Tuesday, 9 May 2017

சர்வதேச_ஆண்டுகள்:-

சர்வதேச ஆண்டுகள்


1968 - சர்வதேச மனித உரிமை ஆண்டு.
1970 - சர்வதேச கல்வி ஆண்டு.
1974 - சர்வதேச மக்கள்தொகை ஆண்டு.
1978 - சர்வதேச பெண்கள் ஆண்டு.

1979 - சர்வதேச குழந்தைகள் ஆண்டு.
1985 - சர்வதேச இளைஞர் ஆண்டு.
1986 - சர்வதேச அமைதி ஆண்டு.
1994 - சர்வதேச குடும்ப ஆண்டு.
1996 - சர்வதேச ஏழ்மை ஒழிப்பு ஆண்டு.
2003 - சர்வதேச நன்னீர் ஆண்டு.
2004 - சர்வதேச அரிசி ஆண்டு.
2005 - சர்வதேச இயற்பியல் ஆண்டு.
2006 - சர்வதேச பாலைவன ஆண்டு.
2007 - சர்வதேச துருவ ஆண்டு.
2008 - சர்வதேச சுகாதாரம்/உருளைக்கிழங்கு/மொழிகள் ஆண்டு.
2009 - சர்வதேச வானியல் ஆண்டு.
2010 - சர்வதேச நுரையீரல்/ உயிரினம் ஆண்டு.
2010-2011 - அனைத்துலக இளைஞர் ஆண்டு
2013 - சர்வதேச தண்ணீர் ஒத்துழைப்பு ஆண்டு, சர்வதேச தினை ஆண்டு.
2014 - சர்வதேச குடும்ப விவசாய ஆண்டு.
2015 - சர்வதேச ஒளிவருடம் (Year of Light) , சர்வதேச மண்வருடம் (Year of Soil)

2016 - சர்வதேச பருப்பு ஆண்டு.

*YEARS*

#வரலாற்று ஆண்டுகள்#

துருக்கியர் கான்ஸ்டாண்டி நோபிளைக் கைப்பற்றிய ஆண்டு_1453

வாஸ்கோடகாமா கோழிக்கோட்டை அடைந்த ஆண்டு_1498

ஆங்கில கிழக்கிந்திய வணிகக்குழு நிறுவுதல்_1600

டச்சு கிழக்கிந்திய வணிகக்குழு நிறுவுதல்_1602

டேனியல் கிழக்கிந்திய வணிகக்குழு நிறுவுதல்_1620

பிரஞ்சு கிழக்கிந்திய வணிகக்குழு நிறுவுதல்_1644

பிளாசிப்போர் நடைபெற்ற ஆண்டு_1757

பக்சார் போர் நடைபெற்ற ஆண்டு_1764

முதல் கர்நாடகப் போர் ஆரம்பம்_1746_48

இரண்டாம் கர்நாடகப் போர் ஆரம்பம்_1748_54

மூன்றாம் கர்நாடகப் போர் ஆரம்பம்_1756_63

முதல் மைசூர் போர் ஆரம்பம்_1767_69

இரண்டாம் மைசூர் போர் ஆரம்பம்_1780_1784

மூன்றாம் மைசூர் போர் ஆரம்பம்_1790_1792

நான்காம் மைசூர் போர் ஆரம்பம்_1799

இருட்டரைத் துயரச் சம்பவம்_1756

அலகாபாத் உடன்படிக்கை நடைபெற்ற ஆண்டு_1765

புரந்தர் உடன்படிக்கை_1665(8) 1776(12)

சால்பை உடன்படிக்கை_1782

மங்கழூர் உடன்படிக்கை_1784

வேலூர் புரட்சி_1806

சதி ஒழிப்பு_1829

சாரதா சட்டம்_1929

அண்ணாமலை பல்கலைக்கழகம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது,லாகூர் காங்கிரசு மாநாடு_1929

முத்துலெட்சுமி சட்ட மேலவை உறுப்பினரான ஆண்டு_1929

கிரிப்ஸ் தூதுக்குழு, வெள்ளையனே வெளியேறு இயக்கம்_1942

முதல் இருப்புப்பாதை மும்பை-தாணா துவங்கப்பட்ட ஆண்டு_1853

முதல் இருப்புப்பாதை சென்னை-அரக்கோனம் துவங்கப்பட்ட ஆண்டு_1856

முதல் இந்திய சுதந்திரப் போர்_1857

இந்திய அரசுச்சட்டம்_1935

ஆகஸ்ட் அறிக்கை_1917

ஆகஸ்டு நன்கொடை_1940

முத்துலெட்சுமி அவ்வை இல்லம் தொடங்கிய ஆண்டு,முதல் வட்டமேசை மாநாடு, சட்டமறுப்பு இயக்கம், உப்பு சத்தியாகிரகம்_1930

காந்தி இர்வின் ஒப்பந்தம், இரண்டாம் வட்டமேஜை மாநாடு_1931

மூன்றாம் வட்டமேஜை மாநாடு, பூனா உடன்படிக்கை_1932

சைமன்குழு வருகை_1927

சௌரி சௌரா நிகழ்ச்சி_1922

ஒத்துழையாமை இயக்கம்_1920

மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தச் சட்டம், ஜாலியன் வாலாபாக் படுகொலை, ரௌலட் சட்டம்_1919

முஸ்லீம் லீக் தோற்றம்_1906

மிண்டோ மார்லி சீர்திருத்த சட்டம்_1909

தொழிற்சாலை சட்டம்_1881

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆரம்பம்_1872(1881)

இல்பர்ட் மசோதா_1883

இந்திய தேசிய காங்கிரசு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு_1885

ஆரிய சமாஜம், பிரம்ம ஞானசபை தொடங்கப்பட்ட ஆண்டு_1875

தெற்காசிய பிராந்திய நாடுகளின் கூட்டமைப்பு (SAARC) எந்த ஆண்டில் ஏற்பட்டது_1985

இந்தியா-சீனா போர்_1962

CAC,FAO,WHO year_1963

ISO year_1947

விதவை மறுமணம் சட்டம்_1856

வரதட்சணைத் தடுப்புச் சட்டம்_1961

கொத்தடிமை ஒழிப்பு சட்டம்_1976

பூமிதான இயக்கம், முதல் ஐந்தாண்டுத் திட்டம்-1951

விக்டோரியா மகாராணியின் பேரறிக்கை_1858

நிலையான நிலவரி திட்டம்_1793

கடக ரேகை கடந்து செல்லும் மாநிலங்கள்

இந்தியாவில் கடக ரேகை கடந்து செல்லும் மாநிலங்கள் - 8

MGR Wife Janaki Tamilnadu Chief Minister

M -Maharashtra
G - Gujarat
R - Rajasthan
W - West Bengal
J - Jaarkand
T - Tiripura
C - Chattisgar
M - Mizoram


M means Madya Pradesh
வழியாக செல்லாது



இந்தியாவில் கடக ரேகை கடந்து செல்லும் மாநிலங்கள் - 8

M - Maharashtra
G - Gujarat
R - Rajasthan
W - West Bengal
J - Jaarkand
T - Tiripura
C - Chattisgar
M - Mizoram

எளிதில் நினைவில் வைத்துக் கொள்ள
Short Cut Code word :
MGR Wife Janaki Tamilnadu Chief Minister

Tuesday, 2 May 2017

தமிழ் சொல்லி தர பிள்ளைகளுக்கு சில விளக்கங்கள்...

 ☘"ண", "ன" மற்றும் "ந" எங்கெல்லாம் வரும்? ஒரு எளிய விளக்கம்:☘

☘மூன்று சுழி “ண”, ரெண்டு சுழி “ன” மற்றும் "ந" என்ன வித்தியாசம்?

தமிழ் எழுத்துகளில் ரெண்டு சுழி "ன" என்பதும், மூன்று சுழி "ண" என்பதெல்லாம் வெறும் பேச்சு வழக்கு.

☘"ண" இதன் பெயர் டண்ணகரம்,
☘"ன" இதன் பெயர் றன்னகரம்,
☘"ந" இதன் பெயர் தந்நகரம் என்பதே சரி.

☘மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூன்று சுழி "ணகர" ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து 'ட' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு "டண்ணகரம்" னு பேரு. (சொல்லிப் பாருங்களேன்!)

☘தென்றல், சென்றான் – என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி "னகர" ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து 'ற' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு "றன்னகரம்" னு பேரு. (சும்மா சொல்லிப்பாருங்க!)

இது ரெண்டும் என்றுமே மாறி வராது..
நினைவில் கொள்க..

மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தா...
பக்கத்துல 'ட' இருக்கா,
அப்ப இங்க மூன்று சுழி 'ண்' தான் வரும்.
ஏன்னா அது "டண்ணகரம்".

கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தா...
பக்கத்துல 'ற' இருக்கா
அப்ப இங்க ரெண்டு சுழி 'ன்' தான் வரும்.
ஏன்னா அது "றன்னகரம்"
என்று புரிந்து கொள்ளலாம்.

☘இதே மாதிரித்தான் 'ந' கரம் என்பதை, "தந்நகரம்" னு சொல்லணும்
ஏன்னா இந்த 'ந்' எழுத்தை அடுத்து
வரக்கூடிய உயிர்மெய் 'த' மட்டுமே. (பந்து, வெந்தயம், மந்தை).

இந்த "ண", "ன" மற்றும் "ந" விளக்கம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் :-)

☘#தமிழறிவோம்☘

நான்பூமி பேசுகிறேன்

என் மேல் வாழ்ந்து கொண்டிருப்பவர்களே ! என்னை பற்றி தெரியுமா ?
1. எனது பெயர் – பூமி (மனிதர்கள் வைத்தது)
2. எனது பிறப்பு - 454 கோடி ஆண்டுகளுக்கு முன்பு
3. எனது உடன் பிறப்புகள் – 8 பேர் (இது வரையில் மனிதர்கள் கண்டுபிடித்து எனக்கு சொன்னது> (புதன்,வெள்ளி,செவ்வாய்,வியாழன்,சனி,நெப்டியூன்,ப்ளூட்டோ)
4. நான் சூரிய மண்டலத்தில் - மூன்றாவது கோள்
5. எனது துணைக்கோள் - சந்திரன்
6. எனது அண்டை வீட்டார் - வெள்ளியும், செவ்வாயும்
7. எனக்கு மிகவும் தொலைவிலுள்ள சொந்தம் – ப்ளூட்டோ
8. என் பாதுகாவலன் – வியாழன் ( என்னை நோக்கி வரும் சிறு கற்கள் முதல் பெரும் எறி நட்சத்திரங்கள் வரை தன்னுடைய ஈர்ப்பு விசையால் தன் மேல் விழச் செய்யும் )
9. என்னுடைய நண்பர்கள் – என்னில் வாழ்ந்து என்னையும் வாழவைக்கும் மரங்கள்
10. என்னுடைய எதிரிகள் – என் நண்பர்களான மரங்களை அழிக்கும் மனிதர்கள்
11. நான் சுழலும் முறை - வலமிருந்து இடம் ( மேற்கிலிருந்து கிழக்காக )
12. என்னை நானே சுற்றும் கால அளவு - 23 மூன்று மணி நேரம் 56 நிமிடங்கள் 4.100 நொடிகள்
13. நான் சூரியனைச் சுற்றும் கால அளவு - 365.256366 நாட்கள்
14. சூரியனிலிருந்து நான் இருக்கும் தூரம் - 14 கோடியே 96 லட்சம் கிலோ மீட்டர்
15. நான் சூரியனைச் சுற்றும் சுற்றுப்பாதை வேகம் - நொடிக்கு வேகம் 29.783 கிலொ மீட்டர்
16. எனது விட்டம் - நிலநடுக் கோட்டின் வழியாக பூமியின் விட்டம் 12,756 கிலோ மீட்டர் , ஆனால் வட தென் துருவம் வழியாக பூமியின் விட்டம் 12,713 கிலோ மீட்டர் ஆகும்.
17. என்னுடைய எடை - 5,980,000,000,000,000,000,000,000 கிலோ கிராம் ஆகும்.
18. என்னுடைய மொத்தப் பரப்பளவு - 510,072,000 கிலோ மீட்டர் அதில் நீர்ப்பரப்பளவு : 361,132,000 கிலோ மீட்டர் (70.8 %), நிலப்பரப்பளவு : 148,940,000 கிலோ மீட்டர் (29.2 %)
19. என்னுடைய மேற்பரப்பு வெப்பம் - அதிகபட்சம் : 331 கெல்வின் 57.7 °செல்சியஸ், குறைந்தபட்சம் : 184 கெல்வின் −89 °செல்கியஸ்.
20. என்னுடைய மையப் பகுதியின் வெப்பம் - 7000 கெல்வின்
21. என்னுடைய வெளிப்புற அழுத்தம் - ஒரு சதுர அடிக்கு 14.7 பவுன்ட்ஸ்
22. என்னுடைய மையப்புற அழுத்தம் - 360 ஜிகாபேஸ்கல்ஸ்
23. என்னுடைய சுற்றளவு - 40,075.02 கிலோ மீட்டர்.
24. நான் சுழலும் விதம் - 23.5 டிகிரி சாய்வாக
25. என்னைப் பிரிப்பது - அட்ச ரேகைகள், தீர்க்க ரேகைகள்
26. எனக்கு மேல் வாயு (வளிமண்டலம்) பரந்திருக்கும் தூரம் - 1000 கி.மீ
27. எனக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரம் - 240,000 கி.மீ
28. எனக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் வரும்போது - அமாவாசை
29. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் நான் வருவது - பெளர்ணமி
30. சூரிய ஒளி என்னை வந்தடைய எடுத்துக் கொள்ளும் நேரம் - 480 விநாடிகள் (சுமார் 8 நிமிடங்கள்)
31. சூரியனுக்கும் எனக்கும் இடையில் வரும் சந்திரன் சூரியனை மறைப்பதால் ஏற்படும் நிழல் என் மீது விழும் போது ஏற்படுவது - “சூரிய கிரகணம்" அதாவது அமாவாசையில் வரும்.
32. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் நான் வரும்போது என்னுடைய நிழல் சந்திரனை மறைக்கும் போது ஏற்படுவது - “சந்திரகிரகணம்" அதாவது பெளர்ணமியில் வரும்.
33. என் மேல் இருக்கும் நிலப்பரப்பின் கண்டங்கள் – மொத்தம் 7 > ஆசியா கண்டம், ஆப்பிரிக்க கண்டம், ஐரோப்பாக் கண்டம், தென் அமெரிக்க கண்டம், வட அமெரிக்க கண்டம், ஆஸ்திரேலியாக் கண்டம், அண்டார்டிகா கண்டம். இவற்றில்தான் அனைத்து நாடுகளும் உள்ளடங்கி உள்ளது.
34. என் மேல் இருக்கும் பெருங்கடல்கள் – மொத்தம் 5 > பசிபிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், அட்லான்டிக் பெருங்கடல், ஆர்டிக் பெருங்கடல், அண்டார்டிக் பெருங்கடல். இவற்றில்தான் மற்ற அனைத்து சிறு கடல்களும் உள்ளது.
35. என்னுடைய தற்போதைய பிரச்சனை – சுற்றுச் சூழல் சீர்கேட்டால் நான் வெப்பமடைந்து கொண்டிருக்கிறேன். அதனால் கடல் மட்டம் உயர்ந்து கொண்டிருக்கின்றது.
36. என்னுடைய வேண்டுகோள் – மனிதர்களே, மரங்களை வெட்டாதீர்கள் அப்படி அடிப்படைத் தேவைக்காக வெட்டினால், அதைவிட அதிக மரங்களை நட்டு பராமரியுங்கள். கரியமில வாயுவை வெளியேற்றும் எரி பொருளையும், உபகரணங்களையும் முடிந்த அளவு குறையுங்கள். அதற்கு மாற்று எரிபொருளை உருவாக்குங்கள். நினைவிருக்கட்டும் நான் இருந்தால் தான் நீங்கள் வாழ முடியும்

*பொது அறிவு*

1. இதயத்தின் சராசரி எடை 300 கிராம்கள்
2. ஒரு நாள் இதயத் துடிப்பின் சராசரி அளவு 1,03,680 முறை.
3. நாம் ஒரு நாளைக்கு 25,900 முறைகள் சுவாசிக்கிறோம். சுவாசிக்கும் அளவு 400 கன அடி காற்று.
4. மூளைக்குத் தேவையான பிராணவாயு – உள்ளிழுக்கும் பிராணவாயுவில் 20 சதவிகித அளவு.
5. உடலின் வலது பக்க இயக்கங்களை இடப்பக்க மூளையும் இடதுபக்க இயக்கங்களை வலப்பக்க மூளையும் கட்டுப்படுத்துகிறது.
6. உடலின் மொத்த எடையில் இரத்தம் எட்டு சதம் உள்ளது.
7. ரத்தத்தில் மூன்று வகை உள்ளன. இரத்த சிவப்பணு, வெள்ளை அணு, பிளேட்லெட்கள்.
8. இரத்த சிவப்பணு எரித்ரோசைட் என்றும், வெள்ளை அணு லியூக்கோசைட் என்றும் அழைக்கப்படுகிறது.
9. இரத்தக் குழாய்கள் இதயத்திற்கு இரத்த்த்தை ஒரு நிமிடத்திற்குள் கொண்டு போய் சேர்க்கின்றன.
10. மனித உடலில் ஐந்தரை லிட்டர் இரத்தம் உள்ளது.
11. ரெடினா என்பது விழித்திரை
12. ஹைப்போஜியுஸியா என்பது நாக்கில் ஏற்படும் நோய். இதன் அறிகுறி சுவை குறைந்து விடும்.
13. ஓரோபாரின்க்ஸ் என்பது வாயின் பின்பகுதி, தொண்டையில் சேருமிடம்.
14. கருவிலுள்ள குழந்தையின் இதயம் நான்காவது வாரத்திலிருந்து துடிக்கத் துவங்குகிறது.
15. மீடியாஸ்டினம் என்பது இரண்டு நுரையீரல்களுக்கு இடைப்பட்ட பகுதி
16. ப்ளூரா என்பது நுரையீரல் உறை
17. இன்சுலின் – இதன் வேலை ரத்த்த்தில் இருக்கும் சர்க்கரை அளவை சரியாக வைப்பது.
18. சிறுநீரகங்கள் கீழ் முதுகில், முதுகுத் தண்டிற்கு இருபக்கமும் உள்ளன.
19. அல்வியோலஸ் என்பது மெல்லிய சுவருடைய காற்று செல். மனித நுரையீரல்களில் 750,000,000 அல்வியோலஸ் செல்கள் உள்ளன.
20. ஒரு குழந்தை 330 எலும்புகளுடன் பிறக்கிறது.
21. உடலில் 206 எலும்புகள் உள்ளன.
22. பிபுல்லா என்பது முழங்காலையும் குதிகாலையும் இணைக்கும் எலும்பு
23. மனித உடலில் உள்ள நீளமான எலும்பு தொடை எலும்பு.
24. மனித உடலில் உள்ள சிறிய எலும்பு காது எலும்பு.
25. மனித உடலில் உள்ள முதுகெலும்புகள் 33.
26. முகத்தில் உள்ள எலும்புகள் 14.
27. கைகளில் உள்ள எலும்புகள் 27.
28. மனித உடலில் எளிதில் உடையும் பகுதி கழுத்துப் பட்டை எலும்பு.
29. மூளையில் பெரிய பகுதி பெரு மூளை – செரிப்ரம் என்று அழைக்கப்படுகிறது. இது பேச்சு, பார்வை, கேட்டல், நுகரல், சிந்தனை, ஞாபகம், செயல், உணர்வு, இயக்கம் போன்றவற்றை கட்டுப்படுத்துகிறத.
30. சிறு மூளை உடல் சமன்பாடு, அசைவுகளை இணைத்தல் பணியை செய்கிறது.
31. உணவுப் பாதையின் நீளம் – வாய் முதல் மலவாய் வரை 15 அடிகள்
32. நகமாக வளரும் புரதப் பொருள் கெரட்டின்.
33. எலும்பு மஜ்ஜை ஒரு நாளைக்கு 25000 கோடி இரத்த சிவப்பணுக்களை உருவாக்குகிறது.
34. மூக்கில் 60 மில்லியன் உணர்வு செல்கள் உள்ளன.
35. மனித உடலிலுள்ள எலும்புகள் ஒன்பது கிலோ எடை கொண்டதாக இருக்கும்.
36. பெருவிரலுக்கும் மூளைக்கும் தொடர்பு அதிகமாக உள்ளது.
37. நம் தலையில் சுமார் 1,50,000 முடிகள் உள்ளன.
38. 30 வயதிற்கு மேல் புதிய தலை முடி உருவாகுவதில்லை.
39. குருதி உறைதலுக்கு காரணமான நொதி திராம்பின்
40. ஒரு மனிதன் உடலில் ஒரு நாளைக்கு ஒன்று முதல் ஒன்றரை லிட்டர் சிறுநீர் உற்பத்தியாகிறது.
41. சிறுநீர்ப்பை 600 மிலி சிறுநீரை கொள்ளும் திறனைக் கொண்டுள்ளது.
42. இருமும் போது ஏற்படும் ஒலியின் வேகம் மணிக்கு 245 மைல்கள்.
43. இருதயப் பணியின் ஒரு சுழற்சி முடிய 0.8 வினாடி நேரமாகிறது.
44. உடலில் வளராத, மாறாத பகுதி கண்ணிலுள்ள பாப்பா.
45. ஒரு நாளில் இரத்தம் நமது உடலில் 1680 மைல் தூரம் அளவு ஓடும்.
46. குடலில் மொத்த நீளம் 9 மீட்டர்.
47. உடலில் வேர்க்காத பகுதி உதடுகள்
48. உடலில் குளிர்ச்சியான இடம் மூக்கின் நுனி.
49. மூளையின் எடை சராசரி ஒன்றரை கிலோ.
50. உடலின் சீரான வெப்பநிலை 98.4 டிகிரி பாரன்ஹீட்.
51. ஒரு நாளில் 1200 முதல் 1500 மிலி வரை உமிழ் நீர் சுரப்பாகிறது.
52. வெஸ்டிபுலே – எனப்படுவது பற்கள், கன்னத்திற்கு இடைப்பட்ட பகுதி.
53. சைனஸ் என்பது முக எலும்புகளிலுள்ள காற்றறைகள்.
சுவாசிக்கும் காற்றை நுரையீரலுக்கு தகுந்தவாறு சீர்படுத்துவது இதன் பணியாகும். குரல் தெளிவாக இருக்க, முக எலும்புகள் கனம் குறைய இது உதவுகிறது.
54. இரத்தக் கசிவு 1 முதல் 3 நிமிடங்கள் இருக்கும்.
55. இரத்தம் உறைவதற்கான நேரம் 4 முதல் 8 நிமிடங்கள்.
56. உடலின் தோல் மூன்று அடுக்கால் ஆனது. தோலின் மேலடுக்கு எபிடெர்மிஸ், இதில் இரத்த ஓட்டம் இல்லை. தோலின் இரண்டாவது அடுக்கு டெர்மிஸ் பகுதி என்றும், அடிப்புற அடுக்கு அடித்தோல் என்றும் அழைக்கப்படுகிறது.
57. மார்பை பாதுகாக்கும் எலும்பின் பெயர் ரிப்ஸ்.
58. நமது உடலில் மிகவும் கெட்டியான தோல் பாதத்தில் உள்ளது.
59. கழுத்து வலி மருத்துவத் துறையில் செர்விகல் ஸ்பான்டிலிடிஸ் என்று அழைக்கப்படுகிறது.
60. ஹைப்பர் தெரிமியா என்பது உடல் வெப்பநிலை அதிகமாகுதல்.
61. ரேணுலா என்பது நாக்குக்கு அடியில் தோன்றும் நீர்க்கட்டி
62. எலும்பு, பற்களில் உள்ள புரதம் ஆஸ்சின்.
63. மனித உடலில் வியர்வை சுரப்பிகள் சுமார் 3 மில்லியன்களுக்கு மேல் உள்ளன.
64. செரடோனின் – வேதிப்பொருள் குறையும் போது தலைவலி ஏற்படும்.
65. வேகஸ் நரம்பிற்கு இதயத் துடிப்பை குறைக்கும் தன்மை உள்ளது.
66. இரத்தத்திற்கு நிறம் கொடுப்பது ஹீமோகுளோபின்.
67. பெருங்குடலின் நீளம் 100 முதல் 150 செ.மீ ஆகும். சிறுகுடலின் நீளம் 5 மீட்டர்.
68. பெருங்குடலின் பணி தண்ணீர் மற்றும் தாது உப்புக்களை உறிஞ்சுதல்.
69. உடலின் மிகப் பெரிய சுரப்பி கல்லீரல்.
70. பித்தப்பை கல்லீரலின் கீழ்ப் பாகத்தில் அமைந்துள்ளது.
இயற்கையாய் இயற்கையோடு வாழ..!
இயற்கை மருத்துவத்துக்கு மாறுவோம்..!
ஆலமர விழுதுகளாய் நாம் பகிர்வோம்..!
மனிதநேய விதைகளாய் மாறுவோம்..

சித்தர்கள் வகுத்த தமிழ் எண் வடிவங்கள்....

* ௧ = 1
* ௨ = 2
* ௩ = 3
* ௪ = 4
* ௫ = 5
* ௬ = 6
* ௭ = 7
* ௮ = 8
* ௯ = 9
* ௰ = 10
* ௰௧ = 11
* ௰௨ = 12
* ௰௩ = 13
* ௰௪ = 14
* ௰௫ = 15
* ௰௬ = 16
* ௰௭ = 17
* ௰௮ = 18
* ௰௯ = 19
* ௨௰ = 20
* ௱ = 100
* ௱௫௰௬ = 156
* ௨௱ = 200
* ௩௱ = 300
* ௲ = 1000
* ௲௧ = 1001
* ௲௪௰ = 1040
* ௮௲ = 8000
* ௰௲ = 10,000
* ௭௰௲ = 70,000
* ௯௰௲ = 90,000
* ௱௲ = 100,000 (lakh)
* ௮௱௲ = 800,000
* ௰௱௲ = 1,000,000 (10 lakhs)
* ௯௰௱௲ = 9,000,000
* ௱௱௲ = 10,000,000 (crore)
* ௰௱௱௲ = 100,000,000 (10 crore)
* ௱௱௱௲ = 1,000,000,000 (100 crore)
* ௲௱௱௲ = 10,000,000,000 (thousand crore)
* ௰௲௱௱௲ = 100,000,000,000 (10 thousand crore)
* ௱௲௱௱௲ = 1,000,000,000,000 (lakh crore)
* ௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (crore crore)

௳ = நாள்
௴ = மாதம்
௵ = வருடம்

தமிழ் எண்வரிசையும் அளவீட்டு முறைகளும்

ஏறுமுக எண்கள்
**************
1 = ஒன்று -one
10 = பத்து -ten
100 = நூறு -hundred
1000 = ஆயிரம் -thousand
10000 = பத்தாயிரம் -ten thousand
100000 = நூறாயிரம் -hundred thousand
1000000 = பத்துநூறாயிரம் - one million
10000000 = கோடி -ten million
100000000 = அற்புதம் -hundred million
1000000000 = நிகர்புதம் - one billion
10000000000 = கும்பம் -ten billion
100000000000 = கணம் -hundred billion
1000000000000 = கற்பம் -one trillion
10000000000000 = நிகற்பம் -ten trillion
100000000000000 = பதுமம் -hundred trillion
1000000000000000 = சங்கம் -one zillion
10000000000000000 = வெல்லம் -ten zillion
100000000000000000 = அன்னியம் -hundred zillion
1000000000000000000 = அர்த்தம் -?
10000000000000000000 = பரார்த்தம் —?
100000000000000000000 = பூரியம் -?
1000000000000000000000 = முக்கோடி -?
10000000000000000000000 = மஹாயுகம் -????????????????

இறங்குமுக எண்கள்
*****************
1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> ≈ 6,0393476E-9 --> ≈ nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்

அளவைகள்
----------------
நீட்டலளவு
**********
10 கோன் - 1 நுண்ணணு
10 நுண்ணணு - 1 அணு ==> 10 Ångströms = 1 nanometer ?!!
8 அணு - 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் - 1 துசும்பு
8 துசும்பு - 1 மயிர்நுணி
8 மயிர்நுணி - 1 நுண்மணல்
8 நுண்மணல் - 1 சிறுகடுகு
8 சிறுகடுகு - 1 எள்
8 எள் - 1 நெல்
8 நெல் - 1 விரல்
12 விரல் - 1 சாண்
2 சாண் - 1 முழம்
4 முழம் - 1 பாகம்
6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)
4 காதம் - 1 யோசனை

பொன்நிறுத்தல்
************
4 நெல் எடை - 1 குன்றிமணி
2 குன்றிமணி - 1 மஞ்சாடி
2 மஞ்சாடி - 1 பணவெடை
5 பணவெடை - 1 கழஞ்சு
8 பணவெடை - 1 வராகனெடை
4 கழஞ்சு - 1 கஃசு
4 கஃசு - 1 பலம்

பண்டங்கள் நிறுத்தல்
*****************
32 குன்றிமணி - 1 வராகனெடை
10 வராகனெடை - 1 பலம்
40 பலம் - 1 வீசை
6 வீசை - 1 தூலாம்
8 வீசை - 1 மணங்கு
20 மணங்கு - 1 பாரம்

முகத்தல் அளவு
*************
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி

பெய்தல் அளவு
*************
300 நெல் - 1 செவிடு
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
5 மரக்கால் - 1 பறை
80 பறை - 1 கரிசை
96 படி - 1 கலம்
120 படி - 1 பொதி

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...