Sunday, 16 January 2022

*பத்தாம் வகுப்பு + டிப்ளமோ மற்றும் டிகிரி படித்தவர்களுக்கு _ Group 2 , 2A and Group 1*

#Ajitnpsc

பத்தாம் வகுப்பு + டிப்ளமோ மற்றும் டிகிரி படித்தவர்களுக்கான முக்கிய அறிவிப்பு:
-------------------------------------------------------------------------

அரசாணை (நிலை) எண்  242, உயர் கல்வித் துறை (பி1)  நாள் 18.12.2012-ல்,




பத்தாம் வகுப்பிற்குப் பின்:

** மூன்று ஆண்டுகள் பட்டயப் படிப்பு (DIPLOMA)

** பின்னர் திறந்த வெளிப் பல்கலைக் கழகம் (Degree from Open University ) (அல்லது) 

** தொலை தூரக் கல்வி நிறுவனம் மூலம் பெறப்பட்ட பட்டப் படிப்பு (Degree from Distance Education) (அல்லது) 

** கல்லூரி மூலம் (Degree from college) பெறப்பட்ட பட்டப் படிப்பானது 

அதாவது  (10+3+3) தகுதியானது,

** பத்தாம்வகுப்பு (SSLC)

** அதன் பின்னர் பண்ணிரெண்டாம் வகுப்பு (+2)

** அதன் பின்னர் மூன்று வருடம்  கல்லூரி மூலம் பெறப்பட்ட பட்டப் படிப்பிற்கு (+3)

அதாவது  (10+2+3) தகுதிக்கு, 

இணையாகக் கருதலாம் என ஆணை வெளியிடப்பட்டு உள்ளது.

ie, 10+3+3 =10+2+3.

எனவே நீங்கள் 10+3+3 என்ற வரிசையில் பட்டப் படிப்பு முடித்து இருந்தால் Group 01, Group 2, Group 2A ஆகிய தேர்வுகளுக்கு தாராளமாக விண்ணப்பம் செய்யலாம்.

தேவைப்பட்டால், இந்த அரசாணையினை கீழ்கண்ட இணைப்பில் இருந்து பதிவிறக்கம் செய்து படிக்கவும்.


இது குறித்து நமது தம்பிகளில் சிலர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு மின்னஞ்சல் (Mail) அனுப்பி வினவியபோது, இவ்வாறே சாதகமான பதில் கிடைத்தது. பார்க்க புகைப்படம்.

எனவே 10+3+3 முறையில் பட்டம் பெற்றவர்கள்  Group 01, Group 2, Group 2A ஆகிய தேர்வுகளுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று இந்தப் பதிவின் மூலம் உறுதி செய்யப்படுகிறது.

வாழ்த்துக்கள்.

நன்றி.
(தம்பிகள் Balu Naveen & Ilaiya Kannan)

அன்புள்ள
அஜி
சென்னை.

No comments:

Post a Comment

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...