Monday, 20 August 2018

*சிவில் சர்வீசஸ் தேர்வு :*

அடிப்படைத் தகவல்கள்:

இது சிவில் சர்வீசஸ்தேர்வுகள் குறித்த தொடர் பதிவுகளில் முதல்பகுதி. அனைவருக்கும் பொதுவான பொது அறிவுப் பாடங்கள்கள் குறித்து இதில் காணலாம்.

சிவில் சர்வீசஸ்தேர்வில் மூன்று கட்டங்கள் உண்டு.
1. முதல் நிலைத்தேர்வு ( Preliminary Examination)
2. முதன்மைத் தேர்வு ( Main Examination)
3. நேர்முகத்தேர்வு ( Interview)

தேர்வுத்திட்டத்தை ஒவ்வொன்றாகக் காணலாம்.

முதல் நிலைத் தேர்வு (Preliminary Examination)

முதல்நிலைத்தேர்வு என்பது தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள நபர்களில் சிலரை மட்டும் வடிகட்டி முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கும் ஸ்கீரினிங் டெஸ்ட் (Screening test). இதில் எடுக்கப்படும் மதிப்பெண்கள் இறுதி மதிப்பெண்களில் சேர்க்கப்படாது. இருப்பினும் இதில் ஒரு குறிப்பிட் கட் ஆஃப் மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தால்தான் முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். எனவே இது முக்கியமான தேர்வு.

சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் ஐந்து இலட்சம் மாணவர்களில் சுமார் 15,000 மாணவர்கள் முதன்மைத்தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். எஞ்சியவர்கள் முதல்நிலைத் தேர்வுக்கட்டத்தில் வடிகட்டப்படுவர். எனவே, முதல்நிலைத்தேர்வை எளிதாக எடுத்துக் கொள்ள இயலாது.

கானல்நீரான மொழிச்சமநிலை!

தமிழ்வழிமாணவர்களுக்குச் சோதனையான கட்டமாக இந்த முதல்நிலைத்தேர்வு அமைந்துள்ளது என்தை இங்கு குறிப்பிட்டாகவேண்டும். ஏனெனில், சிவில்சர்வீசஸ் உள்ளிட்ட யூபிஎஸ்சி நடத்தும் அனைத்து தேர்வுகளின் வினாத்தாள்களும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே இருக்கும். தமிழ் உள்ளிட்ட பிற இந்திய மொழிகளில் படிக்கும் மாணவர்கள் இந்தத் தேர்வினை ஒரு அந்நிய மொழியில் படித்து எழுதவேண்டியுள்ளது. இந்தியில் படிக்கும் மாணவர்களால் தன்தாய் மொழியில் வினாக்களை எளிதில் புரிந்துகொள்ள இயலும். அவர்களுடன் தமிழ் உள்ளிட்ட பிறமொழி மாணவர்கள், அந்நிய மொழி ஒன்றில் படித்து, அதைத் தாய்மொழியில் உள்வாங்கி விடைகளைச் சிந்தித்து, ஆங்கிலத்தில் விடைகளைத் தேடி, சரியான விடையைக் கண்டறிந்து குறிக்கவேண்டும். இவ்விதமான எந்த சிக்கலும் இன்றி எளிதில் இந்தி மாணவர்களும், ஆங்கில வழிமாணவர்களும் தேர்வினை எதிர்கொள்கின்றனர். இப்போட்டி ஒருவருக்கு தொடர் ஓட்டமாகவும் ஒருவருக்கு தடைதாண்டும் ஓட்டமாகவும் அமைந்துள்ளது. இது எவ்வாறு சமமான போட்டி என்று தெரியவில்லை. மொழிச்சமநிலையை நிலைநாட்ட வினாத்தாள்களை தமிழ் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் வழங்கவேண்டும்என்ற நீண்டநாள் கோரிக்கை உரியவர்களால் ஏற்கப்படவே இல்லை. தமிழ் வழியில் படித்து கலெக்டர் ஆகக் கனவுகாணும் போது அந்தக் கனவினை முளையில் கிள்ளும் வேலையினை இந்த மொழிச்சமநிலை இல்லா வினாத்தாள் செய்துவிடுகிறது.

தமிழ்நாட்டில் குரூப் 1 தேர்வுக்காக விண்ணப்பிப்பவர்கள் சுமார் மூன்று இலட்சம்பேர். பணிக்காலியிடங்கள் இரட்டை இலக்கங்களில் மிகச்சொற்பமாக இருக்கும். ஆனால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்கள் உள்ள சிவில்சர்வீசஸ் தேர்வுகளுக்கு தமிழ்நாட்டிலிருந்து விண்ணப்பிப்பவர்கள் வெறும் பத்தாயிரம்பேர்! விண்ணப்பித்தபிறகு அந்தத்தேர்வினை எழுதுபவர்கள் அதைவிடக்குறைவு. ஏன் இந்த நிலை?

குரூப் 1 தேர்வுக்குத் தகுதியான அனைத்து நபர்களும் சிவில்சர்வீசஸ் தேர்வினை எழுதலாம். ஆனால் அவர்கள் எழுதுவதில்லை. யாருக்கும் உயர்பதவி அடைய விருப்பம் இல்லையா? அதற்கான திறமை இல்லையா?

காரணம் தேர்வுமுறை தாய்மொழிக் கல்வி பயின்ற மாணவர்களுக்கு எதிராக உள்ளது என்பதே! தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத் குரூப் 1 குரூப் 2 தேர்வினை எழுதும் மாணவர்கள் யாரும் சிவில்சர்வீசஸ் தேர்வுமாணவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பது என்னுடைய கருத்து. தமிழ் மொழியில் வினாத்தாள் அமைந்தால் அவர்கள் இந்திய அளவில் கடும்போட்டியாளர்களாக விளங்குவார்கள். தற்பொழுது இந்திய அளவில் சுமார் 10% சிவில் சர்வீசஸ் பணியிடங்களைப் பெறும் தமிழ்நாட்டு மாணவர்கள், சமமான போட்டி கிடைத்தால் இன்னும் இரண்டுமடங்கு அதிகமான பணிகளைப் பெறுவர் என்பது எனது கணிப்பு.

நாடு முழுவதிலும் உள்ளஇலட்சக்கணக்கான திறமையான தாய்மொழி வழிக்கல்வி பயின்ற மாணவர்கள் பங்கேற்காத, இல்லை பங்கேற்கவிடாத தேர்வு ஒன்றினை உலகின் கடினமானதேர்வு சூரியக்குடும்பத்தின் உன்னதமான தேர்வு என்றெல்லாம் சொல்வது சுத்த அபத்தம்.! ஆனாலும், இந்தச் சமமற்ற தேர்வுமுறையினை எதிர்கொண்டுதான் தமிழ் மாணவர்கள் வெல்கின்றனர். அது எவ்வாறு எனக்காண்போம்.

தமிழ்வழி மாணவர்கள் எப்படி தேர்வினை எதிர்கொள்கின்றனர்?

தமிழ்வழி சிவில் சர்வீசஸ் தேர்வு மாணவர்கள் தாங்கள் தமிழில் படிப்பதை ஆங்கிலத்திலும், ஆங்கிலத்தில் படிப்பதை தமிழிலும் மொழிமாற்றிக் கொள்ளும் திறனைப் பெற்றிருக்கவேண்டும். இது ஒன்றும் கைக்கொள்ளமுடியாத திறன் அல்ல. சற்று மொழியறிவும் பயிற்சியும் இருந்தால் இயல்பான பழக்கத்துக்கு கொண்டுவந்துவிடலாம். ஆனால் இதைச் செய்ய அடிப்படையான ஆங்கில அறிவு தேவை. அதை நம் பள்ளிக்கல்வி நிலையிலேயே பெற்றுவிடலாம். அவ்வாறு பள்ளியில் பெறவில்லையானாலும் சிலமாதங்கள் முயன்றால் இத்திறமையை அடைந்துவிடலாம். முதல்நிலைத்தேர்வின் வினாக்கள் ஆங்கிலத்தில் அமைந்திருப்பதால் முதல்நிலைத் தேர்வுக்கு ஆங்கில நூல்களை கட்டாயம் படித்திருக்கவேண்டும். பாடங்களை ஆழமாகப் புரிந்துகொள்ள தமிழ்நூல்களைக் கற்கலாம். ஆனால் முதல்நிலைத் தேர்வுக்கு தமிழ் நூல்கள் மட்டும்போதாது. ஆங்கிலநூல்கள் அவசியம்தேவை. எனவே, இனி சொல்லப்போகும் நூற்பட்டியலில் ஆங்கிலநூல்களும் தமிழ்நூல்களும் கலந்துவரும். அதைக் கவனத்தில் கொள்க.

முதல்நிலைத்தேர்வுக்கான நூற்பட்டியல்:

1) பொதுஅறிவுத்தாள் (General Studies paper -1)

இந்த முதல்நிலைத்தேர்வு கொள்குறிவகைத் தேர்வு. (Objective type questions). முதல் தாளான பொதுஅறிவுத்தாளில் 100 வினாக்கள் கேட்கப்படுகின்றன. இதில் எடுக்கும் ஒவ்வொரு மதிப்பெண்ணும் முதல்நிலைத்தேர்வைத் தாண்டி முதன்மைத்தேர்வில் நுழைய உதவி புரியும். மேலும் இந்தத் தேர்வில் தவறாக குறிக்கப்படும் ஒவ்வொரு வினாவுக்கும் 0.33% எதிர் மதிப்பெண் -நெகட்டிவ் மதிப்பெண் உண்டு. எனவே கண்மூடித்தனமாக தேர்வினை எழுத இயலாது. இந்தத் தாளின் ஒவ்வொரு பாடப்பகுதிக்கும் படிக்கவேண்டிய நூல்களைக் காணலாம்.

A.Indian History:

1. Modern India, Bipan Chandra (old NCERT)
2. A brief history of Modern India, Spectrum publications.
3. Ancient india, RS Sharma ( old NCERT)
4. Medieval India, Satish Chandra ( old NCERT)
5. CCRT website ( for indian culture) http://ccrtindia.gov.in
6. Contemporary India, G.Venkatesan
தமிழ்நூல்கள்:
1.விடுதலைப் போராட்ட வரலாறு, க.வெங்கடேசன்.
2.நவீன இந்தியா, பிபன் சந்திரா (தமிழ் மொழிபெயர்ப்பு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)
3.சமகால இந்திய வரலாறு, க.வெங்கடேசன்.
4.பண்டைக்கால இந்திய வரலாறு, ஆர்எஸ். சர்மா (தமிழ் மொழிபெயர்ப்பு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் )
5.வந்தார்கள் வென்றார்கள், மதன், விகடன் பப்ளிகேஷன்ஸ்.
6. +1,+2 தமிழ்நாடு பாடநூல்.

B.Indian polity

1.Indian polity , Lakshmikanth
2. Introduction to indian constitution, DD Basu.
தமிழ்நூல்கள்:
1.அரசியலமைப்புச் சட்டம், ப.அர.ஜெயராஜன்
2.இந்திய அரசியலமைப்பு, பேராசிரியர். சந்திரசேகரன்
3.நமதுஅரசியலமைப்பு, சுபாஷ்காஷ்யப் (NBT,தமிழ் மொழிபெயர்ப்பு).

C.Geography and Environmental science.

1. NCERT books from 9th to 12th
2. Certificate physical geography, Oxford university press, Goh Cheng leong
3. Environmental studies, NIOS Study material. Free download:http://mrunal.org/download
4.Enivironment, Shankar IAS Academy publication.
5.School Atlas, Oxford or Orient black swan, or ttk.
தமிழ்நூல்கள்:
1.தமிழ்நாடு பாடநூல் நிறுவன நூல்கள் , சமூக அறிவியல் - புவியியல் 8 ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை.
2. இலங்கைத் தமிழ் புவியியல் பாடநூல்கள். மின்நூலகம்:http://www.noolaham.org/wiki/index.php/பகுப்பு:புவியியல்

D. Indian Economy.

1. Indian Economy Key concepts, Sankar Ganesh Karuppaiah.
2. Prathiyogita Darpan.
தமிழ்நூல்கள்:
1.இந்தியப்
பொருளாதாரம் முக்கிய கருத்துக்கள், சங்கர் கணேஷ் கருப்பையா.
2. நாட்டுக்கணக்கு, சோம.வள்ளியப்பன்

E. Science and technology.
1. Tata MC Graw hill General studies manual, general science part.
2. 9,10th Science NCERT
3. +1,+2 Bio- Zoology.
4. The hindu
தமிழ்:
1. 9,10th அறிவியல் பாட நூல்கள்
2. +1,+2 உயிரியியல் - விலங்கியல் பாடநூல்.
3. தமிழ் இந்து நாளிதழ்.
4. இணையதள மூலங்கள்.

F: Current affairs
1. The hindu.
2. Insights on india website: http://www.insightsonindia.com
3. Mrunal.org website: http://mrunal.org
4. Gk today website: http://www.gktoday.in
5. Press information Bureau  website: www.pib.nic.in
தமிழ்:
1.தமிழ் இந்து நாளிதழ்.
2.தினமணி நாளிதழ்.

G. General knowledge

1.India year book, publication division.
2. Manorama year book
தமிழ் நூல்
1.மனோரமா இயர்புக்

H. General studies Question bank.

1. 21 Years CSAT General Studies IAS Prelims Topic-wise Solved Papers (1995-2015), Disha publishers. online store:http://www.amazon.in/General-Studies-Prelims-Topic-wise-1995-2015/dp/9385846000/ref=dp_ob_title_bk
2. Tata MC Graw hill (any edition - to practice objective type questions)

இவ்வளவு நூல்களா என்று யாரும் மலைத்துவிடவேண்டாம்.! ஒரே பகுதிக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட நூல்களைச் சொல்லியுள்ளேன். தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பினைப்பொருத்து ஒவ்வொரு பகுதிக்கும் குறைந்தது ஒரு நூலாவது படிக்கவேண்டும். ஒவ்வொரு நூலிலும் ஒவ்வொரு சிறப்பு இருக்கும். அதைப் படிக்க படிக்கத்தான் உணரமுடியும். நான் அந்த அந்த நூல்களின் தேர்வு பயன்பாட்டினைப் பொருத்து 1,2,3 என வரிசைப்படுத்தியிருக்கிறேன். பாடத்திட்டப்படி ஒருபகுதிக்கு ஒருநூலை முதலில் படியுங்கள். நேரம் இருப்பதைப் பொருத்து அடுத்த நூலைப் படிக்கலாம்.

படிக்கத்துவங்கும் முன் முதலில் பழைய வினாத்தாள்களைப் பகுத்துப் பார்க்கவேண்டும். வினாக்களின் தன்மை, ஒவ்வொரு பாடப் பகுதியிலிருந்தும் எவ்வளவு வினாக்கள் தேர்வுக்கு கேட்கப்பட்டுள்ளன? ஒவ்வொரு பகுதியும் பாடத்திட்டத்தில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை பழைய வினாக்களைப் பகுத்து ஆராயும்போது தெரியும். இதற்கு 21 Years CSAT General Studies IAS Prelims Topic-wise Solved Papers (1995-2015) என்ற நூல் நன்கு பயன்படும். இதுபோன்ற பகுப்பாய்வை மிருனால் பட்டேல் தனது இணையதளத்தில் செய்துள்ளார் அதைக் காண்க: http://mrunal.org/upsc#csatp1 .

திறனறித் தேர்வு (CSAT- Paper-2)

திறனறித்தேர்வு எனப்படும் இத்தாளில் கணக்கு, லாஜிகல் ரீசனிங், மற்றும் ஆங்கில காம்ப்ரிஹென்சன் சார்ந்த வினாக்கள் கேட்கப்படும். இதில் கேட்கப்படும் 80 வினாக்களில் 35% - அதாவது 28 வினாக்களைச் சரியாக விடையளித்து தகுதி பெறவேண்டும். இது தகுதித்தேர்வாக (Qualifying test ) மாற்றப்பட்டுள்ளது. எனவே இதில் எடுக்கப்படும் மதிப்பெண்கள் முதல்நிலைத்தேர்வின் கட்ஆஃப் மதிப்பெண்களில் சேர்க்கப்படாது. தாள் 1 பொதுஅறிவுத்தாளில் பெறும் மதிப்பெண்மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.
இந்தத் தாளுக்கான பாடநூல்கள் வருமாறு.

A. Arithmatic and mental ability
1. Quantitative aptitude, RS Agarwal.
2. Fast track Arithmetic, Rajesh Verma.
3. Statistics, Spectrum solved questions.

B. Reasoning
1. Analytical reasoning , M.K.Pande. online store:http://www.amazon.in/gp/aw/d/8190458914/ref=mp_s_a_1_1?qid=1465477991&sr=1-1&pi=SY200_QL40&keywords=M.+K.+Pandey
How to use this book? : pls read this article by Mrunal patel here:http://mrunal.org/2014/06/studyplan-csat-aptitude-paper-2-comprehension-reasoning-analysis-previous-papers-free-studymaterial-cutoffs-part-1-2.html

2. Verbal non verbal Logical reasoning, RS.Agarwal. This book is useful for Non verbal questions and comprehension.

C. Comprehension
1. The Hindu news paper columns.

இரண்டாம்தாள் பெரும்பாலும் கணக்கு சார்ந்தும் ஆங்கில மொழிசார்ந்தும் இருப்பதால் தமிழ்நூல்கள் எதையும் பரிந்துரைக்கவில்லை.

முதன்மைத்தேர்வு (Main Examination)

சிவில் சர்வீசஸ் தேர்வின் மிகமுக்கியமான கட்டம் முதன்மைத்தேர்வு. இதில் எடுக்கும் ஒவ்வொரு மதிப்பெண்ணும் இறுதி வெற்றிவாய்ப்பைத் தீர்மானிக்கும். இந்தத் தேர்வு எழுத்துத்தேர்வு ( descriptive type questions).

இந்த முதன்மைத் தேர்வில் தமிழ்வழி மாணவர்கள் நிச்சயம் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பிறமாணவர்களை பின்னுக்குத் தள்ளிவிடலாம்! எப்படி?

அதுதான் தாய்மொழிவழிக் கல்வியின் பலம்! இந்தத் தேர்வில் பாடங்களை எந்த அளவுக்கு உள்வாங்கியிருக்கிறோம் என்பதைப் பொருத்து மதிப்பெண்கள் கிடைக்கும். வினாக்கள் நம் அறிவையும் நுணுகி ஆராயும் திறனையும் சோதிப்பதாக அமையும். அதைச் சரியாக விடைகளில் வெளிப்படுதிவிட்டால் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். தாய்மொழி வழிக்கல்வியில் படிப்பவர்களால் நிச்சயம் நன்முறையில் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத் முடியும். முதன்மைத் தேர்விலும் வினாக்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில்தான் இருக்கும். தமிழ்வழியில் தேர்வு எழுதுபவர்கள் வினாக்களை நன்கு புரிந்துகொண்டு விடையளிக்கவேண்டும். வினாக்களைப் புரிந்துகொண்டால்  பாதிவிடைகளை உருவாக்கிவிடலாம்!

முதன்மைத் தேர்வில் ஒரு கட்டுரைத்தாளும், நான்கு பொது அறிவுத்தாள்களும், ஒரு விருப்பாடத்தில் இரண்டு தாள்களும் ஆக 7 தாள்கள் உள்ளன. இவை தலா 250 மதிப்பெண்களைப் பெற்றவை. இவற்றில் பெறும் மதிப்பெண்கள் இறுதி மதிப்பெண் தரப்படுத்துதலுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

இது தவிர ஆங்கிலம், தமிழ் ஆகிய  மொழித்தாள்கள் இரண்டு தகுதித் தாள்களாக உள்ளன. இவற்றில் பெறும் மதிப்பெண்கள் இறுதி மதிப்பெண்களில் இடம்பெறாது. இதில் 35% மதிப்பெண் எடுத்து தேர்ச்சிபெற்றால் போதுமானது. இதில் உள்ள ஆங்கிலத்தாளைப் பார்த்து அச்சம் கொள்ளத் தேவையில்லை. வினாக்கள் உண்மையில் மிகவும் அடிப்படையான ஆங்கிலஅறிவைச் சோதிக்கும் வகையில்தான் இருக்கும். ஒரு எட்டாம் வகுப்பு மாணவணால் இந்தத் மொழிப்பாடத் தேர்வை எளிதில் எழுதிவிடமுடியும்.

முதன்மைத்தேர்வு மூலகங்கள்!

Insights on India

முதன்மைத்தேர்வின் பொது அறிவுத்தாள் நான்கினுக்கும் http://www.insightsonindia.com என்ற இணையதளம் பெரும் பயனுள்ளதாக இருக்கும். இந்தத் தளத்தில் தினசரி வெளிவரும் Answer writing Challenge - Insights Secure 2016 என்ற தலைப்பிலான மாதிரித்தேர்வு வினாக்களை எழுதிப் பழகவேண்டும். இந்த இணையதளம் மிகச்சிறந்தமுறையில் வினாக்களை வடிவமைத்து வெளியிடுகிறது.
இணைப்பு: http://www.insightsonindia.com/insights-secure-questions-on-current-events-for-upsc-civil-services-mains-exam-2016/
இந்த வினாக்களுக்கு நாடு முழுவதிலிருமிருந்து மாணவர்கள் விடைகளை எழுதுகின்றனர். அவ்வாறு அளிக்கப்படும் விடைகளில்  சிறந்த விடைகள் தொகுக்கப்படுகின்றன. இதை இந்த இணைய தளத்தின் பதிவிறக்க மெனுவில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இணைப்பு:http://www.insightsonindia.com/downloads/

சமூக ஊடகத்தின் கூட்டுமுயற்சியில் இந்தத் தளம் இயங்குவதால்  மாணவர்களுக்கு ஓப்பன் சோர்ஸ் முறையில் சிறந்த வழிகாட்டுதலை வழங்குகிறது. முன்னர் சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கு பெருநகரங்களில் உள்ள பயிற்சி மையங்களில் சேர்ந்து படித்தே ஆகவேண்டும் என்றநிலை இருந்தது. அதனை இதுபோன்ற  இணையதளங்கள் மாற்றி அமைத்துள்ளன. இன்று ஒரு ஸ்மார்ட் ஃபோனும் இணைய இணைப்பும் இருந்தால்போதும்! மிகச்சிறந்த தரமான வழிகாட்டுதல்ளை குக்கிராமத்திலிருந்தும் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்! இந்தத் தொழில்நுட்ப புரட்சி கடந்த ஐந்து ஆண்டுகளாக சிவில்சர்வீசஸ் தேர்வுமுறையில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இதனைப் புதியவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

நூற்பட்டியல்:

இனி ஒவ்வொரு தாளுக்கும் ஒவ்வொரு பகுதிக்கும் படிக்கவேண்டிய நூற்பட்டியலைப் பார்க்கலாம். இவற்றில் பெரும்பாலானவை ஏற்கனவே முதல்நிலைத்தேர்வுக்கு பரிந்துரைத்தவைதான் என்பதை கவனத்தில் கொள்ளவும். சிறப்பாக முதன்மைத் தேர்வுக்கு என சில நூல்களையும் படிக்கவேண்டும். அவற்றையும் பகுதிவாரியாகக் கொடுத்துள்ளேன்.

அ. பொது அறிவுத்தாள் 1 (General studies paper 1)
A. culture:
1. பண்டைக்கால இந்திய வரலாறு, ஆர்எஸ். சர்மா (தமிழ் மொழிபெயர்ப்பு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் )
2. Medieval India, Satish Chandra ( old NCERT)

இவ்விரண்டு நூல்களிலும் உள்ள சமயம், பண்பாடு, கலை, கட்டிடக்கலை, இலக்கியம் போன்ற பகுதிகள் போதும். அரசியல் வரலாறு தேவையில்லை.

B. Modern Indian History
1.விடுதலைப் போராட்ட வரலாறு, க.வெங்கடேசன்.
2.நவீன இந்தியா, பிபன் சந்திரா (தமிழ் மொழிபெயர்ப்பு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)

C. Post independence period.
1. சமகால இந்திய வரலாறு, க.வெங்கடேசன்.
2. சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியா, பிபன் சந்திரா (தமிழ் மொழிபெயர்ப்பு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு)

D. World History
1. History of modern world, B.V.Rao.
online store:http://www.amazon.in/History-Modern-World-B-Rao/dp/812077776X#
2.வாவ் 2000, வேல்ஸ், விகடன் பதிப்பகம்.
3. +2 தமிழ்நாடு பாடநூல்.

E. Indian society, role of women, poverty, globalization etc.
இப்பகுதிக்கு எனத்தனியாக நூல்கள் படிக்கத் தேவையில்லை. நல்ல செய்தித்தாள் மற்றும் வாசிப்பு பழக்கம் இருந்தால் போதும்.

F.Geography
1.தமிழ்நாடு பாடநூல் நிறுவன நூல்கள் , சமூக அறிவியல் -புவியியல், 8 ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை.
2. இலங்கைத் தமிழ் புவியியல் பாடநூல்கள். மின்நூலகம்:http://www.noolaham.org/wiki/index.php/பகுப்பு:புவியியல்
3. +1,+2 Indian Geography, world geography NCERT books.

இவற்றில் இந்தியப் புவியியல் முக்கியமான பகுதி. அதற்கு அதிக கவனம் கொடுத்துப் படிக்க வேண்டும்.

ஆ. பொது அறிவுத்தாள் 2 (General studies Paper 2)

Insights secure மாதிரித்தேர்வுகள் இந்தத்தாளுக்கு பெரிதும் பயன்படும். பதிவிறக்க இணைப்பு: http://www.insightsonindia.com/downloads/

A.Polity
1.Indian polity , Lakshmi kanth
2.அரசியலமைப்புச் சட்டம், ப.அர.ஜெயராஜன்
3.இந்திய அரசியலமைப்பு, பேராசிரியர். சந்திரசேகரன்
4.நமதுஅரசியலமைப்பு, சுபாஷ்காஷ்யப் (NBT,தமிழ் மொழிபெயர்ப்பு).

B. Governance and govt welfare schemes etc.
1. Governance in india, Lakshmikanth.
2. India year book, publication division.

இந்தத் தாளில் பாடத்திட்டத்தில் உள்ள பிரிவுகளில் நடப்பு நிகழ்வுகள் சார்ந்து வினாக்கள் அதிகம் கேட்கப்படுகின்றன. எனவே, நல்ல செய்தித்தாள் மற்றும் பத்திரிக்கைகள் வாசிப்பது அவசியம். பத்திரிக்கைகளில் நடுப்பக்கக் கட்டுரைகள் மற்றும் தலையங்கப் பகுதிகள் முக்கியமானவை.

செய்தித்தாள்கள்:
1. The hindu
2. தமிழ் இந்து
3. தினமணி
4. http://www.livemint.com

இ.பொது அறிவுத்தாள் 3 (General Studies paper 3)

A.Economy
இந்தத்தாளில் முற்றிலும் நடப்பு நிகழ்வுகள் சார்ந்து வினாக்கள் வருகின்றன. இதற்கு மேற்சொன்னவாறு பத்திரிக்கைகள் வாசிப்பு அவசியம். இன்சைட்ஸ் இணயதளம் இந்தத் தாளுக்கு பெரிதும் பயன்படும்.
இணைப்பு: http://www.insightsonindia.com/downloads/
நடப்பு பொருளாதாரநிகழ்வுகளைப்  புரிந்து கொள்ள சில அடிப்படை நூல்களைப் படித்திட வேண்டும்.
அவையாவன:
1. Indian Economy Key concepts, Sankar Ganesh Karuppaiah.
2. Prathiyogita Darpan.
3.இந்தியப்
பொருளாதாரம் முக்கிய கருத்துக்கள், சங்கர் கணேஷ் கருப்பையா.
4.. நாட்டுக்கணக்கு, சோம.வள்ளியப்பன்

இந்தியப் பொருளாதாரம் குறிப்புதவி நூற்கள் ( Reference books)
1. Indian economy, Dutt and Sundaram.
2. Indian Economy, Ramesh singh.

B. Agriculture
1. People and economy, 12th NCERT.

C. Science and technology
1. The hindu
2. தமிழ் இந்து இணையதளம். இந்து இணையதளத்தில் அறிவியல் சார்ந்த ஓராண்டு செய்திகளைத் தேடிப் படிக்கவும்.

D. Internal security.
1. Challenges to internal security of india, Ashok kumar & vipul.
Online store: http://www.amazon.in/gp/aw/d/9339204190/ref=mp_s_a_1_1?qid=1465494214&sr=8-1&pi=SY200_QL40&keywords=internal+security&dpPl=1&dpID=5105UGn3L9L&ref=plSrch

ஈ. பொது அறிவுத்தாள் 4 (General Studies Paper 4.)

இப்பகுதி Ethics integrity and aptitude என்ற தாள் ஆகும். இதில் தியரி என்ற கொள்கை கருத்துகள் பகுதியும் கேஸ் ஸ்டடீஸ் ( Case studies) என்ற நிகழ்வுகள்சார் பகுதிகளும் உள்ளன. இதற்கு என தமிழில் தனியான நூல்கள் ஏதுமில்லை. திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் நூல்களில் இல்லாத அறக்கருத்துக்கள் ஏது! எனவே இப்பகுதிக்கு என்று தனியாக ஏதும் படிக்கவேண்டியதில்லை. விடைகளில் தமிழ் அறநூல்களில் உள்ள கருத்துக்களை மேற்கோள்காட்டி எழுதலாம்.
இன்சைட்ஸ் இணையதளத்தில் வரும் மாதிரி வினாக்களை எழுதிப்பார்ப்பது நேரமேலாண்மைக்கு உதவியாக இருக்கும். மற்றபடி சில அறநெறி கலைச்சொற்களை தெரிந்து மொழி பெயர்த்து வைத்துக் கொள்ளவும். இந்தக் கலைச்சொல் அறிமுகத்துக்கு கீழக்கண்ட நூல் பயன்படும்:
1. Lexicon for Ethics integrity and aptitude , Chronicle publications. Online store: http://www.amazon.in/gp/aw/d/8192826430/ref=mp_s_a_1_1?qid=1465494984&sr=8-1&pi=AC_SX118_SY170_FMwebp_QL65&keywords=Lexicon

உ. கட்டுரைத்தாள் (Essay paper)

இந்தத் தாளில் இரண்டு கட்டுரைகள் எழுத வேண்டும்.தமிழ் வழித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண்களை இத்தாளில் பெறலாம். இதற்கென தனியாக எதுவும் படிக்கவேண்டியதில்லை. பரந்துபட்ட வாசிப்பு இருந்தால் போதும். நல்ல மொழி ஆளுமை தேவை. ஆங்கிலத்தைவிட தாய்மொழியில் நிச்சயம் நல்ல மொழி ஆளுமையைச் செலுத்தலாம் என்பது என்கருத்து.

மொழித்தாள்கள்

ஊ. ஆங்கிலம் (Compulsory English.)
இத்தாளுக்கு முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள்களைப் மாதிரியாப் பார்த்து வைத்துக் கொள்ளலாம்.

ஊ. தமிழ் மொழித்தாள்
சிறப்பான தயாரிப்புகள் எதுவும் தேவையில்லை.

முதல் நிலைத்தேர்விலிருந்து முதன்மைத்தேர்வின் பொது அறிவுத்தாள்கள், கட்டுரை மற்றும் கட்டாய மொழித்தாள்கள் வரை ஓரளவு விளக்கியுள்ளேன்.

இன்னும் விருப்ப பாடங்கள் குறித்தும், நேர்முகத்தேர்வு குறித்தும் அடுத்த பகுதிகளில் பார்க்கலாம்.

*தமிழ்நாட்டின் தலைவர்களின் சிறப்பு பெயர்கள்:-*

♻ தென்னாட்டு பெர்னாட்ஷா - அறிஞர் அண்ணா
♻ தமிழ்நாட்டு பெர்னாட்ஷா - மு. வரதராசனார்
♻ நாடகத் தந்தை - பம்மல் சம்பந்த முதலியார்
♻ நாடகத் தலைமை ஆசிரியர் - சங்கரதாஸ் சுவாமிகள்
♻ தமிழ்நாட்டின் மாப்பசான் - ஜெயகாந்தன்
♻ புரட்சி கவிஞர், இயற்கை கவிஞர் - பாரதிதாசன்
♻ கவிமணி - தேசிய விநாயகம் பிள்ளை
♻ குழந்தைக் கவிஞர் - அழ. வள்ளியப்பா
♻ தொண்டர் சீர்பரவுவார் - சேக்கிழார்
♻ கவிச்சக்ரவர்த்தி - கம்பன்
♻ விடுதலைக்கவி , தேசியக்கவி - பாரதியார்
♻ தமிழ்த்தென்றல் - திரு.வி.க.
♻ ஆளுடை நம்பி - சுந்தர்ர்
♻ ஆட்சி மொழிக் காவலர் - இராமலிங்கனார்
♻ கிருத்துவக் கம்பர் - எச்.ஏ. கிருஷ்ணபிள்ளை
♻ சொல்லின் செல்வர் - இரா. பி. சேதுபிள்ளை
♻ மூதறிஞர் - இராஜாஜி
♻ பேரறிஞர் - அண்ணா
♻ பகுத்தறிவுப் பகலவன் - பெரியார்
♻ செக்கிழுத்த செம்மல் - வ.உ.சி.
♻ தசாவதானி - செய்குத் தம்பியார்
♻ இசைக்குயில் - எம்.எஸ். சுப்புலட்சுமி
♻ மொழி ஞாயிறு - தேவநேயப் பாவாசர்
♻ பாவலர் ஏறு - பெருஞ்சித்தரனார்
♻ கல்வியிற் பெரியவர் - கம்பர்
♻ சிறுகதை மன்னன் - புதுமைபித்தன்
♻திருவாதவூரார் - மாணிக்க வாசகர்
♻ முத்தமிழ் காவலர் - கி.ஆ.பெ. விசுவநாதம்

Friday, 17 August 2018

*TNPSC -க்கு தேவையான புத்தகங்கள்:*

🙏TNPSC- PRELIMS 🙏

💐GROUP 2💐
* ) TNPSC SYLLABUS

* ) TNPSC LAST 5 YEARS     
      OLD QUESTION PAPER
    1 ) SAKTHI PUBLICATION
          OLD Q BANK BOOK

👉 *LANGUAGE 😗

     1 ) *GENERAL TAMIL 😗
            SAMACHER :6 - 12TH  BOOKS

      2 ) JANA TAMIL QUESTION BANK

     3 ) VENBHA GENERAL TAMIL BOOK

      4 ) Devira book

           ( OR )

     1 ) *GENERAL ENGLISH 😗  
            SAMACHER : 6 -    12TH  BOOKS

     2 ) VENKATRAMAN
           GENERAL ENGLISH BOOK

👉 *APTITUDE 😗

    1 ) SAMACHER 6 -10TH
          MATHS BOOKS    
         ( SYLLABUS BASED)

     2 ) R S AGARWAL -
          QUANTITY APTITUDE

     3 ) kanniyan

      4 ) Yesuva

      5 ) A to Z book

  
👉 *CURRENT AFFAIRS 😗

      1 ) DINAMANI ,THE 
       HINDU TAMIL NEWS
       PAPER

      2 ) TNPSC PORTAL

           ( OR )

    1 ) IYACHAMY CURRENT AFFAIRS

     2 ) MANANNA CURRENT AFFAIRS

     3 ) Pothu Arivu ulagam or
         Exam master monthly book
   
👉*HISTORY 😗

     1 ) SAMACHER 6 - 12TH BOOKS (SYLLABUS  BASED )

     2) இந்திய விடுதலை       போராட்ட வரலாறு -கே.வெங்கடேசன்

      3) தற்கால தமிழ்நாட்டு வரலாறு -K.VENKATESHAN

      4) இந்திய வரலாறும் பண்பாடும் -சங்கர சரவணன்

👉 *INDIAN POLITY 😗

      1 ) INDIAN IAS ACADEMY 
           POLITY BOOK
       ( OR )

       2 ) BAKYA INDIAN
             POLITY BOOK

        3 ) ARIHANT  BOOK -
           4) சமச்சீர் புத்தகம் -6 முதல்  12 வரை

👉*GEOGRAPHY 😗
        1 ) SAMACHER 6 - 12TH BOOKS
     
👉 *ECONOMY 😗
        1 )  6 to12TH BOOK    
       ( 11TH BOOK MUST )

        2) இந்திய பொருளாதாரம்-கலிங்க மூர்த்தி

👉 *SCIENCE 😗

      1 ) SAMACHER 6 -  10 TH BOOKS ( SYLLABUS BASED )

       2 ) இயற்பியல் 12 ஆம்  வகுப்பு -6, 8வது பாடம்

      3) வேதியியல் 
     11 ஆம் வகுப்பு -17, 18 வது  பாடம்
      12 ஆம் வகுப்பு -21, 22 வது பாடம்

      4) தாவரவியல்
        11  ஆம் வகுப்பு -2,4, 7 வது பாடம்
         12 ஆம் வகுப்பு -3, 4, 6  வது  பாடம்

      5)  விலங்கியல் -
         11ஆம் வகுப்பு - 3 வது பாடம்
         12 ஆம் வகுப்பு - 1,5,6 வது  பாடம்
   

👉 *COMMON GK 😗
    (INDIA'S FIRST , LAST,.)

     1 ) ARIHANT GK BOOK - 2018 ( M PANDEY )

     2 ) MANORAMA YEAR BOOK -2018
( OR )

     1 ) VIKADAN YEAR BOOK  - 2018

😪முதன்மை  தேர்வு🙏

👉1) இந்திய மற்றும்  தமிழக  அளவில் அறிவியல்  தொழில்நுட்பத்தின் பங்கு மற்றும் தாக்கம் , மேம்பாடு

     *பழைய அறிவியல் புத்தகம்   8 to 10 - (2004 பதிப்பு)

     *6 -12வது அறிவியல் 
புத்தகம்  புதியது

     *SPECTRUM PUBLICATION

👉2 ) மத்திய மற்றும்  மாநில ஆட்சிமுறை மற்றும் தமிழக சிறப்பு

     * 6 முதல் 12 வரை உள்ள அரசியலமைப்பு  புத்தகம்

       * பாக்கியா அல்லது  இந்திய ஐஏஸ் அகாடமி  அரசியலமைப்பு  புத்தகம்     
     
       * தமிழ்நாடு நிர்வாகம் -கே.வெங்கடேசன்

👉3) சமூக பொருளாதார போக்குகள்  இந்திய ,தமிழக  அளவில்

      * 11, 12  Economics வது புத்தகம்

        * இந்திய பொருளாதாரம் -கலிங்கமூர்த்தி

         * இந்திய  பொருளாதார வளர்ச்சி -மா.பொ குருசாமி

மற்றும்

நடப்பு நிகழ்வுகள்

       *  தினமணி , தினஇந்து செய்தி தாள்

       * மன்னனா மாத இதழ்

       * பொது அறிவு உலகம் 

        * எக்ஸாம் மாஸ்டர்  இதழ்

Sunday, 12 August 2018

*+1 tn text books*

11ஆம் வகுப்பு  புதிய புத்தகங்கள் PDF LINKS :
1. பொதுத் தமிழ்  : https://drive.google.com/file/d/1d2Y5YsOSOu4Ocyx5Dw2tnn9F60sykRcc/view
2. ENGLISH : https://drive.google.com/file/d/1gOC8gZTmp6lCL6hVqkmMqLKqbCSwHcNa/view
3. உயிரியல் விலங்கியல் 1 : https://drive.google.com/file/d/1SRnj0c3G74sghhu58fjl52apWvu7euP4/view
4. தாவரவியல் : https://drive.google.com/file/d/1jANznDSOw4vExjsyLGTusv7sMugTl7v5/view
5. பொருளியல் :
https://drive.google.com/file/d/1j2Rieyo3eLRnGCIfwJ6DMv9c8AvY2ilF/view
6. வேதியியல் : https://drive.google.com/file/d/1xYuaMlee1iCiw_tPb37KK8aDfOwCK9fW/view
7. இயற்பியல் : https://drive.google.com/file/d/1sx0VcECNMRujS8x11EAKsLgPwHVZgnDt/view
8. வணிகவியல் : https://drive.google.com/file/d/1i_G8FjtN_G9x4N5QPLmu0xC3DYw28YrI/view
9. வரலாறு :
https://drive.google.com/file/d/1aVBFvW7B7luOuhiB2DeHYdPRS-EPRL1U/view
10. புவியியல் :
https://drive.google.com/file/d/1KHV0fPRCAzQgPN221h0NQNUy7PCNpC4-/view
11. கணினி அறிவியல் : https://drive.google.com/file/d/1BGHhLIfAro4Ws90JDFgk_PsMsx0QfjAb/view
12. வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் : https://drive.google.com/file/d/1GpnqN99aMTeADBpZ7b4WhSjWts9u7piS/view
13. கணிதவியல் :
https://drive.google.com/file/d/1rS6HY1MxwjwyX-v0ZC-eI0TLlfP6-gHR/view
14. உயிரியல் தாவரவியல் : https://drive.google.com/file/d/1JYQVYc1_CjDAYxtiDFXOuV6rD8Mv93Gx/view
15. உயிரியல் விலங்கியல் 2 :
https://drive.google.com/file/d/1sHiXmr86twyQXL0hCXqPO-WRaR0YSBwG/view
16. விலங்கியல் 2 :
https://drive.google.com/file/d/1SXeV-p3O3RfO1TxKcBWfjb7rJyQzXzX_/view
17. விலங்கியல் 1 :
https://drive.google.com/file/d/1QfwkyNONH-CWmpPdFbTnf3xQNHgr2fnb/view

Saturday, 11 August 2018

*இந்திய அரசியல் அமைப்பு :-*

1.   இந்திய அரசியல் நிர்ணய சபை தோற்றுவிக்கப்பட்ட நாள் - டிசம்பர் 6, 1946
2. இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் கூடிய நாள் - டிசம்பர் 9, 1946
3. இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற இடம் - தில்லி
4. அரசியல் நிர்ணய சபை எந்தத் திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டது - காபினெட் தூதுக்குழுத் திட்டம்
5. அரசியலமைப்பு எழுது வரைவுக்குழுவின் தலைவராக செயல்பட்டவர் - டாக்டர் அம்பேத்கார்
6. அரசியல் நிர்ணய சபையின் தலைவராகப் பணியாற்றியவர் - டாக்டர் ராஜேந்திர பிரசாத்
7. இந்திய அரயல் நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராகப் பணியாற்றியவர் - டாக்டர் சச்சிதானந்த சின்கா
8. இந்திய அரசியல் நிர்ணய சபையின் நிரந்தரத் தலைவராகப் பணியாற்றியவர் - டாக்டர் இராஜேந்திர பிரசாத்
9. இந்திய அரசியல் நிர்ணய சபையின் ஆரம்ப கால மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை - 385 + 4
10. சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை - 299
11. இந்திய அரசியலமைப்பு பொதுவாக எந்த நாட்டு அரசியமைப்பை ஒத்துள்ளது - இங்கிலாந்து
12. இந்திய அரசியலமைப்பு எந்தச் சட்டத்தின் மறுவடிவமாக திகழ்கிறது - 1935ம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம்
13. அரசியமைப்பு உருவாக்கப்படும்போது அதில் இருந்த பகுதிகளின் எண்ணிக்கை - 22
14. அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது அதில் இருந்த அட்டவணைகளின் எண்ணிக்கை - எட்டு
15. தற்போதைய அரசியலமைப்பில் உள்ள பகுதிகளின் எண்ணிக்கை - 24
16. இந்திய அரசியல் நிர்ணய சபை முழு இறைமை பெற்ற அமைப்பாக மாறிய நாள் - ஆகஸ்ட் 15, 1947
17. அரசியலமைப்புக்கான முகவுரையை நிர்ணய சபையில் அறிமுகப்படுத்தியவர் - ஜவகர்லால் நேரு
18. இந்தியா சுதந்திரம் பெறும்போது அரசியல் நிர்ணய சபையின் தலைவராக இருந்தவர் - டாக்டர் இராஜேந்திர பிரசாத்
19. இந்திய அரசியலமைப்பின் திறவுகோல் என்று கருதப்படும் அம்சம் - முகவுரை
20. இந்திய அரசிலமைப்பு எழுதி முடிக்கப்பட்ட எடுத்துக் கொள்ளப்பட்ட காலம் - 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள்
21. முகவுரையில் சேர்க்கப்பட்ட வார்த்தைகள் - சோஷலிச, சமயசார்பற்ற, ஒருமைப்பாடு
22. அரசியலமைப்பு உருவாக்கப்பட்டபோது அரசியலமைப்பில் இருந்த ஷரத்துக்களின் எண்ணிக்கை - 395
23. தற்போதைய அரசியலமைப்பில் உள்ள ஷரத்துக்களின் எண்ணிக்கை - 450
24. தற்போதைய அரசியலமைப்பில் இருந்த அட்டவணைகளின் எண்ணிக்கை - 12
25. அரசியமைப்பின் இதயமாகவும், ஆன்மைகவும் உள்ள பகுதி என்று டாகடர் அம்பேத்கரால் வர்ணிக்கப்பட்ட பகுதி - அரசியலமைப்பு தீர்வு உரிமைகள் (ஷரத்து 32)
26. உலகில் மிக நீண்ட எழுதப்பட்ட அரசியலமைப்பு - இந்திய அரசியலமைப்பு
27. இந்திய அரசிலமைப்புக்கான எண்ணத்தை அளித்தவர் - எம்.என்.ராய்
28. இந்திய அரசிலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள் - ஜனவரி 26, 1950
29. இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் - நவம்பர் 26, 1949
30. இந்திய அரசியலமைப்பின்படி இந்தியாவின் பெயர் - பாரத்
31. தற்போது நமது அரசியமைப்பில் உள்ள இணைக்கப்பட்ட பட்டியல்களின் எண்ணிக்கை - 10
32. அடிப்படை கடமைகள் என்னும் பகுதி எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - ரஷ்யா
33. அடிப்படை உரிமைகள் என்னும் பகுதி எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - அமெரிக்கா
34. திருத்தங்கள் என்னும் பகுதி எந்த நாட்டு அரசியமைப்பிலிருந்து பெறப்பட்டது - தென் அமெரிக்கா
35. சட்டத்தின்படி ஆட்சி என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - இங்கிலாந்து
36. கூட்டாட்சி என்னும் கருத்துப் படிவத்தை எந்த நாட்டிலிருந்து இந்திய அரசியலமைப்பு பெற்றுள்ளது - கனடா
37. பொருளாதார நீதி என்னும் சொல் காணப்படும் இடம் - முகவுரை மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள்
38. அரசியல் நிர்ணய சபையின் ஆலோசகராகப் பணியாற்றியவர் - பி.என்.ராவ்
39. கொள்கைகள் தீர்மானம் அரசியல் நிர்ணய சபையில் நிர்ணயிக்கப்பட்ட நாள் - ஜனவரி 22, 1947
40. கொள்கைகள் தீர்மானத்தை உருவாக்கியவர் - ஜவகர்லால் நேரு
41. ஐந்தாண்டுத் திட்டங்கள் என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - ரஷ்யா
42. முகவுரை பகுதி திருத்தப்பட்ட ஆண்டு - 1976 (42வது திருத்தம்)
43. உச்சநீதிமன்ற நீதிபதிகளை நீக்கும் முறை எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - அமெரிக்கா
44. முகவுரை என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - அமெரிக்கா
45. ஒற்றைக் குடியுரிமை என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - இங்கிலாந்து
46. அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பு என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - இங்கிலாந்து
47. பாராளுமன்ற ஆட்சி முறை என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - இங்கிலாந்து
48. நீதிப்புனராய்வு என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - அமெரிக்கா
49. நமது தேசியக் கொடி அரசியல் நிர்ணய சபையால் அங்கீகரிக்கப்பட்ட நாள் - ஜூலை 22, 1947
50. ஒன்றிய நிர்வாகம் பற்றிய பகுதி - பகுதி 5
51. மாநில நிர்வாகம் பற்ரிய பகுதி - பகுதி 6
52. இந்திய அரசியல் நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராக பணியாற்றிய டாக்டர் சச்சிதானந்த சின்கா பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
53. நீதித்துறை மற்றும் நிர்வாகத்துறையின் தனித்தன்மைக்கு உறுதியளிப்பது - அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள்
54. ஒன்றியம் மற்றும் அதன் பகுதிகள் பற்றி குறிப்பிடுவது - பகுதி -1
55. குடியுரிமை பற்றிக் குறிப்பிடுவது - பகுதி -2
56. அடிப்படை உரிமைகள் பற்றிக் குறிப்பிடுவது - பகுதி -3
57. அரசு வழிகாட்டு நெறிமுறைகள் கோட்பாடுகள் பற்றிக் குறிப்பிடுவது - பகுதி -4
58. ஒன்றியம் (யூனியன்) பற்றிக் குறிப்பிடுவது - பகுதி -5
59. மாநிலங்கள் பற்றிக் குறிப்பிடுவது - பகுதி -6
60. யூனியன் பிரதேசங்கள் பற்றிக் குறிப்பிடுவது - பகுதி-8
61. பஞ்சாயத்து ராஜ்ய அமைப்புகள் பற்றிக் குறிப்பிடுவது - பகுதி -9
62. நகராட்சிகள் பற்றிக் குறிப்பிடுவது - பகுதி -9 A
63. அவசரகால நெருக்கடிநிலை பற்றிக் குறிப்பிடுவது - பகுதி -18
64. திருத்தங்கள் பற்றிக் குறிப்பிடுவது - பகுதி -20
65. இந்தியாவை பாரதம் என்று குறிப்பிடும் ஷரத்து - ஷரத்து 1
66. நில ஆக்கிரமிப்பு குறித்த விதிகள் அடங்கிய அட்டவணை - 9வது அட்டவணை
67. 52வது திருத்தத்தின்போது இணைக்கப்பட்ட அட்டவணை - 10வது அட்டவணை
68. 10வது அட்டவணை இணைக்கப்பட்ட ஆண்டு - 1985
69. முதல் திருத்தின்போது இணைக்கப்பட்ட அட்டவணை - 9வது அட்டவணை
70. 1951-ல் புதியதாக இணைக்கப்பட்ட அட்டவணை - 9வது அட்டவணை
71. பஞ்சாயத்து அமைப்புகளின் அதிகாரத் தலைப்புக்கள் குறித்து குறிப்பிடும் அட்டவணை - 11வது அட்டவணை
72. நகராட்சி அமைப்புகளின் அதிகாரங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணை - 12வது அட்டவணை
73. 1993ல் 74வது திருத்தத்தின்போது இணைக்கப்பட்ட அட்டவணை - 12வது அட்டவணை
74. 1992ல் 73வது திருத்தத்தின்போது இணைக்கப்பட்ட அட்டவணை -11வது அட்டவணை
75. கட்சித்தாவல் தகுதியிழப்பு குறித்த விதிகள் அடங்கிய அட்டவணை - 10வது அட்டவணை
76. நகராட்சி அமைப்புக்களின் அதிகாரப் பட்டியலில் உள்ள தலைப்புக்களின் எண்ணிக்கை - 18
77. பஞ்சாயத்து அமைப்புகளின் அதிகாரப் பட்டியலில் உள்ள தலைப்புகளின் எண்ணிக்கை - 29
78. மக்கள் உரிமைப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு - 1955
79. தீண்டாமை ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு - 1955
80. 1955ம் ஆண்டு சட்டத்தின்படி குடியுரிமை நீக்கப்பெறுவதற்கான வழிமுறைகள் - மூன்று
81. சட்டத்தின்படி ஆட்சி என்பது பற்றிக் குறிப்பிடுவது - ஷரத்து 14
82. குடியுரிமை பெற 1955ம் ஆண்டு சட்டத்தில் உள்ள வழிகளின் எண்ணிக்கை - ஐந்து
83. இந்தியக் குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு - 1955
84. சாதி, சமயம், இநம், பால், பிறப்பிடம் காரணமாக வேறுபாடு காட்டப்படக்கூடாது என்று குறிப்பிடுவது - ஷரத்து 15
85. பதிவு முறை மூலம் குடியுரிமை பெற இந்தியாவில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டும் - 5 ஆண்டுகள்
86. குடியுரிமை குறித்த சட்டங்களை இயற்ற அதிகாரம் பெற்றுள்ள அமைப்பு பாராளுமன்றம்
87. தீண்டாமை ஒழிப்பு குறித்து குறிப்பிடும் ஷரத்து - ஷரத்து 17
88. வேலைவாய்ப்பில் அனைவருக்கும் சம வாய்ப்புரிமை என்று குறிப்பிடுவது - ஷரத்து 16
89. சிறப்புப் பட்டங்களை தடை செய்யும் ஷரத்து - ஷரத்து 18
90. அடிப்படை சுதந்திரங்கள் பற்றிக் குறிப்பிடப்படும் ஷரத்து - ஷரத்து 19
91. தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் உயிர் வாழும் உரிமை பற்றிக் குறிப்பிடுவது - ஷரத்து 21
92. கொத்தடிமை முறை ஒழிப்பு பற்றிக் குறிப்பிடுவது - ஷரத்து 23
93. 14 வயதுக்குக் குறைவான நபர்கள் பணியில் அமர்த்தப்படக் கூடாது என்று குறிப்பிடுவது - ஷரத்து 24
94. சுரண்டலுக்கு எதிரான உரிமை என்பது - ஷரத்து 23 மற்றும் 24
95. சமத்துவ உரிமை என்பது ஷரத்து - 14 முதல் 18 வரை
96. சுதந்திர உரிமை என்பது - ஷரத்து 19 முதல் 22 வரை
97. சமய உரிமை என்பது - ஷரத்து 25 முதல் 28 வரை
98. கல்வி மற்றும் கலாசார உரிமை என்பது - ஷரத்து 29 மற்றும் 30
100. ஷரத்து 32ன் கீழ் வழங்கப்படும் ஆணைகளின் எண்ணிக்கை – ஐந்து

*அறிவியல் pH மதிப்பு பற்றிய சில தகவல்கள்*

pH மதிப்பு 7 விட அதிகமாக இருந்தால் அது காரம்
pH மதிப்பு 7 விட குறைவாக இருந்தால் அது அமிலம்
அமிலம் சுவை - புளிப்பு
காரம் சுவை - கசப்பு
நீல லிட்மஸை சிவப்பாக மாற்றுவது - அமிலம்
சிவப்பு லிட்மஸை நீலமாக மாற்றுவது - காரம்
நடுநிலை pH மதிப்பு - 7
pH மதிப்பு 12.0 விட அதிகமாக இருந்தால் வலிமை மிகு காரம்
pH மதிப்பு 3.0 விட குறைவாக இருந்தால் வலிமை மிகு அமிலம்
pH 7.0 விட அதிகமாக இருந்தால்   வலிமை குறைந்த காரம்
pH 7.0 விட குறைவாக இருந்தால் வலிமை குறைந்த அமிலம்
pH மதிப்பு அலகு - மோல்/லிட்டர்
pH மதிப்பு :-

குருதி (ரத்தம்) - 7.3 - 7.5
உமிழ்நீர் - 6.5 - 7.5
சிறுநீர் - 5.5 - 7.5
காபி - 4.5 - 5.5
தக்காளி சாறு - 4.0 - 5.5
வினிகர் - 2.4 - 3.4
எலுமிச்சை சாறு - 2.2 - 2.4
இரைப்பை நீர் - 1.0 - 3.0
குளிர்பானங்கள் - 3.0
பால் - 6.5
கடல்நீர் - 8.5
தூய மழை நீர் - 7.0
அமில மழை - 5.6
அமோனியா - 12.0
மனித தோல் - 4.5 - 6.0
கேன்சர் செல், எனமெல் - 5.5

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...