Saturday, 26 May 2018

*லேன்ஸ்டௌன் பிரபு (1888 - 1894) பற்றிய சில தகவல்கள்:-*

🌷 1891 இரண்டாவது தொழிற்சாலை சட்டம் கொண்டு வரப்பட்டது. இதில் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை என அறிவிக்கப்பட்டது.
🌷 பெண்கள், குழந்தைகள் வேலை நேரம் அறிமுகப்படுத்தப்பட்டது.
🌷 பிரிட்டிஷ் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே எல்லைக்கோடு நிர்ணயிக்க துரந்த் குழு (Durand Commission) நியமிக்கப்பட்டது.
🌷 1892 இந்திய கவுன்சில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
🌷 சிவில் பணியானது கீழ் கண்ட வாறு பிரிக்கப்பட்டது:-
1. மத்திய அரசு பணி (Imperial)
2. மாகாண பணி (Provincial)
3. சார்நிலைப்பணி (Subordinate)

*ரிப்பன் பிரபு (1880 - 1884) பற்றிய சில தகவல்கள்:-*

🌹இவர் ஆட்சியின் முக்கிய நிகழ்வுகள்:-
1. தலசுயாட்சி - 1882
2. ஹன்டர் கல்விகுழு - 1882
3. முதல் தொழிற்சாலை சட்டம் - 1881
4. முறையான மக்கள்தொகை கணக்கெடுப்பு - 1881
5. இல்பர்ட் மசோதா - 1883
🌹தலசுயாட்சி (பஞ்சாயத்து முறை) சட்டம் 1882 நிறைவேற்றப்பட்டது.
🌹 1882 ஹன்டர் கல்வி குழு தொடங்கப்பட்டது.
🌹 இது தொடக்க கல்வி மேம்படுத்த அறிவுறுத்தியது.
🌹 1881 தொழிற்சாலை சட்டம் இயற்றப்பட்டது.
🌹 இது 7 வயது குழந்தைகளை தொழிற்சாலைகளில் நியமிக்க தடை விதிக்கப்பட்டது.
🌹 1881 முறையான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
🌹 ரிப்பன் பிரபு அறிவித்த வட்டார மொழி பத்திரிகை சட்டம் நீக்கப்பட்டது.
🌹 ஐரோப்பிய குற்றவாளிகள் இந்திய நீதிபதிகள் விசாரிக்க வகை செய்யப்பட்ட சட்டம் இல்பர்ட் மசோதா 1883, பின்னர் இம்மசோதா திரும்ப பெறப்பட்டது.
🌹 இல்பர்ட் மசோதா சர்ச்சை இந்திய தேசியம் வளர உதவியது.
🌹 இல்பர்ட் மசோதா நிகழ்வில் உடனடி நிகழ்வாக 1885 ல் இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டது.
🌹 இவர் பல பிரச்சினைகளை கனிவுடனும், பரிவுடனும் கையாண்டதால் இவரை 'ரிப்பன் தி குட்' (ரிப்பன் எங்கள் அப்பன்) என்று இந்திய மக்களால் புகழப்பட்டார்.

*கானிங் பிரபு (1856 - 1862) பற்றிய சில தகவல்கள்:-*

🌹 ஆங்கில இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல்
🌹 இந்தியாவின் முதல் வைசிராய்.
🌹 வைசிராய் என்பதன் பொருள் அரசப் பிரதிநிதி
🌹 1857 சிப்பாய் கலகம் இவர் காலத்தில் நடைபெற்றது.
🌹 1858 நவம்பர் 1, ல் பிரிட்டிஷ் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது.
🌹 அவகாசியிலிக் கொள்கை திரும்ப பெறப்பட்டது.
🌹1857, சென்னை, மும்பை, கொல்கத்தா வில் பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்பட்டது.
🌹 1861 இந்திய கவுன்சில் சட்டம் நிறைவேற்ற பட்டது.
🌹 விக்டோரியா பேரரிக்கை அலகாபாத் தர்பாரில் இவரால் வாசிக்கப்பட்டது.
🌹 அலகாபாத் தர்பார் நடைபெற்ற ஆண்டு - 1 நவம்பர் 1858.

*1773 முதல் வங்காள தலைமை ஆளுநர்கள் :-*

🌺1773 ஆம் ஆண்டு ஒழுங்கு முறை சட்டம் நடைமுறையில் இருந்த போது பதவி வகித்த வங்காள தலைமை ஆளுநர்கள் :-
1. வாரன் ஹேஸ்டிங்ஸ் = 1774 - 1785
2. காரன் வாலிஸ் பிரபு =  1786 - 1793
3. சர் ஜான் ஷோர் = 1793 - 1798
4. வெல்லெஸ்ஸி பிரபு = 1798 - 1805
5. ஜார்ஜ் பார்லோ = 1805 - 1807
6. மிண்டோ பிரபு = 1807 - 1813
7. ஹேஸ்டிங்ஸ் பிரபு = 1813 - 1823
8. ஆம்ஹெர்ஸ்ட் பிரபு = 1823 - 1828
9. வில்லியம் பெண்டிங் பிரபு = 1828 - 1833

🌺1833 ஆம் ஆண்டு பட்டயச் சட்டம் நடைமுறையில் இருந்தபோது பதவி வகித்த இந்திய தலைமை ஆளுநர்கள்:-
1. வில்லியம் பெண்டிங் பிரபு = 1833 - 1835
2. சர் சார்லஸ் மெட்காஃப் = 1835 - 1836
3. ஆக்லண்ட் பிரபு = 1836 - 1842
4. ஹார்டிஞ்ச் பிரபு எல்லன்பரோ பிரபு = 1842 - 1844
5. ஹார்டிஞ்ச் பிரபு 1 = 1844 - 1948
6. டல்ஹெசி பிரபு = 1848 - 1856
7. கானிங் பிரபு = 1856 - 1858

🌺 இந்திய பெருங்கலகம் பின் இந்திய தலைமை ஆளுநர் என்ற பதவி வைசிராய் என மாற்றப்பட்டது வைசிராய் என்பதன் பொருள் (அரசு பிரதிநிதி)
1. கானிங் பிரபு = 1858 - 1862
2. எல்ஜின் பிரபு = 1862 - 1863
3. லாரன்ஸ் பிரபு = 1863 - 1869
4. மேயோ பிரபு = 1869 - 1872
5. நார்த் பரூக் பிரபு = 1872 - 1876
6. லிட்டன் பிரபு = 1876 - 1880
7. ரிப்பன் பிரபு = 1880 - 1884
8. டப்ரின் பிரபு = 1884 - 1888
9. லேண்ட்ஸ் டௌன் பிரபு = 1888 - 1894
10. எல்ஜின் பிரபு = 1894 - 1899
11. கர்சன் பிரபு = 1899 - 1905
12. மிண்டோ பிரபு = 1905 - 1910
13. ஹார்டிஞ்ச் பிரபு = 1910 - 1916
14. செம்ஸ் போர்டு பிரபு = 1916 - 1921
15. ரீடிங் பிரபு = 1921 - 1926
16. இர்வின் பிரபு = 1926 - 1931
17. வெல்லிங்டன் பிரபு = 1931 - 1936
18. லின்லித்கொ பிரபு = 1936 - 1944
19. வேவல் பிரபு = 1944 - 1947
20. மவுண்ட் பேட்டன் பிரபு = 24 மார்ச் 1947 - 15 ஆகஸ்ட் 1947

*காரன் வாலிஸ் பிரபு (1786 - 1793) பற்றிய சில தகவல்கள்:-*

🌸 நிலையான நிலவரி திட்டம் (1793) கொண்டுவந்தவர்
🌸 நிலையான நிலவரி திட்டம் வேறு பெயர் ஜமீன்தாரி முறை
🌸 தகுதியின் அடிப்படையிலேயே நியமனங்கள் செய்யப்பட வேண்டும் என்ற கொள்கையை தொடங்கினார்.
🌸 ஜார்ஜ் பார்லோ என்பவர் உதவியுடன் ஒரு முழுமையான சட்டத் தொகுப்பு உருவாக்கினார்
🌸 ஜார்ஜ் பார்லோ சட்டத் தொகுப்பு 'மாண்டெஸ் கியூ' வின் அதிகாரப் பகிர்வு கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது.
🌸 மூன்றாம் மைசூர் போர் முடிவில் திப்பு சுல்தானோடு ஸ்ரீரங்கப்பட்டணம் உடன்படிக்கை (1792) செய்து கொண்டார்.
🌸 மாவட்ட நீதிபதி பதவியை உருவாக்கினார்.
🌸 தற்கால இந்திய ஆட்சி பணியின் தந்தை என போற்றப்பட்டார்.
🌸 காவல்துறை சீர்திருத்தம் ஒவ்வொரு மாவட்டமும் 'தாணா' என்ற காவல் சரகமாக பிரிக்கப்பட்டது.
🌸 ஒவ்வொரு 'தாணா' வும் தரோகா எனப்பட்ட இந்திய அதிகாரியின் கட்டுப்பாட்டில் விடப்பட்டது.

*வெல்லெஸ்லி பிரபு (1798-1805) பற்றிய சில தகவல்கள்:-*

🌸 இவரது முழு பெயர் ரிச்சர்ட் கோலி  வெல்லெஸ்லி
🌸 'வங்கப்புலி' என்று தன்னை அழைத்துக் கொண்டார்
🌸 இந்தியாவில் பிரிட்டிஷ் அரசு என்ற நிலையை பிரிட்டிஷ் இந்திய பேரரசு என மாற்றினார்
🌸 துணை படைத்திட்டத்தை (1798) முதன் முதலில் ஹைதராபாத்தில் அறிமுகபடுத்தினார்
🌸 இவர் காலத்தில் ஏற்பட்ட முக்கிய போர்கள் நான்காம் மைசூர் போர்(1799),  இரண்டாம் மராட்டிய போர் (1803-1805)
🌸 இவரின் துணைப்படை திட்டத்தின் மகுடம் என கருதப்படுவது, பசீல் உடன்படிக்கை (1802)
🌸 பசீல் உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர் பேன்வா இரண்டாம் பாஜிராவ்
🌸 இவர் போன்ஸ்லேவுடன் செய்து கொண்ட துணைப்படை ஒப்பந்தம் தியோகன் உடன்படிக்கை
🌸 வெல்லெஸ்லி இந்தியாவுடன் செய்து கொண்ட துணைப்படை ஒப்பந்தம் சுர்ஜி. அர்ஜுன்கான் உடன்படிக்கை
🌸 'ஆங்கில கிழக்கிந்திய வணிகக் குழுவின் அக்பர்' என அழைக்கப்பட்டார்.
🌸 ஆங்கில ஆட்சியை விரிவுபடுத்த கையாண்ட முறைகள் மூன்று அவை
1. துணைப்படை திட்டம்
2. போரின் மூலம் நாடுகளைக் கைப்பற்றுதல்
3. நாடுகளை இணைத்தல்.

*டல்ஹவுசி பிரபு (1848 - 1856) பற்றிய சில தகவல்கள்:-*

💐 இவர் காலத்தில் முக்கிய நிகழ்வுகள்:
1. அவகாசியிலிக் கொள்கை (Doctrine of Lapse)
2. இரண்டாம் சீக்கிய போர் -1849
3. இரண்டாம் பர்மியப் போர் - 1852
4. இரயில் பாதை அறிமுகம் - 1853
5. தபால், தந்தி அறிமுகம்
6. சார்லஸ் வுட் கல்வி அறிக்கை - 1854
7. பொதுப்பணி துறை

💐 அவகாசியிலிக் கொள்கைப்படி வாரிசு இல்லாத அரசர்களின் நாடுகள் பிரிட்டிஷ் வசமாயின
💐 அவகாசியிலிக் கொள்கை படி பிடிக்கப்பட்ட நாடுகள் - சகாரா (1848), ஜான்சி, நாக்பூர் (1854)
💐 அவகாசியிலிக் கொள்கை படி இறுதியில் பிடிக்கப்பட்ட நாடு - அயோத்தி
💐 1849 இரண்டாம் சீக்கியப்போர் முடிவில் பஞ்சாப் இணைக்கப்பட்டது.
💐 1859 ஆம் ஆண்டு சர்ஜான் லாரன்ஸ் பஞ்சாபின் துணை ஆளுநராக பதவியேற்றார்.
💐 1852 இரண்டாம் பர்மியப் போர் முடிவில், பர்மா இணைக்கப்பட்டது.
💐 பர்மா ஆணையராக நியமனம் செய்தவர் மேஜர் ஆர்தர் பைரே
💐 இந்தியாவின் முதல் இரும்பு பாதை 1953 பம்பாய் இருந்து தானே வரை (34 கி.மீ.) போடப்பட்டது.
💐 இந்தியாவின் இரண்டாவது இரும்பு பாதை 1854 ஹௌரா வில் இருந்து ராணிக்கஞ்ச் வரை போடப்பட்டது.
💐 1856 - சென்னை இருந்து அரக்கோணம் வரை போடப்பட்டது.
💐 1853 - கல்கத்தா முதல் ஆக்ரா வரை தந்தி வசதி அமைக்கப்பட்டது.
💐 1852 - ஆம் ஆண்டு ' ஓ ஷாகன்னசே' என்பவர் தந்தி துறையின் முக்கிய கண்காணிபரபாளராக நியமனம்  செய்யப்பட்டது.
💐 1854 அரை அணா அஞ்சல் அட்டை அறிமுகம் செய்யப்பட்டது.
💐 இந்தியாவின் முதல் அஞ்சல் தலை 1852 கராச்சியில் வெளியிடப்பட்டது.
💐 1854 ஆம் ஆண்டு சார்லஸ் வுட்  கல்வி அறிக்கை ' Woods Dispatch' வெளியிடப்பட்டது.
💐 சிம்லா கோடைக்கால தலைநகரமாக்கப்பட்டது.
💐 ரூர்க்கியில் 1847 ஆம் ஆண்டு பொறியியல் கல்லூரி துவங்கப்பட்டது.
💐 1856 விதவை மறுமணம் சட்டம் ( Widow Remarriage Act - 1856) இயற்றப்பட்டது.
💐 விதவை மறுமணம் சட்டம் இயற்ற உறுதுணையாக இருந்தவர் - ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
💐  பொதுப்பணித்துறை ஆரம்பிக்கப்பட்டது
💐 கராச்சி, பம்பாய், கல்கத்தா துறைமுகம் மேம்படுத்தப்பட்டது
💐 1853 ICS தேர்வு துவக்கப்பட்டது.

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...