னுடைய உரையை வழங்கினார் ராமன்.*

⏳👉🏻 *உனக்குள்ளே ஒரு விஞ்ஞானி!*
*''ஐந்து வயதில்* *இருந்தே பிள்ளைகளை விஞ்ஞானிகளாக நடத்த வேண்டும். அவர்களின் கேள்விகளை மதித்து, பதில் சொல்ல வேண்டும். அவர்கள் கற்றல்* *அனுபவம், புத்தகங்களோடு தேங்காமல் இருக்க* *வேண்டும். அப்பொழுதுதான் அறிவியலில் நாம் ஒளிர முடியும்'' என்றார் ராமன். அவர், ராமன் விளைவைக் கண்டுபிடித்த நாளே, நம் தேசிய* *அறிவியல் தினமாகக்* *கொண்டாடப்படுகிறது.*

🔬🔬🔬🔬🔬🔬🔬🔬🔬
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Tuesday, 27 February 2018

Important Autobiographies by Indian Authors

1. A. P. J. Abdul Kalam: 
           Wings of Fire.
2. L. K. Advani: My Country My Life
3. I K Gujral: Matters of Discretion.
4. Yuvraj Singh: 
            The Test of My Life.
5.Sachin Tendulkar: 
           Playing It My Way.
6. Kapil Dev: Straight from the Heart, Cricket My Style.
7. Sunil Gawaskar: Sunny Days.
8. Milkha Singh: 
       The Race of My Life.
9. Abhinav Bindra: A Shot at History.
10. Sania Mirza: ACE against Odds.
11. Saina Nehwal: Playing to win.
12. Marry Com: Unbreakable
13. Paramahansa Yogananda: 
          Autobiography of a Yogi.
14. Bhagat Singh: 
           Why I Am An Atheist .
15. Phoolan Devi:  
           The Bandit Queen of India.
16. K. Natwar Singh: 
         One Life Is Not Enough.
17. Khushwant Singh: 
        Truth, Love & a Little Malice.
18. Nirad C. Chaudhuri: The Autobiography of an Unknown Indian.
19. Sita Ram Goel: 
          How I Became a Hindu.
20. Vijay Kumar Singh: 
         Courage and Conviction.
21. Sharad Pawar: On my Terms: From the Grassroots to the Corridors of Power.
22. Anil K. Rajvanshi: A Life of an ordinary Indian - An exercise in self-importance.
23. Arjun Singh: A Grain of Sand in the Hour glass of Time.
24. J. B. Kripalani: 
       My Times : An Autobiography.
25. B. V. Acharya: All from Memory.
26. Aribam Syam Sharma: 
          Living Shadows

Monday, 19 February 2018

அறிவியல் விதிகள்

விதிகள் தந்தவர்கள் பற்றிய சில தகவல்கள்:-

மும்மை - டோபர்னீர்
எண்ம - நியூலாண்ட்
ஆவர்தன - மெண்டலீப்
நவீன ஆவர்தன - மோஸ்லே
திட்ட விகித - கே. லூசாக்
மிதத்தல் - அர்க்கமிட்டீஸ்
மடங்கு விகித - ஜான் டால்டன்
பொருண்மை அழியா - லவாய்சியர்
தனித்து பிரிதல் - மென்டல்
நீச்சல் - ஆம்பியர்
தக்கை திருகு - மாக்ஸ்வெல்
மின்காந்த தூண்டல் - பாரடே
கோள்கள் இயக்கு - கெப்ளர்
வெப்ப - ஜேம்ஸ் பிரஸ்காட் ஜூல்
ஆற்றல் அழிவின்மை  - ராபர்ட் மேயர்
புவி ஈர்ப்பு - நியூட்டன்
குறிப்பு:
ஒவ்வொன்றிலும் "விதி" சேர்த்து கொள்ளவும்.

*Banking Abbreviations*

Important Banking  and other Abbrevations

1. SEBI - The Securities And Exchange Board Of India.
2. RTGS - Real Time Gross Settlement.
3. UPI - Unified Payment Interface.
4. NITI Aayog - National Institution For Transforming India Aayog.
5. PCA - Prompt Correction Action.
MUDRA - Micro Units Development And Refinance Agency Bank
6. IFSC -
    a.  Indian Financial System Code     b.  International Financial Service Centre  
7. DICGC - Deposit Insurance And Credit Guarantee Corporation.
8. LAF - Liquidity Adjustment Facility.
9. NPA - Non Performing Asset.
10. ETF - Exchange Traded Fund.
11. PMAY - Pradhan Mantri Awas Yojana.
12. MCLR - Marginal Cost Of Funds Based Lending Rate.
13. NFO - New Fund Offer
14. EBT - Electronic Benefit Transfer.
15. PPF - Public Provident Fund.
16. GDR - Global Depositary Receipt.
17. CASA - Savings And Current Account.
18. NACH - National Automated Clearing House.
19. FATF - Financial Action Task Force.
20. MPC - Monetary Policy Committee.
21. CAGR - Compound Annual Growth Rate.
22. AAYUSH - Ayurveda, Yoga And Naturopathy, Unani, Siddha And Homoeopathy.
23. BCSBI - Banking Codes And Standards Board Of India.
24. LAB - Local Area BankCFMS - Centralized Funds Management System.
25. SWIFT - Society For Worldwide Interbank Financial Telecommunication.
26. AMRUT - Atal Mission For Rejuvenation And Urban Transformation.
27. LTV - Loan-To-Value
28. SEAC - State Expert Appraisal Committee.
29. LTIF - Long Term Irrigation Fund.
30. NABARD - National Bank For Agriculture & Rural Development.
31. PMGSY - Pradhan Mantri Gram Sadak Yojana.
32. FIPB - Foreign Investment Promotion Board.

33. VVPAT - Voter Verifiable Paper Audit Trail.
34. RERA - Real Estate Regulatory Authority.
35. WMA - Ways And Means Advances.
36. IFC - International Finance Corporation.
37. NBFC - Non Banking Finance Companies.
38. MMID - Mobile Money Identifier 39. PCA Prompt Corrective Action.
40. SHG - Self Help Group.
41.  MSF - Marginal Standing Facility.
42. RFID - Radio Frequency Identification.
43. MDR - Merchant Discount Rate.
44. RIDF - Rural Infrastructure Development Fund.
45. CIBIL - Credit Information Bureau (India) Limited.
46. CRAR - Capital To Risk (Weighted) Assets Ratio.
47. ADSL - Asymmetric Digital Subscriber Line.
48. EFTPOS - Electronic Funds Transfer At Point Of Sale.
49. GVA - Gross Value Added.
50. GDP - Gross Domestic Product.
51. NPCI - National Payments Corporation Of India.
52. CSR - Corporate Social Responsibility

Monday, 12 February 2018

*CCSE-IV தேர்வு ஓர் அலசல்*

*Ⓜ🛑🛑குரூப் 4 தேர்வில் 3 லட்சம் பேர் பங்கேற்கவில்லை!*

தமிழக அரசுப்பணிகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், நில
அளவையர், கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்ட 9,351 பணியிடங்களை நிரப்ப இன்று காலை (பிப்ரவரி 11) நடைபெற்ற குரூப் 4 தேர்வில் 3லட்சம் பேர் பங்கேற்கவில்லை.

குரூப் 4 பதவியில் அடங்கிய கிராம நிர்வாக அலுவலர்(விஏஓ) (494),இளநிலை உதவியாளர்(பிணையமற்றது)(4096), இளநிலை உதவியாளர்(பிணையம்)(205), வரிதண்டலர்(கிரேடு 1)(48), நில அளவர்(74), வரைவாளர் (156), தட்டச்சர் (3463), சுருக்கெழுத்து தட்டச்சர்(கிரேடு 3)(815) உள்ளிட்ட 9351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்ரவரி 11ஆம் தேதி எழுத்து தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி 2017 நவம்பர் 2ஆம் தேதி அறிவித்தது.

அதைத் தொடர்ந்து, குரூப் 4 தேர்வுக்கு 20 லட்சத்து 83 ஆயிரத்து 152 பேர் விண்ணப்பித்தனர்.

இதில் ஆண் தேர்வர்கள் 9,41,878 பேர், பெண் தேர்வர்கள் 11,27,342, மூன்றாம் பாலினத்தவர் 54 பேர், மாற்றுத்திறனாளிகள் 25,906 பேர், ஆதரவற்ற விதவைகள் 7367 பேர், முன்னாள் படைவீரர்கள் 4107 பேர் உள்ளிட்ட 20 லட்சத்து 69 ஆயிரத்து 274 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. சென்னையில் மட்டும் குரூப் 4 தேர்வுக்கு 1,60,120 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்காக 508 மையங்கள் அமைக்கப்பட்டது.

இன்று காலை 10 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 1 மணி வரை தேர்வு நடைபெற்றது.

இதற்காக மாநிலம் முழுவதும் 301 தாலுகா மையங்களில் 6962 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது. தேர்வு பணியில் 1.25 லட்சம் ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

அதாவது தேர்வை கண்காணிக்க முதன்மை கண்காணிப்பாளர்கள் 6962 பேர், தேர்வுக்கூட கண்காணிப்பாளர்கள் 1,03,500 பேர், தேர்வுக்கூட ஆய்வாளர்கள் 6962 பேர் பணியில் அமர்த்தப்பட்டனர். தேர்வைக் கண்காணிக்க 1165 மொபைல் யூனிட்(நகரும் குழுக்கள்) அமைக்கப்பட்டது. அதுதவிர 685 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டது.

இந்தத் தேர்வில் முதன்முறையாகத் தேர்வர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களின் பெயர், படம், பதிவெண் உள்ளிட்ட விவரங்கள் அச்சிடப்பட்ட தனித்துவமான விடைத்தாள்கள் வழங்கப்பட்டது.

தேர்வு எழுதுபவர்கள் செல்பேசி, கால்குலேட்டர், புத்தகம், மின்னணு சாதனம், தேர்வுக்கூடத்திற்குக் கொண்டு வரத் தடை விதிக்கப்பட்டது.

அனைத்துத் தேர்வுக்கூடங்களின் தேர்வு நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது.

9,351 பணியிடங்களுக்கு விண்ணப்பித்த 20 லட்சத்து 69 ஆயிரத்து 274 பேரில், 3 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.

தேர்வு கடினமாக இருந்ததாகத் தேர்வர்கள் தெரிவித்துள்ளனர்.

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...