மனித மூளையானது சுமாராக 100 பில்லியன்(100 * 100 கோடி) நரம்பு செல்களை (நியூரான்ஸ்) கொண்டது. நமக்கு 3 வயது ஆகும்போது தான் அந்த செல்கள் முழு வளர்ச்சி அடையும்.இதனால் தான் நமக்கு 3 வயதிற்கு முந்தைய ஞாபகங்களை நினைவு படுத்த முடியவில்லை.3 வயதில் தான் நாம் அதிக எண்ணிக்கையிலான நரம்பு செல்களை கொண்டிருக்கிறோம்.3 வயது குழந்தைக்கு நாற்பது மொழிகள் கற்றுக்கொள்ளும் திறன் இருப்பதாக கூறப்படுகிறது. இதுவே அதற்கு காரணம். நாம் இருபது வயதுகளை கடக்கும் பொழுது நமது மூளையில் உள்ள இந்த நரம்பு செல்கள் குறைய தொடங்கி நாம் எண்பது வயதை எட்டும் போது சுமாராக இருபது சதவீத நரம்பு செல்களை இழந்திருப்போம். மறதிக்கு இது ஒரு காரணம் என்று கூறலாம்.
இருப்பினும் நாம் மீதமுள்ள நரம்பு செல்களை கூட நமது வாழ்நாளில் முழுவதுமாக பயன்படுத்துவது இல்லை.இந்த இருபது சதவீத செல்களின் இழப்பு ஒரு குறை ஆகாது. நம்மில் பலர் முதுமை வந்த பிறகு நமது நடவடிக்கைகளை குறைத்து கொள்கிறோம்.நமது சிந்தனையையும் குறைத்து கொள்கிறோம். இதனால் நாம் நினைவு கூறாத விஷயங்களுக்கு உரிய இணைப்புகள் நம் மூளை செல்களில் விடுபடுகின்றன. இதுவே மறதிக்கு முக்கிய காரணம். நம் முதுமையிலும் நம் மூளைக்கு சவாலான செயல்களை கொடுத்துக் கொண்டே இருந்தால் நம் மூளை முதுமையிலும் இளமையாக செயல்படும்.

No comments:
Post a Comment