Sunday, 10 June 2018

*பொது அறிவு*

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் - ஓம் பிரகாஷ் ராவத்

தமிழ்நாட்டின் தேர்தல் அதிகாரி - சத்யா விரத சாஹூ

7 வது ஊதியக்குழுவின் தலைவர் - A.K.மாத்தூர்

மத்திய தலைமை தகவல் ஆணையர்  - R.K. மாத்தூர்

இந்திய ராணுவ தலைமை தளபதி - பிபின் ராவத்

இந்திய கடற்படை தளபதி- சுனில் லாம்பா

இந்திய விமானப் படை தளபதி -  B.S.தானே

பந்தன் வங்கி இயக்குநர் குழுவில் - H.R. கான்

திரிபுரா மாநில அரசின் அதிகாரப்பூர்வ பழம் - அன்னாசிப்பழம்

காவிரி ஆணையத்தின் தலைவர் - மசூத் உசைன்

மத்திய நீர்வளத்துறை செயலாளர்- யு.பி.சிங்

காவிரி மேலாண்மை ஆணையத்தின் தமிழக பிரதிநிதி பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் - எஸ். கே . பிரபாகரன்

காவிரி திறப்பு உறுதி செய்ய காவிரி ஒழுங்காற்று குழு உறுப்பினராக திருச்சி மண்டல நீர் மேலாண்மை தலைமை பொறியாளர் - R. செந்தில்குமார்

இந்தியாவின் இளம் எழுத்தாளர் விருது - அயன் கோகோய் கொஹன் ( அஸ்ஸாம் ) - 4 வயது சிறுவன்

எழுதிய புத்தகம் - தேன்கூடு

4வது இந்தியா சர்வதேச அறிவியல் திருவிழா 2018 - லக்னோ

செப்டம்பர் 05- 08

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் &  மத்திய புவி அறிவியல் அமைச்சகம் விழாவை நடத்துகிறது

வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு டிஜிட்டல் முறையில் அஞ்சலி செலுத்தும் வகையில் புதிய செயலி - பாரத் கா வீர் ( Bharat ka veer app)

*முக்கிய சட்டங்கள்*

பொது  அறிவு –   முக்கிய  சட்டங்கள்    பற்றிய சில
1. 🍁 இந்திய தண்டனை சட்டம் - 1860
2. 🍁 சிவில் நடைமுறை சட்டம் - 1908
3. 🍁 மக்கள் பிரிதிநித்துவ சட்டம் - 1951
4. 🍁 இந்திய குடியுரிமை சட்டம் - 1955
5. 🍁 தீண்டாமை குற்றங்கள் சட்டம் - 1955
6. 🍁 சிவில் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் - 1976
7. 🍁 மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம் - 1956
8. 🍁 தேர;தல் நடத்தை விதிகள் சட்டம் - 1961
9. 🍁 அலுவலக மொழிகள் சட்டம் - 1963
10. 🍁 அலுவலக மொழிகள் திருத்தம் சட்டம் - 1967
11. 🍁 நீதிபதிகள் விசாரணைச் சட்டம் - 1968
12. 🍁 குற்றவியல் நடைமுறைச் சட்டம் - 1973
13. 🍁 கொத்தடிமை ஒழிப்பு சட்டம் - 1976
14. 🍁 சமவேலைக்கு சம ஊதியச் சட்டம் - 1976
15. 🍁 தேசிய பாதுகாப்பு சட்டம் - 1980
16. 🍁 மத்திய நிர;வாக தீர;ப்பாயம் சட்டம் - 1980
17. 🍁 நுகர;வோர; பாதுகாப்பு சட்டம் - 2006
18. 🍁 ஊழல் தடுப்புச் சட்டம் - 1988
19. 🍁 மனித உரிமை பாதுகாப்பு சட்டம் - 1993
20. 🍁 தமிழ்நாடு இட ஒதுக்கீட்டு சட்டம் - 1994
21. 🍁 தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ்யச் சட்டம் - 1994
22. 🍁 தகவறியும் உரிமைச் சட்டம் - 2005
23. 🍁 குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய சட்டம் - 2005
24. 🍁 மத்திய கல்வி நிலையங்கள் இட ஒதுக்கீடு சட்டம் - 2006
25. 🍁 கல்வி பெறும் உரிமைச் சட்டம் - 2009

General  Knowledge  - Some information about
•Indian Penal Code - 1860
•Civil Procedure Act - 1908
•People's Appropriation Act - 1951
•Indian Citizenship Act - 1955
•The Untouchability Crimes Act - 1955
•Civil Rights Protection Act - 1976
•The States Reorganization Act - 1956
•The Conduct Law Rules Act - 1961
•Office Languages Law - 1963
•Office Languages Amendment Act - 1967
•Judges Investigation Act - 1968
•Criminal Procedure Act - 1973
•Bondage Abolition Act - 1976
•Equal Pay Equity Act - 1976
•National Security Act - 1980
•Central Election Commission Act - 1980
•consumption; Protection Act - 2006
•Corruption Prevention Act - 1988
•Human Rights Protection Act - 1993
•Tamil Nadu Reservation Act - 1994
•Tamil Nadu Panchayat Rajya Act - 1994
•Right to Information Act - 2005
•Child Rights Protection Commission Act - 2005
•Central Educational Centers Reservation Act - 2006
•Right to Education Act - 2009

*முக்கிய கண்டுபிடிப்புகளும், கண்டுபிடிப்பாளர்களும்*

கண்டுபிடிப்பு           கண்டுபிடிப்பாளர்                                 ஆண்டு

ஆகாய விமானம்   (Aeroplane) ரைட் சகோதரர்கள்        1903
தூசிப்படலம் (Aerosol)) எரிக் ரோதிம் 1926
காற்றுக் குழாய் (Air pump)) ஒட்டோ வான் கியூரிக் 1654
ஆம்புலன்ஸ் (Amnulance) பரோன் டொமினிக் ஜீன் லேரி 1792
அனஸ்தீஸியா (Anaesthesia) வில்லியம் மோர்டன் 1846
நீர் மூழ்கு குழாய் (Aqualung) கௌஸ்டியா மற்றும் காங்னன் 1943
ஆஸ்பிரின் (Aspirin) கோல்பே, ஹெயின்ரிச் 1859
ஆஸ்பிரின் (Aspirin) (மருந்தாக) ஹெச் டிரெசர் (பாயர் ஏஜி) 1899
அணு குண்டு (Atom bomb) ஃபிரிச், போஹ்ர், பைரல்ஸ் 1939
அடைகாப்புக் கருவி (Baby incubator) டாக். அலெக்ஸாண்டர் லயன் 1891
பாக்லைட் (Bakelite) லியோ ஹெச் பேக்லேண்ட் 1907
பலூன் (Balloon) மோன்ட்கோல்பியர் சகோதரர்கள் 1783
பேனா (பால் பாய்ன்ட்) (Ball-point-pen) ஜான் டி லொடு 1888
பாரோமீட்டர் (Barometer) இவாஞ்செலிஸ்டா டோரிசிலி 1643
மின்கல அடுக்கு (Battery-Electric) அலெசான்ட்ரோ வால்டா 1800
மின்சார மணி (Bell-Electric) ஜோசப் ஹென்றி 1831
மிதிவண்டி (Bicycle) கிர்க்பேட்ரிக் மேக்மில்லன் 1839
மிதிவண்டி (ஸ்போக்ட் வீல்ஸ்) (Bicycle) ஜேம்ஸ் ஸ்டார்லே 1870
இரட்டைக் குவி ஆடி (Bifocal Lens) பெஞ்சமின் பிராங்ளின் 1780
பெண்கள் உள்ளாடை (கான்டிலீவர்) (Bra) ரோபர்ட் ஹாவேர்ட் ஹக்ஸ் 1943
புகையில்லா அடுப்பு (Bunsen Burner) ரோபர்ட் வில்கெல்ம் பன்சென் 1855
திருட்டை அறிவிக்கும் கடிகாரம் (Burglar alarm) எட்வின் டி ஹோல்ம்ஸ் 1858
கேபிள் கார் (Cable-car) டபிள்யூ ரிட்டர் 1866
கூட்டல் இயந்திரம் (Calculating clock) வில்ஹெம் ஷிக்கர்டு 1623
கேல்குலஸ் (Calculus) லீப்னிஸ் மற்றும் நியூட்டன் 1684
கார் (பெட்ரோல்) (Car-Petrol) கார்ல் பென்ஸ் 1888
கார் விரைவுமானி (Car speedometer) தோர்ல் மற்றும் சால்ட்டர் 1902
கார்பன் காகிதம் (Carbon paper) ரால்ஃப் வெட்ஜ்வுட் 1806
கார்புரேட்டர் (Carburettor) கோட்லிப் டைம்லர் 1876
செல்லோபேன் (Cellophane) டாக். ஜாக்வஸ் பிராண்டென் பிரெகர் 1908
சிமெண்ட் (போர்ட்லேண்ட்) (Cement) ஜோசப் ஆஸ்ப்டின் 1742
சூயிங் கம் (Chewing gum-commercial) ஜான் குர்டிஸ் 1848
சாக்லேட் (Chocolate –solid) பிரான்கோயிஸ் லூயிஸ் கைலர் 1819
கால அளவி (Chronometer) ஜான்ஹாரிசன் 1735
சினிமோட்டோகிராஃபி (Cinematography) லியூமியர் சகோதரர்கள் 1895
இரத்த ஓட்டம் (Circulation of the blood) வில்லியம் ஹார்வி 1628
கடிகாரம் (Clock-Quartz) வாரன் ஆல்வின் மேரிசன் 1929
கடிகாரம் (Clock-Mechanical) ஹிஸிங் மற்றும் லியாங் ட்சன் 1725
கோக கோலா (Coca-Cola) டாக். ஜான் பெம்பர்ட்டன் 1886
காப்பி (Coffee-instant) நெஸ்ட்லே 1937
காம்ப்பேக்ட் டிஸ்க் (Compact disc) பிலிப்ஸ் மற்றும் சோனி 1979
கம்ப்யூட்டர் (Computer) சார்லஸ் பாப்பேஜ் 1835
கம்ப்யூட்டர் (Computer Electronic) எக்கெர்ட் மற்றும் மேச்லி 1946
கட்டிப்பால் (/condensed Milk) கெய்ல் போர்டன் 1858
தடுப்புறை (Condom) கேப்ரில் பாலோபியஸ் 1560
கான்டாக்ட் லென்ஸ் (Contact lens) அடால்ப் இ பிக் 1887
கருத்தடை மாத்திரை (Contraceptive pill) டாக். கிரீகொரி பின்கஸ் 1950
கிரெடிட் கார்டு (Credit Card) ரால்ப் ஸ்ஷைடர் 1950
டிஎன்ஏ வடிவமைப்பு (DNA structure) பிரான்சிஸ் கிரிக் மற்றும் ஜேம்ஸ் வாட்சன் 1953
துளைக்கும் இயந்திரம் (Drill-electric) வில்ஹம் ஃபெயின் 1895
உலர் சலவை (Dry-cleaning) எம் ஜோலி பெலின் 1849
டைனமைட் (Dynamite) ஆல்பிரட் நோபல் 1863
டைனமோ (Dynamo) ஹிப்போலைட் பிக்ஸி 1832
மின்சார நாற்காலி (Electric Chair) ஹெரால்டு பிரௌன் மற்றும் ஈஏ கென்னாலி 1890
மின் விசிறி (Electric fan) டாக். ஸ்கைலர் ஸ்காட்ஸ் 1882
எலக்ட்ரிக் ஜெனரேட்டர் (Electric generator) மைக்கேல் பாரடே 1831
எலக்ட்ரிக் கிதார் (Electric guitar) ரிக்கென்பாகெர், பர்த் மற்றும் பியூசேம்ப் 1931
மின்விளக்கு (Electric lamp) ஜோசப், ஸ்வான் மற்றும் எடிசன் 1879
மின் மோட்டார் (ஏசி) (Electric motor) நிக்கோலா தெல்சா 1888
மின் மோட்டார் (டிசி) (Electric motor) ஸெனோப் கிராம் 1873
இ.சி.ஜி. (Electrocardiography) வில்லியம் இன்தோவென் 1903
எலக்ட்ரோமேக்னட் (Electromagnet) வில்லியன் ஸ்டர்ஜியன் 1824
எலக்ட்ரான் (Electron) ஜேஜே தாமஸ் 1897
என்டோஸ்கோப் (Endoscope) பியர்ரே செகாலஸ் 1827
எஸ்கலேட்டர் (Escalator) ஜெஸி டபிள்யு ரெனோ 1892
ஆச்சரியக்குறி (Exclamation mark) ஜே டே 1553
ஃபேக்ஸ் (Fax) ஆர்தர் கார்ன் 1907
புகைப்படம் (Film-moving outlines) லூயிஸ் லீ பிரின்ஸ் 1885
புகைப்படம் (Film Talking) மியூசொல் மற்றும் வாக்ட் 1922
புகைப்படம் (Film-musical sound) லீ டீ ஃபாரஸ்ட் 1923
ஃபோம் ரப்பர் (Foam-rubber) ஜான் பாய்டு டன்லப் 1929
உணவு பதப்படுத்தல் (Food processor) கென்னத் உட் 1947
இங்க் பேனா (Fountain Pen) லூயிஸ் எட்சன் வாட்டர்மேன் 1884
குளிர்ப்பதன உணவு (Frozen food) கிளாரென்ஸ் பேர்ட்லேயே 1930
ஆவி விளக்கு (Gas lighting) வில்லியம் மர்டக் 1792
ஆவி மானி (Gas meter) வில்லியம் க்ளெக் 1815
கியர்பாக்ஸ் (Gearbox –Automatic) ஹெர்மன் போட்டிங்கர் 1910
மரபணு (Genetics) கிரெகர் மெண்டல் 1865
கிளைடர் (Glider) சார் ஜார்ஜ் கைலே 1853
இசைத்தட்டுப் பெட்டி (Gramophone) தாமஸ் ஆல்வா எடிசன் 1878
புவியீர்ப்பு விசை (Gravitation) ஐசக் நியூட்டன் 1684
காதொலிக் கருவி (Hearing aid – electric) மில்லர் ரீஸ் ஹட்சின்சன் 1901
செயற்கை இதயம் (Heart-artificial) விளாடிமிர் டெமிக்கேவ் 1937
ஹெலிகாப்டர் (Helicopter) லூயிஸ் மற்றும் ஜாக்வெஸ் பிரெகெட் 1907
ஹோலோகிராபி (Holography) டென்னிஸ் கேபர் 1947
ஹோவர்கிராப்ட் (Hovercraft) கிறிஸ்டோபர் காக்ரெல் 1955
இன்சுலின் (Insulin) பிரெடரிக் கிரான்ட் பண்டிங் மற்றும் 1921
ஐஸ்கிரீம் கோன்ஸ் (Ice-cream-cones) இடேலோ மார்சியோனி 1896
ஜீன்ஸ் (Jeans) லீவி ஸ்டிரேஸ் 1850
ஜெட் கருவி (Jet-engine) சார் பிராங்க் விட்டல் 1937
குறுக்கெழுத்துப் போட்டி (Jigsaw puzzle) ஜார்ஜ் ஸ்பில்ஸ்பியரி 1767
தையல் இயந்திரம் (Knitting machine) வில்லியம் லீ 1589
லேசர் (Laser) தியோடர் மைமேன் 1960
லேத், ஸ்க்ரு கட்டிங் (Lathe, screw-cutting) ஹென்றி மவுட்ஸ்லே 1800
லான் மூவர் (Lawn mower) எட்வின் புட்டிங் மற்றும் ஜான் பெராபி 1830
பொய்யறி கருவி (Lie detector) ஜான் லார்சன் 1928
லிப்ட் (Lift) எலீசா ஜி. ஒட்டிஸ் 1852
லைட்டிங் கண்டக்டர் (Lighting conductor) பெஞ்சமின் பிராங்ளின் 1752
லித்தோகிராபி (Lithography) அலாய்ஸ் செனபெல்டர் 1796
இரயில் பெட்டிகள் (Locomotive) ரிச்சர்டு ட்ரெவிதிக் 1804
லாக்ரிதம்ஸ் (Logarithms) ஜான் நேப்பியர் 1614
விசைத்தறி (Loom, power) எட்மட் கார்ட்ரைட் 1785
ஒலிபெருக்கி (Loudspeaker) ஹோரேஷ் ஷோர்ட் 1898
இயந்திர துப்பாக்கி (Machine gun) ஜேம்ஸ் பக்கிள் 1718
தீப்பெட்டி (Match-safety) ஜெஇ லுண்ட்ஸ்ட்ரோம் 1855
மைக்ரோசிப் (Microchip) ஜாக் செயின்ட் கிளேர் கில்பி 1958
மைக்ரோபோன் (Microphone) அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் 1876
மைக்ரோ-புரோஸசர் (Micro-processor) மூர் மற்றும் ஹாஃப் நாய்ஸ் 1971
பூதக்கண்ணாடி (Microscope) சச்சாரியாஸ் ஜேன்ஸ்சன் 1590
மைக்ரோவேவ் ஓவன் (Microwave oven) பெர்சி ஸ்பென்சர் 1945
சுரங்கப்பாதுகாப்பு விளக்கு (Miner’s safety lamp) சார் ஹம்ப்ரி டாவே 1816
ஏவுகணை (Missle (air-to-air)) ஹெர்ப்ரெட் வாக்னர் 1943
மோட்டார் சைக்கிள் (Motor-cycle) கோட்லிப் டைம்லர் 1885
நியோன் விளக்கு (Neon lamp) ஜார்ஜ்ஸ் க்ளெடி 1910
நெப்டியூன் (Nepture (planet)) ஜானன் கோட்ஃபிரெட் கல்லே 1846
நியூட்ரான் (Neutron) ஜேம்ஸ் சாட்விக் 1935
அடி ஒட்டா பாத்திரம் (Non-stick-pan) மார்க் கிரகோயார் 1954
நைலான் (Nylon) வால்லஸ் கரோதர்ஸ் 1937
ஔியிழைக் கேபிள் (Optical fibres) நவீன்தர் கபானி 1955
ஓவன் (Oven-electric) பெர்னினா ஹோட்டல், சுவிட்சர்லாந்து 1889
ஓசோன் (Ozone) கிறிஸ்டியன் ஃப்ரெடரிக் ஸ்கோன்பின் 1840
பேஸ்மேக்கர் (Pacemaker-implantable) வில்சன் கிரேட்பச் 1956
பெயின்ட் (Paint-acrylic) ரிவீஸ் லிமிடெட் 1964
பெயின்ட் (Paint-fluorescent) ஜோ மற்றும் பாப் சுவிட்சர் 1933
பறக்கும் குடை (Parachute-patent) ஆன்ட்ரே ஜாக்குவஸ் கார்னெரின் 1802
பால் பதனீடு (Pasteurisation) லூயிஸ் பாஸ்டியுர் 1863
பென்சில் (Pencil) நிக்கோலஸ் ஜாக்குயிஸ் கோண்ட் 1795
கடிகாரம் (Pendulum clock) கிறிஸ்டியன் ஹஜன்ஸ் 1656
பென்சிலின் (Penicillin) சர் அலெக்ஸாண்டர் பிளெம்மிங் 1928
கால அட்டவணை (Periodic table) டிமிட்ரி மெண்டலேவ் 1866
நிழற்படக் கண்ணாடி (Photographic lens) வில்லியம் ஹெச் ஊலாஸ்டன் 1812
நிழற்படக் காகிதம் (Photography on paper) வில்லியம் ஹென்றி ஃபாக்ஸ் டால்போட் 1835
நிழற்படம் (கலர்) (Photography-colour) ஜேம்ஸ் கிளர்க் மாக்ஸ்வெல் 1861
நிழற்படம் (திரைப்படம்) (Photography-film) ஜாண் கார்பட் 1888
பியானோ (Pianoforte) பார்த்தோமோலியோ கிறிஸ்டோஃபோரி 1709
பிளாஸ்டிக் (Plastic) அலெக்ஸாண்டர் பர்க்கிஸ் 1852
புளூட்டோ (Pluto) கிளைடு டாம்பக் 1930
பாக்கெட் கால்குலேட்டர் (Pocket-calculator) கில்பி, தாசல் மற்றும் மேரிமேன் 1972
போலியோ தடுப்பூசி (Polio vaccine) ஜோனஸ் சால்க் 1952
போலியோ தடுப்பு (Polio vaccine-oral) ஆல்பிரெட் சபின் 1957
பாலிதின் (Polythene) ஆர் ஒ கிப்சன் 1933
உருளைக்கிழங்கு சிப்ஸ் (Potato Crisps) ஜார்ஜ் கிரம் 1853
பிரஷர் குக்கர் (Pressure cooker) டெனிஸ் பாப்பின் 1679
அச்சுத் தொழிற்சாலை (Printing press) ஜானன் கூடன்பர்க் 1455
பிரிண்டிங் (Printing-rotary) ரிச்சர்டு ஹோ 1846
கப்பலின் இயக்குருப்பு (Propeller-ship) பிரான்சிஸ் சுமித் 1837
புரோட்டான் (Proton) எர்னஸ்ட் ரூதர்போர்டு 1920
தொலைநோக்கி இயக்கமானி (Radar-application) டாய்லர் மற்றும் யங் 1930
தொலைநோக்கி இயக்கமானி (Radar-theory) நிக்கோலா டெஸ்லா 1900
ரேடியோ டெலிகிராமி (Radio-telegraphy) மாஹ்லோன் லூமிஷ் 1864
ரேடியோ டெலிகிராபி (transatlantic) குக்லிமோ மார்கோனி 1901
கதியிரியக்கம் (Radioactivity) ஹென்றி பெக்குரல் 1896
தண்டவாளம் (Rails-iron) ஆப்ரஹாம் டர்பி 1738
ரயில்வே ஏர்பிரேக் (Railway airbrake) ஜார்ஜ் வெஸ்டிங்கவுஸ் 1863
ரயில்வே (Railway – electric) எர்ன்ஸ்ட் சைமன்ஸ் 1878
ரயில்வே (Railway-underground) சார்லஸ் பெர்சன் 1843
ரேயான் (Rayon) ஜோசப் ஸ்வான் 1883
சவரக் கத்தி (Razor-safety) கிங் காம்ப் கில்லட் 1895
மின்சார சவரக்கத்தி (Razor-electric) ஜேக்கப் ஷிக் 1931
சுழல் துப்பாக்கி (Revolver) சாமுவேல் கோல்ட் 1835
ரிக்‌ஷா (Rickshaw) ஜொனாதன் ஸ்கூபி 1869
ரோலர் ஸ்கேட்ஸ் (Roller skates) ஜோசப் மெர்லின் 1760
ரப்பர் (Rubber-latex foam) டன்லப் ரப்பர் கோ 1928
ரப்பர் (Rubber-tyres) தாமஸ் ஹான்காக் 1846
ரப்பர் (Rubber-vulcanised) சார்லஸ் மெக்கின்டோஷ் 1823
ரூபிக் கியூப் (Rubik cube) ஏர்னோ ரூபிக் 1975
சேஃப்டி பின் (Safety pin) வால்டர் ஹன்ட் 1849
ஸ்கூட்டர் (Scooter) வால்டர் லைன்ஸ் 1897
அரக்கு (Sealing wax) ஜெரார்ட் கெர்மேன் 1554
நிலநடுக்க அளவி (Seismographic scale) சார்லஸ் பிரான்ஸிஸ் ரிச்டர் 1935
தையல் கருவி (Sewing machine) தாமஸ் செயின்ட் 1790
சுறுக்கெழுத்து (Shorthand) மார்கஸ் டுல்லிஸ் டிரோ கி.மு.63
சுறுக்கெழுத்து (Shorthand-modern world) திமோதி பிரைட் 1588
ஸ்னுக்கர் (Snooker) சர் நெவில்லே சேம்பர்லியன் 1875
ஸ்பின்னிங் ஃபிரேம் (Spinning frame) ரிச்சர்டு ஆர்க்ரைட் 1769
இயந்திர நூற்புக் கருவி (Spinning Jenny) ஜேம்ஸ் ஹார்கிரீவாஸ் 1764
நூல் நூற்கும் இயந்திரம் (Spinning mule) சாமுவேல் குரோம்ப்டன் 1779
தாள்தைப்பு முள் கருவி (stapler) சார்லஸ் ஹென்ஹி கெளல்ட் 1868
நீராவி இயந்திரம் (Steam engine) தாமஸ் சவேரி 1698
நீராவி இயந்திரம் (Steam engine-piston) தாமஸ் நியூகாமன் 1712
நீராவி இயந்திரம் (Steam-engine-condenser) ஜேம்ஸ் வாட் 1765
நீராவிக் கப்பல் (Steamship) ஜெசி. பெரியர் 1775
நீராவி டர்பைன் (Steam turbine) சார்லஸ் பார்சன்ஸ் 1894
உருக்கு உற்பத்தி (Steel production) ஹென்றி பெஸமர் 1855
உருக்கு (Steel-stainless) ஹாரி பியார்லே 1913
ஸ்டெதஸ்கோப் (Stethoscope) ரெனே லீன்னெக் 1816
ஸ்டாப்வாட்ச் (Stopwatch) ஜீன் மாய்ஸே 1776
நீர்மூழ்கி (Submarine) கார்னிலியஸ் ஜேக்கப்சூன் ட்ரெபெல் 1624
சிரிஞ் (Syringe-hypodermic) சார்லஸ் கேப்ரியேல் பிரவாஸ் 1835
டேபிள் டென்னிஸ் (Table tennis) ஜேம்ஸ் கிப் 1890
பீரங்கி வண்டி (Tank) எர்னெஸ்ட் ஸ்வின்டன் 1914
டேப் ரிக்கார்டர் (Tape recorder) லூயிஸ் பிளாட்னர் 1929
தந்திப்பொறி (Telegraph –electric) ஜார்ஜ லூயிஸ் லிசேஜ் 1774
தந்திப்பொறி (Telegraph) எம் லேம்மன்ட் 1787
தந்திக் குறியீடு (Telegraph code) சாமுவேல் மோர்ஸ் 1837
தொலைபேசி (Telephone) ஆன்டோனியோ மியூசி 1849
தொலைபேசி (Telephone-patent) அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் 1876
டெலஸ்கோப் (Telescope-refractor) ஹான்ஸ் லிப்பெர்ஷே 1608
டெலிவிஷன் (Television-mechanical) ஜான் லூகி பைர்டு 1926
டென்னிஸ் (Tennis) வால்டர் ஜி விங்பீல்டு 1873
தெர்மோமீட்டர் (Thermometer) கலிலியோ கலிலி 1593
தெர்மோமீட்டர் (Thermometer-mercury) கேப்ரியேல் ஃபாரன்ஹுட் 1714
டூத்பிரஸ் (Toothbrush) வில்லியம் ஆடிஸ் 1649
நீர்மூழ்கிக் குண்டு (Torpedo) ரோபர்ட் ஒயிட் ஹெட் 1866
டிராபிக் லைட்ஸ் (Trafic lights) ஜெபி கினைட் 1868
மின்மாற்றி (Transformer) மைக்கேல் ஃபாரடே 1831
பயண நிறுவனம் (Travel agency) தாமஸ் குக் 1841
பயணிகள் காசோலை (Travellers cheques) ரோபர்ட் ஹெரிஸ் 1772
விசைப்பொறி உருளை (Turbo Jet) பிராங்க் விட்டல் 1928
தட்டச்சுப்பொறி (Typewriter) பெல்லிகிரின் டாரி 1808
தட்டச்சுப்பொறி (Typewriter-patent) வில்லியம் பர்ட் 1829
தட்டச்சுப்பொறி (Typewriter-mass production) கிறிஸ்டோபர் ஷோல்ஸ் 1874
அம்மைக் குத்துதல் (Vaccination) எட்வர்ட் ஜென்னர் 1770
வாக்வம் கிளீனர் (Vacuum cleaner-electric) ஹியூப்பிரெட் செசில் பூத் 1901
ஃபிளாஸ்க் (Vacuum flask) ஜேம்ஸ் தேவார் 1871
வீடியோ ரெக்கார்டர் (Video Recorder) ஆம்பெக்ஸ் கோ 1956
வாஷிங் மெஷின் (Washing machine-electric) ஹர்லே மெஷின் கார்ப்பரேஷன் 1907
கைக் கடிகாரம் (Watch-waterproof) ரோலக்ஸ் 1927
கைக்கடிகாரம் (Watch) பார்த்தோலோமி மேன்பிரிடி 1462
மின்சார பற்றவைப்பான் (Welder-electric) எலிஷா தாம்சன் 1877
சக்கரம் (Wheel) மெசப்போடாமியர் சுமார் கி.மு.3500
வெள்ளை சாலை குறியீடு (White road marking) எட்வர்ட் நாரிஸ் ஹைன்ஸ் 1911
ஜெராக்ஸ் (Xerox copier) செஸ்டர் கார்ல்சன் 1938
எக்ஸ்ரே (X-ray) வில்ஹெம் கோன்ரேட் ரோன்ட்ஜன் 1895
சிப் ஃபாஸ்ட்னர் (Zip fastener) விட்காம்ப் எல் ஜீட்சன் 1891

*காவிரி மேலாண்மை ஆணையம்*

=================================
காவிரி மேலாண்மை ஆணையத்தின் தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டு
ள்ளவர்?
விடை = மசூத் உசேன் (மத்திய நீர் ஆணையத்தலைவர்)
=================================
காவிரி மேலாண்மை ஆணையத்தில் எத்தனை உறுப்பினர்கள் இடம்பெறுவர்?
விடை = 9 உறுப்பினர்கள்
# முழுநேர உறுப்பினர்கள் = 02
# பகுதிநேர உறுப்பினர்கள் = 02
# நான்கு மாநிலம் சார்பில் = 04
# மத்திய அரசு சார்பில் = 01

Saturday, 9 June 2018

*ரிட் மனு என்றால் என்ன?*

ரிட் மனு என்றால் என்ன ? எந்த வகையான பிரச்சனைகளுக்கு ரிட் மனு தாக்கல் செய்யலாம் ?


ரிட் மனு என்றால் என்ன ? எந்த வகையான பிரச்சனைகளுக்கு ரிட் மனு தாக்கல் செய்யலாம் ?

அரசாங்கம், மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு எதிராகவோ அல்லது அரசு தலையிட்டு நடத்த வேண்டிய காரியங்களுக்கு ரிட் மனு தாக்கல் செய்யலாம்.

ரிட் மனு என்றால் என்ன ?

‘WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்!

எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்?

பொது நலன் பாதிக்கப்படும்போது, பொது நல வழக்குகள் (Public Interest Litigation) தொடரலாம்.

1. உதாரணமாக உங்கள் ஏரியா ரோடு மோசமாக இருந்தால், அந்தப் பகுதியின் அதிகாரத்திற்குட்பட்ட அரசுத்துறைகளுக்கு ஒரு மனு கொடுத்தும், அவர்கள் எதுவும் நடவடிக்கை எடுக்க வில்லை என்றால், அந்தத் துறைக்கு ரோடு போட உத்தரவு போடச் சொல்லி அரசாங்கத்தைக் கேட்கலாம்.

நீங்கள் குடியிருக்கும் இடத்திற்குப் பக்கத்தில் ஒரு ஃபேக்டரியிலிருந்து புகை வந்து, அந்தப் புகை சுற்றுச் சூழலை பாதித்தால், அருகில் இருக்கும் மாசுக்கட்டுப்பாடு அலுவலகத்தில் புகார் செய்யலாம்.

அறுபது நாட்களுக்குள் அவர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அரசாங்கத்தை நடவடிக்கை எடுக்கச் சொல்லி, ரிட் மனு தாக்கல் செய்யலாம். தற்போது பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் சாயப்ப ட்டறைகளை மூட வேண்டும் என்று ஹைகோர்ட் தீர்ப்பளித்தது கூட அந்தப் பகுதி மக்கள் ‘ரிட்’ மனு தாக்கல் செய்த பின்பு தான்.





ஐந்து வகைகளில் ரிட் மனுவைத் தாக்கல் செய்யலாம்.

1. முதல் வகை, ‘ரிட் ஆஃப் மாண்டமஸ்’. இதற்கு ஆணையிடும் நீதிப் பேராணை என்று பொருள். அதாவது, தனக்கு வரையறுக்கப்பட்ட கடமையை ஒரு அரசு அதிகாரி செய்யா விட்டாலோ, அரசாங்கம் அல்லது அரசு சார்ந்த நிறுவனம் சட்ட விரோதமான உத்தரவைப் பிறப்பிக்கப் போகிறது என்று தெரிந் தாலோ, அந்தக் காரியத்தை செய்யாமல் தடுக்க, ஆணையிட வேண்டும் என்று ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்.

சாலையின் பிளாட்பார ஆக் கிரமிப்புகளை அகற்ற உத்தர விடக்கோரி ரிட் மனுவைத் தாக்கல் செய்யலாம்.

2.அடுத்தது ‘செர்ஷியோரரி (certiorari) ரிட்.’ ஒரு ஹை கோர்ட்டின் y உள்ள, ஒரு கோர்ட் அல்லது, தீர்ப்பு கொடுக்கும் அதிகாரமுள்ள ஒரு அரசு அதிகாரி, சட்ட விரோதமாக, ஒரு உத்தரவு போட்டால், அந்த உத்தரவை ரத்து செய்யவும், அல்லது அந்த குறிப்பிட்ட நீதி மன்றத்துக்கோ அல்லது அரசு அதிகாரிக்கோ, சரியான வழிமு றையை உணர்த்து ம்படி உத்தரவிடக்கோரி கேட்பதுதான் இந்த ரிட் மனுவின் அடிப்படை. என்ன புரியவில்லையா? உதார ணமாக, ஒரு சினிமா தியேட்டர் கட்டுவதற்கு கலெக்டரிடம் ‘நோ அப்ஜக்ஷன்’ ஒருவர் கேட்கிறார். அங்கே இருபத்தைந்து அடி தூரத் தில் ஹாஸ்பிடல் இருக்கிறது. சினிமா தியேட்டரால் ஹாஸ் பிடலுக்கு பாதிப்பு வரும், அதனால், நோ அப்ஜக்ஷன் கொடுக்கக் கூடாது என்று பொதுமக்கள் ஆட்சேபித்தும் அந்த ஆட்சேஷப ணையைப் பரிசீலி க்காமல், நோ அப்ஜக்ஷனை கலெக்டர் தந் தால், அந்த உத்தரவை எதிர்த்து ‘செர்ஷியோரரி ரிட்’ மனு தாக்கல் செய்யலாம்.

3.மூன்றாவது ரிட் மனுவிற்கு ‘கோவாரண்டோ’ (Quowarranto) என்று பெயர். எந்த ஒரு அரசாங்க அதிகாரியாவது, தகுதி இல்லா மல், ஒரு பதவிக்கு நியமிக்கப்பட்டாலோ அல்லது தனது பதவி யின் அதிகார வரம்பை மீறி அவர் உத்தரவு பிறப்பித் தாலோ, அதை எதிர்த்து ‘கோவாரண்டோ ரிட்’ தாக்கல் செய்ய லாம்.

4.அடுத்தது பிரொகிபிஷன் (Prohibition) ரிட். அதாவது ஒரு நீதி மன்றம் தனது அதிகார வரம்பு மீறி செயல்படாதவாறு தடுப்பத ற்காகப் போடப்படுவது இது.

5.அடுத்தது ‘ஹெபியஸ் கார்பஸ்’ (Hebeas corpus) ரிட். இதற்குத் தமிழில் ‘ஆள் கொணர் ஆணை’ என்று பொருள். நமக்குத் தெரிந்த ஒருவர் தவறாகக் காவலில் வைக்கப்பட்டிருந்தாலோ அல்லது ஒருவரைக் காணவில்லை, அவரை யாரோ கடத்தி, அடைத்து வைத்து இருக்கிறார்கள் என்று சந்தேகப்பட்டாலோ, இந்த ரிட் மனுவை நாம் தாக்கல் செய்யலாம். இந்த மனுவை விசாரிக்கும் நீதிமன்றம், காவல்துறைக்கு அந்த நபரை, நீதிமன்றத்திற்கு ஆஜர் படுத்தச் சொல்லி உத்தரவிடும்.

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், ‘ஹெபியஸ் கார்பஸ்’ மற்றும் ‘கோவாரண்டோ ரிட்’ மனுக்களை யார் வேண்டு மானாலும் போடலாம். ஆனால், மற்ற ரிட் மனுக்களான ‘மாண்ட மாஸ்’, ‘செர்ஷியோரரி’ மற்றும் ‘ப்ரோகிபிஷன் ரிட்’ மனுக்களை பாதிக்கப்பட்ட நபர்கள்தான் தாக்கல் செய்யலாம்.

*June-8_உலக கடல் தினம்*

#ஜீன்_08 #June_08

ஆண்டு தோறும் ஜூன் 8-ஆம் தேதியானது உலக கடல் தினமாக கொண்டாடப்படுகிறது

பூமியில் நாம் வாழ்வதற்கு கடல் பெரும்பங்கு வகிக்கிறது, மேலும் கண்டங்களை ஒன்றிணைத்து வாணிபம் செய்யவும், பலநாடுகளின் போக்குவரத்து தேவைகளும் கடல் மார்க்கமாகவே நடைபெறுகிறது.

கடல் ஒவ்வொரு ஆண்டும் பல மில்லியன் மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்திசெய்வதோடு, ஆக்சிஜன் எனும் உயிர் வாயுவை உற்பத்தி செய்தும், முக்கியமான மருந்துகளின் மூலப்பொருட்களையும் வழங்குகிறது.

மேலும், காலநிலை மாற்றங்களைச் சீரமைக்க பேருதவியாக உள்ள இப்பெருங்கடல்கள், சில சமூகத்தினரின் வாழ்வாதாரங்களாக அமைந்துள்ளது.

உலகப் பெருங்கடல்கள் நாள் என்பது உலக நாடுகளால் ஆண்டுதோறும் ஜூன் 8 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.

இந்நிகழ்வை செய்வது குறித்து 1992 ஆம் ஆண்டில் பிரேசிலின், #ரியோ_டி_செனீரோ நகரில் இடம்பெற்ற #பூமி_உச்சி_மாநாட்டில், முதன் முறையாக #கனடா கோரிக்கையை முன்வைத்தது.

அடுத்து, இது அதிகாரபூர்வமற்ற வகையில் உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வந்தது. பின்னர் ஐக்கிய நாடுகள் அவை 2008 ஆம் ஆண்டில் இந்நிகழ்வை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து அறிக்கை வெளியிட்டது.

அன்று முதல் உலகளாவிய அளவில் பெருங்கடல் திட்டம் என்ற அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்டு கடல் தினமானது கொண்டாடப்பட்டு வருகிறது.

*சுயசரிதைகள் - எழுதியவர்கள் *

1.My Experiments with truth - மகாத்மா காந்தி
2.An autobiography - ஜவஹர்லால் நேரு
3.Prison's diary - ஜெயப்ரகாஷ் நாராயணன்
4.Mein Kemf - அடால்ஃப் ஹிட்லர்
5.My Reminicenses - ரவீந்திரநாத் தாகூர்
6.Wings of Fire - ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்
7.The Insider - பி.வி. நரசிம்மராவ்
8.My Presidential Years - ஆர். வெங்கட்ராமன்
9.I Dare - கிரண்பேடி
10.My music My Life - பண்டிட் ரவிசங்கர்
11.Autobiography of an Unknown Indian -    நிராத் சி. சௌத்ரி
12.Friends not Masters - அயூப்கான்
13.Playing in my way - சச்சின் டெண்டுல்கர்
14.Daughter of the East - பெனாசிர் பூட்டோ
15.My Life - பில் கிளிண்டன்
16.Freedom in Exile - தலாய் லாமா
17.Son of My Father - டாம் மோரிஸ்
18.Revenue Stamp - அம்ரிதா ப்ரிதம்
19.My Days - ஆர்.கே. நாராயணன்
20.என் சரிதம் - உ. வே. சாமிநாதன்
21.என் கதை - நாமக்கல் கவிஞர்
22.என் வாழ்க்கை குறிப்புகள் - திரு. வி. க
23.நான் ஏன் பிறந்தேன் - எம்.ஜி.ஆர்
24.வனவாசம் மனவாசம் - கண்ணதாசன்
25.இதுவரை நான் - வைரமுத்து
26.நெஞ்சிக்கு நீதி - மு. கருணாநிதி

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...