Monday, 5 October 2020

October -5 இன்றைய தினம்

உலக கட்டிடக்கலை தினம் கட்டிடக்கலை என்பது கட்டிடங்கள் வடிவமைப்புச் செய்வதற்கான கலையும் அறிவியலும் ஆகும் கட்டிடக்கலை ஆனது கணிதம் அறிவியல் கலை தொழில்நுட்பம் சமூக அறிவியல் அரசியல் வரலாறு தத்துவம் போன்றவற்றுடன் தொடர்புடைய ஒரு பல்துறை களமாகும் சர்வதேச கட்டடக் கலையின் ஒன்றியம் 2005 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் திங்கட்கிழமையை உலக கட்டிடக்கலை தினமாக அறிவித்து கொண்டாடி வருகிறது.

* உலக ஆசிரியர் தினம். மாதா பிதா குரு தெய்வம் என்பார்கள் வேறு எந்த பணிக்கும் கிடைக்காத பெருமை ஆசிரியர்களுக்கு உள்ளது என்பதை இந்த வாக்கியம் உணர்த்துகிறது அத்தகைய சிறப்புமிக்க ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் ஐந்தாம் தேதி உலக ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.             ‌.                ஆசிரியர்கள் பொது கல்விக்காக ஆற்றிவரும் பங்களிப்பினை மரியாதை செய்யும் விதமாக யுனெஸ்கோ நிறுவனம் 1994 ஆம் ஆண்டு முதல் இத்தினத்தை அறிவித்தது கொண்டாடுகிறது இந்த தினம் கொண்டாடப்படும் நாட்களும் விதமும் நாட்டுக்கு நாடு வித்தியாசப்படுகிறது.

* உலக குடியிருப்பு தினம். மக்கள் நகரங்களில் குடியேறுவதால் வாழ்விட பிரச்சினை ஏற்படுகிறது இதன்மீது தனி கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக ஐநா பொது சபை பொது 1985 ஆம் ஆண்டு ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தது.இதன் படி அக்டோபர் மாதம் முதல் திங்கள் கிழமையை உலக குடியிருப்பு தினமாக அறிவித்தது.நகரத்தை விரிவுபடுத்துவது மட்டுமல்லாமல் நகர மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதும் இதன் நோக்கம் ஆகும்.

No comments:

Post a Comment

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...