Saturday, 10 July 2021

*July 10-வேலூர்_தினம்*

#வேலூர்_தினம்...


இந்தியா சுதந்திரப் போராளிகள் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக 19ஆம் நூற்றாண்டில்  முதன்முதலில் போர்க்குரல் #சிப்பாய்க்கலகம்  எழுப்பிய இடம் தான் #வேலூர்கோட்டை  அதன் உள் பகுதியில் அமைந்துள்ள #சிறைச்சாலை.


இந்த கோட்டையானது கிருஷ்ணதேவராயர் காலத்தில் வடிவமைக்கப்பட்ட கோட்டையாகும் பிற்காலத்தில் மொகலாயர்கள் ஆட்சி செய்தபோது ஆற்காடு நவாப் அவர்களது கட்டுப்பாட்டில் இந்த கோட்டை இயங்கி வந்தது மொகலாயர் காலத்திற்கு பிறகு இந்தக்கோட்டை கிழக்கிந்தியக் கம்பெனி என்று சொல்லக்கூடிய ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் பிடியில் சிக்கிக் கொண்டது.

இந்த கோட்டை சுற்றிலும் நான்கு பக்கமும் அகழி அமைக்கப்பட்டு எதிரிகள் யாரும் அவ்வளவு எளிதில் உள்ளே நுழைய முடியாத வகையில் கோட்டை சுற்றிலும் உள்ள நீர்நிலைகளில் கொடிய முதலைகள் மூலம்  பாதுகாப்புடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரே நுழைவு வாயில் மட்டுமே உள்ளது. அதுவும் சங்கிலிகள் உதவியுடன் பறைகள் மற்றும் மரப்பாலம் அமைத்து தானாக மூடிக்கொள்ளும் விதத்தில் அமைந்துள்ளது. பீரங்கி குண்டுகள் துளைக்காத வகையில் பாறைகளைக் கொண்ட கருங்கற்களால் ஆன தடுப்பு சுவர்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிலகாலம் முன்புவரை இந்த வேலூர் கோட்டையில் தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மத்திய சிறைச்சாலை, நீதிமன்றம்  உட்பட அனைத்து அரசு இயந்திரங்களும் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த வேலூர் கோட்டையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் உள்ளே ஒரு குகை (சுரங்கப்பாதை) உள்ளது. எதிரிகளிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ளவும் கருங்கற்களால் ஆன அறைகள் இருப்பதாக கூறப்படுகிறது.  அந்த குகையில் இறங்கி சென்றால் அது 18 கிமீ தொலைவில் அமைந்துள்ள விருஞ்சிபுரம் ஸ்ரீ மார்கபந்தீஸ்வரர் ஆலயம் வரை சென்று வரும்படி அமைக்கப்பட்டுள்ளது. இதே கோட்டையில் இருந்து இன்னொரு சுரங்கப் பாதையின் வழித்தடத்தில் சென்றால் அது ஆரணி ஸ்ரீ கைலாசநாதர் கோயில் வரை சென்று திரும்பும் வகையில் உள்ளதாகவும்  சொல்லப்படுகிறது.

இந்த கோட்டை வரலாற்றில் இடம்பெற்ற இன்னொரு சம்பவமும் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அது என்னவென்றால் இலங்கை ஈழப் போராளிகள் ( விடுதலைப் புலிகள்) 60க்கும் மேற்பட்டோர் இந்த சிறைச்சாலையில் தான் அடைக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் தங்களுக்கு  சாப்பிட கொடுத்த தட்டுகளை வைத்து அடைக்கப்பட்ட சிறையில் இருந்து கிட்டத்தட்ட 200 அடிகளுக்கு மேல்  தனியாக சுரங்கம் தோண்டி பாதை அமைத்து அகழியில் குதித்து தப்பித்து வெளியேறி வேலூர் தொடங்கி சாலை மார்க்கத்தில் கிட்டத்தட்ட 600 கிமீ தொலைவில் உள்ள  இராமேஸ்வரம் மண்டபம் சென்று அங்கிருந்து கடல் மார்க்கமாக இலங்கை ஈழத்திற்கு சென்று விட்டார்கள் என்பது சில வருடங்களுக்கு முன் நடந்த உண்மை நிகழ்வு ஆகும். இந்த பாதை அமைக்கும் பணி சாதாரணமாக 6 மாதங்கள் வரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது இந்த விஷயம் வெளியே தெரியாத வகையில் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவர்கள் தப்பி சென்ற அடுத்த நாள் காலையில் உணவு வாங்க வராமல் போனவர்கள் கணக்கெடுப்பின் போது தான் இவ்வளவு பெரிய சம்பவம் நடந்த விஷயம் சிறையில் இருந்த அதிகாரிகளுக்கு தெரிந்துள்ளது.

இப்படி பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாக கம்பீரமான தோற்றத்துடன் நெஞ்சை நிமிர்த்தி வானுயர்ந்த கோபுரத்துடன் #வேலூர் #கோட்டை உயர்ந்து நின்று காட்சி தருகிறது. 
#vellore

No comments:

Post a Comment

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...