Sunday, 16 August 2020

*நவரை மீன்*


*நவரை மீன்*  இது சங்கரா மீன் போன்றது.. சிறிய வகை..

*மத்தி - sardine -pilchards*


*மத்தி - sardine -pilchards*
மளையாளத்துலயும் மத்தி தான் செதில் உள்ள  சுவையான மீன். இதை சமைச்சா வீடே ஒரு வித மனம் வரும் சிலருக்கு பிடிக்காது இந்த வாசம் . ஒமேகா-3 சத்து அதிகம் உள்ள மீன் விலையும் குறைவா  தான் இருக்கும் , குழம்பு வறுவல்க்கு ஏத்தது முழுசா தலை முதல் உடல் வரை  சாப்பிடலாம்....

*நொணலை அல்லது சாளை -sardine*


*நொணலை அல்லது சாளை -sardine* இது மத்தி மாதிரியே இருக்கும். செதில் உள்ள மீன்  இதையே மத்தினு சொல்லி விப்பானுங்க , மத்தி வயிறு பகுதி உருண்டை மாதிரி இருக்கும் , சாளை வயிறு பகுதி ஒட்டினா மாதிரி இருக்கும்  . மத்தியும் இதுவும் சுவைல ஒரே மாதிரி தான் இருக்கும் மத்தி குடும்ப வகையை சார்ந்தது..

*கிழங்கான் - lady fish*


*கிழங்கான் - lady fish* இந்த மீன் மாதிரியே கொஞ்சம் கறுப்பா இருக்கும் அதையும் கிழங்கான்னு தான் விப்பானுங்க அதுல  முள் அதிகமா  இருக்கும், கவனமா சாப்பிடனும் , இது வெள்ளை கிழங்கான்னு சொல்லுவாங்க fish finger செய்யறதுக்கு ஏத்த  ஒரே மீன் இதுதான் நெத்திலி மாதிரி சுவை அள்ளும் ...

*நெத்திலி -Anchovy*


*நெத்திலி -Anchovy* இது சிறிய வகை மீன், குழம்பா வைக்கறதை விட சிக்ஸ்டி பைவ் மாதிரி செஞ்சி சாப்பிடலாம் . இதோட கருவாடு மீனை விட மொறுமொறுப்பா இருக்கும் . இதை ஒவ்வென்னா  சுத்தம் பண்றது பெரும்பாடு
சட்டில  கல்லு உப்பை போட்டு மொத்தமா ஒரு சுழட்டு சுழட்டுனா போதும்...

*வாளை மீன் - Silver scabbard fish*


*வாளை மீன் - Silver scabbard fish* இதை மீனா சாப்பிட்டதை விட கருவாடா சாப்பிட்டவங்க தான் அதிகம் இருப்பாங்க , செதில் இல்லாத வகை மீன் இது.. இதோட தோல்ல சுண்ணாம்பு மாதிரி பளபளப்பா ஒரு கோட்டிங் இருக்கும் கல்லுல நல்லா தேய்ச்சி கழுவின பிறகு உபயோகப்படுத்தனும்... கருவாடு வறுத்தா செல்ல டேஸ்டா இருக்கும்..

Saturday, 15 August 2020

*கோலா - coramandal flying fish*


*கோலா - coramandal flying fish* 
படத்தை பார்த்தவே தெரியும் இந்த மீன் சில அடி தூரம் வரைக்கும் பறக்கும், மத்தபடி விசேசமான சுவையெல்லாம் கிடையாது. செதில் உள்ள மீன்.. கொழம்புக்கு ஏற்றது..

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...