Friday, 17 January 2025

8th Pay Commission Fitment Factor Approximate Calculation How Much / எட்டாவது ஊதியக்குழு அடிப்படையில் , ஊதியம் எவ்வளவு உயரும் என்பது பற்றிய கணக்கீடு :


எட்டாவது ஊதியக்குழு அடிப்படையில் , ஊதியம் எவ்வளவு உயரும் என்பது பற்றிய கணக்கீடு :











எட்டாவது ஊதியக்குழு , ஊதிய நிர்ணய பெருக்குக் காரணி ( Fitment Factor ) 1.86 , 1.91 . , 2.28 என பலவித கருத்துகள் இருந்தாலும் , ஊதிய நிர்ணய பெருக்குக் காரணி ( Fitment Factor ) 1.86 க்கு குறையாது என பல்வேறு மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் கருத்து தெரிவித்துள்ளன . இதன் அடிப்படையில் ஊதியம் எப்படி நிர்ணயம் செய்யப்படும் மற்றும் ஊதியம் எவ்வளவு உயரும் என்பதை கீழ்க்கண்ட மாதிரி கணக்கீடு மூலம் அறியலாம்.

👇👇👇👇

8th Pay Commission Calculation - Download here


*எட்டாவது ஊதியக் குழுவின் Fitment Factor என்னவாக இருக்கும்?!? ஒரு பார்வை.....*


மத்திய அரசு அறிவித்துள்ள ஊதிய குழு அதாவது மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம், ஊதிய விகிதம், பிற படிகளை மாற்றியமைக்க அமைக்கப்படும் குழு இக்குழு பரிந்துரைக்கும் ஊதியமாற்றத்தை மத்திய அரசு ஏற்று தனது ஊழியர்களுக்கு ஊதிய்த்தையும் பிற ல படிகளையும் மாற்றியமைக்கும்..


2025 டிசம்பர் மாதம் பெறும் அடிப்படை ஊதியத்தை கொண்டுதான் அடுத்த ஊதியக்குழு ஊதியவிகிதம் & ஊதியம் மாற்றியமைக்கப்படும். அது எவ்வாறு அமையும் என்பதை இதற்கு முன் ஊதியக் குழுக்ககளின் பருந்துரைகளின் படி எவ்வாறு அமையும் என்பதையும் பார்க்கலாம்...


2025 டிசம்பர் மாதத்தின் அகவிலைப்படி அதாவது தற்போது ஜூலை 2024 அகவிலைப்படி 53% அடுத்த ஜனவரி மாதம் முதல அகவிலைப்படி 56%(3% கூடுதல்) கட்டாயம் இருக்கும் இது மத்திய அரசு மார்ச், ஏப்ரல் 2025 மாதத்தில் அறிவிக்கும், மேலும் அடுத்து ஜூலை 2025 ல் அதிகபட்சமாக 4% கூடுதல் அகவிலைப்படி அறிவித்தால் 60% ஆக இருக்கும். (இது AICPIN என்ற விலைவாசி குறிகளின் படி பொருத்து அமையும்)

அவ்வாறு 60% அகவிலைப்படி இருந்தால் அத்துடன் மத்திய அரசின் கூடுதல் ஊக்கத தொகையாக (கூடுதல் ஊதிய சதவீதம்) 25% முதல் 30 சதவீதம் அறிவிக்கலாம். அவ்வாறு அரசு அறிவிக்கும்பட்சத்தில்.

60%அகவிலைப்படி + 25% அரசு ஊக்க ஊதியம் சேர்த்து 85% 185%,  *(Figment factor 1.85)*

அல்லது 

60% அகவிலைப்படி +30% அரசு ஊக்க ஊதிய சதவீதம் சேர்த்து 90% அதாவது 190% *(Figment Factor 1.90)*

அதாவது *Figment Factor 1.85, 1.86, 1.87, 1.88, 1.89, 1.90 இவைகளில் ஏதாவது ஒன்றாக இருக்கும்.*

மற்ற பிற படிகள் பொருளாதார வளர்ச்சி, நகர்புற வளர்ச்சி, மருத்தும் சுகாதாரம் இவைகள் சார்ந்தாக அமையும்.

பிற படிகளான வீட்டுவாடகைப் படி, மருத்துவப் படி இதர படிகள் அனைத்தும் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும்..

மேலே கூறியுள்ள தகவல்கள் கடந்த ஊதியக் குழுக்களின் ஊதிய கணக்கீடுகள் கொண்டு கணக்கிடப்படவைகள் ஆகும்..

Thirukkural GK / திருக்குறள் பற்றிய தகவல்கள்

Thirukkural GK / திருக்குறள் பற்றிய தகவல்கள்  👁‍🗨 திருக்குறள் முதன் முதலில் அச்சிடப் பெற்ற ஆண்டு – 1812  👁‍🗨  திருக்குறளின் ...