*🔥முத்தமிழ் TNPSC பயிற்சி மையம் - சேலம்🔥*
🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅
*👉முதன்மை தேர்வுக்கு எப்படி படிக்கிறது👈*
முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களோட மிக முக்கியமான கொஸ்டின் என்னவா இருக்குன்னா
இன்னும் நூறு நாள் தான் இருக்கு நான் பாஸ் பண்ண முடியுமா ?
எந்தப் புத்தகத்தில் எல்லாம் நான் படிக்கணும்
படிச்சத நான் எப்படி எழுதணும் ?
*👉முதல் ஐயம்👈*
100 நாள்ல முதன்மை தேர்வு வெற்றி பெற்ற முடியுமா ?
இப்ப முடியும் குறைஞ்சது நாம இதுக்காக 10 மணி நேரம் 12 மணி நேரம் செலவிடனும்
குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் எழுத்து பயிற்சிக்காக ஒதுக்க வேண்டும்
நாம் படிப்பதில் 2/3 பங்கு தேர்வின் இரண்டாம் தாளுக்கான தயாரிப்பில் செலவிட வேண்டும்
மீதி நேரங்களில் தாள் ஒன்று மற்றும் எழுத்துப் பயிற்சிக்கான நேரத்தை செலவிட வேண்டும்
உதாரணத்திற்கு நாம் 9 மணி நேரம் படித்தால் , ஆறு மணி நேரம் தான் இரண்டுக்கான தயாரிப்பிலும்
மூன்று மணி நேரத்தில் ஒன்றரை மணி நேரம் தாள் ஒன்றுக்கும்
ஒரு மணி நேரம் எழுத்துப் பயிற்சிக்கும் செலவிட வேண்டும்
எந்த புத்தகங்கள் நான் படிக்க வேண்டும் ?
அதுக்கு பாடத்திட்டம் என்னன்னு நம்ம முதல்ல புரிஞ்சிக்கணும்
தமிழ் தகுதி தேர்வு - தமிழ் ஆங்கிலம் இரண்டும் எழுதப் படிக்கத் தெரிந்த அனைவரும் வெற்றி பெற்று வர முடியும்
தாள் ஒன்றின் மதிப்பெண்கள் உங்கள் பணிக்கான தரவரிசைக்கு எடுத்துக் கொள்ளப்படாது
தாள் இரண்டைப் பொறுத்தவரை உங்களது வேலையை உறுதி செய்யும் வினாத்தாள்
*ஐந்து பாகங்கள் உள்ளன*
1. பொது அறிவியல்
2. பொது நிர்வாகம்
3. சமூகப் பிரச்சனைகள்.
4. நடப்பு நிகழ்வுகள் இந்திய அளவில்
5. நடப்பு நிகழ்வுகள் தமிழகம்
*1. பொது அறிவியல் :*
பொது அறிவியல் பாடத்தைப் பொறுத்தவரை 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பாடங்கள் போதுமானதாகும்
மேலும் ஒரு சில அறிவியல் முன்னேற்றங்களுக்கு நாளிதழ்களில் சமீபத்தில் வந்த அறிவியல் கண்டுபிடிப்புகள்
அறிவியல் சம்பந்தப்பட்ட மாத இதழ்களில் குறிப்புகள் எடுத்துக் கொள்ளலாம்
அறிவியலைப் பொறுத்தவரை மிகவும் கடினமான பாடம் என்பதால்
தொடர்ந்து அறிவியல் படங்களை மட்டும் படிக்காமல்
சிறிது நேரம் பிற பாடங்களில் திருப்புதல் போன்றவற்றை செய்யலாம்
*2. பொது நிர்வாகம் :*
பாடத்திட்டத்தில் பொது நிர்வாகம் தமிழகத்துக்கு சிறப்பு கவனம் என கொடுக்கப்பட்டுள்ளது
*நாம் படிக்க வேண்டிய புத்தகங்கள்*
பள்ளி புத்தகங்களில் 6 ஆம் முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள குடிமையியல் பாடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடங்கள் புவியியல் மற்றும் பொருளாதாரம் பகுதிகளில் தமிழகம் சார்ந்து உள்ள பகுதிகள்
இது போக ஆங்கில வழி மாணவர்கள் லட்சுமி காந்த் (Lakshmikant) அல்லது மகேஸ்வரி (Maheswari) அவர்களின் Indian administration புத்தகங்கள் படிக்கலாம்
*தமிழில் வெங்கடேசன் அல்லது தர்மராஜ் அவர்களின் புத்தகங்களைப் படிக்கலாம்*
தமிழக அரசின் குறிப்பிட்ட துறைகளின் கொள்கை விளக்க குறிப்பில் குறிப்பிட்ட திட்டங்கள் குறித்து படித்துக் கொள்ளலாம்
திட்டம் மாத இதழ் கடந்த ஒரு வருடத்தில் வெளிவந்த திட்டம் இதழை படித்துக் கொள்ளலாம்
*3. சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகள் :*
இந்தப் பகுதி மாணவர்கள் படிப்பதற்காக மிகவும் புத்தகங்கள் தேடி அலையும் பகுதியாக உள்ளது
இந்தப் பகுதியில் உள்ள பாடங்கள் பள்ளி புத்தகங்களில் நிறைய பகுதிகள் உள்ளன
பழைய சமச்சீர் புத்தகங்களிலும் நிறைய பாடங்கள் வருகின்றன
அவற்றை நாம் நமது பாடத்திட்டத்தில் எந்த பாடங்கள் வருகின்றனவோ அதை படித்துக் கொள்ளலாம்
அந்த நிகழ்வு குறித்த சமீபத்திய புள்ளி விவரங்களை சேகரித்து குறித்துக் கொள்ளுதல் வேண்டும்
புத்தகங்கள் என்ற வகையில் , ஆங்கிலத்தில் ராம் அகுஜா என்பவர் எழுதிய social problems in India என்ற புத்தகம் பயனுள்ளதாக இருக்கும்
தமிழில்
திரு தர்மராஜ் அவர்கள் எழுதிய சமூக பொருளாதார பிரச்சனைகள் என்ற புத்தகம் கிடைத்தால் பயன்படுத்தலாம்
*4 & 5 பாடத்திட்டத்தின் மற்ற இரு பகுதிகளான நடப்பு நிகழ்வுகள் இந்தியா மற்றும் தமிழ்நாடு :*
கடந்த ஒரு வருட காலத்தில் நிகழ்ந்த நடப்பு நிகழ்வுகளை சுற்றி அமையும் எனவே கடந்த ஒரு வருட காலத்தின் நடப்பு நிகழ்வுகளை
பொது அறிவு உலகம் மாத இதழ் அல்லது ஏதேனும் ஒரு பயிற்சி நிறுவனத்தின் வலைப் பக்கத்தில் கிடைக்கும் நடப்பு நிகழ்வுகளை எடுத்து
அதை நமது விரிவாக எழுத வேண்டிய தேர்வுக்கு ஏதுவாக தயாரித்துக் கொள்ளலாம்
*👉அடுத்து மூன்றாவது ஐயம்👈*
எப்படி சார் நான் எழுதி பார்க்கணும்
குறிப்புகளாக எழுத வேண்டுமா ?
பத்தியாக எழுத வேண்டுமா ?
எப்படி வேணாலும் எழுதிக்கலாம்
ஆனால் பத்தியாக எழுதும் பொழுது நேரம் விரயமாகும்
எனவே குறிப்புகளாக எழுதும் பொழுது நமக்கு நேரம் கிடைக்கும் எளிமையாக குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க முடியும்
ஒவ்வொரு விளக்கம் ஒரு தலைப்பு , சிறு தலைப்புகள் கொடுத்து தெளிவாக எழுத வேண்டும்
இப்பொழுது இருந்தே நாம் எழுதிப் பழகினால் தேர்வின் பொழுது நேர மேலாண்மை மற்றும் அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க சரியாக இருக்கும்
*💯உன்னால் முடியாது என்றால் !💯*
*💯யாரால் முடியும் !!💯*
*💯முயற்சி மட்டுமே மூச்சுக்காக இருக்கட்டும்💯*
*💯பயிற்சி மட்டுமே உன் வாழ்வை மாற்றும்💯*
*🔥முயற்சி+பயிற்சி=வெற்றி🔥*