Monday, 14 January 2019

*உங்களை நம்புங்கள்''.( BE YOURSELF)*

♥இன்றைய சிந்தனை..( 14.01.2019)...
உங்களுக்கு அற்புதமான திறமைகள் இருக்கலாம்.
“என்னால் முடியும்” என்று சொல்லி உங்கள் மேல் நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள்.

அப்பொழுது தான் நீங்கள் எதையும் சாதித்துக் காட்ட முடியும்.

உங்களையே நீங்கள் நம்பவில்லை என்றால் “வாழலாம்” என்ற ஆர்வம் உங்களுக்கு எப்படி வரும்?

நீங்கள் உங்கள் மேல் நம்பிக்கை வைக்கும் போது உங்களையறியாமல் உங்களுக்குச் சில பொறுப்புகள் வந்து சேரும்.

அப்படிப் பொறுப்புகள் வரும் போது, வாழக் கூடாது என்ற வெறுப்புணர்வு உங்கள் உள்ளத்தில் மறைந்து இருந்தால்,அது தானாகவே அழிந்து விடும்.

குடும்பப் பொறுப்புகள், பணியாற்றும் இடத்தில் ஏற்படுகின்ற பொறுப்புகள், சமுதாயத்தில் எப்படி நடத்து கொள்ள வேண்டும் என்ற பொறுப்புகள் யாவும் சேர்ந்து உங்களைச் சுமக்க ஆரம்பிக்கும்.

பொறுப்பு என்ற சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு மன்னனாகத் திகழ்வீர்கள். தன்னம்பிக்கை மிகுந்த வேந்தனாகச் சுடர் விட்டுப் பிரகாசிப்பீர்கள்.

பொறுப்பு உங்களுக்கு நிறையச் சேருகிற போது நீங்கள் கடமைகள் ஆற்றிடத் துணிந்து விடுவீர்கள்.

நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படத்
தொடங்கினால் நீங்கள் எவருக்கும் பயப்படத் தேவையில்லை.

மற்றவர்கள் பொறாமை உணர்வுடன் பேசுகின்ற ஏச்சுக்களையும், கிண்டல்களையும், நக்கல்களையும் கேட்டு நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.

நீங்கள் உங்கள் மேல் முழு நம்பிக்கை வைத்து, முழு மூச்சுடன் ஒரு செயலைச் செய்யத் தொடங்குங்கள்.

வெற்றி, தோல்விகளைப் பற்றி கவலைப்படாமல், முழு முயற்சியுடன் உழைப்பை சிந்துங்கள்.
ஆர்வமும், முழு முயற்சியும், உழைப்பும், தன்னம்பிக்கையின் மூலம் வருவது தான்.

ஆம்.,நண்பர்களே..,

“ என்னால் முடியும்” என்று நீங்கள் மன உறுதியோடு செயல்பட வேண்டும். “முடியாது” என்கிற வார்த்தை முட்டாள்களின் அகராதியில் தான் காணப்படுகிறது என்று சொன்னான், மாவீரன் நெப்போலியன்.

நீங்கள் சிறந்த சாதனைகளைப் படைப்பதற்கும், மேலான வாழ்க்கை வாழ்வதற்கும் உங்களுக்குத் தன்னம்பிக்கை இருக்க வேண்டும் அல்லவா..?

தன்னம்பிக்கையை வளர்த்து, வாழ்க்கைச் சவால்களை எதிர் கொள்ளுங்கள், சாதனை படையுங்கள்.

உங்கள் மீது நம்பிக்கை வைத்து வீறு கொண்டு எழுந்து வாருங்கள், உலகம் உங்கள் வசப்படும்.

'' DONT TRY TO IMPRESS PEOPLE; ALWAYS BE YOURSELF..''🙏🏻❤🙏🏻

No comments:

Post a Comment

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...