1.ஜெய் ஜவான் ஜெய்கிசான்?
2.ஜெய் விக்யான்?
3.ஜெய் அனுசந்தன்?
என முழங்கியவர்கள்?
answer:
1.லால் பகதூர் சாஸ்திரி(1965)
2.வாஜ்பாய்(1998)(பொக்ரான் 2 அணுகுண்டு சோதனையின் போது)
3.நரேந்திர மோடி(2018)
1.ஜெய் ஜவான் ஜெய்கிசான்?
2.ஜெய் விக்யான்?
3.ஜெய் அனுசந்தன்?
என முழங்கியவர்கள்?
answer:
1.லால் பகதூர் சாஸ்திரி(1965)
2.வாஜ்பாய்(1998)(பொக்ரான் 2 அணுகுண்டு சோதனையின் போது)
3.நரேந்திர மோடி(2018)
1.VVPAT எனப்படும் ஓட்டர் வெரிஃபயபிள் பேப்பர் ஆடிட் ட்ரயல் *(Voter Verifiable Paper Audit Trail)* இயந்திரங்கள் வாக்காளர்கள் தாங்கள் வாக்களித்த வேட்பாளருக்கே தங்களது வாக்கு பதிவாகியுள்ளதா என்பதை சரிபார்க்க உதவுகிறது.
2.வாக்காளர்கள் தங்களின் விருப்பமான வேட்பாளருக்கு வாக்கை பதிவு செய்ய வாக்குப்பதிவு இயந்திரத்தில் பட்டனை அழுத்தியவுடன், இந்த VVPAT இயந்திரம் ஒப்புகைச் சீட்டு ஒன்றை காட்டும். அதில் வாக்காளர் தேர்வு செய்த வேட்பாளரின் பெயர் மற்றும் அவரின் தேர்தல் சின்னம் இடம்பெற்றிருக்கும். அந்த ஒப்புகைச் சீட்டு ஏழு விநாடிகளுக்கு மட்டுமே வாக்காளருக்கு காண்பிக்கப்படும். பின் அது ஒரு சீல் வைக்கப்பட்ட பெட்டியில் விழுந்துவிடும்.
3.மேலும் இந்த இயந்திரம் வாக்காளர் மட்டுமே பார்க்கக்கூடிய வகையில் வைக்கப்பட்டிருக்கும்.
4.2013ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் 2014 நாடாளுமன்ற தேர்தலில் இந்த VVPAT இயந்திரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரியது. ஆனால் சில தொகுதிகளில் மட்டுமே இது பயன்படுத்தப்பட்டது.
5."VVPAT இணைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குப்பதிவு முறை துல்லியமாக செயல்பட உதவுகிறது. வாக்குப்பதிவில் வெளிப்படைத்தன்மை மற்றும் வாக்காளர்களின் நம்பிக்கையை பெற VVPAT இயந்திரங்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் இணைக்கப்பட வேண்டும்." என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
6.வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை மீது பல குற்றச்சாட்டுகள் எழும் நிலையில், நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடன் தேர்தல் நடப்பதை உறுதி செய்யும் முயற்சிகளில் ஒன்றாக இந்த VVPAT இயந்திரங்கள் பார்க்கப்படுகின்றன. வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சியினர் VVPAT இயந்திரங்கள் அவசியமான ஒன்று என்று கூறுகின்றனர்.
7. இந்தமுறை நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் VVPAT இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா தெரிவித்தார்.
8.2015ஆம் ஆண்டு முதல், இந்த VVPAT முறை சட்டமன்றத் தேர்தல்களில் பின்பற்றப்பட்டு வருகிறது. சுமார் 1,500 வாக்குப்பதிவு இயந்திரங்களுடன், ஒப்புகைச் சீட்டு வழங்கும் இயந்திரங்கள் இதுவரை இணைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளன.
9."இதுவரை ஒருமுறை கூட வாக்குப்பதிவு செய்யப்பட்ட சின்னத்துக்கு மாறான சின்னத்தில் வாக்குகள் பதிவாகவில்லை என்றும் கூறப்படுகிறது.
10.இது முதன்முறையாக கோவா சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்டது.
💦
*பொது அறிவு உலகம்*
2017, 2018 & 2019 மாதவாரியான புத்தகங்கள்.
TNPSC தேர்வுக்கு நடப்பு நிகழ்வுகள் கேள்விகளுக்கான பயிற்சி எடுக்க புத்தகங்கள்.
https://drive.google.com/folderview?id=1fBnSLzCREPmV_wkXfR6ZJcmsN8Ezhjaj
TNPSC Co-operative Exam 2019
Private Answer Key Released 27/01/2019
TNPSC Co-operative Exam 2019 Answer Key Released 27/01/2019
இதுதான் நடக்கிறது மருத்துவமனைகளில்...! - இரு மருத்துவர்களின் ஒப்புதல் வாக்குமூலம்
தனியாக எந்தவொரு முன்னுரையும் இல்லாமல் நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன்... ஏனெனில், இதற்கு முன்னுரை எழுதும் வகையில், இந்த கட்டுரையை படிக்கும் அனைவருக்கும் ஒவ்வொரு தனி அனுபவம் இருக்கும்.
ஆம். *மருத்துவத் துறையில் நடக்கும் தில்லுமுல்லுகள்* பற்றி அங்கொன்றும், இங்கொன்றுமாக விவாதிக்கப்பட்ட விஷயங்கள் இப்போது பொதுவெளிக்கு வந்திருக்கிறது. அதுவும் _இரண்டு மருத்துவர்கள்_ மூலம். மருத்துவர்கள் *அருண் காத்ரே* மற்றும் *அபய் சுக்லே*, “ _*Dissenting Diagonisis*_" என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதி இருக்கிறார்கள். _மருத்துவத்துறையின் இருட்டுப்பக்கங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள்_.
*நோயாளிகளின் நலன் அல்ல, பங்குதாரர்களின் நலனே முக்கியம்*:
' *மருத்துவச் சுற்றுலாவில் இந்தியா, _குறிப்பாக சென்னை கோலாச்சுகிறது_' என்று இங்குள்ள கார்ப்பரேட் மருத்துவமனைகள் பிதற்றிக் கொள்ளும் இந்த தருணத்தில்*, இந்த புத்தகத்தின் உள்ளடக்கம் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த புத்தகத்தின் ஆசிரியர்களான மருத்துவர்கள் *அருண் காத்ரே* மற்றும் *அபய் சுக்லே* முன் வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு, “ _*இங்குள்ள பெரிய மருத்துவமனைகள் நோயாளிகளின் நலன்காக இயங்குவதை விட, அதன் பங்குதாரர்களின் நலனுக்காகதான் இயங்குகின்றன*_” என்பதுதான். இவர்கள் எந்த குற்றச்சாட்டையும் மேம்போக்காக கூறவில்லை. _பாதிக்கப்பட்ட நோயாளிகள், நேர்மையான மருத்துவர்களின் வாக்குமூலங்களை கொண்டே பதிவு செய்திருக்கிறார்கள்_.
நம் அனைவருக்கும் ஒரு அனுபவம் நிச்சயம் இருக்கும். அதாவது *_தேவையற்ற பரிசோதனைகளை மருத்துவர்கள் எடுக்க சொல்கிறார்கள் என்று_*. இது குறித்து இந்த மருத்துவர்கள், “ *பரிசோதனைகள் பாமரனின் பர்ஸை மட்டும் பதம் பார்க்கவில்லை*. பரிசோதனை சாலைகள், *நோயாளிகளிடமிருந்து சேகரிக்கும் ரத்த மாதிரிகளை உண்மையாக பரிசோதிப்பதே இல்லை*. _மருத்துவர்கள் எது மாதிரியான அறிக்கையை விரும்புகிறார்களோ... அதைதான் இவர்கள் தயார் செய்து தருகிறார்கள்_” என்கிறார். இப்போது உங்கள் சொந்த அனுபவங்களை இந்த வாக்கியத்துடன் ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்.
பெரும் மருத்துவமனைகள், இலாப இலக்கு நிர்ணயத்துக் கொண்டு வேலை செய்கின்றன. *அவர்களுக்கு எப்போதும் அப்பாவி நோயாளிகளின் நலன் முக்கியமே இல்லை*... _*லாபம்*_.. _*லாபம்*_... _*லாபம்*_... _*மேலும் லாபம்*_ மட்டுமே முக்கியமாக இருந்து வருகிறது என்கிறார்கள் இந்த மருத்துவர்கள்.
*நியாயமான மருத்துவர்களை உதாசீனம் செய்யும் மருத்துவமனைகள்*:
_ஒரு பிரபலமான மருத்துவமனை_, தன் மருத்துவமனையில் வேலை பார்த்த *சிறந்த சிறுநீரக சிறப்பு மருத்துவரை பணி நீக்கம் செய்தது*. அதற்கான காரணம், _*ஒரு நோயாளிக்கு அதிகம் லாபம் தரும் ஒரு அறுவை சிகிச்சையை செய்யாமல், சாதாரண சிகிச்சை மூலம் குணப்படுத்தியது*_. " *இது கார்ப்பரேட் மருத்துமனைகள் எவ்வளவு வக்கிர மனநிலையில் செயல்படுகிறது என்பதற்கான சான்று*" என்கிறார்கள் இந்த மருத்துவர்கள்.
“லாபத்தை முதன்மையான நோக்கம் கொண்ட மருத்துவமனைகள் அனைத்தும் இப்படிதான் செயல்படுகின்றன. *அவர்களுக்கு நோயாளிகளின் நலன் முக்கியம் அல்ல*. லாபத்திற்காக _*தேவையற்ற அறுவை சிகிச்சைகள் மற்றும் மருந்துகளை தன்னை நம்பி வரும் நோயளிக்கு அளிக்கின்றன*_” என்று வருத்ததுடன் குறிப்பிட்டுள்ளார்கள்.
_சுக்லே_, “ *எனக்கு தெரிந்த ஒருவர், தனக்கு சொந்தமான வீட்டை விற்று, தன் மனைவிக்கான மருத்துவ கட்டணமான ரூபாய் 42 லட்சத்தை கட்டினார். ஆனால், உண்மையில் அந்த சிகிச்சைக்கு அவ்வளவு கட்டணமெல்லாம் இல்லை*...” என்கிறார்.
இதைதாண்டி இவர்கள் வைக்கும் இன்னொரு குற்றச்சாட்டு பகீரென்று இருக்கிறது. _*சில மருத்துவமனைகள் உண்மையில் அறுவை சிகிச்சையே செய்யாமல், வெறும் மயக்க மருந்தை மட்டும் கொடுத்துவிட்டு, அறுவை சிகிச்சை செய்துவிட்டோமென்று பணம் பறிக்கிறார்கள்*_
கொல்கத்தாவை சேர்ந்த புண்யபிரதா கூன் என்னும் மருத்துவர், “ *எங்கள் பகுதியில் மருத்துவர்களுக்கு நியாயமாக மருத்துவம் பார்த்தும் ஈட்டும் தொகையை விட, ஆய்வு மையங்கள் அளிக்கும் பங்கு தொகை அதிகம். x-ray எடுக்க பரிந்துரைத்தால் 25 சதவீதமும், MRI, CT ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தால் 33 சதவீதமும் கமிஷன் தருகிறார்கள்*...” என்று தன் அனுபவத்தை இந்த புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.
" _தன்னிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை, தங்களின் தொடர் வாடிக்கையாளர்களாக வைத்துக் கொள்ள தான் பல மருத்துவமனைகள் விரும்புகின்றன_. அதாவது *தேவையற்ற அறுவை சிகிச்சைகள், மருந்துகளை பரிந்துரைத்து, நோயாளிகளை மீண்டும் மீண்டும் திரும்ப வரவைக்க வேண்டும்*. அதை மருத்துவர்கள் செய்ய தவறும் போது, _*அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள்*_" என்று இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரிகளை நாம் சாதாரணமாக கடந்துவிட முடியாது.
*இந்திய மருத்துவ கவுன்சில் என்ன செய்து கொண்டிருக்கிறது*...?
என்ற நம் கேள்விக்கு இந்த மருத்துவர்களின் பதில், “ *பெரும் மருத்துவமனைகள் மருத்துவதுறையை திட்டமிட்டு கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்*. ஆனால், *_இதை மெளனமாக இந்திய மருத்துவக் கவுன்சில் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது_*. *உடனடியாக மருத்துவக் கவுன்சில் தன்னை புதுப்பித்துக் கொண்டு, இந்த அநியாயங்களை தடுத்து நிறுத்த வேண்டும்*” என்று வலியுறுத்துகிறார்கள் இந்த இரு மருத்துவர்களும்.
இந்திய மருத்துவ துறையின் இன்றைய வணிக மதிப்பு *100 பில்லியன்* அமெரிக்க டாலர்கள். *இது 2020 ம் ஆண்டு 280 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கப்போகிறது* என்கிற விபரங்களே, _இதில் உள்ள அரசியலையும், அக்கிரமங்களையும் நமக்கு உணர்த்துகிறது_.
*இவர்களின் குற்றச்சாட்டுகளின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது இந்திய சுகாதாரத் துறை*...?
" _முடிந்த அளவு ஷேர் பண்ணுங்க_ "
எல்ஐசி தேசியமய நாள் .. ..
19 ஜனவரி ...
சென்னை மாநகரின் முதல் கட்டுமான அடையாளம், அன்றைய மவுண்ட் ரோடு, இன்றைய அண்ணா சாலை. இந்தச் சாலையில் 14 தளங்களுடன் இன்றும் பிரமிப்பாக பார்க்கப்படும் கட்டிடம் என்றால் அது எல்.ஐ.சி தான்.
அன்று முதல் இன்று வரை சென்னை நகரின் அடையாளம் அந்த 14 மாடி எல்ஐசி தான்..
எல்.ஐ.சியின் தலைமையிடம்
மும்பையில் உள்ளது. 1956-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி இந்நிறுவனம் துவங்கப்பட்டது. முன்பாக ஜனவரி 19 ஆம் நாள் இந்நிறுவனத்தை தேசிய மயமாக்கி அன்றைய மைய அரசு ஆணை பிறப்பித்தது. இன்றுடன் 63 ஆண்டுகள் முடிந்து, தனது 64-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. எல்ஐசி . இதன் மொத்த சேவை தரத்தையும், அதன் பங்களிப்பும் மற்றும் அதன் வளர்ச்சியையும் பார்ப்பதற்கு முன்பாக, நமது சென்னை நகரத்தில் அதன் அடையாளமாகவும், அதன் மூலம் அண்ணா சாலை கொண்டுள்ள அழகையும் சற்று திரும்பி பார்ப்போம்..
.அன்று முதல் இன்று வரை நாம் அண்ணார்ந்து பார்க்கும் எழில்மிகு எல்.ஐ.சி கட்டிடம் இருக்கும் இடத்தில் அதற்கு முன்பாக 'இந்தியன் ஓவர்சிஸ் வங்கியின்' நிறுவனரும் மற்றும் 'யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ்' நிறுவனத்தின் நிறுவனுருமான 'எம்.சிடி.எம். சிதம்பரம்' தனது நிறுவன குழுவின் தலைமையிடமாக 18 தளங்களுடன் ஒரு கட்டிடத்தைக் கட்ட 1952-ல் எண்ணினார். பின் 1953-ல் அதற்கான கட்டுமான பணிகளை, லண்டனைச் சேர்ந்த கட்டட வடிவமைப்பாளர்களான (architect) 'எச்.ஜே. பிரவுன்' மற்றும் 'எல்.சி. மௌலின்' (H.J.Brown & L.C.Moulin) ஆகியோரால் வேலைகள் தொடங்கப்பட்டது. கட்டுமான வேலைகள் தொடங்கி நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில் 'எம்.சிடி.எம். சிதம்பரம்' சிங்கப்பூர் விமான விபத்தில் 13 மார்ச் 1954-ல் மரணமடைந்தார். அதனைத் தொடர்ந்து 1957-ல் கட்டுமான பணிகளில் இருந்து லண்டனை சேர்ந்த கட்டட வடிவமைப்பாளர்கள் விடைபெற்றனர். அதற்குப்பின், முருகப்பா குழுமதைச்சேர்ந்த கோரமண்டல் இன்ஜினியரிங் நிறுவனம் மூலமாக சென்னை கட்டட வடிவமைப்பாளரான 'எல்.எம்.சிட்லே' (L.M.Chitale) அதன் பணிகளைமேற்கொண்டார்.
அதன் நடுவில் இந்திய அரசு 1956-ல் இன்சூரன்ஸ் சேவையை நாட்டுடமை ஆக்கியதன் தொடர்ச்சியாக அந்த கட்டிடம் 1959-ஆம் ஆண்டு இந்திய அரசால் கையகப்படுத்தப்பட்டு, கட்டிமுடிக்கப்பட்டது. பிறகு அதே ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதி அப்போதைய நிதி அமைச்சரான மொரார்ஜி தேசாயால் திறக்கப்பட்டது. இதன் உயரம் 177 அடி.
அன்றைய நிலவரப்படி இதன் கட்டுமான செலவு 8.7 மில்லியன் ரூபாய். இப்படி பல தடைகளைத் தாண்டி அத்தனை கோடிகளை செலவு செய்து கட்டப்பட்டு இருக்கும் அந்த கட்டிடம் என்றும் சென்னை கட்டிடங்களுக்கு ஒரு முன்னோடிதான். மேலும் முதல் முறையாக சென்னை வருபவர்களும், சென்னையிலே இருந்தும், முதல் முறையாக அண்ணா சாலை வழியாக பயணிப்பவர்களும் அந்தக் கட்டிடத்தை ஒரு நிமிடம் வியப்புடன்தான் பார்த்து செல்வார்கள்.
இப்படி ஒரு கட்டிடத்துக்குள் ஒரு வரலாற்றை மறைத்து வைத்துக்கொண்டு சென்னையில் நிற்கிறது
இந்நிறுவனம் தொடங்கப்பட்டபோது இதன் முதலீடு ஐந்து கோடி ரூபாய். அதன் சொத்து மதிப்பு 352.20 கோடி, அதன் மொத்த கிளை அலுவலகங்கள் வெறும் 168. அதே நிறுவனம் இன்று, 28.45 டிரில்லியன் சொத்து மதிப்புடன், 4,826 கிளை அலுவலகங்களுடன், சுமார் 1.லட்சம் பணியாளராகள் மற்றும் சுமார்11 லட்ச முகவர்களுடன். 14 நாடுகளில் தன் கிளை நிறுவங்களுடன் பிரமாண்டமாக மக்களின் நம்பிக்கையை பெற்று இயங்கி வருகிறது.
மேலும் 2018 நிதியாண்டில் மட்டும் 8.12% வளர்ச்சிகண்டு பொதுத்துறை நிறுவனங்களின் முன்னோடியாக திகழ்கிறது. மேலும் 69.40% சந்தையை கைப்பற்றியுள்ளது. மேலும் இந்திய மக்களிடமிருந்து திரட்டப்படும் மொத்த நிதியும் இந்திய தேசத்திலேயே மக்கள் நலத்திட்டங்களுக்காகவே முதலீடு செய்யப்படுகிறதென்பதும் மகிழ்ச்சியளிக்கும் கூடுதல் தகவல்.
மேலும் பாலிசிதாரர்களுக்கான உரிமம் வழங்குவதிலும் உலகத்தின் முன்னோடி நிறுவனமாக 97.93 சதவீத உரிமங்களை வாரி வழங்கி நெஞ்சம் விம்ம நிமிர்ந்து நிற்கும் ஒரே நிறுவனம் எல்ஐசி தான். இந்நிறுவனம் பாலிசிதார்களின் தரமான சேவைக்காக வாங்கிக் குவித்த விருதுகள் 40க்கும் மேல்..
எல்ஐசி காப்பதும் தேசம் காப்பதும் ஒன்றே என்ற கொள்கை முழக்கத்துடன் எல்சிஏஓஐ முகவர்களை திரட்டி நாடுமுழுவதும் செயல்படுகிறது.
எல்ஐசிக்கு போட்டியாக, களத்தில் பல நிறுவனங்கள் வந்தாலும், இன்றும் சந்தையிலும் மக்கள் மனதிலும், இன்சூரன்ஸ் என்று சொன்னதும் முதலில் வருவது, எல்.ஐ.சி.யாகதான் இருக்கிறது..
VRM IAS ACADEMY
PERAMBALUR
8870973409
www.vrmiasacademy.com
Andhra Pradesh
Animal – Blackbuck
Bird – Indian Roller
Flower -Water Lily
State Dance – Kuchipudi
Tree – Neem
Sport – Kabaddi
Arunachal Pradesh
Animal – Mithun(Gayal)
Bird – Great Hornbill
Flower – Foxtail Orchid
Tree – Hollong
Assam
Animal – One Horned Rhinoceros
Bird – White Winged Wood Duck
Flower – Foxtail Orchid(Kopou phul)
Tree – Hollong
Bihar
Animal -Gaur
Bird – House Sparrow
Flower – Marigold
Tree – Peepal
Chhattisgarh
Animal – Wild Buffalo
Bird -Hill Myna
Tree – Sal
Delhi
Animal – Nilgai
Bird – House Sparrow
Goa
Animal – Gaur
Bird – Black-crested bulbul
Tree -Matti
Gujarat
Animal – Asiatic Lion
Bird – Greater Flemingo
Flower – Marigold
Fruit – Mango
Tree – Banyan
Haryana
Animal – Blackbuck
Bird – Black Francolin
Flower – Lotus
Tree – Peepal
Himachal Pradesh
Animal – Snow leopard
Bird – Western Tragopan
Flower – Pink Rhododendron
Tree – Deodar
Jammu & Kashmir
Animal – Kashmir Stag(Hangul)
Bird – Black necked Crane
Flower- Lotus
Tree – Chinar
Jharkhand
Animal – Asian Elephant
Bird – Koel
Flower – Palash
Tree – Sal
Karnataka
Animal – Elephant
Bird – Indian Roller
Dance – Yakshagana
Flower – Lotus
Tree – Sandalwood
Kerala
Animal – Elephant
Bird – Great Hornbill
Dance – kathakali
Flower – Kanikonna
Fruit – Mango
Tree – Coconut
Madhya Pradesh
Animal – Swamp Deer
Bird – Asian paradise flycatcher
Flower – Parrot Tree
Tree – Banyan
Maharashtra
Animal- Giant Squirrel
Bird – Yellow-footed green pigeon
Butterfly – Blue Mormon
Flower – Jarul
Tree – Mango
Manipur
Animal – Sangai
Bird – Mrs. Hume’s pheasant
Flower – Shirui lily
Tree – Toon
Meghalaya
Animal – Clouded leopard
Bird – Hill Myna
Flower – Lady slipper orchid
Tree -White teak
Mizoram
Animal – Serow
Bird – Mrs. Hume’s Pheasant
Flower – Red vanda
Tree – Indian rose chestnut
Nagaland
Animal – Mithun
Bird – Blyth’s tragopan
Flower- Rhododendron
Tree – Alder
Odisha
Animal – Sambar deer
Bird – Blue jay
Dance – Odissi
Flower – Asoka
Tree – Ashwatha
Punjab
Animal – Blackbuck
Bird – Northern goshawk
Tree – Sheesham
Rajasthan
Animal – Camel
Bird – Great Indian bustard
Dance – Ghoomar
Flower – Rohira
Game – Basketball
Tree – Khejri
Sikkim
Animal – Red panda
Bird – Blood pheasant
Flower – Noble orchid
Tree – Rhododendron
Tamil Nadu
Animal – Nilgiri tahr
Bird – Emerald dove
Dance – Bharatanatyam
Flower – Gloriosa lily
Fruit – Jack fruit
Sport – kabaddi
Tree – Palm tree
Telangana
Animal – Deer
Bird – Indian roller
Flower – Tangedu
River – Godavari
Tree – Jammi Chettu
Woman – Chakali Ailamma
Tripura
Animal – Phayre’s langur
Bird – Green imperial pigeon
Flower – Nageshwar
Tree – Agar
Uttarakhand
Animal – Musk deer
Bird – Himalayan monal
Flower – Brahm kamal
Tree – Burans
Uttar pradesh
Animal – Swamp deer
Bird – Sarus crane
Dance – Kathak
Flower – Brahm kamal
Sport – Field Hockey
Tree – Ashok
West Bengal
Animal – Fishing cat
Bird – White-throated Kingfisher
Flower – Night-flowering jasmine
Tree – Devil tree
Andaman and Nicobar Islands
Animal – Sea cow
Bird – Andaman wood pigeon
Flower – Phalaenopsis speciosa
Tree – Andaman padauk
Chandigarh
Animal – Indian grey mongoose
Bird – Indian grey hornbill
Flower – Dhak flower
Tree – Mango
Puducherry
Animal – Squirrel
Bird – Koel
Flower – Cannonball
Tree – Bilva tree
Lakshadweep
Animal – Butterfly Fish
Bird – Noddy tern
Tree – Breadfruit
துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...