*இந்திய விடுதலை போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு*
*பா. ஜீவானந்தம்*
-----------------------------
* பிறந்த ஊர் - பூதப்பாண்டி குமரி மாவட்டம்.
* பிறந்தநாள் - 21 ஆகஸ்ட்.
* இயற்பெயர் - சொரி முத்து.
* எழுதிய முதல் நாவல் - சுகுணராஜன் அல்லது சுதந்திர வீரன். (10வகுப்பு படிக்கும் போது எழுதியது)
* வவேசு ஐயர் நடத்திய தேசிய குருகுலத்தில் இளம் வயதிலேயே ஆசிரியராக பணியாற்றினார்.
*காரைக்குடிக்கு அருகே சிராவயல் என்னும் இடத்தில் காந்தி ஆசிரமத்தை நிறுவியவர். (இராஜாஜி காந்தி பெயரில் ஆசிரமம் ஒன்றை நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ஆரம்பித்தார்)
* முதல் கவிதை நூல் - பெண்ணுரிமை கீதாஞ்சலி (1933)
* பொதுவுடைமை கொள்கையைப் பரப்புவதற்காக *1937ல் ஜனசக்தி* என்ற நாளிதழைத் தொடங்கினார்.
* *1959ல் தாமரை* என்னும் கலை இலக்கிய மாத இதழைத் தொடங்கினார்.
* கலந்து கொண்ட போராட்டங்கள் - வைக்கம் சத்தியாகிரகம், சுயமரியாதை இயக்கம், சுசீந்திரம் தீண்டாமை நடைமுறைக்கு எதிரான இயக்கம், கதர் ஆடை விழிப்புணர்வு போராட்டம்.
* தொழிலாளர் பாதுகாப்பு கழகம் என்னும் பெயரில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்க அமைப்புகளை உருவாக்கியவர்.
* இந்திய கம்யூனிஸ்டு கட்சி 1948ல் சுதந்திர அரசால் தடைசெய்யப்பட்ட போது இலங்கைக்கு சென்று செயல்பட்டார்.
* எழுதிய பிற நூல்கள் - சோசலிச சரித்திரம், சோசலிச தத்துவம், சோவியத் நூல்கள் அனைத்தையும் தமிழில் மொழி பெயர்த்தவர்.
* காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி, தொழிலாளர் பாதுகாப்பு கழகம், சுயமரியாதை சமதர்ம கட்சி ஆகியவற்றின் தலைமை பொறுப்பு ஏற்றவர்.
* நடத்திய மற்ற நாளிதழ் - அறிவு, சமதர்மம்.
* சுயமரியாதை இயக்கத்தில் பெரியாருடன் இணைந்து ஜீவா தயாரித்த ஒரு கொள்கை திட்ட வரைவு *ஈரோடு திட்டம்* எனப்பட்டது. மிகுந்த எதிர்பார்ப்புகளை உருவாக்கிய திட்டம்.
* பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜீவா அவருடைய தோழர்கள் சாத்தான்குளம் ஏ.ராகவன், நீலாவதி, இராமநாதன் ஆகியோர் தனியாக இணைந்து *சுயமரியாதை சமதர்ம கட்சி* உருவாக்கினர்.
* இந்த கட்சியின் *முதல் மாநாடு திருச்சியில் 1936ல் நடைபெற்றது* இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் எஸ்ஏ டாங்கே கலந்து கொண்டார்.
* பேச்சாளர், தமிழ் இலக்கியங்களின் மீது பற்று மிக்கவர்.
* "காலுக்குச் செருப்புமில்லை
கால் வயிற்றுக்கு கூழும் இல்லை" பாடலை மேடை தோறும் பாடுவார்
* மறைவு 18/01/1963.
-------
*மார்சல். ஏ. நேசமணி*
------------------------------------
* பிறந்த இடம் - குமரி மாவட்டம் விலவங்கோடு அருகே பள்ளியாடி என்னும் கிராமம்.
* பிறந்த தேதி - 12/07/ 1895
* 1921ல் நாகர்கோவில் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
* இளம் வயதிலேயே சமூக விடுதலைக்காக போராடியவர்.
* திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்த்தை தமிழ்நாட்டோடு இணைக்க தெற்கு எல்லை போராட்டத்தை தலைமையேற்று நடத்தினார்.
* 01/11/1956 அன்று கன்னியாகுமரி தமிழ் நாட்டோடு இணைக்கப்பட்டது. (தமிழ்நாடு தினம் நவம்பர் 01)
* குமரியின் தந்தை என்றழைக்கப்படுகிறார்.
* பொதுவாழ்வில் ஈடுபட்ட பின்பு நாகர்கோவில் நகர்மன்றத் தலைவராக பதவி வகித்தவர்.
* சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு விலவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர்.
* நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினராக இறக்கும் (1968) வரை பணியாற்றிவர்.
------
No comments:
Post a Comment