*Judgement PDF link :*
Wednesday, 15 March 2023
*FIR இருந்தாலும்,* இனி வரும் காலங்களில் போலிஸ் வேலையில் சேரலாம்...
*FIR இருந்தாலும்,* இனி வரும் காலங்களில் போலிஸ் வேலையில் சேரலாம்... உயர்நீதிமன்றம் தீர்ப்பு இளைஞர்கள் கவனத்திற்கு..
Monday, 27 February 2023
History and Indian National Movement Notes Pdf
🔜VASUKANNAN🔚:
ஆசிரியரும் உளவியலும் .pdf - Google Drive
TNPSC Indian National Movement.pdf - Google Drive
TNPSC History and Culture.pdf - Google Drive
Wednesday, 22 February 2023
#தமிழில் உள்ள 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு!!
#தமிழில் உள்ள 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு!!
தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன.
அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம்.
அ -----> எட்டு
ஆ -----> பசு
ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி
உ -----> சிவன்
ஊ -----> தசை, இறைச்சி
ஏ -----> அம்பு
ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
கா -----> சோலை, காத்தல்
கூ -----> பூமி, கூவுதல்
கை -----> கரம், உறுப்பு
கோ -----> அரசன், தலைவன், இறைவன்
சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்
சீ -----> இகழ்ச்சி, திருமகள்
சே -----> எருது, அழிஞ்சில் மரம்
சோ -----> மதில்
தா -----> கொடு, கேட்பது
தீ -----> நெருப்பு
து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
தூ -----> வெண்மை, தூய்மை
தே -----> நாயகன், தெய்வம்
தை -----> மாதம்
நா -----> நாக்கு
நீ -----> நின்னை
நே -----> அன்பு, நேயம்
நை -----> வருந்து, நைதல்
நொ -----> நொண்டி, துன்பம்
நோ -----> நோவு, வருத்தம்
நௌ -----> மரக்கலம்
பா -----> பாட்டு, நிழல், அழகு
பூ -----> மலர்
பே -----> மேகம், நுரை, அழகு
பை -----> பாம்புப் படம், பசுமை, உறை
போ -----> செல்
மா -----> மாமரம், பெரிய, விலங்கு
மீ -----> ஆகாயம், மேலே, உயரம்
மு -----> மூப்பு
மூ -----> மூன்று
மே -----> மேன்மை, மேல்
மை -----> அஞ்சனம், கண்மை, இருள்
மோ -----> முகர்தல், மோதல்
யா -----> அகலம், மரம்
வா -----> அழைத்தல்
வீ -----> பறவை, பூ, அழகு
வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல்
Tuesday, 21 February 2023
TNPSC குரூப் 2, 2-ஏ பதவிகள் எவை? கல்வித் தகுதி, எப்படி தயாராவது விவரம்…
TNPSC குரூப் 2, 2-ஏ பதவிகள் எவை? கல்வித் தகுதி, எப்படி தயாராவது விவரம்…
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்களை தமிழக அரசு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்து வருகிறது. கிராம நிர்வாக அதிகாரி முதல் துணை ஆட்சியர் வரை இந்த தேர்வின் மூலம் அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
குரூப்-2, 2A தேர்வு
குரூப் 2 இன் கீழ் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பதாரர்கள்,
முதல்கட்ட தேர்வு (Preliminary Examination),
முதன்மை/இறுதி தேர்வு (Main Written Examination), மற்றும்
நேர்காணல் (Interview)
ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
பதவிகள்
நேர்முகத் தேர்வு கொண்ட குரூப் 2 தேர்வின்கீழ் நகராட்சி ஆணையர், துணை வணிகவரி அதிகாரி, சார் பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் (ஏஎஸ்ஓ), உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர் உட்பட பல்வேறு பதவிகள் வருகின்றன.
அதே சமயம், அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளர், நேர்முக எழுத்தர், தலைமை செயலகம் மற்றும் டிஎன்பிஎஸ்சியில் தனிப்பட்ட எழுத்தர் போன்ற பணியிடங்கள் குரூப்-2-ஏ தேர்வு மூலமாக நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி
குரூப் 2 , 2ஏ தேர்வு விண்ணப்பித்தார்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சமாக ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும்.
இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
அதேசமயம், குரூப் 2 , 2ஏ தேர்வுக்கான கல்வித் தகுதி பதவிக்கு ஏற்ப மாறுபடும். எடுத்துக்காட்டுக்கு, தனிப்பட்ட எழுத்தர் பதவிக்கு விண்ணப்பிக்க தட்டச்சு முடித்திருக்க வேண்டும்.
குரூப் 2 தேர்வுக்கு எப்படி தயாராவது? என்னென்ன புத்தகங்களை படிக்கலாம்?
குரூப் 2 தேர்வானது முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மை தேர்வு என இரு தேர்வுகளாக நடைபெறும். நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கு முன்பு ஒரே ஒரு தேர்வு மட்டுமே நடத்தப்பட்டது.
முன்பு 2022 மே 21ம் தேதி குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகள் நடைபெற்றது.
TNPSC குரூப் 2 தேர்வு என்பது என்ன?
தமிழக அரசு சார்த்த பணிகளுக்கு தேவையான திறமையான ஊழியர்களை கண்டறிய அரசு பல்வேறு போட்டித்தேர்வுகள் மற்றும் நேர்காணல் ஆகியவற்றை TNPSC சார்பில் அரசு நடத்தி வருகிறது. டிஎன்பிஎஸ்சி நடத்தும் அரசு தேர்வுகளில் ஒன்று குரூப் 2 தேர்வு ஆகும்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு எந்தெந்த பதவிகளுக்கு நடத்தப்படுகிறது?
சார் பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் (ஏஎஸ்ஓ), உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர், பெண்கள் நல அலுவலர், சமூக பாதுகாப்பு, கூட்டுறவு சங்கங்களின் மூத்த ஆய்வாளர், திட்ட உதவியாளர், சிறப்பு உதவியாளர், சிறப்பு கிளை உதவியாளர், நன்னடத்தை அலுவலர், சிறைத் துறை ஆகிய பல்வேறு பதவிகள் நேர்காணல் அடிப்படையில் நிரப்படும்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2A தேர்வுக்கான பதவிகள்
நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளில் அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளர், நேர்முக எழுத்தர், தலைமை செயலகம் மற்றும் டிஎன்பிஎஸ்சியில் தனிப்பட்ட எழுத்தர் போன்ற பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
குரூப் 2 தேர்வுக்கான வயது வரம்பு என்ன?
குரூப் 2 மற்றும் 2A தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 32 -க்குள் இருக்க வேண்டும். பட்ட படிப்பு படித்த பொதுப்பிரிவு அல்லாத விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு இல்லை.
குரூப் 2 தேர்வுக்கு யார் விண்ணப்பிக்கலாம்?
குரூப் 2 , 2A தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் டிகிரி படித்திருக்க வேண்டும். இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், குறிப்பிட்ட சில பதவிகளுக்கு விண்ணப்பிக்க தட்டச்சு, சுருக்கெழுத்து போன்றவை முடித்திருக்க வேண்டும்.
குரூப் 2 தேர்வு எத்தனை கட்டங்களாக நடத்தப்படும்?
குரூப் 2 தேர்வானது முதல்நிலைத் தேர்வு (Preliminary Exam), முதன்மைத் தேர்வு (Main Exam) மற்றும் நேர்காணல் (Interview) என மூன்று கட்டங்களாக நடத்தப்படும். குரூப் 2A தேர்வுகளுக்கு நேர்முகத்தேர்வு இருக்காது. எழுத்து தேர்வானது காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணிவரை ஒரே ஷிப்டாக நடைபெறும். முதல்நிலைத் தேர்வானது மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு 3 மணிநேரம் நடைபெறும். மெயின் தேர்வு 400 மதிப்பெண்களுக்கு நடைபெறும். மெயின் தேர்வில் 1 மணிநேரம் 30 நிமிடங்கள் தாள் I -க்கும் + 3 மணிநேரம் தாள் II -க்கும் வழங்கப்படும். நேர்முகத்தேர்வுக்கு 100 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதல்நிலைத் தேர்வில் தகுதி பெற்றால் மட்டுமே முதன்மை தேர்வு எழுத முடியும். TNPSC குரூப் 2 தேர்வில் எதிர்மறை மதிப்பெண்கள் இல்லை. விண்ணப்பதாரர்கள் சரியாகப் பதிலளித்த கேள்விகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டவுடன், அது 1 ஆல் பெருக்கப்படும்.
குரூப் 2 தேர்வுக்கான பாடத்திட்டம்
குரூப் 2 முதல்நிலைத் தேர்வுக்கான பாடத்திட்டம்: பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், இந்திய புவியியல், இந்தியாவின் வரலாறும் பண்பாடும், இந்திய அரசியலமைப்பு, இந்திய பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம், தமிழ்நாடு வரலாறு, தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சம்மோக அரசியல் இயக்கங்கள், திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (புத்திக்கூர்மை). முதன்மை எழுத்து தேர்வு தாள் 1 (100 மதிப்பெண்): மொழிபெயர்த்தல், சுருக்கி வரைதல், பொருள் உணர்திறன், சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல், திருக்குறள் தொடர்பான கட்டுரை வரைதல், கடிதம் வரைதல், தமிழ் மொழி அறிவு. முதன்மை எழுத்து தேர்வு தாள் 2 (300): பொது ஆய்வுகள் (விளக்க வகை).
TNPSC குரூப் 2 மற்றும் 2A பாஸ் மார்க் எவ்வளவு?
குரூப் 2 தேர்வுக்கான பாஸ் மார்க்: முதன்மை எழுத்துத் தேர்வு 300 மதிப்பெண்கள், வாய்வழித் தேர்வு 40 மதிப்பெண்கள் என மொத்தம் (300+40) 340 மதிப்பெண்களுக்கு 102 மதிப்பெண்கள் பெற்றால் பாஸ். குரூப் 2A தேர்வுக்கான பாஸ் மார்க்: மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு 90 மதிப்பெண்கள் பெற்றால் பாஸ்.
எந்த மாதிரியான புத்தகங்கள் படிக்க வேண்டும்?
மனோகர் பாண்டே எழுதி அரிஹந்த் பப்ளிகேஷன் வெளியிட்டுள்ள அரிஹந்த் ஜிகே புத்தகம், பஷீர் அகமது, சாம்பசிவம் எழுதி சக்தி பப்ளிகேஷன் வெளியிட்டுள்ள குரூப்-2A புத்தகம், கார்த்திகேயன் எழுதி டாடா மெக்ராஹில் வெளியிட்டுள்ள புத்தகத்தை படிக்கலாம். பொது ஆங்கில அறிவுக்கு எஸ்.ஓ.பக் ஷி எழுதி அரிஹந்த் பதிப்பகம் வெளியிட்டுள்ள அப்ஜெக்டிவ் ஜெனரல் இங்கிலீஷ் என்ற புத்தகத்தை படிக்கலாம். திறனறிதல் பாடத்திற்கு சுப்புராஜ் எழுதி சுரா பதிப்பகம் வெளியிட்டுள்ள குரூப்-2 ஆப்டிடியூட் புத்தகம், சாக் ஷி பதிப்பகம் வெளியிட்டுள்ள மென்டல் எபிலிடி டெஸ்ட் புத்தகம், அரிஹந்த் பதிப்பகத்தின் பி.எஸ்.சிஜ்வாலி, எஸ்.சிஜ்வாலி எழுதிய ‘எ நியூ அப்ரோச் டு ரீசனிங்’ ஆகிய புத்தகங்களை படிக்கலாம். தமிழ் மற்றும் ஆங்கிலத்திற்கு சக்தி பதிப்பகத்தின் டிஎன்பிஎஸ்சி சுப்ரீம் கைடு மற்றும் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் பாட நூல்கள் உபயோகமாக இருக்கும். நேர்முகத் தேர்வுக்கு, பெக்கி மெக்கியின் கரியர் கான்பிடென்ஷியல், ரிச்சர்டு பிளாசவிக்கின் ‘அமேசிங் இன்டர்வியூ ஆன்சர்ஸ்’ மற்றும் ஜிகேபி பப்ளிஷர்சின் இன்டர்வியூ அண்டு ஜிடி போன்ற புத்தகங்கள் உதவிகரமாக அமையும். இதுதவிர முந்தைய ஆண்டுகளின் கேள்வித்தாள்களை படிப்பது அவசியம். பல இணையதளங்கள் குரூப்-2 தேர்வுக்கான தொடர் பயிற்சித் தேர்வுகளையும் நடத்துகின்றது. அதில் கலந்துகொள்ளலாம்.
TNPSC குரூப் 2 தேர்வை தமிழில் எழுதலாமா?
குரூப் 1 தேர்வை தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டு வழியிலும் எழுதலாம். ஆனால், நீங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டில் ஏதேனும் ஒன்றை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் தமிழ்வழியில் தேர்வு செய்தால் கடைசிவரை தமிழ் வழியில் மட்டுமே தேர்வு எழுத முடியும். ஆங்கிலத்தை தேர்வு செய்தால் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு எழுத முடியும். குரூப்-1 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது உங்களுக்கான விருப்ப மொழியை தேர்வு செய்யலாம்.
குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பக்கட்டணம் எவ்வளவு?
குரூப் 1 தேர்வுக்கு பதிவுக் கட்டணமாக ரூ.150 மற்றும் முதனிலைத் தேர்வு கட்டணம் ரூ.100, முதன்மை எழுத்துத் தேர்வு கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள் கட்டணத்தை ஆன்லைன் வழியாக மட்டுமே செலுத்த வேண்டும்.
எவ்வளவு சம்பளம் வழங்கப்படும்?
குரூப் 1 பதவிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதிய நிலை 18-யின் கீழ் ரூ.36900 முதல் ரூ. 1,16,600 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க என்னென்ன ஆவணங்கள் தேவை?
சான்றிதழ்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்.ஆதார் அட்டை அல்லது அரசால் வழங்கப்பட்ட ஏதாவது ஆவணம். ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படம் (அகலம்: 3.5 செ.மீ, உயரம்: 4.5 செ.மீ, 50 KB-க்கு மேல் இருக்க கூடாது). ஊனமுற்றோர் சான்றிதழ் (ஏதேனும் இருந்தால்). ஸ்கேன் செய்யப்பட்ட கையொப்பம் (அகலம்: 6 செ.மீ, உயரம்: 3 செ.மீ, 50 KB க்கு மேல் இருக்க கூடாது) . உடல் தகுதி சான்றிதழ் (தேவைப்பட்டால்).
குரூப் 2 தேர்வுக்கு எப்படி விண்ணப்பிப்பது?
முதலில், TNPSC அதிகாரப்பூர்வ இணையதளமான tnpscexams.in -க்குச் செல்லவும். பின்னர், TNPSC ஒரு முறை பதிவு உள்நுழைவு விவரங்களை நிரப்பு உள்நுழையவும். TNPSC குரூப் 1 விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். பின்னர், தேவையான ஆவணங்களை பதிவேற்றி, விண்ணப்பக் கட்டணம் செலுத்தவும். எதிர்கால குறிப்புக்காக, TNPSC குரூப் 1 விண்ணப்பத்தை பிரிண்ட் எடுக்கவும்.
Wednesday, 15 February 2023
*TNPSC*-இல் எத்தனை குரூப் உள்ளது?
*Dear Parents* & *Dear friends* &
*இளைஞர்களே* இதனை தெரிந்துகொண்டு இனியாவது கல்வியில் முன்னுக்குவாருங்கள்.
*TNPSC*-இல் எத்தனை குரூப் உள்ளது? உங்களுக்கு தெரியுமா?
*குரூப் 7, 8 பற்றி தெரியுமா?*
*TNPSC-தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப் சேவைத் தேர்வுகள்/பதவிகள் அது என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா? தெரியவில்லை என்றால் அதன் முழுவிவரங்கள் பின்வருமாறு?*
How Many Groups in TNPSC?
குரூப் – 1,
குரூப் – 2,
குரூப் – 3,
குரூப் – 4,
குரூப் – 5,
குரூப் – 6,
குரூப் – 7,
குரூப் – 8
*குரூப் – 1 சேவைகள்*
(Group-I)
1)துணை கலெக்டர்
(Deputy Collector)
2)துணை போலீஸ் சூப்பிரண்டு (வகை – I) (Deputy Superintendent of Police)
3)மாவட்ட பதிவாளர், பதிவுத் துறை
(District Registrar, Registration Department)
ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் (பஞ்சாயத்து)
4)கலெக்டருக்கு தனிப்பட்ட உதவியாளர் (மேம்பாடு) (Assistant Director of RD Dept (Panchayat) /Personal Assistant (Development) to Collector)
5)மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (District Employment Officer)
6)தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகளில் பிரதேச அலுவலர்
(Div. Officer in Fire and Rescue Services)
7)உதவி ஆணையர் (சி.டி.) (Asst Commissioner)
8)கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் (Deputy Registrar of Co-operative Societies)
*குரூப் – 1A சேவைகள்*
(Group-I A)
1)உதவி காடுகளின் பாதுகாவலர் (Assistant Conservator of Forests)
*குரூப் – 1B சேவைகள்*
(Group-I B)
1)உதவி ஆணையர் H.R & C.E (Assistant Commissioner, H.R. & C.E)
*குரூப் – 1C சேவைகள்*
(Group-I C)
1)மாவட்ட கல்வி அலுவலர் DEO
(District Educational Officer)
2)ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு -2
*குரூப் – 2 சேவைகள்*
(நேர்முகத்தேர்வு பதவிகள்)
(Group-II)
1)துணை வணிக வரி அதிகாரி
2)நகராட்சி ஆணையர், தரம் -2
3)இளைய வேலைவாய்ப்பு அதிகாரி (வித்தியாசமாக இல்லாதவர்)
4)இளைய வேலைவாய்ப்பு அதிகாரி (வித்தியாசமாக திறமையானவர்)
5)துணை பதிவாளர்,
தரம் -2
6)தொழிலாளர் உதவி ஆய்வாளர்
7)உதவி பிரிவு அதிகாரி (சட்டம் மற்றும் நிதி தவிர துறை)
8)உதவி பிரிவு அதிகாரி (சட்டத்துறை)
9)உதவி பிரிவு அதிகாரி (நிதித்துறை)
10)தமிழ்நாடு பொது சேவையில் உதவி பிரிவு அதிகாரி ஆணைக்குழு
உதவி பிரிவு அதிகாரி-கம்-புரோகிராமர்
11)உதவி பிரிவு அதிகாரி, தமிழ்நாடு சட்டமன்றம் செயலக சேவை
12)நன்னடத்தை அலுவலர், சமூக பாதுகாப்பு
நன்னடத்தை அலுவலர், 13)சிறைத் துறை
தொழில்துறை கூட்டுறவு அதிகாரி, கைத்தொழில் ஆணையர் மற்றும் கைத்தொழில் மற்றும் வர்த்தக இயக்குநர்
14)பெண்கள் நல அலுவலர், சமூக பாதுகாப்பு
15)சர்வே இயக்குநர் மற்றும் தீர்வுகளுக்கான Reg.Co-op Society இல் உள்ள கூட்டுறவு சங்கங்களின் மூத்த ஆய்வாளர்
16)வரவேற்பாளர், தமிழகம் விருந்தினர் மாளிகை,
17)உதகமண்டலம் தொழில்துறை கூட்டுறவு தொழில்துறை மேற்பார்வையாளர் 18)கமிஷனர் மற்றும் கைத்தொழில் மற்றும் வர்த்தக இயக்குநர் துறை
19)திட்ட உதவியாளர் ஆதி-திராவிடர் மற்றும் ....
பழங்குடியினர் நலத்துறை தணிக்கை பிரிவில் உள்ள தணிக்கை ஆய்வாளர்
இந்து மத மற்றும் அறக்கட்டளை நிர்வாகத் துறை
உள்ளூர் நிதி தணிக்கைத் துறையின் உதவி ஆய்வாளர் மற்றும் உள் தணிக்கைத் துறை
மேற்பார்வையாளர் / மூத்த எழுத்தர் / தலைமை கணக்காளர் / ஜூனியர்தமிழ்நாடு வேளாண் சந்தைப்படுத்தல் கண்காணிப்பாளர் துணை சேவை
உதவி ஜெயிலர், சிறைத்துறை.
வருவாய் துறையில் உதவியாளர் டவுன் பஞ்சாயத்துத் துறையில்
நிர்வாக அதிகாரி,
தரம் -2 டி.வி.ஐ.சியில்
சிறப்பு உதவியாளர்
கைத்தறி ஆய்வாளர் பொலிஸ் திணைக்களத்தின் புலனாய்வு பிரிவில்
சிறப்பு கிளை உதவியாளர்.
பால் உற்பத்தியில் கூட்டுறவு சங்கங்களின் மூத்த ஆய்வாளர் மற்றும் பால் மேம்பாடு
தொழிலாளர் உதவி ஆய்வாளர்
தணிக்கை உதவியாளர் நெடுஞ்சாலைத் துறையில் கணக்கு கிளையில்.
*குரூப் – 2A சேவைகள்* (நேர்முகத்தேர்வு இல்லாத பதவிகள்) (Group-II A)
கருவூல மற்றும் கணக்குத் துறையில் கணக்காளர்
ஜூனியர் கூட்டுறவு கணக்காய்வாளர் செயலகத்தில்
உதவியாளர் (சட்டம் மற்றும் நிதி தவிர)
இளைய தொழில்நுட்ப உதவியாளர், சிவில் சப்ளைஸ் துறை
தனிப்பட்ட எழுத்தர் (சட்டம் மற்றும் நிதித் துறை தவிர)
தனிப்பட்ட எழுத்தர் (சட்டத்துறை)
தனிப்பட்ட எழுத்தர் (நிதித்துறை)
தமிழ்நாடு பொது சேவையில் தனிப்பட்ட எழுத்தர் ஆணைக்குழு
தனிப்பட்ட எழுத்தர், தமிழ்நாடு மாநில திட்டமிடல் ஆணையம்
தமிழக சட்டசபையில் ஸ்டெனோ-டைப்பிஸ்ட் செயலக சேவை
உதவியாளர் பல்வேறு துறைகள்
செயலகத் துறையில் உதவி (நிதித்துறை)
தமிழ்நாடு பொது சேவை ஆணையத்தில் உதவியாளர்
தமிழக சட்டசபையில் கீழ் பிரிவு எழுத்தர், செயலகம்
திட்டமிடல் இளைய உதவியாளர்
வரவேற்பாளர் (சிறு சேமிப்புத் துறை)
சட்டத்துறையில் உதவியாளர்
தமிழ்நாடு சட்டமன்ற சட்டசபை சேவையில் உதவியாளர்
ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு – 3
*குரூப் – 3 சேவைகள்*
(Group-III)
தீயணைப்பு நிலைய அதிகாரி
*குரூப் – 3A சேவைகள்*
(Group-III A)
கூட்டுறவு சங்கங்களின் ஜூனியர் இன்ஸ்பெக்டர்
தொழில்துறை கூட்டுறவு சங்கங்களின் உதவி மேற்பார்வையாளர்
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி (பயிற்சி பிரிவு) துறையில் கடை வைத்திருப்பவர் கைத்தொழில் மற்றும் வணிகத் துறையில் ஸ்டோர்-கீப்பர், கிரேடு -2
*குரூப் – 4 சேவைகள்*
(Group-IV)
ஜூனியர் உதவியாளர் (பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அல்லாத)
பில் கலெக்டர்
தட்டச்சு செய்பவர்
ஸ்டெனோ-டைப்பிஸ்ட், கிரேடு -3
கள ஆய்வாளர் 6. வரைவாளர்
*குரூப் – 5A சேவைகள்*
(Group-V A)
செயலகத்தில் உதவியாளர் (இடமாற்றம் மூலம் ஆட்சேர்ப்பு) (சட்டம் மற்றும் நிதித் துறை தவிர)
*குரூப் – 6 சேவைகள்*
(Group-VI)
வன பயிற்சியாளர்
*குரூப் – 7A சேவைகள்*
(Group-VII A)
நிர்வாக அதிகாரி,
தரம் -1
*குரூப் – 7B சேவைகள்*
(Group-VII B)
நிர்வாக அதிகாரி,
தரம் – 3
*குரூப் – 8 சேவைகள்*
(Group-VIII)
நிர்வாக அதிகாரி,
தரம் – 4
இத்தனை தேர்வுகள் பற்றிய நம்மில் பலருக்கு முறையான வழிகாட்டல் இல்லாததால் நம்மில் பலர் TNPSC தேர்வுகளைப் பற்றி தெரிந்துகொள்ளாமல் இருந்து வருகிறோம்.
👏🦚🙏🌾👍
Sunday, 12 February 2023
_*Positive Thinking*_ _*என்றால் என்ன?*_
_*Positive Thinking*_
_*என்றால் என்ன?*_
_*நேர்மறை எண்ணம்.*_
_எதையும் Negatie ஆக_
_யோசிக்காமல், இருப்பது._
_*செயலிலும் நேர்மை,*_
_*எண்ணங்களிலும் நேர்மை*_
_சுயநலம் மட்டும் கருதாமல் சமூக நலம் காக்கும் எண்ணங்களும் இந்த catagoryயே_
_*சில வித்தியாசமான*_ _*examples*_
_*எளிதாக*_ _*புரியலாம்.*_
_1) பறவையை பிடித்து கூட்டில் அடைப்பதை விட, மரம் ஒன்று நட்டால் எண்ணற்ற பறவைகள் கூடுகட்டுமே என்று யோசித்து செயலில் இறங்குதல்._
_*2) ஒருவருக்கு உதவும் போது பணம் மட்டும் இல்லாமல், அவரே உழைத்து வாழ்க்கையை சிறப்பாக நடத்த வழி உள்ளதா என்று யோசித்தல்.*_
_3) நம்மை காயப்படுத்துவர்களை திருப்பி எப்படி அடிக்கலாம் என்று யோசிக்காமல்,_ _ஒதுங்கி_ _கொண்டு, நாம் வெற்றி பெற_
_என்ன செய்ய வேண்டும் என்று_ திட்டமிடல்._
_*4) இதுவரை பட்ட கஷ்டமெல்லாம் ok. இதிலிருந்து என்ன பாடம் கற்றோம் என்று ஆராய்தல்.*_
_5) வெற்றி மேல் வெற்றி வரும் போது, ஆணவத்தோடு என் முயற்சி என்று எண்ணாமல், இறைவனும் நம்மோடு பயணிக்கிறார் என்று அமைதி காத்தல்._
_*6) உடல் நலமில்லாத வரை காணும் போது, அவர் உடல் நலம் பெற வேண்டும் என்று மனதார எண்ணுதல்.*_
_7) நம்மை சுற்றி இருப்போர், நமக்கு கடமைகளில் உதவுவோர், நமக்கு நல்லது நினைப்போர், அனைவரும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துதல்._
_*8) தெருவில் செல்லும் போது, நம்மை கடக்கும், வயதானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் etc etcவாழ்த்துதல்*_
_9) ஹோட்டலுக்கு செல்கிறோம். உணவு அருந்தி விட்டு புறப்படும் போது பரிமாறியவர்க்கு டிப்ஸ் உடன், புன்னகையோடு Thank you சொல்லி பாருங்கள். அவர் அகமும் முகமும் மலரும்._
_*10) வீட்டில் நமக்கு உதவியாக இருக்கும் Servantsயும், நம்மை நம்பி வருகிறார்கள் என்று கனிவோடு நடத்துதல்.*_
Saturday, 11 February 2023
*PAYTM, AMAZONPAY, PHONEPE, GOOGLE PAY(a)GPAY*
*PAYTM, AMAZONPAY, PHONEPE, GOOGLE PAY(a)GPAY எனபேபே என்று எல்லா கடைகளிலும், உணவகங்களிலும், பெட்டி கடைகளிலும், அடுமனைகளிலும் ஏன் தள்ளுவண்டி, மிதிவண்டிகளில் வியாபாரம் செய்பவர்கள் என அனைவரும் ஸ்கேன் அட்டையை வைத்து கொண்டு இருக்கிறார்கள்.*
நாமும் நம் அலைபேசியை கையில் வைத்து கொண்டு புகைப்படம்
எடுத்து தள்ளுவது போல ஸ்கேன் செய்து செய்து எல்லாவற்றையும்
வாங்கி கொள்கிறோம். கையில் பணம் இருந்தால் கூட அலைபேசியை
பயன்படுத்தி கொண்டு தான் பொருட்கள் வாங்குகிறோம்.
மேலும் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும், நம் தொழிலுக்கும் எனஅவசரத்திற்கு பணபரிமாற்றமும் செய்து கொள்கிறோம். ஏனென்றால்
நாம் டிஜிட்டல் இந்தியாவில் வாழ பழகிவிட்டோம். மேலும் இது ஒரு
பெருமைக்குரிய செயலாகவும் தற்சமயம் மாறியிருக்கிறது.
எப்படி பெரிய பெரிய பல்பொருள் அங்காடிகளில் நடந்து நடந்து பொருள்
வாங்குவது fashion ஆகி போனதோ அது போல இதுவும் இன்றைய
தேதியில் ஒரு கெளரவமாகிவிட்டது.
இதற்கு நானும் அடிமையாகி எல்லாவற்றுக்கும் அலைபேசியை பயன்
படுத்தி பொருட்கள் வாங்குவது என இயல்பாகவே அதிக அளவில் பயன்
படுத்த தொடங்கியிருக்கிறேன். இப்படி pay pay என எல்லா பே யையும்
பயன்படுத்திய என் நண்பன் ஒருவருக்கு வங்கி (KVB) இன்று பெப்பே காட்டியது.என் கணக்கில் இருந்து ரூ.976.80 பிடித்தம் செய்திருந்தார்கள்.
எதற்காக இந்த பிடித்தம் என கேட்டதற்கு நீங்கள் gpay போன்றவைகளை
அதிக அளவில் பயன்படுத்தியிருக்கிறீர்கள். சேமிப்பு கணக்கு
வைத்திருப்பவர்கள் ஆறு மாத காலத்திற்கு 90 முறையே பயன்படுத்த
வேண்டும். ( இது வங்கிகள் வாரியாக மாறுபடும்) அதற்கு மேல் பயன்
படுத்தும் ஒவ்வொரு முறையும் ரூபாய் 2 + வரி பிடிக்கப்படும் என பதில்
கிடைத்தது.
எந்தவிதமான அறிவிப்புமின்றி தகவலுமின்றி இந்த உருவல் நடந்திருக்கிறது.
கேட்டால் இதை நீங்கள்தான் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று
சொல்லிவிட்டார்கள்.
ஒருபுறம் இதை பயன்படுத்துங்கள் என்று சொல்லி நம்மை பழக்கப்படுத்தி
விட்டு மறுபுறம் நம் சட்டைப்பையில் இருந்து நமக்கு தெரியாமலேயே நம்
பணத்தை எடுத்து கொள்கிறார்கள். இதுதான் டிஜிட்டல் இந்தியா போலும்.
இதை பற்றி தெரிந்தவர்கள் செய்தியாகவும், என்னை போல தெரியாதவர்கள்
இருந்தால் இதை ஒரு முன்னெச்சரிக்கை பதிவாகவும் எடுத்து கொண்டுபார்த்து பயன்படுத்தும்படி பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.....
Subscribe to:
Posts (Atom)
துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்
துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...
-
*🔥முத்தமிழ் TNPSC பயிற்சி மையம் - சேலம்🔥* 🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅 *✨ஊர்களும் மரூஉ பெயர்களும்✨* 🚧 புதுக்கோட்டை - புதுகை 🚧 தஞ்சாவூர் -...
-
[1] பாஞ்சாலி - மடப்பிடி கோப்பெருந்தேவி- மடமொழி கண்ணகி - மடக்கொடி 2. பாஞ்சாலி - மடப்பிடி கோப்பெருந்தேவி- மடமொழி கண்ணகி - மடக்கொட...
-
*TNPSC GK* *புவிசார் குறியீடு பெற்றுள்ள தமிழ்நாடு பொருட்களின் பட்டியல் 2023* *புவிசார் குறியீடு* ஒரு புவிசார் குறியீடானது ஒரு குறிப்பிட்ட பு...