Tuesday, 27 June 2017

ஒரு சின்ன கதை:

வட அமெரிக்காவில் ஒரு பறவை இனம் அழிந்து வந்தது.

அதை பாதுகாக்க அந்த நாட்டு அரசாங்கம் முடிவு செய்தது.

அதற்காக உயிரியல் பூங்காவில் தனியாக ஒரு அறை அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது.

அந்த பறவைக்கு தனி பாதுகாவலர், தனி உணவு அதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டது.

கோடை காலத்தை சமாளிக்க தனியாக குளிர் அறையும் அமைக்கப்பட்டது.

பறவை இனம் பெருகியது.

பின்னர் வெளி உலகத்துக்கு சுதந்திரமாக விடப்பட்டது.

அதற்கு தன் எதிரிகள் யார் என்று தெரியவில்லை.

எதிரிகளுக்கு உணவானது.

மின் கம்பங்களில் எப்படி அமர்வது என்று தெரியவில்லை.

பறவைகள் அழிய தொடங்கின (எதிரிகளுக்கு உணவாகி, மின் கம்பங்களில் கருகி, வண்டிகளில் மோதியும்).

எந்த இனம் அழிய கூடாது என்று எடுக்கப்பட்ட முயற்சி, அந்த இனம் அழிய காரணம் ஆனது.

அதே போல் தான் நம் பிள்ளைகளும், நமக்கு கிடைக்கவில்லை
என்று எண்ணி நம் பிள்ளைகளுக்கு கொடுத்து அழகு பார்க்கிறோம், அழிவுக்கு உறுதுணையாய் இருக்கிறோம்.

பூங்காவில் இருக்கும் விலங்குக்கு வேட்டையாட தெரியாது.

அதே போல் தான் அதிகம் செல்லம் கொடுக்கும் பிள்ளைகளால் தோல்விகளை தாங்க முடியாது.

பிள்ளைகளை வெளி உலகத்தை தானாக உணர வழி விடுங்கள்.

நல்லது கெட்டதை தானாக காற்றுக் கொள்ளட்டும்.

நம் பிள்ளைகளுக்கு அதிகம் செல்லம் கொடுத்து விட்டோம், அவன்/அவள் வெளி உலகத்தை எப்படி சமாளிக்க போகிறார்கள் என்ற ஐயம் உங்களுக்கு வேண்டாம்.

நீங்கள் கற்று கொடுக்க மறந்த இந்த பாடத்தை இந்த சமூகம் மற்றும் இயற்கை கற்றுக் கொடுக்கும் எப்படி எனக்கும், என்னை போல் பலருக்கும் கற்றுக் கொடுத்து போல.

இதை தான் ஆங்கிலேயத்தில்
*survival of fittest* என்று சொல்லுகிறோம்.

அதை நோக்கித்தான் எல்லா மானிட பிறவிகளும் ஓடிக்கொண்டு இருக்கின்றன.

பகலிலும் விளக்கு

பகலிலும் மோட்டார் சைக்கிள்களில் விளக்கு எரிவது ஏன்?
 

சமீபத்தில் நண்பர் ஒருவர் புதிதாக இரு சக்கர வாகனம் ஒன்றை வாங்கினார். மறுநாள் வீட்டிலிருந்து புறப்பட்டு அலுவலகம் செல்வதற்குள் குறைந்தது பத்து பேருக்காவது அவர் நின்று விளக்கம் அளிக்க வேண்டியதாயிற்று. பகலிலும் முகப்பு விளக்கு எரிந்தபடியே இருந்ததுதான் பிரச்சினை.

இதனால் மிகவும் சலிப்படைந்த அவர் மறுநாள் காலை முதல் வேலையாக வாகனத்தை வாங்கிய விற்பனையகத்துக்குச் சென்று விசாரித்த போதுதான், புதிதாக வரும் இருசக்கர வாகனங்கள் அனைத்திலும் இத்தகைய தொழில்நுட்பம் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்ற அரசு உத்தரவு அவருக்கு புரிந்தது.பகலில் விளக்கு எரிவதால் பேட்டரியின் ஆயூள் காலம் குறையாது, எரிபொருளும் வீணாகாது என விற்பனையகத்தில் விளக்கம் அளித்திருக்கிறார்கள்.



இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு தயாரான அனைத்து இருசக்கர வாகனங்களிலும் இம்முறை கட்டாயமாக பின்பற்றப்படுகிறது. ஏஹெச்ஓ (All time Headlight On / Automatic Headlight On) எனப்படும் தானியங்கி முகப்பு விளக்கு ஒளிரும் நுட்பம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனத்தை ஸ்டார்ட் செய்தவுடன் முகப்பு விளக்கு ஒளி உமிழும். இதை அணைக்க வாகன ஓட்டி நினைத்தாலும் முடியாது. இரவு நேரங்களில் முகப்பு விளக்கு வெளிச்சத்தை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ மட்டும்தான் முடியும். அதற்கான ஸ்விட்ச் மட்டுமே இருக்கும்.

சாலை பாதுகாப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் நியமித்த குழ அளித்த பரிந்துரையின்படிதான் இந்த தொழில்நுட்பத்தை கட்டாயம் செயல்படுத்த வேண்டும் என்ற உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் 2003-ம் ஆண்டிலிருந்தே இது நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சாலை விபத்துகளில் அதிக உயிரிழப்பு நிகழ்வது இரு சக்கர வாகனங்களால்தான். 2014-ம் ஆண்டில் மட்டும் 32,524 பேர் உயிரிழந்துள்ளனர். 1.27 லட்சம் பேர் காயமடைந்துள்ளனர்.

அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் முகப்பு விளக்கு ஒளிர்வதால் சாலை விபத்துகள் குறையும் என நிபுணர் குழு பரிந்துரைத்தது. இதன் அடிப்படையில் ஏஹெச்ஓ தொழில்நுட்பம் பின்பற்றப்படுவதாக வாகன தயாரிப்பாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இனிமேல் இரு சக்கர வாகனங்களில் பகலில் விளக்கு எரிந்தால் கைகளால் சமிக்ஞை செய்து அவருக்கு உதவுவதாக நினைத்து செயல்பட வேண்டாம். விபத்தை தவிர்க்கவே விளக்கு எரிகிறது என்பது உணர்ந்து கொள்வதோடு இது கட்டாயம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.இது எனது உண்மையான அனுபவமும் கூட.🌺🌺🌺🙏🙏🙏தகவலுக்காக-ஜெ.பாலசுந்தரம் ஆசிரியர்,புதுச்சேரி.🌺🌺🌺🙏🙏🙏

கஷ்டம்

கஷ்டம், கஷ்டம், கஷ்டத்துக்கு மேல் கஷ்டம், தாங்க முடியலே… 💐☝🏻😄

எதுக்குத் தான்பா இந்த கஷ்டம்… என்கிற கேள்வி மனதில் இல்லாதவர்கள் இல்லை. 🌷💐☝🏻😄

இந்தப் பதிவு அதற்கு விடையளிக்கக் கூடும்.💐

 சமீபத்தில் முகநூலில் படித்த ஒரு அற்புதமான கதையை இங்கு உங்களிடம் 💐பகிர்கிறோம்.🙏🏻🌷

 அனைவருக்கும் தேவையான ஒரு நீதி!🌷

பாலுக்கு ஏற்பட்ட வருத்தம்!😰🤔🌷💐

பாலுக்கு ஒரு பெரிய வருத்தம். 🌷

பசுவின் வயிற்றில் நான் இருந்தேன்.

என்னை ஒருத்தி கறந்து பாத்திரத்தில் ஊற்றினாள்.

அடுப்பைப் பற்றவைத்து,அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சூடாக்கினாள்.

எனக்கு சூடு தாங்கவில்லை. துடித்துப் போனேன்.

பசுவின் வயிற்றில் பத்திரமாக இருந்த எனக்கு இப்படி ஏன் ஒரு சோதனை?” 🤔😰

என்று என்னை நானே நொந்து கொண்டேன்.

பொங்கிய நிலையில் என்னை அடுப்பிலிருந்து இறக்கிவைத்தாள். 💐

நேரமாக, நேரமாக நான் ஆறியதும், புளித்த மோரைக் கொண்டு வந்து என்னோடு சேர்த்தாள். 💐

இது என்னடா புது தண்டனை?” என்று வருத்தப்பட்டேன். 😰

அதன் பிறகு யாரும் என்னைப் பற்றிக் 🤔😰
கவலைப்படவில்லை.

திரவமாக இருந்த நான் திடமாக மாறிப்போனேன். 👍🏻

எனக்குத் தயிர் என்று புதிதாக ஒரு பெயரை வைத்தார்கள்.💐🌷

அத்துடன் நிறுத்தினார்களா? என்னை ஒரு பானையில் ஊற்றி,

மத்து கொண்டு கடைய ஆரம்பித்தார்கள். 😰

நான் மறுபடி மோர் என்ற திரவமானேன்.

என்னுள்ளிருந்தே ஒரு திடப்பொருளை வரவழைத்து, 😰

அதற்கு வெண்ணெய் என்று பெயர் வைத்தார்கள்.

‘பட்டர்’ என்ற பெயரைக் கேட்டதும், அப்பாடா! இனியாவது என் வாழ்க்கை ‘பெட்டர்’ ஆகுமா?” என்று ஏங்கினேன்.👍🏻🤔🌷

அத்துடன் தீர்ந்ததா என் கஷ்டம்?

அந்த வெண்ணெயை, மறுபடி அடுப்பில் வைத்து உருக்கினார்கள்.

எனக்கு நெய் என்று இன்னொரு புதுப் பெயரை வைத்தார்கள்.

 உருக்கிய நெய்யை ஒரு ஜாடியில் ஊற்றி,

அந்த வீட்டில் ஜன்னலுக்குப் பக்கத்தில் வைத்தார்கள்.

பாலாக இருந்த நான், பட்ட கஷ்டங்களையும், இப்போதுள்ள 🌷நிலைமையையும் நினைத்தபடியே இருந்த நேரத்தில், 💐

ஜன்னலுக்கு வெளியில் இரண்டு பெண்கள் ஏதோ பேசிக்கொண்டே செல்வதை நான் கவனித்தேன். 💐

ஒருத்தி உங்க ஊர்ல பால் என்ன விலை?” என்று கேட்டாள். 🌷

அதற்கு அடுத்தவள், அரை லிட்டர் 20 ரூபா” என்றாள். 💐🌷

உடனே முதல் பெண்மணி, ஆனா இந்த நெய் விற்கிற விலையைப் பார்த்தியா? 💐

அரை லிட்டர் கேட்டால் கடைக்காரன் 250 ரூபா விலை சொல்றான்” என்றாள்.🌷🤔☝🏻

ஜன்னல் பக்கத்திலே, ஜாடிக்குள்ளே இருந்த நான் அவர்கள் பேசிக்கொண்டதைக் கேட்டு 💐🤔ஆச்சர்யப்பட்டேன்.

பாலாக இருந்தபோது என் மதிப்பு வெறும் 20 ரூபாதான், 🌷💐

ஆனால், பல கஷ்டங்களை அனுபவித்து, நெய்யான பிறகு, என் மதிப்பு 250 ரூபாயாகக் கூடிவிட்டதே! 🤔😄👍🏻🌷

இதை நினைக்கிறபோது,

நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை!” என்றது அந்த நெய்.💐👏🏻😄👍🏻🙏🏻

இந்தக் கதை மூலம் நமக்குக் கிடைக்கிற பாடம் என்ன?🌷💐😄

நாம் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களும், கஷ்டங்களும்தான் 👌🏻👍🏻நம்முடைய வாழ்க்கையின் தரத்தை, மதிப்பை 🤔👌🏻🌷
உயர்த்துகிற அம்சங்கள்

 பிடித்தால் பகிருங்கள் வாழ்த்துக்களோடு
😄🙏🏻☝🏻👏🏻💐

இனிமே இப்படித்தான்...

படித்த பிறகு மனம் நெகிழும் கதை, miss பண்ணிராதீங்க😍😍

இனிமே இப்படித்தான்...

இவன் இப்படியிருக்க மாட்டானே... ஏதோ மிஸ்ஸாகுதே என மனதில் நினைத்தபடியே சசி தன் கணவன் சக்திவேலுக்கு காஃபி கொண்டுவந்தாள்.

நேத்து நீ வரைஞ்சத தப்புனு மிஸ் சொல்லிட்டாங்கபா

ஏனாம்.... சரியாத்தான இருக்கு..

அதான் தப்பு. நான் வரைஞ்ச மாதிரி வரைச்சிருக்கனும்.. நீ அப்படியே இஞ்சினியர் மாதிரி வீடு வரைஞ்சு கொடுத்தா... மிஸ் கண்டுபிடிக்க மாட்டாங்களா..  இன்னைக்கு நாலு காய்கறி வரைஞ்சு கொடு... ஆனால் நான் வரைஞ்சா மாதிரி வரைஞ்சு கொடு...ஒகே... என அப்பனும் மகளும் பேசிக்கொண்டே ஹோம் ஒர்க் செய்தார்கள்.

ஏய் மீனா.. வரவர நீ ஒழுங்கா ஹோம் ஒர்க் செய்யரதே இல்லை.. எல்லாத்தையும் அப்பா தலையில கட்டிறே..

சும்மா உளறாதே... தேர்ட் ஸ்டாண்டர்டு படிக்கிற புள்ளைக்கு டிராயிங் வருமா வராதானு தெரியாம... வீடு வரஞ்சி எடுத்துட்டுவா.. மயில் வர... மயிர் வரனு சொன்னா... வேற யாராச்சும் தான் வரைஞ்சுதருவாங்க.. அதுக லெவலுக்கு சொல்லித்தரணும்..

போதும் வாய மூடு. ஏற்கனவோ உன் பொன்னு வாய் திருச்சிவரைக்கும் பேசும்.. இதுல நீ வேற இப்படி சொல்லிக்கொடு... இன்னும் கிழியும்.. எந்திருச்சி போ போய் காஃபிய குடி என விரட்டினாள்.

சம் போட்டுட்டியா.. எங்க காட்டு என அவள் செக் செய்ய... சக்திவேல் மெதுவாய் அறையைவிட்டு எழுந்து ஹால் வந்தான். ஏதோ ஒரு புக்கை எடுத்து புரட்ட தொடங்கினான் காஃபியின் துணையோடு.

எங்கயாச்சும் போவோம்டா.. என அவனை நெருக்கி அமர்ந்தபடி சொன்னாள் சசி. சொல்லு சண்டே போலாம்.. எங்க ...?

சண்டே வேண்டாம்... அது யூஸ்வலா போறதுதானே... நாளைக்கு போவோம்..

நாளைக்கா ?

 என்ன விசேஷம்... ?

போட பன்னி.. விசேஷசம்னாதான் கூப்டுபோவியா.. போபோ என உள்ளே எழுந்து சென்றாள் தொடர்ந்து பின் சென்றான் சக்தி...

சொல்லுடி என்ன பிரச்சினை..

ஒன்னுமில்லை மனசு ஒருமாதிரி இருக்கு...

சொல்லு என்ன பிரச்சினை...

ஒரு பிரச்சினையும் இல்லை.. நீ போய் வேலைய பாரு...

சரி ஒகே. சாரி. நாளைக்கு பாப்பாவா ஸ்கூலுக்கு அனுப்பிட்டு ரெடியா இரு. நா ஆபீஸ் போய்ட்டு வந்துடுறேன். சைட்டுக்கு வேற யாராச்சும் மாத்திவிட்டுட்டு...ஒகே

ஒன்னும் வேணாம்...

நோ நோ.. இது சக்தி ஆர்டர். பாப்பாக்கு மட்டும் மதியம் செய். நாம வெளியே பாத்துக்கலாம்... என சொல்லிவிட்டு மீண்டும் ஹாலுக்கே சென்றான் . சசிக்கு கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது. நாளை கண்டிப்பாக கேட்கவேண்டும். இந்த ஒரு மாதம் இவன் ரொம்ப மாறியிருக்கிறான். முன்னாடி எல்லாம் வேலைவேலைனு உயிர விடுவான். இப்ப டானு 7 மணிக்கு வீட்டுக்கு வந்துடுறான். ஞாயிற்றுகிழமை... விளையாட போனாலும் 12 மணிக்கு வீட்டுகு வந்துடுறான்... எல்லா ஞாயிறும் அவுட்டிங் கூப்டு போறான்.. ஆனா வேலை முன்னாடிக்கு இப்ப நிறையதான் எடுத்துருக்கான்... எல்லா கேட்கணும்... வீட்ல கேட்டா குதிப்பான்... என அவள் மனதுக்குள் நாளைக்ககான தயாரித்தல் நடந்துகொண்டிருந்தது.

இது என்ன ஹோட்டல் செமயா இருக்கு. சென்னையிலையா இப்படி ஒன்னு என ஆச்சரியமாய் கேட்டாள். சிரித்தபடி சொன்னான்.. இதுக்கு பிளானிங் நாங்க.. ஆனா வொர்க் எடுத்து செஞ்சது மட்டும் மும்பை கம்பெனி.

ஏன் அப்படி...

அவங்க சொன்ன கெடுவுக்குள முடிக்க எங்களுக்கு முடியல.. அதுனால பிளானிங் மட்டும் நாங்க...

செமயா இருக்கு. நீ போட்ட பிளானா

நான் மட்டுமில்லை...  எல்லாரோட உழைப்புமிருக்கு...

அந்த மெனுகார்டில் பார்த்து ஏதோ ஒன்றை சொன்னான். வாஷிங் பவுல் வந்தன. கூடவே மடியில் மூடும் டவல் வந்தது.

சரி.. சொல்லு என்ன பிரச்சினை என சசியை பார்த்து சொன்னான்.

நீ தான் சொல்லனும்

நான் என்ன சொல்ல...

ஒரு மாசமா சீக்கிரம் வீட்டுக்கு வரே... அடிக்கடி அவுட்டிங்...

ஒன்னுமில்லையே எப்பவும் போலத்தான் இருக்கேன்

கிழிச்ச... உன் முகரைய பார்த்தாலே தெரியுது... சொல்லு

என்னத்த சொல்ல..

ஏதும் சின்னவீடு செட் பண்ணிட்டியா.. அத மறைக்கத்தான் இப்படி கொஞ்சுறியா

அவன் சிரித்தான். ஆனால் அதில் உயிரில்லை. மெதுவாய் சொன்னான்.. நீயா கேட்பே சொல்லனும்னுதான் இருந்தேன் என கொஞ்சம் சீரியஸ் ஆனான்.

என்னடா ஏதும் பிரச்சினையா

அவன் இல்லையென தலையாட்டியபடியே அவனது அலுவலக பையை திறந்தான். ஒரு டைரியை திறந்து ஒரு பேப்பரை எடுத்து நீட்டினான்.

என்ன இது ..

ப்படி என சொல்லிவிட்டு பின்னால் நகர்ந்து அமர்ந்தான்.  அவள் படிக்க தொடங்கினாள்

அன்புள்ள மகனுக்கு,

கண்டிப்பா என்னைக்காச்சும் இந்த கடிதம் உன் கையில கிடைக்கும்னு நான் நம்புறேன். உங்கப்பாவுக்கு மனைவியா உனக்கு அம்மாவ இந்த கடிதம் எழுதுறேன். ரொம்ப பெரிய கடிதம் பொறுமையா படி. அவசரமா வேலை இருக்குனு பாதி படிச்சி மீதிய இன்னொரு நாள் காத்திருந்துப் படிக்காதா.

உங்கப்பாவ கல்யாணம் பண்னும்போது நான் காலேஜ் லெக்சரர். அப்புறம் நீ வந்த பிறகு உங்கப்பாக்கு அதிர்ஷ்டம் அடிச்சுது. இன்னும் கன்ஸ்ட்ரக்‌ஷன்ல வளர்ந்தாரும் அப்புறம்  உன் தங்கச்சி... வேலையை விட்டுட்டு வீட்டோட உங்கள கவனிச்சுட்டு இருந்தேன். உனக்கு தான் தெரியுமே அப்பா எப்படி பிசினு...

கல்யாணம் ஆன ஒரு வருஷம் தான் கனவு வாழ்கை. அப்புறம் எல்லாமே காத்திருந்த வாழ்க்கைதான். உங்கப்பாவுக்கு காத்திட்டு இருந்தேன். அவர் அவர் உருவாக்க நினைச்ச ஆடம்பர வாழ்க்கைக்காக உழைச்சிட்டு இருந்தார். நீங்கள் ரெண்டு பேரும் தான் எனக்கு துணை. நாம தான் விளையாடுவோம். அப்புறம் நீங்க ஸ்கூலுக்கு போய்டீங்க.. நீங்க வரதுக்கு காத்திட்டுருபேன்.

ஸ்கூல்விட்டு வந்ததும் கதைகதையா சொல்லுவீங்க.. அதுல பாதி பொய் இருக்கும்.. அதெல்லம் உங்க கற்பனைனு நினைச்சு ரசிச்சேன். அப்புறம் நீங்க வளர்ந்தீங்க.. அம்மாட்ட சொல்ல ஏதுமில்லாம போச்சு. ஆனா உங்கள்ட்ட இருந்து ஆர்டர் மட்டும்  வந்துச்சு. இப்ப வெளியே போகனும்... இப்படி வெளியே போகணும்னு.. ஆனா வர்ற டைம் கேட்க முடியுமா அம்மாவால்.......

காத்திட்டு இருப்பேன். நீங்க சாப்டு வரீங்களா.... சாப்டமா வரீங்களானு பார்க்க காத்திட்டு இருப்பேன்....நீங்க எக்ஸ்டரா கோச்சிங், பிரண்ட்ஸ் அரட்டைனு..பிசி

இடையில உங்கப்பா உடம்பு முடியாம படுத்துட்டாரு. அவருக்கு டயத்துக்கு மாத்திரை கொடுக்கனும், மருந்து கொடுங்கணும், பிசியோதெரபி பண்ணனும் காத்திட்டுருப்பேன். காத்திட்டு இருக்கிறதே என்னோட வாழ்க்கை ஆகிடுச்சு பாத்தியா?

அப்புறம் உன தங்கச்சி கல்யாணம்... இப்ப அவ எப்படி இருக்கானு கூட அவளா முடிவு செய்ற நேரத்திலதான் என் கூட பேச முடியும்.... ஏன்னா அங்க அவ காத்திட்டு இருக்கா .... ஒரு அம்மாவா...

உனக்கு சொல்லவே வேண்டாம்... அப்பா தொழில எடுத்து செய்ய ஆரம்பிச்ச உடனே நீ ரொம்ப பிசியாகிட்ட.. நீ கடைசி ஐஞ்சு வருஷத்தில் அம்மாட்ட பேசுனத கொஞ்சம் யோசியேன்... சாப்டிங்களா, மாத்திர போட்டாச்சா.. ஊசிபோட்டாச்சா... இவ்ளோதான்.

உங்கப்பா வாழ்றா காலத்தில பிசியா இருந்தாரு.. நான் காத்திட்டு இருந்தேன். கடைசி காலத்தில் ஏதுவும் இல்லாம இருந்தாரு.. ஆனா மாத்திரைக்கு காத்திட்டு இருந்தாரு... எண்ட பேச அவருக்கு விசயமே இல்லை... பேப்பர் படிச்சாரு. புக் படிச்சாரு. தூங்குனாரு. ஏன்னா பேச வேண்டிய காலத்தில் பேசல... பேச நேரமிருந்த காலத்தில் பேச விஷயமில்லை... அனுபவமும் இல்லை

இப்படித்தான் பெரும்பாலான அம்மாக்களோடு வாழ்க்கை முடிஞ்சு போகுது. நாம என்னைக்காச்சும் வெளியே போகும் போது அங்க நிறைய அம்மாக்கள் பார்ப்பேன்.. அவங்க  எல்லார் கண்ணிலும் எனக்கு தெரியுறது காத்திருந்த ஏக்கம் தான். உன்னை மாதிரி பசங்க கூட்டிட்டு வர  அவங்க மனைவிகளை பார்ப்பேன்... அதுல இன்னைகே வாழ்ந்துடனும்... அடுத்த ஆறு நாள் இவன் கூட பேசக்கூட முடியாதுன்ற ஒரு வேகம் இருக்கிறத பார்த்தேன் .இன்னைக்கு ஒரு நாள் தானேனே புள்ளைக கேட்ட எல்லாம் செய்ற அப்பாக்கள் பார்த்தேன். இது கொஞ்சம் கொஞ்சமா அவங்களுக்கு காரிய ம் சாதிக்கிற நாள் ஆகிடுதுனு புரிஞ்சுது...  உங்களுக்கு ஒரு நாள் தானேனு ஒரு நினைப்பு வந்துடுச்சு.

இதெல்லாம் ஏன் இப்ப சொல்றேனு யோசிக்கியா... என் காலத்தில் இதெல்லாம் உங்கப்பாட்ட சொல்லி புரிய வைக்க முடியல.. ஆனா நீ அடுத்த ஜெனரேஷன்.. கொஞ்சம் யோசிப்பில்ல அதான் உண்ட்ட சொல்றே.. நான் உயிரோடு இருக்கும் போது சொல்ல முடியல... சொன்னாலும் உன்னால கேட்க முடியாது.. அதனால தான் இப்ப சொல்றேன். உனக்கு வீட்ல ஒரு பொண்ணு இருக்கா, மனைவி இருக்கா...  காத்திட்டு இருக்காங்க...

உன் தங்கச்சிக்கு உங்கப்பா மேல இருந்த பாசம் உனக்கு தெரியாது.. ஆனால் அத அவ வெளிக்காட்டும் போது உங்கப்பா கட்டில்ல நகர முடியாம இருந்தாரு. அவரு தான் அப்பானு அவ காலேஜ்க்கு ஸ்குலுக்கு தெரியாத அளவு அவர் பிசி.... அப்பா கூட அங்க போகணும் இங்க போகணும்ங்கிற எந்த ஆசையும் நிறைவேறல.. அவ அப்பா கடைசி காலத்தில சும்மா இருந்தபோது அவர் பேசனது அவ கேட்க முடியல ஏன்னா  அவ வேறு வீட்டுக்கு போய்ட்டா ..பாத்தியா வாழ்க்கைய ?

நீ உன் பொண்ணுக்கு அப்படி ஒரு வாழ்க்கை கொடுத்துடாதா ? உன் மனைவிய அவளோட மகனுக்கு கடிதம் எழுத வச்சிடதா... இன்னைக்கு மூணுவேளை சாப்பிட சம்பாதிச்சுட்ட. நாளைக்கு மூணு வேளைக்கும் உனக்கு பிரச்சினை இல்லை. இன்னும் சொல்லபோனா நீ இப்ப உழைக்கிறது உன்னோட அடுத்த பத்துவருஷம் கழிச்சி செலவழிக்க போறதுக்குதான்.. அத கொஞ்சம் குறைச்சிகோ.. சீக்கிரம் வீட்டுக்கு வா. பொண்டாடிகிட்ட புள்ளைககிட்ட பேசு... அவங்களுக்கும் நீ நல்லா இருக்கும் போதே கொஞ்சம் நேரம் கொடு.... ஏன்னா அன்புக்காக காத்திட்டு இருக்கிறதும்  ஒருத்தர காக்க வைக்கிறதும் ஒரு  வாழ்க்கையா ?

செய்வேனு நம்புறேன். ஏன்னா எண்ட நல்லா பேசின பையன் தானே நீ... உன் மனைவி மகள விட்டுடவா போற...

கடிதத்தை படித்து முடிந்தாள். அவள் முகம் ஒருவித பரபரப்பில் இருந்தது. நிமிர்ந்து அவனை பார்த்தாள்.... இரண்டு மிகப்பெரிய பலூடா ஐஸ்கீரிம் வந்திருந்தது. அவள் மெதுவாய் தன் அலைபேசியில் இருந்து அவள் அம்மாவிற்கு போன் செய்தாள்.....

.நான் தான்மா
.....
ஏன் சும்மா பேசக்கூடாதா
...
என்ன செய்ற...
....
அப்பா என்ன செய்றாரு...  என பேசத்தொடங்கினாள். ஐஸ்கீரிம் கொஞ்சம்  கொஞ்சமாய் உறுக தொடங்கியது.... . அவன் சிரித்தபடி சாப்பிட தொடங்கினான். இனிமே அப்படித்தான்.. இனி அங்கே அன்பில் காத்திருக்க அவசியமில்லை.

நீதிபதி கிருபாகரன்

*தமிழக அரசுக்கு நீதிபதி கிருபாகரன் முன்வைத்த 20 கேள்விகள்*

அரசு பள்ளிகளில், அரசு ஊழியர்களின் குழந்தைகளை சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது என, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பான வழக்கில்

*தமிழக அரசுக்கு நீதிபதி கிருபாகரன் முன்வைத்த 20 கேள்விகள்*

1)அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியிலேயே சேர்க்க வேண்டும் என்பதை கட்டாயம் ஆக்காதது ஏன் ?

2)2012-க்கு பிறகு எத்தனை பள்ளியில் ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன ?

3)தமிழ் வழி வகுப்பு நடத்தும் ஆசிரியர்களே ஆங்கில வழி வகுப்புகளை நடத்துகிறார்களா ?

4)ஆங்கில வழி வகுப்பை நடத்த பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா ?

5)அரசு பள்ளியை விடுத்து தனியார் பள்ளிகளை,பெற்றோர் நாட காரணம் என்ன ? என்று நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார்.

6)பள்ளிக்கு குறித்த நேரத்திற்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா ?

7)ஆசிரியர்கள் சங்கங்கள் துவங்குவதை ஏன் தடை செய்யக் கூடாது ?

8)ஊரகப் பகுதிகளில் அரசு பள்ளிகளை நிர்வகிக்க ஏன் தொண்டு நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது ?

9)பள்ளி நேரங்களில் ஆசிரியர்கள் மொபைல் பயன்படுத்துவதை ஏன் தடை செய்ய கூடாது ?

10)இதுவரை எத்தனை ஆங்கில வழி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் ? என்றும் நீதிமன்றம் வினா தொடுத்துள்ளது.

11)ஆங்கில வழி ஆசிரியர்கள் எந்த தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்படுகின்றனர் ?

12)அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் காலதாமதமாக வருவதை கண்காணிக்க பறக்கும் படையை தமிழக அரசு அமைத்துள்ளதா ?

13)ஆசிரியர்கள் காலதாமதமாக வருவதை கண்டறிய ஏன் கை விரல் ரேகையை பதிவிடும் இயந்திரத்தை (Bio metric) பொருத்தக்கூடாது ?

14)ஆசிரியர்களின் வருகையை நாள் முழுவதும் கண்காணிக்க வகுப்பறையில் சிசிடிவி கேமரா பொருத்த வாய்ப்புள்ளதா ?

15)கடந்த 10 ஆண்டுகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வின் தேர்ச்சி விகிதம் என்ன ? என்று நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

16)கடந்த 10 ஆண்டுகளில் கிராமப்புற அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் என்ன ?

17)கடந்த 10 ஆண்டுகளில் அரசு உயர்நிலை பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை என்ன ?

18)கிராமப்புற அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை என்ன ?

19)மாறி வரும் கல்வி கற்பிக்கும் முறைக்கு ஏற்ப, அரசு ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படுகிறதா ?

20)அரசு ஆசிரியர்கள் தங்கள் சொந்த ஊரில் பணிபுரிவதை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன ? என்றும் நீதிபதி சரமாரியாக கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளார்.

*தமிழக அரசுக்கு நீதிபதி கிருபாகரன் முன்வைத்த 20 கேள்விகள்*

அரசு பள்ளிகளில், அரசு ஊழியர்களின் குழந்தைகளை சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது என, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பான வழக்கில்

*தமிழக அரசுக்கு நீதிபதி கிருபாகரன் முன்வைத்த 20 கேள்விகள்*

1)அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியிலேயே சேர்க்க வேண்டும் என்பதை கட்டாயம் ஆக்காதது ஏன் ?

2)2012-க்கு பிறகு எத்தனை பள்ளியில் ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன ?

3)தமிழ் வழி வகுப்பு நடத்தும் ஆசிரியர்களே ஆங்கில வழி வகுப்புகளை நடத்துகிறார்களா ?

4)ஆங்கில வழி வகுப்பை நடத்த பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா ?

5)அரசு பள்ளியை விடுத்து தனியார் பள்ளிகளை,பெற்றோர் நாட காரணம் என்ன ? என்று நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார்.

6)பள்ளிக்கு குறித்த நேரத்திற்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா ?

7)ஆசிரியர்கள் சங்கங்கள் துவங்குவதை ஏன் தடை செய்யக் கூடாது ?

8)ஊரகப் பகுதிகளில் அரசு பள்ளிகளை நிர்வகிக்க ஏன் தொண்டு நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது ?

9)பள்ளி நேரங்களில் ஆசிரியர்கள் மொபைல் பயன்படுத்துவதை ஏன் தடை செய்ய கூடாது ?

10)இதுவரை எத்தனை ஆங்கில வழி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் ? என்றும் நீதிமன்றம் வினா தொடுத்துள்ளது.

11)ஆங்கில வழி ஆசிரியர்கள் எந்த தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்படுகின்றனர் ?

12)அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் காலதாமதமாக வருவதை கண்காணிக்க பறக்கும் படையை தமிழக அரசு அமைத்துள்ளதா ?

13)ஆசிரியர்கள் காலதாமதமாக வருவதை கண்டறிய ஏன் கை விரல் ரேகையை பதிவிடும் இயந்திரத்தை (Bio metric) பொருத்தக்கூடாது ?

14)ஆசிரியர்களின் வருகையை நாள் முழுவதும் கண்காணிக்க வகுப்பறையில் சிசிடிவி கேமரா பொருத்த வாய்ப்புள்ளதா ?

15)கடந்த 10 ஆண்டுகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வின் தேர்ச்சி விகிதம் என்ன ? என்று நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

16)கடந்த 10 ஆண்டுகளில் கிராமப்புற அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் என்ன ?

17)கடந்த 10 ஆண்டுகளில் அரசு உயர்நிலை பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை என்ன ?

18)கிராமப்புற அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை என்ன ?

19)மாறி வரும் கல்வி கற்பிக்கும் முறைக்கு ஏற்ப, அரசு ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படுகிறதா ?

20)அரசு ஆசிரியர்கள் தங்கள் சொந்த ஊரில் பணிபுரிவதை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன ? என்றும் நீதிபதி சரமாரியாக கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளார்.

Saturday, 24 June 2017

மனைவி_அமைவதெல்லாம்

#மனைவி_அமைவதெல்லாம்! ♥(முழுவதும் படிக்கவும் )♥ மறுபதிவு

♥திருமணம் நிச்சயம் ஆனதிலிருந்தே எல்லா ஆண்களையும் போல நானும் ஒரு வித உற்சாகத்துடனும்,பரவசத்துடனும் நாட்களை கடத்தினேன். கனவுகள் வராத நாள் கிடையாது. வரும் பெண்ணை பற்றிய எதிர்பார்ப்புகளும்,கற்பனைகளும் சுவாரஸ்யத்தை கூட்டியது.

♥நிறைய  பாலகுமாரன் புத்தகங்களை சேமித்து வைத்து இருந்தேன் வருகிறவளுக்கு படிக்க கொடுக்க வேண்டும் ஒருவேளை அவளும் பாலகுமாரன் ரசிகையாக இருந்தால் ..? நினைக்கவே சிலிர்ப்பாய் இருந்தது.

♥கிரிக்கெட்டில் நான் வாங்கிய பரிசுகளை எல்லாம் தூசு தட்டி எடுத்து பார்வையில் படும்படி வைத்தேன் . இளையராஜா பாடல்கள் தொகுப்புகளை வாங்கி வைத்தேன்.எஸ் .ஜானகி பாடல்களை தனியே பதிவு செய்து வைத்தேன்.கேரம் ,செஸ் போர்டு எல்லாம். இன்னும் பல விஷயங்கள் . ஒரு பெரிய கற்பனை கோட்டையில் வாழ துவங்கி இருந்தேன் .

♥ஒரு சுபயோக சுபதினத்தில் திருமணம் இனிதே நடந்தது..! விருந்து முதற்கொண்ட சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்தது.

♥கீழ்க்கண்ட உரையாடல்கள் சில தினங்களில் சில தினங்கள் இடைவெளியில் நடந்தது.

♥புத்தகம் எல்லாம் படிக்கும் பழக்கம் இருக்கா ?

>இல்லங்க நான் எந்த புக்கும் படிச்சது இல்ல..!

♥எந்த புக்கும் படிச்சது இல்லையா ?

>ஆமாங்க எனக்கு இந்த புத்தகம் ஏதும் படிக்க பிடிக்காது ..!

♥இந்த குமுதம் ,ஆனந்த விகடன் இதெல்லாம் கூட படிச்சது இல்லையா ?

>நான் + 2 படிச்சப்போ படிச்ச பாட புத்தகம் தான் நான் கடைசியா  படிச்சது அதுக்கப்புறம் எந்த புக்கும் படிச்சது இல்ல...!

♥எதோ ஜோக் சொன்னதுபோல அவள் சொல்லி சிரிக்க நான் வெளிறிபோனேன் ..!

♥எனக்கு மண்டை காய்ந்துபோனது எந்த ஒரு புத்தகமும் படிக்காதவளிடம்  போய் பாலகுமாரனை பற்றி பேச முடியுமா..? சேர்த்து வைத்து இருந்த புத்தகங்கள் ...? ஒரு அட்டைப்படத்தில் பால குமரன் என்னை கவலையுடன் பார்ப்பதாக தோன்றியது ..!

♥கிரிக்கெட்டில் நான் வாங்கிய பரிசுகளை பார்வையில் படும்படிதான் வைத்து இருந்தேன்..! அதை பற்றி அவள் கேட்கவேண்டும் நான் பீற்றி கொள்ளவேண்டும் இதுதான் திட்டம் .

♥ஆனால் ..? எதோ வீட்டில் உள்ள காலண்டரை பார்ப்பது ,வால் கிளாக்கை பார்ப்பதுபோல அந்த பரிசுகளை கோப்பைகளை அவள் கண்டுகொள்ளவே இல்லை.

♥அப்புறம் வேறு வழி இல்லாமல் நானே சொல்ல ஆரம்பித்தேன் ..!

♥இந்த கப் எல்லாம் நான் வாங்கினது தெரியுமா ..?

>எதுக்கு வாங்குனீங்க..?

♥இதெல்லாம் நான் கிரிக்கெட் விளையாடி  வாங்கினது
ஒனக்கு கிரிக்கெட் பிடிக்குமா  ..? கிரிக்கெட் பார்ப்பியா ..?

>எங்க வீட்டுல எல்லாரும் கிரிக்கெட் பார்ப்பாங்க எனக்கு மட்டும் கிரிக்கெட் சுத்தமா பிடிக்காது ..!

♥(அதானே எனக்குன்னு இப்படித்தான் வாய் க்கனும்னு இருக்கும்போது எப்படி கிரிக்கெட் பிடிக்கும்  )

♥யாரோ பின் மண்டையில் பேட்டால் அடித்தது போல இருந்தது..! நொந்துபோனேன்..!

♥இந்த பாடகர் - பாடகிகள்ல உனக்கு யார பிடிக்கும் ..?

>ம்ம்... இவங்களத்தான் பிடிக்கும்  சொல்ல முடியாது பொதுவா எல்லா பாட்டும் கேப்பேன்..!

♥உனக்கு பிடிச்ச  பாட்டு ஒன்னு சொல்லேன்..!

>அட போங்க திடீர்னு இப்படி கேட்டா எப்படி சொல்லுறது ..?

♥சரி எஸ் .ஜானகி புடிக்குமா ?

>யாரு கிழவி  போல இருக்குமே அதுவா ?

♥எஸ் .ஜானகியை கிழவி ன்னு சொன்னதும் எனக்கு செம கோவம் ...!எனக்கு புடிச்ச பாடகி அவரை கிழவின்னு சொன்னதும் என்னால அதை பொறுத்துக்க முடியல. என்ன செய்ய எல்லாம் விதி...!

♥என்னை நானே நொந்து கொள்வதை தவிர வேறு வழியில்லை அவள்மேல் கோபப்பட முடியவில்லை ஆனால்..? அவளுக்கு கோவம் அதிகம் வரும் முன்கோபி என் பாதுகாப்பும் முக்கியமில்லையா எதுவும் எனக்கு பிடிக்கவில்லை.

♥மனைவி விஷயத்தில்  மிகுந்த ஏமாற்றம் ...! துளியும் எனக்கு எந்த விதத்திலும் பொருத்தமில்லை .

♥ஆணித்தரமாய் எனக்கு தோன்றியது இதுதான்
இவள் எனக்கு ஏற்ற ஜோடிஇல்லை .

♥கணவன் மனைவி இருவரும் இரட்டை மாட்டு வண்டியைபோல என்று சொல்வார்கள் ஒரு மாடு சரியில்லாமல் போனாலும் குடும்ப வண்டி சரியாக ஓடாது என்று. உண்மைதான்.

♥நான் இப்படி முடிவு எடுத்தேன் பேசாமல் அவளையும் வண்டியில் தூக்கி உட்கார வைத்துவிட்டு ஒற்றை மாடாக வண்டியை ஓட்ட வேண்டியதுதான். வேறு என்ன செய்வது ? எங்களுக்குள் எந்த கெமிஸ்ட்ரியும் ஒர்க் அவுட் ஆகவில்லை..!

♥பெரிய சுவாரசியம் ஏதுமின்றி நகர்ந்தன நாட்கள் சில மாதங்களில் மனைவி கர்பவதியகவே நிலைமை மாற தொடங்கியது. வீடு உற்சாகத்தில் திளைத்தது ஆளாளுக்கு அவளை கொண்டாட ஆரம்பித்தோம்.

♥மாசமா இருக்கும்போது என்னவெல்லாம் புடிக்குமோ அதெல்லாம் வாங்கி கொடுக்கணும் புடிச்சத சமைச்சு போடணும் - இது என் அம்மா

♥நானும் அவளிடம் கேட்கிறேன்

♥உனக்கு என்னவெல்லாம் சாப்பிட பிடிக்கும்  சொல்லு
அதெல்லாம் ஒன்னும் வேணாம்
இல்ல சொல்லு நான் வற்புறுத்தி கேட்கிறேன்
பிடிக்குமென சிலதை சொல்ல

♥முன் சமயங்களில் என்ன சமையல் செய்யலாம் என்ற விவாதம் வரும்போது இதையெல்லாம் சொல்லி இருக்கிறாள் நானும் சாதாரணமாய் அதையெல்லாம் மறுத்து இருக்கிறேன் ஆனால் அவளுக்கு பிடிக்குமென சொன்னதில்லை.

♥இதெல்லாம் உனக்கு பிடிக்குமா இதுவர சொன்னதே இல்ல ..?

>ம்ம்ம் இப்போதானே கேக்குறீங்க.

♥அவள் சிரித்து கொண்டே சொல்ல எனக்குள் சுளீரென ஒரு குற்ற உணர்ச்சி ஏற்பட்டது.

♥பிரசவம் நெருங்க இயல்பாய் ஒரு பதற்றம் தொற்றி கொண்டது இன்னும் சில தினங்களில் இங்கே ஒரு குழந்தை இருக்கும் என்ற எண்ணமே ஆனந்த கூத்தாட வைத்தது.

♥நாங்கள் விரும்பிய படியே அழகிய பெண் குழந்தை நார்மல் டெலிவரிதான் .

♥நான் நினைத்து இருந்தேன் பிரசவம் ஆன பெண்கள் ஒரு வாரம் பத்துநாள் என படுக்கையிலேயே இருப்பார்கள் என...  ஆனால் இவள் மறுநாளே சாதரணமாக நடமாட ஆரம்பித்தாள் யாராவது பெரியவர்கள் குழந்தையை பார்க்க வந்தால் சொல்ல சொல்ல கேட்காமல் கட்டிலிலிருந்து இறங்கி எழுந்து நின்று கொள்வாள் மரியாதையை நிமித்தமாய்.

♥இவளில் இந்த செய்கை குறித்து உறவினர்கள் புகழ்ச்சியாய் பேச எனக்கோ மிகவும் பெருமையாய் இருந்தது.

♥பெண்களின் குணம் எப்படி இருந்தாலும் தாய் ஆன பிறகு எல்லா பெண்களும் ஒரேமாதிரித்தான் இருக்கிறார்கள். கோபம்,ஆத்திரம் இவைகள் எல்லோருக்கும் பொதுவானதுதான் ஆனால் குழந்தை கவனிப்பில் எப்போதும் பொறுமை மட்டுமே காட்டுகிறார்கள் நள்ளிரவில் குழந்தை அழுதாலும், மலம் கழித்தாலும் கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் கவனிக்கும் தன்மை இயல்பாகவே வந்து விடுகிறது.

♥குழந்தையையும் கவனித்துகொண்டு எனக்கு செய்யும் பணிவிடைகளிலும் எந்த குறையும் வைக்கவில்லை .

♥தாய்மை என்ற விஷயத்தை  என் தாயிடம் உணர்ந்ததைவிட மனைவியிடமே அதிகம் தெரிந்து கொள்ள முடிந்தது . இப்போது அவள்மேல் ஒரு மரியாதையை ஏற்பட துவங்கியது .

♥வீட்டு வேலைகள் குழந்தை வளர்ப்பு என அவள் சுமை எனக்கு புரிந்தது..!

♥சில வருடங்கள் போக...! இப்போது இரண்டாவது குழந்தை...! முதல் குழந்தை நார்மல் டெலிவரி ஆனால் இரண்டாவது சிசேரியன்.

♥இரண்டாவது குழந்தை பிறந்தவுடன் மயக்கத்தில் இருக்கும் அவளை பார்க்க செல்கிறேன் தூக்கம் போலவும் இல்லாமல் ,மயக்கம் போலவும் இல்லாமல் மூக்கில் எதோ ஒரு குழாய் இருக்க அவள் இருந்த நிலை என்னை ஒரு மாதிரி ஆக்கிவிட்டது.

♥அப்போது நினைத்து கொண்டேன் இவளிடம் இனி எதற்கும் கோபப்பட கூடாது என்ன சொன்னாலும் பொறுத்து கொள்ள வேண்டும் என்று ..!

♥சில பெண்கள் நினைத்து கொள்ளலாம் கணவன் தன்னிடம் அடங்கி போகிறான் என்று ..! அப்படி அல்ல...!

♥சில நேரங்களில் மனைவி செய்த தியாகங்களுக்காகவும் அவள் அடைந்த சிரமங்களுகாகவும் மனைவிக்கு செலுத்தும் நன்றி கடனே அந்த அடங்கி போதல். மனைவியை ஜெயிக்க விட்டு அதனால் அவள் அடையும் சந்தோசத்தை ரகசியமாய் பார்த்து ரசித்து கொள்ளுதல் எல்லாம் ஒரு நன்றி கடன்தான் .

♥இரண்டு குழந்தைகள், வீட்டு வேலைகள், குழந்தை படிப்பு, பாடம் சொல்லி கொடுத்தல், இதற்க்கு இடையே நான் செய்யும் அலும்புகள் எல்லாவற்றையும் சமர்த்தாக கவனித்துகொள்ளும் அவளிள் அந்த மனைவி ,இல்லத்தரசி என்ற ஸ்தானத்தின் பிரம்மாண்ட விஸ்வ ரூபத்தின் முன் ''நான்'' கொஞ்ச கொஞ்சமாக நலிந்து கொண்டு இருந்தேன். பால குமாரன் ,கிரிக்கேட் எஸ் .ஜானகி எல்லாம் என் கவனிப்பில் இருந்து விலகி செல்ல ..!

♥ஒற்றை மாட்டு வண்டியாக குடும்பத்தை ஓட்ட நினைத்தேன் ஆனால் சில சமயங்களில் அவள் ஒற்றை மாடாக வண்டியை இழுக்க நான் அதில் பயணம் செய்வதாக உணர்ந்தேன்.!

♥எங்களுக்குள் எந்த கெமிஸ்ட்ரியும் ஒர்க் அவுட் ஆகவில்லை என நினைத்தேன்

♥ஆனால்...! இப்போது எங்களுக்குள்...!

♥தமிழ் ,ஆங்கிலம் ,வரலாறு ,புவியியல்,இயற்பியல்,தாவரவியல் ,விலங்கியல் வேதியல் எல்லாம் ஒர்க் அவுட் ஆகி போனது ..
https://www.facebook.com/mangayarmalar/

......படித்ததை பகிர்கிறேன்!

Saturday, 17 June 2017

7th Pay Commission

*Good News*
7th Pay commission latest news.
1. Minimum pay 21000/-
2. No grade pay system and open ended scales.
3. Retirement - 33yrs of service or 60yrs of age whichever is earlier.
4. H.R.A 30% CCA to be reinforced.
5. Categories of posts to be modified.
6.Date of effect from 1.1.2016.
7. Calculations 2.86 x basic pay agreed.

7th CPC joint draft memorandum submitted on by the member of CPC from DOPT, MHA, MEA and DS&T etc with recommendations to implement w.e.f. 1st January 2016.
Member (attached 26 pages report)
Pay scale are calculated on the basis of pay drawn in PB including GP multiply by the factor 2.15 and new basic pay will be (old P.B+G.P)*2.15

(.) Pension and family pension multiply factor should be 2.50.
Member (attached 14 pages report)
Annual rate of increment divided into five categories.(A) 2500 for fixed basic
(B) 1500 for class 1
(C) 1200 for class 2
(D) 1000-Group A,
800-Group B,
600-Group C
for class 3
(E) 400 for class 4 annually.
Member(attached 32 pages report) The present MACPs scheme should be replaced by giving 4 upgradation after completion of 10,18,25,30 years of continues service.
Member (attached 28 pages report) House rent allowance should be as it was in 6th CPC and
date of increment should be 1st January in place of 1st July w.e.f. 01-01-2016 and House building advance should be 50 times of new basic pay.
Member (attached 12 pages report)
Transport allowance should be 10% of new basic pay+DA in X class cities and 5% of new basic pay+DA in Y class cities.
 Member (attached 38 pages report)
(a)All India transfer allowance @5% of new basic pay per month to only those who have completed minimum three postings in different three states.
(b)Maximum service length 31years, Maximum age 60 years for retirement from service with condition whichever is early.
(c)Pata military special pay should be @5% of new basic pay to only those who have completed minimum three years service either in NE region or J&K region.
Member (attached 24 pages report)
New pay scale :-
Old PB-1,GP-1800 New pay scale are 15000-33600,

Old PB-1+G.P.1900 & 2000 New pay scale are 21500-40100,

Old PB-1, GP-2400&2800 New pay scale are 25000-43600.

Old PB-2, GP-4200 New pay scale are 30000-54800,

Old PB-2, GP-4600&4800 New pay scale are 40000-71000,

Old PB-2,GP-5400 New pay scale are 45000-90000,

Old PB-3.+GP-6600 New pay scale are 52000-100000.

Old P.B + GP-7600 New pay scale are 60000-110000.

Old P.B + GP-9000 New pay scale are 75000-125000.

"FORWARDED MESSAGE"
Courtesy: state government employee's whats app

Tuesday, 13 June 2017

ATS

வேலைக்காக விண்ணப்பிக்கப் போகிறீர்களா? தெரிந்து கொள்ளுங்கள்... இந்த மென்பொருளை!


வேலை தேடும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,  ஆயிரக்கணக்கில் விண்ணப்பங்கள் குவிகின்றன. அவ்வளவு விண்ணப்பங்களையும் நிறுவன அதிகாரிகள் பொறுமையாக படித்துப் பார்த்து சரியானவர்களைத் தேர்வு செய்வது சாத்தியமானது இல்லை.
இப்போது கணினி மென்பொருள்கள், பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் முறைகளை எளிதாக்கியுள்ளன. அவற்றைப் பற்றிய தகவல்கள் தெரியாததால், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் தகுதியான இளைஞர்கள் கூட நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு வராமல், அதற்கான காரணமும் தெரியாமல் சோர்ந்து போகும் நிலை ஏற்படுகிறது.kaninikkalvi.blogspot.in

ATS எனப்படும் Applicant Tracking System என்ற மென்பொருள்தான் இளைஞர்கள் பதிவேற்றம் செய்யும் வேலைக்கான  விண்ணப்பங்களை முதலில் கையாள்கின்றன.
நிறுவனங்கள் அனைத்துமே தங்களுக்கு வரும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களை நுட்பமாக ஆராய்ந்து (Scan), தர வரிசைப்படுத்த இந்த மென்பொருள்களையே பயன்படுத்துகின்றன.
ஆன்லைனில் நாம் விண்ணப்பத்தை தயார் செய்யத் தொடங்கியவுடன், நம்முடைய சுய விவரங்களைப் பதிவுசெய்ய சில வழிகாட்டுதல்கள் கிடைக்கும். விண்ணப்பம் அனுப்புபவர் முதலில் தன்னுடைய தனிப்பட்ட தகவல்களைப் பதிவுசெய்த பிறகு, வேலைக்கான விண்ணப்பத்தைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு விண்ணப்பம் பதிவேற்றம் செய்யப்பட்ட உடனேயே நம்முடைய தகுதி, தொழில் அனுபவம், கல்வி ஆகியவற்றை நிறுவனத்தின் வேலை சார்ந்த தகவல்களுடன் பொருத்திப் பார்த்து நம்முடைய விண்ணப்பம் நேர்முகத் தேர்வுக்கு உகந்ததா? என்பதைத் தீர்மானிப்பதற்கான வேலையை ATS மென்பொருள் தொடங்கிவிடும்.
நம்முடைய விண்ணப்பம் ATS மென்பொருளுக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்டிருந்தால், அதனால் தேர்வு செய்யப்பட்டு அடுத்ததாக வேலைவாய்ப்பு மேலாளரின் நேரடிப் பார்வைக்கு அது  செல்லும். இல்லையென்றால், ATS மென்பொருளே நம்முடைய விண்ணப்பத்தை நிராகரித்துவிடும். உதாரணத்திற்கு, நம்முடைய பெயரும், தொடர்பு தகவல்களும் சரியான இடத்தில், சரியான விதத்தில் எழுதப்படவில்லை என்றால், ATS- அதைத் தவறாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு உள்ளது. இதன்மூலம், நம் விண்ணப்பம் நேர்முகத் தேர்வுக்கு தேர்வாகாமல் போகலாம்.
முக்கியமான செய்தி என்னவென்றால், Applicant Tracking System அனைத்து File formats-ஐயும் படித்து புரிந்து கொள்ள முடியாது. குறிப்பாக, தற்போது அனைவராலும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் pdf format-ஐ படிக்க முடியாது.
எனவே, விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யும் முன்பு ATS காட்டும் வழிமுறைகளை சரியாகப் பின்பற்றுவது அவசியம். ஒருவேளை ATS மென்பொருள் விண்ணப்பத்தை .doc format-இல் கேட்டால், அந்த வகையில் மட்டுமே பதிவேற்றம் செய்யவேண்டும். அதேபோல, அட்டவணைகள், பெட்டி தகவல்கள், பத்திகள் (Tables, text boxes, columns) போன்றவற்றை ATS மென்பொருளால் புரிந்து கொள்ள முடியாது. விண்ணப்பத்தில் இதுபோன்ற வடிவங்களில் தகவல்கள் இருந்தால், அவை விடுபட்டு போகும் வாய்ப்பு நிறைய உள்ளது. படங்கள், வரைபடங்கள் போன்றவையும் பிரச்னைக்குரியவையே. எனவே, இவற்றை தலைப்புகள், முக்கியப் பகுதிகள் அனைத்திலும் தவிர்க்க வேண்டும்.
பெரும்பாலான ATS மென்பொருள்களால் தலைப்பு மற்றும் அடிக்கோடிட்டவற்றை படிக்க முடியாது. சில Applicant Tracking System மிகத் திறமையானதாகவும், நவீன  formats-களை ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் உள்ளன. என்றாலும், அவை விண்ணப்பத்தில் உள்ள Border, lines, symbols  போன்றவற்றை புரிந்து கொள்ளும் என்பதற்கான எந்த உத்திரவாதமும் இல்லை. எனவே, அவற்றை அடியோடு தவிர்ப்பது நல்லது.
அதேபோன்று, விண்ணப்பத்தில் மிக முக்கியமான வார்த்தைகள் அல்லது சொற்றொடர்களில் ஸ்பெல்லிங் தவறாக இருந்தால், அந்த வார்த்தைகளைப் புரிந்து கொள்ள முடியாமல் ATS அவற்றைக் கடந்து சென்றுவிடும். எனவே, விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யும் முன்பாக, நாமே ஒருமுறை ஸ்பெல்லிங்கை சரிபார்க்க வேண்டும். காரணம், martial என்பதற்குப் பதிலாக marital என நாம் எழுதியிருந்தால், கணினியின் ஸ்பெல் செக்கர் நம்மை எச்சரிக்காது.
வேலை தரும் நிறுவனங்கள் தங்கள் தொழில் சார்ந்த தகுதி, அனுபவம், கல்வித்தகுதி போன்றவற்றுக்கான keywords-ஐ ATS-இல் உள்ளீடு செய்திருக்கும். இந்த  keywords-ஐயும், விண்ணப்பத்தில் உள்ள keywords-ஐயும் ATS பொருத்திப் பார்க்கும். இதில் அதிக அளவிலான keywords பொருந்திப்போகும் விண்ணப்பங்களையே ATS தேர்ந்தெடுத்து வேலை மேலாளருக்கு பரிந்துரைக்கும். இதனால், வேலை தலைப்புகள், கல்வித்தகுதி போன்றவற்றை குறிப்பிடும் போது அதிக கவனம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பத்தில் எந்த பகுதிக்கேனும் அழுத்தம் கொடுக்க விரும்பினால், அந்த வார்த்தைகளை தடித்த (bold) எழுத்துகளில் காட்டலாம். அதேபோல, கவனத்தை ஈர்ப்பதற்கான வார்த்தைகளை ஆங்கில பெரிய எழுத்துக்களில் (caps) எழுதலாம். மேலும், Bullet Lists-ஐ பயன்படுத்தலாம். ஆனால் அம்புக்குறி போன்ற சிறப்பு வடிவங்களைப் பயன்படுத்தக்கூடாது. வழக்கமான Arial, Verdana போன்ற எழுத்துருக்களை 10 முதல் 12 என்ற அளவில் மட்டும் பயன்படுத்துவது நல்லது. விண்ணப்பத்தின் உள்ளடக்கத்தில் வண்ண எழுத்துருக்களைப் பயன்படுத்தலாம்.
விண்ணப்பத்தைத் தயார் செய்த பிறகு அது ATS-க்கு உகந்ததாக உள்ளதா, இல்லையா என்பதை இணையத்தில் உள்ள jobscan போன்ற போலி ATS மூலமாக  (an ATS Simulator) பரிசோதித்துத் தெரிந்து கொள்ள முடியும். இதில் 80 சதவீதம் வரை நம் விண்ணப்பம் பொருந்திப் போனால், நாம் வேலை தேடும் நிறுவனத்தின் இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவேற்றம் செய்துவிடலாம். 750 அல்லது அதற்கு குறைவான வார்த்தைகள் கொண்டவையே சிறந்த விண்ணப்பமாகக் கருதப்படுகின்றன

Monday, 12 June 2017

நிறுத்தற்குறிகள்

நிறுத்தற்குறிகள் அறிவோம்...!!!

1. காற்புள்ளி (,)
2. அரைப்புள்ளி( ; )
3. முக்காற்புள்ளி (:)
4. முற்றுப்புள்ளி ( . )
5. வினாக்குறி (?)
6. உணர்ச்சிக்குறி (!)
7. இடையீட்டுக்குறி ( – )
8. பிறைக்குறி அல்லது அடைப்புக்குறி ( () )
9. ஒற்றை மேற்கோள்குறி (' ')
10.இரட்டை மேற்கோள்குறி (" ")
11. விழுக்காடு குறி (%)
12. விண்மீன் குறி (*)
13. வலம் சாய்க்கோடு (/)
14. இடம் சாய்க்கோடு (\) 15.கொத்துக்குறி(#)
16. தொப்பிக்குறி(^)
👇🏻
📚 காற்புள்ளி
1)           பொருட்களைத் தனித்தனியே கூறும்போது காற்புள்ளி இடவேண்டும்.
அ) தாய், தந்தை, தமையன், தங்கை என்னும் நால்வர் வீட்டில் உள்ளனர்.
ஆ) நான் வங்கிக்குச் சென்று, பணத்தை எடுத்து, பின்பு கடையில் சில பொருட்கள வாங்கிக் கொண்டு, வரும்வழியில் கோவிலுக்கும் சென்றுவந்தேன்.
இ) ஆடுகள், மாடுகள், நாய்கள், கோழிகள் ஊரில் வாழ்கின்றன.
2)           விளிப்பெயர்களை அடுத்து, காற்புள்ளி இடவேண்டும்.
அ) ஆருயிர்த் தந்தையே, வணக்கம்
ஆ) இன்பத்திலும், துன்பத்திலும் இணைபிரியா நண்பரே, வருக.

3) வினை எச்சத்திற்குப்பின் பொருள் விளக்கத்தைக் கருதி, காற்புள்ளி இடவேண்டும்.
அ) கண்ணன் அண்ணனைப் பார்த்து, ‘ உங்கள் வரவை நெடுநேரம் எதிர்பார்த்து நிற்கின்றேன்’ என்றான்.
ஆ) ஒருவன் நன்றாகப் படித்து முடித்தபின், பரீட்சைக்குப் பயப்படமாட்டான்.
4) இணைமொழிகளுக்கு இடையில் காற்புள்ளி இடவேண்டும்.
அ) மேலோர் கீழோர், அரசன் ஆண்டி என்ற பாகுபாடு காலனிடம் இல்லை.
5) ஆனால்,ஆயின், ஆகையால், எனவே,  போன்ற சொற்களுக்கு முன் காற்புள்ளி அவசியம்.
அ) கந்தன் மிக நல்லவன் ; ஆனால் , அவன் படிப்பில் குறைந்தவன்.
ஆ) வள்ளுவர் மிகச் சிறந்த ஞானியே; ஆனால் அவர் தம்மை உலகிற்கு அறிவிக்காமல் போனது பெருங்குறையே.
இ) இளமையில் கல்வி சிலையில் எழுத்து; ஆகையால், சிறுவயது தொட்டே சிரத்தையுடன் கல்விகற்கவேண்டும்.

🔹அரைப்புள்ளி

1) பல செயல்களைக் குறிக்கும் ஓர் எழுவாய் வரும்போது அரைப்புள்ளி இடவேண்டும்.
அ) கோவலன் கொலையுண்டதைக் கேட்ட கண்ணகி எழுந்தாள் ;  மதுரை மாநகர் வீதி வழியே சென்றாள் ; அரண்மனை வாயிலை அடைந்தாள் ; காவலனிடம் தன் கருத்தை விளக்கினாள் ; அரசன் ஆணையால் அவனைக் கண்டாள்.
ஆ) பண்டை இலக்கியங்கள் அனைத்தும் சிறந்தனவே; ஆனால், அவை எளிய நடையில் அமைந்தன என்று கூறல் இயலாது.

🔹முக்காற் புள்ளி

1)சொற்றொடரில் கூறிய ஒன்றை விரித்துக் கூறும்போது முக்காற்புள்ளி இடவேண்டும்.
அ) பால் ஐந்து வகைப்படும்: ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால்,பலவின்பால் என்பன.
ஆ) பொருள் கூறுக: கோன், மஞ்சு, குஞ்சரம்.
இ) முத்தமிழ்: இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ்.

🔹முற்றுப்புள்ளி

1)சொற்றொடர்கள் பொருளால் முற்றுப்பெற்றல் என்பதை அறிவிக்க முற்றுப்பெறல் என்பதை அறிவிக்க முற்றுப்புள்ளி இடுதல் வேண்டும்.
அ) அன்பும் பண்பும் அமைந்ததே இல்வாழ்க்கை.
ஆ) நான் நேற்று என் பிறந்தநாளைக் கொண்டாடினேன்.
2) சொற்குறுக்கத்தையும் (திரு.) பெயர்க்குறுக்கத்தையும் (ம.ப.பா.) அறிவிக்க முற்றுப்புள்ளி இடுதல் வேண்டும்.
வினாக்குறி
வினாப்பொருளைத் தரும் சொற்றொடர்களுக்குப் பின் வினாக்குறி இடுதல் வேண்டும்.

🔹உணர்ச்சிக்குறி

1)மகிழ்ச்சி, வியப்பு, அச்சம், அவலம், இரங்கல் போன்ற உணர்ச்சி உரைகளுக்குப் பின் உணர்ச்சிக்குறி இடுதல் வேண்டும்.
அ) போட்டியில்  எனது நண்பர் வென்றுவிட்டார்!  (மகிழ்ச்சி)
ஆ) எனது உறவினர் ஒருவருடன் இப்பொழுததான் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்தேன். அதற்குள் அவர் இறந்துவிட்டதாக செய்தி வந்துவிட்டதே! (வியப்பு)
இ) கொடியவன் ! கொடியவன் ! (அச்சம்)
இடையீட்டுக் குறி     (          )      ]
ஒரு சொற்றொடரின் இடையில் கருத்தை நன்கு விளக்கும் பொருட்டு, அச் சொற்றொடருடன் தொடர்புற்ற தனிக்கூற்றுச் சொற்களை அடக்கி எழுதும்போது, அவ்வாறு அடங்கி இருப்பதைக் காட்ட, அத் தனிக்கூற்றின் இருபக்கங்களிலும், இவ்வாறு சிறுகோடு அல்லது பிறைக்குறி, அல்லது பகர வளைவுக்குறி இடுதல் வேண்டும்.
அ) திருக்குறள் தமிழகத்திற்கு (ஏன் உலகத்திற்கே) பெருமை தேடித்தருகின்றது.
ஆ) சிற்றம்பலத்திற்கு இன்றோடு பன்னிரண்டு அகவை (ஆண்டு) நிறைவுற்றது.
இ) இயற்கைப் பண்பாட்டோடு வாழ்கின்றவர், உலகத்தையே பரிசாகக் கொடுத்தாலும் ஒழுக்கத்தினின்று தவறமாட்டார்.
பிறைக்குறி
மொழிபெயர்க்கும் போதும், அருஞ்சொற்பொருளை விளக்கும்போதும், சிறுபிரிவுகளை எண்ணிக்கொண்டு வரும்போதும், பிறைக்குறி இடவேண்டும். இக்குறியை இடைப்பிறவரல் என்றும் கூறுவர்.
அ) பேச்சுத்திறன் (oratory) மாணவரிடம் இருத்தல் வேண்டும்.
இரட்டை மேற்கோள் குறி
பொன்மொழிகளை மேற்கோளாகக் காட்டும்போதும், நேர்கூற்றிற்கு முன்னும் முடிவிலும், இரட்டை மேற்கோள் குறி இடுதல் வேண்டும்.
‘அறஞ்செய்ய விரும்பு’ என்று ஒளவையார் கூறியுள்ளார்.
ஒற்றை மேற்கோள் குறி
இரட்டை மேற்கோள் குறிகளுக்கு இடையில் மேற்கோள் வரும்போது ஒற்றை மேற்கோள் குறி
இடுதல் வேண்டும். எழுத்துக்களையோ சொல்லையோ, ஒருவர் கருத்தில் சிறு பகுதியையோ எடுத்தாளும்போது ஒற்றை மேற்கோள் குறி இடுதல் வேண்டும்.
(அ)  ‘அ, இ, உ’    –  இவை மூன்றும் சுட்டெழுத்துக்கள்.

President

*இந்திய குடியரசுத் தலைவர்:*

*👉1. இந்திய அரசியலமைப்பின்படி அரசின் தலைவர் - குடியரசுத் தலவைர்*

*👉2. இந்தியாவின் நிர்வாகத் தலைவர் - குடியரசுத் தலைவர்*

*👉3. இந்தியைவின் முப்படைத் தளபதி - குடியரசுத் தலைவர்*

*👉4. இந்திய அரசியலமைப்பின் அதிகார வரிசைப்பட்டியலில் முதலிடம் பெறுபவர் - குடியரசுத் தலைவர்*

*👉5. குடியரசுத் தலைவருக்கான தேர்தல் முறை - ஒற்றை மாற்று விகிதாச்சார பிரதிநிதித்துவ வாக்கெடுப்பு முறை*

*👉6. குடியரசு தலைவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பவர் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி*

*👉7. குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் - 5 ஆண்டுகள்*

*👉8. குடியரசுத் தலைவர் தனது பதவியை இராஜிநாமா செய்வதாக இருப்பின் இராஜிநாமா கடிதத்தை யாரிடம் அளிக்க வேண்டும் - குடியரசுத் துணைத் தலைவரிடம்*

*👉9. குடியரசுத் துணை தலைவர் தனது பதவியை இராஜிநாமா செய்வதாக இருப்பின் இராஜிநாமா கடிதத்தை யாரிடம் அளிக்க வேண்டும் - குடியரசுத் தலைவரிடம்*

*👉10. குடியரசுத் தலைவர் எந்த சபைக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்குரிய தகுதிகள் பெற்றிருக்க வேண்டும் - மக்களவை(லோக்சபை)*

*👉11. துணை குடியரசுத் தலைவருக்கான பணிகள் குறித்த கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - அமெரிக்கா*

*👉12. குடியரசுத் தலைவர் சம்பளம் குறித்த விவரம் குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணை - இரண்டாவது அட்டவணை*

*👉13. போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே குடியரசுத் தலைவர் - டாக்டர் சஞ்சீவி ரெட்டி*

*👉14. இருமுறை தொடர்ந்து குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் - டாக்டர் இராஜேந்திர பிரசாத்*

*👉15. தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த முதல் குடியரசுத் தலைவர் - கே.ஆர்.நாராயணன்*

*👉16. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான குறைந்த பட்ச வயது - 35*

*👉17. குற்ற விசாரணை தீர்மானம் நிறைவேற்றப்பட தேவையான ஆதரவு - மூன்றில் இரு பங்கு*

*👉18. குடியரசுத் தலைவர் மறு தேர்வுக்கு தகுதியுடையவரா? - ஆம்*

*👉19. குடியரசுத் தலைவர் மீதான குற்ற விசாரணை எந்த சபையில் புகுத்தப்படலாம் - மக்களவை அல்லது மாநிலங்களவை*

*👉20. குடியரசு தலைவர் மீதான குற்ற விசாரணை தீர்மானம் கொண்டு வர சபையின் எத்தனை பங்கு உறுப்பினர்கள் ஆதரவு தேவை? - நான்கில் ஒரு பங்கு*

*👉21. புதிய குடியரசுத் தலைவருக்கான தேர்தல் எத்தனை மாதங்களுக்குள் நடத்தப்பெற வேண்டும் - 6 மாதங்களுக்குள்*

*👉22. இதுவரை குற்ற விசாரணை முறை மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்ட குடியரசுத் தலைவர் - யாரும் இல்லை*

*👉23. குடியரசுத் தலைவர் மீது குற்ற விசாரணை தீர்மானம் நிறைவேற்றப் பட தேவையான ஆதரவு - மூன்றில் இரு பங்கு*

*👉24. குடியரசுத் தலைவர் திடீரென்று இறக்க நேரிட்டால் அப்பதவியைக் கவனித்துக் கொள்பவர் - துணை குடியரசுத் தலைவர்*

*👉25. இந்தியாவின் பிரதிநிதி - குடியரசுத் தலைவர்*

*👉26. குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் - ஐந்து ஆண்டுகள்*

*👉27. துணை குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் - ஐந்து ஆண்டுகள்*

*👉28. மாநிலங்களைவியின் தலைவராகப் பணியாற்றுபவர் - துணை குடியரசுத் தலைவர்*

*👉29. அரசியலமைப்பின் அதிகார வரிசைப் பட்டியலில் இரண்டாமிடம் வகிப்பவர் - துணை குடியரசுத் தலைவர்*

*👉30. குடியரசுத் தலைவர் செயல்பட இயலாத தருணங்களில் குடியரசுத் தலைவராக செயல்படுபவர் - துணை குடியரசுத் தலைவர்*

*👉31. குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பது - மக்களவை, மாநிலங்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள்.*

*👉32. துணை குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பது - மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள்*

*👉33. மத்திய அமைச்சரவையின் ஆலோசனையின்படி செயல்படுபவர் - குடியரசுத் தலைவர்*

*👉34. பிரதமரின் ஆலோசனையின்படி மத்திய அமைச்சர்களை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்*

*👉35. குடியரசுத் தலைவரால் பிரதமராக நியமிக்கப்பட வேண்டியவர் - மக்களவை உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு பெற்றவர்*

*👉36. அமைச்சரவை என்பது குடியரசுத் தலைவருக்கு கூட்டுப்பொறுப்பு வாய்ந்ததாக உள்ளது.*

*👉37. குடியரசுத் தலைவர் திடீரென்று பதவி இழக்க நேரிட்டால் அப்பதவியைக் கவனித்துக் கொள்பவர் - துணை குடியரசுத் தலைவர்*

*👉38. குடியரசுத் தலைவரும், துணை குடியரசுத் தலைவரும் இல்லாத நேரத்தில் குடியரசுத் தலைவர் பதவியைக் கவனித்துக் கொள்ளும் உரிமை பெற்றவர் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி*

*👉39. இந்திய பிரதமரை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்*

*👉40. மத்திய அமைச்சரவை உறுப்பினர்களை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்*

*👉41. உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்*

*👉42. மாநில ஆளுநர்களை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் - குடியரசுத் தலைவர்*

*👉43. நிதிக்குழுவை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் - குடியரசுத் தலைவர்*

*👉44. தலைமை தேர்தல் ஆணையரை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் - குடியரசுத் தலைவர்*

*👉45. மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர்கள் மற்றும் தலைவரை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்*

*👉46. குடியரசுத் தலைவர் மக்களவையின் ஒர் உறுப்பினரா? - இல்லை*

*👉47. குடியரசுத் தலைவர் மக்களவையின் உள்ளுறுப்பா? ஆம்*

*👉48. குடியரசுத் தலைவர் மக்களவைக்கு எத்தனை உறுப்பினர்களை நியமிக்க முடியும்? இரண்டு உறுப்பினர்கள்(ஆங்கிலோ இந்தியர்கள்)*

*👉49. குடியரசுத் தலைவர் மாநிலங்களவைக்கு எத்தனை உறுப்பினர்களை நியமிக்க முடியும்? - 12 உறுப்பினர்களை*

*👉50. பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தில் உரையாற்றுபவர் - குடியரசுத் தலைவர்*

*👉51. பாராளுமன்றத்தின் ஆண்டு முதல் கூட்டத்தில் உரையாற்றுபவர் - குடியரசுத் தலைவர்*

*👉52. குடியரசுத் தலைவருக்கு அவசர சட்டங்களை இயற்றும் அதிகாரம் வழங்கும் பிரிவு - ஷரச்சு 123*

*👉53. குடியரசுத் தலைவர் பிறப்பிக்கும் அவசர காலச் சட்டத்திற்கான கால வரையறை - 6 வாரங்கள்*

*👉54. மரண தண்டனையை இரத்தும் செய்யும் அதிகாரம் பெற்றவர் - குடியரசுத் தலைவர்*

*👉55. மக்களவைக்கு 2 ஆங்கிலோ இந்தியர்களை நியமிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் வழங்கும் ஷரத்து - ஷரத்து 331*

*👉56. அரசியலமைப்பு திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்படும் முன் யாருடைய முன் அனுமதி தேவை - குடியரசுத் தலைவர்*

*👉57. பண மசோதா அறிமுகப்படுத்தப்படும் முன் யாருடைய முன் அனுமதி தேவை - குடியரசுத் தலைவர்*

*👉58. ஒரு மசோதா மூன்றாவது நிலையில் செல்லுமிடம் - குடியரசுத் தலைவரிடம்*

*👉59. இந்தியாவில் அவசரகால நெருக்கடிநிலையை அறிவிக்கும் அதிகாரம் பெற்றவர் - குடியரசுத் தலைவர்*

*👉60. உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்*

*👉61. குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை வழங்குவதற்கு உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கும் ஷரத்து - ஷரத்து 143*

*👉62. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்*

*👉63. மாநில ஆளுநரை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்*

*👉64. இந்திய கணக்கு மற்ரும் தணிக்கை அதிகாரியை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்*

*👉65. தேசிய நெருக்கடி நிலையை எந்த ஷரத்தின்படி குடியரசுத் தலைவர் அறிவிக்க இயலும் - ஷரத்து 352*

*👉66. குடியரசுத் தலைவர் பொருளாதார நெருக்கடி நிலையை எந்த ஷரத்தின்படி அறிவிக்க இயலும் - ஷரத்து 360*

*👉67. ஒரு அமைச்சரை பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் பெற்றவர் - குடியரசுத் தலைவர்*

*👉68. குடியரசுத் தலைவர் ஒரு அமைச்சரை யாருடைய ஆலோசனைக்குப் பிறகே நீக்க இயலும் - பிரதமர்*

*👉69. இந்திய அட்டர்னி ஜெனரலை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்*

*👉70. குடியரசுத் தலைவரால் இயற்றப்பட்ட அவசரச் சட்டங்கள் யாருடைய ஒப்புதலுக்கு உட்படுத்தப்படுகின்றன - பாராளுமன்றம்*

*👉71. இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் பதவி எந்த நாட்டின் அரசியலமைப்பைப் பிரதிபலிக்கிறது - இங்கிலாந்து*

*👉72. இந்திய குடியரசுத் தலைவரின் மாதச் சம்பளம் - ரூ.1,50,000*

*👉73. இந்திய துணை குடியரசுத் தலைவரின் மாதச் சம்பளம் - ரூ.1,25,000*
*👉74. இந்தியா ஏவுகணையின் தந்தை எனப்பட்ட குடியரசுத் தலைவர் - ஏ.பி.ஜே.அப்துல் கலாம்*

*👉75. துணை குடியரசுத் தலைவரை நீக்கும் அதிகாரம் புகுத்தப்பட வேண்டிய பாராளுமன்ற சபை - மாநிலங்களவை*

*👉76. இந்திய குடியரசுத்தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லம் - "ராஷ்டிரபதி பவன்' (குடியரசுத்தலைவர் மாளிகை).*

*👉77. உலகின் பெரிய ஜனநாயக நாட்டின் தலைவரின் இல்லம் - "ராஷ்டிரபதி பவன்'*

*👉78. புகழ்பெற்ற பிரிட்டீஷ் கட்டிடக் கலைஞர் சர் எட்வின் லாண்ட்சீர் லுட்யன்ஸ் மேற்பார்வையில் குடியரசுத் தலைவர் மாளிகை கட்டுமானப் பணி நடைபெற்றது.*

*👉79. ராஷ்டிரபதி பவன் - நான்கு மாடிகள், 340 அறைகள் கொண்டது. மொத்தம் 2 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. 70 கோடி செங்கல், 30 கோடி கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.*

*👉80. குடியரசுத் தலைவர் மாளிகைக்கான செலவு 8 லட்சத்து 77 ஆயிரத்து 136 பவுண்டுகளாகும். அந்த காலத்திய இந்திய பண மதிப்பு ரூ.2 கோடி.*

*👉81. இங்கிலாந்து வைஸ்ராய்கள் தங்குவதற்காக கட்டப்பட்ட மாளிகை - தற்போதைய குடியரசுத் தலைவர் மாளிகை.*

*👉82. 1911-ஆம் ஆண்டு இந்தியாவின் தலைநகரம் கொல்கத்தாவிலிருந்து தில்லிக்கு மாற்றப்படுகிறது என்று அறிவித்தவர் - ஜார்ஜ் மன்னன்.*

*👉83. குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியேறிய முதல் வைஸ்ராய் - லார்டு இர்வின்(1931.ஜனவரி 23-ல் குடியேறினார்)*

*👉84. குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியேறிய முதல் இந்தியர் - இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான ராஜாஜி.*

*👉85. பொதுத்தேர்தல் முடிந்த பின் புதியதாக கூடும் மக்களவையின் முதல் கூட்டத்தொடரில் தற்காலிக சாபாநாயகரை நியமிப்பது - குடியரசுத் தலைவர்*

*👉86. யூனியன் பிரதேசங்கள் யார் ஆளுகைக்கு உட்பட்டது - குடியரசுத் தலைவர்*

*👉87. இந்திய ஒரு "குடியரசு" (Republic) ஏனெனில் அதனுடைய அரசின் தலைவர் ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மறைமுகமாக மக்களால்(அதாவது மக்களின் பிரதிநிதிகளால்) தேர்ந்தெடுக்கப்படுகிறார்.*

*👉88. இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவர் - டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன்*

*👉89. குடியரசுத் தலைவர் ஆட்சி ஒவ்வொரு 6 மாதங்கள் காலக்கட்டத்திலும் நீட்டிப்பு செய்யப்பட வேண்டும்.*

*👉90. நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகாமல் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடக் கூடாது.*

*👉91. இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படாதவர் - துணைக் குடியரசுத் தலைவர்*

*👉92. குடியரசுத் தலைவர் ஆட்சி ஒரு மாநிலத்தில் சாதாரணமாக 3 வருடங்கள் நீடிக்கலாம்.*

*👉93. மக்களவையின் சபாநாயகராகவும், குடியரசுத் தலைவராகவும் இருந்தவர் - சஞ்சீவி ரெட்டி*

*👉94. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினரை எக்காரணத்திற்காக குடியரசுத் தலைவர் நீக்கலாம் : திவால் ஆனாவர் என்றால் .*
 *உறுப்பினராக இருக்கும் காலகட்டத்தில், ஊதியத்திற்காக வேறு பணி புரிந்தால்.*
*குடியரசுத் தலைவர், உறுப்பினரின் உள்ளம் மற்றும் உடலால் நலமில்லாதவர் என்று நினைத்தால் இவை அனைத்திற்காகவும் நீக்கலாம்.*

*👉95. குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியேறிய முதல் இந்திய குடியரசுத் தலைவர் - டாக்டர் இராஜேந்திர பிரசாத்.*

*👉96. ராஷ்டிரபதி பவன் - இந்து, புத்த, ஜெயின் சமூக மரபை பிரலிபதிப்பதாக அமைந்துள்ளது.*

*👉97. இந்தியா சுதந்திரம் பெற்று ராஜாஜி இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக பதவியில் இருந்த போது, அவர் பயன்படுத்திய அறைகள் - தற்போது வெளிநாட்டு தலைவர்கள் சந்திக்கும் இடமாக விளங்குகிறது.*

*👉98. ராஷ்டிரபதி வளாகத்தில் - முகுல் கார்டன், ஹெர்பல் கார்டன் தோட்டங்கள் அமைந்துள்ளன. தில்லியைத் தவிர, சிம்லா (வடக்கு) மற்றும் ஐதராபாத் (தெற்கு) ஆகிய இடங்களில் குடியரசுத் தலைவருக்கான "ராஷ்டிரபதி நிலையம்' அமைந்துள்ளது.*

*👉99. இந்திய பாராளுமன்றத்தின் மேலவையின் தலைவர் - சமநிலை முரண்படும்போது மட்டும் வாக்களிப்பதில் உரிமை பெறுகிறார்.*

*👉100. அடிப்படை உரிமைகள் - குடியரசுத் தலைவரால் நிறுத்தி வைக்கப்படலாம்*

*👉101. இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் அடிப்படை உரிமைகள் என்ற கருத்தை - அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசியலமைப்பில் இருந்து பெற்றனர்*

*👉102. அரசுக் கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் சேர்க்கப்பட்டுள்ள பகுதி - அரசியலமைப்பின் பகுதி IV*

*👉103. இந்திய அரசியலமைப்பின் பொதுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள வகைகள் - 47 வகைகள்*

*👉104. இந்திய அரசியலமைப்பில் இருந்து வேறுபட்டது - குடியரசுத் தலைவர் முறை அரசாங்கம்*

*👉105. இந்திய உச்சநீதிமன்றம் - அரசியலமைப்பால் அமைக்கப்பட்டது*

*👉106. அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன் - நீதித்துறை*

*👉107. எந்த அரசியலமைப்பு திருத்ததின் மூலம் அடிப்படை கடமைகள் வரையறுக்கப்பட்டன - 42வது அரசியலமைப்பு திருத்தம்*

*👉108. 44வது அரசியலமைப்பு திருத்தம் அமல்படுத்துப்பட்டபின், சொத்துரிமையானது - அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்டு சட்ட உரிமையாக மட்டும் ஏற்கப்பட்டுள்ளது*

*👉109. இந்திய அரசியலமைப்பில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசக் கட்டாயக் கல்வி வழங்க வழி வகை செய்யப்பட்டுள்ள பகுதி -  அரசு வழிகாட்டு நெறிமுறை கோட்பாடுகள்.*

Sunday, 11 June 2017

PLOTS and LAYOUTS

The govt of TN hasacrosd a website for regularisation of
unapproved PLOTS and LAYOUTS across the state.

www.tnlayoutreg.in

Friday, 9 June 2017

கடல் சொன்ன கதை

கடலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் செருப்பு காணாமல் போய்விட்டது. அவன் உடனே கடற்கரையில் எழுதினான், “இந்தக் கடல் மாபெரும் திருடன்...!”

கொஞ்சம் தூரத்தில் ஒருவர் அதிகமாக மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அவர் நினைத்ததை விடவும் அதிகமாக மீன்கள் வலையில் சிக்கின. அவர் அக்கடற்கரையில் எழுதினார், “இக்கடல் பெரும் கொடையாளியப்பா...!”

அதே கடலில் ஒருவன் நீந்தச் சென்று மூழ்கிவிட்டான். மகன் மீது அதிக பிரியமுடன் இருந்த அவன் தாய் அக்கடற்கரையில் எழுதினாள், "இக்கடல் மக்களை கொன்று குவிக்கின்றதே...!”

ஓர் வயது முதிர்ந்த மனிதர் கடலுக்குச் சென்று முத்துக்களை வேட்டையாடிக்கொண்டு வந்தார். அவர் மிக்க மகிழ்ச்சியோடு அக்கடற்கரையில் எழுதினார், “இந்தக் கடல் ஒன்றே போதும். நான் ஆயுள் முழுக்க மகிழ்ச்சியோடு இருக்கலாம்...!”

ஓர் பெரும் அலை வந்து இவர்கள் அனைவரும் எழுதியவற்றை அழித்துவிட்டுச்சென்றது.

பிறர் கூறுவதை காதில் வாங்கிக் கொள்ளாதே.

இவ்வுலகை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பார்க்கின்றனர்.

உன் நட்பும், சகோதரத்துவமும் நிலைக்க வேண்டுமானால் நீ பிறரின் தவறுகளை உன் மனதிலிருந்து அழித்துவிடு.

தவறுக்காக உன் நட்பையோ, சகோதரத்துவத்தையோ அழித்துவிடாதே.

நீ ஓர் கெடுதியை சந்திக்க நேர்ந்தால் அதை விடவும் பலமாக அதற்கு பதிலடி கொடுக்க வேண்டுமென ஒரு போதும் எண்ணாதே.

சிறிது சிந்தித்து, நளினமாக அதை கையாளு........

படித்ததில் ரசித்தது.                 *🙏🙏*

மூடியிருக்கும் அனைத்து கதவுகளையும் நம்பிக்கையோடு தட்டு ஏதாவது ஒரு கதவு கண்டிப்பாக திறக்கும்!

👍👍👍👍👍👍👍👍👍

Saturday, 3 June 2017

Supreme Court

1. இந்திய உச்ச நீதிமன்றம்

- இந்திய உச்ச நீதிமன்றம் (சுப்ரிம் கோர்ட் ஆப் இண்டியா) இந்திய அரசியல் சட்டப்பிரிவு

- அத்தியாயம் 4, பிரிவு 5 இன் கீழ் இந்தியாவின் உச்சபட்ச அதிகாரம் கொண்டநீதிமன்றமாகவும், கீழ்நீதிமன்றங்களின், உயர்நீதிமன்றங்களின் தீர்ப்புக்கு மேல் முறையீடு செய்யும் நீதிமன்றமாகவும் செயல்படுகின்றது. இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதி விசாரணைக்கு உட்பட்ட அதிகாரங்கள்இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதிகள் 124 முதல் 147 ன் கீழ் எழுதப்பட்டுள்ளன.

- இது ஒரு மேல்முறையீட்டு நீதிமன்றமாகையால், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் சிலபல ரிட் மனுக்களையும், மனித உரிமை மீறல் வழக்குகளையும் அவசர மனுவாக எடுத்துக்கொள்ளப்படுகின்றது. உச்ச நீதிமன்றம் தன்னுடைய முதல் அமர்வை சனவரி 28, 1950 துவங்கியது. அன்றுமுதல் முதல் 24,000 மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்ப்புரைகள்வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

2. நீதிமன்ற கட்டமைவு

- சனவரி 26, 1950, ல் இந்தியா ஒரு குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்கு பின்பு உச்சநீதிமன்றம் தன் செயல்பாட்டைத் துவங்கியது. இதன் துவக்கவிழா நாடாளுமன்ற இளவரசு மாளிகையில் நடைபெற்றது.

- 1937 முதல் 1950 இடைபட்ட 12 வருடகாலத்தில் இந்தியாவின் கூட்டு நீதிமன்றம் இளவரசு அமர்வின் கீழ் செயல்பட்டது. அதன் காரணமாக 1958வரை உச்ச நீதிமன்றம் இளவரசு அமர்வின் கீழ் இயங்கியது.

- துவக்கவிழாவிற்குப் பிறகு உச்சநீதிமன்றம் தன் வழக்குகளை இளவரசு கூட்ட அமர்வின் கீழ் நாடாளுமன்றத்தில் நடத்தியது. தற்பொழுதுள்ள கட்டடத்தில் 1958 ல் இடம்பெயர்ந்து தன் செயல்பாட்டைத் தொடர்ந்தது. உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம், வழக்குரைஞர்கள் சங்கத்தின் மிக உயர்ந்த சங்கமாகக் கருதப்படுகிறது. இதன் தற்பொழுதய வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் பி. எச். பரேக்.

3. உச்ச நீதிமன்ற கட்டுமானம்

- இதன் தற்பொழுதய கட்டடத்திற்கு 1958 ல் இடம்பெயர்ந்தது. இதன் கட்டட ஒழுங்கமைவு படத்தில் காட்டியுள்ளபடி இதன் மைய மண்டபம் நீதி வழங்கும் முகத்தோற்றத்தைக் கொண்டுள்ளது. 1979 ல் இதனோடு இரண்டு மண்டபங்கள் - ஒன்று கிழக்கு மண்டபம் மற்றொன்று மேற்கு மண்டபம். இணைக்கப்பட்டது. இவையனைத்தும் 15 நீதிமன்ற அறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மையமண்டபத்தில் தலைமை நீதிபதியின் மன்றம் மிகப்பெரிய நீதிமன்றமாக அமைக்கப்பட்டுள்ளது.

4. நீதிபதிகளின் எண்ணிக்கை

- 1950 ல் உருவாக்கப்பெற்ற இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதியுடன் ஏழு கீழ் தகுதி பெற்ற நீதிபதிகளைக் கொண்டு இயங்கியது.

- பாரளுமன்றத்தின் ஏற்படுத்தப்பெற்ற தீர்மானத்தின்படி ஆண்டுகளின் வரிசையில் உச்ச நீதிமன்றத்தில் கூடுதலாக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை.

1950 - 8

1956 - 11

1960 - 14

1978 - 18

1986 - 26

2008 - 31

5. அமர்வு

- சிறு அமர்வில் 2 முதல் 3 நீதிபதிகளாகவும் அமையும் அவை பகுதி அமர்வு என்றும், பெரிய அமர்வில் 5 நீதிபதிகளாகவும் அமையும் அவை அரசியல் சாசன அமர்வு என்றும் வழங்கப்படுகின்றது.

- இந்திய உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி மற்றும் அதன் இதர நீதிபதிகளான 30 க்கு மேற்படாதவர்களை இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பெற்று சிறப்புடன் செயல்படுகின்றது.

6. ஒய்வு

- உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஒய்வு பெறும் வயது 65 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

7. தகுதிகள்

- இவர்களின் தகுதியாவன இந்திய குடிமகனாக இருத்தல் அவசியம், குறைந்த பட்சம் 5 வருடகாலத்திற்காகவது உயர்நீதிமன்றம் அல்லது இரண்டுக்கு மேற்பட்ட உயர் நீதிமன்றங்களில் பணியாற்றியிருக்கவேண்டும்., அல்லது உயர் நீதிமன்ற வழக்குரைஞர்களாக, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உயர் நீதிமன்றங்களில் குறைந்தது 10 வருடங்களுக்காவது பணிபுரிந்திருக்க வேண்டும் அல்லது மேன்மை வாய்ந்த சட்டநிபுணர் என்று குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற்றவர் ஆக இருக்க வேண்டும். உச்சநீதிமன்றம் பல சிறப்புகளின் அடையாளமாக சமய வேறுபாடுகளை களைந்த மன்றமாக உள்ளது. பல சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து நீதிபதிகளாக பதவி வகித்துள்ளனர்.

8. முதல் பெண் நீதிபதி

- முதல் பெண் நீதிபதியாக பாத்திமா பீவி 1987 ல் பதவி வகித்தார். அவரைத் தொடர்ந்து சுஜாதா மனோகர், ரூமா பால் பெண் நீதிபதிகளாகப் பதவி வகித்தனர்.

9. முதல் தலித் நீதிபதி

- மாண்புமிகு நீதியரசர் கே.ஜி. பாலகிருஷ்ணன் 2000 ஆம் ஆண்டு முதல் நீதிபதியாகப் பதவி வகித்த முதல் தலித் சமூகத்தவர்.

- முதல் தலித் தலைமை நீதிபதி 2007 முதல் தலைமை நீதிபதியாகப் பதவியேற்ற மாண்புமிகு நீதியரசர் கே.ஜி. பாலகிருஷ்ணன், முதல் தலித் தலைமை நீதிபதி என்ற பெருமையும் கொண்டவர்.

- தலைமை நீதிபதி பதவி வகிக்காமல் சட்ட ஆணையத் தலைவர்களாக பதவி ஏற்றவர்கள் முதன் முறையாக நீதியரசர் பி.பி. ஜூவன் ரெட்டி மற்றும் ஏ.ஆர்.இலட்சுமணன் இருவரும் தலைமை நீதிபதி பதவி வகிக்காமலேயே சட்ட ஆணையத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

10. இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர்

- இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரும்,(அ) முதன்மை ஆதரவுரைஞர் (அட்டர்னி ஜென்ரல் ஆப் இந்தியா) இந்தியக் குடியரசுத் தலைவரால் அரசியலமைப்பு சட்ட விதி 76 இன் படி நியமனம் செய்யப்படுகின்றார். உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் நியமனங்களுக்குரியத் தகுதியுடையவர். இந்திய அரசுக்குரிய ஆலோசணைகளும் இந்திய அரசின் சார்பில் வழக்காடுபவரும் ஆவார். இந்தியாவின் எந்தவொரு நீதிமன்றத்திலும் வழக்காட அனுமதியுடையவர். இந்திய நாடாளுமன்றத்தின் கூட்டங்களின் விவாதங்களில் கலந்து கொள்ள உரிமை கொண்டவர். ஆனால் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள அனுமதியில்லை.

11. நடுவண் அரசு வழக்குரைஞர்

- இவருக்குத் துணைபுரிய நடுவண் அரசு வழக்குரைஞர் (சொலிசிட்டர் ஜென்ரல்) மற்றும் நடுவண் அரசு கூடுதல் வழக்குரைஞர் (அடிசனல் சொலிசிட்டர் ஜென்ரல்) நால்வரும் உதவி புரிவர்.

- தற்பொழுதய இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர் திரு மிலன் பானர்ஜி. இவர் 2004முதல் இப்பதவி வகிக்கின்றார்.

12. நீதிபரிபாலணை

- உச்ச நீதிமன்றம் மூன்று நீதி பரிபாலணைகளை கையாள்கின்றது. மூல நீதிபரிபாலணை, மேல்முறையீட்டு நீதிபரிபாலணை மற்றும் ஆலோசணைக் குழு நீதிபரிபாலணை.

13. மூல நீதிபரிபாலணை

- இந்திய அரசு மற்றும் அதன் ஒன்று (அ) ஒன்றிற்கு மேற்பட்ட மாநிலங்கள்,(அ) இரண்டு (அ) அதற்கு மேற்பட்ட மாநிலங்களின் இடையே ஏற்படுகின்ற சச்சரவுகளை தீர்த்து வைக்கின்றது. கூடுதலாக அரசியல் சாசனப் பிரிவு 32 ல் கூறியுள்ளபடி அந்த்தந்த மாநிலங்களின் அடிப்படை உரிமைகளை கட்டாயப்படுத்துகின்றது.

- அழைப்பாணை (ரிட்) மனுக்கள், அழைப்பாணை (ரிட்) மூலம் கோரப்படும் ஆட்கொணர்வு மனு (ஏபியஸ் கார்பஸ்) ,தடைச்சட்டம் (புரோகிபிசன்), பதவி ஆதிகாரத்தை நிருபிக்கும் ஆணை (கோ வாரண்டோ), மற்றும் கீழ் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் செர்டியோரேரி போன்ற ஆணைகளை வழங்க சட்டரீதியான உரிமைபெற்றிருக்கும் நீதிபரிபாலணையைக் கொண்டுள்ளது.

14. மேல்முறையீட்டு நீதிபரிபாலணை

- உயர் நீதிமன்றங்கள் விதி 132 (1), 133 (1) அ 134 களின்படி அவைகளால் வழங்கப்பட்ட உரிமை இயல் (சிவில்-சமூக நலன்) மற்றும் குற்றவியல் தீர்ப்புரைகளை,தீர்ப்பாணைகளை (அ) இறுதி தீர்ப்பாணைகளை உச்ச நீதிமன்றங்களில் அரசியல் விதிக்குட்பட்ட, சட்டவிதிகளுக்குட்பட்ட வழக்குகளை மேல்முறையீடு செய்யப் பரிந்துறைக்கின்றன. உச்ச நீதிமன்றம் சிறப்பு விடுமுறைகளை மேல்முறையீடுசெய்யும் அவகாசகாலமாக இராணுவ நீதிமன்றங்களைத் தவிர பிற நீதிமன்றங்களுக்கு வழங்குகின்றது. பாரளுமன்றத்தில் குற்றவியல் மேல்முறையீட்டு நீதிபரிபாலணத்தின் விரிவாக்கத்திற்காக இதற்கான சிறப்பு அதிகாரம் விதி 1970 கீழ் வழங்கப்பட்டது.

15. ஆலோசனைக்குழு நீதிபரிபாலணை

- இந்தியக் குடியரசுத்தலைவரின் பேரில் அமைந்த அரசியலமைப்பு சட்டப்பிரிவு 143 ன் கீழ் உச்சநீதிமன்றம் சிறப்பு ஆலோசனைக்குழு நீதிபரிபாலணத்தைப் பெற்றுள்ளது.

17. தன்னாட்சிப் பெற்ற நீதிமன்றம்

- இந்திய அரசியலமைப்பு உச்சநீதிமன்றத்திற்கு பலவழிகளில் தன்னாட்சி செயல்திறனை வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளை பதவியில் இருந்து நீக்க பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீர்மானம் பரிந்துரைக்கப்பட்டப்பின், அதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்பெறும் பட்சத்தில், அதன் மொத்த உறுப்பினர்களில் மூன்றின் இரண்டு பங்கு பெரும்பான்மை உறுப்பினர்களால் வாக்களித்து வெற்றிப்பெற்ற தீர்மானத்தின் அடிப்படையில், குடியரசுத் தலைவரால் வழங்கப்பெறும் ஆணையைத்தவிர , வேறு எவராலும் அவரை பதவியிலிருந்து நீக்கவியலாது. இது அவரின் நன்னடத்தையின்மை அல்லது செயலின்மையை நிருபிக்கும் பட்சத்தில் இது சாத்தியமாகும்.

- அவரின் ஊதியமும், படிகளும் பதவி நியமனத்திற்குப்பின் எவ்வகையிலும் குறைக்கப்படாது. உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டப்பின் அவர் வேறு எந்த நீதிமன்றத்திலும், எவ்வகையிலும் பணியாற்ற அனுமதியில்லை.

18. நிலச்சீர்த்திருத்த சட்டம் 9 (முந்தய அணுகுமுறை)

- பல மாநில கீழ் நீதிமன்றங்களின் தீர்ப்புகளின் உந்துதலால் உச்சநீதிமன்றத்திற்கு வந்த நிலச்சுவான்தார்களின் (ஜமீன்தார்) நிலங்களைப் பங்கீடுவது தொடர்பான வழக்கு, நிலச்சுவான்தாரர்களின் (ஜமீன்தாரர்களின்) அடிப்படை உரிமைகளைப் பரிப்பதாகும் என்ற மேல்முறையீட்டீனால், நாடாளுமன்றம் இந்திய அரசியலமைப்பில் , 1951 இல் மேற்கொண்ட தன் முதல் திருத்தச் சட்டத்தினைத் தொடர்ந்து 1955 இல் நான்காவது திருத்தச் சட்டத்தினை அடிப்படை உரிமைகளில் நிறைவேற்றி அமல் படுத்தியது.

- இத்திருத்தச் சட்டத்தினை 1967 இல் உச்ச நீதிமன்றம் கோக்குல்நாத் எதிர் பஞ்சாப் மாநிலம் என்ற வழக்கின் மூலம் எதிர் கொண்டு, “ நாடாளுமன்றம் அடிப்படை உரிமைகளை இரத்து செய்ய அதிகாரமில்லை, அது தனியார் உடமைகளுக்கும், உரிமையாளருக்கும், இந்தியக் குடியரசு அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் அவர்களுக்கும் பொருந்தும்”என்ற வரலாற்றுத் தீர்ப்பீனை வழங்கியது.

19. அரசியலமைப்புக்கு எதிரானவையாக உச்ச நீதிமன்றம் கருதிய ஏனைய சட்டங்கள்

- பிப்ரவரி 1, 1970, அன்று உச்ச நீதிமன்றம் செல்லாததாக்குகின்ற சட்டமாக, அரசு உதவி பெறும் வங்கிகளை தேசியமயமாக்குகின்ற சட்டம் நாடளுமன்றத்தால் ஆகஸ்டு, 1969, இல் நிறைவேற்றியபின் இத்தீர்ப்பினை வழங்கி செல்லாத சட்டமாக்கியது.

- செப்டம்பர் 7, 1970, இல் வழங்கிய குடியரசுத் தலைவரின் பெயரில் வழங்கிய ஆணையான, இந்தியாவின்முந்தைய (பிரித்தானிய) ஆட்சியில் பேரரசு இளவரசரின் பெயரால் வழங்கப்பெற்ற பட்டயம், சலுகைகள், பரிசுகளை இரத்து செய்யும் ஆணையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

20. நீதிமன்ற அவமதிப்பிற்கு தண்டணையளிக்கும் அதிகாரம்

- அரசியல் விதி 129 மற்றும் 142 ன் கீழ் அனுமதிக்கப்பட்ட சட்டத்தின்படி நீதிமன்றத்தை அவமதிப்பவர் எவராயினும் , அவரை தண்டிக்க, உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கின்றது.

- மகாராஷ்டிராவின் தற்பொழுதய அமைச்சர் சுவருப் சிங் நாயக் முன் எப்பொழுதும் நடைபெறாத நிகழ்வாக, நீதிமன்ற அவமதிப்பிற்காக மே 12, 2006 ஒரு மாதம் சிறைத்தண்டணைப் பெற்றார்.

21. நீதிபதிகளின் நன்னடத்தையின்மை மற்றும் ஒழுக்கக்கேடு

- இந்தியாவின் உயரிய நீதிமுறைமை 2008,ஆம் ஆண்டு சந்தித்த மிக முக்கிய சர்ச்சையாக நீதிபதிகளின் அதீத ஒழுக்கக்குறைபாடுகளை விடுமூறைக் காலங்களில் வரி செலுத்துவோருக்கு இணையாக அவர்கள் செய்திடும் செலவீனங்கள் மூலம், வெளிப்படுத்தியதின் காரணமாகவும், இதன் காரணமாக நீதிபதிகளின் சொத்துக்கணக்கை பொதுமக்களின் பார்வைக்கு தாக்கல் செய்ய வலியுறுத்தும் கோரிக்கையை அது தகவல் அறியும் உரிமைச் சட்டமாக இருப்பினும் நிராகரிக்கப்படும் என்று அறிவித்த்தின் காரணமாக வெளிப்படுத்தியது.

- உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தன் பதவிக் குறித்து வெளிப்படுத்தியக் கருத்துக்கள் விமர்சிக்கப்பட்டன.

22. அவர் வெளியிட்டக் கருத்துக்களாவன

- நீதிபதி என்பவர் பொது ஊழியரல்லர். அவர் ஒரு அரசியலமைப்பின் பொறுப்பாளர். பின்னர் தான் வெளிப்படுத்தியக் கருத்திலிருந்து விலகிக் கொண்டார்.

- நீதிமுறைமை கடமைத் தவறியனவாக தற்பொழுதய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலாலும் முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமினாலும் பலத்த விமர்சனத்துக்குள்ளானது.

- பிரதமர் மன்மோகன் சிங் ஒழுக்கக்கேடுகளை (ஊழல்) எதிர் கொள்வதிலும், அவற்றை அடியோடு அழிக்க நீதிமுறைமைகளை வலுப்படுத்த ஆலோசனைகள் வழங்கினார்.

23. தேசிய நீதிபரிபாலணை மன்றம்

- இந்திய அமைச்சரவை நீதிபதிகளை விசாரணை செய்யும் மசோதா 2008 நாடாளுமன்றத்தின் மூலம் அறிமுகம் செய்து அதன் மூலம் இந்தியத் தலைமை நீதிபதியை தலமையாகக் கொண்டு தேசிய நீதித்துறைமை மன்றம் அ தேசிய நீதிபரிபாலணை மன்றம் ஒன்றை அறிமுகம் செய்தது.

- இம்மன்றம் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் முறைகேடுகள் மற்றும் நன்னடத்தையின்மையை விசாரிக்கும் பொருட்டு இம்மசோதா உருவாக்கப்பட்டது. இம்மசோதா மக்கள் நகைப்புக்குரியதாக இருப்பினும் மக்களின் அமைதியை உருவாக்கும் நோக்கில் செயல் படுத்தப்பட்டுள்ளது.

- இம்மசோதாவின் படி அமைக்கப்பட்ட நீதிபதிகளின் குழு நீதிபதிகளின் செயல் குறித்து விசாரணை செய்யும். தலைமை நீதிபதியையோ அல்லது ஒய்வுபெற்ற நீதிபதியையோ, மற்றும் தண்டணைக்குள்ளானவரின் புகார்கள், அபராதம் விதிக்க பட்டோரரின் புகார்கள் இம்மன்றத்தை கட்டுபடுத்தாது. மேலும் உள்நோக்கம் கற்பிக்கும் வகையில், அற்பத்தனமான மற்றும் அவரின் நேர்மையை களங்கப்படுத்தும் நோக்கில் தரப்படும் புகார்கள் ஏற்கபடமாட்டா.

24. இந்திய உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள்

1. நீதியரசர் எச். ஜே. கனியா

2. நீதியரசர் எம். பி. சாஸ்திரி

3. நீதியரசர் மெர் சந்த் மகாஜன்

4. நீதியரசர் பி. கே. முகர்ஜி

5. நீதியரசர் சுதி இரஞ்சன் தாஸ்

6. நீதியரசர் புவனேஸ்வர் பிரசாத் சின்கா

7. நீதியரசர் பி. பி. கஜேந்திரகட்கர்

8. நீதியரசர் ஏ. கே. சர்க்கார்

9. நீதியரசர் கே. சுப்பா ராவ்

10. நீதியரசர் கே. என. வான்சூ

11. நீதியரசர் எம். இதயத்துல்லா

12. நீதியரசர் ஜே. சி. ஷா

13. நீதியரசர் எஸ். எம். சிக்ரி

14. நீதியரசர் ஏ. என். ராய்

15. நீதியரசர் மிர்சா எமதுல்லா பேக்

16. நீதியரசர் ஒய். வி. சந்திரகுட்

17. நீதியரசர் பி. என். பகவதி

18. நீதியரசர் ஆர். எஸ். பதக்

19. நீதியரசர் இ. எஸ். வெங்கட்டராமய்யா

20. நீதியரசர் எஸ். முகர்ஜி

21. நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா

22. நீதியரசர் கே.என். சிங்

23. நீதியரசர் எம். எச். கனியா

24. நீதியரசர் எல். எம். சர்மா

25. நீதியரசர் எம். என். வெங்கட்டசலய்யா

26. நீதியரசர் ஏ. எம். அகமதி

27. நீதியரசர் ஜே. எஸ். வர்மா

28. நீதியரசர் எம். எம். பன்சி

29. நீதியரசர் ஏ. எஸ். ஆனந்

30. நீதியரசர் எஸ். பி. பரூச்சா

31. நீதியரசர் பி. என். கிர்பால்

32. நீதியரசர் ஜி. பி. பட்நாயக்

33. நீதியரசர் வி.என். கரே

34. நீதியரசர் இராஜேந்திர பாபு

35. நீதியரசர் ஆர். சி. லகோட்டி

36. நீதியரசர் ஒய்.கே. சபர்வால்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...