Saturday, 26 May 2018

*கர்சன் பிரபு (1899 - 1905) பற்றிய சில தகவல்கள் :-*

🌺 இவர் காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகள்:
1. இந்திய பல்கலைக்கழக சட்டம் - 1904
2. காவல் துறை சீர்திருத்தம்
3. கல்கத்தா மாநகராட்சி சட்டம் - 1899
4. தொல்பொருள் சின்னங்கள் பாதுகாப்பு சட்டம் - 1904
5. வங்க பிரிவினை - 1905
🌺 1902 தாமஸ் ராலே கல்விகுழு பரிந்துரை படி 1904 ல் இந்திய பல்கலைக்கழக சட்டம் இயற்றப்பட்டது.
🌺 சர் ஆண்ரூ பிரேசர் தலைமையில் போலீஸ் கமிட்டி அமைக்கப்பட்டது.
🌺 இராணுவத்தை சீரமைக்க 'கிச்னர் பிரபு' பொறுப்பில் விடப்பட்டது.
🌺 1899 கல்கத்தா மாநகராட்சி சட்டம் இயற்றப்பட்டது. அதிகாரிகள் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.
🌺 1904 புராதான சின்னம் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது.
🌺 தொல்பொருள் இலாகா ( Archeological Survey of Indian) அமைக்கப்பட்டது.
🌺 1902 ல் தொல்லியல் துறை இயக்குநர் ஜெனரலாக சர்.ஜான் மார்ஷல் நியமிக்கப்பட்டார்.
🌺 1899 காதித நாணயச் சட்டம் (Indian Coinage and Paper Currency Act) இயற்றப்பட்டது.
🌺 வங்கப் பிரிவினை  16 அக்டோபர் 1905.
1. வங்காளம் தலைநகர் - கல்கத்தா
2. கிழக்கு வங்காளம், அஸ்ஸாம் தலைநகர் - டாக்கா
🌺 வங்கப் பிரிவினை திட்டத்தை உருவாக்கியவர் - வில்லியம் வார்
🌺 கூட்டுறவு சங்கங்கள் அறிமுகம் படுத்தப்பட்டன.
🌺 இளைஞர்களுக்கு ராணுவ பயிற்சி அளிக்க பேரரசு இளைஞர் படை (Imperial Cadet Corps) நிறுவப்பட்டபோது.
🌺 1901 சர் கோலின் ஸ்கார்ட் மானெரிஃப் தலைமையில் பாசன கமிஷன் அமைக்கப்பட்டது.
🌺 சர் தாமஸ் ராபர்ட் சன் தலைமையில் இருப்பு பாதை சீரமைப்பு குழு அமைக்கப்பட்டது.
🌺 1904 பூசாவில் விவசாய ஆராய்ச்சி நிலையம் (Agricultural Research Institution) நிறுவப்பட்டது.
🌺 குற்றவியல் புலனாய்வு விசாரணை துறை (CID - Criminal Investigation Department) மற்றும் மத்திய குற்றவியல் தகவல் சேகரிக்கும் மனை (CIB - Central Intelligence Bureau) இவர் காலத்தில் அமைக்கப்பட்டது.
🌺 இந்திய திட்ட நேரம் (IST) அறிமுகப்படுத்தப்பட்டது.

*லேன்ஸ்டௌன் பிரபு (1888 - 1894) பற்றிய சில தகவல்கள்:-*

🌷 1891 இரண்டாவது தொழிற்சாலை சட்டம் கொண்டு வரப்பட்டது. இதில் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை என அறிவிக்கப்பட்டது.
🌷 பெண்கள், குழந்தைகள் வேலை நேரம் அறிமுகப்படுத்தப்பட்டது.
🌷 பிரிட்டிஷ் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே எல்லைக்கோடு நிர்ணயிக்க துரந்த் குழு (Durand Commission) நியமிக்கப்பட்டது.
🌷 1892 இந்திய கவுன்சில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
🌷 சிவில் பணியானது கீழ் கண்ட வாறு பிரிக்கப்பட்டது:-
1. மத்திய அரசு பணி (Imperial)
2. மாகாண பணி (Provincial)
3. சார்நிலைப்பணி (Subordinate)

*ரிப்பன் பிரபு (1880 - 1884) பற்றிய சில தகவல்கள்:-*

🌹இவர் ஆட்சியின் முக்கிய நிகழ்வுகள்:-
1. தலசுயாட்சி - 1882
2. ஹன்டர் கல்விகுழு - 1882
3. முதல் தொழிற்சாலை சட்டம் - 1881
4. முறையான மக்கள்தொகை கணக்கெடுப்பு - 1881
5. இல்பர்ட் மசோதா - 1883
🌹தலசுயாட்சி (பஞ்சாயத்து முறை) சட்டம் 1882 நிறைவேற்றப்பட்டது.
🌹 1882 ஹன்டர் கல்வி குழு தொடங்கப்பட்டது.
🌹 இது தொடக்க கல்வி மேம்படுத்த அறிவுறுத்தியது.
🌹 1881 தொழிற்சாலை சட்டம் இயற்றப்பட்டது.
🌹 இது 7 வயது குழந்தைகளை தொழிற்சாலைகளில் நியமிக்க தடை விதிக்கப்பட்டது.
🌹 1881 முறையான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
🌹 ரிப்பன் பிரபு அறிவித்த வட்டார மொழி பத்திரிகை சட்டம் நீக்கப்பட்டது.
🌹 ஐரோப்பிய குற்றவாளிகள் இந்திய நீதிபதிகள் விசாரிக்க வகை செய்யப்பட்ட சட்டம் இல்பர்ட் மசோதா 1883, பின்னர் இம்மசோதா திரும்ப பெறப்பட்டது.
🌹 இல்பர்ட் மசோதா சர்ச்சை இந்திய தேசியம் வளர உதவியது.
🌹 இல்பர்ட் மசோதா நிகழ்வில் உடனடி நிகழ்வாக 1885 ல் இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டது.
🌹 இவர் பல பிரச்சினைகளை கனிவுடனும், பரிவுடனும் கையாண்டதால் இவரை 'ரிப்பன் தி குட்' (ரிப்பன் எங்கள் அப்பன்) என்று இந்திய மக்களால் புகழப்பட்டார்.

*கானிங் பிரபு (1856 - 1862) பற்றிய சில தகவல்கள்:-*

🌹 ஆங்கில இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல்
🌹 இந்தியாவின் முதல் வைசிராய்.
🌹 வைசிராய் என்பதன் பொருள் அரசப் பிரதிநிதி
🌹 1857 சிப்பாய் கலகம் இவர் காலத்தில் நடைபெற்றது.
🌹 1858 நவம்பர் 1, ல் பிரிட்டிஷ் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது.
🌹 அவகாசியிலிக் கொள்கை திரும்ப பெறப்பட்டது.
🌹1857, சென்னை, மும்பை, கொல்கத்தா வில் பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்பட்டது.
🌹 1861 இந்திய கவுன்சில் சட்டம் நிறைவேற்ற பட்டது.
🌹 விக்டோரியா பேரரிக்கை அலகாபாத் தர்பாரில் இவரால் வாசிக்கப்பட்டது.
🌹 அலகாபாத் தர்பார் நடைபெற்ற ஆண்டு - 1 நவம்பர் 1858.

*1773 முதல் வங்காள தலைமை ஆளுநர்கள் :-*

🌺1773 ஆம் ஆண்டு ஒழுங்கு முறை சட்டம் நடைமுறையில் இருந்த போது பதவி வகித்த வங்காள தலைமை ஆளுநர்கள் :-
1. வாரன் ஹேஸ்டிங்ஸ் = 1774 - 1785
2. காரன் வாலிஸ் பிரபு =  1786 - 1793
3. சர் ஜான் ஷோர் = 1793 - 1798
4. வெல்லெஸ்ஸி பிரபு = 1798 - 1805
5. ஜார்ஜ் பார்லோ = 1805 - 1807
6. மிண்டோ பிரபு = 1807 - 1813
7. ஹேஸ்டிங்ஸ் பிரபு = 1813 - 1823
8. ஆம்ஹெர்ஸ்ட் பிரபு = 1823 - 1828
9. வில்லியம் பெண்டிங் பிரபு = 1828 - 1833

🌺1833 ஆம் ஆண்டு பட்டயச் சட்டம் நடைமுறையில் இருந்தபோது பதவி வகித்த இந்திய தலைமை ஆளுநர்கள்:-
1. வில்லியம் பெண்டிங் பிரபு = 1833 - 1835
2. சர் சார்லஸ் மெட்காஃப் = 1835 - 1836
3. ஆக்லண்ட் பிரபு = 1836 - 1842
4. ஹார்டிஞ்ச் பிரபு எல்லன்பரோ பிரபு = 1842 - 1844
5. ஹார்டிஞ்ச் பிரபு 1 = 1844 - 1948
6. டல்ஹெசி பிரபு = 1848 - 1856
7. கானிங் பிரபு = 1856 - 1858

🌺 இந்திய பெருங்கலகம் பின் இந்திய தலைமை ஆளுநர் என்ற பதவி வைசிராய் என மாற்றப்பட்டது வைசிராய் என்பதன் பொருள் (அரசு பிரதிநிதி)
1. கானிங் பிரபு = 1858 - 1862
2. எல்ஜின் பிரபு = 1862 - 1863
3. லாரன்ஸ் பிரபு = 1863 - 1869
4. மேயோ பிரபு = 1869 - 1872
5. நார்த் பரூக் பிரபு = 1872 - 1876
6. லிட்டன் பிரபு = 1876 - 1880
7. ரிப்பன் பிரபு = 1880 - 1884
8. டப்ரின் பிரபு = 1884 - 1888
9. லேண்ட்ஸ் டௌன் பிரபு = 1888 - 1894
10. எல்ஜின் பிரபு = 1894 - 1899
11. கர்சன் பிரபு = 1899 - 1905
12. மிண்டோ பிரபு = 1905 - 1910
13. ஹார்டிஞ்ச் பிரபு = 1910 - 1916
14. செம்ஸ் போர்டு பிரபு = 1916 - 1921
15. ரீடிங் பிரபு = 1921 - 1926
16. இர்வின் பிரபு = 1926 - 1931
17. வெல்லிங்டன் பிரபு = 1931 - 1936
18. லின்லித்கொ பிரபு = 1936 - 1944
19. வேவல் பிரபு = 1944 - 1947
20. மவுண்ட் பேட்டன் பிரபு = 24 மார்ச் 1947 - 15 ஆகஸ்ட் 1947

*காரன் வாலிஸ் பிரபு (1786 - 1793) பற்றிய சில தகவல்கள்:-*

🌸 நிலையான நிலவரி திட்டம் (1793) கொண்டுவந்தவர்
🌸 நிலையான நிலவரி திட்டம் வேறு பெயர் ஜமீன்தாரி முறை
🌸 தகுதியின் அடிப்படையிலேயே நியமனங்கள் செய்யப்பட வேண்டும் என்ற கொள்கையை தொடங்கினார்.
🌸 ஜார்ஜ் பார்லோ என்பவர் உதவியுடன் ஒரு முழுமையான சட்டத் தொகுப்பு உருவாக்கினார்
🌸 ஜார்ஜ் பார்லோ சட்டத் தொகுப்பு 'மாண்டெஸ் கியூ' வின் அதிகாரப் பகிர்வு கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது.
🌸 மூன்றாம் மைசூர் போர் முடிவில் திப்பு சுல்தானோடு ஸ்ரீரங்கப்பட்டணம் உடன்படிக்கை (1792) செய்து கொண்டார்.
🌸 மாவட்ட நீதிபதி பதவியை உருவாக்கினார்.
🌸 தற்கால இந்திய ஆட்சி பணியின் தந்தை என போற்றப்பட்டார்.
🌸 காவல்துறை சீர்திருத்தம் ஒவ்வொரு மாவட்டமும் 'தாணா' என்ற காவல் சரகமாக பிரிக்கப்பட்டது.
🌸 ஒவ்வொரு 'தாணா' வும் தரோகா எனப்பட்ட இந்திய அதிகாரியின் கட்டுப்பாட்டில் விடப்பட்டது.

*வெல்லெஸ்லி பிரபு (1798-1805) பற்றிய சில தகவல்கள்:-*

🌸 இவரது முழு பெயர் ரிச்சர்ட் கோலி  வெல்லெஸ்லி
🌸 'வங்கப்புலி' என்று தன்னை அழைத்துக் கொண்டார்
🌸 இந்தியாவில் பிரிட்டிஷ் அரசு என்ற நிலையை பிரிட்டிஷ் இந்திய பேரரசு என மாற்றினார்
🌸 துணை படைத்திட்டத்தை (1798) முதன் முதலில் ஹைதராபாத்தில் அறிமுகபடுத்தினார்
🌸 இவர் காலத்தில் ஏற்பட்ட முக்கிய போர்கள் நான்காம் மைசூர் போர்(1799),  இரண்டாம் மராட்டிய போர் (1803-1805)
🌸 இவரின் துணைப்படை திட்டத்தின் மகுடம் என கருதப்படுவது, பசீல் உடன்படிக்கை (1802)
🌸 பசீல் உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர் பேன்வா இரண்டாம் பாஜிராவ்
🌸 இவர் போன்ஸ்லேவுடன் செய்து கொண்ட துணைப்படை ஒப்பந்தம் தியோகன் உடன்படிக்கை
🌸 வெல்லெஸ்லி இந்தியாவுடன் செய்து கொண்ட துணைப்படை ஒப்பந்தம் சுர்ஜி. அர்ஜுன்கான் உடன்படிக்கை
🌸 'ஆங்கில கிழக்கிந்திய வணிகக் குழுவின் அக்பர்' என அழைக்கப்பட்டார்.
🌸 ஆங்கில ஆட்சியை விரிவுபடுத்த கையாண்ட முறைகள் மூன்று அவை
1. துணைப்படை திட்டம்
2. போரின் மூலம் நாடுகளைக் கைப்பற்றுதல்
3. நாடுகளை இணைத்தல்.

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...