Wednesday, 28 July 2021

*தந்தை*

*1.வரலாற்றின் தந்தை?* ஹெரடோடஸ்
*2.. புவியலின் தந்தை?* தாலமி
*3..இயற்பியலின் தந்தை?* நியூட்டன்
*4..வேதியியலின் தந்தை?* இராபர்ட் பாயில்
*5..கணிப்பொறியின் தந்தை?* சார்லஸ் பேபேஜ்
*6..தாவரவியலின் தந்தை?* தியோபிராச்டஸ்
*7..விலங்கியலின் தந்தை?* அரிஸ்டாட்டில்
*8..பொருளாதாரத்தின் தந்தை?* ஆடம் ஸ்மித்
*9..சமூகவியலின் தந்தை?* அகஸ்டஸ் காம்தே
*10..அரசியல் அறிவியலின் தந்தை?* அரிஸ்டாட்டில்
*11..அரசியல் தத்துவத்தின் தந்தை?* பிளேட்டோ
*12..மரபியலின் தந்தை?* கிரிகர் கோகன் மெண்டல்
*13..நவீன மரபியலின் தந்தை?* T .H . மார்கன்
*14..வகைப்பாட்டியலின் தந்தை?* கார்ல் லின்னேயஸ்
*15..மருத்துவத்தின் தந்தை?* ஹிப்போகிறேட்டஸ்
*16..ஹோமியோபதியின் தந்தை?* சாமுவேல் ஹானிமன்
*17..ஆயுர்வேதத்தின் தந்தை?* தன்வந்திரி
*18..சட்டத்துறையின் தந்தை?* ஜெராமி பென்தம்
*19..ஜியோமிதியின் தந்தை?* யூக்லிட்
*20..நோய் தடுப்பியலின் தந்தை?* எட்வர்ட் ஜென்னர்
*21..தொல் உயரியியலின் தந்தை?* சார்லஸ் குவியர்
*22..சுற்றுச் சூழலியலின் தந்தை?* எர்னஸ்ட் ஹேக்கல்
*23..நுண் உயரியியலின் தந்தை?* ஆண்டன் வான் லூவன் ஹாக்
*24..அணுக்கரு இயற்பியலின் தந்தை?* எர்னஸ்ட் ரூதர்போர்ட்
*25..நவீன வேதியியலின் தந்தை?* லாவாயசியர்
*26..நவீன இயற்பியலின் தந்தை?* ஐன்ஸ்டீன்
*27..செல்போனின் தந்தை?* மார்டின் கூப்பர்
*28..ரயில்வேயின் தந்தை?* ஜார்ஜ் ஸ்டீவன்சன்
*29..தொலைபேசியின் தந்தை?* கிரகாம்ப்பெல்
*30..நகைச்சுவையின் தந்தை?* அறிச்டோபேனஸ்
*31..துப்பறியும் நாவல்களின் தந்தை?* எட்கர் ஆலன்போ
*32..இந்திய சினிமாவின் தந்தை?* தாத்தா சாகேப் பால்கே
*33..இந்திய அணுக்கருவியலின் தந்தை?* ஹோமி பாபா
*34..இந்திய விண்வெளியின் தந்தை?* விக்ரம் சாராபாய்
*35..இந்திய சிவில் விமானப் போக்குவரத்தின் தந்தை?* டாட்டா
*36..இந்திய ஏவுகணையின் தந்தை?* அப்துல் கலாம்
*36..இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை?* வர்க்கீஸ் குரியன்
*37..இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை?* சுவாமிநாதன்
*38..இந்திய பட்ஜெட்டின் தந்தை?* ஜேம்ஸ் வில்சன்
*39..இந்திய திட்டவியலின் தந்தை?* விச்வேச்வரைய்யா
*40..இந்திய புள்ளியியலின் தந்தை?* மகலனோபிஸ்
*41..இந்திய தொழில்துறையின் தந்தை?* டாட்டா
*42..இந்தியப் பொருளாதாரத்தின் தந்தை?* தாதாபாய் நௌரோஜி
*43..இந்தியப் பத்திரிக்கையின் தந்தை?* ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி
*44..இந்திய மறுமலர்ச்சியின் தந்தை?* ராஜாராம் மோகன்ராய்
*45..இந்திய கூட்டுறவின் தந்தை?* பிரடெரிக் நிக்கல்சன்
*46..இந்திய ஓவியத்தின் தந்தை?* நந்தலால் போஸ்
*47..இந்திய கல்வெட்டியலின் தந்தை?* ஜேம்ஸ் பிரின்சப்
*48..இந்தியவியலின் தந்தை?* வில்லியம் ஜான்ஸ்
*49..இந்திய பறவையியலின் தந்தை?* எ.ஒ.ஹியூம்
*50..இந்திய உள்ளாட்சி அமைப்பின் தந்தை?* ரிப்பன் பிரபு
*51..இந்திய ரயில்வேயின் தந்தை?* டல்ஹௌசி பிரபு
*52..இந்திய சர்க்கஸின் தந்தை?* கீலெரி குஞ்சிக் கண்ணன்
*53..இந்திய வன மகோத்சவத்தின் தந்தை?* கே.எம் முன்ஷி
*54..ஜனநாயகத்தின் தந்தை?* பெரிக்ளிஸ்
*55..அட்சுக்கூடத்தின் தந்தை?* கூடன்பர்க்
*56..சுற்றுலாவின் தந்தை?* தாமஸ் குக்
*57..ஆசிய விளையாட்டின் தந்தை?* குருதத் சுவாதி
*58..இன்டர்நெட்டின் தந்தை?* விண்டேன் சர்ப்
*59..மின் அஞ்சலின் தந்தை?* ரே டொமில்சன்
*60..அறுவை சிகிச்சையின் தந்தை?* சுஸ்ருதர்
*61..தத்துவ சிந்தனையின் தந்தை?* சாக்ரடிஸ்
*62..கணித அறிவியலின் தந்தை?* பிதாகரஸ்
*63..மனோதத்துவத்தின் தந்தை?* சிக்மண்ட் பிரைடு
*64..கூட்டுறவு அமைப்பின் தந்தை?* இராபர்ட் ஓவன்
*65..குளோனிங்கின் தந்தை?* இயான் வில்முட்
*66..பசுமைப்புரட்சியின் தந்தை?* நார்மன் போர்லாக்
*67..உருது இலக்கியத்தின் தந்தை?* அமீர் குஸ்ரு
*68..ஆங்கிலக் கவிதையின் தந்தை?* ஜியாப்ரி சாசர்
*69..அறிவியல் நாவல்களின் தந்தை?* வெர்னே
*70..தமிழ்நாடு நூலக இயக்கத்தின் தந்தை?* அவினாசி மகாலிங்கம்

  நம் மாநிலம் குறித்து நாம் தெரிந்து கொள்ள சில முக்கிய தகவல்கள்
*1 ) இந்திய மக்கள் தொகையில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது?*
7வது இடம்
*2 ) இந்திய மக்கள் வளர்ச்சியில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?*
23 வது இடம்
*3 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக ஆண்கள் எந்த இடத்தில் உள்ளனர்?*
16வது இடம்
*4 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக பெண்கள் எந்த இடத்தில் உள்ளனர்?*
15வது இடம் 
*5 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?* 14வது இடம்
*6 ) சென்னை உயர்நீதி மன்றத்தின் கிளை எங்குள்ளது?*
மதுரை
*7 ) சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைகிளை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?*
2004
*8 ) தமிழக மக்களின் சராசரி தனிநபர் வருமானம் எவ்வளவு?*
72993
*9 ) தமிழக உயர்நீதி மன்றம் எங்குள்ளது?*
சென்னை
*10 ) தமிழக கடற்கரையின் மொத்த நீளம் எவ்வளவு?*
1076 கி.மீ
*11 ) தமிழக சட்டசபை எந்த ஆண்டு முதல் ஒரு அவையாக மாற்றப்பட்டது?*
1986
*12 ) தமிழகத்தில் அதிக அளவு கல்வியறிவு பெற்ற மாவட்டம் எது?*
கன்னியாக்குமரி (92.14 சதவீதம்)
*13 ) தமிழகத்தில் அதிக அளவு பெண்கள் உள்ள மாவட்டம்?*
சென்னை (23,23,454)
*14 ) தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது?*
சென்னை (46,81,087)
*15 ) தமிழகத்தில் உள்ள ஆண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?*
68.45 ஆண்டுகள்
*16 ) தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள் எத்தனை?*
13 மாவட்டங்கள்
*17 ) தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை எவ்வளவு?*
234
*18 ) தமிழகத்தில் உள்ள சட்டமன்ற நியமன உறுப்பினர் எண்ணிக்கை எவ்வளவு?*
1
*19 ) தமிழகத்தில் உள்ள துறைமுகங்கள் எவ்வளவு?*
12 துறைமுகங்கள்
தமிழகத்தில் உள்ளன
*20 ) பன்னாட்டு விமான நிலையம் எங்குள்ளது?*
சென்னை
*21 ) தமிழகத்தில் உள்ள பெண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?*
71.54 ஆண்டுகள்
*22 ) தமிழகத்தில் உள்ள மொத்த கிராமங்களின் எண்ணிக்கை எவ்வளவு?*
15979
*23 ) தமிழகத்தில் உள்ள மொத்த நகர பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு?*
561
*24 ) தமிழகத்தில் உள்ள மொத்த நகராட்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு?*
146
*25 ) தமிழகத்தில் உள்ள ராஜ்யசபாவின் எண்ணிக்கை எவ்வளவு?*
18
*26 ) தமிழகத்தில் உள்ள லோக்சபாவின் எண்ணிக்கை எவ்வளவு?*
39
*27 ) தமிழகத்தில் குறைந்த எழுத்தறிவு கொண்ட மாவட்டம் எது?*
தர்மபுரி (64.71 சதவீதம்)
*28 ) தமிழகத்தில் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது?*
பெரம்பலூர் 5,64,511
*29 ) தமிழகத்தில் மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம்?*
சென்னை (26903பேர் ஒரு சதுர கி.மீட்டரில் வாழ்கின்றனர்)
*30 ) தமிழகத்தில் மிகக்குறைந்த மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம் எது?*
நீலகிரி (1சதுர கி.மீட்டரில் 288 மட்டுமே வாழ்கின்றனர்)
*31 ) தமிழகத்தில் மிக்குறைந்த பெண்கள் கொண்ட மாவட்டம் எது?*
தர்மபுரி
*32 ) தமிழகத்திலுள்ள மொத்த மாவட்டங்கள் எத்தனை?*
32
*33 ) தமிழகத்தின் 31 வது மாவட்டம் எது?*
அரியலூர்
*34 ) தமிழகத்தின் 32 வது மாவட்டம் எது?*
திருப்பூர்
*35 ) தமிழகத்தின் கல்வியறிவு எவ்வளவு சதவீதம்?*
80.33 சதவீதம்
*36 ) தமிழகத்தின் காடுகளின் பரப்பு எவ்வளவு?*
17.58 சதவீதம்
*37 ) தமிழகததின் மாநில விலங்கு எது?*
வரையாடு
*38 ) தமிழகத்தின் முக்கிய 3 துறைமுகங்கள் எது?*
சென்னை, எண்ணூர், தூத்துக்குடி
*39 ) தமிழகத்தின் முக்கிய ஆறுகள் எது?*
காவேரி, வைகை, தாமிரபரணி, பாலாறு, பவானி
*40 ) தமிழகத்தின் முக்கியமான 6 விமானநிலையங்கள் எங்குள்ளது?*
1. சென்னை 
2. கோவை 
3. மதுரை 
4. திருச்சி 
5 தூத்துக்குடி 
6 சேலம்
*41 ) தமிழ்நாட்டில் 2011 கணக்கெடுப்பின்படி பாலின விகிதம் எவ்வளவு?*
999பெண்கள்(1000 ஆண்கள்)
*42 ) தமிழ்நாட்டில் காடுகள் அதிகமாக உள்ள மாவட்டங்கள் எவை?*
1. நீலகிரி 
2. சேலம் 
3. வேலூர் 
4. கன்னியாக்குமாரி
*43 ) தமிழ்நாட்டில் காடுகள் குறைவாக உள்ள மாவட்டங்கள் எவை?*
1. திருவாரூர் 
2. இராமநாதபுரம் 
3. தூத்துக்குடி 
4. கடலூர்
*44 ) தமிழ்நாட்டில் சமத்துவபுரம் தொடங்கப்பட்ட முதல் மாவட்டம் எது?*
மதுரை (மேலக்கோட்டை - ஆண்டு 1997)
*45 ) தமிழ்நாட்டின் இணைய தளம் எது?*
www.tn.gov.in
*46 ) தமிழ்நாட்டின் தலைநகரம் எது?*
சென்னை
*47 ) தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடர்த்தி எவ்வளவு?*
ஒரு ச.கி.மீட்டருக்கு 555 பேர்
*48 ) தமிழ்நாட்டின் மாநில அரசு சின்னம் எது?*
திருவில்லிபுத்தூர் கோபுரம்
*49 ) தமிழ்நாட்டின் மாநில எல்லையை குறிப்பிடுக?*
கிழக்கே வங்காள விரிகுடா, மேற்கே கேரளா, வடக்கே ஆந்திரபிரதேசம், தெற்கே இந்தியபெருங்கடல்
*50 ) தமிழ்நாட்டின் மாநில தமிழ்தாய் வாழ்த்து எது?*
நீராடும் கடலுடுத்த
*51 ) தமிழ்நாட்டின் மாநில நடனம் எது?*
பரத நாட்டியம்
*52 ) தமிழ்நாட்டின் மாநில பறவை எது?*
மரகதப்புறா
*53 ) தமிழ்நாட்டின் மாநில மரம் எது?*
பனைமரம்
*54 ) தமிழ்நாட்டின் மாநில மலர் எது?*
செங்காந்தள் மலர்
*55 ) தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு எது?*
கபடி
*56 ) தமிழ்நாட்டின் மொத்த பரப்பு எவ்வளவு?*
1,30,058 ச.கி.மீ
*57 ) தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை எவ்வளவு?*
7,21,38,958 
ஆண் 36158871 
பெண் 35980087

*கண்டிப்பாக பகிரவும்*

Tuesday, 20 July 2021

*Tnpsc Notes & Questions*

🥰 _அன்பார்ந்தவர்களே வணக்கம்,_

அரசு தேர்வுக்காக கடுமையாக படித்துக்கொண்டிருக்கும் தேர்வர்களே நலம் அறிய ஆவல்..



வெகுநாட்களாக தேர்வு நடத்தப்படவில்லை என்றாலும் தொடர்ந்து உற்சாகத்துடன் படித்து வருவீர்கள் என்று நம்புகிறேன்..

தொடர்க...


எத்தகைய சூழ்நிலைகள் வந்தாலும் நீங்கள் படிப்பதை மட்டும் ஒருபோதும் நிறுத்தக்கூடாது..

மேலும் அத்தையை படிப்பை மிகச் சரியான முறையில் மட்டுமே படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்..

பள்ளி புத்தகங்களை 6 முதல் 12 பன்னிரண்டாம் வகுப்பு வரை தவறாமல் படித்து விடுங்கள்..

🗣️ ஆட்சியர் கல்வி தொகுக்கப்பட்ட *புத்தகங்கள் (6 to 12)*


🗣️மேலும் தவறாமல் தேர்வின் *பழைய வினாத்தாள்களை* தவறாமல் பயிற்சி செய்யுங்கள்..



இது எல்லாம் சரியாக முயற்சி செய்துவிட்டு நேரம் இருந்தால் ஆட்சியர் கல்வி மாதிரித் தேர்வு எழுதிப் பாருங்கள்..

🗣️ *ஆட்சியர் கல்வி குரூப் 2  மாதிரி தேர்வு 2021*



🗣️ *ஆட்சியர் கல்வி குரூப் 1 மாதிரி தேர்வு 2020-2021*



🗣️ *TNPSC  இந்து அறநிலை தேர்வுக்கான மாதிரி தேர்வு*


🗣️ *குரூப்-1 முதன்மைத் தேர்வுக்கான மாதிரி தேர்வு 2022*



🎯 *ஆட்சியர் கல்வி நடப்பு நிகழ்வு* 🎯


உங்களுக்கு முயற்சிக்கு எது தடையாக இருந்தாலும் உடனடியாக அதனை தூக்கி எறியுங்கள்..


வணிக நோக்கத்திற்காக சிலர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் விழித்துக் கொள்ளுங்கள்..
மேலும் யார் எதை சொன்னாலும் நம்பாதீர்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் அறிக்கையும் அறிவிப்புகளையும் நேரடியாக நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்..


மேலே உள்ள லிங்கில் வரும் தகவலே உண்மையானது.. கோச்சிங் சென்டர் களின் விளம்பரங்களைக் கண்டு ஏமாந்து போகாதீர்கள்.. தேர்வு பற்றி அனைத்து தகவலையும் அரசின் இணையதளத்தில் நேரடியாக லிங்கில் பெற்றுக் கொள்ளுங்கள்..

உங்களுடைய வெற்றி என்பது மிகவும் முக்கியமானது..

எல்லோருக்கும் எப்பொழுதும் கல்வியை இலவசமாக கொண்டு செல்வோம்..


*எத்தகைய இன்னல்கள் வந்தாலும் தாங்கிக்கொண்டு என் நிலை வந்தாலும் தரமான கல்வியை ஏழை எளிய மாணவர்களுக்கு என்றும் கொண்டு செல்வோம்..*


நன்றி என்றும் உங்களுடன் உண்மையான உறவாக ஆட்சியர் கல்வி


❤️❤️❤️❤️❤️❤️

Saturday, 10 July 2021

*July 10-வேலூர்_தினம்*

#வேலூர்_தினம்...


இந்தியா சுதந்திரப் போராளிகள் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக 19ஆம் நூற்றாண்டில்  முதன்முதலில் போர்க்குரல் #சிப்பாய்க்கலகம்  எழுப்பிய இடம் தான் #வேலூர்கோட்டை  அதன் உள் பகுதியில் அமைந்துள்ள #சிறைச்சாலை.


இந்த கோட்டையானது கிருஷ்ணதேவராயர் காலத்தில் வடிவமைக்கப்பட்ட கோட்டையாகும் பிற்காலத்தில் மொகலாயர்கள் ஆட்சி செய்தபோது ஆற்காடு நவாப் அவர்களது கட்டுப்பாட்டில் இந்த கோட்டை இயங்கி வந்தது மொகலாயர் காலத்திற்கு பிறகு இந்தக்கோட்டை கிழக்கிந்தியக் கம்பெனி என்று சொல்லக்கூடிய ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் பிடியில் சிக்கிக் கொண்டது.

இந்த கோட்டை சுற்றிலும் நான்கு பக்கமும் அகழி அமைக்கப்பட்டு எதிரிகள் யாரும் அவ்வளவு எளிதில் உள்ளே நுழைய முடியாத வகையில் கோட்டை சுற்றிலும் உள்ள நீர்நிலைகளில் கொடிய முதலைகள் மூலம்  பாதுகாப்புடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரே நுழைவு வாயில் மட்டுமே உள்ளது. அதுவும் சங்கிலிகள் உதவியுடன் பறைகள் மற்றும் மரப்பாலம் அமைத்து தானாக மூடிக்கொள்ளும் விதத்தில் அமைந்துள்ளது. பீரங்கி குண்டுகள் துளைக்காத வகையில் பாறைகளைக் கொண்ட கருங்கற்களால் ஆன தடுப்பு சுவர்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிலகாலம் முன்புவரை இந்த வேலூர் கோட்டையில் தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மத்திய சிறைச்சாலை, நீதிமன்றம்  உட்பட அனைத்து அரசு இயந்திரங்களும் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த வேலூர் கோட்டையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் உள்ளே ஒரு குகை (சுரங்கப்பாதை) உள்ளது. எதிரிகளிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ளவும் கருங்கற்களால் ஆன அறைகள் இருப்பதாக கூறப்படுகிறது.  அந்த குகையில் இறங்கி சென்றால் அது 18 கிமீ தொலைவில் அமைந்துள்ள விருஞ்சிபுரம் ஸ்ரீ மார்கபந்தீஸ்வரர் ஆலயம் வரை சென்று வரும்படி அமைக்கப்பட்டுள்ளது. இதே கோட்டையில் இருந்து இன்னொரு சுரங்கப் பாதையின் வழித்தடத்தில் சென்றால் அது ஆரணி ஸ்ரீ கைலாசநாதர் கோயில் வரை சென்று திரும்பும் வகையில் உள்ளதாகவும்  சொல்லப்படுகிறது.

இந்த கோட்டை வரலாற்றில் இடம்பெற்ற இன்னொரு சம்பவமும் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அது என்னவென்றால் இலங்கை ஈழப் போராளிகள் ( விடுதலைப் புலிகள்) 60க்கும் மேற்பட்டோர் இந்த சிறைச்சாலையில் தான் அடைக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் தங்களுக்கு  சாப்பிட கொடுத்த தட்டுகளை வைத்து அடைக்கப்பட்ட சிறையில் இருந்து கிட்டத்தட்ட 200 அடிகளுக்கு மேல்  தனியாக சுரங்கம் தோண்டி பாதை அமைத்து அகழியில் குதித்து தப்பித்து வெளியேறி வேலூர் தொடங்கி சாலை மார்க்கத்தில் கிட்டத்தட்ட 600 கிமீ தொலைவில் உள்ள  இராமேஸ்வரம் மண்டபம் சென்று அங்கிருந்து கடல் மார்க்கமாக இலங்கை ஈழத்திற்கு சென்று விட்டார்கள் என்பது சில வருடங்களுக்கு முன் நடந்த உண்மை நிகழ்வு ஆகும். இந்த பாதை அமைக்கும் பணி சாதாரணமாக 6 மாதங்கள் வரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது இந்த விஷயம் வெளியே தெரியாத வகையில் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவர்கள் தப்பி சென்ற அடுத்த நாள் காலையில் உணவு வாங்க வராமல் போனவர்கள் கணக்கெடுப்பின் போது தான் இவ்வளவு பெரிய சம்பவம் நடந்த விஷயம் சிறையில் இருந்த அதிகாரிகளுக்கு தெரிந்துள்ளது.

இப்படி பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாக கம்பீரமான தோற்றத்துடன் நெஞ்சை நிமிர்த்தி வானுயர்ந்த கோபுரத்துடன் #வேலூர் #கோட்டை உயர்ந்து நின்று காட்சி தருகிறது. 
#vellore

*கொங்கு நாடு _ Union Territory*

*90 சட்டசபை தொகுதிகளுடன்
உதயமாகிறது #கொங்கு நாடு!*

தமிழகத்தின் மேற்கு பகுதியில் உள்ள கொங்கு மண்டலத்தில்...
கோவை, திருப்பூர், ஈரோடு,
நாமக்கல், கரூர், சேலம்,
தர்மபுரி, நீலகிரி,கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் உள்ளன.


இந்த மண்டலத்தில்
10 லோக்சபா தொகுதிகளும்,
61 சட்டசபை தொகுதிகளும் உள்ளன.


இவற்றோடு அருகில் உள்ள சில தொகுதிகளையும் சேர்த்து,
மொத்தம் 90 சட்டசபை தொகுதிகளுடன் #கொங்குநாடு  என்ற பகுதியை பிரித்து,
அதை புதுச்சேரி (பாண்டிச்சேரி) போல தனி யூனியன் பிரதேசமாக
அறிவிக்கவும்
மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


கொங்குநாடு என்ற தனி மாநிலத்தை உருவாக்கப் போவதாக சங்கிகள் சிலர் கிளப்பிவிட்ட விஷயம், தினமலத்தின் தலைப்புச் செய்தி ஆகியிருக்கிறது. 

அப்படி மாநிலத்தைப் பிரிப்பது சரியா தவறா, தமிழ்நாட்டு மக்கள் ஏற்பார்களா, கொங்கு மக்கள் ஏற்பார்களா என்பதெல்லாம் ஒருபக்கம் இருக்க, சட்டம் என்ன சொல்கிறது என்பதை மட்டும் இங்கே விளக்குகிறேன். 

நமது அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 3, மாநிலங்களைப் பிரிக்கும் அதிகாரத்தை ஒன்றிய அரசுக்கே வழங்கியிருக்கிறது.
 
அ) எந்தவொரு மாநிலத்திலிருந்தும் ஒரு பகுதியைப் பிரித்து, அல்லது இரண்டு அல்லது மூன்று மாநிலங்களை இணைத்து, அல்லது எந்தவொரு பகுதியையும் ஒரு மாநிலத்துடன் இணைத்து, 

ஆ) ஒரு மாநிலத்தின் பரப்பை விரிவாக்கி

இ) ஒரு மாநிலத்தின் பரப்பைக் குறுக்கி

ஈ) ஒரு மாநிலத்தின் எல்லையை மாற்றியமைத்து
புதிய மாநிலங்களை உருவாக்கலாம். 

இந்த சட்டத்தின் தலைப்பு - ‘Formation of new States and alteration of areas, boundaries or names of existing States’. (அதாவது, மாநிலத்தின் பெயரையும் மாற்றலாம்.)

இதை ஒன்றிய அரசு எப்படிச் செய்ய வேண்டும்?

புதிய மாநிலத்துக்கான மசோதாவை குடியரசுத் தலைவர் பரிந்துரை செய்ய வேண்டும்.

 இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பொறுத்தவரையில் குடியரசுத் தலைவர் தானாக ஏதும் செய்ய முடியாது.


 அமைச்சரவைக் குழுதான் குடியரசுத் தலைவரை செய்யுமாறு கோரும். அமைச்சரவை முன்வைத்த மசோதாவை நாடாளுமன்றத்தின் ஏதேனுமொரு அவையில் முன்வைத்து நிறைவேற்ற வேண்டும்.

 மசோதாவை சம்பந்தப்பட்ட மாநில சட்டமன்றத்துக்கு அனுப்பி அதன் கருத்தைக் கோர வேண்டும். மாநில அரசு தன் கருத்தைக் கூறுவதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் உண்டு. குறிப்பிட்ட காலம் முடிந்த பிறகும் மாநில அரசு கருத்தைக் கூறவில்லை என்றால் குடியரசுத் தலைவர் (அதாவது, ஒன்றிய அரசு) தன் விருப்பப்படி முடிவு செய்யலாம். 

ஒருவேளை, ஒன்றிய அரசு முன்வைத்த மசோதாவை மாநில சட்டமன்றம் ஏற்கவில்லை என்றால் என்னவாகும்?

மாநில சட்டமன்றம் ஏற்றாக வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாநில அரசின் கருத்துப்படிதான் குடியரசுத் தலைவர் செயல்பட வேண்டும் என்பதும் இல்லை.

அதாவது, ஒரு மாநிலத்தைப் பிரிப்பது குறித்து ஒப்புக் கொள்ளவோ, மறுக்கவோ அந்த மாநில அரசுக்கு - சட்டமன்றத்துக்கு - எந்த உரிமையும் இல்லை.

இது என்ன அநியாயம் என்று தோன்றுகிறதா?
அரசமைப்பை உருவாக்கியவர்கள் இதையும் யோசித்தே செய்திருக்கிறார்கள். அரசியல் நிர்ணய சபையில் இதுகுறித்து விவாதம் நடந்திருக்கிறது.

 மாநிலத்தைப் பிரிப்பது குறித்து மாநில சட்டமன்றத்துக்கே உரிமை இருக்குமானால், சட்டமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத சிறு குழுவினர் ஒருபோதும் தமக்கான மாநிலத்தைப் பெற முடியாமல் போகும்.

 உதாரணமாக, சென்னை மாகாணத்திலிருந்து கர்நாடகம், கேரளம், ஆந்திரம் உருவாகியே இருக்காது. மகாராஷ்டிரத்திலிருந்து குஜராத் உருவாகியிருக்காது. ஆந்திராவிலிருந்து தெலங்கானா உருவாகியிருக்காது.

ஒன்றிய அரசு இப்படிச் செய்யுமானால், உச்சநீதிமன்றத்தை நாட முடியுமா?
ஒன்றிய அரசு - அதாவது, குடியரசுத் தலைவர் - சம்பந்தப்பட்ட மாநிலத்தின் கருத்தைக் கேட்க மசோதாவை அனுப்பாமல் தானே முடிவு செய்தால், அல்லது குறிப்பிட்ட கால அவகாசம் அளிக்காமலே முடிவு செய்தால் மட்டுமே உச்சநீதிமன்றத்தை நாடுவதில் பயன் இருக்கலாம். 
மாநிலத்தின் கருத்தைக் கேட்க மசோதாவை அனுப்பி, உரிய கால அவகாசமும் கொடுக்கப் பட்டிருந்தால், உச்சநீதிமன்றம் இதில் தலையிடாது. அரசியலமைப்புச் சட்டப்படி சரியாகத்தான் இருக்கிறது என்று சொல்லிவிடும். மகாராஷ்டிரா - குஜராத் பிரிக்கப்பட்டபோது அப்படித்தான் சொன்னது உச்சநீதிமன்றம்.

தொடக்கத்திலேயே சொன்னதுபோல, அரசியலமைப்புச் சட்ட ஆர்வலன் என்ற வகையில், சட்டம் என்ன சொல்கிறது என்பதை மட்டுமே இங்கே தந்திருக்கிறேன். இந்தச் சட்டம் தவறா சரியா என்கிற விஷயத்துக்கு நான் போகவில்லை. மாநிலத்தைப் பிரிக்க வேண்டுமானால் முதலில் பிரிக்கப்பட வேண்டியது உத்திரப் பிரதேசம்தான், தமிழ் நாடு அல்ல என்பதே என் உறுதியான கருத்து. Shahjahan R

கொங்கு நாட்டின் தலைநகரம்: 

கோயம்புத்தூர்.

உள்ளடங்கிய மாவட்டங்கள் : 

கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம்,நீலகிரி திண்டுக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி.

பரப்பளவு மொத்தம் : 45,493 KM2 (17,565 Square Miles)
மக்கள்தொகை : 2011 இன் அடிப்படையில் 
மொத்தம் : 2,07,43,812
அடர்த்தி : 607/km2 (1,570/Sq-Mi)
அலுவல் மொழி : தமிழ்
மற்றவை : கொங்குத் தமிழ்.
நேர வலயம் : (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண் : 635-642xxx

வாகனப் பதிவு : TN 24, TN 27, TN 29 to TN 42, TN 43, TN 47, TN 52, TN 54, TN 66,TN 70, TN 77-78, TN 88, TN 86, TN 94, TN 99

பெரிய நகரம் : கோயம்புத்தூர்.
எழுத்தறிவு : 75.55%
 
பெயர்க்காரணம் : 
கொங்கு என்ற சொல்லின் பெயர்க்காரணமாக கீழுள்ள காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன : 

கங்கு என்றால் ஓரம், எல்லை, வரம்பு என்று அர்த்தம். கிணற்றின் ஓரத்தையும் வயலின் ஓரத்தையும் கங்கு என்று அழைக்கும் வட்டார வழக்குச்சொல் தற்கால காவிரிக்கு தென்கரையில் உள்ள கொங்கு பகுதிகளிலும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட கிராமங்களிலும் வழக்கில் உள்ளது. மேலும், கேழ்வரகின் உமிக்கும் மேல் உள்ள புறத்தோலை கொங்கு, கொங்க(கொங்கை) என்று அழைக்கும் வட்டார வழக்குச்சொல் தருமபுரி, கிருஷ்ணகிரி, அரியலூர் மாவட்ட கிராமங்களில் வழக்கில் உள்ளது. சங்ககால தமிழகத்தின் எல்லையில் ஆண்டதால் கங்கன் என்ற பெயர் வந்தது. எல்லையில் ஓடுவதால் கங்கை என்ற பெயர் வந்தது. அதன்படி, முடியுடை வேந்தர்களான சேர, சோழ, பாண்டிய நாட்டின் வடமேற்கு எல்லை கங்கில்(ஓரத்தில்) அமைந்ததால் கங்கு, என்று இருந்து காலப்போக்கில் கங்கு>கெங்கு>கொங்கு என மருவியது.
கொங்கு என்ற சொல்லுக்கு தேன், சாரல் என்று பொருள். மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் கிழக்குச் சரிவுப் பகுதியிலுள்ள வனப்பகுதியில் தேன் மிகுந்திருந்ததால் இப்பகுதி கொங்கு எனவும், குடநாட்டில் (கேரளாவின் வட பகுதி) மிகுதியாய் பெய்யும் மழையின் சாரல் மிகுந்து பெய்ததால், இப்பகுதி கொங்கு எனவும் கூறுவார் உண்டு.

வரலாறு :

மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பாலக்காட்டுக் கணவாயின் அருகில் அமைந்துள்ளதால் தென்னகத்தின் பல அரசுகள் இப்பகுதியைக் கைப்பற்றச் சண்டையிட்டன - கரூரின்(வஞ்சி) சேரர், பின்னர் சங்கம் மருவிய காலத்தில், கங்க வம்சத்து மேற்கு கங்கர்கள் ஆகியோரின் ஆளுமையின் கீழ் கங்கவாடி 96,000 என்ற பகுதி இருந்துள்ளது. தஞ்சைச் சோழர்களான, இராசராசன் மற்றும் இராசேந்திரன் ஆகியோர் ஆளுமைக்கீழும் இருந்துள்ளது. பின்னர், இப்பகுதி ஓய்சளர்களின் ஆட்சிக் கீழ்சென்றது. அவர்கள் கீழ்நிலை ஆட்சிக்கு, இங்கிருந்து வந்த கவுண்டர் ஆட்சி அமைப்பினையே பயன்படுத்தினர். கில்ஜி மன்னர்களின் படையெடுப்பு முறியடிக்கப்பட்ட பிறகு, விசயநகரப் பேரரசின் கீழ் நாயக்கர்களின் ஆட்சிக்கு வந்தது. கொங்கு நாடு, 17ஆம் நூற்றாண்டில், மதுரை நாயக்கர்களின் ஆளுமையின் கீழ் 1659 தொடங்கி 1672 முடிவடைந்தது. தொடர்ந்து பாளையக்காரர்களின் கீழ் கொங்டு நாடு இருந்து வந்துள்ளது.

உள்ளடக்க நாடுகள் :

கொங்கு மண்டலத்தில் 24 நாடுகளும் இணைநாடுகள் சிலவும் இருந்ததாகக் கொங்கு மண்டல சதகம் 3-ஆம் பாடல் தெரிவிக்கிறது. அவற்றை உரைநூல் ஒன்று குறிப்பிடுகிறது. அவற்றின் அகரவரிசை வருமாறு. 

24 நாடுகள்:
அண்ட நாடு
அரையன் நாடு
ஆறை நாடு
ஆனைமலை நாடு
இராசிபுர நாடு
ஒருவங்க நாடு
காங்கேய நாடு
காஞ்சிக்கோயில் நாடு
காவடிக்கன் நாடு
கிழங்கு நாடு
குறும்பு நாடு
தட்டையன் நாடு
தலையன் நாடு
திருவாவினன்குடி நாடு
தென்கரை நாடு
நல்லுருக்கன் நாடு
பூந்துறை நாடு
பூவாணிய நாடு
பொன்களூர் நாடு
மணல் நாடு
வடகரை நாடு
வாரக்கன் நாடு
வாழவந்தி நாடு
வெங்கால நாடு

இணைநாடுகள் : 
இடைப்பிச்சான் நாடு
ஏழூர் நாடு
சேல நாடு
தூசூர் நாடு
பருத்திப்பள்ளி நாடு
விமலை நாடு.

கொங்கு நாட்டில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் : 

வால்பாறை (தனி)
பொள்ளாச்சி
மேட்டுப்பாளையம்
சூலூர்
தொண்டாமுத்தூர்
கவுண்டம்பாளையம்
கோவை வடக்கு
கோவை தெற்கு
சிங்காநல்லூர்
கிணத்துக்கடவு
திருப்பூர் தெற்கு
திருப்பூர் வடக்கு
அவினாசி
பல்லடம்
காங்கேயம்
தாராபுரம்
உடுமலைப்பேட்டை
மடத்துக்குளம்
அரவக்குறிச்சி
கரூர்
கிருஷ்ணராயபுரம்
குளித்தலை
பழநி
ஒட்டன்சத்திரம்
ஆத்தூர்
நிலக்கோட்டை
நத்தம்
திண்டுக்கல்
வேடசந்தூர்
ஊட்டி
கூடலூர்
குன்னூர்
ராசிபுரம்
சேந்தமங்கலம்
நாமக்கல்
பரமத்தி வேலூர்
திருச்செங்கோடு
குமாரபாளையம்
ஈரோடு கிழக்கு
ஈரோடு மேற்கு
மொடக்குறிச்சி
பெருந்துறை
அந்தியூர்
கோபிசெட்டிபாளையம்
பவானிசாகர்
ஊத்தங்கரை
பர்கூர்
கிருஷ்ணகிரி
வேப்பனப்பள்ளி
ஓசூர்
தளி
பாலக்கோடு
பென்னாகரம்
தர்மபுரி
பாப்பிரெட்டிபட்டி
அரூர்
கங்கவள்ளி
ஆத்தூர்
ஏற்காடு
ஓமலூர்
மேட்டூர்
எடப்பாடி
சங்ககிரி
சேலம் மேற்கு
சேலம் வடக்கு
சேலம் தெற்கு & 
வீரபாண்டி
என தமிழகத்தின் 67 சட்டமன்ற தொகுதிகளை இந்த கொங்கு மாநிலம் உள்ளடக்கி உள்ளது. நடந்து முடிந்த 2021 சட்டமன்ற தேர்தலில் இந்த கொங்கு மாநிலத்தில் 67 / 44 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றிபெற்று, இந்த கொங்கு மாநிலத்தில் பெரும்பான்மை பெற்றுள்ளது.


கொங்கு நாட்டின் நாடாளுமன்ற தொகுதிகள் :

கிருஷ்ணகிரி
தருமபுரி
சேலம்
நாமக்கல்
ஈரோடு
திருப்பூர்
நீலகிரி
கோயம்புத்தூர்
பொள்ளாச்சி
திண்டுக்கல் &
கரூர்
என பதினோறு மக்களவை தொகுதிகளை இந்த கொங்கு நாடு கொண்டுள்ளது.

கொங்கு நாட்டின் ஆறுகள்:

ஆன்பொருநை (ஆம்ராந்து, ஆம்பிராநதி, அமராவதி),
காஞ்சி (நொய்யல்),
வானி (வவ்வானி, பவானி),
பொன்னி (காவிரி ஆறு),
சண்முகநதி
குடவனாறு (கொடவனாறு),
நன்காஞ்சி (நங்காஞ்சி, நஞ்சங்கையாறு),
மணிமுத்தாறு (திருமணிமுத்தாறு)
மீன்கொல்லிநதி
சரபங்காநதி
உப்பாறு
பாலாறு
கௌசிகா நதி.

கொங்கு நாட்டில் உள்ள மாநகராட்சிகள் : 

கொங்கு நாட்டில் உள்ள மாநகராட்சிகள் அனைத்துமே தொழில்வளம் நிறைந்தவை. அவற்றுள் மிகப்பெரிய மாநகராட்சி கோயம்புத்தூர் பெருநகர மாநகராட்சி ஆகும். இந்த கொங்கு நாட்டில் உள்ள மாநகராட்சிகளில் மட்டும் தென் மாவட்ட மக்கள் மற்றும் வட மாநிலத்தவர் அதிகளவில் பணி செய்கின்றனர்.

கோயம்புத்தூர் பெருநகர மாநகராட்சி
திருப்பூர் மாநகராட்சி
ஈரோடு மாநகராட்சி
சேலம் மாநகராட்சி
ஓசூர் மாநகராட்சி
திண்டுக்கல் மாநகராட்சி
என தமிழகத்தின் பதினைந்து மாநகராட்சிகளில் ஆறு மாநகராட்சிகளை இந்த கொங்கு மாநிலம் கொண்டுள்ளது.

கொங்கு நாட்டில் நகரங்களும் அடைப்பெயர்களும் :

கோயம்புத்தூர் - தென்னிந்தியாவின் மான்செஸ்டர்
திருப்பூர் - பனியன் நகரம்
ஈரோடு - மஞ்சள் நகரம்
சேலம் - மாம்பழ நகரம்
நாமக்கல் - முட்டை நகரம்
நீலகிரி - மலைகளின் இளவரசி 
வால்பாறை - தேயிலை நகரம்
கொடைக்கானல் - மலைகளின் இராணி
திண்டுக்கல் - பூட்டு நகரம்
கரூர் - கைத்தறி நகரம்.

கொங்கு நாட்டில் பொருளாதாரம் : 

கொங்கு நாட்டில் பல தொழிற்சாலை நிறுவனங்கள் நிறைந்து காணப்படுகிறது. வேளாண்மை மற்றும் ஜவுளித் தொழில்கள் இப்பகுதியின் பொருளாதாரத்திற்கு முக்கியப் பங்களிக்கின்றது. இங்கு பருத்தி ஆடைகள், பின்னலாடை, உள்ளாடைகள் மற்றும் பால், கோழி, மஞ்சள், கரும்பு, அரிசி, வெள்ளை பட்டு, தேங்காய், வாழைப்பழங்கள் போன்ற விவசாய பொருட்களும் மற்றும் காகிதம், வாகன உதிரி பாகங்கள், நீர் விசையியக்கக் குழாய்கள், அரவை இயந்திரம், நகைகள், அலுமினியம் மற்றும் எஃகு ஆகிய பொருட்கள் தயாரிப்பதில் கொங்கு நாடு முக்கியப் பங்கு வகிக்கிறது. இங்கு தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் நிறைந்து காணப்படுகிறது. திருப்பூருடன், கோயம்புத்தூர் "தென்னிந்தியாவின் மான்செஸ்டர்" என்று அழைக்கப்படுகிறது. திருப்பூர் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடை தொழிலில் மிகவும் சிறந்து விளங்குகிறது. தமிழகத்தில் ஏழாவது பெரிய நகரமான திருப்பூர் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் ஒரு தொழில் நகரமாகும். கருரில் கைத்தறி துணிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு உலகெங்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது தவிர கரூரில் கொசுவலை மற்றும் பஸ் பாடி கட்டும் நிறுவனங்கள் நாட்டிலேயே அதிகம் இருக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாட்டில் காய்கறி உற்பத்தி செய்யும் மிகப்பெரிய மாவட்டமாகும். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய காய்கறி சந்தைகளில் ஒன்றாகும். ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் அதிகளவில் பயிரிடப்பட்டு, ஏற்றுமதி செய்யப்படுகிறது. நாமக்கல் மாவட்டம், இந்தியாவின் நம்பர் 1 போக்குவரத்து மையமாகவும், இந்தியாவின் மிகப்பெரிய கோழி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாகவும் உள்ளது. சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் மரவல்லிக்கிழங்கு அதிகளவில் பயிரிடப்படுகிறது.சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மாம்பழம் அதிகளவில் விளைகிறது.

கொங்கு நாட்டில் உள்ள சுற்றுலா தளங்கள் : 

நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு, கொல்லிமலை, ஒகேனக்கல், சத்தியமங்கலம், மற்றும் வால்பாறை ஆகிய பகுதிகள் சுற்றுலா தளங்களாகும். நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை மற்றும் ஆனை மலையில் உள்ள டாப்சிலிப் இரண்டும் வனவிலங்கு சரணாலயங்கள் இருக்கும் சுற்றுளா தளங்களாகும்.

கொங்கு நாட்டில் உள்ள கோவில்கள் :

பழனி, பண்ணாரி மாரியம்மன் கோயில், பவானி சங்கமேசுவரர் கோயில், திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில், கொடுமுடி, நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் மற்றும் மருதமலை ஆகிய கோவில்கள் கொங்கு நாட்டில் உள்ள முக்கிய கோவில்களாகும். சென்னிமலை முருகன் கோவில், சிவன்மலை முருகன் கோவில், ஊத்துக்குளி கதித்தமலை வெற்றி வேலாயுத சாமி திருக்கோயில், வெள்ளோடு ராசா கோவில், பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவில், பேரூர் பட்டி விநாயகர் கோவில், கோவை தண்டு மாரியம்மன் கோவில், கோவை கோனியம்மன் கோவில், காரமடை அரங்கநாதர் திருக்கோவில் ஆகியவை குறிப்பிடத்தகுந்த கோவில்கள் ஆகும். மற்றும் கரூரில் உள்ள தாந்தோன்றிமலை (தென்திருப்பதி) ஆகும்.

கொங்கு நாடு தனி யூனியன் பிரதேசம் :

கொங்கு நாடு எனப்படும் தமிழகத்தின் மேற்கு மண்டலங்களை ஒருங்கிணைத்து தனி மாநிலமாக உருவாக்க பல ஆண்டுகளாக கோரிக்கை உள்ளது. இதற்கு தற்போது தான் மத்திய அரசு செவி சாய்த்துள்ளது. இந்நிலையில் கொங்கு மண்டலம் எனப்படும் தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களை ஒருங்கிணைத்து புதிதாக “யூனியன் பிரதேசமாக” மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகள் தற்போது துவங்கியுள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே இதை நடைமுறைபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் சமீப காலமாக நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை நீங்கள் கூட்டி கழித்து பார்த்தால் உங்களுக்கு தற்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது, என்ன நடக்கப் போகிறது என்பது மிகத் தெளிவாக புரியவரும். 🔱

Thursday, 1 July 2021

*ஜூலை 1_தேசிய மருத்துவர்கள் தினம்..!!*

*ஜூலை 1_தேசிய மருத்துவர்கள் தினம்..!!*


விடுதலைப் போராட்ட வீரரும், இந்தியாவின் தலைசிறந்த மருத்துவர்களுள் ஒருவருமான பிதான் சந்திர ராய் (Bidhan Chandra Roy) பிறந்த தினம் இன்று.


* பிஹார் மாநிலம், பான்கிபூரில் பிறந்தார் (1882). தந்தை, துணை கலெக்டராகப் பணியாற்றியவர். பள்ளிக் கல்வியை பாட்னாவில் முடித்தார். கல்கத்தா பிரசிடென்சி கல்லூரியிலும், பாட்னா கல்லூரியிலும் பயின்று பட்டம் பெற்றார்.

* பெங்கால் பொறியியல் 
கல்லூரியிலும் கல்கத்தா மருத்துவக் கல்லூரியிலும் விண்ணப்பித்திருந்த இவருக்கு இரண்டிலுமே இடம் கிடைத்தன. கல்கத்தா 
பல்கலைக்கழகத்தின் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து பயின்றார்.

* மருத்துவ மேற்படிப்புக்காக இங்கிலாந்து சென்றார். ஒரே நேரத்தில் மருந்தியல் மற்றும் அறுவை சிகிச்சை மருத்துவத்துக்கான எம்.ஆர்.சி.பி. மற்றும் எஃப்.ஆர்.சி.எஸ் படிப்புகளை 2 ஆண்டு கள், 3 மாதங்களிலேயே முடித்து சாதனை படைத்தார்.

* கல்கத்தா மருத்துவக் கல்லூரி உட்பட பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியராகப் பணியாற்றினார். 1928இல் இந்திய மருத்துவ நிறுவனத்தைத் தொடங்கி நிர்வகித்து வந்தார். 1931இல் கல்கத்தா மேயராக நியமிக்கப்பட்டார்.

* காந்திஜியுடன் இணைந்து சுதந்திரப் போராட்டங்களிலும் பங்கேற்றார். சக அரசியல் நண்பர்களால் ‘பிதான் தா’ (அண்ணன்) என நேசத்துடன் அழைக்கப்பட்டார். நாட்டு மக்களுக்கு உடலும் மனமும் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே சுயராஜ்ஜியக் கனவு நனவாகும் என்று நம்பினார்.

* வறுமையில் தவித்த மக்களின் நலவாழ்வுக்காக ஜாதவபூர் காசநோய் மருத்துவமனை, சித்தரஞ்சன் சேவா சதன், கமலா நேரு மருத்துவமனை, இந்திய மனநல சுகாதார மையம், விக்டோரியா இன்ஸ்டிடியூஷன், சித்தரஞ்சன் புற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றைத் தொடங்கினார். சுதந்திரத்துக்குப் பிறகு வங்காளத்தின் முதலமைச்சராக இவர்தான் பதவி ஏற்க வேண்டும் என்று கட்சி விரும்பியது. தன் சேவைகளுக்குப் பதவி இடையூறாகிவிடும் என்பதற்காக அந்தப் பதவியை மறுத்துவிட்டார்.

* அடுத்த ஆண்டு காந்திஜியின் ஆலோசனைப்படி முதல்வர் பதவியை ஏற்றார். 1948 முதல் 1962இல் மரணமடையும்வரை தொடர்ந்து 14 ஆண்டுகள் மேற்கு வங்கத்தின் முதல்வராகச் செயல்பட்டார். அவர் பதவி ஏற்ற சமயம் அங்கு உணவுப் பஞ்சம், வேலையில்லாத் திண்டாட்டம், கிழக்குப் பாகிஸ்தானிலிருந்து வந்துகொண்டே இருந்த அகதிகள் பிரச்சினை என ஏராளமான பிரச்சினைகள் இருந்தன.

* தனது தலைசிறந்த நிர்வாகத்திறனுடன் அத்தனைப் பிரச்சினைகளையும் அபாரமாகக் கையாண்டார். இவரது ஆட்சிக் காலத்தில் அம்மாநிலம் அபார வளர்ச்சி கண்டது. ‘மேற்கு வங்காளத்தின் சிற்பி’ எனப் போற்றப்பட்டார். தன் வீட்டையே மருத்துவமனைக்கு நன்கொடையாக அளித்தார். முதல்வராக இருந்தபோதும் ஏழை மக்களுக்கு தினமும் இலவசமாக மருத்துவம் பார்த்தார்.

* இவரது சேவையைப் பாராட்டி 1961இல் இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. மருத்துவம், அரசியல், நிர்வாகம், கல்வி உள்ளிட்ட களங்களில் முத்திரை பதித்த, பிதான் சந்திர ராய் 1962ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவரது பிறந்த நாள் அன்றே, 80ஆவது வயதில் காலமானார்.


* இந்தியாவில் இவரது பிறந்த தினம் தேசிய மருத்துவர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. அறிவியல், கலை, இலக்கியத்தில் சாதனை படைப்போருக்கு இவரது நினைவாக பி.சி.ராய் விருது வழங்கப்பட்டு வருகிறது.

தேசிய மருத்துவர்கள் தினம்..!!


உலகெல்லாம் அக்டோபர் 18ம் தேதி டாக்டர் தினம் கொண்டாடபட்டாலும்....


 இந்தியாவில் அது ஜூலை 1ம் தேதி கொண்டாடபடும் அதற்கு காரணம் பிதான் சந்திர ராய் எனும் மகத்தான மருத்துவர் ஒருவர்...!!

அவர் வங்கத்துக்காரர், சுதந்திர போராளி நாட்டு பற்றாளர் என ஏகபட்ட முகங்கள் உண்டு, மேற்கு வங்கத்தின் முதல்வராக கூட இருந்தார்.

டாக்டர் என்பது அவரின் தொழில், அதில் தலை சிறந்தும் விளங்கினார். கல்கத்தாவில் இருந்தும் இந்தியாவில் இருந்தும் தொழுநோயினை விரட்ட மிகபெரும் பணியாற்றினார்

அவருக்கு ஆச்சரியமான திறமை இருந்தது , மருத்துவ படிப்பில் மருந்து படிப்பு மற்றும் அறுவை சிகிச்சை படிப்பு என இரு படிப்பினை ஒரே நேரம் படித்து ஒன்றாக பட்டமும் வாங்கினார்

அந்த அனுபவத்தை இத்தேசத்துகாக செல்வழித்தார். உலகின் மிகசிறந்த மருத்துவர் எனும் பொழுதும் இந்திய மருத்துவதுறைக்கு தன் வாழ்வினை அர்பணித்த அவரின் பிறந்த நாள் மற்றும் இறந்த நாள் என்பதால் அதுவே இந்திய மருத்துவ தினமாயிற்று

மருத்துவன் என்பது இரண்டாம் கடவுள், வாழ்வில் ஒவ்வொரு மனிதனும் ஒருமுறையாவது மருத்துவன் கையில் விழுந்தே தீருவான், விதிவிலக்கு என யாருமே இருக்க முடியாது

மருத்துவர்களின் அருமை எக்காலமும் தெரியும் எனினும் கொரானா காலத்தில் அவர்கள் சந்திக்கும் யுத்தம் மிக மிக கடுமையானது.

யுத்த காலம் வரும்வரை ராணுவத்தாருக்கு சிக்கல் இல்லை, ராணுவ அதிகாரி , கர்ணல், ஹவில்தார், லெப்டினன்ட் ஜெனரல் என கம்பீரமாக வருபவர்களை பார்த்து சிலருக்கு பொறாமையாக கூட இருக்கும்

ஆனால் யுத்தம் என வந்தால் அவர்கள் களத்தில் உயிரை கொடுத்து நிற்கும்பொழுதுதான் அவர்களின் அருமை தெரியும்

வெள்ளம் வரும்பொழுதுதான் பொதுபணியினருக்கு சவாலான காலம், இயற்கை சீற்றம் மின்வாரியத்துக்கு சவாலான காலம்..

ஒரு நட்டு கழன்றாலும் அணுமின் நிலையதுறையினரின் பதற்றம் சொல்லி மாளாது..

தீபற்றி எரியும் பொழுதுதான் தீயணைப்பு வீரனின் அருமை தெரியும்

நிறைய சம்பாதிக்கின்றார்கள், பெருவாழ்வு வாழ்கின்றார்கள், கொள்ளையோ கொள்ளைக்காரர்கள் என்றெல்லாம் சொன்னாலும் கொள்ளை நோய் காலங்களில் மருத்துவர்களின் சவால் அதிகம்

நோய் பரவுகின்றது என்றவுடன் நாமெல்லாம் எப்படி துடிக்கின்றோம், தற்காப்புக்கே என்னபாடு படுகின்றோம்?

ஆனால் மருத்துவர்கள் எந்நிலையிலும் உயிருக்கு துணிந்து கடமையாற்ற வேண்டும், அரசு அல்லது தனியார் மருத்துவர்கள் விடுமுறை என ஓடமுடியாது

போருக்கு சமமான காட்சி அது , நோய் தொற்றலாம் 99% வாய்ப்பு உண்டு ஆனால் அந்நிலையிலும் சிகிச்சை கொடுத்தே தீரவேண்டும், தீபிடித்த கட்டடத்துக்குள் உயிரை பணயம் வைத்து ஓடும் மீட்பு வீரன் போல, வழியும் வியர்வையினை துடைத்தபடி வெடிகுண்டை செயலிழக்க வைக்கும் நிபுணர் போல உயிரை பிடித்து நிற்க வேண்டும்.

பதற்றதை கொஞ்சமும் வெளிகாட்டாமல் நோயாளிக்கு நம்பிக்கையூட்டி தனக்கு பரவும் வாய்பிருந்தும் சாவுக்கு துணிந்து அவர்கள் போராடுவதெல்லாம் கண்ணீரை வரவழைக்கும் தருணங்கள்..

ஒவ்வொரு தொழிலின் கஷ்டமும் சவாலும் உணர ஒரு நேரம் வேண்டும், அப்படி மருத்துவ சேவையின் மகத்துவத்தை உலகம் அறியும் நேரமிது

தென்கொரியாவும் சைனாவும் சிகிச்சை கொடுத்து சிலரை காப்பாற்றி செத்து கிடக்கும் மருத்துவர்களை காண்கின்றது, அமெரிக்கா அதை கண்ணார காண்கின்றது

பிரேசிலில் ஒரு மருத்துவன் ஆளவரவேண்டும் என்ற கூக்குரல் எழுகின்றது, ரஷ்யாவில் செஞ்சேனை வீரர்களுக்கு நிகரான கவுரவம் இப்போது மருத்துவர்களுக்கு கிடைக்கின்றது.

அந்நாடுகள் நெருக்கடி காலம் முடிந்ததும் அவர்களுக்கு நினைவு சின்னம் அமைக்கபடும் என அறிவிக்கின்றன‌

ஆம், கண்ணதாசன் எழுதிய அந்த காட்சிதான் "ஒன்றையே நினைத்திருந்து, ஊருக்கே வாழ்ந்திருந்து உயிர்கொடுத்து உயிர்காத்த உத்தமர்கோர் ஆலயம், நெஞ்சிலோர் ஆலயம்.."

இந்த நெருக்கடியில் போர்கால வீரர்களாக அனுதினமும் மிகுந்த சவால் எடுத்து அந்த நோயுடன் போரடும் ஒவ்வொரு மருத்துவரும் கடவுளுக்கு சமம்

நாயகனில் பாலகுமாரன் சொல்லும் அந்த வசனம்தான் "யோவ் டாக்டரு, உசுர காப்பாத்திட்டய்யா.. என்னால முடியுமா..இவனால முடியுமா?  உன்னால முடியும்யா.. நீ சாமிய்யா.."

மருத்துவம் கடவுளுக்கு நிகரானது என்பதை உணரும் நேரமிது, மருத்துவர்கள் சாவுக்கு அஞ்சா மனுகுல சேவையாளர்கள் என்பதை நினைத்து கண்ணீர்விடும் காலமிது

இந்திய தேசத்திலும் கொரோனா உச்சகட்டமாக‌ பரவுகின்றது, மக்கள் கலங்குகின்றார்கள். ஆனால் மருத்துவர்கள் கடமையாற்ற கிளம்புகின்றார்கள். எச்சரிக்கையும் ஆலோசனையும் நம்பிக்கையும் கொடுக்கின்றார்கள்

சிக்கிய நோயாளிகளுக்கு உலக மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று சிகிச்சையும் அளிக்கின்றார்கள், அய்யகோ எங்களுக்கு வருமோ என ஓடி ஓளியவில்லை, ஒளியவும் முடியாது

நோய்க்கு அஞ்சி ஓளியும் நம் மனநிலையில், கொஞ்சமும் அஞ்சாமல் கடமையாற்ற முன்வரும் மருத்துவரை காணுங்கள், நம் கரம் தானாய் குவியும், கண்ணீர் தானாக சொட்டும்


அந்த தெய்வங்களுக்கு வாழ்த்துக்கள்..

இந்நாட்டு மக்களின் வாழ்த்தும் ஆன்மபலமும் அவர்களை காக்கும் , அவர்களுக்கு ஒரு ஆபத்தும் நேரா.

களத்தில் இருக்கும் மருத்துவர்களுக்கு நன்றியும் கண்ணீரும் தெறிக்க மருத்துவ தின வாழ்த்துக்களை சொல்வோம்

உங்களால் மட்டுமே , உங்கள் மேல் உள்ள நம்பிக்கையில் மட்டுமே தேசத்தில் வாழ்கின்றது ஜனம்

தேசத்தின் இரண்டாம் காவல் வீரர்களுக்கு, காக்கும் தெய்வங்களுக்கு, கொரோனா காலத்தில் மிக பெரும் சவாலுடன் களத்தில் நிற்கும் மருத்துவர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகள்

தேசத்தின் ஒரே நம்பிக்கையும் எதிர்ப்பார்ப்பும் அடைக்கலமுமான உங்களுக்கு எல்லா தெய்வங்களும் அருள்புரியட்டும், எல்லா நலமும் வளமும் பலமும் உங்களை வந்தடையட்டும்.

ஜூலை 1_சர்வதேச நகைச்சுவை தினம்

ஜூலை 1,
வரலாற்றில் இன்று

சர்வதேச நகைச்சுவை தினம் இன்று.


சர்வதேச நகைச்சுவை தினம் ஆண்டுதோறும் ஜூலை முதல் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பது அறிவியல் கூறும் உண்மை.


சிரிக்கும் போது மனதில் ஒருவித மகிழ்ச்சியான கலகலப்பான உணர்ச்சி ஏற்படுகிறது. இதனால் உடலில் ஆரோக்கியமான வேதிப்பொருட்கள் உற்பத்தியாவதாகவும், அது நோயைத் தீர்க்கும் மருந்தாக செயல்படுவதாகவும் அறிவியல் கூறுகிறது. சிரித்து மகிழ்வதால் நோய்கள் வராமல் தடுக்கப்படுவதுடன் வந்த நோய்களும் விரைவில் குணமாவதாகவும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.




அசட்டுச் சிரிப்பு, ஆணவச் சிரிப்பு, ஏளனச் சிரிப்பு, சாகசச் சிரிப்பு, நையாண்டி சிரிப்பு, புன்சிரிப்பு என சிரிப்பில் பலவகை உண்டு. எத்தனை மலர்கள் இருந்தாலும், ரோஜாவுக்கு என்று தனிச்சிறப்பு இருப்பதுபோல், எத்தனையோ வகை சிரிப்புகள் இருந்தாலும், புன்னகைக்கு என்று தனி மரியாதை உள்ளது.


சர்வதேச நகைச்சுவை தினமான இன்று நாமும் சிரித்து, மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முயற்சிக்கலாம். இயந்திர உலகில் சிரிப்பதற்குக் கூட நேரம் இல்லாமல் பலர் ஓடி ஓடி உழைத்து வருவதால் தான், ஆங்காங்கே உடற்பயிற்சிக் கூடங்கள் மாதிரி, சிரிப்பு கிளப்புகளும் உருவாகி வருகின்றன. சிரிப்புகளை விற்று மன அழுத்தங்களை வாங்காமல், தானும் சிரித்து, மற்றவர்களையும் சிரிக்க வைத்து இந்த சர்வதேச நகைச்சுவைத் தினத்தைக் கொண்டாடலாம்.

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...